Aug 23, 2016

மேற்கோள் குறித்த கேள்வியும் பயனற்ற சாதியவாதமும்.

விளக்கம் கேட்டுப் பெருவதற்குள் கிடைச்சுதுடா கேப் என்று சாதி வெறியாட்டம் போடாமல் நிதானமாக எழுதுகிறார் ஆதவன் தீட்சண்யா. என் சாதியை வைத்து மட்டுமே என்னை விமர்சிக்கும் அவரிடம்தான் சாதிய மனோபாவம் ஆழ வேறூன்றி உள்ளது. அவரது விமர்சனப் போக்கில் இதுபோன்ற நிராகரிப்புவாதம் இருக்கும் வரை இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன்.
ஒரு புத்தகத்தை மறுத்தலிக்கும் விதமாக அறிவுபூர்வமாகப் பேசினால் அதை ஏற்பதில் எனக்கு எப்போதும் தயக்கமில்லை. ஒருவேளை என்னுடைய புரிதலில் தவறிருந்தால் அது எனக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் விமர்சனம் என்கிற பெயரில் இவர்களின் ரௌடியிசத் தோரணைப் பேச்சுகளுக்கும் சாதியவாத வசைகளுக்கும் ஏற்றார்போல் நானும் அவ்வப்போது எழுத வேண்டியுள்ளது. என்ன செய்ய.
திருவாசகம் என்பவர் பின்னூட்டத்தில் வைத்த கேள்விக்கு ஆசிரியரிடம் பதில் கேட்டுப் பெற்றுத்தான் என்னால் தெளிவுபடுத்த முடியும். அந்தப் பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பின்னூட்டமாகக் கொடுத்திருந்தேன். இருப்பினும் இங்கு பகிர்கிறேன். பின்னூட்டமும் எனது பதிலும் பின்வருமாறு:
Thiru Vasagam · Friends with வசு மித்ர and 328 others
//முதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள் அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே? //
அம்பேத்கர் அப்படி சொல்லியிருப்பதற்கான ஆதாரம் (அவருடைய எழுத்துக்களிலிருந்து) காட்ட முடியுமா? வசு மித்ர
Like · Reply · 1 · 7 hrs · Edited
Kotravai N
Kotravai N வணக்கம் திருவாசகம். நீங்கள் வசுமித்ரவிடம் மேற்சொன்ன மேற்கோள் குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள்.
நீங்கள் கேள்வி எழுப்பிய பின் நூலை மறுபடியும் சரி பார்த்தோம். அம்பேத்கரின் மேற்கோளாக ரங்கநாயகம்மா அதை எடுத்தாண்டு விவாதித்துள்ளார். அதையொட்டியே நானும் அதனை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
உங்கள் கேள்வியை மையமாக வைத்து ரங்கநாயகம்மாவிடமே அதற்கான விளக்கத்தை கேட்டோம்.
ரங்கநாயகம்மா தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த பதிப்பிலிருந்தே அம்பேத்கரின் எழுத்துகளை படித்து தனது ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதில் உள்ளதுபடி காந்தியின் மேற்கோள்களைத் தொகுத்துக் கொடுத்து அம்பேத்கர் எழுதியுள்ள அந்த தொகுப்பில் முதல் மேற்கோளுக்கு அடுத்ததாக மேற்சொன்ன அந்த மேற்கோள் வருகிறது.
அதில் அடைக்குறிப்புகள் ஏதுமில்லாது பத்தி தொடங்குகிறது. அதன்படி அது அம்பேத்கர் அளித்திருக்கும் பதிலாகவே பொருள்படுகிறது.
இருப்பினும், இப்போது இப்படி ஒரு குழப்பம் நிலவுவதால் தம்மிடம் இருக்கும் காந்தியின் தொகுப்புகளையும் தேடிப் பார்த்ததில் குறிப்பிட்ட அந்த கருத்து / மேற்கோள் காந்தி சொல்லியிருப்பாரா என்பதை சரி பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அம்பேத்கரும் அது எந்த கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது எனும் குறிப்பைக் கொடுக்கவில்லை.
ஆகவே, தற்போது தெலுங்கு மொழிபெயர்ப்பின் அடிப்படையில் (தெலுங்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பதிப்பு அது) பார்க்கும்போது அது அம்பேத்கர் கூறியதாகவே பொருள்படுகிறது. அப்பக்கத்தின் பிரதி கூடிய விரைவில் பகிரப்படும்.
தெளிவு பெற்றபின் தவறு ஏதேனும் நேர்ந்திருப்பின் அதற்குண்டான விளக்கங்கள் கொடுக்கப்படும். எவ்வாறாகினும், தமிழில் வரவிருக்கும் இரண்டாம் பதிப்பில் இந்த கேள்வியை ஒட்டிய குறிப்புகள், விளக்கங்கள் பின் இணைப்பாகக் கொடுக்கப்படும்.
என்று கூறியுள்ளார். மேலும் புத்தகத்தில் கூறியுள்ளதுபடி
”அம்பேத்கர் காந்தியை எவ்வகையில் விமர்சனம் செய்தாலும், சொத்துறவு தொடர்பான விஷயத்தில் இருவரும் ஒன்று போல் சிந்திக்கின்றனர். இரண்டு பேரும் சொத்துள்ள வர்க்கத்திற்கு ஆதரவானவர்கள். அவர்கள் இருவரின் பொருளாதாரமும் ஒன்றே. காந்தி பழைய பொருளாதாரத்தை எந்த மாற்றமுமின்றி சுரண்டல் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் ஆதரிக்கிறார். அவரைப் புரிந்துகொள்வது எளிது….
… ஆனால் அம்பேத்கரின் பொருளாதார திட்டம் குழப்பமானது! ஒருபுறம் ’சுரண்டல்’ எனும் சொல்லை உச்சரிப்பதிலும் மறுபுறம் அச்சுரண்டலை ஆதரிப்பதிலும் அந்தக் குழப்பம் நிலவுகிறது!” எனும் அவரது விமர்சனக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நன்றி.

No comments:

Post a Comment