Jan 3, 2011

துரோகங்களின் பட்டியல் - பாகம் -1

பார்ப்பனிய துரோகங்கள்:



  • இந்தியச் சமூகத்தில் (சிந்து சமவெளி நாகரீகம் தொட்டு) பார்ப்பனியம் மனித குலத்திற்கு செய்திருக்கும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை என்று மீண்டும் மீண்டும் வரலாற்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
  • வேதம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றைத் தோற்றுவித்து மனிதருக்குள் பிறப்பால் பிரிவினைகளை வகுத்து இன்று ஜாதி எனும் புதைச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்த மனுஸ்மிருதி, கூட்டிக்கொடுத்து குலக்குழு மக்கள் தலைவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு அரச ராஜ்ஜியத்தை விரிவு படுத்தும் ராஜ தந்திரத்தை வகுத்துக்கொடுத்த கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், அவர்கள் வழி வந்த பார்பனிய ஆசாரியார்களின் தத்துவங்கள் முதல் இன்றைய பாடப் புத்தகங்கள் வரை பார்பனியம் முன் வைக்கும் தத்துவம், வரலாறு யாவும் கற்றுத்தருவது பிரிவினைகளை, குலத்தைக் கெடுத்து அதிகாரத்தை வளைக்கும் தந்திரங்களை.
  • இயற்கையின் விஞ்ஞான பூர்வ புரிதலோடு தொல்பழங்காலச் சமூகத்தில் நிலவிய உலகாயதம் என்ற பொருள்முதல்வாத தத்துவத்தை அழித்து, பெருங்கருணையால் சக மனிதனை மனிதனாய் அரவணைக்க போதிக்கும் பௌத்த, சமண நெறிகளை பழித்து, திரித்து, ஒழித்துக்கட்டி, இயற்கையை வெல்ல முடியும் என்று உன்மையற்ற கருத்துமுதல்வாதக் கொள்கைகளைப் பல்வேறு தத்துவங்களின் பெயரால் மனித மனங்களில் விஷத்தை ஊற்றியது.
  • இயற்கையைப் போற்றி அதனோடு ஒன்றி வாழ்ந்த மக்களின் சடங்குகளை மூடநம்பிக்கைகளாக கேலி செய்து இயற்கையைக் கட்டுக்குள் கொண்டுவருவது அல்லது அதை வெற்றிக்கொள்வதற்கான சூத்திரம் என்று சொல்லி புரியாத சமஸ்க்ருத மொழிகளில் மந்திரங்களைக் கூறி யாகங்களை வளர்த்து மக்களை இயற்கைக்கு எதிரிகளாய், இயற்கையைக் கண்டு அச்சுறும் அறிவிலிகளாய், இயற்கையை வெல்ல முடியும் என்று பேராசைகாரர்களாய் (ஜோதிடம், பரிகாரம், ராசி கற்கள், எண் கணிதம் போன்றவை) மக்களை முழுக்க முழுக்க மதியற்றவர்களாய் ஆட்டிவைத்துக்கொண்டிருப்பது.
  • தொல்பழங்காலக் கலைகளை, பிந்தைய நாட்டுப்புறக் கலைகளை இழிவு படுத்தி அதிலும் வர்ண பேதங்களைப் புகுத்தி பார்ப்பனியக் (செவ்வியல் என்ற பெயரில்) கலைகளை மொத்த இந்தியாவின் பொது அடையாளமாக முன்னிறுத்துவது.
  • இயற்கையின் இயங்கியல் காரணங்களை நிராகரித்து கடவுள் என்ற ஒரு புனைவைத் தோற்றுவித்து, கடவுளின் நேரடி ஆசீர்வாதம் பெற்றவர்களாய் அவர்களை சித்தரித்துக்கொண்டு வேதம், உபநிடதம், ஸ்மிருதி, புராணம், என அனைத்தையும் தமிழ் இலக்கியம் முதற்கொண்டு அனைத்திலும் புகுத்தியதோடு, எல்லாவற்றையும் பார்ப்பனக் கடவுளின் பெயரால் இயற்றி இல்லாத ஒருவருக்காக அடித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியது.
  • கடவுளின் தரகர்களாக இன்று வரை தங்களை முன்னிறுத்தி பொருளாதார நிலையில் காலம் காலமாக ஒரு நிரந்தர உத்தரவாதத்தை அவர்களுக்கு சாதகமாக உருவாக்கி மக்களை பகுத்தறிவற்றவர்களாக கையாள்வது.
  • சமத்துவ மடப் பள்ளிகளாய் இருந்த பௌத்த, சமணக் கோவில்களை அழித்தது.
  • பாவம், புண்ணியம் என்ற கற்பனாவாத கதையாடல்கள் மூலம் அரசர்களை ஒருபுறம் அச்சுறுத்தி அதை கழிக்க யாகங்கள் வளர்த்து அரசர்களை தங்கள் பிடிக்குள் வைத்து இருந்து பல்வேறு மத அரசியல்களை நடத்தியது. (அதன் தொடர்ச்சியாக இன்றுவரை மக்களையும் ஏமாற்றி வருவது.)
  • மத அதிகார நிறுவனங்களின் அடையாளமான கோவில்களை பிரம்மாண்ட வடிவில் (தங்களுக்குள் இருந்த சைவ வைணவ போட்டிகளுக்கும் ஆதரவு சின்னங்களாய்) கட்டவைத்து, அதன் அருகிலேயே நிலங்களைப் தானமாக (பிச்சையாக) பெற்று அக்கிரஹாரம் என்ற பெயரில் அவர்கள் குல நலன்களை நன்கு நிறுவிக்கொண்டது.
  • அப்படித் தானமாகப் பெற்ற நிலங்களை ரத்து செய்து, வைதீக பாப்பனியத்திற்கு சவாலக அமைந்த களப்பிரர்களை தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாய் சித்தரித்து அவர்களின் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்று இப்போது வரை வரலாற்றிலும், பாடப்புத்தகங்களிலும் பதிவது.
  • சொல்லப்போனால் களப்பிரர்கள் காலம்தான் தமிழுக்குப் பொற்காலமாக இருக்கிறது, அவர்கள் காலத்தில்தான் பல இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருக்கிறது. புதிய தமிழ் பாக்கள், விருத்தங்கள் அறிமுகமாகின்றன. கவிதை குறித்த புதியக் கோட்பாடுகள் தோன்றுகின்றன. வேங்கட நாட்டை ஆண்ட கள்வர் பாரம்பரியத்தில் தோன்றியவர்களே களப்பிரர்கள் என கூறப்படுகிறது.  தமிழ் எழுத்து பிரம்மியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது இவர்கள் காலத்தில்தான்.
  • தர்மகீர்த்தி போன்ற பல மொழிகளில் நூற்கள் எழுதிய ப்கழ்பூத்த அறிஞர்களில் பலர் தமிழர்கள் என்பதும், இவர்களில் பலர் களப்பிரர் காலத்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
  • சிதறிக்கிடந்த செய்யுட்கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றதும், சிலப்பதிகாரம் போன்ற பெருங்காப்பியங்களும், பதிணென் கீழ்கணக்கு நூல்களான அறநூல்கள் இயற்றப்பட்டதும் தொகுக்கப்பட்டதும் இந்தக் காலக் கட்டத்தில்தான்.  பள்ளிக்கூடங்கள் பல தொடங்கப்பெற்றுச் சிறுவர்களுக்கு வர்ணமுறை பாராது முறையான எழுத்தறிவு புகட்டப்பெற்றது களப்பிரர்கள் காலத்தில்தான்.
  • இக்காலத்தில் தமிழ்நாட்டில் போர்கள் பற்றிய செய்திகள் மிகவும் குறைந்திருக்கின்றன. (அதனால் தான் பார்ப்பனர்களுக்கு இது இருண்டக் காலம், பிழைப்பு நடக்கவில்லையே). கி.பி. 3 - 6
  • மூவேந்தர்களுக்குள் இருந்த அரசியல் போட்டிகளின் காரணமாக கி.பி. 1311இல் மாலிக்காபூரைத் தமிழ் நாட்டிற்குள் அழைத்து வந்தது சுந்தர பாண்டியன்.  இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் அசோகர் பேரரசு, குப்தர் பேரரசு, ஔரங்கசீப் பேரரசு என்று இந்திய வரலாற்றில் 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த எந்த அரசின் ஆதிக்கத்திலும் தமிழக நிலப்பகுதி ஆட்பட்டிருக்காது.  இத்தகைய வாய்ப்பைத் தமிழ் நாடு பெற்றதற்குக் காரணம் Political Geography என்று சொல்லக்கூடிய நிலவியலே காரணம். இத்தகைய வாய்ப்பைப் பெற்ற தமிழ் நாட்டை இசுலாமியர்கள் தாக்கிச் சீரழித்தனர் என்று கூறுவது.
  • மருது பாண்டிய சகோதரர்களுக்கு பல உதவிகள் செய்த ஹைதர் அலி சுல்தான் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், இசுலாமியர்களை இந்துக்களுக்கு எதிரிகளாய் நிறுத்தி இந்துத்துவ வெறியை வளர்த்து வருவது.
  • வைதீக அரசியல் செல்லுபடியாகாத நெருக்கடியில், மொழி மூலம் அரசியல் நடத்த தமிழுக்கு தெய்வீகத் தன்மையைப் புகுத்தி சைவத் தமிழ், வைணவத் தமிழ், இசைத் தமிழ், தெய்வீகத் தமிழ் என்று பக்தி இலக்கியம், பக்தி இசை, மேன்மை, தெய்வீகம் என்ற பார்ப்பனியப் புனிதங்களை மொழிமேல் திணித்தது. (ஆரிய மரபை தமிழ் மரபாக்கும் அரசியல்). அதுவரை நற்றமிழ், தண்டமிழ், வண்தமிழ் என்ற அடைமொழிகள்தான் இருந்திருக்கிறது
  • சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களில் பார்ப்பனிய பங்களிப்பு, அவர்களின் வெற்றிகள், பார்ப்பனியத் தலைவர்களைத் தூக்கிப் பிடித்தல், ஒடுக்கப்பட்ட மக்களின் பங்களிப்பை மறைத்தல், ஒரு தலித்திற்கு உதவி செய்த ஆங்கிலேயரைக் கொன்ற பார்ப்பனிய (இந்துத்துவவாதியான ) வாஞ்சிநாதனை வீரனாக சித்தரித்தல், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இந்த்துத்துவவாதியான சாவர்க்கரால் தூண்டப்பட்டவன் என்பது போன்ற துரோகச்செயல்களை வரலாறாக பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்வது.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து (மநு காலம் தொட்டு) அவர்களை அடிமைகளாகவே வைத்திருந்தது..பெரும் போராட்டங்கள் நடத்தி தற்போது அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் கூட நுழைவுத்தேர்வு ரத்திற்கு எதிராக உயர் சாதி இந்துக்கள் (பார்பனர்களால் தானே அவர்கள் உயர் சாதி ஆனார்கள்) குரல் எழுப்புவது. 

பட்டியல் இன்னும் இருக்கிறது...தொடரும்...அதன் தொடர்ச்சியாக பெண் இனத்திற்கு இவர்கள் செய்த துரோகங்களின் பட்டியல் வளரும்......

பார்ப்பனியமும், முதலாளித்துவமும் செய்யும் ஒடுக்குமுறைகளை விமர்சிக்காமல், அவ்வரலாற்றைப் பேசாமல், அதிலிருந்து விடுபடும் வழிகளை மட்டும் பேசுவது பாழடைந்த கட்டிடத்தை மேல்வாரியாக ஒட்டு வேலை செய்து காப்பாற்றுவது போன்றதாகும். ஒடுக்குமுறைகளுக்கெதிரான எழுத்துக்களிலும், பெண்ணிய எழுத்துக்களிலும் இவற்றை குறிப்பிடுவது தவிர்க்கவியலாதது..
                                         .........தொடரும்.

7 comments:

  1. இஸ்லாமியருக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தவித பகைமை இருந்ததே இல்லை.. தமிழ்நாடு, கேரளம் ஆகிய தமிழகம் எந்தவொரு வடநாட்டு ஆளுகைக்கும் உட்படாமல் பல ஆண்டு காலம் இருந்து வந்தது. தமிழ்நாட்டை வெற்றிக் கண்ட களப்பிரர்களும், விஜயநகரத்தாரும், வந்தன் பின்னே தமிழகத்தில் வைதிக சமயங்கள் புகுந்தன். இருப்பினும் அவர்களும் தமிழ் மொழியாளர்களாகவே மாறினார்கள். ஆங்கிலேயர்களால் மட்டுமே தமிழ்நாட்டை வடநாட்டோடு இணைத்தனர். இருந்தும் தமிழகம் தனித்தன்மையைப் பாதுக்காக்க போராடி வருகிறது

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு நன்றி அங்கிதா..விஜயநகரத்தார் பற்றிய உங்கள் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியது..ஆனால் களப்பிரர்கள் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் என்பது சில பார்பனிய வரலாற்றாசிரியர்கள் கூறுவது.

    மயிலை திரு. சீனி வேங்கடசாமி அவர்களின் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், மற்றும் பொ. வேல்சாமி அவர்களின் கோயில்-நிலம்-சாதி, பொற்காலங்களும் இருண்ட காலங்களும் ஆகிய புத்தகங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் வைதீக சமயத்திற்கு எதிராக செயல்பட்டதால் தான் அவர்களது ஆட்சி இருண்ட காலம் என்று சித்தரிக்கப்படுகிறது.

    //இருந்தும் தமிழகம் தனித்தன்மையைப் பாதுக்காக்க போராடி வருகிறது// - இது அவசியம், ஆனால் தமிழில் பார்ப்பனியம் புகுத்தியவற்றை நீக்கிவிட்டு - நன்றி.

    ReplyDelete
  3. களப்பிரர்கள் காலம் பற்றிய எழுதி தமிழ்மணம் விருது பெற்ற இக்கட்டுரையில் பல கருத்துகள் தங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறோம்.படியுங்கள்,பரப்புங்கள்.நன்றி
    http://suraavali.blogspot.com/2010/08/iii-3-6.html

    ReplyDelete
  4. படித்தேன். நன்றி.

    ReplyDelete
  5. A thought provoking post. However, have a question for you...while saying "கடவுள் என்ற ஒரு புனைவைத் தோற்றுவித்து" why would you have a sculpture from a temple and that too a depiction of the same God as your profile picture and call yourself Kotravai? The picture you have is the depiction of her with her ` birth ' defect which is supposed to have vanished when she saw her chosen one - Shiva??

    rgds

    ReplyDelete
  6. I look at sculptures from a different Perspective unlike the Brahminical Depiction & the mythology that surrounds it. For me she is a women with 3 breasts which I consider as a metaphor of "Feminine Power". I also use Kali as profile picture..again Kali has a different representation. She is the metaphor of Darkness, the power, the ferociousness of Darkness unlike the dancer on Brahminical Male chauvinistic representation Shiva...Sculptures were locked into temple for religious reasons, but I seem them beyond that...I have named myself Kotravai to Project that I could be furious when needed..

    ReplyDelete
  7. பாமியானில் இருந்த புத்தரின் சிலைகளை தகர்த்தது தலிபான். நாளாந்தாவில் இருந்து நூலகம் அழியக்காரணம் இஸ்லாமிய படையெடுப்பு.இன்றும் பர்மாவில்,தாய்லாந்தில் பெளத்தர்களுக்கும்,
    இஸ்லாமியர்களுக்குமிடையே மோதல்கள்.இதற்கெல்லாம் காரணம்
    பார்பனர்களா.
    பகுத்தறிவோ வரலாற்று அறிவோ அற்ற உங்களைப் போன்றவர்கள் பிராமணர்களாக பிறந்து தூற்றினாலும் பிராமணர்கள் பலர் அதைப் பொருட்படுத்துவதில்லை.ஏனெனில் அவர்களிடையே விஸ்வநாதன் ஆனந்த் போல் பலர் இருக்கிறார்கள்.இட ஒதுக்கீடு உட்பட அரசின் எந்த சலுகையும் பெறாமல் முன்னேறுகிறார்கள், அதற்காக முயல்கிறார்கள்.
    இடதுசாரி இயக்கத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்தவர்கள் பிராமணர்கள்.ஏ.கே.எஸ்.ஐயங்கார்,சீனிவாச ராவ் உட்பட பல போராளிகள் பிராமணர்கள்தான் (பிறப்பால்). கடுமையான அடக்குமுறையை சந்தித்த பி.ராமமூர்த்தி போன்றவர்கள் கொள்கையிலிருந்து பின் வாங்கியதில்லை.இன்றும் நக்சல்
    இயக்கத்தில் பிராமணர்கள் இயங்குகிறார்கள்,அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள்.மக்களுக்காக போராடுகிறார்கள்.

    ஒரு நாள் உங்களுக்கு உண்மை புரியும்.அப்போது போலி பகுத்தறிவாதிகள்,போலி பெண்ணியவாதிகள்,போலி மதச்சார்பின்மைவாதிகளிடமிருந்து நீங்களே விலகுவீர்கள்.
    இது போல் ஒரு சமூகத்தைத் தூற்றியது தவறு என உணர்வீர்கள்.

    ReplyDelete