Apr 1, 2014

லஷ்மி சரவணகுமாரின் புனைவுக் களம்

லஷ்மி சரவணகுமார் என்பவர் தற்காலத் தமிழ் இலக்கிய எழுத்தாளர் என்று எனக்கு சொல்லப்பட்டது. இதுவரை நான் அவரது ‘படைப்புத்திறனை’ அறியும் முயற்சியை எடுக்கவில்லை. ஆனால் வலிய அவர் தனது படைப்புத் திறனை ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் எழுதுவதன் மூலம் அறியும் வாய்ப்பை ஒரு வருடத்திற்கு முன் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போதுதான் எனக்குப் புரிந்தது அடுத்தவர் தனிப்பட்ட வாழ்வே அவரது புனைவுக் களமென்பது.

அவரது ‘படைப்புத் திறனை’ திறனாய்வு செய்வதற்கு முன் அவரை நான் சந்தித்த ‘பேசிய’ இரண்டு தருணங்களைப் பதிவு செய்வது அவசியமாகிறது. இலக்கிய கூட்டங்களுக்கு நான் அறிதிலும் அறிதாகவே செல்வேன். அப்போது அவரை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் புனைவு எழுத்தாளர் என்பது எனக்குத் தெரியாது.

ஆதிரன் தேனியில் ஒரு இலக்கியக் கூட்டம்  ஏற்பாடு செய்திருந்தார். உண்மையில் அது ஒரு நல்ல முயற்சி. தோழர் சிவகாமி தலைமையில் நடந்த கூட்டம் அது. ஒரு நல்ல அனுபவமாக வாய்த்தது. அந்தக் கூட்டத்தில் நான் லஷ்மியை சந்தித்தேன். அவரும் ஒரு ஏற்பாட்டாளர் என்பதை அங்கு சென்ற பின்பே அறிந்துகொண்டேன். ’இலக்கிய வட்டத்தில்’ நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்தான். லஷ்மி சரவணகுமாரோடு ஹலோ, டீ, காபி, சாப்பாடு, உக்காருங்க, ஓ அப்படியா என்கிற அளவில் மட்டுமே பேசியிருந்தேன். இந்தக் கூட்டத்தில் நேசமித்ரனும் கலந்து கொண்டிருந்தார்.

கூட்டம் முடிந்து அது தொடர்பான ஒரு பதிவையொட்டி நேசமித்ரனின் விமர்சனத்திற்கு வசு எதிர்வினையாற்ற நேசமித்ரன் தன்னுடைய ‘அறிவை’ பறைசாற்றி உனக்கு ஏபிசிடி தெரியல…. ப்ளாட்ஃபாரம் டிக்கட்டகூட படிக்கத் தெரியாது என்று வசு பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பெரும் தொண்டாற்றினார்.
அது ஒருபுறம் இருக்கட்டும்

லஷ்மி சரவணகுமாரோடு எனது அடுத்த சந்திப்பு ஒரு கவிதை  புத்தக வெளியீட்டு விழாவில். இந்தப் பதிவை எழுதும்போதுதான் அந்த தற்செயலான விஷயம் நினைவுக்கு வருகிறது. அது தோழர் சிவகாமியின் கவிதை புத்தக வெளியீட்டு விழா. அவரது கவிதைகள் குறித்து கருத்துறை ஆற்றி நான் கிளம்ப இருந்த சூழலில் லஷ்மி சரவணகுமார் வந்தார்  ச.விஜியலக்‌ஷ்மியின் வீடு பக்கத்தில்தான் இருக்கிறது உங்களை அவர் வீட்டிற்கு அழைத்து போக விரும்புகிறார் என்றார். விஜியோடு எனக்கு அறிமுகமில்லையென்றாலும் கூடங்குள ஆதரவு கவிதை நிகழ்வில் அவர் கலந்து கொண்டபோது பேசியதுண்டு. மேலும் அன்போடு விடுக்கப்பட்ட அழைப்பு என்பதால் விஜி வீட்டிற்கு சென்றேன். லஷ்மி சரவனகுமார், நான், விஜி ஒரு ஆட்டோவில் சென்றோம்.

விஜியின் வீடு ஓர் அன்புத் தோட்டமாக எனக்குக் காட்சியளித்தது. அதை நான் அவரிடம் சொன்னேன். பேச்சு எங்களது கடந்தகாலம் குறித்து சென்றது. லஷ்மி சரவணகுமார் அவ்வப்போது பேச்சில் பங்கெடுத்தார்.  உள்ளே போனார் வந்தார். விஜியிடம் எனது கடந்தகால வாழ்க்கை வசுவுடனான எனது திருமணம் எனது மகள் என்று சுருக்கமாக எனது வாழ்க்கை வரலாற்றை சொல்லி இருந்தேன். அவரும் மிக சுருக்கமாகத் தான் எழுத வந்த வரலாற்றை சொன்னார். பின் அவரது மகள்கள் எனக்கு சாண்ட்விச் செய்து கொடுத்தனர். விஜியின் தங்கை…  அம்முகங்களை இன்றும் என்னால் மறக்க முடியாது. இப்படி ஒரு அன்புமிக்க குடும்பமா.. உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரவேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லி கிளம்பினேன். ஆனால் அதன் பிறகு நாங்கள் சந்தித்துகொள்ளவில்லை

இந்தச் சந்திப்பு நடந்து சில நாட்களில் லஷ்மி ஒரு பதிவு எழுதினார். நினைத்தாலே மனம் கூசுகிறது…. இன்று வரை அவர் எதற்கு என் மேல் இப்படி ஒரு வன்மம் பாராட்டுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.  அவர் எழுதிய பதிவு என்னிடம் இல்லை ஆனால் அவர் எழுதியது நினைவில் இருக்கிறது. அவரது கோழைத்தனத்திற்கு உதாரணம் என்னவெனில் நேரடியாக எழுதாமல் ஒரு புனைவாக எழுதுவது ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக மாற்றுவது.

புரட்சிப் பணி ஆற்ற விரும்பி ஒருவர் தனது மனைவியையும் குழந்தையையும் கூட தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டார். புகழ் பெற விரும்பி ஒரு கவிஞரை நட்பு பிடித்தார். பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்தது. தான் எழுதிய கவிதையை தனது மனைவி எழுதிய கவிதையாக அந்த காதலர் வெளியிடுவார். அந்தப் புகழும் போதவில்லை. திட்டம் போட்டார், ஊடகங்களை குறிவைத்தார். புகழ் பெற விரும்பி ஊடகங்களை வம்பிழுத்தார். பின்னர் விலங்குகளை சுரண்டுவதற்கு எதிரான ஒரு அமைப்பைத் தொடங்கினார்… பெரியாளானார்… எப்படி இருக்கிறது கதை… என்பதாக

தோழர்களே, என்னையும் வசுவையும் அறிந்தவர்கள், எனது குடும்பத்தார் இன்னும் அடுத்த வெளிவட்டம் முதற்கொண்டு எல்லோருக்கும் எங்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்… எங்களுக்கு அதில் எந்த குற்ற உணர்வும் இல்லை. இதில் லஷ்மி சரவணகுமாரின் பிரச்சினை என்னவென்பதே எனக்கு விளங்காதப் புதிர்.

அவரின் இந்த கீழ்த்தரமான செயல் குறித்து வயதில் முதிர்ந்த ஒரு எழுத்தாளரோடு பேசியபோது அவர் சொன்ன ஒரு தகவல் எங்களுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது “டேய் அவனே அவன் காதலிச்ச பொண்ணோட பிறப்புறுப்பு பத்திய் வெளிய பேசிக்கிட்டு திரியுறவன்… அவன்கிட்ட போய் நீ என்ன எதிர்பார்க்க முடியும்” என்றார். உண்மையில் அவரால் காதலிக்கப்படும் அந்த்ப் பெண்ணை நினைத்து நாங்கள் வேதனையுற்றோம்… ஆனால் தோழற்களே ஒரு சூப்பர் சப்ஜெக்ட் கிடைத்துவிட்டது என்று நாங்கள் கதை எழுதக் கிளம்பவில்லை…

அந்தப் பதிவையொட்டி நடந்தவற்றை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்… அத்தனை தொலிபேசி அழைப்பையும் தவிர்த்து காலில் விழுந்து கெஞ்சாத குறையாக எஸ்.எம்.எஸ்களை அனுப்பி வசுவிடம் மன்னிப்பு கேட்டு பின்பு வசு அவரின் நிலை நினைத்து பரிதாபப்பட்டு வீட்டிற்கு அழைத்து நட்பு பாராட்டி அறிவுரைகள் சொல்லி… இது முடிந்து ஒரு வருடம் இருக்கும். நாங்கள் அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பதிவுக்கு வசு சிலக் கேள்விகளை வைத்தால் ஒவ்வொருவரும் அவனது தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் குறித்து ஏதாவது எழுதி எனது கோபத்தை தூண்டிய வண்ணம் இருந்தனர். சமீபத்தில் அபிலாஷ்… அதுவும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இப்போது 2 மாதங்கள் கழித்து லஷ்மி மீண்டும் கிளம்பிவிட்டார் தனது புனைவுத் துப்பாக்கியுடன்.

கவின்மலர் பொதுவாக எழுதிய பதிவில் இலக்கிய உலகில் சிலரது நடவடிக்கை குறித்த வசுவின் பேச்சை பகடி செய்து கமெண்ட் செய்ததோடு மட்டுமல்லாமல் தனது ஸ்டேட்டசுமாக ஒரு பதிவை அதே சம்பவத்தை நினைவுகூறும் விதமாக எழுதியுள்ளார். மேலும் எவரையெல்லாம் என்னுடைய பதிவில் நான் குற்றம் சாட்டி இருந்தேனோ அவர்களை டேக் செய்து உரையாட வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்குப் பெயர் என்ன? வன்மம்… வக்கிரம்…. கீழ்த்தரமான செயல்…. அற்பத்தனம்… சொல்லப்போனால் பொறுக்கித்தனம்.

ஆனால் அவருடைய இந்த மனநோய் குறித்து சற்று ஆழ்ந்து சிந்திக்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது…. அவர் வாழ நினைத்த வாழ்க்கையை ஒருவேளை நாங்கள் வாழ்கிறோம் போலும்… அவர் காதலித்த (ஒருவேளை திருமணமான ஒரு பெண்ணாக இருக்கக்கூடும்) ஒரு பெண்ணோடு வாழ முடியாத ஏதோ ஒரு துக்கம் அவருள் இருக்கிறதோ… அதற்கு வடிகால் தேடுகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அதற்கு ஏன் அவர் எங்களை சீண்டுகிறார். எனக்கும் லஷ்மி சரவணகுமாருக்கும்.. அல்லது வசுவுக்கும் அவருக்கும் கூட என்ன சம்பந்தம் இருக்கிறது..

எனக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது… நான் ஒன்றும் அவரது ‘படைப்புத் திறனுக்கு’ போட்டியாக எதுவும் எழுதியிருக்கிறேனா… இன்னும் ஒரு புத்தகம்கூட வெளிவரவில்லை. பின்பு ஏன் இந்த பொறாமை?

அபிலாஷின் மனைவி காயத்ரியை இக்கணம் நினைத்து பெருமைப்படுகிறேன். அபிலாஷின் மனைவி எங்களோடு எந்த உரையாடலையும் வைக்கவில்லை ஆனால் அபிலாஷின் விளக்கப்பதிவில் இதுபோன்ற பதிவிகள் பயனற்றது எனப்தாகத் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் லஷ்மி சரவணகுமார் குறித்து நான் எழுதியவுடன் அறச்சீற்றம் கொண்டு வசுவுக்கு தனிப்பட்ட மெசேஜ் அனுப்பி கொதித்த கார்க்கியோ லஷ்மியின் 10 மணி ஸ்டேட்ட்ஸில் மிகவும் ஆர்வமாக பங்கேற்றுள்ளார். நான் எதிர்வினையாற்றினால் முன்பு போல் அவர் வருத்தப்படுவாரே என நினைத்து லஷ்மி சரவணகுமாரிடம் பேசு… இல்லையா கார்கியிடம் தகவலைத் தெரிவித்து விளக்கம் கேள் என்று சொன்னேன். வசுவும் செய்தான்.  அதற்கு கார்க்கி பொதுவெளியிலேயே பதிவு செய்யுங்கள் என்று சொன்னாரே தவிர லஷ்மியின் இந்த மனநோய் மிகுந்த ஒரு பதிவு குறித்து அவர் எந்த வருத்தமும் கொண்டதாகத் தெரியவில்லை.

பெண்கள், சிறுமிகள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினர் மீது அக்கறை பொழிவதாக இவரது கதைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது… ஆனால் நிஜ வாழ்க்கையில் இவரது வக்கிரம் ஏன் இப்படி அடுத்தவரை நேரடியாக எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனதோடு செயல்படுகிறது.

குறைந்தபட்சம் தன்னுடையப் புனைவுகளிலாவது மனிதாபிமானமும் சமூக அக்கறையும் வெளிப்படுகிறதே  என நினைத்து சமாதானம் செய்துகொள்வதா இல்லை அதுவும் ஒரு விற்பனைச் சரக்கு என்ற முடிவுக்கு வருவதா.


No comments:

Post a Comment