Jan 12, 2011

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்



குழந்தையின் குரலொன்று கேட்கிறது சில இரவுகளில்
இழப்பின் சாயலைக் கொண்டிருக்கிறது அவ்விரவுகள்
உடுத்தி வருகிறது பிரசவக் கோடுகளை

ஓலத்தின் இசைக் குறிப்பு
தொலைந்து விட்டது
அயர்சியுற்ற கைகளை பார்வைக்கு வைத்திருக்கிறேன்

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்
தொலைதூரத்தில் புதைந்துபோன கைகளை
மீட்பதற்கில்லை

தும்பிகள் கூட்டமாய் பறந்து போகும் காட்டில்
தொப்புள் கொடியின் வாடை பிடித்து
தப்பித்து செல்கையில்
வனமெங்கும்
அவளது முகம்
அவளது சிரிப்பு
அவளது மழலைச் சொற்கள்

பேய்கள் மூளை நரம்புகளை பங்கிட்டு உண்கிறது
ஆழியின் பெருத்த அலைகள்
முட்டிச் செல்கிறது எலும்புகளை

மரணத்தை பற்றிய அனுபவம் இருக்கவில்ல
பிணங்களின் அறிமுகம் உண்டு


3 comments:

  1. "உடுத்தி வருகிறது பிரசவக் கோடுகளை"

    "கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்
    தொலைதூரத்தில் புதைந்துபோன கைகளை
    மீட்பதற்கில்லை"

    -கவினயமிகும் வரிகள் கொற்றவை, மிகவும் ரசித்தேன். வலி மிகுந்த கவிதை

    ReplyDelete
  2. அகநாழிகையில் கட்டுரை வந்தமைக்குப் பாராட்டுக்கள் கொற்றவை.

    ReplyDelete