Feb 20, 2013

ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம் - பொங்குதமிழ் இணையதளத்தில்...ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்
சந்திப்பு: அரவிந்தன்எஸ்.கோபாலகிருஷ்ணன்

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து நிர்மலா கொற்றவையுடன் ஓர் உரையாடல்

நிர்மலா கொற்றவை. பெண் விடுதலைக்காகவும் ஆண் - பெண் சமத்துவத்துக்காகவும் பேச்சுஎழுத்து மற்றும் களப்பணி மூலம் போராடுபவர். தன்னை ஒரு மார்க்ஸிய சோஷலிசப் பெண்ணியவாதி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். பெண்ணியத்தை உள்ளடக்கியதுதான் மார்க்ஸியம் என்கிறார்.

மார்க்ஸியப் பெண் விடுதலை சிந்தனைகளை மையப்படுத்தும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். தமிழ்ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரது தாய்மொழி தமிழில்லை என்றாலும் தமிழ் மொழி மீதான ஈர்ப்பு இவரது எழுத்துத் திறமைக்கு வித்திட்டிருக்கிறது.

'பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்துக்கு எதிரான அமைப்பு' (Movement against  Sexual Exploitation and Sexism) என்ற இயக்கத்தை நடத்திவருகிறார் அதன் மூலம் பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களப்பணியாற்றி வருகிறார்.

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்துபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரெலெழுப்பி வருகையில்தமிழக அரசும் அந்தப் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான 13 அம்சத் திட்டத்தை செயல்படுத்திபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையையும் ஆண்மை நீக்கத்தையும் வழங்கும் சட்டத் திருத்தத்தைப் பரிந்துரைத்திருக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கை பற்றியும் தொடரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் நிர்மலா கொற்றவையிடம் பேசலாம் என்று முடிவெடுத்தோம்.
ஒரு ஞாயிறு மாலையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தபோது நடந்த உரையாடலின் தொகுப்பு:

***

உங்களுடைய பெண் விடுதலைச் சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது எது?

தொடக்கம் என்று சொன்னால்என் வாழ்க்கையில் ஒரு பெண்ணாக நான் எதிர்கொண்ட நிகழ்வுகளுக்குமான காரணம் என்னஏன் தொடர்ந்து எதிரான நிலையே இருந்து வருகிறது என்ற என்னுடைய தேடலால்பெண்ணியம் என்று ஏதோ கேள்விப்படுகிறோமே என்று சிந்திக்கத் தொடங்கிஅதைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த காலத்தில்பெண்ணியம் என்றாலே ஆணை எதிர்ப்பதும்ஆணை வெறுப்பதும்தான் என்று நினைத்தேன். ஆண்களை வசைபாடி கவிதை எழுதுவதுதான் சரியான அணுகுமுறை என்று நினைத்து எழுதிய பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.

அப்போது வசுமித்ரவை ( நிர்மலா கொற்றவையின் கணவர்) சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் என் கவிதைகளை எல்லாம் படித்துவிட்டு, 'இதெல்லாம் ஒரு கவிதையாஎன்று கேட்டு அவற்றைத் தூக்கிப் போட்டார். அவர் மேல் கோபம் வந்தாலும்நேர்மையாக விமர்சனம் செய்தது எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு நிறைய பேசினோம். கேள்விகள் கேட்டேன். அப்போது புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னை அங்கே அழைத்துபோய்நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தார். நிறைய புத்தகங்களைப் படித்தேன். ஒரு வருடம் முழுவதும் படிப்புதான். படிக்க படிக்கநிறைய கேள்விகள் எழுந்தன. இருவரும் வீட்டில் கடுமையாக விவாதங்கள் செய்வோம். அதன் பிறகு பெண்ணியம் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்கிஎனக்குப் பல விஷயங்களில் தெளிவு ஏற்பட்டது. இடதுசாரி சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டேன். தெளிவான சிந்தனை அறிமுகம் ஏற்படாதவரை ஒரு பெண்ணின் சிந்தனை இப்படித்தான் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். இவற்றை கொஞ்சமாவது எழுதினால்தான்மற்ற பெண்களுக்கும் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நினைத்துஎழுத ஆரம்பித்தேன். எழுத்து மூலம் எனக்கு ஏற்பட தெளிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான மோசமான நிகழ்வுகள் நிறைய நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இவற்றைத் தடுப்பதற்கான சில யோசனைகளை முன்வைத்துள்ளது. ஒன்றுகுண்டர் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட வேண்டும்இரண்டாவது - மரண தண்டனைமூன்றாவது - ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.. அரசின் இப்படிப்பட்ட எதிர்வினையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழித்துபொதுமக்கள் மீது பொறுப்பைத் திணிக்கும் நடவடிக்கையாகத்தான் நாம் இதைப் பார்க்க வேண்டும். அரசு பெண்களைப் பற்றிய கருத்துகளை மாற்றவோஅவர்களுடைய வளர்ச்சிக்கோ எதுவுமே செய்யாமல்குற்றவாளிகளை நோக்கிக் கையைக் காட்டிவிட்டுதப்பித்துக்கொள்ளும் ஒரு வேலையாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். பொறுப்புள்ள ஒரு அரசு இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்காது. அதுவும் குறிப்பாக,முடிவுகளை எடுத்தவர் ஒரு பெண் என்றாலும் அவர் எல்லாருக்கும் பொதுவான ஒருவர். எனவேபாரபட்சமாக, ’நான் பெண்களுக்காக செயல்படுபவள் என்று காட்டிக்கொள்வதற்காக போலித்தனமாக செயல்படுவதாகவே நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தை ஆழமான புரிதலோடு அணுகியிருக்கியிருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் 13 அம்சத் திட்டத்தில் எனக்கு சில கேள்விகளும் உள்ளன. அதில் ஹெல்ப் லைன் அளித்திருக்கிறார்கள். ஹெல்ப் லைன் எந்த வகையில் பயன்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. ரேப் செய்யும் கும்பல் முதலில் மொபைலைத்தான் பிடுங்கி எறிகிறது. மஃப்டியில் போலீஸ் ரோந்து வரும் என்று உள்ளது. எங்கே வருவார்கள்?

ஆனால்ஆட்சி அதிகாரங்களில்பொதுவாழ்க்கையில் இருக்கும் பெண்கள் யாருமே ஆண்களின் நலனையும் உள்ளடக்கி யோசிப்பதாகத் தெரிவதில்லை. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
  
இது ஆண்கள்பெண்கள் இருவரிடமுமே இருக்கிறது. பொதுவாக பரஸ்பரம் எதிரிகளாகப் பர்த்துக்கொள்வதுதான் ஆண்மை அல்லது பெண்ணியம் என்ற எண்ணம் இருவரிடமுமே உள்ளது. பெண்கள் பல சூழல்களை எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வரும்போதுஅந்த நிலைக்கு வருவதற்காக ஒரு பெண்ணாக அவர்கள் எதிர்கொண்ட விஷயங்கள் எதிர்வினையாக எதிரொலிக்கின்றன. ஆட்சிக்கு வரும் பெண்களுக்கு பழிவாங்கும் அணுகுமுறைதான் வருகிறதே தவிரஅவற்றின் அடிப்படை ஆதாரங்களைப் புரிந்துகொண்டுகாரணங்களைக் கண்டறிந்து அவற்றை வேரோடு களையும் முனைப்பு இல்லை.

பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை தேவை. நடுத்தெருவில் சுட்டுக்கொல்ல வேண்டும்ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்நாலு பேருக்கு இப்படி செய்தால் இவை தானாக கட்டுக்குள் வந்துவிடும் என்ற கருத்து பொதுமக்களிடம் பரவலாக வலுத்து வருகிறது. இந்தப் பார்வையைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பொதுவாக நாம் அனைவருமே நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளநல்லவர்கள் என்று நமக்கு நாமே நம்பிக்கொள்ளவே விரும்புகிறோம். எனவேஅடுத்தவர்களை நோக்கிக் கைகாட்டுகிறோம். அவன் கெட்டவன் என்று குற்றம் சாட்டும்போதுநாம் நல்லவர்களாகி விடுகிறோம். ஒழுக்கச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் நாம் எல்லாரும் இருக்கிறோம். இந்த மனநிலைதான் பல தீர்ப்புகளைக் கூறுகிறது.

'நாலு பேரை சுட்டால் சரியாகிவிடும்ரெண்டு பேரைத் தூக்கில் போடணும்ஆண்மை நீக்கம் செய்யணும்இதுபோன்ற குரல்களின் பின்னணி இதுதான்.

ஆனால்எல்லாரும் சிந்திக்க மறந்துவிடும் ஒரு விஷயம்வன்கொடுமை என்பது,உடல் ரீதியாக மட்டும் செய்யப்படுவது அல்லமனரீதியிலும்தான் இதைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களை அவ்வாறு செய்யத் தூண்டிவிடுவது என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவற்றை சரி செய்யாமல்தண்டனைகளைப் பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் எதுவும் சரியாகப் போவதில்லை.

ஆண்மை நீக்கம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன்அந்த உச்சக்கட்டம் என்பது மட்டும்தான் குற்றமாஅதற்கான திறனை நீக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமாபெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அந்த உச்சக்கட்டத்தோடு மட்டும்தான் தொடர்புடையவையா?

பாலியல் கொடுமை என்றில்லைஎல்லாவிதமான குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகள் இருந்தால்அவைத் தடுக்கப்படும் என்ற கருத்து எப்போதும் இருந்து வருகிறதுஇதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கூட்டு சமூகப் பார்வை என்பதே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. தனித்தனியாகத்தான் எல்லாரும் சிந்திக்கின்றனர். ஒவ்வொருவரும் நான் நல்லவன் என்ற மனநிலையுடன் உள்ளனர். அரசியல்சமூகம் இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் அது எனக்கான களம் இல்லைவேலைக்குப் போக வேண்டும்சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பிறந்திருக்கிறோம் என்ற புரிதலுடன் பெரும்பாலோனோர் உள்ளனர். இன்றைய வாழ்க்கை சூழல்கள்தேவைகள் அவர்களை அப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது. சமூகத்தில் நானும் ஒரு அங்கம்அதில் நடக்கும் நல்லதுகெட்டது என்னையும் பாதிக்கும் என்று அவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்த இங்கே எந்த அமைப்பும் இல்லை என்பதால்எல்லாருமே தங்களுடைய எதிர்பக்கத்தில் மட்டுமே பார்த்து, 'அங்கேதான் பிரச்சினைஇங்கே எல்லாம் நன்றாக உள்ளது என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால்சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே ஏதோ ஒரு வகையில் குற்றம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

மேலைநாடுகள் பலவற்றில் கடுமையான தண்டனைகளில்தவறு செய்த ஒருவன் தண்டிக்கப்படுகிறான்ஆனால்அதே சட்டத்தின் கீழ் தவறு செய்யாத 100 பேரும் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்துதான் மரண தண்டனையை ஒழித்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். இதற்குப் பின்னால் வலுவான அனுபவங்கள் அவர்களுக்கு உள்ளன. ஆனால்இங்கே 'மனித உரிமை பேசறவங்களை முதலில் சுட்டுத் தள்ளணும்என்கிறார்கள். அதைப் போன்ற அனுபவங்கள் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லலாமா?

ஆமாம் நம் கலாசாரம்தான் இதற்குக் காரணம் என்று கூறுவேன். நம் கடவுளர் கைகளில் பலவிதமான ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறோம், 'தப்பு செய்தால் வெட்டுஎன்று போதிக்கிறோம். ஆனால் அந்தக் கதைகளுக்குப் பின்னால்மதவாதக் கோட்பாடுகளும் ஜாதீயம் பேசும் கதைகளும் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. நம் புராணங்களிலும் ஒரு நல்லவர் கூட்டம்ஒரு கெட்டவர் கூட்டம். நம் திரைப்படங்களிலும் அப்படித்தான். நாம் வளர்க்கப்படும் சூழலே அதுதான்ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டும்போது, 'தப்பு செஞ்சா சாமி வந்து கண்ணக் குத்தும்என்று கூறுகிறோம். எனவேநாம் வளர்ந்து வருகிறபோதேதப்பு செய்தால் தண்டனைவெட்டுகுத்து என்றுதான் கேட்டு வளர்கிறோம். எனவேதான் தண்டனைதான் தப்பு நடக்காமல் இருப்பதற்கான ஒரே வழி என்ற நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது.

புராணக் கதைகளில்வெட்டுகுத்து என்று இருப்பதாக சொல்கிறீர்கள்அதே கதைகளில்தான் காக்கைக்கு உணவளிப்பது போன்ற பல நல்ல விஷயங்களும் உள்ளன. அமெரிக்கா போன்ற முன்னேறிவிட்ட நாடுகளிலும்கூட மரண தண்டனைபழிவாங்குவது போன்றவற்றுக்கு ஆதரவான கருத்துகளும் உள்ளன. மதங்களை மட்டும் குற்றம் சொல்ல முடியுமா?

'நல்லவர்களாக இருப்பதற்கு இதுஇது எல்லாம் அடையாளம். கெட்டவர்களாக இருந்தால்எல்லாரும் அழிக்கப்படுவீர்கள்கொல்லப்படுவீர்கள்'.. இது போன்ற கருத்துக்கள் எல்லா மதத்திலும் இருக்கும். வார்த்தைகள்விகிதங்கள்தான் மாறுபடும். 

மக்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள் என்று சொன்னீர்கள். பொதுவாக எல்லாருக்குமே இந்தக் குற்றத்தில் பங்குள்ளது என்றும் சொன்னீர்கள். இதை மேலும் விளக்க முடியுமா?

அமெரிக்க அரசு மற்ற நாடுகளில் குண்டு போடுகிறது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களும் அதைத் தவறு என்று எதிர்க்கவில்லையேஏதோ ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள். திரைப்படங்களில் எவ்வளவோ கேவலமான விஷயங்கள் காட்டப்படுகின்றன. ஆனால்அதைப் பார்க்கும் எத்தனை மக்கள்கோபப்படுகிறார்கள்கொதிப்படைகிறார்கள்தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்அடுத்ததுகுப்பை போடும் விஷயம்இன்று நாம் அனைவருமே பசுமைசுற்றுச்சூழல் என்று பேசி வருகிறோம். அங்கே குப்பை கொட்டி நாசம் செய்கிறார்கள்இங்கே கொட்டுகிறார்கள் என்று புலம்புபவர்கள் அதை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்?
ஒரு பெண் வன்புணர்ச்சி செய்யப்படுவதை எதிர்க்கும் ஆண்கள் தங்களுடைய வீடுகளில் தங்கள் மனைவிகளை அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள். தேவைப்பட்டால்எதையும் செய்கிறார்கள். இவையெல்லாம் கூட குற்றங்கள்தானே?

ஆனால்நம் வீடுகளில் நாம் இந்த விஷயத்தில் எதையாவது மாற்றிக்கொண்டிருக்கிறோமாமற்றவர்களைப் பற்றி மட்டுமே நாம் குறை கூறுகிறோம். இவர்களைப் பொறுத்தவரைஊடகங்களில் அல்லது பொதுவாக குற்றம் என்று சொல்லப்படுபவைதான் குற்றங்கள்தங்கள் வீடுகளில் நடந்தால் அது குற்றம் இல்லை.

ஒரு ஆணுக்கு காம உணர்வு தூண்டப்படுகிறது என்றால்அதற்கான காரணங்கள் இதுவரை ஆய்வு செய்யப்படவே இல்லை. சிலர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்றால் அதற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது எதுஇந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேட யாராவது முனைவதில்லை. இது பற்றிய ஆய்வுகள் நடந்ததில்லை. வெளிநாடுகளில்கூடமோசமான விஷயங்கள்,குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால்அங்கே அதைப் பற்றி ஆய்வு செய்துகாரணங்களை அறிந்துகட்டுரைகள்படங்களாக வெளியிடுகிறார்கள். இங்கே அதைப் போன்ற எதுவுமே நடைபெறுவதில்லை.

மனித உரிமைச் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் மேலை நாடுகளில் பொதுவாக மக்கள் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வுடன் உள்ளனர். அங்குள்ள எழுத்தாளர்கள்சிந்தனையாளர்கள்ஊடகங்கள் எல்லாம்தான் அதற்குக் காரணம். இங்கு ஏன் அவ்வாறு நடக்கவில்லை?

சமமற்ற பொருளாதார நிலைதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். இங்கே இருக்கும் ஏழைகள்நல்ல வாழ்க்கையை வாழும் வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுவதால்அவர்களுக்கு வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. வாழ்க்கை அவர்களை ஓய்வில்லாமல் விரட்டிக்கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளருக்குஒரு குடிமகனாக அவருக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை சவுகரியங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருக்கும். எழுத்து மூலமே அவரால் நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இங்கே அதற்கான சூழல் இல்லை. எனவேஅவர்கள் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியதாகிவிடுகிறது. எனவேஒரு எல்லைவரைதான் இவர்களால் செயல்பட முடிகிறது. இதையெல்லாம் தாண்டி,சமூகத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுபவர்கள் எப்படிப்பட்ட இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

சினிமா உலகில் பெண்கள் சுரண்டப்படுவதாகவும்பெண்ணுடல் பொருளாக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய சினிமா உலகில் பெரும்பாலும் பெண்களின் சம்மதம் அல்லது அறிதல் இல்லாமல் இது நடைபெறுவதில்லை. இப்போது படித்தவசதி படைத்தநடுத்தரமேல் மட்ட பிரிவு பெண்கள் வருகிறார்கள். அங்கு சந்திக்கக் கூடிய அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் விருப்பத்தை மீறித் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூற முடியுமா?

சமூகத்தைப் பற்றிக் கூறிய அதே கருத்து இதற்கும் பொருந்தும். மக்கள் மூளைச்சலவைக்கு ஆளாகிறார்கள். ஒரு மனிதப் பிறவி என்றால்அதற்கு ஒரு அடையாளம் வேண்டும். ஒரு பெண் என்றால்நீ அழகானவள்இப்படி எல்லாம் உன்னால் பிழைக்க முடியும்இளமையிலேயே நீ விலைபோகவில்லை என்றால் அதன் பிறகு சம்பாதிக்க முடியாது என்றெல்லாம் தூண்டப்படுகிறார்கள். அடையாளம்புகழ்அதற்கும் மேல் பணம் இவையெல்லாம் தூண்டுகின்றன. சினிமாவை மிகச் சுலபமாகத் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய ஊடகமாகப் பெண்கள் நினைக்கிறார்கள்.
சினிமாவில் மட்டுமல்லகார்ப்பொரேட் அலுவலகங்களில்கூடஒரு ரிசப்ஷனிஸ்ட் அழகாக இளமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். இவற்றின் மூலம் பெண் மூளைச் சுரண்டல்அறிவுச் சுரண்டல்கருத்தியல் சுரண்டல் செய்யப்படுகிறாள் என்பதைக் குறிக்கவே நான் சுரண்டல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஒரு ஆண் சுரண்டப்பட்டாலும்கூட அதிலிருந்து வெளியேற அவனுக்கு வேறு மாற்று வழிகள் உள்ளன.

பெண் இவற்றையெல்லாம் தெரிந்தே வருகிறாள் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை,  பெரும்பாலும் இதற்கு அவளுடைய பெற்றோரின் பேராசைதான் காரணமாக இருக்கிறது. டி.வி.யில் தங்கள் குழந்தைகள் வருவதை ஒரு பெரும் பேறாக இவர்கள் நினைக்கிறார்கள். புகழ் போதை அவர்களை வழிநடத்துகிறது. இன்று ஒரு ஆர்.ஜே. விடம் பேசுவதே ஒரு சாதனையாக கருதப்படுகிறது. குறிப்பாகதற்போது தனியார் தொலைக்காட்சிகளின் பெருக்கம் இப்படிப்பட்ட சுரண்டல்கள் சர்வ சாதாரணமாகிவிட்டதற்கு மிகப்பெரிய காரணம் என்று நான் கூறுவேன்.

இதே நிலைதான் மேலை நாடுகளிலும் உள்ளன. ஆனால்அங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான இவ்வளவு அதிகமான வன்முறையான சூழல் நிலவுவதில்லையே?

அங்கே ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு செக்ஸ் என்றால் என்ன என்று தெரியும்.  அதற்கான வாய்ப்புகளையும் அவன் பெறுகிறான். ஆனால்இங்கே முப்பது வயதானாலும் ஆண்களுக்குத் திருமணம் நடப்பதில்லைஅவனுடைய உடல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு எந்த வாய்ப்பும் இருப்பதில்லை. பெண்களுக்கு உடல் தேவை இல்லையா என்று கேட்கலாம். ஆனால்அப்படிப்பட்ட சிந்தனையே தவறுஅப்படி நினைத்தால் நீ ஒரு மோசமான பெண் என்ற எண்ணம் பெண்களுக்கு சிறுவயதிலிருந்தே புகட்டிவிடப்படுகிறது.

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் சுரண்டலுக்கான தீர்வில் ஆண்களை எதிர் நிலையில் வைத்துத்தான் பார்க்க வேண்டுமாஅல்லது அவர்களையும் உள்ளடக்கிய ஒரு தீர்வு சாத்தியமா?

நிச்சயமாக. இன்று பெண் விடுதலைக்குபெண்ணியத்துக்கு அதிகம் பங்களித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆண்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம். அவர்களை உள்ளடக்காத எந்தத் தீர்வையும் நாம் கொண்டுவரவே முடியாது. இன்றுள்ள பெண் போலீஸாரின் மனோபாவம் எப்படி இருக்கிறதுஇவர்கள் பெண்களுக்கு எந்தளவு உதவுவார்கள்ஒரு பெண் ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குப் போய்விட்டால்அவர்கள் கேட்கும் கேவலமான கேள்விகளை ஆண்கள்கூட கேட்பதில்லை. முதலில் அவர்களை சரிசெய்ய வேண்டும். பெண்களுக்கு உதவக்கூடிய அதிகாரத்தில் உள்ள பெண்களை,ஆசிரியர்களை முதலில் சென்சிடைஸ் செய்ய வேண்டும். இதற்கு அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

ஆண்மை என்பது மிகப் பெரிய விஷயம் போலவும்அது இல்லாமல் போவது மிகவும் கேவலமான ஒரு விஷயம் போலவும் கருதப்படுகிறது. இயற்கையிலேயே ஆண்மை இல்லாத ஆண்களும்கருத்தரிக்க இயலாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஒரு அறிவியல் சார்ந்த விஷயம் என்பதைத் தாண்டிஅதற்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்திஆண்மைபெண்மை என்கிற கருத்தியலை ஏற்படுத்திவிட்டனர். இதுதான் இன்று சமூகத்தில் இவ்வளவு ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு இன்னமும் பொதுக்களங்களில் உரிமை மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. முதலில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுத்தர அரசு முயல வேண்டும். அவை என்னென்னஅதற்கு ஆண்களின் பங்களிப்பு என்ன என்பனவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கல்வி மூலமாகவோ அல்லது தகவல் மையங்களைசென்சிடைசிங் புரோகிராம்கள் ஏற்பாடு செய்வதன் மூலமும் இதைச் செய்யலாம். இதைத் தனியாகக்கூட செய்யலாம். ஆணையும் பெண்ணையும்குறிப்பாகப் பதின் பருவத்தில் இருப்பவர்களை அழைத்து வந்துஅவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதை விடுத்துதண்டிப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்றே எனக்குத் தோன்றுகிறது. இதனால்தண்டனையே வேண்டாம் என்று நான் கூறவில்லை. பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவன் வெளிவரும்போது திருந்திய நபராகவா வருகிறான்போதை அடிமை போலஅவன் ஒரு செக்ஸ் அடிமை. இதுவும் மனநோய்தான். அதை அவன் மீண்டும் செய்யாமல் இருப்பதை எந்த தண்டனை உறுதி செய்யும்?

அவன் திரும்பிய இடமெல்லாம் அவனது செக்ஸ் அடிமைத்தனத்தைத் தூண்டும் விஷயங்களே காணப்படுகின்றன. ஊடகங்கள்இணையதளம்பத்திரிகைகள் இப்படி எல்லாமே. பெண்ணின் கவர்ச்சிப் படங்களால் ஆண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா என்று நான் இவர்களிடம் கேட்கிறேன். ஆண்களைக் கவரவே இவற்றைப் பயன்படுத்துகின்றன. ஆண்கள் கவரப்படுவதுதான் அதற்கான பலன் என்று இருக்கும்போதுஅதன் விளைவுகளும் இருக்கும்.

பெண்கள் ஆபாசமாகஉடலை மிகுதியாக வெளிக்காட்டிக்கொள்ளும் விதமாக உடை அணிவதுதான் மாடர்ன் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும். மாடர்னாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும். 'மாடர்ன் என்று நான் நினைப்பது உண்மையில் என் விருப்பம்தானாஅல்லது என் மேல் திணிக்கப்பட்டதா?' என்று கேள்வி எழுப்பிக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்தாலும் அது அவளது தீர்மானமாக இருக்க வேண்டுமே தவிரஇதுதான் மாடர்ன் என்று கவர்ச்சியான உடைகளை அவள் மீது மற்றவர்கள் திணிப்பதை அவள் ஏற்கக் கூடாது.
ஆண்பெண் இருவருக்குமே பொறுப்புணர்வு வேண்டும். இந்தப் பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுத்துவிட்டாலே எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

நவீன உடை அணியும் பெண்கள் மட்டும்தான் இதில் பாதிக்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. சாதாரண உடை அணிந்த தலித் பெண்பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள், 'சாதாரண உடைஅணிந்த நடுத்தர வயதுப் பெண்கள் ஆகியோரும்தானே பாதிக்கப்படுகிறார்கள்இதற்கும் நவீன உடை அணிவதற்கும் என்ன சம்பந்தம்?.

நவீன உடை அணிவதுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று நான் சொல்லவில்லை. இந்தக் கோணத்திலும் சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜீன்ஸ்டி.ஷர்ட் போன்ற உடைகளை அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடலுறுப்புகளைக் காண்பிக்கும் ஆடைகள் நவீனம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படுவதைப் பற்றி யோசிக்கச் சொல்கிறேன். கவர்ச்சி ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு பணக்காரப் பெண் காரில் பாதுகாப்பாகப் போய்விடுவாள். ஆனால்ஒரு பொது இடத்தில் அவர்களைப் பார்க்கும் ஆண்லோயர் மிடில் கிளாஸாகவோ அல்லது அதற்கும் கீழாகவோ இருக்கலாம். இவர்களை எட்ட முடியாத அவர்கள்தங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் யாரையாவது தன் வெறிக்கு ஆளாக்கிக்கொண்டு திருப்தி அடைகிறார்கள்.
கவர்ச்சியாக உடையணியும் பெண்களிடம் நான் கேட்பது இதைத்தான்இப்படி ஆடைகள் அணிவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்இதனால் பிரச்சினைகளைத்தான் வரவேற்கிறீர்கள். இறுக்கமாக ஆடைகள் அணிவதன் மூலம்தான் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமாபெண்களின் மார்பளவுஇடுப்பளவுஉடல் கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வேறு யாரோ தீர்மானித்துஅவற்றைதான் சந்தையில் விற்கிறார்கள். இந்த வலையில் விழும் டீன் ஏஜ் பெண்கள் இவற்றை அணிவதற்கேற்ப தன் உடலமைப்பை மாற்றிக்கொள்ள போராடி வருகிறார்கள்.

இப்போது திருமணமான இளம் பெண்களும்கூட இந்த வலையில் எளிதில் மாட்டிக்கொள்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே நிறைய உடல் பயிற்சிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். குழந்தை பிறந்த பின்பு இன்னும் அதிகமான உடற்பயிற்சிகள். காரணம் கேட்டால் குண்டாகிவிடக் கூடாதாம். இவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இவர்கள் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற வியாபார நோக்குக்குப் பலியாகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மனதையும் உடலையும் யாரோ ஒருவர் கட்டுப்படுத்துகிறார். நானும் இத்தனை மனநிலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். என்னை நானே கேள்வி எழுப்பிக்கொண்டுஎன் உண்மையான சொந்த விருப்பப்படி இப்போது நடந்துகொள்கிறேன். உண்மையில் பெரும் விடுதலை உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.  

பெண்கள் மீதான வன்முறை பெண் சிசுக் கொலைகளிலிருந்து தொடங்குகிறது. இதுவே இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலைக்கான கண்கூடான சாட்சியாக விளங்குகிறது. இந்தியாவில் பெருகிவரும் பெண் சிசுக்கொலை விகிதம்ஆண்களுக்கு மட்டுமே பிறப்பதற்கான உரிமை இருக்கிறதுஅவன் கடவுளுக்கு நிகரானவன்அவன் உலகத்தின் அனைத்து சவுகரியங்களுக்கும் உரிமையுள்ளவன் என்ற சிந்தனை வேரூன்றியிருப்பதைக் காண்பிக்கிறது. ஆண்-பெண் பாரபட்சம் இதிலிருந்து தொடங்குகிறது. இதுபோன்ற அடிப்படைக் பிரச்சினைகள் களைய்படவில்லையென்றால் பாலியல் வன்முறைகள் குறையப்போவதில்லை.ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்

சந்திப்பு: அரவிந்தன்எஸ்.கோபாலகிருஷ்ணன்

Thanks to: http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=3&contentid=875a4b56-d2c0-45b5-80ea-1f0112df57ff

Feb 9, 2013

"எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு


"எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு

by பூங்குழலி Poonkuzhali on Saturday, February 9, 2013 at 7:47pm ·
அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...

சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது. அப்சல் எனக்காக காத்திருந்தார். அவர், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம். என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.


அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்?

அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான்.


அப்படியெனில் அந்த அப்சல் யார்?

அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன். ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர். உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என... வதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன். பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.

அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்த ‘கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.

வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன். நீங்களே சொல்லுங்கள்... எனது கதையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?


உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...

நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘முஸ்லிம் அய்க்கிய முன்னணி' உருவாக்கப்பட்டது. முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர்.

நான் அப்போது சிறீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப் பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன். உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப் படையினர் எனக்கு ‘சரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர். நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன்.

எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன். ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை. காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர். 22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது. துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார். எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.

நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.


வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை?

சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: ‘ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன். அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்).

நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன். அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். சிறீநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்.

ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர். ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர். நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான் பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.

மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர். என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர். நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.


உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை?

எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார். நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை. பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாகவே இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.


சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்?

உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.


தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன?

பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர். காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான். அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன.


உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது...

எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள். தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.


தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.


தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்?

தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?


நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...

உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின் ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல். இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.

(காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி)


நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?

அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன. நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.

- தலித் முரசு மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழாக்கம்