Jan 18, 2012

கூகில், ஃபேஸ்புக் மீது விசாரணையோடு.....





கூகிள், ஃபேஸ்புக் ஆகியவற்றின் உள்ளடக்கம் கபில் சிபலுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கலக்கம் தருவதுபோல் எனக்கு சில உள்ளடக்கங்கள் / செயல்பாடுகள் கலக்கத்தை தருகிறது:

1. ஆபாச இணையதளங்கள் - porno sites, பெண்களின் அரை நிர்வான
புகைப்படங்களை சுமந்து வரும் பத்திரிகைகள்...தமிழ்
பத்திரிகைகள் உட்பட....

2. Timesnow உள்ளிட்ட தேசிய ஆங்கில மற்றும் இந்திய மொழி
ஊடங்கங்களின் ’இந்துத்துவ’ ஜோசிய ஒளிபரப்புகள், கோவில்
உற்சவ நிகழ்ச்சிகள், அரை நிர்வான நடன நிகழ்ச்சிகள், பெண்கள் /
குடும்ப பிரச்சனைகளுக்கான பஞ்சாயத்து நிகழ்ச்சிகள்,
குழந்தைகளை சுரண்டும் ஆடல் பாடல் போட்டி நிகழ்ச்சிகள்...etc etc

3. மேற்சொன்ன ஊடகங்களின் அருவருப்பான நிகழ்ச்சிகளோடு
‘தமிழ்’ உணர்வு தொலைகாட்சிகள், ‘தமிழர்’ தொலைகாட்சிகளில்
முல்லைப் பெரியார் பற்றி, ஈழம் பற்றி கவலை கொள்ளும்
பேச்சுகளுக்கிடையே வரும் மலையாள முதலாளிய
நிறுவங்களின் விளம்பரங்கள் - இளையராஜா தோன்றும் மலபார்
கோல்டிலிருந்து...திருவாளர் விஜய், மாதவன், நடிகைகள்,
தோன்றும் நகைக் கடை விளம்ரங்கள் வரை...
அவர்களையெல்லாம் எதிர்ப்பதை, கண்டிப்பதை விட்டு - ‘எதிர்’
தரப்பினரின் ‘இடங்களில்’ செய்யும் ’புரட்சி’ பற்றிய ‘முதலைக்
கண்ணீர்’ ஒளிபரப்புகள்...

4. அரை நிர்வான புகைப்படங்களை, உள்ளடக்கங்களை
அனுமதிக்கும் Online Shopping இணைய தளங்கள்...

5. உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் ‘தங்கம்,
வெள்ளி, ப்ளாட்டினம், வைரம்’ ஆகியவை.

6. பெருமுதலாளிகளின் சில்லரை வணிக ஒப்பந்தம்

7. அணுமின் நிலைய ஒப்பந்தங்கள், அணு மின் நிலையங்கள்

8. பழங்குடிகளின் நில அபகரிப்புகள், அவர்களை இடம் பெயரச்
செய்வது. வளங்களுக்காக காத்து நிற்போரை கொன்றழிப்பது.

9. இராணுவத்தினரின் மனித உரிமை அத்து மீறல், வன்புணர்ச்சி
செயல்களை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பின்மை.

10. இத்தோடு ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின் ஆடம்பர
போக்குவரத்து செலவுகள்.

மேற்சொன்னவற்றையும் தடை செய்ய ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்திடம் பரிந்துரைக்க வேண்டும். (பட்டியல் நீளலாம்...)

No comments:

Post a Comment