Jun 2, 2020

My daughter’s voice against Racism:



My first experience with discrimination based on colour was when i was a kid in my art class. my art teacher would not teach us how to mix the skin shade of a dark skinned person, even though the majority of us were dark skinned he refused to teach us because it’s not a skin colour that “matters”. all we were taught was how to mix peach for light skinned people. and as i grew up i started noticing more discrimination towards dark skinned people from picking the fair skinned child for the lead role in a school play to only seeing light skinned actresses on screen. i recently assisted cinematography for an advertisement that made children act as adults and the dark skinned girl was made to play the domestic helper. i was infuriated but i was asked to stay silent. i have been asked to stay silent all my life because “it’s just how the world is”. when i went to thailand to pursue my higher education, i was not allowed to stay in the common hostel room because i was a “stinky indian” i cried the whole night on call to my mom and refused to go abroad to study again. i’m back in india and still scared to go overseas to study because of the racism every dark skinned person faces. will this ever stop? how can you help? how can you make this world a less shittier place? start with yourself, start with educating your family, start with not staying silent.

**********

நிறத்தின் அடிப்படையிலான பாகுபாட்டை நான் முதன் முதலில் சிறுமியாக இருந்தபோது என் ஓவிய வகுப்பில் எதிர்கொண்டேன். எங்கள் வகுப்பில் கருமை நிறத் தோல் உடையவர்கள் அதிகம் இருந்த போதும், கருமை நிறத் தோல் உடைய மனிதர்களை வரைவதற்கான நிறக் கலவையை என் ஆசிரியர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததில்லை – ஏனென்றால் அத்தகையதொரு நிறம் (உடையோர்) “ஒரு பொருட்டல்ல”.

வெள்ளை நிறமுடைய மனிதர்களை வரைவதற்கான நிறக் கலவை மட்டுமே எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. பிறகு கருமை நிறத் தோல் உடையவர்கள் மீதான பாகுபாட்டை வளரும்போதும் நான் கண்டேன். பள்ளி நாடகங்களில் நாயகன், நாயகியாக நடிக்க வெள்ளை நிறத் தோற்றமுடையவரை மட்டுமே தேர்ந்தெடுப்பது, திரைப்படங்களிலும் வெள்ளை நிறத் தோலுடைய நடிகைகளுக்கே வாய்ப்பு. நான் சமீபத்தில் ஒரு விளம்பரத்திற்காக ஒளிப்பதிவு உதவியாளராகப் பணிபுரிந்தேன். அதில் பிள்ளைகளை பெரியவர்களாக நடிக்க வைத்தார்கள். அதிலும் ஒரு கருமை நிறத் தோலுடையப் பெண்ணையே வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடிக்க வைத்தனர்.


கடுஞ்சினம் கொண்டேன். ஆனால் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். “உலகம் இப்படித்தான்” என்ற போதனைகளின் மூலம் நான் என் வாழ்நாள் முழுவதும் அமைதியாகப் போக போதிக்கப்பட்டேன்.


நான் என் மேற்படிப்பிற்காக தாய்லாந்து சென்ற போது “நாறும் இந்தியன்” என்பதால் பொதுவான அறையில் தங்க அனுமதி மறுக்கப்பட்டேன். அன்றைக்கு இரவு என் அம்மாவுக்கு அலைபேசியில் அழைத்து இரவு முழுவதும் காணொளியில் அழுதேன். இனிமேல் நான் வெளிநாடு செல்லவே மாட்டேன் என்றேன். இதோ, இப்போது இந்தியாவிற்கு திரும்பியும் விட்டேன். ஒவ்வொரு கருமை நிறத்தவரும் எதிர்கொள்ளும் இனவெறி தாக்குதல்களை நினைத்து இப்போதும் எனக்கு வெளிநாடு செல்வதற்கு அச்சமே.

இது எப்போதாவது முடிவுக்கு வருமா? நீங்கள் எப்படி உதவ முடியும்? இந்தக் கேவலமான உலகை சிறிதேனும் மேலானதாக மாற்ற உங்களால் ஏதாவது செய்ய முடியுமா? முதலில், உங்களிடமிருந்து தொடங்குங்கள்! உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் - அமைதியாக கடந்துபோகாமல் பாகுபாடுகளுக்கு எதிராகப் பேசுவதிலிருந்து அதைத் தொடங்குங்கள்!
- வருணா

பி.கு: பாகுபாடு பற்றிய நுண் அரசியல் தெரியாமல் இங்கே பலரும் “Privileged theory” கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான தனியுடைமை அமைப்பில் பாகுபாடென்பது பல வடிவங்களில் பாகுபாடின்றி செயல்படும்!
Painting (water color) for #JusticeForGeorgeFloyd #BlackLivesMatter #AgainstDiscrimination by Varuna Painting (water color) for #JusticeForGeorgeFloyd #BlackLivesMatter #AgainstDiscrimination by Varuna Shreethar


No comments:

Post a Comment