Jul 13, 2010

சொல்லற்ற...


கண்ணீர்

லிபிகளற்றது
குற்றவுணர்வு அதற்கு அன்னியம்

அஃது

தீயின் பருப்பொருள்
சிசுவின் தொப்புள் உதிரம் தாங்கி
பாவங்கள் கழுவும்

பனிமலை

உச்சியில் கேட்கும் காற்றின் மௌனம்

கண்ணீர்
சிலுவை ஏறும் கணம்
விரியட்டும் சிறகு
திசைகளற்று

காற்றாய் கரைந்து போகையில்
பாதத்தில்
முத்தச் சுவடு
உண்மையின் வாடையை
கைப்பற்ற இயலாது தவிக்கும்

சொற்களினாலான கயிறு


அழைத்துக்கொண்டே இருக்கிறது
அது

தழுவிகிறேன்
கடந்த காலத்தை அறுத்தெறிய

மாறுவது காலம்
மாறாதது சொல்

அயர்ச்சியுறுகிறேன்

நான்

2 comments:

  1. பின்னிரவுப் பொழுதுகளில், நிசப்த நேரத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு உங்களின் கவிகளைப் படிக்கலாம் தோழி.

    லிபிகள் அற்ற கண்ணீரும், சொற்களிலான கயிறும் முரண் சுவையா என்ன?

    ReplyDelete
  2. கவிதைகளைப் படிக்க பொழுதுகள் இருக்கிறதா என்ன.
    தோழரே..வாசகனுபவம் பொறுத்தே எல்லாம். நன்றி.

    ReplyDelete