Jan 22, 2012

எழுத்தாளர் (Literatus)



மொழிபெயர்ப்புக்கான முன்னுரை:  

இந்தக் கட்டுரை   http://literatus.askdefine.com/ எனும் இணைய தளத்திலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆரம்பகட்ட எழுத்தாளராக ’இலக்கியம்’, ‘இலக்கியவாதி’, எது அறிவு, அறிவுஜீவித்தனத்தினால் விளையும் பயன் என்ன. எழுத்தை துறையாக அல்லது விருப்பமாக தேர்ந்தெடுப்பவர்களுக்கென்று சமூகப் பொறுப்புகள் ஏதேனும் உள்ளதா என எனக்குள் எழுந்து கொண்டிருந்த கேள்விகளுக்கான விடையாக கோட்பாட்டு ரீதியான விளக்கத்தை தேடிக்கொண்டிருக்கையில் இணையத்தில் இந்த பொருள் விளக்கத்தைக் காண நேர்ந்தது. ‘What is Literature’ என்று புத்தகம் எழுதிய சார்த்தர் உள்ளிட்ட பல அறிஞர்கள், தத்துவவியலாளர்கள் எழுத்து, அறிவு, மொழி, கலை, அதன் அறங்கள் என்று பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கின்றனர். ஒரு எளிய அறிமுகமாக கீழ் வரும் கட்டுரை இருப்பதால் இதை மொழிபெயர்க்க தோன்றியது, குறிப்பாக மார்க்சியம் சொல்லும் ‘அறிவு’ மற்றும் ‘அறிவுஜீவித்தனம்’, பெண் எழுத்து என்ன என்பதையும் உள்ளடக்கியதாக இவ்விளக்கம் இருப்பது பயன்பாட்டுக்குரியதாய் இருக்கும் எனக் கருதுகிறேன்.

சமூகத்தில் பெரும்பாலும், ஒருவகையான ‘மேன்மைத்’ தகுதிகள் நிறைந்த, செய்தற்கரிய, கிடைத்தற்கரிய பேறாக இலக்கியம் (படைப்பு, அறிவு) என்பது அங்கீகரிக்கப்படுகிறது. மார்க்சியத்தின் வழிகாட்டுதலோடு என்னுள் எழும் கேள்வி கிடைத்தற்கரிய ஒன்றால் சமூகத்திற்கென்ன பயன்? அப்படியே அது பயன்பாட்டுக்குரியதாய் இருந்தாலும் அதற்கென ஒரு மேன்மையான இடம் எதற்கு? எதற்காக ‘இலக்கியவாதிகளில்’ சிலர் ’எழுதுவதாலேயே; சிறப்புத் தகுதிகள் கோருபவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் எப்படி ’முக்கிய கருத்து தலைவர்களாக கருதப்படுகின்றனர்’ (key opinion leaders).  அப்படி அவர்கள் கருதப்படும் நிலையில் அவர்களுக்கென்று ஏதாவது சமூகப் பொறுப்பு இருக்கிறதா? அதை அவர்கள் அறிந்திருக்கின்றனரா, பின்பற்றுகின்றனரா என்பதெல்லாம் தொடரும் கேள்விகள். இக்கேள்விகள் எழுதுபவர்களுக்கு மட்டுமல்லாமல் படைப்பு என்பதை துறையாக தேர்ந்தெடுக்கும் ‘திரைத்துரையினரையும்’ நோக்கி எழுப்பப்படும் கேள்விகள்.

நவீன தொழில்நுட்ப கருவிகளின் பெருக்கத்தால் வலைப்பக்கங்கள், இணைய தளம் என்று எங்கு பார்த்தாலும் எழுத்துக்கள் நிரம்பி வழிகிறது. இதில் ஒவ்வொருவரும் தன் அறிமுக குறிப்பாக ‘எழுத்தாளர்’, ’கவிஞர்’ என்று அடைமொழிகளை தங்களுக்கு தாங்களே சூடிக்கொள்கின்றனர். மொழியின் கருவியாக இருக்கும் எழுத்தை அறிந்த எவரும் ஏதாவது ஒன்றை எழுதிக்கொண்டிருப்பது தொடர்பு முறையின் பிரிக்க முடியாத ஒரு பகுதிபள்ளிகளில் பிள்ளைகள் எழுதுகின்றனர், வங்கியில் கணக்கர் எழுதுகிறார், காவல் நிலையத்தில் ‘எழுத்தர்’ (writer) எழுதுகிறார், இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அன்றாடம் எழுதிக் குவிக்கும் பக்கங்களைக் கொண்டு கணக்கு பார்ப்போமானல் அவர்களே ’சிறந்த எழுத்தாளர்கள்’

ஒரு உற்பத்தி பொருள் சந்தை படுத்தப்படும் விதத்தை வைத்து முதன்மை இடம் பிடிப்பதைப் போல், எழுத்து (எழுத்தாளர்) என்பது பிரபலப் படுத்தப்படும் விதத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கிறது. அப்படி ஒருவர் ‘பிரபலமாகி விட்டால்’ அவர் சொல்லும், எழுதும் எதுவும் இலக்கியமாகி விடுகிறது. ’குறியீடு’, ‘பிம்பம்’, ‘மொழியின் உச்சத்தை கண்டடைதல்’ இப்படி சில கூறுகளை வைத்து வலிய திணிக்கபப்டும் ‘அகராதி’ நடை கொண்ட சில எழுத்துக்கள் ’அவன் அவளது உடலில் வேறெங்காவது பார்த்திருந்தால் பரவாயில்லை, அவன் அவள் கண்களைப் பார்த்து விட்டான்’ என்ற அய்ஃபர் டுன்ஷின் எளிய எழுத்து வெளிப்படுத்தும் உணர்வை, சிந்தனையை, உளவியலை உணர்த்துவதில் சாத்தியப்பட்டிருக்கிறதா எனும் கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறதுகலை மக்களுக்காகவா, கலை கலைக்காகவா என்பதுபோல் இலக்கியம் என்றால் என்ன?

_____

பொருள்விளக்கம்:

எவர் ஒருவர் பல்வேறு சிந்தனைகள் குறித்து கற்க, பிரதிபலிக்க, ஊகித்து ஆழ்ந்து பரிசோதித்க, கேள்வி கேட்க, பதில் சொல்ல தன் அறிவாண்மையை (சிந்தனை மற்றும் பிரித்தாராய்தல் அடங்கியபயன்படுத்துகிறாரோ அவர் அறிஞர்* எனப்படுகிறார்

பொதுவாக, ‘அறிஞர்’ பற்றிய விவாதங்களில் மூன்று வகையான நவீன பொருள் விளக்கங்கள் நடைமுறையில் உள்ளனசிந்தனைகள், புத்தகங்கள், மனதின் வாழ்நாள் குறித்து ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் முதல் வகை “அறிஞர்கள்”அங்கிகரிக்கப்பட்ட தொழில் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வழக்குறைஞர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் இரண்டாம் வகை “அறிஞர்கள்”பண்பாடு, கலை ஆகியவற்றில் பொருட்படுத்தத் தக்க நிபுணத்துவம் பெற்று பண்பாட்டுதள சான்றுவலிமையோடு பொது அரங்கில் பேசும் “பண்பாட்டு அறிஞர்கள்” மூன்றாமவர்

எழுத்துக்களை ஆள்பவர்”

எழுத்துக்களை ஆள்பவர்” எனும் சொல்லாடல், பல பண்பாடுகளில் சமகாலத்திய அறிஞர்களை குறிக்க பயன்படுகிறதுஇந்த சொற்றொடர், “தங்கள் எழுத்துக்களை அறிந்தோர்”, அறியோதோர் என்று வேறுபடுத்தி குறிக்கிறதுஎழுத்தறிவு பரவலாக இல்லாத காலத்தில் இந்த வேறுபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.  ” எழுத்துக்களை ஆள்பவர்” லிடராட்டி (literati from the Latin) என்றும் குழுவாக குறிக்கப்பெறுகின்றனர்.  ”எழுத்துக்களின் குடியரசு” (Republic of Letters)  மற்றும் “குடிமகர்களையும்’ இப்பதம் குறிக்கும். லிடராட்டி எனும் சொல் வசைசொல்லாக பத்திரிகைத் துறையில் பயன்படுத்தப்படுகிறதுலிட்டரெட்சுஸ் எனும் ஒருமை வார்த்தையை ஆங்கிலத்தில் அரிதாகவே காணமுடியும் – வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொல் லிட்டரெட்ச்சூர்  என்பதாகும். (ஃப்ரென்ச்சு மொழியில் Literateur என்பதற்கு இலக்கிய எழுத்தாளர் என்று பொருள் - மொ.ர்).   1700களின் இறுதியில் ஃப்ரான்சு நாட்டு ‘சலோன்’களில் எழுத்துக்களின் குடியரசு இயக்கம் வளர்ந்தது. பெரும்பாலும் அது பெண்களால் நடத்தப்பட்டது.  “அறிஞர்களை”க் குறிக்க மிக அரிதாக அச்சொல் பயன்படுத்தப்படுகிறது

உங்கள் எழுத்துக்களை கற்றுக்கொள்ளுங்கள்” எனும் சொற்றொடரின் கிரேக்கப் பயன்பாடு:

எழுத்துக்களை ஆள்பவர்’ எனும் சொற்றொடர், கிரேக்க மொழியில் “உங்கள் எழுத்துக்களை கற்றுக்கொள்ளுங்கள்” எனும் பொருளோடு பரவலாக அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக எஞ்சியிருக்கும் பழைய தலைமுறயாளர்களால். “கடினமாக பயில்”, “புத்திசாலித்தனமான வணிகத்தைக் பயில்” என்பதற்கு இணையான பொருளையும் குறிக்கும்

கிரேக்கத்தின் விவசாயப் பின்னணியால், “எழுத்துக்களை ஆள்பவர்” என்பது வழக்கமான வனிகங்களான கட்டிடத் தொழில் மற்றும் விவசாயம் என்பதற்கு எதிர்மறையான தொழில்களையும் குறிக்கும்இந்த பொருட்பதத்தில், ”கையை நம்பி” (hand-driven)  பிழைக்கும் வணிகத்திற்கு உதாரணமாய் சுடிக்காட்டி எளிதான வாழ்க்கை வாழ அப்பிழைப்பை தவிற்கச் சொல்லி பெற்றோர்கள் இளஞர்களுக்கு அறிவுரை சொல்வார்கள்.  

19ஆம் நூற்றாண்டு ஆங்கில பயன்பாடு:

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய நாடு (U.K) போன்று மற்ற நாடுகளிலும் எழுத்தறிவு பரவலாக பரவியது.  ”எழுத்துக்களை ஆள்பவர்” எனும் சொற்றொடர் தற்போது சிறப்புப் பொருளுக்கு மாறியது, இலக்கியத்தை பற்றி எழுதுபவர் எனும் பொருளில் – படைபாற்றல் கொண்ட எழுத்தாளர்கள் அல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர் மற்றும் விமர்சகர்களைக் குறித்ததுஇது போன்ற நடவடிக்கைகள் 20 ஆம் நூற்றாண்டில் மெதுவாக கல்வித்தள அணுகுமுறைக்கு மாற்றம் பெற்றது.  ’எழுத்துக்களை ஆள்பவர்” என்பது வழக்கொழிந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்  ஆல்ஃப்ரெட் ட்ரைஃபுசின் ஆதரவாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட போது ”அறிஞர்” எனும் பொதுச் சொல் புழக்கத்தில் வந்தது. (கீழே காணவும். ’எழுத்துக்களை ஆள்பவர்” எனும் சொற்றொடரின் தோற்றமும் வீழ்ச்சியும், மற்றும் அச்செயல் குறிக்கும் உண்மை என்பதை க்ராஸ் வகுத்துள்ளார் (1969); பியர்சன் (2006) அதையும் கவனிக்கவும்).

ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ”அறிஞர் பிரிவு” வகைகள்:

சாமுவேல் கொலெரிட்ஜ் 19 நூற்றாண்டின் துவக்கத்தில் சுற்றோர் குழுவின் (Clerisy) கருத்தமைவுகள் குறித்து வரையறுத்தார். (ஆங்கிலேய) மத குருமார்களுக்கு நிகரான மதவாதத்துடன், (தேசிய) பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் கடமையோடு செயல்படும் தனிநபரல்லாத ஒரு பிரிவு என்று அவர்களை பற்றி குறிப்பிட்டார்.  “பிரத்யேக அறிவுக் குழு / அறிவு ஜீவிக் குழு” (intelligentsia) என்பதும் தோராயமாக அந்தக் காலத்தில் தோண்றியது தான். ”மனம் சார்ந்த” அல்லது “உடலுழைப்பற்ற உயர் பதவி” (white-collar) வகிக்கும் படிநிலைப் பிரிவின் அடிப்படையில் திண்மையுடன் அமைந்திருந்தது அப்பிறிவு. அலிஸ்டர் மெக்கார்த், ‘நாத்திகத்தின் அந்தியொளியில் (2004) சொல்வது (பக்.53) “சமூகத்தில் அந்நியத் தன்மையுடன் கிளர்ந்தெழுந்த, இறையியல் அறிவு பெற்றிருந்த, நிறுவன எதிர்ப்பு சோம்பேறி அறிவுஜீவிகள் ஆகியோர் 1830 களின் ஜெர்மானிய சமூக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாளர்கள். பத்தில் மூன்று நான்கு இறையியல் பட்டதாரிகளுக்கு தேவாலயப் பணியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது”.

அந்தத் தருணத்தில் இருந்து, ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் அறிவுஜீவிப் வகுப்பினர் இடையே சிந்தனை மாற்றம் முக்கியத்துவம் பெற்றது. கலைப் பங்கெடுப்பில் உண்மை அளவு, அல்லது அரசியல், இதழியல், கல்வி அல்லது தேசியவாதம், சர்வதேசியவாதம், இனவாத உணர்வு ஆகியவை அறிவுஜீவிகளின் ’செய்தொழிலுக்குள்’ உள்ளடக்கி நிர்ணயிக்கப்படவில்லைசில அறிவுஜீவிகள் ஆவேசமாக கல்விக்கெதிராக இருந்தனர். சில வேளைகளில் பல்கலைக்கழகங்களும், அதன் பேராசிரியர்களும் அறிவுஜீவித்தனத்துக்கு ஒரே பொருளுடையவராய் இருந்தனர், ஆனால் மற்ற வேளைகளில், சில இடங்களில் அறிவுஜீவி வாழ்க்கையின் மைய புவி ஈர்ப்பு வேறெங்கோ இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில சொற்தொகுதிகள் கூர்மையூட்டப்பட்டதை கவனிகலாம். எப்படி விஞ்ஞானி என்பது வாழ்க்கைத் தொழிலாக அர்தப்பட்டதோ, எழுத்துக்களை ஆள்பவர் என்பது தொழில்முறை எழுத்தாளரைக் குறிப்பதாக அனுமானிக்கப்பட்டதுஅநேகமாக, ஒரு அறிவுத்திறனுடையவருக்கான ஈடுபாடு அவசியமில்லாமலேக்கூட செயல்படக்கூடிய இதழியலாளர், கட்டுரையாளரர் பணிகளைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டதுஆனால் ஃப்ரான்சில், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த ‘ட்ரேய்ஃபஸ் விவகார்த்திற்குப் பின்னர் குறிப்பாக எமில் ஜோலா, ஒக்டேவ் மிர்ப்யு மற்றும் அனடோல் ஃப்ரான்ஸ் ஆகியோரின் பங்களிப்பைக் கொண்டு நேரடியாக பொருளைப் (matter) பேசுவது எனும் அடிப்படையில் பொது வாழ்வில் அறிவுஜீவிக்களின் முழுமையான தோற்றம் குறிக்கப்பெறுகிறது.  ”அறிவுஜீவி’ எனும் சொல்லியல் அப்போதிலிருந்து சிறப்பாக அறியப்பட்டது (சில வேளைகளில் அதோடு இணைக்கப்பட்ட சிறுமைப்பொருளுடன்). 1898ல் அச்சொல்லியல் ஃப்ரென்ச்சு மொழியில் பெயர்சொல்லாக குறிக்கப்படுவது ’ஜியார்ஜெஸ் க்ளெமென்கா’வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

அறிவுஜீவிகளின் சமுதாயப் பாத்திரம்:

அறிவுஜீவிகள்  தனித்துவமான ஒரு சமூக வர்க்கமாக பார்க்கப்படுகின்றனர்பெரும்பாலும் இவர்கள் படைப்பாளர்களாகவும், கருத்தியலின் விமர்சகர்களாகவும் சிந்தனைகள் உருவாக்கம்கருத்தமைத்தல் ஆகியவற்றுக்கு முக்கியப் பங்களிக்கின்றனர்மேலோட்டமாக அறிவுஜீவிகள் என்போர் நிலவும் ஒழுங்குமுறைகளை தூக்கிப் பிடிப்பவர்களாக கருதப்பட்டாலும், அமெரிக்க மொழியிலாளர் மற்றும் எழுத்தாளர் நவோம் சாம்ஸ்கி போன்ற சிலர் சமூக நிறுவனங்களுக்கெதிராக எதிர்கருத்தாடலைக் கொண்டிருக்கின்றனர்.

பல வரையறைகளில் அறிவுஜீவிகள், பரப்புரைகள், போதனைகள் மற்றும் தன்னேய்ப்புக்களை மூளையில் ஏற்றுக்கொள்ளாதவர்களாக குறிக்கப்படுகின்றனர். சோவியத் யூனியனின் கொடுமைகள், மூன்றாம் ரீய்ஷ் (Reich) மற்றும் இதர சர்வாதிகார-முழுமையாக்கப்பட்ட ஆட்சிகளின் (totalitarian) கொடுமைகளின் போது வெளிக்காட்டப்பட்ட உணர்வுகளினால்  சிக்கல் எழுகிறதுஇங்கு எழும் கேள்வி: ஏன், ஏப்படி ஒரு அறிவுஜீவி தங்கள் அறிவுத் திறனையும் மீறி பரப்புரைகளால் பாதிக்கப்படுகின்றனர்?

சர்வாதிகார எதிர்ப்பு தீர்மானம் இயற்றுதலின் மீது விசாரணை செய்யும் மில்க்ராம் சோதனை நமக்கு சில விளக்கங்களை அளிக்கக்கூடும்யேல் பல்கலைக்கழகத்தின் உளநுல் வல்லுனர் ஒருவர், ஆய்வாளர் ஸ்டான்லி மில்க்ராமின் சமூக உளவியல் சோதனைகள் மூலம் ஒரு ஆய்வில் ஈடுபட்டார்தனிப்பட்ட மனசாட்சியோடு முரண்படும் செயல்களை ஒரு அதிகாரப்பூர்வ நபரின் ஆணைக்கிணங்கி செய்யும் பொழுது ஏற்படும் விருப்ப உணர்வை அளக்கும் ஆய்வு அதுசாதாரண மக்கள் தங்களின் அழிவுச் செயலின் விளைவுகளை அறிந்திருந்தாலும், அழிவு செயல்முறைகளுக்கு தரகர்களாக மாறக்கூடும் என்று மில்க்ராம் அதன் மூலம் கற்றரிந்தார்அடிப்படை ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒவ்வாத காரியங்களை செய்யச் சொல்லும் பொழுது நுண்ணறிவு, அறிவுத்திறனுக்கப்பால், ஒப்பீட்டளவில் அதிகாரத்தை எதிர்க்க வெகு சிலருக்கே அறிவுசார்-தார்மீக வகைமுறைகள் இருந்தது

இதற்கு பரிந்துரைக்கப்படும் காரணம்: அறிவுஜீவிகளின் கருத்தியல் அமைப்புக்கள் மீது அதை மேம்படுத்துவதற்காக வைக்கப்படும் தொடர் விமர்சனமானது, பெரும்பாலும் அயல்நாடு கருத்தியல் மாதிரிகளில் சிறந்த மாற்றுகளைக் கோருவதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அயல்நாட்டு மாதிரிகள் நடைமுறையில் காணக்கூடியவை அல்ல, அதன் மூலம்  அதன் செயல்பாட்டுத்தன்மைக் குறித்து நடைமுறைச் சாத்தியங்களை துல்லியமாக அளவிட முடியாது என்று விளக்குகிறார்.

பொதுக்கள அறிவுஜீவியின் (Public Intellectuals) சமூகப் பாத்திரம்:

மேலே விவரித்தது போல் ஒரு பொதுக்கள அறிவுஜீவியானவர் பல்வேறு சமூக சிக்கல்கள் குறித்து தகவல்கள் மற்றும் ‘உண்மை’களை தெரிவிப்பவர்; எனினும் இந்தப் பணியை மற்றவர்களும் செய்கின்றனர்எதற்காக பொதுக்கள அறிவுஜீவிகள் தனிச்சிறப்பு சான்றுசிட்டைக் கோருகின்றனர்வழக்கமாக பொதுக்கள அறிவுஜீவிகள்  கல்வி கற்ற உயரடுக்கிலிருந்து வருபவர்கள். மெக்கீ (2001) வடஅமெரிக்க எழுத்தாளர்களில் பெரும்பகுதியினர் அறிவுஜீவிகளிடையே தாங்கள் கல்வியாளர்கள் என்று எவ்வாறு கருதினர் என்று சுட்டிக்காட்டியுள்ளார் – அவர்களைப் போன்ற மக்கள் – வெறும் ’கல்வியாளர்களாய்’ மட்டும் இல்லாமல் கல்வி மற்றும் ஆற்றல் (தகவல் பரிமாற்றம்இருப்பதாகவும், அந்த நிலை பெரும் பகுதி மக்களுக்கு தங்களது புரிதல்கள், சிந்தனைகள் குறித்து பல்வேறு ஊடகங்கள் வழியாக (புத்தகம், ஆவணப்படங்கள், திரைப்படங்கள், சொற்பொழிவுகள்) இணைந்து முன்வைக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் கருதினர்.   பொதுக்கோளத்தை நோக்கிய இந்த ஒருங்குதலே (converging) கல்வியாளர்களையும், பொதுக்கள அறிவுஜீவிகளையும் வேறுபடுத்துகிறதுஒரு தனிநபரின் சிறப்பியலைத் தாண்டிய ஒரு தலைப்பில் பொது மக்களை நோக்கிய தகவல் பரவலாக்கம் ஒருவரை பொது அறிவுஜீவியாக அனுமதிக்கிறது (போர்த்யூ (Bourdieu) 1989). பொதுக்கள அறிவுஜீவிகள் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் (பரிணாம வளர்ச்சி, மதம், உலக வெப்பமயமாதல், மரபணு மாற்றம் போன்ற தலைப்புகள்) ஒன்றை பொது விவாதக் களத்திற்கு கொண்டுவருகின்றனர்; ”அறிவுஜீவிகள் தாங்கள் செய்யும் காரியங்களைக் கொண்டு வரையறுக்கப்படுவதில்லை, மாறாக அதை எவ்வாறு செய்கிறார்கள் என்கிற அடிப்படையிலும்சுயவிமர்சனம் செய்துக் கொள்ளும் விதம், அவர்கள் எவ்வகை மதிப்பீடுகளை நிலைநிறுத்துகின்றனர் என்பதையெல்லாம் வைத்து வரையறுக்கப்படுகின்றனர்.” ஃபுரேதி (Furedi,2004).

சிறப்பு சலுகை பெற்ற நிலையிலிருந்து  இன்றைய பொதுக்கள அறிவுஜீவிகள் பேசினாலும், எவ்வாறு ஒரே நேரத்தில் உள் மற்றும் வெளி ஆளாக பேசுவது, செயல்படுவது  மற்றும் பொதுமக்களின் தார்மீக மனசாட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எப்படி பேரம் பேசுவது எனும் நெருக்கடிக்குள்ளாகின்றனர். குறிப்பிட்ட பாணியில், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே என்றில்லாமல், அகன்ற தளத்தில் கல்வியைத் தாண்டிய ஒரு விவாதத்தை தூண்டக்கூடிய வகையில் தேர்வுகளைத் திணிக்கும் பாத்திரத்தின் மூலம் இது சாத்தியமாகிறதுவெறும் தொழில்முறை உத்வேகமாக இல்லாமல் அன்றாட சிக்கல்களைக் குறித்து அவர்கள் பெரும்பாலும் பேசுகின்றனர், அதன் மூலம் வினாக்காண முடியாத கேள்விகளுக்கு விடை காண முயல்கின்றனர்.  (க்ளார்க், 2003).

உலக அளவை:  உலகமயமாக்கலின் வளர்ச்சியினாலும், புதிய ஊடக தொழில்நுட்பத்தின் அணுகல்தன்மையினாலும் பொதுக்கள அறிவுஜீவிகளுக்கு பல வகைப்பட்ட சமூகப் பொருளாதார பின்னணி, பல்வேறு இனம் கொண்ட மக்களை பார்வையாளர்களாக்குகிறது. அது முன்னெப்போதுமிருந்திராத வகையில் பெரிய அளவில் குழுக்களாக இருக்கிறதுஇந்தப் பார்வையாளர்களை சென்றடையும் வழிகள் தனிசிறப்புடன் தீர்மானிக்கப்படுகிறது. புத்தகமோ, தொலைக்காட்சி கலந்துரையாடலோ, வானொலி விவாதங்களோ, இணைய மன்றங்களோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை ஊடகம், பிரச்சனையின் முக்கியத்துவத்தைப் பொருத்து எளிதில் எல்லைத் தாண்டி சென்றடைகிறதுதற்காலத்தைய உலகமயமாக்கலின் அனுபவமானது ஒரு வகையில் முதலாளித்துவ நிறுவனங்களின் அதீத வளர்ச்சியினால் ஏற்படும் அழுத்தம் உலகத்தின் எல்லா திசைகளிலும் அன்றாட வாழ்வின் சிதைவை எடுத்துரைத்தாலும்இந்த மாற்றங்களிலுருந்து பெறப்படும் ஆதாயமானது பொதுக்கள அறிவுஜீவிகளுக்கு பரந்துபட்ட பார்வையாளர்களிடம் எளிதில் ஒரு விவாதத்தை தொடங்க வகை செய்கிறதுபொதுக்கள அறிவுஜீவியின் முக்கியப் பாத்திரத்தில் இதுவும் ஒன்று.

ஆராய்ச்சி மற்றும் அரசியல்: பொதுக்கள அறிவுஜீவிகள் கல்வியியல் ஆய்வையும், பொதுக் கொள்கைகளையும் இணைக்கின்றனர்ஆய்வுகளில் கலந்துக்கொள்ளும் பொழுது, சமூக விஞ்ஞானிகளுக்கு தங்களது அரசியல் சார்புக்கு உகந்த எல்லைக்குள் செயல்படும் பொறுப்பு இருக்கிறது, அத்தோடு உணர்ச்சிப்பூர்வ கூறுகளில் இருந்து விடிவித்துக்கொண்டு, தங்களது ஆய்வுகளை அறிவைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வத்தோடு நடத்த வேண்டும்ஒருவேளை அரசியல் களத்தில் நேரடி தொடர்புடையவர்கள் எனில் சமூக விஞ்ஞானிகள், தங்களது வேலையை ஒரு செயல் திட்டத்தோடு அணுகுவர். இவ்விடத்தில் தான் அவர்கள் கல்வியியல் மற்றும் அரசியலுக்கிடையே செயல்பட்டு, தங்களது கண்டுபிடிப்புகளை, பகுப்பாய்வுகளை கொள்கை எனும் எல்லைப்பரப்புக்குள் கொண்டுவருகின்றனர்இறுதியாக பல்வேறு விசயங்கள் குறித்து விவாதம் எழுப்புவதற்கு அதைப் பொது அரங்கில் கொண்டு வந்து, அத்துறையில் தங்களின் நிபுணத்துவத்தை முன்வைத்து பரந்துபட்ட மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். அறிவு ஜீவிக்குரிய முழுமையான பாத்திரத்தை அப்போது அடைகின்றனர்.   இப்படி ஒவ்வொரு வகையான பாத்திரங்களும் ஒவ்வொரு வகையான நடைமுறையை சார்ந்திருக்கிறது, இந்த வேறுபாட்டை வெளிப்படையாக உணர்ந்தவர்களாக சமூக விஞ்ஞானிகளின் வேலை மேம்படுகிறது, அதன் மூலம் ஒன்றோடு மற்றொன்றை இணைத்து ஒவ்வொரு பாத்திரத்தின் முறைமைத் தகுதி பாதிக்கக்கூடிய அந்தப் பொறியிலிருந்து விலகி நிற்கின்றனர் (கத்தோன் 2007).

சிலேவில் பினோசெட் ஆட்சிக்குள்ளாக சனநாயகத்தை மீட்டுருவாக்கம் செய்ய அறிவுஜீவிகள் எவ்வாறு போராடினார்கள், அந்த மாற்றம் அரசியல்வாதிகளாக, அலோசகர்களாக சிலருக்கு புதிய தொழிற்முறைகளை  எவ்வாறு ஏற்படுத்தியது என்று ஸார்கின் (2007) குறிப்பிடுகிறார்இது அரசியல்களத்தில் ஒரு நடைமுறை மாற்றத்தை பிரதிபலிக்கிறது அல்லது மாற்றத்தைக் கோருகிறது, இது கல்வியியலின் நடுநிலமையிலிருந்து ஒரு படி முன்னேறிய நிலை. சமூக விமர்சகராகதொலைநோக்குவாதியாக பொதுக்கள அறிவுஜீவிகள் கோட்பாடு, கருத்தியல் ஆகியவற்றின் அடிப்படையில்  தனது படைப்பை உருவாக்கும் பொழுது அவரோடு மூன்றாம் வகையான அறிவுஜீவிகள் இணைகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பத்திரிகைத்துறை அறிவுஜீவிகள் போன்றவர்கள் – அதாவது தொழில்நுட்ப அறிஞர்களைப் போல் இயந்திரதனமாக சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு கோறுபவர்கள். அத்தகையவர்களுக்கு கோட்பாட்டு வரைவுத் திட்டங்கள் என்பது அவ்வளவு முக்கியமில்லை. அதேசமயம், மற்றவகையான அறிவுஜீவிகள் தொழிற்முறை கல்வித்துறையின் எல்லைகளுக்குள்ளாகவே செயல்பட்டனர், அதனால் சிலே சமூகத்தினரிடையே தாக்கம் ஏற்படுத்துவதிலிருந்து சிறு தோல்வி கண்டனர்.

அளவை, எதிர் நிலையில் பண்பு என்பதற்கு ரிச்சர்ட் போஸ்னர் பொருளியல் பகுப்பாய்வு, வன் தரவுகள், கணிப்புகள் மீதான சோதனை ஆகியவற்றைக் கொண்டு பொதுக்கள அறிவுஜீவிகள் பற்றிய பொருள் விளக்கத்தைத் தருகிறார். ”கல்வியியல் அறிவுஜீவிகள்” மேல் தனது கவனத்தை வைக்கிறார். அவர்களது பரகடனங்கள் ஒழுங்கற்றது , கல்வியியல் துறைக்குரிய நிபந்தனைகள்அனுமதிக்க இயலாத சார்பு நிலைகளைக் கொண்டது மேலும் அதுவே அவர்கள் பொதுக்கள எழுத்து ராசியத்துக்குள் பங்கெடுப்பதற்கான காரணம் என்று விமர்சிக்கிறார்தன்னிச்சையான பொதுக்கள அறிவுஜீவிகள் பற்றாகுறை இருப்பதாக  அவர் கருதுகிறார்.  ”கல்வியியல் அறிவுஜீவிகள்” குறித்து அவர் எழுதும் பொழுது போஸ்னர் கண்டறிந்தது அவர்கள் பொதுக் கொள்கைகளில் மட்டுமே விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர் பொது தத்துவங்கள் மீதல்ல, பொது அறம் அல்லது பொது இறையியல் குறித்தோ, தார்மீக அறம், ஆன்மீக சீற்றம் ஆகியவற்றின் மீதோ ஆர்வம் கொள்வதில்லை, அதனால் அவர்கள் மனவெழுச்சியை நிராகரித்து காரியவாத அறிவைக் கொண்டு கொள்கைகள் பற்றியக் கேள்விகளை எழுப்புகின்றனர் மாறாக மென்மையான உணர்வுகள், மதிப்புகள் பற்றியக் கேள்விகளை எழுப்புவதில்லைஇவர்களே கலை மற்றும் மானுடவியல் துறையாளர்கள் பொதுக்கள அறிவுஜீவிகள் எனும் வட்டத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று முழுங்குகிறார்கள், ஏனென்றால் அவர்களது படைப்புகள் பண்பு சார்ந்த ஆய்வுகளின் வழி அனுபவத் தரவுகளைக் கொண்டதாக இருக்கிறது, ஆகவே அது பிழையானது என்கின்றனர். பொதுப் பிரச்சனைகள் குறித்து பொதுக்கள அறிவுஜீவிகள் தெளிவாக, தார்மீக உணர்வோடு எழுதுவது குறைந்து வருகிறது என்பதை பெரும்பாலானோர் கவனித்து வருகையில் போஸ்னர் அவர்களது எழுத்துக்களில் துல்லியமற்ற பொருண்மையினைக் காண்கிறார்

மார்க்சியமும் அறிவுஜீவிகளும்:

அறிவுஜீவிகள் என்போர் மூலதன உரிமையாளர்களோ, பாட்டாளிகளோ அல்லஉழைப்பை விற்று கூலி பெற்று பிழைப்பதாலும், அவர்களின் உழைப்பு மூலதனத்தின் அதிகாரத்தால் சுரண்டப்படும் நிலையில் இருப்பதாலும் அவர்கள் பாட்டாளித் தோற்றத்தை பிரதிபலிக்கின்றனர், ஆனால் மறுபுரம் அவர்கள் பெரும்பாலும் மூளை உழைப்பை மட்டுமே செலுத்தி அதிக வருவாய் பெற்று உயர்ரக மேட்டுகுடி வாழ்க்கை வாழ்வதால் அவர்கள் பூர்ஷுவா வர்கத்தினரே என்று மார்க்சியவாதிகள் நம்புகின்றனர்பல்வேறு சமூக சக்திகளின் கையில் அவர்கள் வெறும் நடுநிலைக் கருவிகளாகவே இருந்து வந்திருக்கிண்றனர். எனினும் மார்க்சியர்கள் நம்புவது ‘எல்லா அறிவும் இருத்தலியல் சார்புடையதே, மேலும் அறிவுஜீவிகள் அறிவை உருவாக்கி அதை பாதுகாக்கவும் செய்கின்றனர், அத்தோடு பல்வேறு சமுக குழுக்களின் செய்தித்தொடர்பாளர்களாகவும் செயல்பட்டு சமூக விருப்பங்கள் குறித்த விவாதங்களை எழுப்புகின்றனர்’. க்ராம்சியின் நிலைப்பாடானது ஒவ்வொரு வர்கத்திற்கும் தங்களுக்கான கருத்தியலை வடிவமைக்க சொந்த அறிவுஜீவிகள் தேவைப்படுகின்றனர் என்பதாக இருக்கிறது. அந்த அறிவுஜீவிகள் சமூகத்தின் எந்த பிரிவின் பக்கம் இணையப்போகிறோம் என்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும்.  ’நவீன மேற்கத்திய மூலதனத்தின் விளைவால் அறிவுஜீவிகள் தங்களது அறிவை சந்தைக்கு வைக்கின்றனர். எந்த சமூகத்தின் கருத்தியல்களை வடிவமைக்கின்றனரோ, அவர்களின் மூளையாகவே மாறி அறிவுஜீவிகள் அந்த சமூகத்தின் கருத்தியல்களை பண்டங்களாக உருவாக்கி அவர்களையும் வாடைகைக்கு விடுகின்றனர் ’ என்று மார்க்சியர்கள் கருதுகின்றனர்அறிவுஜீவிகள் தங்களது கருத்தியல்களை உலகமயமாக்க முயல்கின்றனர் பிறகு ‘சுற்றி வளைத்து’ துவங்கிய இடத்திற்கே வந்து அத்தகைய கருத்தியல்களின் சார்பு நிலைகளை அம்பலப்படுத்துகின்றனர் என்று மார்க்ஸ் கருதினார்.  

ஹார்டிங்கை (ஜென்னிங்ஸ் மற்றும் கெம்ப்–வெல்ஷ் 1997 ல்) பொறுத்தவரை க்ராம்சி சுட்டிக் காட்டியது போல் பாட்டாளி வர்க்க எழுச்சி அந்த வரலாற்று காலகட்டத்தின் அறிவு ஜீவிகளை சார்ந்தே இருந்தது எனும் மார்க்சின் கோட்பாட்டை ஒட்டியே இருக்கிறது: “மனித குலமானது தங்களை தாமாகவே வேறுபடுத்தி காட்ட முனைவதில்லை, ஒருங்கிணைந்து செயல்பட்டு சுய உரிமைகளின் அடிப்படையில் சுதந்திரம் பெறுவதில்லை. அப்படி ஒருங்கிணைக்கும் ஒரு நிறுவனத்தில் அறிவுஜீகளின் பங்கு மறுப்பதற்கில்லை, அவர்களே ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது தலைவர்கள் என்று கருதப்படுகிறார்கள். கருத்தியல், தத்துவம் ஆகியவற்றில் தனித்தன்மை அறிவு பெற்று நபர்களின் பங்களிப்பு இல்லாமல் சிந்தனை விரிவாக்கம் சாத்தியமில்லை. (ஜென்னிங்ஸ் மற்றும் கெம்ப்–வெல்ஷ் 1997:2010ல்).  இந்தச் சூழலில், சமூகத்தின் மற்ற துறைகளையும் உள்ளடக்கி பார்ப்போமானால், அறிவுஜீவிகளே தொழிலாளர்களின் விடுதலையை வரையறுக்கின்றனர். ஹார்டிங்கைப் பொறுத்தவரை, ஒரு லட்சியம் குறித்த வெகுசன பிரக்ஞையை ஏற்படுத்த அறிவுஜீவிகள் அவசியமாகின்றனர்தொழிலாளர்கள் அல்லாது சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக அறிவுஜீவிகளே ‘முழுமை’யாக ஒன்றுக்கு பொருள் விளக்கம் அளிக்கக்கூடியவர்கள், ஆகையால் அவர்களை தலைவர்கள் என்று கருதுவதற்கு உரிமை வழங்கலாம் என்று லூக்காசும் சொல்கிறார். தொழிலாளர்களின் அறியும் சக்தியைத் தாண்டியதாக சோசலிச சித்தாந்தங்கள் இருப்பதாக லெனினும் ஏற்றுக் கொண்டார். அத்தகைய ‘பண்பாடும் அறிவுசார் நுட்பங்களும்’ சராசரி தொழிலாளிக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது என்று கருதினார்.  (ஜென்னிங்ஸ் மற்றும் கெம்ப்–வெல்ஷ் 1997).

சமூகம் பின்பற்ற வேண்டிய பாதையை வரையறுக்கும் அறிவுஜீவிகளின் ஆர்வமானது தேர்தெடுத்த சில நம்பிக்கைகளின் மீது இருக்கும் ஆழ்ந்த உணர்வின் அடிப்படையில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. கூடுதலாக, இருபதாம் நூற்றாண்டில் மதசார்பற்ற கருத்தியல்கள் மிகுந்த கவனம் பெறுவதாலும், அரசியல் பங்கெடுப்புகள் பெருகியதாலும் அரசியல் களத்திலும், அறிவுஜீவிகளின் வாழ்க்கையில் ‘கருத்தியல்’ என்பது தன்னளவில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதுஇருபதாம் நூற்றாண்டின் சில பார்வையாளர்கள் மத்தில் கருத்தியல் நீரோட்டங்களின் தாக்கமானது, அறிவுஜீவி பற்றியப் பொருள்விளக்கத்திற்கு  கருத்தியல் என்பதை ஒரு முக்கிய விவரிப்பாக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது.  ”ஒரு கருத்தியல் பற்றிய தேடுதலை மேற்கொள்ளாத எந்த ஒரு விஞ்ஞானியோ, மேதையோ அறிவுஜீவி என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என அறிவிக்கிறார் லீவைச் ஃப்யூர்.

பொதுக்கள அறிவுஜீகள் மற்ற அறிவுஜீகள், நடுத்தர வர்க்கத்தினரைப் போல் அல்லாது மாறுபட்ட ஒரு ‘மொழியில்’ உரையாடவும், கருத்துக்களை பரப்பவும் செய்வதாக மார்க்சியர்கள் கருதுகிறார்கள்ஆல்வின் கௌல்ட்னர் இம்மொழியை ‘முக்கிய-தற்பொருட்டு வினை உரையாடல்’ (Critical-reflexive discourse) என்று சுட்டுகிறார். இதன் மூலம் “அறிவுஜீவிகள் தங்கள் நிலைப்பாடு பகுத்தறிவின் வாதம் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது என்பதை உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் அத்தகைய விவாதங்களில், விளையக்கூடிய பயன் என்பது எவ்வித தாக்கத்தையும் பெற்றிருக்கக்கூடாது” என்கிறார்.

மார்க்சியர்களின் பரவலான கருதுகோள் என்னவென்றால் ‘அறிவுஜீவிகள் அந்நியமானவர்கள், நிறுவன எதிர்ப்பாளர்கள்’ என்பதாகும்அரசு உட்பட ஏற்கணவே நிலைநாட்டப்பட்ட நிறுவனங்களை எதிர்த்து அறிவுஜீவிகள் நீடித்த உள்ளுணர்வு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று மார்க்சின் கோட்பாடுகள் உணர்த்தினாலும் அவரே மேற்கொண்டு “அத்தகைய போராட்டங்கள் அந்நிறுவனங்களுக்குள்ளும் நடைபெறும், அதற்கு ஆதரவாகவும் நடைபெறும், மாற்றத்தை வலியுறுத்தியும் நடைபெறும்’ என்கிறார். விரோத கலாச்சாரத்தின் பால் ஒரு முற்சார்பு எதிர்ப்பு இருக்கும் காரணத்தால் அறிவுஜீவிகள் இயல்பிலேயே தற்காலத்தை பற்றிய விமர்சகராய் இருக்கின்றனர்.

அறிவுஜீவிகள் தங்களை ஆட்சி அதிகாரத்திற்கு உட்படாத சுதந்திரமான தன்னாட்சியாளர்களாகப் பார்கின்றனர்’ என்று அறிவுஜீவிகள் பற்றிய மறு-கோட்பாடை நிறுவிய பிரபல அந்தோனியோ க்ராம்சி வரையறுக்கிறார். மேலும் இந்த கருத்தியலானது அறிவுஜீவிகளின் உள்ளார்ந்த நிலைப்பாட்டில் இருந்து தோன்றுவதே ஒழிய அறிவுஜீவி வாழ்க்கை முறையின் மாணவனாக அல்ல என்கிறார்

பொருளாதார முன்னேற்றம் என்பது அறிவுஜீவிகளின் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.  ’கல்வித் தரம், எழுத்தறிவு, வரவு விநியோகம், வேலை வாய்ப்பு’ ஆகிய சமூக, பொருளாதாரக் கூறுகள் முக்கியமானவை. நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியானது, குறிப்பாக அரசியல் மற்றும் உயர் கல்வியில் அவ்வர்க்கத்தின் ஆதிக்கமானது அறிவுஜீவிகளைப் பெருக்கும் சூழலுக்கு ஆதாயமாக அமைந்திருக்கிறதுஅறிவுஜீவிகளின் பின்னணி, அறிவுஜீவித் தலைமை உருவாக்கத்தில், அரசுடனான உறவில் தாக்கம் செலுத்துகிறது. உதாரணமாக மெக்சிகோவில் தலைநகரில் மட்டுமே பொருளாதார, அரசியல் அதிகாரங்கள் குவிக்கப்பெற்று, கல்வி என்பது நகர நடைமுறையாக்கப்பட்ட சூழலில் ஒருவர் வாழும் இடமும், பின்னணியும் ஒருவர் கல்வியறிவு பெற்று உயர்வதை தீர்மானிப்பதோடு, மற்ற பின்னணியுடையவரின் அறிவுக்கும், திறனுக்கும் அங்கீகாரம் இருக்குமா எனும் கேள்வியையும் எழுப்புகிறதுஅறிவுஜீவிகளின் பெற்றோரின் பின்னணி தங்கள் குழந்தைகள் விசயத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. தங்களுடையப் பிள்ளைகள் எவ்விதமான உயர் கல்வியைக் கற்க வேண்டும், எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், எவரோடு நட்பு கொள்ள வேண்டும் எனபனவற்றை உள்ளடக்கியே தீர்மானங்கள் இயற்றப் பெருகின்றன. பீட்டர் ஹெச். ஸ்மித் சொல்கிறார் ‘ஒரு குறிப்பிட்ட அடையாள வர்க்கத்தின் மக்கள் தங்கள் சூழலிலிருந்து பெறப்டும் அனுபவங்களினால் அறிவூட்டப்படுகின்றனர், அதனால் அதற்கு ஆதாயமான பொதுவான அனுமானச் சார்பை மேற்கொள்கின்றனர்’அளவில் சொல்வதானால் அத்தகைய இடங்களில் 94 சதவிகித மக்கள் நடுத்தர வர்க்கத்தவரும், 6 சதவிகிதம் தொழிலாளர் வர்க்கத்தவருமாக இருக்கின்றனர்

பொதுக்கள அறிவுஜீவிகளின் தனிப்பட்ட பின்னணி:

பொதுக்கள அறிவுஜீவிவாத வரலாற்றில் மேல்-நடுத்தட்டு வர்க்கத்தினர், மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் பெரிய வெற்றியை கண்டிருக்கின்றனர்செல்வமும், அதன் தொடர்ச்சியான பண்பாட்டு முதலீட்டில் ஆதிக்கமும் பொதுக்கள அறிவுத்துறையில் நுழைவதற்கு சாதகமாகத் திகழின்றன. முரணாக ஏழ்மையும், குறைவான கலாச்சார முதலீடும் பின்னடைவாக இருக்கிறது. பண்பாட்டு முதலீடு ஒருவருக்கு ‘அதிகாரத்தையும், அந்தஸ்தையும்’ வழங்குகிறதுஸ்டீவ் ஃபுல்லர் ’அறிவுஜீவிகள்’ எனும் தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:  ’நம்பத்தகுந்த அறிவுஜீவியாக திகழ்வதற்கு ஒருவருக்கு அதீத சுதந்திர உணர்வு இருக்க வேண்டும்’; “நீங்கள் செல்வந்தராக, உயர்குடியில் பிறந்திருப்பீர்களானால் ’தன்னுரிமை’ என்ன என்பதை நிகழ்த்திக்காட்டுவது எளிதுநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களது அந்தஸ்தை துறந்து ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பரிந்து பேசுவதுதான்” (ஃபுல்லர், 2005: 113). மேலும் அவர் சொல்கிறார் ”நீங்கள் ஏழையாகவோ, தொழிலாளர் வர்க்க பின்னனியில் பிறந்தவராகவோ இருப்பின் “தன்னுரிமையை நிகழ்த்துதல் என்பது கடினமாகிவிடுகிறது.....பொது நலனுக்காக செல்வந்தர்களோடு இணைவதென்பது சொந்த வர்க்கத்திற்கு துரோகம் செய்வதாய் ஆகிறது”. (ஃபுல்லெர், 2005: 114).  இந்த கருத்து, அறிவுஜீவி சூழலில் ஒருவர் நுழையும் போது சமூகப் பொருளாதார உறவுகளின் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதை குறிக்கிறது, ஆனால் இக்குறிப்புக்களைக் கடந்த வாதத்திற்கு இடமுண்டு

பொருளாதாரக் கூறுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்உலகளாவிய அறிவுஜீவிகளை கணக்கெடுக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற உயர் தர பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பயின்றவர்களாய் இருக்கின்றார்கள்உதாரணமாக தற்போது தரவரிசையில் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருக்கக் கூடிய நவோம் சாம்ஸ்கி, ரிச்சர்ட் டாக்கின்ஸ் மற்றும் கிறிஸ்டபர் ஆகியோர்

எனினும் இந்த விசயத்தில் சில  விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்தது, ஆனால் அதுவும் கலாச்சார முதலீட்டைக் கொண்டு அம்மனிதர்கள் கைப்பற்றிய அதிகாரத்தால் மட்டுமே சாத்தியமானதுஉதாரணத்திற்கு ஹரால்ட் பிண்டர் என்பவர் ’கீழ் நடுத்தர வர்கத்திலிருந்து’ வந்தவர் ஆனாலும் தற்போது புகழ்பெற்ற நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இயக்குனர், கவிஞர் மற்றும் அரசியல் ஆர்வலராக திகழ்கிறார்பல்வகைப்பட்ட திறன்களைக் கொண்டிருந்ததால் அவர் ஒரு பொதுக்கள அறிவுஜீவியாக கருதப்பட்டார்நாடக ஆசிரியராக முதன்மையில் பெற்ற அங்கீகாரத்தைக் கொண்டு அவர் மற்றத் திறமைகளை வளர்த்துக் கொண்டார் அதன்மூலம் அரசியல் செயல்பாட்டுக்கேற்ற கலாச்சார முதலீட்டில் இடம்பெற்றார். இந்த வழிமுறை எமில் ஜோலாவிடம் தெளிவாக காணலாம். ஜோலா, ட்ரேஃபஸ் விவகாரத்தில் ட்ரேபசின் விடுதலையில் இன்றியமையாதவரானார். அவர் ஒரு “முன்னோடி ஃப்ரென்ச்சு சிந்தனையாளர்” என்பதால் அவரது கடிதம் இவ்விவகாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகித்ததுஎழுத்தாளர் எனும் அடையாளத்தை வைத்து அவர் பெற்றிருந்த அறிவுஜீவி அந்தஸ்தானது அவருக்கு கலாச்சார முதலீட்டில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெறமுடிந்தது. அதை வைத்து அவர் நிராகரிப்புக்கிடமில்லாமல் ட்ரேஃபசுக்கு செய்த உதவி பயனளித்ததுஅதனால் அவர் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டாலும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல பொருளாதார சுதந்திரம் பெற்றிருந்தார். இங்கும் பொருளாதாரம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது

பொதுக்கள அறிவுஜீவிகளின் பின்னணி கேள்விக்குட்படுத்தப்படும் பொழுது எழும்  கேள்விகளில் சில கேள்விகளே இங்கு கேள்விக்குட்பத்தப்பட்டிருக்கிறது

கல்வியியலும் பொதுக்கள் அறிவுஜீவிகளும்:

சில உரைகளில், குறிப்பாக பத்திரிகை மொழியில் அறிவுஜீவிகள் எனப்படுவோர் மானுடவியல், தத்துவவியல் ஆகியவற்றை சமூக, அரசியல் உட்பொருளோடு பேசுபவர்கள். இவர்களே ‘பொதுக்கள அறிவுஜீவிகள்’ என கருதப்படுகின்றனர், ஒருவகையில் இவர்கள் திறன்மிக்க தொடர்பாளர்கள். பொதுவாக அவ்வுரைகள் கல்வியியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்குள்ளாக, சுற்று வட்ட நிபுணத்துவத்திற்குள்ளாகவே உழலும், ஆனால் அறிவுஜீவிகளுக்கு தனிப்பட்ட நேரடி அனுபவத்தையும் கடந்து பரந்த கலாச்சார அறிவுக் கருவூலத்தை அணுகும் சாத்தியங்கள் இருக்கின்றனஒரு அறிவுஜீவியின் அறிவுப் பரப்பானது பலவேறு துறைகளில் புதிய சிந்தனைகளை கண்டடைய வகை செய்யும்அறிவுஜீவி எனப்படுபவர் பரந்த அரூப குறியீடுகளை, சிந்தனைகளை பொருட்படுத்துபவர், அதை தன் துறைக்கப்பாலும் பொருத்திப்பார்ப்பவர் எனக் கொள்ளலாம்

இந்த சொற்பதம் சில ஊகங்களை முகமூடியிட்டு மறைக்கிறது, குறிப்பாக கல்வியலில்உதாரணத்திற்கு அறிவுஜீவிகளின் படைப்புகள் பொதுவாக தனிச்சுற்றுக்கு சென்றுவிடுகின்றன, சமூக இணைப்பில் ஏற்படும் அந்த இடைவெளியை இணைக்கும் அவசியம் இருக்கிறது. பொது நடைமுறையில் ‘அறிவுஜீவி’ எனும் முத்திரை இயற்கை விஞ்ஞானம், செயல்முறை அறிவியல், கணக்கியல், பொறியியல் ஆகிய துறையினரை விட கலாச்சாரம், கலை, சமூக விஞ்ஞானம் போன்ற துறையினருக்கே சூட்டப்படுகிறதுஇத்துறையில் உள்ள அறிவுஜீவிகள் போதனைகளால் பாதிக்கப்படக்கூடியவர்மேலும் மனிதர்களுக்கேயுறிய முற்சார்பு, பலகீனங்களால் பீடிக்கப்பட்டு சுய ஏமாற்று, பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

ட்ரேஃபஸ் விவகாரத்தின் போது பொதுக்கள அறிவுஜீவிகள் எப்போதும் சர்ச்சைக்குறிய, முரண்பாடுகள், மோதல் நிறைந்த போக்கையே கையாண்டுள்ளனர்.

பொதுக்கள அறிவுஜீவிகள் எனும் இந்த சொற்பதத்திற்கு எதிர்மறை குறிப்புசொல்லும் உண்டுநெதர்லாந்தில் “உலக நடைமுறக்கொவ்வாத குறிக்கோள்களை உடையவர்கள்’, ஹங்கேரியில் “மிகுந்த புத்திசாலி’ ஷெக் குடியரசில் “மண்டை வீங்கி” என்று அவமானம் செய்யப்படுகிறது, அவர்கள் மெய்மையிலிருந்து விலகியோ அல்லது துண்டிக்கப்பட்டோ இருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது (கோலினி, 2006).  இந்த முரண்பட்டப் பார்வைகளே அறிவுஜீவிகளுக்கான சமூக பாத்திரத்திறத்திற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.  ’சமகால சமூகத்தில் சில அறிவுஜீவிகள் அங்கீகாரமும், ஏற்பும் பெற முனைந்தால் கூட அது நடைமுறையில் சாத்தியமாவது குறைவு ஏனென்றால் “உண்மையான”, “மெய்யான” அறிவுஜீவி என்பவர் எப்போதுமே அந்நியமானவர், சுய அஞ்ஞானவாசத்தில், சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்பவர்’ என்று எட்வர்ட் செயித் கூறுகிறார். (ஜென்னிங்க்ஸ் & கெம்ப் வெல்ஷ், 1997 1-2).

நார்மன் ஸ்டோன் சொல்வது, அறிவுஜீவிகள் ஒர் வர்க்கம், விசயங்களை தவறாக புரிந்துக் கொள்ளும் வர்க்கம் என்றும் சொல்லலாம், முட்டாள்தனத்திற்கும், தவறுகளுக்கும் தண்டனை பெறும் ஒரு நபர். இந்த வாதத்திற்கு மேம்பட்ட ஆதரவு 1979 முதல் 1990 வரை பிரதமராக இருந்த மார்க்கரட் தாட்சரிடமிருந்துக் கிடைத்தது.  ‘தற்பெருமை பேசும் அறிவுஜீவிகள் உருவாக்கிய அரூபச் சிந்தனைகளின் பெயரால் பாரம்பரிய நடைமுறையை தூக்கி எறிய முனையும் ஒரு கற்பனாவாத முயற்சி’ என்று ஃப்ரென்ச்சு புரட்சியைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். (தாட்சர் 1993: 753) சண்டே டெலிக்ராஃப், ஸ்பெக்டேட்டர் போன்ற நாளிதழ்கள் ஆதரித்த அறிவுஜீவிகள் பிரிட்டிஷல்லாதார் அல்லது பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்கள் எனும் பார்வையில் தாட்சர் உறுதியாக இறுந்ததன் காரணமாக அவருடைய ஆட்சிகாலத்தில்தன்னுணர்வோடு தன்னைச் சுற்றி எப்போதும் கல்வியாளர்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.  (ஜென்னிங்க்ஸ் & கெம்ப் வெல்ஷ், 1997).

அரசியலுக்கும், அறிவுஜீவிகளுக்குமான தொடர்பு நுண்ணியதாக இருந்தாலும், ஆண்டனி கிட்டென்ஸுக்கும், டோனி ப்ளெயிர் அரசுக்கும், ’மூன்றாம் பாதை’ சிந்தனைகள் ஆகியவற்றுக்கிடையேயான கல்வியியல், அறிவுசார் தொடர்பு போல் அறிவுஜீவிகள் குறிப்பிட்ட அரசியல் அதிகாரத்துடனான தொடர்பு குறித்து பலமான முரண்பாடுகள் இருந்து வந்தது. (மெக்.லென்னான், 2004).

வாக்லவ் ஹாவெலின் கருத்துப்படி அரசியல் செயல்பாடுக்கும், அறிவுஜீவிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றபோதும், அரசியல் தலைவர்கள் பல்வேறு சிந்தனைகளை எடுத்துரைத்தாலும்சிந்தனைகளுக்கான பொறுப்பு அறிவுஜீவிகளிடமே இருக்கிறது. அதனால் ’கற்பனாவாத அறிவுஜீவிகள்’ அகற்றப்படவேண்டும்ஏனென்றால் அவர்கள் சர்வதேசிய நுண்ணறிவு என்ற பெயரில் தருவதெல்லாம் சமூகத்தை சிதைத்திருக்ககூடிய சிந்தனைகளே. மாறாக தங்களின் சிந்தனைகள், எண்ணங்கள் மற்றும் சொற்களுக்கிடையேயான தொடர்பை, அதன் தாக்கத்தை அறிந்தவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்ஹாவெலின் தர்க்கப்படி இத்தகைய அறிவுஜீவிகளே “கூரிய கவனத்துடன் கவனிக்கப்படவேண்டியவர்கள், அவர்கள் அரசியல், அதிகாரத்திற்கு எதிராக கண்ணாடியை பிடித்துக் கொண்டிருக்கும் சுதந்திர விமர்சகர்களாகவோ அல்லது அரசியலில் நேரடியாக தொடர்புடையவர்களாகவோ இருக்கலாம்”.  (ஜென்னிங்ஸ் & கெம்ப் வெல்ஷ், 1997). 

தங்களது சிந்தனைகளின் பொருப்புகளை உணர்ந்த கருத்தார்ந்த அறிவுஜீவிகள் பற்றிய இந்த நேர்மறையான  பார்வை ஒருபுறம் இருக்கசிலநேரங்களில் அவை எதிர்மறையான  விளைவை ஏற்படுத்தலாம் என்கிறார் ஃபுல்லர்அவரது தர்க்கப்படி அறிவுஜீவிகள், அரசியல் ஆட்சியெல்லை இவற்றுக்கிடையேயான தொடர்பு பெரும்பாலும் முரண் கொண்டதாகவும், மோதிக் கொள்வதுமாகவே இருக்கிறதுஅவர்களுடைய செல்வாக்கு அரசியல் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹாவல் கூறினாலும், அது விற்பனைப் பொருளாக, தணிக்கையை மறைக்கும் ஒரு உறவாக பொதுவாக எதிர்மறை தொடர்பு கொண்டதாகவே இருக்கும் என கருதப்படுகிறதுஅறிவுஜீவிகள் அரசியல் குறித்த மதிப்பீடுகளையும், விமர்சனங்களையும் வைக்கும் சுதந்திரம் பெற்றவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இரு துறையினருக்கிடையே நெருக்கிய, நுண்ணிய தொடர்பு இருப்பதை மறுக்கின்றனர்

போர்த்யூவின் தர்க்கப்படி, அரசியல் உலகிற்கும், அறிவு ஜீவிகளுக்குமிடையேயான தொடர்பினால் அறிவுச் சுதந்திரம் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது என்கிறார். அறிவுஜீவிகளுக்கு நிறுவன முறைகளினால் நடைமுறையில் அவர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சனைகளின் எல்லைகளை கணக்கில் கொண்டு இம்முரண்களை காணவேண்டும். போர்த்யூ அறியப்பட்ட ஒரு ‘முத்திரை’ அறிவுஜீவி, அவரே ‘அரசியல் என்பது தணிக்கையின் உலகம்...சக்திவாய்ந்த அரசியல் குழுக்குள் அறிவுஜீவிகளின் சிந்தனைகளை கடிவாளமிடுவர், பின்பு ஒரு சுழல்வட்டத்துக்குள்ளேயே அதை முடக்குவர். ’ (கத்தோன், 2006:112). கத்தோனைப் பொறுத்தவரை, அரசு அமர்த்தும் அறிவுஜீவிகளின் பணி எதிர்மறையானதே, ஏனென்றால் அரசின் தாக்கத்துக்கு உட்பட்டதே அவர்களின் வார்த்தைகள்அவர்களின் அரசு பணி என்பது சில நிபந்தனைகளுக்குட்பட்டது’...அதிகார வர்கம் நியமித்துள்ள எல்லைக்கப்பால் அவர்களால் செயல்பட முடியாது.  (கத்தோன், 2006: 112)

பல்கலைக்கழகம் எனும் ’யானை தந்த கோபுரத்திற்குள்ளும்*, அவர்கள் இல்லத்துக்குள்ளேயும்’  அறிவுஜீவிகள்  ஒடுங்கிவிடுகின்றனர் என்ற ஒரு கூற்று இருக்கிறதுஅதிகார வர்கத்திற்கு சவால் விடும் நேரங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் தணிக்கை விதிகள் அவர்களை அந்த ‘கோபுரத்திலிருந்து வெளிவர அனுமதிப்பதில்லை என்றும், அவர்களை ஒரு மூலையில் முடக்கிவிடுகிறது என்றும் போர்த்யூ கூறுகிறார்.   (* ஐவரி டவர் என்பது வேதாகமத்தில் சாலமனின் பாடலாக இடம் பெற்ற ஒரு குறிப்பு, பின்னர் அது மேரியின் பட்டப் பெயர் ஆனது.  19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அது சிமிழுக்குள் அடைபட்ட அல்லது கிணற்றுத் தவளையாக இருக்கக்கூடிய அறிவுஜீவிகளை குறிக்கும்படி பயன்படுகிறதுஅன்றாட வாழ்வியல் நடைமுறைகளிலிருந்து தங்களை துண்டித்துக் கொண்டு மேட்டிமைத்தனமான கல்வியியல் சித்தாந்தங்களை வைத்து சமூகத்தை அனுகும் அறிவுஜீவிகள் இவர்கள் – மொ.ர்)

பொதுக்கள அறிவுஜீவிகள் சிந்தனைகள் மற்றும் அறிவு குறித்தே முதன்மை கவலை கொள்கின்றனர்அவர்களுடைய சமூக பாத்திரமானது சமூக பிரச்சனைகள், சிக்கல்கள் குறித்து கேள்விகள் எழுப்பவும், பதிலளிக்கவும் கோருகிறது. குரலற்றவர்களுக்கு குரலாகவும், அத்தகைய நேரமோ, வாய்ப்போ கிடைக்காதவர்களுக்கும் சேர்த்து இவர்கள் எதிர்வினையாற்றுபவர்களாக இருக்கவேண்டும்எதிரொலிக்கும் பல்வேறு மாறுபட்ட கருத்துகள், நம்பிக்கைகளை காது கொடுத்து கேட்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும், அவற்றிலிருந்து தங்களுடைய சொந்த முடிவுகளை கட்டுமானம் செய்யவேண்டும்அறிவுஜீவிகள், தங்களது துறையல்லாதவற்றிலும் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும்பௌமன் (1987:2) அறிவுஜீவிகள் பற்றி சொல்வது “ஒருவருடைய சொந்த பணித்துறையின் சிந்தனைகளினால் பீடிக்கப்பட்ட தன்மையிலிருந்து மேலெழு...உலக உண்மைகள் பற்றிய பிரச்சனைகளில் ஈடுபடுத்திக்கொள், காலத்தின் போக்கோடும், மதிப்பீடுகளோடும் இயை” (ஃபுரேதி, 2004: 32).  இணையம், வலைப்பூ, விரிவுறை, வானொலி, நாளிதழ், பத்திரிகை போன்ற ஊடகங்களில் பணியாற்றி வெகுஜன தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இவர்களிக்கிருக்கிறது.

தொழில்முறை கல்வியியலாளர்களும் பொதுக்கள் அறிவுஜீவிகள் ஆகலாமா, ஆகவேண்டுமா என்ற விவாதம் நடக்கிறதுபல வருடங்களாக ஒரு பொது நம்பிக்கை நிலவிவருகிறது, அதாவது பெரும்பாலான கல்வியியலாளர்கள் தங்களது துறைசார்ந்த படைப்புகளை வெளிஉலகினரின் நுண்ணாய்வுக்கு இடமளிக்காமல் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்பது அதுதங்களது படைப்புகள் பொதுப் பார்வைக்கு வைக்கப்பட்டால் விமர்சனத்திற்கும், போட்டிக்கும் ஆளாகும் எனும் விவாதத்திலிருந்து  இந்த குறிப்பிட்ட தயக்கமானது தெளிவாகிறதுஉதாரணத்திற்கு தாமஸ் பெண்டர் கூறுவது ”கல்வியலாளர்கள் தங்களை பெரும்பாலும், ஏன் பிரத்தியேகமாக தொழிற்முறை முறைமைகளுக்கும், சூழல்களுக்கும் ஒருமுகப்படுத்திக்கொள்கின்றனர், தங்களது சுதந்திரத்தை பொறாமையுடன்  தற்காத்துக்கொள்கின்றனர். (பெண்டெர், 1993: 141 – 142) அத்தோடு தங்கள் சக கல்வியியளாளருடன் மட்டுமே விவாதங்களிலும், போட்டியிலும் ஈடுபடுவர், வெகுஜன மக்களிடம் அல்ல. இதுவே குடிமை விவகாரங்களில் அவர்களின் விருப்பமின்மையைக் காட்டுகிறது

மைக்கேல் புராவாய் எனும் பிரபலமான பொது சமூகவியல் அறிஞர் ‘தொழிற்முறை சமூகவியலை’ விமர்சிக்கிறார். அத்துறைசமூகத்தின் முக்கிய விஷயங்கள் குறித்து போதுமான அக்கறை காட்டுவதில்லை எனவும், முக்கிய சமூக சம்பவங்கள், பிரச்சனைகள் பற்றிய பார்வையிலிருந்து அத்துறையின் கல்வியிலாளர்கள் விலகி செல்கின்றனர்புராவாய் கூறும் ‘பொது சமூகவியல்’ என்பது கல்வியியல் ஆய்வுகளுக்கு அணுகலை ஏற்படுத்திக் கொடுத்து பொதுமக்களிடத்து மாற்றத்தை ஏற்படுத்தும் வகைஇந்த வழிமுறையானது கல்வி வட்டத்தினருக்கும், பொதுமக்களுக்குமிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்த தூண்டுகோலாய் அமையும், அதன் மூலம் தொழிற்முறை கல்வியியலாளர்களின் கடுமையான உலகிற்கும், பொது வட்டத்தில் நிலவும் பரந்த மாற்றங்கள் நிறைந்த உலகிற்குமிடையேயான இடைவெளியை சீர் செய்ய உதவும்

கல்வியியல் துறையில் மாற்றம் நிகழ வேண்டும், புற உலகைப் பற்றிய பிரக்ஞை அதிகரிக்க வேண்டும் என்று வாதிட்டவர்களில் முக்கிய சிந்தனையாளர்களில் மற்றொருவர் அரசியல் ஆர்வலர் சி. ரைட் மில்ஸ். ’சமூகவியல் கற்பனை’ எனும் தனது பிரபலமான புத்தகத்தில் அவரது தர்க்கம் ‘பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் சமூகவியலாளர்கள், பொருளியலாளர்கள்...அரசியல் விஞ்ஞானிகளை விட விழிப்புடனும், அறிவுடையவர்களாகவும் இருக்கின்றனர். (மில்ஸ், 1959: 99). பார்வையாளர்களை பொது அரங்கில் வழிநடத்த, விவாதத்தை தூண்ட தேவைப்படும் திறன்களை வளர்த்துகொள்ளாதவர்களாக கல்வியியலாளர்கள் இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறதுமேலும் அவர் அமெரிக்க பல்கலைக்கழகங்களை கடுமையாக விமர்சிக்கிறார், உலகில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களைப் போல் அதுவும் தனியார்மையப்பட்டும், அதிகாரத்துவப் போக்கோடும் செயல்படுவதால் நவீன சமூகத்தில் ’அதிகாரத்திற்கான பொது போராட்டதை எவ்வாறு அளவிடுவது’ என கற்றுத்தருவதில் தோற்றுவிடுகிறதுஅமெரிக்க தத்துவ அறிஞர் ரிச்சர் ரார்ட் ‘அறிவுஜீவிகளின் சமூக பொறுப்பின்மையை, குறிப்பாக கல்வியியல் அறிவுஜீவிகளின் பொறுப்பின்மையை’ கடுமையாக சாடுகிறார்.  (பெண்டர், டி. 1993: 142)

எனினும், கல்வியியல் வட்டத்திற்குள்ளேயே தொழிற்முறை கல்வியியலாளர்கள் பணியாற்றுவது விமர்சிக்கப்பட வேண்டும் என்று அனுமானிப்பது  தவறாகிவிடும்ஒருவகையில் சமூகத்திற்கு அதில் பயன் இருக்கிறது. உதாரணத்திற்கு, கல்வியியல் சுதந்திரம், எழுதுவதற்கு உரிமம், எப்படிபட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களைக் குறித்தும் விவாதம் ஆகியவை கல்வி விசாரனையை காக்கும் நேர்மறை செயல்பாடுஅதுபோன்ற சுதந்திரத்தை பொது மக்களுக்கும் கொடுப்பதால் சுதந்திர பேச்சு என்பதைத் தாண்டி சில வேளைகளில் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்உதாரணமாக, கல்வியியல் வட்டத்தில் வெளியிடப்படும் முற்போக்கு மற்றும் சர்ச்சைக்குரிய நம்பிக்கைகள் கடுமையான கோட்பாட்டு பரிசோதனைகளை கடக்கவேண்டியிருக்கும்ஒப்பாய்வு செய்தபின்னரே அது உண்மையானது, சரியானது என்று அறிவிக்கப்படும்ஆனால் அத்தகைய உறுதிபடுத்துதல் ஏதுமின்றி பொதுஅரங்கில் வெளியிடப்படும் கருத்துக்கள் ஒன்றை பற்றிய தவறான சித்தரிப்பு அல்லது திரிபுக்கு வழிவகுக்கும். அதன் மூலம் சமூகத்தின் ஒரு  பகுதியினர் மட்டும் காயப்படும் வாய்ப்பிருக்கிறதுஇதனுள் பிணைந்திருக்கும் சிக்கல்கள் வெளிப்படையானவை

பல்லாயிரம் வருடங்களாக தத்துவ கல்விமுறையே அறிவு உற்பத்தியின் முதன்மை வடிவமாக ஊக்குவிக்கப்பட்டு வந்துள்ளதுசோஃபிஸ்டுகளின் சிந்தனையான பொது அரங்கில் சிந்தனைகளை  ’வாங்கவும், விற்கவும்’ முடியும் என்பதை அவர் வெறுத்தார்அதற்குபதிலாக அறிவு முற்றுரிமையை பரிந்துரைத்தார்இதன் விளைவாக தீவிரமான அறிவுலக வாழ்வில் ஊடுறுவ விரும்புவோர் புது வகையான தொழில்முறையை தழுவிக்கொள்ள பொது கலாச்சாரத்தை நிராகரித்து அதிலிருந்து விலகி நின்றனர் (பெண்டர், T, 1993: 12).  இதில் பார்க் விரும்பியது ‘ தொழிநுட்ப வல்லுனர்களாக பொதுமக்களுக்கு வெறும் வாய் சொல் பயன்பாடாக விளங்கக்கூடிய தத்துவங்களை விநியோகம் செய்யும் பாத்திரத்தை பிரிக்க வேண்டும்’ இதன் மூலம் பொதுமக்களின் பார்வையிலிருந்து கல்வியியல் படைப்புகளை விலக்கி வைக்க வேண்டும் என்பதல்ல, பொதுமக்களின் நுகர்வுக்கு பயன்படக்கூடிய சிந்தனைகளை, மட்டும் பொது அரங்கிற்கு கொண்டவரவேண்டும், இருவழி பகுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும்அத்தோடு பெண்டர் ’குடிமைப் பண்பாடு’, ‘தொழிற்முறை பண்பாடு’ என்று வகைப்படுத்துகிறார் அதன் மூலம் கல்வியியல் எந்தெந்த வட்டங்களில் செயல்படலாம் என்று விளக்குகிறார்

தொழிற்முறை கல்வியியல் வெகுஜன சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாத்தியமற்றவையாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறதுஉதாரணமாக, அறிவுஜீவி வாழ்க்கையின் நீடித்த முக்கியத்துவத்தில்  கல்வியியல் வேலைவாய்ப்புகள் கடும் வீச்சியை சந்தித்திருக்கிறதுபொதுக்கள அறிவுஜீவிவாத செயல்பாடுகளை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.  (ஃபுரேதி, 2004: 38).  எனினும் சில கல்வியியல் நிறுவனங்கள் பொது அரங்கில் நுழைகின்றன. உதாரணமாக ஃப்ளாரிடா அட்லாண்டிக் பல்கலைகழகம் பொதுக்கள அறிவு ஆட்படுத்துதலை கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சிகளை, முயற்சிகளை மேற்கொண்டதுகல்வியியலானது கண்டிப்பாக பொது அரங்கில் ஊடுருவுகிறது அதில் சமூகத்தின் அங்கத்தினர்களான மானவர்களே அதன் முதன்மை பங்கேற்பாளர் என்று சொல்லலாம்.  

பெண்களும் பொதுக்கள அறிவுஜீவி வாழ்க்கையும்:

அறிவுஜீவி எனும் அடையாளம், அங்கீகாரம் கிட்ட ஆண்களை விட பெண்கள் அதிக சவால்களை சந்தித்திருக்கிறனர் என்று சிலர் ஒப்பாய்கின்றனர்.

டேவிட் ஹெர்மென் எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்  ”இந்த நிலைக்கு ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவன கட்டமைப்பு வகுத்திருக்கும் பாலுணர்வு காரனமா” என்று கேட்கிறார்டேவிட் குட்கார்ட், ‘ப்ராஸ்பெக்ட்’ இதழின் ஆசிரியரின் வாதமானது “.....ஆண்கள் [...] இன்னமும் நமது அறிவையும், பண்பாட்டையும் ஆதிக்கம் செய்கின்றனர்..” (பார்ட்டன், 2004) இந்த வாதம் பெண்ணியவாதிகளின் கருத்துக்களோடு ஒத்திசைவதாக இருப்பதில் உண்மையிருக்கிறது. பெண் அறிவுஜீவிகளே இல்லை என்பது இதன் பொருளன்று, மாறாக பல காரணங்களால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆண் சகாக்கள் அவ்விடத்தை ஆக்கிரமித்துவிடுகின்றனர்குதார்ட் மற்றொன்றையும் வைத்து வாதிடுகிறார் அதாவது பெரும்பாலான பொதுக்கள அறிவுஜீவிகள் வயதானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் துறையில் தங்களை நிரூபித்து காட்ட வேண்டிய காட்டாயம் இருக்கிறது, அதன் பின்னரே அவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் விவாதங்களை மேற்கொள்ள முடிகிறதுஇந்த சிந்தனை ஓட்டம் அமைப்பு சார்ந்த சிக்கல்களே பெண்கள் பொதுக்கள அறிவுஜீவி அரங்கில் இடம்பெற இயலாத நிலைக்கு காரணம் எனும் வாதத்தை முன்வைக்கிறது. சமீப நூற்றாண்டுகளில்தான் பெண்கள் கல்வி கற்கும் சாத்தியமே ஏற்பட்டுள்ளது, அதன் மூலம் கல்வியியல் துறையில் அவர்கள் ஈடுபட முடிந்தது. பொதுக்கள அறிவுஜீவியாக அறியப்படுவதற்கு இந்த காரணஅறிவு அவசியமாகிறது

இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை பெண்கள் ‘மேற்படிப்பு, ஆதாயம் அளிக்கின்ற புத்தாய்வு மாணவ திட்டம் (fellowship), வருவாய் நிறைந்த ஆசிரியர் வேலை, தலையங்க ஆசிரியர்’ ஆகியவற்றிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்தனர் (ஆலென், 2005).  இந்த அமைப்பு சார்ந்த பாரபட்சம் உணர்த்துவது என்னவென்றால் ஒத்த வயதுடைய ஆண்கள் பொதுக்கள அறிவுஜீவி வாழ்க்கைக்கு தேவையான அறிவை வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த வயதுடைய பெண்கள் சாதிக்கும் சாத்தியமில்லாமல் இருந்தனர்இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இருதியில் தான் கல்வியியல் துறையில் மேற்படிப்புகளை தொடருவதற்கான பாதை திறக்கப்பட்டது. உழைப்புக்கான கனி தற்காலத்தில் கனிந்திருக்கிறது. முன்பை விட கல்வி நிறுவனங்களில்  பெண்கள் உயர் பதவி வகிக்கின்றனர். பொது அரங்கில் நிறைய பெண்கள் அறிவுஜீவித் துறையில் வரத் துவங்கினர். (மோர்லே வால்ஷ், 1996). 

அப்படி பழிக்கப்பட்ட பெண் பொதுக்கள அறிவுஜீவி வாழ்க்கையின் சூசன் சோண்டாக், அமெரிக்காவின் முதன்மை பெண் பொதுக்கள அறிவுஜீவி. 2005ல் அவரது இறப்பு நிறையக் கேள்விகளை எழுப்பியது. ‘அவரது இடத்தை எடுத்துக் கொள்ள யாராவது இருக்கின்றனரா? எல்லா பெண் அறிவு ஜீவிகளும் எங்கிருக்கின்றனர். (ஆலென், 2005)

ஸ்டீபென் பிங்கர், டார்வின், ஐன்ஸ்டீன், ரிச்சர்ட் டாக்கின்ஸ் மற்றும் ரிச்சர்ட் போஸ்னர் போன்ற ஆண் அறிவுஜீவிகளின் பட்டியல் இத்துறையில் பெண்களின் இடம் தவிர்க்கப்பட்டிருப்பதையும் பெரும் பகுதியான பொதுக்கள அறிவுஜீவி இடத்தை ஆண்களே கைகொண்டதையும் உணர்த்துகிறதுஎனினும் இந்நிலை தொடரவில்லை. தற்காலத்தில் பொது விவாதத்தில் நிறைய பெண் அறிவுஜீவிகளின் பெயர்களைக் காண முடிகிறது. சொல்லப் போனால் சில பெயர்கள் ‘வீட்டு பெயர்களாகிப்’ போனது; ஜெர்மைன் க்ரீயர், பார்பரா எஹ்ரென்ரெயிஷ், சூசன் ஃபலுடி, ஐரிஸ் முர்டாஹ், ஹான்னா அரெண்ட்ட் மற்றும் இகழப்பட்ட சிமோன் தே பொவ்வா அவர்களில் சிலர்இந்தப் பெயர்களை படிக்கும் பொழுது பெண்ணிய கல்விமான்களாகவும் பெண்ணியத்தை தாண்டிய அறிவுச் சூழலில் அரிதாக செயல்பட்டனர் எனத் தோன்றும். எனினும் இந்தப் பெண்கள் பொதுப் பார்வையில் இருந்தனர், கலாச்சாரம் அரசியல் அகியவற்றைக் குறித்து விவாதங்களை எழுப்பினர். இதன் மூலம் சக ஆண் அறிவுஜீவிகளுக்கு கிடக்கும் மரியாதையை ஏன் இந்தப் பெண்களும் பெறக்கூடாது என ஒருவர் கேட்கக் கூடும்குறிப்பாக பெண்ணிய ஒளியின் மூலமே இந்தப் பெண்களில் பலர் தற்போது அவர்கள் பெற்றிருக்கும் கல்வியையும், அறிவையும் பெற்றிறுக்கின்றனர், சந்தேகத்திற்கிடமில்லாமல் அவர்கள் அது தொடர்பான கல்வியையும், இயக்கத்தையுமே முன்னெடுப்பார்கள்.  

அமெரிக்காவின் முதல் பெண்மணிகளான ஹிலாரி கிளிண்டன், எலினார் ரூஸ்வெல்ட், பெட்டி ஃபோர்ட் போன்றவர்களைப் போல், பெண் அறிவுஜீவிகள் பொது மக்களிடமிருந்து ’கோபம்’ மற்றும் ‘வழிபாடு’ ஆகிய உணர்வுகளை எதிர்கொள்கின்றனர். பொது உலகின் எதிர்ப்பைக் காட்டிலும் தனியார் ஆதிக்க அரங்கில் இவர்கள் சிறு ஆறுதல் காணமுடிகிறது. ஆனால் ஆண் அறிவுஜீவிகளின்  இந்த செயல்பாடு பகைமையின் நெருக்கடி மற்றும் தீவிரத்தன்மையினை எதிர்கொள்ள முடியாமல் ‘ஐவரி கோபுர’ பாதுகாப்பு வளையத்திற்குள் திரும்பிவிடும் அறிகுறியோ எனும் கேள்வி எழுகிறது.  (ஷோஆல்டர், 2001).  ’பெண் அறிவுஜீவிகளின் தோல்வியானது தனிப்பட்ட தோல்வி என்பதைவிட அது கூட்டுத் தோல்வி’ என்று ஸ்டீவ் ஃபுல்லெர் சொல்கிறார்ஆண் அறிவுஜீவிகள் ஒருவருக்கொருவர் தங்களது எடுத்துரைகளை துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர்இந்த ‘ஆதரவு கூட்டணி’ பெண் அறிவுஜீவிகளின் படைப்பில் காணமுடியவில்லைஅதாவது, அவர்கள் தங்களது நோக்கம் பன்மடங்கு முன்னேறுவதற்கு பயன்படக்கூடியவகையில் ஒருவருக்கொருவர் மற்ற்வரை மேற்கோள் காட்டுவதில்லை* (ஃபுல்லர், 2007 – பார்ட்டன்,2004).

(இது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. பெண்கள் கல்வியியலில் எத்தகைய இடத்தை எவ்வளவு காலத்திற்கு பின்னர் பிடித்திருக்கினறனர் என்று சொல்ல வேண்டியதில்லைஅப்படியே கல்வி கற்றவர்களும் தொழிற்முறைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி பொருளாதார சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நெருக்கடிகள் இருந்திருக்கின்றனஆண் அறிவுஜீவி ஆதிக்க தளத்தில், பெண்களில் வெகு சிலரே சவால்களை தோற்கடித்து தங்களை நிலை நிறுத்தியுள்ளனர். அத்தகைய பெண் அறிவுஜீவிகளை குறிப்பாக பெண்ணிய சிந்தனையாளர்களை பெண் படைப்புகளில் வேண்டிய அளவுக்கு காண  முடிவதை மறுப்பதற்கில்லை...அதே வேளை ஆண்கள் அறிவுஜீவி களத்தில் முன்னரே நுழைந்து விட்டதால், அவர்களின் எண்ணிக்கையும், படைப்புகளும் அதிகம், ஆகவே அவர்களை அதிகம் மேற்கோள் காட்டுவது தவிற்கவியலாத ஒன்றாக இருக்கிறது. மேலும் பெண்ணுக்கு ஆண் எதிர்ப்புக்குரியவன் என்பதை விட ‘ஆண்மை’ என்று வகுக்கப்பட்டிருக்கும் ஒன்றே எதிர்ப்புக்குரியதுஆணாதிக்க தாக்கமின்றி எழுதப்பட்டிருக்கும் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் எந்தப் பாலினத்திலுருந்து வந்தாலும் அதை சமூக பயன்பாடு கருதி பயன்படுத்துவதில் பெண்கள் தயக்கம் கொள்வதில்லை, அது அவசியமும் இல்லை எனக் கருதுகிறேன். – மொ.ர்)

பெண் பொதுக்கள அறிவுஜீவிகள் பொது அரங்கில் அறியப்பட்டிருந்தாலும் அது போதுமான அளவு இருப்பதில்லை. கார்டியன் இதழ் ஆண் அறிவுஜீவிகளின் பட்டியலை வெளியிட்ட அதே வேளை, புறக்கணிக்கப்பட்ட பெண் அறிவுஜீவிகள் என்று 101 பெண்களின் பெயரை வெளியிட்டது

உயிர் அறவியல் மற்றும் பொதுக்கள் அறிவுஜீவிகள் (Bioethics and public intellectuals):

பார்ஸியின் கூற்றுப்படி பொதுக்கள் அறிவுஜீவிகள், கல்வியியல் உயரடுக்கு மட்டத்திற்கும், படித்த பொது மக்களுக்குமிடையே உள்ள இடைவெளியை நிரப்புகின்றனர், குறிப்பக இயற்கை விஞ்ஞான பிரிவுகளான மரபியல், உயிர் அறவியல் துறைகளில்கல்வியாளர்களின் அறிவு பாரம்பரிய பொருளில் குறிக்கப் பெருவதற்கும், பொதுக்கள அறிவுஜீவி எனும் பொருளில் குறிக்கப் பெருவதற்கும் தெளிவான வேறுபாடு இருக்கிறது. கல்வியாளர்கள் பொதுவாக தங்களது கல்வித் துறை அல்லது பல்கலைக்கழகத்திறுகுள்ளேயே ஒடுங்கி விடுகின்றனர். பெரும் முதலீடு செய்யப்படும் மேற்கின் கல்வி முறையில் இது வாடிக்கை, கல்வி நிறுவனங்களின் பெருக்கத்தால் நேரும் ‘பனிப் போர்’ காரணமாக இது கூடுகிறதுஇந்த போக்கு கல்வியியல் வாழ்வில் ’மிகை கவனம்’ நிறந்தபள்ளியறைக்குள்ளேயே முடங்கி விடும் அளவுக்கு திசை மாறிப் போனது. இதுவே “கல்விமுறையாக்கப்பட்ட அறிவுசார் வாழ்க்கை” என்று அறியப்படுகிறதுஒரு பொதுக்கள அறிவுஜீவி எனப்படுபவர் கல்வித்துறையிலிருந்து தனது பயணத்தை துவங்கினாலும், ஒரு குறிப்பிட்ட துறையோடு மட்டும் முடங்கிவிடுவதில்லை, அது போல் பாரம்பரிய எல்லைகளுக்குள்ளும் சுருங்கிவிடுவதில்லைஒரு துறையில் கைதேர்ந்த நிபுணர்களோடு நாம் பொதுக்கள அறிவுஜீவிகளை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாதுஇந்த முன்னேற்றம் கல்வித்துறைக்கு, பொது மக்களுக்குமிடையே ஒரு இடைவெளியை ஊக்குவித்தது. பொதுக்கள அறிவுஜீவிகள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிரபலமான இலக்கியம் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாரிக்கொள்வர். ரிச்சர்ட் போஸ்னர் கூறுவது போல் ”ஒரு பொதுக்கள அறிவுஜீவியானவர் பொதுமக்களை சென்றடையும் சாதங்களைக் கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்வர்”. அவர்கள் கல்வியியல் சிந்தனைகளையும், சமூக அரசியல் பிரச்சனைகளையும் பரந்த முறையில் ஒருங்கிணைப்பர்

சமூக அரங்கில் நெருங்கிய தொடர்புடைய இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் உயிர் அறவியிலாளர்களுக்கு பொதுக்கள அறிவுஜீவித் துறையில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டி நிறைய அழைப்புகள் விடப்படுகின்றனவிஞ்ஞானிகள் மற்றும் உயிர் அறவியிலாளர்கள் ஏற்கணவே மறு ஆய்வுக்குழு, அரசாங்க குழுமம், அறவியல் குழுமம் போன்றவ்வற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்அவர்களது ஆய்வுகள் சமூகத்தோடு எத்தகைய தொடர்ப்புடன் இருக்கிறது என்பதை ஒருவர் எளிதில் கண்டடையமுடியும்கல்வித்துறை ஓரங்கட்டப்படுவதால், விஞ்ஞானிகளும், உயிர் அறவியல் துறையினரும் சமூகத்திற்கான தங்களது கடமைகளை பொதுக்கள அறிவுஜீவியின் பாத்திரத்தில் இருந்து செயல்படுத்தவேண்டும் என விவாதம் மேற்கொள்ளப்படுகிறதுஇதன் படி, அவர்களுடைய ஆய்வுகளை வெகுஜன ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் பரந்த கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்உயிர் அறவியிலில் பொதுமக்களின் ஆர்வம் உயரும் போது உயிர் அறவியலாளர்களின் பொறுப்பு அதிகமாவதோடு அவர்கள் கல்விமான்களைப் போலல்லாது ஒரு பொது உரையாடலை தூண்டுவோர்களாக செயல்பட முடியும்உயிர் அறவியலானது கல்வித்துறையாக இருந்தாலும், அது மக்களின் வாழ்வில் நெருங்கிய தொடர்புடையதுமருத்துவம், தொழில் நுட்பம், மரபணு போன்ற முக்கிய சமூக பிரச்சனைகள் தொடர்பாக அது ஒரு வெகுஜன ஆர்வத்தை தூண்டக்கூடியதுஅத்தகையவர்களுள் முக்கியமானவர்களாக பரிணாமம் தொடர்பாக படைப்புகளை உருவாக்கிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் மற்றும் சார்லஸ் டார்வின் இருக்கின்றனர்.

மேற்கிற்கு வெளியே:

பண்டைய சீனத்தில் லிடராட்டி (எழுத்தாளர்) என்பவர் இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலாக அதிகார வர்கத்தை உருவாக்கிய அரசாங்க அதிகாரி  ஆவார்இந்த அறிஞர்-அதிகாரத்துவத்தினர் கல்விகற்ற உபாசகர் அடங்கிய ஒரு படிநிலைக் கூட்டம். இவர்கள் நியமிக்கப்படாத பூசாரிகள். அவர்கள் பரம்பரை குருமார்கள் அல்ல, ஏனென்றால் அவர்களது எழுத்தான்மை, மொழியான்மை அறிவு சார்ந்தே அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதுகி.மு. 200க்குப் பின்னர் இதற்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையில் கன்ஃபியூசனிசத்தின் தாக்கம் ஏற்பட்டு, எழுத்தாளர்கள் மத்தியில் ஓர் அறத்தை நிறுவியது. சைனாவின் ‘நூறு பூக்கள் பிரச்சாரம்” (Hundred Flowers Campaign) அறிவுஜீவிகளை தயார்படுத்துவிதமாக அரசாங்கத்தின் விருப்பத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று ஆனால் பின்னர் கசப்பான விளைவுகள் நேரக் காரணமாகிப் போனது.  (முற்றும்)

பின்னுரை:

படைப்பு என்பது திறமை என்பதைக் காட்டிலும் உழைப்பு, முனைப்பு சார்ந்தது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அந்த படைப்புக்கு பின்னால் இருக்கும் நோக்கம் காரியவாத அறிவா அல்லது சமூக பொறுப்புணர்வோடு மாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய அறிவா என்பதை பொறுத்து அதற்கான இடம் தீர்மானிக்கப்படுவது அவசியமாகிறது. அப்போது போலி அறிவுஜீவிகள், காரியவாத அறிவுஜீவிகள் அடையாளம் காணப்பட்டு சமூக முன்னேற்றத்திற்கான விவாதங்களை, கருத்துரைகளை முன்னிறுத்துவோரின் எழுத்துக்கள், படைப்புகள் முன்னிடத்திற்கு வரலாம். எழுதுபவரின் அரசியல் அவரது எழுத்தையும் பாதிக்கும் என்ற அறிவை நாம் கண்டடைய இது உதவலாம்.

மேற்கண்ட கட்டுரையின் உள்ளீடான இன்னொரு நோக்கமாக நான் கருதுவது வாசகரின் தேவை. உண்மையில் தமிழ் சூழலில் வாசகரின் தேர்வு என்பது ஊடகத்தாலும் பிரபல்யத்தாலும் மட்டுமே சாத்தியப்படுகிறது.

இதில் வாசகர் தன்னை கீழிறக்கிக் கொள்வதிலும் மேல்நிலையாக்கம் செய்துகொள்வதிலும் கொண்டு போய் விடுகிறதே ஒழிய வாசிப்பின் தேவைக்கு அவனை முன் தள்ளுவதில்லை. புரியாத எழுத்துக்களை விமர்சிப்பது  அல்லது வாசிப்பதன் மூலம் வாசகர் தன்னை ஒரு அறிவுஜீவியாக கருதிக்கொள்வது சம்பந்தப்பட்ட எழுத்தாளரையே புரிந்து கொள்பவர் என்கிற மிக மோசமான, மற்றும் தான் தோன்றித்தனமான  அறிவு நிலையை முன்வைக்கிறது.

இன்னும் தமிழில் அவர் எழுத்தை வாசிக்காது நீ இலக்கிய உலகத்தில் நுழையக் கூடாது என்கிற  விமர்சன  வன்முறையை சந்திக்காத இளம் வாசகர் குறைவு.   எழுத்தாளன் நிறைய அறிந்தவன் என்ற கருதுகோளை முன்னிட்டு தன்னைத் தானே ஒன்றும் தெரியாதவனாய் மாற்றிக்கொள்வதும், சம்பந்தப்பட்ட எழுத்தாளர் தன்னிடம் உரையாடும் வாப்பை வாசகர்  அடைந்தால் அதற்கு புளங்காங்கிதம் அடைந்து கொள்வதும் வாசகரின் தாழ்வு மனபான்மை மட்டுமே. ஆனால் சம்பந்தப்பட்ட தாழ்வு மனப்பான்மையையே தனது வாசகர்கள் தன்னை அறிந்தவர்கள், தனக்கு ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது என்று எழுத்தாளர் பெருமைப்படவும் வைக்கிறது. அதை விமர்சிப்பதன் மூலம் எந்த எழுத்தாளரும் தனது வாசகரை இழக்க விரும்புவதில்லை. தமிழில் இது இன்னும் மிகுந்த கோரமாக செயல்படக் காரணம் தற்போதுள்ள எழுத்துச் சூழலில் எழுத்தாளர்களில் பெரும்பாலோனோர் ரசிகமனோபாவம் கொண்டவராகவே இருக்கிறார்கள். விமர்சனம் என்பது சக எழுத்தாளரை நாலைந்து வார்த்தைகளைல் புகழ்வது, அல்லது முழு முற்றாக அழித்தொழிப்பது மட்டுமே. உரையாடல் (discourse) அல்லது விவாதம் என்பதில் வெளித்தோற்றத்திற்காக பங்கெடுத்தாலும் ஓரிரண்டு கேள்விகளிலேயே சலிப்படைந்து, எரிச்சலடைந்து கேள்வி கேட்பவர்களை தூற்றி, ஏளனப்படுத்தி தப்பித்துக் கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.  வாசகர்கள் இப்படி கையாளபப்டுவதோடு சில மூத்த எழுத்தாளர்களும் புதிய எழுத்தாளர்களை ரசிக மனோபாவத்துடனே கையாள்கின்றனர்.  தமிழ் எழுத்துப் பரப்பு பெரும்பாலான நேரங்களில் திரைப்பரப்புக்கு இணையாகவே வாசகர்களை, புதியவர்களை வைத்திருக்கிறது. தனக்கு அஜித்தை அல்லது விஜய்யை பிடிக்கும் என்ற ஒரு காரணத்தினாலேயெ அவர் நடிக்கும் அனைத்துப் படத்தையும் விமர்சிக்காது சுவரொட்டி ஒட்டும் ஒரு தரைமட்ட ரசிகனாய் மட்டுமே வாசகரை வைத்திருப்பது போல் சமீப கால வாசகர் வட்டங்களைப் பார்க்கையில் அவர்கள் சுவர் ஒட்டிகளாகவே காட்சியளிக்கின்றனர். அதை கண்குளிரக் கண்டுகளிக்கும் சில ஆளுமைகள்(தங்களுக்குள் சூப்பர் ஸ்டார் மற்றும் இளைய தளபதி என்ற பட்டத்திற்கு இருக்கும் மதிப்பே இப்பொழுது ஆளுமைகளுக்கும்) சம்பந்தப்ட்ட சுவர் ஒட்டிகளுக்கு ரசிகர் காட்சி அமைப்பது போல்தான் இங்கு எழுத்தாள விழாக்களும் நடக்கிறது. ஜரிகைகள் வெறும் வார்த்தைகள். எச்சரித்தல்கள் இன்னொரு எழுத்தாளனுக்கு...அங்கு எழுத்துக்கு கிடைப்பது நீக்கமற நிறைந்திருக்கும் முழுமுற்றான அவமதிப்பே

(வலசை, ஜனவரி 2012 இதழில் வெளிவந்த கட்டுரை) 

3 comments:

 1. கொற்றவை மேடம்,


  எழுதுவது என்பதை நமக்கான தனிப்பட்ட அடையாளமாக நாம் கருதிக் கொண்டு " புளகாங்கிதம் " அடைந்து கொண்டிருக்கும் போது, சும்மா ( என்னைப் போன்ற ) போகிறவன், வருகிறவன் எல்லாம் " புரிதல், யதார்த்தம், சுடுகிறது,வழியும் இரத்தம், பூ பூக்கிறது, குயில் கூவுகிறது, மிருகம், தாகம், லொட்டு, லொசுக்கு " போன்ற சில வார்த்தைகள் தெரிந்து கொண்ட தெனாவெட்டில் எழுத வந்தால், அதைப் பார்க்கும் எழுத்தாளருக்கு, ஒரு கடுப்பு வரும் தான். என்னதான் எழுத்தாளர்கள், எழுதுபவர்களை ' எழுதுங்கள் , எழுதுங்கள் , ' என்று ஊக்கு ஊக்கு என்று ஊக்குவித்தாலும்,. அந்த ஊக்கு ஊக்கு ஊக்குவிப்பின் பின்னே அந்தக் ' கடுப்பு ' கடுகடுத்தபடி நாக்கைக் கடித்து, ஒற்றை விரலை உயர்த்தி முறைக்கத்தான் செய்கிறது.

  ஏன் சற்றுக் கடினமான நடையிலேயே, ஏகப்பட்ட ' கலைச்சொற்களைப் ' பிரயோகித்து நீங்கள் எழுதுகிறீர்கள். அவ்வாறு எழுதுவதில் தான் அறிவுஜீவித்தனம் இருக்கிறது என்று தாங்கள் நம்புகிறீர்களா ? நமது கல்விப் பாடத்திட்டங்களில் கூட இதே கடினமான நடை தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, தமிழில் எழுதப்பட்ட பத்தாம் வகுப்பு சமூகவியல் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள், ஏதோ சரியாக வேகாத இறைச்சியைப் போல ' ச்சவுக்கு ச்சவுக்கு ' என்று இருக்கும். வாயில் போட்டாலே ' நைசாக ' உள்ளே இறங்கும் திருநெல்வேலி அல்வாவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  அடுத்து, ' காரியவாத அறிவு ஜீவிகள் ' என்கிறீர்கள். சமூகத்தில் பிரபலமாவதற்கு அந்தக் ' காரியவாதம் ' தேவைப்படுகிறது. எனது எழுத்துக்களில் பெரும்பாலும் அந்தக் ' காரியவாதம் ' இருக்கும். அது ஒருவிதத்தில் அருவருப்பானது. இதனால் தானோ என்னவோ ஆனந்த விகடனில் எனது ஒரு கவிதை கூட வெளிவரவில்லை. எப்போது நான் காரியவாதத்தை விட்டு, தன்னிச்சையான சமூக அக்கறையோடு எழுதப் போகிறேனோ ? என் போன்றவர்கள் ஏன் ' காரியவாதிகளாக ' எழுதுகிறார்கள் எனில், பிரபல்யம், ரசிகவட்டம் போன்ற கவர்ச்சிகளை நாங்கள் விரும்புவது தான். இது தவிர்க்க முடியாதது.

  இந்தக் கட்டுரையின், பின்னுரையில், செருப்பை சாணியில் முக்கி ' எழுத்தாளன் ' என்று சொல்லிக் கொள்பவர்களைப் பொளேர் பொளேர் என்று அடித்திருக்கிறீர்கள். நானும் என் கன்னத்தைத் துடைத்துக் கொள்கிறேன். ஆனாலும் என் போன்றவர்களுக்கு எல்லாம் சூடு சுரணை ஏது ? நாங்கள் எதையாவது ' லூசு' மாதிரி கிறுக்கிக் கொண்டே தான் இருக்கப் போகிறோம். நன்றி.

  ReplyDelete
 2. தோழர்... மேடம் என்ற பதத்தை தவிர்க்கவும்...

  மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் அப்படி போலி ஊக்கங்களைக் கொடுப்பதில்லை...ஒரு பெண்ணியவாதியாக நான் அதிகார மையங்களை விரும்புவதில்லை அதனால் தான் ‘இலக்கியவாதி’, ‘அறிவுஜீவி’, ‘இலக்கியம்’ இவற்றை கேள்வி கேட்க விரும்புகிறேன்...

  நானும் கிறுக்கலில் தான் துவங்கினேன்...ஒரு வகையில் தனி மனித வெறுமை, கைவிடப்பட்ட மனநிலை ஆகியவை எழுத்தை நோக்கி அல்லது ஒரு வடிகாலைத் தேடி அலையும் பாதையில் எழுதுவதை நோக்கி தள்ளுகிறது என்று சொன்னால் பிழையாகாது என்று நிணைக்கிறேன்.

  இலவச வெளியாக இணையம் இருப்பது கூடுதல் வசதி.... நானும் ஏதோ ஒன்றை கிறுக்கியும், எதுகை மோனையில் கவிதை என்கிற பெயரில் வார்த்தைகளை உடைத்தும் எழுதி வந்தவள் தான்... அதன் மீது கடுமையான விமர்சனங்களை வசுமித்ர வைத்த போது... அறிவைத் தேடிச் சென்றேன். கடுமையாக உழைத்தேன்... மாற்றிக் கொண்டேன்...
  நன்றி.

  ReplyDelete
 3. இது மொழி பெயர்ப்பு கட்டுரை, மூலப் பிரதியை சரியாக மொழி பெயர்க்க வேண்டும் இல்லையா.. கலைச் சொற்கள் தவிர்க்கவியலாதது...

  ReplyDelete