Aug 6, 2010

கொற்றவையின் தோற்றம்


"பிறையாகிய வெள்ளி இதழைச் சூடுகின்ற சென்னியாள்;
நெற்றியைக் கிழித்து விழித்த இமையாத நெற்றிக் கண்ணை உடையாள்;
பவளம் போன்ற வாயாள்; முத்தொளி விளங்கும் சிறப்பினை உடையாள்;
நஞ்சுண்டு கறுத்த கழுத்தினை உடையாள்;
பாம்பை நாணாகிப் பூட்டி மேருமலையினை வளைத்தவள்;
துணையமைந்த பல்லையுடைய நச்சுப் பாம்பினைக் கச்சாகக் கட்டியிருக்கும் மார்பினாள்;
வளையுடையக் கையிலே சூலம் ஏந்தியவள்;
யானைத் தோலைப் போர்த்தியவள்;
புலித்தோலை மேகலையாக அணிந்தவள்
இடப்புரக்காலிலே சிலம்பும், வலப்புரக்காலிலே வீரக்கழலும் ஒலிக்கும் சீரிய அடிகளையுடையவள்;
எருமைத் தலையும் மனித உடலுமாகத் திரண்ட மகிஷாசுரனைக் கொன்று அவன் தலை மீது நிற்பவள்.................

கொற்றவையின் தோற்றமாக வர்ணிக்கப்படும் இவைகள் சிவபெருமானின் தோற்றமாக எப்பொழுது மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுகிறது,,,,"

- க. பஞ்சாங்கம் / சிலப்பதிகாரம்: சில பயணங்கள் (காவ்யா, சென்னை,2002 ) - சூரிய நடனம் தொகுப்பிலிருந்து.

1 comment:

  1. வீரம் என்பது தீமைக்கு எதிராக, ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவாகத் தான் சொல்லப் பட்டது. அதைத் தான் கொற்றவையின் இந்தப் படம் குறிக்கிறது. இங்கு அந்தப் பெண் தெய்வம் காலில் போட்டு மிதிப்பது ஒரு ' ஆணை ' அல்ல. தீமையையே ! அதற்கான குறியீடு தான் இது !

    சிவபெருமானின் தத்துவம்தான் " அர்த்தநாரீசம்" எனும் ஆண் பெண் சமதர்மத்தை அன்றே போதித்தது. ஆண்மை சிவம் போன்றது என்றால், பெண்மை, சக்தி போன்றது. சக்தி இல்லையே சிவமில்லை. சிவமில்லையேல் சக்தி இல்லை.

    ReplyDelete