Aug 2, 2023

தமிழ்நாட்டில் பல் இளிக்கும் சில இடதுசாரிகளின் கருத்துச் சுதந்திரவாதம்!


 தமிழ்நாட்டில் பல் இளிக்கும் சில இடதுசாரிகளின் கருத்துச் சுதந்திரவாதம்!

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் / அம்பேத்கரும் / பெரியாரும் / மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று காலம் காலமாக இங்கு விவாதங்கள் நடந்து வந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்ற ரங்கநாயகம்மாவின் திறனாய்வு நூலை நான் 2016இல் மொழிபெயர்த்திருந்தேன். மார்க்சிய அடிப்படையில் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பார்வையையும், அவரது சோஷலிச மாதிரியையும், பௌத்தத்தையும் திறனாய்வு செய்யும் நூல் இது! சுருக்கமாக சொல்வதானால் In Defence of Marxism / Working Class / Annihilation of caste என்று மார்க்சியத்தைப் படித்தோரும், அதன் அரசியலுக்கு உண்மையாக இருக்க விரும்புவோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விவாதம் தான் இது.

ஆனால் இங்கோ உழைக்கும் வர்க்க ஒற்றுமை மற்றும் சாதி ஒழிப்பிற்கான தீர்வை விட அம்பேத்கரை தற்காப்பதுதான் **** கம்யூனிஸ்ட் அரசியல் என்கிற அடையாள அரசியலிலும், சந்தர்ப்பவாதக் கூட்டணிகளிலும் சிலகம்யூனிஸ்ட்குகள்தங்களைக் கரைத்துக்கொண்டதன் விளைவாக அந்த நூலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது! எதிர்ப்பு அறிவார்ந்த / தத்துவார்த்த உரையாடலாக இருந்து, சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம் தீர்வு உள்ளது என்று நிறுவுவதில் சென்று நின்றிருந்தால் அதை விட மகிழ்ச்சி தரும் விசயம் எதுவும் இருக்கப் போவதில்லை! நமக்குத் தேவை சாதி ஒழிப்பு! அதுதானே தோழர்களே!

ஆனால் இங்கு நடந்தது என்ன? போதுமான பதிவுகள் என் சமூக வலைப் பக்கங்களில் உள்ளன! கேவலமாக நடந்துகொண்டது மட்டுமின்றி, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரங்கநாயகம்மாவையும் என்னையும் கொச்சையாக பேசுவதை ஒரு வேலையாகவே ஒரு கும்பல் செய்து வந்தது. திருவாளர் ஷோபா சக்தி அவர்களுக்கு தலைவர் போல! சம்பந்தமே இல்லாத ஒரு பேட்டியில் ரங்கநாயகம்மாவை குகை மார்க்சியர் என்று சொல்லி அவரது மார்க்சிய அறிவை கிண்டல் செய்திருந்தார். அதற்கு வசுமித்ர ஒரு கேள்வி வைத்தார். எதில்? முகநூல் கமெண்டில்.. ஆம் தோழர்களே just a fb comment as a counter in a way replicating the same ‘satirical pattern’…

இங்கே எள்ளல், எதிர்ப்பு, விமர்சனம், அவதூறு, கொச்சைப் பேச்சு, கொலை மிரட்டல் விடுதல்இது எல்லாவற்றுக்கும்அம்பேத்கரியர்களுக்குமட்டுமே உரிமை உண்டு என்னும் அளவுக்கு ஒரு பிரிவினரிடையே கருத்து சுதந்திரம் கிடந்து அல்லல்படுகிறது. இதற்கு சாட்சியாக 2020இல் வசுமித்ர மீது சி.பி.எம் என்னும் கம்யூனிஸ்ட் அமைப்பின் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தது.

அம்பேத்கரியம் / மார்க்சியம் என்னும்தத்துவார்த்தப் போரின்ஒரு பகுதியாக வசுமித்ர அம்பேதரின் பௌத்தம் எத்தகையது என்பதன் திறனாய்வாக அம்பேத்கரும் அவரது தம்மமும், அம்பேத்கரிய பார்ப்பனியம் என்னும் ஆய்வுகளை எழுதி நூலாக வெளிவந்தது. கேட்கவும் வேண்டுமா? சில அம்பேத்கரிஸ்டுகளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. (அம்பேத்கரிஸ்டுகள் என்று சொல்வதை விட ரஞ்சித்திஸ்டுகள் (எஸ்.வி.ஆரிஸ்டுகள்) என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்..)

ஒடுக்கப்படுவோரின் கோவம் நல்லது! ஆனால் அதை அறிவார்ந்த வகையிலும், நியாயமாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் என்கிற கொள்கைப் பிடிப்புடனும் கையாண்டு, பேசுகிற பிரச்சினைக்கு தத்துவார்த்த ரீதியிலும், வேலைத்திட்டத்தோடும் அல்லவா பதில் தர வேண்டும். தமிழ்நாட்டு மண்ணுக்கேற்ற மார்க்சியத்தில் அதற்கெல்லாம் இடமில்லை! Straight வாய்ப்புட்டுச் சட்டம் தான்! ஏனென்றால் ….. ஏனென்று கம்யூனிஸ்டுகளுக்கே தெரியும்!

2020இல் வழக்கு தொடுத்தவர்கள் இன்று பத்ரி என்னும் வலதுசாரி / பார்ப்பானின் கருத்துச் சுதந்திரத்திற்காக கொக்கறிக்கிறார்(கள்). மார்க்சியத்திற்காக வாதிடுபவர்கள் சாதிவெறியர்கள் எனவே அவர்களுக்கு கருத்துரிமை கிடையாது, மோடிக்கு ஜால்ரா அடித்து, வெறுப்பரசியலை உமிழும் பத்ரி போன்றவர்கள் சமூகத்தின் முதுகெலும்பு எனவே அவர்களின் கருத்துரிமை காக்கப்பட வேண்டும்! ஆஹா!

இப்போது மட்டுமில்லை தோழர்களே, ஒவ்வொருமுறையும் எங்களைத் தவிர இங்கே அனைவரின் கருத்துரிமைக்காகவும் அந்த கூட்டம் குரல் கொடுக்கும், கொந்தளிக்கும் 😉

இந்த பாரபட்சம் குறித்து மார்க்சிய அர்ப்பணிப்புள்ள கம்யூனிஸ்டுகள் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள் (பல தோழர்கள் அப்போதும் துணை நின்றார்கள்).. அதற்கு தமிழ்ச்செல்வன் அளித்திருக்கும் பதில் தான் முந்தைய பதிவில் உள்ளது!

முதலில் அப்படி ஒரு விசயம் நடக்கவே இல்லை என்றார். (இதுல பர்சனல்னு வேற சொல்லி இருப்பார் போல! ஷப்பா!!) பின்னர் அமைப்பு அந்த புகாரை திரும்பப் பெற்றது என்கிறார். புகார் அளித்ததை பொதுவெளியில் டாம்பீகமாக பறைசாற்றி, அதை ரஞ்சித் & கோ கொண்டாடி மகிழ்ந்தனர்..

சிலர் ஊர் ஊராக வெவ்வேறு நபர்களை வைத்து புகார் அளித்துவசுமித்ரவுக்கு கொலை மிரட்டல் எல்லாம் விடுத்து.. நாங்களே உண்மையான அம்பேத்கரிய கம்யூனிஸ்டுகள் என்று கொக்கறித்த அவர்கள் புகாரை திரும்பப் பெற்றது குறித்து ஏன் பொதுவெளியில் அறிவிக்கவில்லை?

இவர்களுடைய முதலாளி பா.ரஞ்சித், ஆசான் எஸ்.வி.ஆர் & முதலாளித்துவ பண்பாட்டு மையத்தினை பகைத்துக்கொள்ள எப்படி இவர்கள் துணிந்தார்கள்?

ஐயகோ! அவருக்கு தெரியாமல் கமுக்கமாக வாபஸ் வாங்கினார்களா?

அதேபோல் வசுமித்ரவின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கையெழுத்திட்ட கருத்துச் சுதந்திர காவலர்கள் அறுபத்து மூவர்அவர்களுக்கு இந்த விசயம் தெரியுமா?

ஆக தமிழ்நாட்டின் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது அம்பேத்கரை விமர்சனம் இன்றி துதிபாடுவதுதான்? அத்தகையவர்கள் முடிவு செய்யும் அரசியல் தான் இங்கே மார்க்சியமாக / சரியான கம்யூனிஸ்ட் அமைப்பாக இருக்க முடியும், அல்லவா?

இதற்குப் பெயர் மண்ணுக்கேற்ற மார்க்சியமில்லை! மார்க்சியமாவது மண்ணாவது, போடுங்கடா ஜால்ரா, ஏத்துங்கடா பிராண்ட் மதிப்பைPlease பண்ணுங்க முதலாளித்துவ-அம்பேத்கரிஸ்டுகளை.. அப்பதான் இங்க பிழைச்சிருக்க முடியும்! அக்மார்க் சாதி மறுப்பாளர்ங்குற பட்டமும் கிடைக்கும்

சாதி ஒழிப்புக்குத் தீர்வு எதுங்குறது முக்கியமா இல்லை அறங்காவலர்களை மகிழ்விக்குறது முக்கியமா? பொழைப்பு முக்கியமப்பா….

எல்லாத்தையும் விடுங்க! அவர் பதில் சொல்லி இருக்கிற விதத்தைப் பார்த்தா! சரி விடுங்க அதை வேற என் கையால டைப் செய்ய விரும்பல!

**** வலதுசாரிகளிடமிருந்து அம்பேத்கரை தற்காப்பது மிக மிக அவசியம்..

மார்க்சியத்திற்கும் / கம்யூனிசத்திற்கும் எதிரான போக்குகளில் அம்பேத்கரை திறனாய்வு செய்து, விம்ரசிப்பது அதே அளவு முக்கியம் என்னும் குறிப்போடு ….. ! ஏனென்றால் இது சாதி ஒழிப்பு என்னும் போராட்டத்திற்கு உழைக்கும் வர்க்கத்தை ஒற்றுமையாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தோடு தொடர்புடையது! இது தெரிந்தே இந்த கூட்டம் மார்க்சியத்தைக் குழி தோண்டி புதைக்கும் வேலைகளில் சிறப்பாக ஈடுபடுகிறதுஆனால் இந்த 5-6 ஆண்டு கால செயல்பாடுகளின் வழி ஒவ்வொரு வேஷப்பூனைகளும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன😊

 

related post: https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid06K4QxYSHohTb1Y9HwMGCVPbygnL12MJTPsbAUx9AaGvrvTPsbjAt38VbrVdmNTMcl 


ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துகொள்வது .. இதுதான் மேட்டுக்குடி அரசியல்

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid0A3x7D3LhYepduWq1sp2B797PL2Bikcvk3KFWynKBSDK6zYMD1DEMpYD4PkFFMqkNl 

No comments:

Post a Comment