விளிப்பெயர் சுவாசமற்றுத் திரிகிறது
கூடதற்கு சவம்
வாளெடுத்து பேதங்களில் வீசுகையில்
இடம் பெயறாது குறிகள் நிமிர்கின்றன
ஓநாய் பற்களுடன்
தசை மேடுகள் அச்சத்தின் குழந்தைகள்
கரைந்தழும்
சமிக்ஞை காகிதத்தை முத்தமிட்டமர்கையில்
தசைகளற்ற விலங்கு
தனதான உறுப்பைக் கவ்வியணைக்கிறது
குறியழிந்தாலும் சொல்லழிவதில்லை..
தீ
சுடுகிறது
தசை
விறைத்திருந்தாலும்
அவிழ்ந்திருந்தாலும்
தண்ணீருக்கெதிராய் மூளுவதில்லை
தீ
தீயாகவே இருக்கிறது
எழுக
பெண்
மரத்தில் இலையுள்ளது
மலருள்ளது
கனியுள்ளது
பூமி கிழிய
வேரோடிப் புணரும்
விதியுள்ளது
எழுக
பெண்
எல்லாவற்றையும்
எல்லாவிதமுமாக
துறந்தபடி
எழுக
பெண்
Admirable poetry !!!
ReplyDeleteKeep going !!!
மூண்டது தீ..
ReplyDeleteவெந்து தணியட்டும் காடு.
எழுக!!
கொற்றவை மேடம்,
ReplyDeleteபெண்ணை தீ என்கிறீர்களா, தண்ணீர் என்கிறீர்களா ?
பெண் என்கிறேன்... எழுக பெண் என்கிறேன்...(தண்ணீர், தீ எல்லாம் அடங்கியது தானே உடல்)
ReplyDelete