Jul 30, 2010

மூளுக தீ


விளிப்பெயர் சுவாசமற்றுத் திரிகிறது

கூடதற்கு சவம்

வாளெடுத்து பேதங்களில் வீசுகையில்

இடம் பெயறாது குறிகள் நிமிர்கின்றன

ஓநாய் பற்களுடன்


தசை மேடுகள் அச்சத்தின் குழந்தைகள்

கரைந்தழும்

சமிக்ஞை காகிதத்தை முத்தமிட்டமர்கையில்

தசைகளற்ற விலங்கு

தனதான உறுப்பைக் கவ்வியணைக்கிறது


குறியழிந்தாலும் சொல்லழிவதில்லை..


தீ

சுடுகிறது

தசை

விறைத்திருந்தாலும்

அவிழ்ந்திருந்தாலும்


தண்ணீருக்கெதிராய் மூளுவதில்லை

தீ

தீ

யாகவே இருக்கிறது

எழுக

பெண்

மரத்தில் இலையுள்ளது

மலருள்ளது

கனியுள்ளது

பூமி கிழிய

வேரோடிப் புணரும்

விதியுள்ளது

எழுக

பெண்

எல்லாவற்றையும்

எல்லாவிதமுமாக

துறந்தபடி

எழுக

பெண்

4 comments:

  1. மூண்டது தீ..
    வெந்து தணியட்டும் காடு.
    எழுக!!

    ReplyDelete
  2. கொற்றவை மேடம்,

    பெண்ணை தீ என்கிறீர்களா, தண்ணீர் என்கிறீர்களா ?

    ReplyDelete
  3. பெண் என்கிறேன்... எழுக பெண் என்கிறேன்...(தண்ணீர், தீ எல்லாம் அடங்கியது தானே உடல்)

    ReplyDelete