கண்ணீரின் மொழியை கண்டுகொள்கிறது கவிதை
கண்கள் பனிக்காத நாட்களில்
கவிதை உரையாட மறுக்கிறது
ஒரு துளி நீர்
இறுகிய கன்னங்களை கழுவிச் செல்லாத வேளையில்
கவிதை துக்கப்படுவதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மன்னித்து சிரிக்கும் மகளின் கண்ணீர்
ஊழியின் உரிமையாளர்கள்
ஆதிவாசிகள்
முதலாளிகளின் இறுக பொத்திய கைகள்
கால் வயிற்று கஞ்சிக்கு
சில அங்குல
கால வளையத்துக்கள்
நுழைந்து வெளிவரும் முகம் கழுவாத சிறுமி
அவளருகில்
தார் சாலைக்கு தன்
முதிர்ந்த பாதங்களால் நிழல் தரும்
முதியவரின் புன்னகை பூத்த முகம்
தற்கொலைகள் நிணைவூட்டும்
இரக்கமற்ற மனிதர்கள்
எழுதுவதற்கு
இன்னும் இருக்க
கவிதை
அறையை விட்டு வெளி வர மறுக்கிறது
வேண்டியதெல்லாம்
கரிப்புச் சுவைகூடிய நீர்
நீரில் கலந்திருக்கும் உப்பின் சாரத்தை
சில வேளைகளில்
சுமக்க மறுத்துவிடுகிறது வரிகள்
ஆத்மாவிலிருந்து கசியும்
உப்பு நீர்
நிறமற்ற நீரின் ஓட்டத்திலிருந்தே
பிறக்கிறது
கவிதைக்கான
எனது வரிகள்
துயரத்தை
அழிக்க முடியாத
ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறேன்
தவித்து
விம்மலோடு
பெயர்ந்து விழும்
சொல்லொன்றில்
கண்ணீரின் மொழியை கண்டுகொள்கிறது
கவிதை.
குடிகார கணவனின் கொடுமைகளை பொறுக்க முடியாத எல்லையில் நின்று மரணத்தை அணைத்துக்கொண்ட சங்கீதா எனும் சல்மாவுக்காக……….அவள் அனாதையாக விட்டுச் சென்ற அவளது 4 பிளைகளுக்காக………..
கொற்றவை,
ReplyDeleteஇந்தக் கவிதையில் ஒரு கவிஞரான நீங்கள் சல்மாவாக மாறியிருக்கிறீர்கள், அல்லது சல்மாவின் ஆத்மா உங்களின் மூலமாகப் பேசியிருக்கிறது.