திரு. சுஜின் அவர்களின் பதில்:
வியாசர் தான் இந்து மதத்தின் நான்கு வேதங்களையும் தொகுத்தவர். இவர் யாருக்கு பிறந்தவர் தெரியுமா? ஒரு மகரிஷிக்கும் மீனவப் பெண்ணுக்கும் மகனாய் பிறந்தவர் தான் வியாசர். இதில் இருந்து நாம் அறிய வேண்டிய விஷ்யங்கள்: * ஒரு மீனவ பெண்மணிக்கு பிறந்த வியாசர் தான் புனிதமான வேதத்தை தொகுத்தவர். * மீனவ பெண்ணுக்கு பிறந்தார் என்பதற்காக வியாசரால் தொகுக்கப்பட்ட வேதத்தை யாரும் தீட்டு என்று கூறுவதில்லை. * இதே வேத மந்திரம் தான் கோயிலில் முழங்கிக் கொண்டு இருக்கிறது. மீனவ பெண்ணுக்கு பிறத்த வியாசர் தொகுத்த வேதம் முழங்குவதால், கோவில் தீட்டாகிவட்டது என்று யாரும் கூறுவதில்லை. * ஒரு மகரிஷி, மீனவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அப்படி என்றால், அந்த காலத்தில் வர்ண அடிப்படையில் ஏற்ற தாழ்வு இல்லை என்று தானே அர்த்தம்? அதே சமயம், திருமணத்துக்கு வர்ணம் ஒரு பொருட்டல்ல என்பதும் தெளிவாகும்.
எனது பதில்:
·
o சகோதரி நிர்மலா அவர்களே, உங்கள் தளத்தில் கருத்து பதிவு செய்ய Gmail ACCOUNT தேவைபடுகிறது. ஆனால் MOBILE NUMBER கொடுக்க வேண்டியுள்ளதால், நான் GMAIL ACCOUNT வைத்துக்கொள்வதில்லை. REDIFF & YAHOO ACCOUNT மட்டுமே நான் உபயேக படுத்துகிறன். எனது தளத்திலும் நான் கருத்து எழுதும் வசதியை வைக்கவில்லை. ஆதலால், என் கருத்தை உங்களுக்கு FACEBOOK MSG செய்கிறேன்.
Tuesday
o RSSயின் இந்து யார்? அல்லது சாவர்கரின் இந்து யார்? இந்த இரண்டு கோட்பாட்டில் இருந்தும் நான் சற்று வித்தியாசப்படுகிறேன். சாவர்கரின் இந்து யார்? என்பதை சுருக்கமாக சொன்னால், பாரதத்தை புன்னிய பூமியாக கொண்டவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். அதாவது, இந்த பாரத பூமியில் தோன்றிய மதங்களை பின் பற்றுபவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். சாவர்கரின் கோட்பாட்டின் படி, சமண, புத்த, சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்களும் இந்துக்கள் தான். சாவர்கர் இந்து என்று குறிப்பது, இந்து மதத்தை அல்ல. இந்து(சைவ, வைணவ, பற பரிவுகள்), சமண, புத்த, சீக்கிய மதங்கள் பாரதத்தில் தோன்றிய மதங்கள். இவற்றை பின்பற்றுபவர்களின் பொது அடையாள பெயர் தான் இந்து. சாவர்கரின் கோட்பாட்டின் படி முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்கள் அல்ல. ஏன்யென்றால், இஸ்லாமும், கிறிஸ்தவமும் பாரதத்தில் தோன்றாத வெளிமதங்கள். இவர்களின் புன்னிய பூமி மேக்காவும், ஜெருசலேமும். ஆதலால், இவர்கள் இந்துக்கள் அல்ல. இது சாவர்கரின் கோட்பாடு.
RSSயின் இந்து கோட்பாடு என்பதும், சாவர்கரின் இந்து கோட்பாடும் கிட்டதட்ட ஒன்று தான். RSSயின் இந்து கோட்பாடும் மதத்தை குறிப்பதல்ல. பாரதத்தில் வாழும் பல்வேறு மதங்களைச் சார்ந்த, மக்கள் அனைவரையும் குறிப்பது. ஆனால், ஆர்எஸ்எஸ்யின் கோட்பாட்டின் படி, பாரதத்தில் வாழும் கிறுத்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்கள் தான். ஏன்யென்றால், இங்கு வாழும் இஸ்லாமியர்களும், கிறுத்தவர்களும் ஒரு காலத்தில் பாரத மதமான இந்து(சைவ, வைணவ, பற பரிவுகள்), சமண, புத்த, சீக்கிய மதங்களில் இருந்து மதம் மாறியவர்களே. ஆதலால், RSS இஸ்லாமிய, கிறுத்தவ மதங்களை ஏற்று கொள்ளவில்லை என்றாலும், அம்மக்களை இந்து என்று தான் கூறுகிறது. இது RSSயின் கோட்பாடு. இந்த இரண்டு கோட்பாட்டில் இருந்தும் நான் வேறுபடுகிறேன். நான், RSS மற்றும் சாவர்கரின் இந்து கோட்பாட்டை தேசியமாக மதிக்கிறேன். ஆனால், சில விஷ்யங்களில் எனக்கு மாற்று கருத்துள்ளது. ஆனால், இது பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. அது விவதத்தை அர்எஸ்எஸ் திசையின் இருந்து, என் திசைக்கு இழுத்துச் சென்றுவிடும்.
இப்போது கோட்பாடுகளை மறந்துவிடுங்கள். மதத்துக்கு வருவோம். இந்து மதத்தை பிராமணர்களின் சாதிக்குள் அடைப்பது தவறு. நான் உங்களுக்கு அளித்த LINKஐ நீங்கள் படித்திருந்தால் நாம் அடுத்தகட்ட விவாதத்திற்கு சென்றிருப்போம். ஆனால், நீங்கள் LINKஐ தவிர்த்துவிட்டீர்கள். இருந்தாலும், இந்து மதம் பிராமணர்களுக்கான மதமில்லை என்பதை குறிக்க அந்த கட்டுரையில் இருந்து சில முக்கியமான கருத்துக்களை கூறுகிறேன்.
RSSயின் இந்து கோட்பாடு என்பதும், சாவர்கரின் இந்து கோட்பாடும் கிட்டதட்ட ஒன்று தான். RSSயின் இந்து கோட்பாடும் மதத்தை குறிப்பதல்ல. பாரதத்தில் வாழும் பல்வேறு மதங்களைச் சார்ந்த, மக்கள் அனைவரையும் குறிப்பது. ஆனால், ஆர்எஸ்எஸ்யின் கோட்பாட்டின் படி, பாரதத்தில் வாழும் கிறுத்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்கள் தான். ஏன்யென்றால், இங்கு வாழும் இஸ்லாமியர்களும், கிறுத்தவர்களும் ஒரு காலத்தில் பாரத மதமான இந்து(சைவ, வைணவ, பற பரிவுகள்), சமண, புத்த, சீக்கிய மதங்களில் இருந்து மதம் மாறியவர்களே. ஆதலால், RSS இஸ்லாமிய, கிறுத்தவ மதங்களை ஏற்று கொள்ளவில்லை என்றாலும், அம்மக்களை இந்து என்று தான் கூறுகிறது. இது RSSயின் கோட்பாடு. இந்த இரண்டு கோட்பாட்டில் இருந்தும் நான் வேறுபடுகிறேன். நான், RSS மற்றும் சாவர்கரின் இந்து கோட்பாட்டை தேசியமாக மதிக்கிறேன். ஆனால், சில விஷ்யங்களில் எனக்கு மாற்று கருத்துள்ளது. ஆனால், இது பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. அது விவதத்தை அர்எஸ்எஸ் திசையின் இருந்து, என் திசைக்கு இழுத்துச் சென்றுவிடும்.
இப்போது கோட்பாடுகளை மறந்துவிடுங்கள். மதத்துக்கு வருவோம். இந்து மதத்தை பிராமணர்களின் சாதிக்குள் அடைப்பது தவறு. நான் உங்களுக்கு அளித்த LINKஐ நீங்கள் படித்திருந்தால் நாம் அடுத்தகட்ட விவாதத்திற்கு சென்றிருப்போம். ஆனால், நீங்கள் LINKஐ தவிர்த்துவிட்டீர்கள். இருந்தாலும், இந்து மதம் பிராமணர்களுக்கான மதமில்லை என்பதை குறிக்க அந்த கட்டுரையில் இருந்து சில முக்கியமான கருத்துக்களை கூறுகிறேன்.
Tuesday
o நாம் இப்போது பின்பற்றிவரும் சாதி முறை, பிறப்பின் அடிப்படையில் வருவது (BIRTH - BASE). அதாவது, நீங்கள் நாடார் சாதியாக இருந்தால், உங்கள் குழந்தையும் நாடார் தான், உங்கள் குழந்தையின் குழந்தையும் நாடார் தான். இந்த சாதி முறை தான், ஏற்ற தாழ்வுகளையும் தீண்டாமை கொடுமைகளையும் அரங்கேற்றி வருகிறது. சரி. இந்துக்கள் பின்பற்றும் இந்த சாதி முறைக்கு இந்து மதம் தான் காரணமா? "இல்லை.". காரணம், இந்துக்களின் வேதமான ரிக், எஜர், சாம, அதர்வண வேதங்கள் எதிலும், "பிறப்பு அடிப்படியில் சாதி" என்ற கோட்பாடு இல்லை! இன்னும் சொல்லப் போனால், வேதத்திலும் சரி, வேதக் காலங்களிலும் சரி, சாதி என்ற ஒன்று கிடையாது. வர்ணம் என்ற முறை மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது. சாதி என்பது வேறு, வர்ணம் என்பது வேறு. வர்ணம் என்பதில் நான்கு பிரிவுகள் மட்டுமே உள்ளது. அங்கு, தேவர்; பறையர்; நாடார்; வேளாளர்..... போன்ற எந்த பிரிவுகளும் கிடையாது. வர்ண முறை என்பது மனிதர்களை பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வகைகளாக, அவர்களின் குணத்துக்கு ஏற்ப வகுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செய்யும் தொழில் என்பது அவரவர் குணத்துக்கு ஏற்ப இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதாவது, பிரமணன் என்பவனிடம் அடக்கம், தவம், பொறுமை, நூலறிவு, தெய்வபக்தி போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும். க்ஷத்திரியனிடம் வீரம், துணிவு, உறுதி, திறமை, கொடை, ஆளுமை திறன் போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும். வைசியரிடம் உழவு, கால்நடை, வாணிபம் போன்றவற்றை நடத்தும் அறிவு மிகுதியாய் இருக்கும். சூத்திர வர்ணத்தவரிடம் தனிப்பட்ட எந்த விஷேச குணமும் இருக்காது. பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் உதவி புரிவது இவர்கள் தொழில். ஆக, நாம் இதில் இருந்து முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, "வர்ணம் என்பது பிறப்பு அடிப்படையில் வகுக்கப்படுவது அல்ல" என்பதாகும். அதாவது, நீங்கள் ஒரு பிராமணன் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு பிராமணனுக்குறிய குணம் இல்லாமல், வீரம், துணிவு, ஆளுமை திறன் போன்ற குணங்கள் மிகுதியாய் இருந்து, ஒரு போராளி ஆகிறான். இப்போது, உங்கள் குழந்தையின் வர்ணம் க்ஷத்திரியனே தவிற பிராமணன் அல்ல. இது தான் சாதி முறைக்கும், வர்ண முறைக்கும் உள்ள வித்தியாசம். வர்ண முறையின்படி, "ஒருவரின் வர்ண அமைவுக்கும், அவரின் தந்தை / தாயின் வர்ணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை."
வியாசர் தான் இந்து மதத்தின் நான்கு வேதங்களையும் தொகுத்தவர். இவர் யாருக்கு பிறந்தவர் தெரியுமா? ஒரு மகரிஷிக்கும் மீனவப் பெண்ணுக்கும் மகனாய் பிறந்தவர் தான் வியாசர். இதில் இருந்து நாம் அறிய வேண்டிய விஷ்யங்கள்: * ஒரு மீனவ பெண்மணிக்கு பிறந்த வியாசர் தான் புனிதமான வேதத்தை தொகுத்தவர். * மீனவ பெண்ணுக்கு பிறந்தார் என்பதற்காக வியாசரால் தொகுக்கப்பட்ட வேதத்தை யாரும் தீட்டு என்று கூறுவதில்லை. * இதே வேத மந்திரம் தான் கோயிலில் முழங்கிக் கொண்டு இருக்கிறது. மீனவ பெண்ணுக்கு பிறத்த வியாசர் தொகுத்த வேதம் முழங்குவதால், கோவில் தீட்டாகிவட்டது என்று யாரும் கூறுவதில்லை. * ஒரு மகரிஷி, மீனவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அப்படி என்றால், அந்த காலத்தில் வர்ண அடிப்படையில் ஏற்ற தாழ்வு இல்லை என்று தானே அர்த்தம்? அதே சமயம், திருமணத்துக்கு வர்ணம் ஒரு பொருட்டல்ல என்பதும் தெளிவாகும்.
Tuesday
o தேவைப்பட்டால், வேதத்தில் இருந்து மேலும் பல கருத்துக்களை கூற முடியும். இது மட்டுமல்ல, நாயன்மார்களில் மனவர் ஒருவரும் இருந்துள்ளார், கண்ணப்பர் என்ற வேடரும் வருகிறார். ராமாணுஜர், ராகவேந்தர், ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்ற பல மகான்களும் சாதியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
RSS சேவை பற்றி கோட்டீர்கள். RSSயின் மொத்த சேவை பட்டியலையும் இங்கு குறிப்பிட்டால் விடிந்துவிடும் அத்தகைய நீண்ட பட்டியல் இது. இருந்தாலும் பொதுவாக சிலவற்றை கூறுகிறேன். எந்த இடத்தில் இயற்கை சீற்றம் நடந்தாலும், முதல் ஆழாக அங்கு நிற்பது RSS தான். RSSஐ இதற்காக தான் READY FOR SELFLESS SERVICE என்பார்கள். சமீபத்தில் நடந்த தீருப்பூர் மழை வெள்ளத்தில் நிவாரண பணியை முன் நின்று நடத்தியது RSS.
கோட்சே அவர்களுக்கும் RSSகும் சம்பந்தம் இல்லை என்று யாராலும் மறுத்துவிட முடியாது. ஆனால், கோட்சே காந்தியை கொன்ற சமயம் இந்து மகா சபாவில் இருந்து தான் தன் பணியை செய்து வந்தார். ஒரு பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். ஒரே நேரத்தில் இரண்டு இயக்கத்திற்காக எவ்வாறு பணியாற்றியிருக்க முடியும்? ஆர்எஸ்எஸ்க்கும் மகா சபாக்கும் கொள்கைகள் கிட்டதட்ட ஒன்றாக இருந்தாலும், இயக்கம் வேறு வேறு தான். அது மட்டுமல்ல, காந்தி இறந்ததற்கு ஆர்எஸ்எஸ் சார்பில், துக்கம் வரைக்கும் அனுஷ்ட்டிக்கப்பட்டது. என் தனிப்பட்ட கருத்துப்படி, ஆர்எஸ்எஸ் அவ்வாறு செய்திருக்க கூடாது. கோட்சே தூக்கில் போட்டதற்கு தான் துக்கம் அனுஷ்ட்டித்திருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கோபால் கோட்சே அவர்களின் பேட்டியே தெரிவிக்கிறது.
சில வேலைகளுக்கு நடுவில், இரவில் TYPE செய்தது. எழுத்து பிழை கண்டிப்பாக இருக்கும். அதை சரி செய்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
RSS சேவை பற்றி கோட்டீர்கள். RSSயின் மொத்த சேவை பட்டியலையும் இங்கு குறிப்பிட்டால் விடிந்துவிடும் அத்தகைய நீண்ட பட்டியல் இது. இருந்தாலும் பொதுவாக சிலவற்றை கூறுகிறேன். எந்த இடத்தில் இயற்கை சீற்றம் நடந்தாலும், முதல் ஆழாக அங்கு நிற்பது RSS தான். RSSஐ இதற்காக தான் READY FOR SELFLESS SERVICE என்பார்கள். சமீபத்தில் நடந்த தீருப்பூர் மழை வெள்ளத்தில் நிவாரண பணியை முன் நின்று நடத்தியது RSS.
கோட்சே அவர்களுக்கும் RSSகும் சம்பந்தம் இல்லை என்று யாராலும் மறுத்துவிட முடியாது. ஆனால், கோட்சே காந்தியை கொன்ற சமயம் இந்து மகா சபாவில் இருந்து தான் தன் பணியை செய்து வந்தார். ஒரு பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். ஒரே நேரத்தில் இரண்டு இயக்கத்திற்காக எவ்வாறு பணியாற்றியிருக்க முடியும்? ஆர்எஸ்எஸ்க்கும் மகா சபாக்கும் கொள்கைகள் கிட்டதட்ட ஒன்றாக இருந்தாலும், இயக்கம் வேறு வேறு தான். அது மட்டுமல்ல, காந்தி இறந்ததற்கு ஆர்எஸ்எஸ் சார்பில், துக்கம் வரைக்கும் அனுஷ்ட்டிக்கப்பட்டது. என் தனிப்பட்ட கருத்துப்படி, ஆர்எஸ்எஸ் அவ்வாறு செய்திருக்க கூடாது. கோட்சே தூக்கில் போட்டதற்கு தான் துக்கம் அனுஷ்ட்டித்திருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கோபால் கோட்சே அவர்களின் பேட்டியே தெரிவிக்கிறது.
சில வேலைகளுக்கு நடுவில், இரவில் TYPE செய்தது. எழுத்து பிழை கண்டிப்பாக இருக்கும். அதை சரி செய்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
o
o இந்து யார் என்பதற்கான இருவிளக்கங்களில் இருந்து இருதரப்பினரின் பார்வையிலும் ஓர் அதிகாரப் போக்கே தெரிகிறது. ’புண்ணிய பாரத பூமி’ என்பன போன்ற அடைமொழிகளை தவிர்ப்பது நல்லது, மீண்டும் மீண்டும் இந்துத்துவ பாவ புண்ணிய சித்தாந்தங்களிலிருந்து உதிரும் சொற்கள் அவை. தற்போது இந்நாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் இந்தியா..அவ்வளவுதான். கிறுத்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்கள் என்று சொல்வது எத்தகைய ஓர் அநீதி. இந்தியா என்பது பாரத நாடாக இருந்தது என்பதே ஆட்சிமுறைக்கான திரிபு வரலாறு. பாரதம் என்று எப்போது அதற்குப் பெயர் இருந்தது? இந்து மதம் என்பது இம்மண்ணின் மதமாக எப்போது மாறியது? அது என்ன சைவ, வைணவ, பற பரிவுகள் – பற பிரிவுகள் என்பது பார்ப்பனியச் சொல்லாடல் அன்றி வேறென்ன? மதம், உருவ வழிபாடு என்று தோன்றுவதற்கு முன்னர் இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்பது தானே உலகம் முழுமையிலும் இருந்திருக்கிறது. அப்போது தாய்வழிச் சமூகமாகவும், தாய் தெய்வ வழிபாடும் (அதாவது இயற்கையை பிரதி எடுத்தல் – பெண்ணின் உற்பத்தி சக்தி) கூட்டுச் சமூக வாழ்வும், கூட்டுச் சமூக ப்ரார்த்தனையும் தானே இருந்திருக்கிறது. வேதங்களில் உள்ள பாடல்கள் (அவை ஸ்லோகங்கள் அல்ல) இறைவனிடத்து உணவு, செல்வம் ஆகியவற்றை இறஞ்சிக் கேட்கும் பாடலன்றி வேறில்லை. மூன்று வேதங்களாக இருந்தவை எப்போது நான்கு வேதங்களாக மாறியது. வேதப் பாடல்களில் வரும் மிருகங்களின் பெயர்கள் குலகுழுக்களின் குலக்குறி என்றும் வேதத்தை ஓதுவதாக சொல்லிய ஒரு பிரிவினர் (அப்போது அவர்கள் இந்துக்கள் இல்லை, ஆனால் மேய்ச்சல் பொருளாதார பிரிவினர், தந்தை வழி சமூகத்தவர் என்றும் சொல்லலாம்) இந்நிலத்தில் வாழ்ந்த குலக்குறிகளை அழிக்கச் சொல்லியும், அவர்களை விட தன தானியங்கள் நிறைய வேண்டும் என்றும் இறைவனிடத்தில் கெஞ்சும் பாடல்கள் அவை..நச்சரிப்பு பாடல்கள்..(பார்க்க: உலகாயதம்).
o வாழ்வாதார போட்டி, பொருளாதார அமைப்பில் மாற்றம் ஆகியவை மக்களை எப்போதும் இடம் பெயரச் செய்து கொண்டேதான் இருந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் எவருமே இந்தியர்களாக இருக்க முடியாது...எல்லோரும் ஆப்பிரிக்கர்களாக இருக்க வேண்டும் ஏனென்றால் மனித இனம் ஒரே இடத்தில் தோன்றி பின்னர் காலத்தின் மாற்றத்தால் இடம் பெயற நேரிட்டது. ஆரியர் முற்றுகை என்பது கட்டுக்கதை என்ற வாதத்தை உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அப்போதிருந்த சமூக அமைப்பில் வேளான் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஒரு பிரிவினர், மேய்ச்சல் பொருளாதாரத்தில் ஈடுபட்டு அதிலும் வெற்றி காணமுடியாமல், வேளான் பொருளாதாரத்தில், நீர் வளப் பொருளாதாராத்தில் இன்னும் இதர கைவினைத் தொழில்கள்களில் ஈடுபட்டு வந்த சமூகத்தினரை சூரையாடியது வரலாறுண்மை. இது ஏதோ மகாபாரதப் போர் போன்று சில நாட்களில் கத்திச்சண்டைகள் மூலம் நடந்தேரியதன்று...படிப்படியாக பொருளாதார நலன்களை சூரையாடியது. இத்தகவல்களை ரொமிலா தாப்பரின் நூல்களில், இன்னும் இதர மார்க்சிய அறிஞர்களின் நூல்களில, இந்துத்துவம் பேணாத வரலாற்றாசிரியர்களின் நூல்களில் காணலாம்.
o இந்துத்துவவாதிகள் சொல்வதுபோல் இங்கு ஏற்கணவே சாதிய முறை இருந்தது என்பது திரிபு வாதம் அது வர்க்க அடிப்படையில் காணப்படவேண்டிய ஒன்று. நவீன தொழிற்முறைப் பொருளாதாரம் தோன்றுவதற்கு முன்னர் குலக்குழுக்களாக வாழ்ந்த சமூக அமைப்பில் ஒவ்வொரு குலத்தினர் / பரம்பரையினர் ஒரு குறிபிட்ட தொழிலில் ஈடுபட்டுவந்தது ‘தொழிற் திறமை’ அதற்கான மரியாதையோடு நிலவியிறுக்கக்கூடிய ஒன்று. அப்போது ஒரு குறிப்பிட்ட குலத்தினர் / தொழிற்முறையினர் பிறப்பாலேயே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதங்கள் இருக்கவில்லை. அப்போது ஒரு வகையான பொது உடைமைச் சமூகமாகத்தான் இருந்திருக்கிறது. பின்னர் ஜனபதாக்கள் ஆக்கப்படுகின்றன, பின்னர் மன்னராட்சி, நிலப்பிரபுத்துவம், தொழிற்முறைப் பொருளாதாரம். இதற்கிடையில் குலக்குழுக்களிடையே வளங்களின் பொருட்டு போட்டி மனப்பான்மையும், மோதல்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. இம்மோதல்களை எப்படி ஏற்படுத்துவது என்று சொல்லிக்கொடுப்பதுதான் ‘அர்த்த சாஸ்திரம்’ (உலகாயதம்). ஒரு பெண்ணை அனுப்பியாவது ஒற்றுமையாக இருக்கும் குலங்களைப் பிரித்துவிடுவது என்பதுதான் சாணக்கியத் தந்திரம். இச்சூரையாடல்களை செவ்வனே செய்வதற்கான ஒரு உத்தியே வர்கத்தை சாதீயமாக மாற்றிய மநுவாதம். மன்னராட்சி முறையில் ஒரு குறிப்பிட்ட குலமே (சத்ரியக் குலம் என்று சொல்லப்படும் ஒன்று) நிலைத்திருக்க மன்னர்களுக்கு ஓர் அதிகார வரைவு தேவைப்பட்டது, உழைப்பை செலுத்தாமல் யாகங்கள், பூசைகள் செய்து (அதுவும் மன்னரின் நலனுக்காக) பிழைத்து வந்த பிரிவினர் நில மானியங்களைப் பெற்று வாழ்ந்து வந்தது. அந்நிலங்கள் பூர்வக்குடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டவை. உழைக்கும் மக்களின் நிலமது.
o இதற்கு கடுமையான எதிர்புகள் நிலவி வந்த சூழலில், சத்ரிய மன்னரும், மநு என்கிற பார்ப்பணனும் (வேதம் ஓதுபவர்கள்) இணைந்து உருவாகியதே மநு தர்மம். அதுவே பிறப்பின் அடிப்படையில் ஒருவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனும் வாதம். அப்படி அப்பிரிவினர் உயர்ந்தவர் என்று சொல்வதற்காக ப்ரம்மனின் தலையிலிருந்து தோன்றியவர் ப்ராமாணன் என்று உயர் அந்தஸ்த்தை நிறுவியது. சத்திரியர்களின் (மன்னர்கள், காவாலாளிகள், வீரர்கள்) இவர்களின் உதவி, மானியம் பார்பனர்களுக்குத் தேவையாகையால் அவர்களுக்கு ப்ரம்மனின் இதயத்தில் இடம், வணிகர்களின் ஆதரவும் அவர்களுக்குத் தேவை என்பதால் தொடையில் அவர்களுக்கு இடம். ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களுக்கு கீழ் ஓர் அடிமை தேவைப்படுகிறான் எனும் உளவியல் அறிந்து வைத்திருந்த மநு பார்ப்பணன், இதர தொழில் செய்து வந்தவனுக்கு சூத்திரன் எனும் அடிப்படையில் காலில் கருணையோடு இடம் கொடுத்தான். இவர்கள் யாரும் செய்ய விரும்பாத தொழில்கள், ஆனால் சமூக ‘சுத்தத்திற்கு’ மிகவும் அவசியமான தொழிலக்ளை செய்து வந்த பிரிவினரை (பிணம் எரித்தல், கழிவு நீர் சுத்த்கரிப்பு, முடி திருத்துதல், சலைவை தொழில் என்று சுத்தம் சம்பந்தமான தொழில்களைச் செய்தவர்களை) பஞ்சமர் என்று சொல்லி புண்ணியவான் ப்ரம்மனின் உடலில் அவர்களுக்கு எந்த இடமும் கொடுக்காமல், அவர்களை ஈனர்களாக நிறுவினான்.
// சூத்திர வர்ணத்தவரிடம் தனிப்பட்ட எந்த விஷேச குணமும் இருக்காது. பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் உதவி புரிவது இவர்கள் தொழில்.//
நண்பரே மிகவும் வருத்தமளிக்ககூடிய, மனிதத்தன்மையற்ற சொற்கள் இவை..விஷேச குணம் என்று எதுவும் இருக்கத்தேவையேயில்லை. ’விஷேச குணம், தூய குணம், நல்லது, கெட்டது’ it’s a relative term. இக்குணங்களை வரையருக்கும் தகுதியும், உரிமையும் எப்படி பார்ப்பனக் குலத்திற்கு மட்டும் கிட்டியது, அவர்களின் ‘தூய ஆத்மாவைப்’ பரிசோதித்து பார்த்து எவர் சான்றிதழ் வழங்கினர்.
//பிரமணன் என்பவனிடம் அடக்கம், தவம், பொறுமை, நூலறிவு, தெய்வபக்தி போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும்.// - மனிதனாக பிறந்தவருக்கு மேற்சொன்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று நிறுவியது யார்? அந்த அதிகாரம் அவர்களுக்கு எப்படி கிட்டியது? எதற்காக தெய்வபக்தி கொண்டவன் மதிக்கப்படவேண்டும்? தெய்வபக்தி கொண்ட எவரும் ஊழல் செய்வதில்லையா? வன்புணர்ச்சியில் ஈடுபடுவதில்லையா? கோவில்களில் நடப்பது என்ன? பத்மநாப சாமி கோவிலில் நடப்பது என்ன? மேன்மை குணம் கொண்ட ப்ராமணர்கள் (அவர்களோடு கைகோர்த்த ஆதிக்க சாதியினரில் சிலர்) தானே அத்தகைய கொள்ளைகளில் ஈடுபடுகின்ற்னர்.
வர்ணம் என்பது சமஸ்கிருத பெயர், சாதி என்பது தமிழ்ப் பெயர் அவ்வளவுதான், சாதியை நிறுவியது பார்ப்பனியமே....தொழில்முறை பிரிவுகளுக்கான அடையாளப் பெயர்களை சாதீயப் பெயர்களாக மாற்றியது அவர்களின் கைங்கரியமே. //யார் வேண்டுமானாலும் ப்ராமணன் ஆகலாம் உண்மைதான்// அதையும் ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார், ஆனால் அதற்கு நிறைய பணம் கொடுக்க வேண்டும் அப்படித்தான் சில சத்ரிய மன்னர்கள் பார்ப்பன குல அரசர்களானார்கள், சில வணிகர்கள் அத்தகைய தகுதிகளை, சான்றிதழ்களைப் பெற்றனர். பார்ப்பனிய பகுப்பான ‘பற, பள்ள, பஞ்சம, புலைய, வண்ணான்’ சாதிகள் அச்சான்றிதழைப் பெற முடியாது ஏன் தெரியுமா, அவர்கள் செய்து வந்த ‘சுத்திகரிக்கும்’ தொழிலை இப்பார்ப்பன சமுதாயம் செய்யாது, அப்படி அவர்கள் சாதி மாறிவிட்டால், அடிமைகளாக எவர் கிடைப்பர்? இதையெல்லாம் நியாயப்படுத்துவதே ‘இந்துத்துவம்’, அதை அம்மக்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில் செய்வதற்கே பாவ, புண்ணிய கதையாடல்கள், வேதம், உபநிடதம், ஆகமம், சுக்தம், சாங்கியம், அத்வைதம், சாக்தம், இராமாயணம், மகாபாரதம் etc., etc., அசுரர் என்று இந்துதுவம் குறிப்பிடுவது பூர்வக்குடிகளை. this is called a deconstruction study.. இத்தகைய கட்டுடைப்புகள் அவசியம். நீங்கள் உங்கள் கடவுளரையும், மதத்தையும், புராணங்களையும், இதிகாசங்களையும் நம்புவது போல் நாங்கள் ஏன் அதை மறுக்கக்கூடாது.
o //க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் உதவி புரிவது இவர்கள் தொழில். // - இதை சொல்ல ப்ராமணன் யார்/ மநு யார்/ வேதம் ஓர் மனிதனால் தானே தொகுக்கப்பட்டது, உங்கள் விளக்கத்தின் படி வியாசர் (* ஒரு மீனவ பெண்மணிக்கு பிறந்த வியாசர் தான் புனிதமான வேதத்தை தொகுத்தவர். * மீனவ பெண்ணுக்கு பிறந்தார் என்பதற்காக வியாசரால் தொகுக்கப்பட்ட வேதத்தை யாரும் தீட்டு என்று கூறுவதில்லை. *). வியாசர் ’இருபிறப்பாளன்’ என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா. வியாசர் அப்படி கலப்பில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த சமுதாயமும் அவரின் போதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா...வியாசர் மட்டுமல்ல தோழரே ‘மாருதி’ அதாவது அனுமான் கூட ஓர் பழங்குடி பெண்ணுக்கும் (அஞ்சனை) ஓர் பார்ப்பன அரசனான மாருத்துக்கும் பிறந்தவர்தான், அதனால் தான் அவர் மாருதி அந்த இரகசியம் தெரிந்தால் அவரைக் கடவுள் ஆக்கமுடியாது என்றுதான் அவர் சூரியனுக்குப் பிறந்தார் என்று கதை கட்டிவிட்டார்கள். (சூரியனின் கதிர்கள் எப்படி ஒரு பிள்ளைப் பேற்றக் கொடுக்கும் என்ற குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா, குறியீடு என்று சொல்லி மழுப்ப வேண்டாம்) இராமன் யார், அகத்தியன், வருணன், நாரதர் இன்னும் இதர ரிஷிகள் யார் எனும் வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய புத்தகம் என்னிடமும் இருக்கிறது, ஆனால் அது சொல்லும் கதை வேறாக இருக்கிறது, இதில் முரண் நகை என்னவென்றால் அக்கதைகளும் ஓர் பார்ப்பனக் குலத்தை சேர்ந்தவர் எழுதியிருப்பதுதான்.
யாரும் ப்ராமணன் ஆகலாம் என்று ஏதோ ப்ராமணன் என்பதை உயர் தகுதியாக கருதும் பிரிவினைவாத அரசியல் எங்களுக்கு உதவாது நண்பரே…ப்ராமணன் உயர்வானவன் என்றால் பாப்பாத்தி…..??? அவளும் சூத்திரனுக்கு சமம் என்கிறார் மநு…இழிபிறப்பு…சூத்திரர்களைப்போல் ப்ராமணர்களுக்கு சேவை செய்து, அடுத்த பிறப்பில் ‘ஆணாக’ பிறந்து சொர்கத்தை அடையலாம் என்கிறார்…என்னே சமத்துவம்…என்னே கருணை…
o //தேவைப்பட்டால், வேதத்தில் இருந்து மேலும் பல கருத்துக்களை கூற முடியும். இது மட்டுமல்ல, நாயன்மார்களில் மனவர் ஒருவரும் இருந்துள்ளார், கண்ணப்பர் என்ற வேடரும் வருகிறார். ராமாணுஜர், ராகவேந்தர், ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்ற பல மகான்களும் சாதியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. //
o
o நீங்கள் சொல்லியுள்ளவர்களில் ராமானுஜம் சற்று விதிவிலக்கு, ஆனால் மேற்சொன்ன அணைவரும் இந்துத்துவத்தின் ப்ரம்மம், ஆண்மா போன்ற கருத்துமுதல்வாதத்தை முன்வைத்தவர்களே. அன்பே சிவம் என்பதில் உள்ள அரசியல் மிகக் கேவலமானது….ஏன் அன்பு சிவமாக இருக்க வேண்டும்? ஏன் வைணவர்களின் கடுவுளான விஷ்னுவமாக இருக்கக்கூடாது? ஏன் அது ஒரு தாய்க் கடவுளின் பெயராக இருக்கக்கூடாது? சைவக் கடவுளான சிவமாகத் தான் இருக்க வேண்டுமோ? ஒவ்வொரு தத்துவமும், கடவுளர் கதைகளும், அவதாரங்களும் சமூக எதிர்ப்பின் உக்கிரத்திலிருந்து தோற்றுவிக்கபப்ட்டவை, பென் கடவுள் வெறும் பெண்டாட்டியாக, சாபங்களை பெற்று கணவனிடம் சரணடைபவளாக ஒரு இடத்தில் இருப்பாள், மற்றொரு இடத்தில் அவள் மஹிஷாசுர மர்தினியாக மாற்றப்படுவாள், பெண்களை ஏமாற்ற இது ஒரு யுக்தி…சரபேஷ்வரர் என்று ஓர் கடவுள் இருக்கிறார்…அது வைணவ நரசிம்ம அவதாரத்தை அவமதிக்கும் விதமாக சைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கடவுள்…நரசிம்மரை தணிய வைக்க சிவனன்றி வேறில்லை என்று சொல்லும் கதை…அதற்கு இறக்கை கொடுத்து உதவுவது ப்ரத்யங்கரா தேவி எனும் பெண் கடவுள்..தேவி யார்? சிவனின் மனைவி? ஏன்
o லக்ஷ்மிக்கு அத்தகைய வீரியம் இல்லை?
o
- ஒவ்வொன்றாக கட்டுடைக்கலாம் நண்பரே…போய்க்கொண்டேயிருக்கும்..
எப்படி கடவுள் புனைவுகளில் ப்ராமணர்கள், அவர்களுக்கு இரையான ஆதிக்க சாதியினர் சில சலுகைகளை வழங்கினார்களோ, உட்செறித்திக்கொண்டார்களோ, ‘உதவிகள்’ செய்தார்களோ அதே போன்றதொரு முகமூடிதான் RSS செய்யும் ‘சேவை’கள். அப்படி அவர்கள் சில நல்லதுகள் செய்தாலும் விமர்சனத்திற்க்கப்பார்பட்டவர் எவறும் இருக்க முடியாது...எல்லாம் சமூக மேம்பாட்டிற்குத்தானே???!!
o
o உங்கள் வாதப்படி இந்து மதம் ப்ராமணர்களின் மதமல்ல…மிகச் சரி..ஆனால் அவர்களால் வடிவமைக்கபப்ட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற கூறுகளை கொண்ட, கேள்வியின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்லும் ஒரு மதம்…இது இந்து மதம் ஒன்றிற்கான குணம் மட்டுமன்று, ஒவ்வொரு ஆணாதிக்க மதமும் இதைத்தான் செய்கிறது…கிறத்தவர்களில் எத்தனை பிரிவு – ஒவ்வொருவரும் மற்ற பிரிவினிரை இகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இஸ்லாத்தில் நடக்கும் சன்னி, ஷியா பிரிவு சண்டைகள், இந்தியச் சூழலில் அம்மதங்களிலும் இருக்கும் மநுவாதம் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அன்பை, சுய ஒழுக்கத்தை, அறத்தை போதிக்கும் பௌத்தம் எதனால் இம்மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டது, பின்னர் ஏன் அவர் பத்து அவதாரங்களில் ஒருவராக்கப்பட்டார். தயவு செய்து அவர் இம்மண்ணின் இந்துத்துவ தத்துவங்களிலிருந்துதான் எல்லாவற்றையும் பேசினார் என்று சொல்லி புத்தரை அவமதிக்காதீர்கள். எதனால் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்? எதனால் ‘இப்புண்ணிய்’ பூமியில் இருப்பவர்கள் மதம் மாறினார்கள்? ’இந்து’ன்னு வெள்ளைக்காரன் பேர் வச்சானோ நாம தப்பிச்சோம் என்று பெரியவா சொன்னதைப் படித்திருக்கிறீர்களா…அந்த காஞ்சி மடப் பெரியவாளை, அம்மடத்தவரை மற்ற அதீனங்கள் கிட்ட சேர்ப்பதில்லை எனும் உட்பூசல் உங்களுக்குத் தெரியுமா…(பார்க்க: இந்து மதம் எங்கே போகிறது, மற்றும் நா.வானமாலை அவர்களின் மதம், கருத்தியல் பற்றியக் கட்டுரைகள்)
மதத்தின் செய்லபாடு என்ன? ஆண்மீகம் என்ற பெயரில் வெவ்வேறு கருத்தியல்கள் இறைவன் என்றொருவனை போதித்து அப்பெயரின் கீழ்த்தரமான மத அரசியலையும், சுரண்டல்களையும், அதிகாரத்தை ஏவுவதையும் தவிர வேறெதற்குப் பயன்படுகிறது. பாவம் பலகீனமானவர்களுக்குப் பற்றிக் கொள்ள ஏதாவது தேவைப்படுகிறது, தன்னம்பிக்கையற்றவர்களாய் மனிதர்களை மாற்றுவதும் அவர்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தான் மதங்கள் செய்கின்றன..நம் சூழலில் அது இந்துத்துவம் எனும் பெயரில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வடிவங்களில் (customized for each person) கோப்பையில் ஊற்றிக் கொடுக்கப்படுகிறது…பருகுபவருக்கு ஒரு போதை கிடைக்கிறது, (மீண்டும் நாம் கார்ல் மார்க்சிடம் தான் வரவேண்டியுள்ளது – மதம் ஒரு அபினி..)ஆனால் விளைவுகள் தெரிவதில்லை, அதை தெரிந்து கொள்ள முனைவதுமில்லை…அப்படி முனைந்து முன்னெடுப்பவர்களை வன்முறையால் ஒடுக்கும் மிரட்டல்கள்…என்ன ஒரு ஜனநாயகப் பண்பு மதவாதிகளிடம்…
கடவுள் மறுப்பை நாங்கள் மக்களின் நலனை முன் வைத்துப் பேசுகிறோம், மதவாதமானது ‘நாட்டு நலன்’ என்கிற பெயரில் நிலத்தை தக்கவைத்துக்கொள்ளும் நலனை பேசுகிறது…எண்ணிக்கை குறைந்துபோனால், ‘மவுசு’ குறைந்து போனால் மற்ற மதத்தின் முன் அவமானம் எனும் ஈகோவே அதற்கு அடிநாதம்…மதவாதங்களுக்குள் நடக்கும் போட்டிக்கு அப்பாவி மக்கள் பலியாகின்றனர்.
சக மாநில மனிதர்களுக்கு தண்ணீர் தரமறுக்கும் நிலையில் ‘தேசம்’, ‘நாட்டு பற்று’ எனும் கோஷங்கள் யாருக்காக? இவ்வளங்களை சுமூகமாகப் பிரித்துக் கொடுக்க கடவுள் வர மறுப்பது ஏன்? புண்ணியம் செய்தவர் ஒருவர் கூட இல்லையா இப்பூமியில்? எல்லோரும் பாவிகள் என்றால் ’பாவத்தை’ செய்விப்பது யார்? புண்ணியத்திற்கு மகுடம் சூடிக்கொள்ளும் அவரே பாவங்களுக்கும் பொறுப்பானவர் (குறைந்த பட்சம் யேசுவாது தான் பாவிகளுக்காக தோன்றியவர் என்றார், அவரும் கடவுளாக்கப்பட்டு, அதுவும் ஓர் மதமாகி நிற்கிறது) படைப்பை விருப்பமாக செய்யும் கடவுள் தான் வணங்கப்படவேண்டும் என்று நிணைப்பது கடவுள்தன்மையல்ல அது சுயமோகம் (Narcism)…அப்படி அவர் கேட்கவிலை..ஒழுக்க போதனைகளுக்காக மனிதர்கள் செய்த ஏற்பாடு என்றால் அம்மனிதர்களின் கதையாடல்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ, அடிபணிய வேண்டும் என்றோ அவசியம் இல்லை…
ஒழுக்கத்தை போதிக்கும் போதனைகள் எங்களிடமும் இருக்கிறது..அது சமத்துவ சிந்தனை… நீங்களும் மக்கள் நலனை, நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் செயல்படுகிறீர்கள் என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது போல் எங்களது நாட்டு நலனுக்கான வழிமுறைகளையும் எங்கள் வழியிலேயே விட்டுவிடலாமே எதற்காக எங்களை ஒடுக்க வேண்டும். மதவாதிகளின் பின்னால் தான் நாங்கள் செயல்படவேண்டும் என்ற வற்புறுத்தல். உங்களை பக்திமானாக, ஆண்மீகவாதியாக படைத்து (உங்களையென்றால் மதவாதிகளை) மக்கள் பணியாற்ற கடவுள் தான் அனுப்பிவைத்தார் என்றால், கடவுளை நம்பும் நீங்கள் எங்களையும் அப்பணிக்காக அவர்தான் மாற்று வழிமுறைகளை சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார் என்று ஏற்றுக்கொள்ளலாமே. அதுதான் கடினம், கடவுள்களே அரக்கர்களை சம்ஹாரம் செய்வதாக கதைப் புனைந்தவர்களுக்கு மிக மிக கடினம்…அரக்கர்கள் என்பவர் மன்னராட்சி, ப்ராமண, அதிகார அமைப்பிற்கு எதிரிகள் என்பதை நாங்கள் கட்டுடைத்து கண்டுவிட்டோம்..கடவுளர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபடவே மாட்டர்கள் போலும். அவர்களே பாவம் செய்விக்க எங்களைப் பகடைகளாக பயன்படுத்துவர், பின்னர் அவரின் வீர் சாகசங்களுக்காக எங்களை சம்ஹாரம் செய்வர். இக்கொலைகளை நியாயப்படுத்தும் மதச் சட்டம், பட்டினியால், சமூக அவலங்களால் உயிரை மாய்த்துக் கொள்வதைக் குற்றம் என்கிறது, பிள்ளைகளைக் கொன்று அவலங்களிலிருந்து விடுதலைப் பெற நிணைக்கும் தாயைக் குற்றவாளி என்கிறது…எல்லாவற்றையும் கடவுள் தான் செய்வாரா…அவர் கையில் பொம்மலாட்ட பொம்மைகளாக இருப்பதை விட, சுயமரியாதையோடு எதிர்த்து நின்று மடிவது மேல்…
எங்களைப் போன்ற அரக்கர்கள் இருந்தால் தானே கடவுளுக்கு வேலை இருக்கிறது. உங்கள் புராணங்களில் இருப்பது போல் அவரே நேரில் வந்து சம்ஹாரம் செய்யட்டுமே, இடையில் ‘தரகர்கள்’ எதற்கு?
தேசியம் என்றப் பெயரில் நாங்கள் பிரிவினைவாதம் பேசுகிறோம் என்கிறீர்கள், நாட்டைத் துண்டாடுகிறோம் என்கிறீர்கள். வெள்ளைக்காரன் வந்து ஒருங்கிணைக்கும் வரை தனித்தனி சியங்களாகத்தானே இருந்தது, நாங்கள் அம்முறைக்கே திரும்பவேண்டும் என்கிறோ. ஒன்றாக இருப்பதால் மட்டும் அண்டை மாநிலங்கள் தண்ணீர் தந்துவிடப்போகிறதா, வளங்களை விட்டுத் தரபோகிறதா…ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன் வளம், தன் நலன் பிரதானம்..ஆட்சியில் இருப்பவர்களுக்கு இறையாண்மை என்று எதுவும் கிடையாதா? கடவுள் எனும் அதிகார மையத்தை ஏற்றுக்கொள்ளும் எவராலும், சமூக அநீதிகளை எதிர்ப்பதில் உண்மையாக இருக்க முடியாது, ஒரு கட்டத்தில் அவர்கள் அக்கடவுளர்களின் மதங்களுக்கு, அதன் பிரிவினைவாத கருத்துக்களுக்கு சார்ப்பாக சரியவே நேரும்…அப்போது மக்கள் இரண்டாம் பட்சம் ஆகிவிடுவர்.
எங்களால் அது முடியாது….
உங்கள் பங்கெடுப்புக்கும், பொறுமைக்கும் நன்றி…என்னிடம் உரையாடிப் பயனில்லை என்று நீங்கள் கணித்திருந்தால் உரையாடலை இத்தோடு முடித்துக்கொள்ளலாம்…
No comments:
Post a Comment