Apr 30, 2011

பிரபஞ்ச நடனம்…



தழுவி முத்தமிட அழைப்பு விடுத்த பழஞ்சூரியன்

துணை தேடிப் பாடும்
கவிகளில் வழிந்தோடுகிறது
விழிகளற்ற இரவுகளின்  
கொடிகள் சுற்றியெடுத்த சுக்கிலம்

பெண் பூனைகள் முகர்ந்து விடாமல்
வார்த்தைகளுக்கடியில்
புதைத்து வைத்த உதட்டின் மேல் முளைந்த காடொத்த மயிர்கள்
சுக்கில மூலம் ஒளிந்துக் கொண்டது

யானைத் தோலணிந்து
அம்மை
குறிகளின் மீது நடனமாடுகிறாள்
அம்மை
எம் அம்மை

பைரவி
பார் புகழும்
கொற்றவை

எலும்பையும் நசுக்கியுடைத்து மஜ்ஜையுறியும்
இரக்கி
கருணா பைரவி
கருணையின் ஆதி
மகாயோனி
 
இடது காலில்
கழலென
சுற்றித்திளைக்கும் தழலென
மின்னும் இரு நாவோடு நச்சரவம்
தெளிக்கும்
நஞ்சானது கரைக்க துவங்கியது சூரியனின் மொட்டைக் கதிர்களை
ஆம்
அப்படித்தான்

அவள் வைசூரி

வலது காலால் முரசம் பெயர்த்து
ஓங்கியொளிவிடும்
தாகத்தால் தகதகக்கும்
மின்னும் சிறு மூங்கில் விரல்களால்
அம்மை பறிப்பாள்
பறிப்பாள்
அம்மை
குறிகளை
பற்றியிருந்த கொடிகள் தெறித்து சிதறிவெடிக்கிறது
தத்தோம்...தாம்... தரிகிட தித்தோம்
நீலி
பெண்பேய்
பேரம்மை
கனியட்டும் தாயே அகம் இகம் பரம்

சாந்தம்
அம்மையே

குறிகள்
யோனிகளுக்கானஅகராதிகளை படைப்பதில் சலிப்பதில்லை
துதிக்கும் சொற்கள் காலத்தின் கரைப் படிந்த சொற்களானதை
அம்மை அறிவாள்
அம்மையரிவாள்

அவள்
பழுப்பு நிறம் கூடிய பற்களுக்கிடையில் அரைபட்டு
ஓங்கி மிதிக்கையில்
சுக்கிலம் தெறித்து
விரைகள் நசுங்கி
விழிகள் கொட்டி
வேரோடு சாய்கிறது

நீலம் பாவிய கழுத்து
நீலம் பாவிய உடல்
நீலம் பாய்ந்த குறி

நீலத்தை எடுத்துடுத்துடுத்துகிறாள்
அம்மை

இளவுதட்டில் வெம்மை பூக்க
பசுஞ்செம்மை சிவக்க
இளிக்கிறாள்
எம் அம்மை

தம்..
தம்தம்...தம்

தத்...
தத்தரிகிட  தத்....
தத்தரிகிட...தத்தரிகிட...தித்தோம்

சாந்தம்.


4 comments:

  1. வித்தியாசமான கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நன்றி சௌந்தர். இது ஒரு மூத்த கவிஞர் எழுதிய லிங்க கவிதைக்கு எதிர்வினை கவிதை

    ReplyDelete
    Replies
    1. கொற்றவை,

      ஒரு ஆணைப் போட்டு மிதிக்கும் குறியீடாக இருப்பதால் தான் " கொற்றவை " எனும் பெயரை நீங்கள் வைத்துக் கொண்டீர்களா ? நீங்கள் கொற்றவையின் அவதாரமாக மாறியது எப்போது ? ஏன் ? யாருக்காக ?
      இதை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதுங்களேன்.

      ( அம்மா, தாயே , இதிலும் ஏதாவது தப்பர்த்தம் கண்டு கொள்ளாதீர்கள். ஏதோ தோன்றியது சொன்னேன். அவ்வளவு தான். மற்றபடி, பெண்களை, பெண்மையை திட்டமிட்டுத் தாக்கும் " உள் குத்து " எதுவும் இதில் இல்லை. )

      சரி, யார் அந்த மூத்த ' லிங்க கவிஞர் ' ??

      Delete
  3. அவரை ‘லிங்க கவிஞர்’ என்று நான் சொல்லவில்லை. மூத்த கவிஞர் எழுதிய லிங்க கவிதை...என்றுதான் சொல்லியிருக்கிறேன். கவிஞர் விக்ரமாதித்யன் எழுதிய கவிதைக்கு எதிர்வினை. நன்றி.

    ReplyDelete