Oct 11, 2010

கனவுகளற்ற சொல்


மரணத்தின் வாயிலில்
காத்திருக்கிறது
உனக்கான வார்த்தை
கூறு போட்ட நிமிடங்களில்
உறைந்த ரத்தம்
மாற்றவியலாத
மரணம்
சொல் மற்றும்
தவிர்க்கவியாலாத
பிணம்
அழுகும் நாற்றம்

சாம்பலைக் கரைக்க முயல்கையில்
கரும்புள்ளி நிழலாடும்
உடல் இல்லை
கூடிய வேளையில்
காதுகள்
சுவைத்த சுவாசமும் இல்லை

வானம் பார்த்துக் கையேந்தி
சுமக்க முடியா விழிகளேந்தி
நிற்கையில்
நீராவிமணம் கொள்கிறதென் கண்ணீர்

பல்லாயிரம் நீர்குமிழிகளாய்
முகம் சுற்றிவரும்
கரையா துக்கம்
கற்சிற்பங்களென புடைத்து நிற்கிறது
நீ
திரும்பும்
பாதையில்

சிவந்த மண் உடலெங்கும் பரவி
காணிக்கை பெற்ற உதடுகளைப் பிய்த்தெறிகிறது
அலறும் அப்பெருங்குரல் கேட்டு
வலி துடைக்க ஏதுமில்லை

தேடுகிறாய்
பச்சிளம் விரல்களை
மயானத்தில்.


(உயிர் எழுத்தில் வந்த மூன்றாவது கவிதை)





2 comments:

  1. தேடுகிறாய்
    பச்சிளம் விரல்களை
    மயானத்தில்

    என்ன விதமான அதிர்வு இது !!!
    ஐஸ்கத்தி!

    ReplyDelete
  2. தொடர் வாசிப்பிற்கு நன்றி நேசமித்ரன்..

    ReplyDelete