Dec 29, 2011

எம் தாயைப் புணர்ந்துக் கொண்டிருப்பவன்அவனை நான் நன்கு அறிவேன்
அவன்
ன்
வெகு காலமாய் எம் தாயைப் புணர்ந்துக் கொண்டிருப்பவன்
தோட்டத்தில் அவள் ஈரத்துடன் நட்ட விதைகளைப்
பிடுங்கியவன்
சூரியக் கதிர்களை லிங்கமென சித்திரம்
தீட்டியவன்
அவளது
கருப்பையை முதலீடாக்கியவன்
ஸ்கலித எச்சிலை குறியீடுகளென
கோட்டைகளில் கொடியேற்றியவன்
உடல்களைச் செங்கலாக்கி கட்டிய
மாளிகைக்குள்
தன் நாற்காலியை மரத்த விரல்களால் இறுகப்பற்றிக் கொண்டு
அவளது யோனியை மேய்ச்சல் நிலமென்றாக்கியவன்

அவன்

நெற்கதிர்களுக்கு செந்நீராய் தெளிக்கப்பட்ட
தூமையை
கழிவென்றவன்

பால் வார்த்த முலைகளுக்கு
வரிகளை சுமத்தியவன்
காக்கும் எம் அம்மையை
வைசூரி
நீலி
என்று பயம் காட்டியவன்

தர்ம சூத்திரம் எழுதி
பெண் உடலுக்கு தீட்டறிவித்தவன்
இயலாத
தந்தைக்கு
தூமையை குடிக்கும் விதி விதித்தவன்

அவனே
ஆம்
அவன்
அவனேதான்

தற்போது
எம் தாய்களை
பெண்களை
சகோதரிகளை
குழந்தைகளை
மற்றும் அவர்களை
வரலாறெங்கும் புணர்ந்து கொண்டிருப்பவன்

7 comments:

 1. Kavithai kiurithu Virivaaga ezhutha aasai..pinnoru samayam vaaikkum..attagaasamana kavithai..

  ReplyDelete
 2. தலைப்பு தரும் அதிர்வுடன் கவிதையும் புரிதலும் மறு கோணமாக இருக்கிறது. வாழ்த்துகள்

  ReplyDelete
 3. வேல் கண்ணன், கவிதை எழுதியவரின் கோணத்தை சரியாக அணுகியமைக்கு நன்றி...

  ReplyDelete
 4. கொற்றவை, ஏன் இந்தக் கொலை வெறி ? முகம் தெரியாத அந்த " அவன் " உமக்கு என்ன பாவம் செய்தான் ?

  ReplyDelete
 5. அரிதாகக் கிடைப்பதால் தான் தங்கம் மகுடமாக அழகுபார்க்கப் படுகிறது. சல்லிசாகக் கிடைப்பதால் தான் இரும்பு, செருப்பிலும் சேர்க்கப் பட்டு மிதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் மிதிபடுபவர்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்களே. ஏனெனில் இந்த உலகில் ஆண்களுக்குப் பஞ்சமில்லை. அதனாலேயே அவர்களுக்கு மதிப்பும் இல்லை. கள்ளிப்பால் கொடுத்துக் கொடுத்து பெண்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விட்டோம். அந்த ஏதுமறியா சிசுக்கள் விட்ட சாபமோ என்னவோ என்று எத்தனையோ இளைஞர்கள் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் பிரம்மச்சாரியாகவே காலம் தள்ளுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் உமது கண்களுக்குத் தெரியவில்லையா ???

  உலகத்திலேயே மிகவும் சூனியமானது எது தெரியுமா ? காதலி இல்லாத ஒரு பிரம்மச்சாரியின் தனிமையான பகல் பொழுது தான். ஒரு காலத்தில் பெண்கள் கொடுமைப் படுத்தப்பட்டார்கள். தற்போது அப்படி இல்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா ?

  " வரதட்சணை
  என்ற களைச்செடியைப்
  பெண்களின் நிலத்தில்
  இருந்து பிடுங்கி
  'சம்பளம்' என்ற பெயரில்
  எப்போதோ
  ஆண்களின் நிலத்தில்
  நட்டு விட்டது காலம் !
  இனி திருமணம்
  என்ற பயிர்
  பாவப்பட்ட
  ஆண்களின் நிலத்தில்
  முளைப்பது என்பது
  சந்தேகந்தான் !!! "

  கொற்றவை, நீங்கள் இரும்பு மனுஷியாக இருந்தாலும் அதில் துரும்பு அளவேனும் ஈரம் இருக்கும் என்று தான் எழுதுகிறேன். தற்போது நமது சமூகத்துக்கு " பெண்ணியம் " என்பது மஞ்சள் காமாலைக்கு சுக்குக் கஷாயம் தருவது போல அவ்வளவு அனாவசியமானது. தயை செய்து புரிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 6. உங்கள் கேள்விகளுக்கு என்னுடைய கட்டுரைகளில் விளக்கம் உள்ளது... வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.....

  ReplyDelete