Apr 3, 2014

லஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…


 என்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ஆனால், உங்கள் கணவரின் தொடர் அயோக்கியத்தனங்கள் குறித்து நானும் வசுமித்ரவும் பதிவுகளை எழுதியபோது நீங்கள் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான வசுமித்ரவை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி அவரிடம் அண்ணா என்று உரிமையோடு சிலக் கேள்விகளை எழுப்பிய அன்றுதான் நீங்கள் லஷ்மி சரவணகுமாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

லஷ்மி சரவணகுமார் எங்கள் குடும்ப வாழ்வை எடுத்துப் பேசுவதால் இப்போது நானும் அவரது குடும்பத்தாரிடம் உரையாடுவது தவிர்க்கவியலாமல் போகிறது கார்க்கி…

முதலில் இந்த பிரச்சினையின் தொடக்கத்தை நீங்கள் http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_1.html இந்த சுட்டியில் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதைப் படித்துவிட்டுத்தான் அதாவது மீண்டும் நான் எழுதியப் பதிவைப் படித்துவிட்டு நீங்கள் மீண்டும் உங்கள் பாசத்திற்குறிய அண்ணன் வசுமித்ராவுக்கே மெசேஜ் வைத்தீர்கள்

https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
உங்களை அண்ணான்னு உண்மையான அன்பில தான் கூப்பிட்டேன் ஆனா அதைக் கூட கொச்சைப் படுத்தறவங்கிட்ட எதையுமே பேசவே முடியாது. கொற்றவை கார்கி என்னிடம் உரையாடவில்லைன்னு சொல்றாங்களே, நீங்களும் தானே பதிவு எழுதுனீங்க ? அதுக்கு தானே நான் பதில் சொல்லி ஸ்டேடஸ் போட்டேன். உங்களுக்கு என்னை தெரியாதுன்னாலும் எனக்கு உங்களை பத்தி தெரியும். ஆனா கொற்றவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாத போது என்ன அவருடன் உரையாடுவது ? அன்பிற்கு மிக்க நன்றி
Tuesday 9:28pm
இதை பொதுவெளியில் எழுதுங்கள். (வசுமித்ர பதில்)

கார்க்கி முதலில் அனுப்பிய மெசேஜில், //ரடியாகவே சொல்லனும்னா... அப்படி கூப்பிட்டு சாப்பாடு போட்டதை பற்றி நீங்கள் இருவருமே குறிப்பிட்டு இருப்பது ரொம்பவும் வருத்தமா இருக்குது. .. //
இந்த வரிகளைப் படிக்கும்போது நீங்கள் எனது பதிவையும் படித்திருப்பதாகப் பொருள்படுகிறது.

மேலும் நீங்கள் // ஏன்னா எதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு பெண்களை உடனே இழுப்பதில் எந்தவொரு உடன்பாடும் இல்லை எனக்கு. இப்பொழுதும் கூட அவன் கிட்ட அதையே தான் சொல்றேன். மற்றவர்களுடைய வாழ்க்கைய பற்றி விமர்சிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லைன்னு. இனி எப்பொழுதும் அந்த மாதிரி அவன் நடந்துக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு// என்றும் சொல்லி இருந்தீர்கள் ஆனால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவரிடம் மட்டும் வருத்தத்தை பதிவு செய்து முடித்துக்கொண்டீர்கள். இதைத்தானே நான் எனது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளேன்.

அதேபோல் நீங்கள் அன்புள்ள வசு எனத் தொடங்கி அண்ணா என முடித்திருந்தீர்கள் நானும் அதைத்தானே சுட்டிக்காட்டியுள்ளேன் இதில் என்ன கொச்சைப்படுத்தி உள்ளேன் என்பதை விளக்கவும். உங்களை நாத்தானார் என அழைப்பதில் எனக்கு பெருமைதான். ஆனால் ஒரு கேள்வி.

அண்ணா அண்ணி நாத்தனார் என்பதெல்லாம் கொச்சைப் படுத்தும் சொற்களா? அப்படியென்றால் நீங்கள் ஏன் அதைப் பயன்படுத்தினீர்கள். மேலும் இன்பாக்சில் மெசேஜ் வைத்தால் தனிப்பட்ட மெசேஜ் என்றுதானே சொல்ல முடியும். மேலும் எனக்கு நீங்கள் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது உண்மைதானே. அதைத்தானே நான் குறிப்பிட்டு உள்ளேன்.

இது கொச்சைப்படுத்துவதென்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் சொன்ன லஷ்மி சரவணகுமார் என்னைப் பற்றி எழுதியிருப்பதற்கு என்ன பெயர்? நீங்களாக எங்களது உரையாடலில் நுழைந்ததாலேயே உங்களை நோக்கி இந்தக் கேள்விகளை வைக்கிறேன். லஷ்மி சரவணகுமாரின் எங்களைப் பற்றிய பதிவுகள்  வக்கிரம் வன்மம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?  நீங்களும் அந்த வக்கிர உரையாடலில் பங்கெடுத்துள்ளீர்களே இதை நான் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? வன்மத்தில் உடன்பாடில்லாத நீங்கள் எப்படி உங்கள் அண்ணியை, அதுவும் யாரென்றே தெரியாத அண்ணியை ஏளனம் செய்யும் ஒரு பதிவில் பங்கேற்றீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் வசுமித்ரவை அண்ணன் என்று சொன்னது பொய்யா? அது வெறும் வார்த்தைதானா… உங்கள் அண்ணியை இப்படித்தான் உங்கள் கணவர் நக்கல் செய்வாரா… சாரி கார்க்கி…. எங்கள் குடும்பத்தில் மதனி என்றால் தாய்க்குச் சமம். ஆனால் உங்கள் கணவர் சித்தியையே லவ் பண்ணலாம்னு இருக்கேன்னு சொல்றவராச்சே… (விவரங்கள் பின்னர் வரும்).  பாருங்கள் எனக்கு எப்படி ஒரு தம்பி என்று… 

சரி என்னதான் இந்த பத்து மணி விவகாரம் என்று நம் தோழர்கள் சற்று மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்காகவும் உங்களுக்காகவும் நான் அவற்றை விளக்கவுள்ளேன்.

நாங்கள் பொதுவெளியில் குறிப்பாக முகப்புத்தகத்தில் பெரிதாக எவரோடும் நட்பு பாராடுவதோ அன்பைப் பொழியும் வாசகங்களையோ வைப்பதில்லை. ஆனால் எங்களுக்கென்று ஒரு ஆரோக்கியமான நட்பு வட்டம் உள்ளது. அந்த வட்டத்தில் உள்ள சில தோழிகள் தங்களோடு உரையாடும் ‘இலக்கியக் கர்த்தாக்கள்’ சிலரைப் பற்றி எங்களிடம் பேசுவதுண்டு. இதை நீங்கள் பொறணி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஏனென்றால் அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள்.  குறிப்பாக திருமணமாகி குழந்தையோடு பிரிந்து தனித்து வாழும் பெண்களிடம் இந்த ‘தூய இலக்கியவியாதிகள்’ எப்படி நடந்துகொள்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை மனம் கொதித்துப் பகிந்துகொள்வார்கள்.

அவர்கள் சொன்னதுதான் இந்த 10மணி விவகாரம். இரவு 10 மணிக்குத்தான் தோழர் இவங்க ஃபோன் பண்றது, மெசேஜ் பண்றது எல்லாம். எனக்கும் இப்படி இரவு 9 மணிக்கு மேல் வரும் அழைப்புகள் குறித்து நானும் பகிர்ந்து கொண்டேன். இப்படி ’இலக்கியவியாதிகளால்’ எங்களுக்கு வரும் தொல்லைகள் குறித்து பெண்கள் நாங்கள் பேசுவதை என் ‘வாழ்நாள் தோழன்’ வசுமித்ரவும் கேட்டிருக்கிறான். இல்லையென்றாலும் அவன் எனக்கும் சீனியர்தானே. ‘இலக்கிய டிரண்டை’ அவனும் அறிவானில்லையா.

ஆகவே அவன் வழக்கமாக இந்தக் கேள்வியை வைப்பதுண்டு, ஏன் இலக்கியவாதிகள் தங்கள் குடும்பப் பெண்களுக்கு இலக்கியம் கவிதை ஆகியவற்றை ஊட்டி வளர்ப்பதில்லை, ஏன் இவர்கள் அடுத்தவன் மனைவிக்கே கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள்? அதுவும் ஏன் இரவைத் தேர்ந்திடுக்கிறார்கள் என்பது அவனுடைய கேள்வி. இதில் அவன் மனைவியாக நான் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தாலும் அவனுக்கு இக்கேள்வியை வைக்கும் உரிமை உண்டு எனினும்.. மற்ற பெண்களும் இப்படி வருந்துகிறார்களே தொல்லைக்குள்ளாகிறார்களே எனும் எரிச்சலில் அவன் இதைப் பொதுவெளியில் பதிவு செய்வது வழக்கம்.

இதில் லஷ்மி சரவணகுமாரின் பிரச்சினை என்ன… அவருக்காகப் பரிந்து பேச வந்த கார்க்கி நிங்களே சொல்லுங்கள். சம்பந்தப்பட்ட அந்த ’10 மணி ராசாக்கள்’ யார் யார் என்று தெரிந்திருந்தும் வசு நாசூக்காக அதை பேசிவந்தார். பாருங்கள் இப்போது லஷ்மி சரவணகுமார் நேரடியாகவே பெயர் குறிப்பிட்டு எழுதும்படி என்னை தூண்டிவிட்டிருக்கிறார்.

அந்த ’10 மணி ராசாக்களில்’ உங்கள் கணவர் லஷ்மி சரவணக்குமாரும் ஒருவர் என்பதுதான் காலத்தின் சோகம். இது ஏதோ பொய்த் தகவல் இல்லை கார்க்கி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் யார் என்று தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் எனக்கு தனிப்பட்ட மெசேஜ் அனுப்பலாம். ஏனென்றால் நான் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணிடம் அனுமதி பெற்றே இந்தப்பதிவை எழுதுகிறேன். (உண்மையில் அவரும் கடும் கோபத்தில்தான் உள்ளார்).

சரி அப்படி லஷ்மி சரவணகுமார் செய்வதுதான் என்ன? நீங்கள் அலைபாயுதே படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதவனை நினைத்துக்கொள்ளுங்கள்… ஷாலினியிடம் மாதவன் புரப்போஸ் செய்யும் காட்சியையும் நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது அங்கு மாதவனுக்குப் பதில் லஷ்மி சரவணகுமார், ஷாலினிக்குப் பதில் அந்தப் பெண், டிரெயினுக்குப் பதில் ஃபேஸ்புக் சரியா…

இன்பாக்ஸ்:

மாதவன்: ஏய் நீ பேய் மாதிரி இருக்கே, ஏய் நீ பயங்கரமா இருக்க, உன்னையெல்லாம் எப்படி அந்த வxxxxxடு (ஊரின் பெயர்) தாங்குதோன்னு தெரியல

இதுதான் அவர் 10 மணிக்கு மேல் அனுப்பும் மெசேஜ். புரபோஸ் செய்வதிலும் உல்டா பண்ணும் அவரது பாணி வியப்புக்குறியதுதான்.

அதன் பிறகு அப்பெண்ணை சித்தி என்று அழைப்பது அவரது வழக்கம். நாங்கள் விருந்திற்கு அழைத்து வசு அவரை கருணையோடு மன்னித்து அனுப்பினாரே அதுபோல் அல்லாமல் இவர் புரப்போஸ் செய்ய விருந்தளிப்பார். அதுவும் எப்படி புரொப்போஸ் செய்வார் தெரியுமா… தான் காதலிக்கும் பெண்ணின் முன்னாலேயே கிண்டலாகச் சொல்வது போல் காதலைச் சொல்வது. ”இன்னைல இருந்து நான் சித்திய லவ் பண்ணலாம்னு இருக்கேன்” இதை அவர் சொன்னபோது அவர் காதலித்து வந்தப் பெண் அருகில்தான் இருந்திருக்கிறார். ஆனால் பாவம் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் அதை சற்று பொறுமையாக கையாண்டு.. கண்டித்து விட்டுவிட்டார். காதலிக்கும் பெண் முன்பே இப்படி ‘ஓப்பனாக’ பேசுகிறாரே என்று மற்றவர்கள் கருத வேண்டுமா? எத்தனை சீப் சைக்காலஜி இது? இப்படி மனைவி முன்னரே காதல் வசனம் பேசி மனிவியின் தோழியின் வாழ்க்கையைச் சீரழித்த கதைகளை நான் அறிவேன். தேவையென்றால் உங்களுக்குச் சொல்லவும் தயாராக இருக்கிறேன். (நீங்கள் என்னைத் தொடர்பு கொண்டால்).

அதன் பிறகு தோராயமாக 1 வருடம் மீண்டும் அவருக்கு ’சித்தி’ மீதான காதல் குறையவில்லை மீண்டும் இரவு 10 மணிக்கு மெசேஜ், ஃபோன்கால். இப்போது சித்தி டார்லிங் ஆகிவிட்டார். 2 மாதங்களுக்கு முன் அப்பெண்ணைத் தொடர்பு கொண்டு இந்த வருடம் முதல் நான் உன்னை லவ் பண்ணலாம்னு இருக்கேன் என்று சொல்ல அவர் உன்னைவிட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது என பதிலளித்திருக்கிறார். டார்லிங் என மெசேஜ் வேறு.. (எனக்கு சற்று குழப்பமாக உள்ளது அப்போது அவர் உங்களை வேறு காதலித்து வந்திருக்கிறார் இல்லையா).

எங்கள் வீட்டிற்கு வந்த அந்தப் பெண் மிகவும் மனம் நொந்து அவரின் இந்தக் கீழ்த்தரமான செயல் பற்றியும் இன்னும் சில ‘தோழர்கள்’ பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார். அது நடந்த 1 வார காலத்தில்தான் சென்னையில் அந்த நிகழ்வு நடந்தது. அதில்தான் வசு மீண்டும் மேற்சொன்ன கேள்வியைக் கேட்டார். ஆனால் பாருங்கள் அதில் கலந்து கொண்ட பெண்கள் வசுவின் கேள்வியை ரசித்துள்ளனர். ஆனால் கொதித்துள்ளது யார் யார் அபிலாஷ் மற்றும் லஷ்மி சரவணகுமார்.

ஆமாம், பரிந்து பேச வந்த கார்க்கி அவர்களே லஷ்மி சரவணகுமாருக்கு ஏன் இத்தனை சீற்றம்…  ஒருவேளை குற்ற உணர்வோ? இல்லை வசு இப்படி பேசிவிட்டால் பெண்கள் சுதாரித்துக்கொள்வார்களே… தான் யாருக்கு காதல் இலக்கியத்தை இனி வாசிப்பது என்ற அச்சமோ?

1) சரி இதெல்லாம்கூட போகட்டும் வசு பேசினால் வசுவிடம் எதிர்வினையாற்ற வேண்டியதுதானே? ஏன் தொடக்கம் முதல் அவர் என்னுடைய வாழ்க்கைத் தேர்வை எனது எழுத்தார்வத்தை, எனது சமூகப் பணியை கொச்சைப்படுத்தி எழுதி வந்திருக்கிறார் என்பதை அவரை விளக்கச் சொல்ல முடியுமா? என்னைப் பற்றித் தவறாக எழுதிவிட்டு வசுவிடம் மன்னிப்பை எஸ் மூலம் கெஞ்சி வைத்ததற்கு என்ன அர்த்தம். வசு மன்னிப்பான்… நான்…?

உண்மையில் அவருக்கு என் கடந்தகால வாழ்க்கைத் தெரிய வேண்டும் அதை வைத்து ஒரு புனைவு எழுத வேண்டுமென்றால் என்னிடமே உரையாடி தெரிந்துகொண்டிருக்கலாமே… அதைவிடுத்து ஏன் ஒரு கற்பனைப் பகடி… ? அதில் அவர் அடையும் ஆர்கசம் என்ன?

2) நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் வசுவைப் பற்றி தெரியும், என்னைப் பற்றி தெரியாது என – வசுமித்ரவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவரைப் பற்றி மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும்?.. லஷ்மி சரவணக்குமார் சொல்லித்தான் தெரியுமா இல்லை வேறு யாரேனும் சொல்லித் தெரியுமா.. அதையும் விளக்கவும்

3) முகப்புத்தகத்தில் அவருக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களே அதிலேயே மேரீட் டு என என் பெயர் வருமே… இருவரும் பதிவு எழுதி இருக்கிறோம் என்று சொன்ன நீங்கள் அதை கவனிக்கவில்லையா? இவ்வளவு நடந்தும் நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் ‘அண்ணன்’ வசுமித்ரவுக்கு மட்டும் தனிப்பட்ட மெசேஜ் அனுப்பி பேசுவதை நான் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? ஏனென்றால் லஷ்மி சரவணகுமார் சித்தியை லவ் பண்ணலாம் என்கிறார்… லஷ்மி சரவணக்குமாரின் குடும்ப கலாச்சாரம் எனக்குச் சற்று குழப்பமாக உள்ளது… 

வசுமித்ர என் ஆசான், அவன் என் கணவனல்ல… என் வாழ்நாள் தோழன் இப்படியெல்லாம் பேசுவது நான்தான். இதில் உங்கள் கணவருக்கு என்ன பிரச்சினை? அவர் ஏன் தொடர்ந்து எங்கள் இருவரையும் குறிவைத்து எழுதுகிறார். அவருள் இருக்கும் பொறாமை உணர்வுதான் என்ன? திருமணமான பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ய முடியாமல் போன சம்பவம் ஏதேனும் அவர் வாழ்வில் நடந்துள்ளதா? சரி அதற்கு அவர் அதற்கான காரணத்தை நொந்துகொள்ள வேண்டுமே தவிர, எதற்கு எங்களை வம்புக்கு இழுக்கிறார்?

அவரின் இந்த வக்கிரச் செயல்பாட்டில் (pervert act) உங்களுக்கு உடன்பாடு உண்டா இல்லையா லஷ்மி சரவணகுமாருக்காகப் பரிந்து பேசவந்த கார்க்கி அவர்களே....

இலக்கியத்தின் பெயரால் சிலர் இப்படிப் பெண்களிடம் இரவு வேளைகளில் தொந்தரவு செய்வது குறித்து பொதுவெளியில் பேசும், அதைக் கண்டிக்கும் உரிமை ஒருவருக்கு உள்ளதா இல்லையா? இதைப் பேசினால் சமப்ந்தப்பட்டவர் தன் மனைவியை சந்தேகப்படுகிறார் என்பது சரியா? முற்போக்கு முகமூடி அணிந்து பெண்களுக்கு தொல்லை கொடுப்பது, கணவன் மனைவி உறவில் குழப்பம் விளைவிப்பது இவற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒன்று செய்யுங்களேன்… இனிமேல் நீங்கள் தினம்தோறும் இரவு 10 மணிக்கு வசுமித்ரவுக்கு ஃபோன் செய்யுங்கள் இரவு முழுக்க இலக்கியம் பேசிக்கொண்டிருங்கள். லஷ்மி சரவணகுமார் எத்தனை நாட்கள் அதை சகித்துக்கொள்கிறார் என்று ஒரு ரியல் டைம் கேஸ் ஸ்டடியைத் தொடங்குவோம்…..

இந்த கேஸ் ஸ்டையோடி இங்கு முற்போக்கு முகமூடி அணிந்து திருமணத்திற்குப் பின் இரவு வேளைகளில் ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது அவரவர் சுத்ந்திரம் என்று போர்குரல் எழுப்பும் அத்தனை இலக்கியவாதிகளின் மனையோடும் நான் தினம் தினம் இரவு முழுக்க வசுமித்ரவை பேசச் சொல்கிறேன். இப்போது அடுத்தவர் மனைவிக்காக வக்காலத்து வாங்கும் முற்போக்குவாதிகளின் மனநிலையையும் சேர்த்து கேஸ் ஸ்டடி செய்வோம்.

இலக்கியத்தின் பெயராலும், படைப்புத்திறனின் பெயராலும், இன்னும் பல யுத்திகளைப் பயன்படுத்தி ஆண்கள் பெண்களுக்கு வலை வீசுவது, காதல் என்ற பெயரில், சுதந்திரம் என்ற பெயரில் பெண்களின் வாழ்வைச் சீரழிப்பது இது குறித்தெல்லாம் லஷ்மி சரவணகுமாருக்கு, உங்களுக்கு இன்னும் இதர முற்போக்குவாதிகளுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது கவலை தரும் விஷயமாக இருக்கிறது. 

முற்போக்கின் பெயரால் சீரழிவுகளை என்னால் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. (எனக்கும் அத்தகைய சில அனுபவங்கள் உண்டு).  சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலான பிரச்சினையை இப்படி எள்ளல் செய்து மகிழ்கிறீர்களே வெட்கமாக இல்லை. இதற்குப் பெயர் ஸ்டேட்டஸா? உரையாடலாம் வாருங்கள் என்பதன் பொருள் தெரியுமா உங்கள் இருவருக்கும்? ஒருவரிடம் நாங்கள் உங்களை அரவணைத்தே பேச விரும்புகிறோம் என்று சொல்லாமல் சொல்லும் ஒரு மரியாதைக்குறிய ஒரு பதம். அதையுமா எள்ளல் செய்வீர்கள்? ச்சே எத்தனை அருவருப்பாக உள்ளது உங்கள் செயல்பாடுகள்.

என் கோபம் இப்போது பெருகிவிட்டது.  இனி அவர் பொதுவெளியில் மன்னிப்பே கோரினாலும் நான் இந்தப் பதிவுகளை நீக்க மாட்டேன். அவரின் செயல்களுக்குறிய பதிலை நேரிலேயே வழங்குவேன். நான் முன்னர் சொன்னபடி காலணி அணிய அனுமதி இல்லாத கூட்டம் எனினும் நான் காலணி அணிந்தே உள்ளே வருவேன்.

இப்படிக்கு,
உங்களின் அண்ணா உறவால் அண்ணியாகி, ஒரு கேடுகெட்ட தம்பிக்கு அக்காவாகிய உங்களின் அன்புக்குரிய அண்ணி,
கொற்றவை.

Related Posts:

http://saavinudhadugal.blogspot.in/2014/02/blog-post_17.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_1.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_3.html
No comments:

Post a Comment