Sep 10, 2010

தானமென் உரு.



சிறுமியின் முத்தமொன்றைப் பெற....
நிலைகொள்ளாது
அழுகிறான்

கடவுள்

நிழலின்றி அலையுமவன் குரலில்
யாசகம் அலைவுற

இரக்கம் கொண்டு
தானமென
க்
கருமுட்டையொன்றைக் காற்றில் வீசினேன்

பிரசவம்

முத்தத்தை சுவைத்த கடவுள்
பொறாமை இறுகப் பற்ற
வானைக் கிழித்தெறிந்தான்

சிறுமியின் முத்தம்.

3 comments:

  1. முத்தமும் எதிர்முத்தமுமாக தோழர் இருவரும் நிகழ்த்தும் பரிவர்த்தனைகள் அருமை

    ReplyDelete
  2. இது ஒரு தற்செயல் விபத்து நேசமித்திரன் அவர்களே. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete