Oct 23, 2019

சமஸின் அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கிலே தேனும்!


இன்றைய இந்து தமிழ் திசையில் அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்என்றொரு கட்டுரையை திருவாளர் #சமஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மயிர் பிளக்கும் வாதங்கள் தேவையில்லைஎன்று சொல்லும் சமஸுக்கு மயிரு மாதிரி கட்டுரை எழுதியிருக்கீங்க என்று தான் தொடங்க வேண்டியுள்ளது…. மன்னிக்கவும்வேறு வழியில்லை! ஏனென்றால் எந்த ஒரு பொருளை பற்றி எழுதுகிறோமோ அது குறித்த ஆழ்ந்த அறிவற்ற ஒருவர் எல்லாம் தெரிந்த மயிருபோல் பேசும் தொனி தான் அந்த கட்டுரையில் உள்ளது.

சமஸுக்கு தமிழ் பற்று வேறு அதிகம் ஆகவே, மயிர் என்பதை அவரும் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்! தலையிலிருந்து உதிர்ந்த முடிஉயிரற்ற, பயனற்ற முடிக்கு மயிர் என்று பொருள், அல்லவா!

சரி சமஸின் பேராய்வு மிக்க கட்டுரைக்கு வருவோம். பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சங்கரய்யா பேசியதில் தொடங்கி, அவரின் தியாகம், பொதுவுடைமை இயக்கத்தினரின் தியாகம் என்று புகழ்ந்து இறுதியில் சின்னப்புள்ளைங்க கணக்கா சண்டை போட்டுக்காதீங்கப்பா, நியுமராலஜி படி உங்க பேரு சரியில்லைபெயரை மாத்துங்கப்பா என்று நீண்டு நஞ்சைக் கலந்திருக்கிறார். எதன் வழியாக சிரிப்பது என்று தெரியவில்லை!

தயவு செய்து அந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள்…. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! (https://www.hindutamil.in/news/opinion/columns/521597-communist-party-6.html)

இராமச்சந்திர குஹா சொல்லிவிட்டாராம் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை விட சோஷலிஸ்ட் கட்சி என்று வைத்துக்கொள்ளுமாறுஏனென்றால் கம்யூனிஸ்ட்கள் மீது பல்வேறு காரணங்களால் இங்கு ஒவ்வாமை நிலவுகிறது, தவறான புரிதல் நிலவுகிறது!!!! மேலும் கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜனநாயகம் இல்லையாம்… (ஐயா ஜனநாயகம் என்றால் என்ன, பூர்ஷுவா ஜனநாயகம் என்றால் என்னவென்று விளக்கம் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்)சீன அதிபர் இங்கு வந்தபோது தோழர்என்று குறிப்பிட்டுவிட்டார்களாம்! சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடா இப்படியாக தொடங்கி….

// உலகமயமாக்கல் காலகட்டத்துக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எப்படி அணுகுவது, மதத்தை எப்படி அணுகுவது, தேசியத்தை எப்படி அணுகுவது, அரசியத்தை எப்படி அணுகுவது இந்த நான்கு விஷயங்களிலுமே இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினருக்குப் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. உலகளாவிய வரலாற்று அனுபவங்கள் தரும் சோஷலிஸம்இதற்குத் தீர்வு கொடுக்கலாம். ஏனென்றால், அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் கம்யூனிஸம், அவரவர் தேவைக்கேற்ற பலன்களைத் தரச் சொல்கிறது; அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் சோஷலிஸமோ அவரவர் உழைப்புக்கு ஏற்ற பலன்களைத் தரச் சொல்கிறது.
அனைத்தையும் பொதுவுடைமையாகக் கருதும் கம்யூனிஸம், தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது; சோஷலிஸமோ பெரும் தொழில் உற்பத்தியை சமூகவுடைமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், தனி நபர்களுக்கான சொத்துரிமையையும் மதிக்கிறது; மக்களுக்கான சமூகக் கடமைகளையும் ஏற்கிறது. மக்களின் மதவுரிமைக்கு வெளியே நிற்கிறது கம்யூனிஸம்; மக்களின் மதவுரிமையை அங்கீகரிக்கிறது சோஷலிஸம்.//

இந்த பத்தியில் தன்னுடைய தாராளவாத, பின் நவீனத்துவ, முதலாளித்துவ மூகமூடியை நமக்கு சிறப்பாக திறந்து காட்டுகிறார்.

கோட்பாட்டு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்காதீர்கள்சட்டு புட்டுன்னு பேரை மாத்துங்க என்கிறார். நல்ல எண் கணித சோதிடம் பார்ப்பார் போலிருக்கிறது சமஸ்.

இந்தியா என்ற பெயர் இராசியில்லை ஆகவே பாரதம் என்று மாத்திவிடுவோம்…. நமக்கு மோடி பிரச்சினையில்லை பெயர் தான் பிரச்சினை என்று சொல்லாமல் போனாரே!

போதாத குறைக்கு தமிழ் பற்று வேறு, தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்று வைத்துவிடுங்கள்ம்ம்ம் சீக்கிரம்! அப்புறம் என்னய்யா பெரிய சர்வதேசியம் பேசுறீங்கநம்ம தமிழ்ல இல்லாததா… “ஆழ வேரூன்றிய தமிழின் ஓருலகவாதம் நல்ல மாற்றுதாரணமாக இருக்க முடியும்.

// அயல்நாடுகளின் சர்வாதிகார வரலாற்றுச் சுமையிலிருந்து நம் நாட்டு பொதுவுடைமை இயக்கத்தினரை இந்தப் பெயர் மாற்றமானது விடுவிப்பதோடு, சமகாலத்தில் இந்திய அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் நான்கு பெரிய சிக்கல்களுக்கும் அது விடை கொடுக்கும்.// பெயரை மாத்துங்கப்பாசீக்கிரம்
ஆக, இங்கு இருக்கும் பொதுவுடைமை இயக்கத்தின் சிக்கல் கட்சிப் பெயரில் தான் உள்ளது. இணையுங்கள் இந்தியத் தன்மை பெறுங்கள் என்கிறார். நடுவுல தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்கிறார்…. சீமானே பரவாயில்லை என்று படிக்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. 

ஐயா சமஸ் இந்திய சமூகம், தமிழ் சமூகம், சர்வதேசிய நாடுகள் அனைத்தும் எதிர்கொள்ளும் சிக்கல் சோஷலிசமா, கம்யூனிசமா என்பது அல்ல. (சிப்பு சிப்பா வருதுங்கோ) மார்க்ஸின் மூலதனம் நூலை படிக்காவிட்டாலும் பரவாயில்லைகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையாவது மீண்டும் மீண்டும் படியுங்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் (உலகளவில்) எதிர்கொள்ளும் சிக்கல் என்பது வரலாற்று வளர்ச்சியில் இயங்கியல் ரீதியான விளைவுகளே.. (மன்னியுங்கள்கோட்பாட்டு விளக்கம்).

உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளின் தன்மைகள், வகைமைகளை வரையறுப்பது தொடங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிரதான செயல்திட்டம் வகுப்பதில் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதாகவெல்லாம் நீளும் ஒரு சித்தாந்தப் போராட்டம் மட்டுமன்று அது நடைமுறையில் நிகழும் மாற்றங்கள், பிரிவினைவாத (என்.ஜி.ஓ மற்றும் உங்களைப் போன்ற தாராளவாத (பட்டை போட்ட, நாமம் போட்ட, கொட்டை போட்ட ) அறிவுஜீவிகள் ஏற்படுத்தும் குழப்பங்கள் என்று ஏகத்துக்கும் சிக்கலின் பட்டியல் நீள்கிறது.

// அனைத்தையும் பொதுவுடைமையாகக் கருதும் கம்யூனிஸம், தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது; சோஷலிஸமோ பெரும் தொழில் உற்பத்தியை சமூகவுடைமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், தனி நபர்களுக்கான சொத்துரிமையையும் மதிக்கிறது; மக்களுக்கான சமூகக் கடமைகளையும் ஏற்கிறது. மக்களின் மதவுரிமைக்கு வெளியே நிற்கிறது கம்யூனிஸம்; மக்களின் மதவுரிமையை அங்கீகரிக்கிறது சோஷலிஸம்.//

ஐயா ராசாஎந்த பள்ளிக் கூடத்துல ஐயா நீங்க கம்யூனிசம் படிச்சீக
சந்தடி சாக்கில் உங்க தனியுடைமை ஆதரவுக்கு ஏன்யா சோஷலிசத்துக்கு புதுச் சாயம் பூசுறீங்க?

ஐயா…. பொதுவுடைமை இயக்கத்தின் இறுதிக் குறிக்கோள் கம்யூனிசமேஇது பொதுவுடைமையாளர்களின் விருப்பம் மட்டுமல்லஉற்பத்தி சக்திகளின் வளர்சிப்போக்கில் இறுதியில் மக்கள் இந்தக் கட்டத்திற்கே செல்வார்கள்ஏனென்றால் அதுவே மேம்பட்ட சமூகமாக முழுவதும் சுதந்திரமான, சமத்துவமான ஒரு சமூகமாக அமையும் என்று தான் மார்க்ஸ் தொடங்கி செங்கொடியின் கீழ் புரட்சிகர ஆட்சியை (சோஷலிசமா, கம்யூனிசமா!) நிறுவிய லெனின், மாவோ, ஸ்டாலின், ஃபிடல், சாவேஸ் என அனைவரும் மனதில் கொண்டு இயங்கியுள்ளனர்.
சோஷலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தை உங்கள் பத்திரிகையின் தலைவர் என். ராம் படித்தாரா? படித்திருந்தால் கண்டிப்பாக அவமானமாக உணர்வார். ஏனென்றால் அவர் நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று நான் நம்புகிறேன்.

ஐயா சமஸ், தனியுடைமையை ஒழித்து, அதாவது உழைப்புச் சுரண்டலை ஒழித்து அதாவது உழைப்புச் சக்தியை விடுவித்து (உற்பத்தி சக்தியை), உற்பத்தி சாதனங்களை தனி நபர்களின் சொத்தாக இருப்பதிலிருந்து விடுவித்து, (இதை மட்டும் ஒப்புக்கவே மாட்டீங்களேஇந்த சமத்துவத்தை தாராளவாத ஜனநாயகசக்திகளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது)நிலம், வளம் உள்ளிட்ட பூமியின் இயற்கை வளங்களையெல்லாம் தனிநபர் சுரண்டலிலிருந்து விடுவித்து மக்களின் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்பதே பொதுவுடைமையாளர்களின் (கம்யூனிஸ்ட் இயக்கங்களின்) இலட்சியம்அதற்காகத் தான் போராடுகிறார்கள். உயிர் தியாகம் செய்கிறார்கள்.

இந்தப் போராட்டப் பாதையில், மக்களை ஒன்று திரட்டுவதில், புரட்சிகர வேலைத் திட்டம் வகுப்பதில், வேலைத் திட்டம் வகுப்பதில், குறிப்பாக இந்திய சமூகத்தில்ம்ம் தமிழ்நாட்டிலும் தான்வர்க்க உணர்வூட்டுவதற்கான வேலைத்திட்டம் வகுப்பதி, இந்திய சமூகம் குறித்த ஆய்வில் சிக்கல்கள், பின்னடைவுகள், தவறுகள் நிலவத்தான் செய்கின்றனஅதிலும் கூட பெரும்பகுதி காரணம் கம்யூனிஸ்ட்கள் வர்க்க அரசியலை, வர்க்க ஆய்வை தெளிவாக முன்வைத்தாலும் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள்’ (தனிச்சொத்து ஆதரவாளர்களாக இருப்பதால்) அதுவல்ல கம்யூனிசம்இது அயல் நாட்டு சரக்குஉள்நாட்டு பிரச்சினையை சரியா பேசலைமார்க்ஸ் வெளிநாட்டுக்காரரு, வெள்ளையா தாடி வச்சிருந்தாருநம்மாளுக தாடி மயிரு வேற மாதிரி என்று ஏதாவது பேசி, குழப்பி முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதால் இந்திய, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் சற்று கூடுதலான சவாலை எதிர்கொள்கிறார்கள்

அதிலும் வன்முறை வன்முறை, கம்யூனிஸ்டுகளும் சர்வாதிகாரிகள் தானே என்ற உங்களின் பூர்ஷுவா ஜனநாயக வாதம் இருக்கிறதேஐயா உழைப்புச் சுரண்டலை பிரதானமாகக் கொண்ட நிலவுடைமை, முதலாளித்துவ அமைப்பே வன்முறையானது. அது மக்களின் வாழ்வுரிமைகளைப் பரித்துக்கொண்டு நிகழ்த்தும் வன்முறையை பேசுங்கள்ஆயுதப் போராட்டம் மட்டுமே வன்முறையல்லபாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஏன் தேவைப்படுகிறதுஅது சர்வாதிகாரமா அல்லது இதுநாள் வரை நம்மை சுரண்டித் தின்று கொழுத்துத் திரியும் அனகொண்டாக்களை வழிக்குக் கொண்டு வர வேறு வழியின்றி அதை வழிமுறையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதா என்று போதிய விளக்கங்கள் உள்ளன…. வன்முறையான அமைப்பைத் தகர்த்து ஜனநாயக அமைப்பை நிறுவுவதே கம்யூனிஸ்டுகளின் போராட்டம். அதில் ஆளும் வர்க்க ஓநாய்களை அடக்கவும், அவர்களுக்கு ஏவல் செய்யும் நரிகளை விரட்டவும் சர்வாதிகார ஆட்சி தவிர்க்கவியலாமல் அவசியமாகிறதுஅவ்வளவேமுதலாளிகளும், ஆளும் வர்க்கமும் எந்த எதிர்ப்புமின்றி சுரண்டிச் சேர்த்த தனிச்சொத்துகளை, அதாவது இயற்கை வளங்களை, உற்பத்திச் சாதனங்களை எல்லாம் மக்களாட்சிக்கே கொடுத்துவிட்டால் நாங்கள் ஏனய்யா சர்வாதிகாரம் செலுத்தப் போகிறோம்?

சிபிஎம், சிபிஐ பிளவு, இணைப்பு, ஜோக்கு குறித்து எல்லாம் காலம் காலமாக பேசியாச்சு.. புளித்துப் போன மாவு ஐயா….

பொதுவுடைமை அரசியலுக்கு உண்மையில் யாரேனும் சரியான பங்களிப்பு செய்ய விரும்பினால் இந்திய சமூகம் பற்றிய ஆய்வில் தொடங்கி, முதலாளித்துவ உற்பத்தி முறையை மாற்ற, சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிறுவ, மூலதனத்தின் பிடியில் இருக்கும் உற்பத்திச் சாதனங்களை அபகரிக்க ஏதேனும் உருப்படியான யோசனை சொல்லுங்கள்



சோஷலிசம், கம்யூனிசம்னு புதுசா ஒண்ணை அவுத்து விட்டிருக்கீங்களே ஐயா, மேற்சொன்ன இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டம் நடத்தி (சில வேளைகளில் ஆயுதம் ஏந்தி) உற்பத்திச் சாதனங்களை தொழிலாளர்களின் அதிகாரத்தில் கொண்டு வரும். அதுக்கே கூட சில பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும். தொழிலாளர்களை உள்ளடக்கிய ஓர் அரசு இயந்திரம் உருவாகும். இது அந்தந்த நாட்டின் (வர்க்கப் பிரிவு, உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளின் தன்மைக்கு ஏற்ப) தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களையும், அரசியலமைப்பையும், சட்டதிட்டங்களையும், புரட்சிகர நிர்வாகக் கட்டத்தையும் கொண்டிருக்கும். சோஷலிசத்திலும் அரசு இருக்கும். முதலாளித்துவ எச்சங்கள் இருக்கும். அதில் தான் நீங்கள் சொல்லும் தனிச்சொத்தும் சிலரிடம் நீடித்திருக்கும். அதற்காக சோஷலிஸ்ட் அரசு (இயக்கம்) அதை அனுமதிக்கிறது என்று பொருள் இல்லை.

மெல்ல மெல்ல அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படும். கம்யூனிச கட்டத்தில் அரசு உலர்ந்து உதிரும் நிலைமை ஏற்படும். இதுதான் சோஷலிசக் கட்டம், கம்யூனிசக் கட்டத்திற்குமான வேறுபாடு பற்றிய எளிய விளக்கம்.

உங்க சொத்தெல்லாம் புடுங்கிக்குவாங்கப்பாஎன்று மக்களை ஏன் பயமுறுத்துகிறீர்கள். எந்த சொத்தைப் பிடுங்குவார்கள் என்பது தெளிவாக உள்ளதுதயவு செய்து படியுங்கள்

இதை விடுத்துஆ.. ஊன்னா எஸ். என். நாகராஜனை மேற்கோள்காட்டிபேரு சரியில்லை, வாஸ்த்து சரியில்லை, செல்லங்களா வாங்க கை குலுக்கிங்கோங்க ன்னு காமெடி பண்ணாதீங்க பாஸ்நாங்க கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோன்னு படிச்சு கம்யூனிஸ்டா இருக்கோம்இயக்கம் நடத்துறோம்அவா, இவா சித்தாந்தமெல்லாம் கம்யூனிசமாகாதுவோய்!

இந்தியக் கம்யூனிஸ்டுகளே ஒன்று சேருங்கள்! சமஸுக்கு மார்க்சிய வகுப்பைத் தொடங்குங்கள்!


No comments:

Post a Comment