Apr 17, 2017

தலித் விடுதலையும் தலித் அறிவுஜீவிகளும்

#Dalit Emancipation is not possible without the radical change in the division of labor based on mode of production developed for Individual's wealth accumulation.
தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையின் கீழ் தலித் விடுதலை சாத்தியமில்லை.

and hence.... we are against identity politics, which is is only enabling casteist mobilization and thus aiding upliftment of very few 'oppressed', creating either the new bourgeoisie or loyalties for capitalism. It is dividing the working class, leads to sectarian politics - thus strengthening the exploiting class. The worst affected Mass in this identity/sectarian politics are the Dalits / Working Class because of the exploitative division of labour...

இதனால் தான் நாங்கள் அடையாள அரசியலுக்கு எதிராக நிற்கிறோம்.  தலித்திய அடையாள அரசியல் என்பது மீண்டும் சாதிய ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அணிதிரட்டவும், வெகு சில ‘ஒடுக்க்கப்பட்ட’ குழுவினரின் மேம்பாட்டிற்கும் மட்டுமே உதவுகிறது.  தொழிலாளர்களை பிளவுபடுத்தி, குறுங்குழுவாத அரசியலை வளர்த்தெடுத்து, சுரண்டும் வர்க்கத்தை பலப்படுத்தவுமே அது உதவுகிறது.  இந்த சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையால் பாதிக்கப்படுவது பெர்ரும்பான்மை தலித்துகளே / உழைக்கும் வர்க்க மக்களே..

If Dalit Intellectuals have problem with the Communist Parties (here) they could be anti-communist parties and not anti-marxists! (based on Ranganayakamma's polemic)
By this I mean, they could be critical about the Communist Parties, present evidence based historical data about the failure of the communist parties, engage with them in dialogue for the benefit of the working class, in particular the working Mass who are being oppressed and exploited for cheap labor. This doesn't mean / lay any justification for being a Dalitist and being anti-marxist.
Beyond this if they still have no hopes with communist parties (here) they can build their own communist party with program to eliminate both exploitation and oppression. Marxism is Social Science and it offers research tool to study the society based on the base on which the super-structure is built.
Let Dalit Intellectuals present us a theory which is convincing enough to be a social science which will help us understand the Root-Cause for such inequalities.

தலித் அறிவுஜீவிகளுக்கு இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு உடன்பாடில்லை எனில் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பாளர்களாக இருக்கலாமே ஒழிய கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல (ரங்கநாயகம்மாவின் விவாதங்களின் அடிப்படையில்).
இதன் பொருள் என்னவெனில், இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான தங்களது விமர்சனங்களை தாராளமாக ‘தலித் அறிவுஜீவிகள்’ முன் வைக்கலாம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்விகள் குறித்து வரலாற்றுப்புர்வ (ஆதாரபூர்வ) விமர்சனங்களை வைக்கலாம், மலிவான கூலிக்காக சுரண்டப்படும், ஒடுக்கப்படும் தொழிலாளர் வர்க்க நலனை முன்னிறுத்தி அவர்களோடு உரையாடலில் (விவாதங்களில்) ஈடுபடலாம். ஆனால் இதற்காக ஒருவர் தலித்தியவாதியாகவோ, கம்யூனிச (மார்க்சிய) எதிர்ப்பாளராகவோ இருப்பதை நியாயப்படுத்திவிட முடியாது.
இதையும் தாண்டி, அவர்களுக்கு இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நம்பிக்கை இல்லையெனில், சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் ஒழிப்பதற்கான வேலை திட்டத்துடன் அவர்களே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கலாம். அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்று ஒரு சமூகம் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய உதவும் சமூக விஞ்ஞனம் மார்க்சியம்.
ஏற்றத்தாழ்வுக்கான அடிப்படை காரணத்தை சரியாக அடையாளம் காண உதவும் இத்தகையதொரு சமுக விஞ்ஞானத்தை (கோட்பாட்டை) தலித் அறிவுஜீவிகள் முன்வைக்கட்டும்.

No comments:

Post a Comment