Jun 19, 2019

பெண்மையெனும் ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு*
பெட்டி ஃப்ரீடன் (1963)

The Feminine Mystique – பெண்மையெனும் ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு*

Chapter 5 அத்தியாயம் ஐந்து - சிக்மண்ட் ஃப்ராய்டின் பாலியல் அகவாதம் (அல்லது ஆன்ம நித்தியவாதம்) 

The Sexual Solipsism of Sigmund Freud


மூலம் - பெண்மையெனும் ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு (!963)

1998ல் பிரதி எடுத்தவர்: ஆண்டி ப்ளுண்டன்
தமிழ் மொழியபெயர்ப்பு: கொற்றவை

சிக்மண்ட் ஃப்ராய்டிலிருந்துதான் துவங்கியது என்று சொல்வது பாதி தவறாகிவிடும்.  1940கள் வரை அது அமெரிக்காவில் உண்மையாக துவங்கவேயில்லை.  அதற்குப் பிறகும் அது முடிவுக்கு செல்லக்கூடாத தடுப்பு முயற்சியேயன்றி துவக்கம் அல்ல. பெண்கள் மிருகங்கள், மனிதரை விட தாழ்ந்தவர்கள், ஆண்களைப் போல் சிந்திக்க இயலாதவர்கள், வெறும் இனப்பெருக்கத்திற்கானவள், ஆணுக்கு பணிவிடை செய்பவள் என்பன போன்ற பண்டைய முற்சார்புகளை பெண்ணிய அறப்போராளிகள் விஞ்ஞானம், கல்வி மற்றும் ஜனநாயக பண்பு ஆகியவைகளைக் கொண்டு அவ்வளவு எளிதாக சிதறடித்துவிடவில்லை.   நாற்பதுகளில் அவை மிகையின்றி ஃப்ராயிடியன் உருகொண்டு மீண்டும் தோன்றிவிட்டது. ‘பெண்மையெனும் ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு’ ஃப்ராயிடிய சித்தாந்தத்திலிருந்தே தனது திறனை உய்த்துணர்ந்தது; ஃப்ராயிடிலிருது பிறந்த சிந்தனைதான் பெண்கள் மற்றும் அவரோடு கல்வி கற்றவர்களை தாயின் உளப்புழுக்கத்தை, தந்தையின், சகோதரனின், கணவனின் இயலாமைகளை, தணியாசினத்தை, அவர்களது சொந்த உணர்வுகளை மற்றும் வாழ்க்கையில் சாத்தியமாகும் தேர்வுகளைக் கூட தவறாக பொருள் விளங்கிக் கொண்டது. 

பண்டைய முற்சார்புகளை விட புதிய மறைபொருள் அனுபவத்தை கேள்விக்குட்படுத்துவது, நவீனப் பெண்களுக்கு மிகுந்த சிரமம் தரக்கூடிய ஒன்று. ஏனென்றால், அவ்வனுபவம்  - குறிப்பாக முற்சார்புகளின் எதிரிகளான கல்வி, சமூக அறிவியல் தரகர்களால் ஒலிபரப்பப்படுகிறது. ஓரளவுக்கு, ஃப்ராடிய சிந்தனையின் இயல்பானது மறைமுகமாக கேள்விளை ஊறுவிளைவிக்கமுடியாத ஒன்றாக செய்துவிடுகின்றது. அது எப்படி, படித்த அமெரிக்கப் பெண், அதுவும் ஆய்வாளராக இல்லாத ஒரு பெண் ஃப்ராய்டிய உண்மைக்கெதிராக ஒரு கேள்வியை நிணைக்க முடியும்? நணவிலி மன ஓட்டம் குறித்தான கண்டறிதல்கள், மனித அறிவுத்தேடல் முயற்சியில் ஒரு மாபெரும் சாதனை என்று அவளுக்குத் தெரியும். அந்தக் கண்டுபிடிப்பின் மேல் எழுப்பப்பட்ட அறிவியலானது பல துன்பப்படும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவியது என்றும் அவளுக்குத் தெரியும்.   பல வருட பகுப்பாராய்தல் பயிற்சிகளுக்குப் பிறகே  ஒருவர் ஃப்ராய்டிய உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று அவளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.  அவளுக்கு அதற்கு மேலும் தெரியும், மனித மனம் உணர்விழந்த நிலையில் அவ்வுண்மையை எவ்வாறு எதிர்த்து நிற்கிறதென்பதும் தெரியும்.  ஆய்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் அப்புனித நிலத்தில் நடப்பதைப் பற்றி அவள் எப்படி நிணைத்துப் பார்க்க முடியும்?

ஃப்ராய்டின் கண்டறிதல்கள் குறித்த அடிப்படை மேதமை குறித்தும் நமது பண்பாட்டில் அவரது பங்களிப்புக் குறித்தும் யாரும் கேள்வியெழுப்ப முடியாது.  ஃப்ராய்டியர்கள், ஃப்ராய்டிய எதிர்ப்பாளர்கள் கையாளும் உளநிலை பகுப்பாய்வின் செயல்திறன் குறித்து நான் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.  ஆனால் நான் கேட்கிறேன், பெண்ணாக எனது சொந்த அனுபவத்திலிருந்தும், மற்றப் பெண்கள் பற்றிய செய்திரீதியான அறிவிலிருந்தும், இன்றையப் பெண்களின் பால் “பெண்மை” குறித்தான ஃப்ராய்டியக் கோட்பாடுகளின் பொருத்தப்பாடு குறித்து நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.  வெகுஜன பத்திரிகைகள் வாயிலாகவும், ’வல்லுனர்கள்’ என்று சொல்லப்படுபவர்களின் கருத்துக்களின் வாயிலாக, விளகங்களின் வாயிலாக அமெரிக்கப் பெண்களின் வாழ்வில் ஊடுறுவியுள்ளதால் அதன் பயன்பாடு குறித்துக் கேட்கிறேன், சிகிச்சை முறை பற்றி அல்ல! பெண்கள் பற்றிய ஃப்ராய்டியக் கோட்பாட்டின் பெரும் பகுதி வழக்கொழிந்த ஒன்றாகவும், தற்போது அமெரிக்கப் பெண்களுக்கு உண்மையைக் கண்டறிதலில் ஒரு முடக்கம் என்றும், பரவலான பெயரற்ற ஒரு பிரச்சினையின் முக்கியக் காரணம் என்றும் நான் நிணைக்கிறேன்.

இங்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன.  மேல்மனம் (super ego)  பற்றிய கருத்தாக்கம் மனிதனை “செய்ய வேண்டியவைகளின்” (shoulds) கொடுங்கோன்மையிலிருந்து, குழந்தைகள் பெரியவர் போல் மாறுவதிலிருந்து தடுக்கும் கடந்த காலத்திலிருந்து விடுவித்தது. இருந்தாலும், ஃப்ராயிடிய சிந்தனையானது, படித்த நவீன அமெரிக்கப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய “super-ego” வை உருவாக்கியது, அது அப்பெண்களை முடமாக்கியதுடன் புதிய வகையான செய்ய வேண்டியவைகளின் கொடுங்கோன்மையை பரப்பி, பெண்களை பழைய படிமத்துக்குள் மீண்டும் தள்ளி, தேர்வுகளை, முன்னேற்றங்களைத் தடை செய்து, தங்களுக்கென்று ஒரு தனி அடையாளத்தையும் மறுத்தது.

ஃப்ராயிடிய உளவியல் வலியுறுத்தும் அடக்குமுறை ஒழுக்கப்பண்பிலிருந்து பாலியல் நிறைவுக்கான விடுதலை என்பது பெண் விடுதலைச் சிந்தனையின் ஒரு பகுதியாகும். 'பெண் விடுதலை’ மீதான நிலைத்திருக்கும் படிமமானது, ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளின் நீட்சியாகும்: ‘பாரமான முடிகள்’ மழிக்கப்பட்டும், முழங்கால்கள் திறந்துபோடப்பட்டும், தன்னுடைய புதிய சுதந்திரத்தைப் பரைசாற்றும் வகையில், கிரீன்விச் கிராமத்திலோ, சிகாகோவின் வடக்குப் பகுதியிலோ ஒரு கலைகூடத்தில் வாழ்வதிலும், சீருந்து ஓட்டுவதிலும், குடிப்பதிலும், புகைப்பதிலும், பாலியல் சாகசங்களை கொண்டாடுவதிலும், அல்லது அதுபற்றிப் பேசுவதிலும் நிலைத்திருக்கிறது. இன்றைக்கும், ஃப்ராய்டின் வாழ்க்கையிலிருந்தே அவை பலக் காரணங்களால் நீக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் ஃப்ராய்டிய சிந்தனை பாலியல் எதிர்புரட்சிக்கான ஒரு கருத்தாக்க வல்லரணாக இன்றும் நீடிக்கிறது.  பெண்மையின் மரபு வழிப் படிமத்திற்கு புதிய அதிகாரத்தைக் கொடுப்பதற்காக பெண்களின் பாலியல் இயல்பு குறித்து ஃப்ராய்டால் கொடுக்கப்பட்ட வரையரையானது இல்லையெனில், பல தலைமுறைகளாக படித்த, துடிப்பு மிகுந்த அமெரிக்கப் பெண்கள் தாங்கள் யார் அல்லது யாராக இருக்கக்கூடும் எனும் ஒளிமிகுந்த உணர்தலுக்கு அவ்வளவு எளிதில்  திசைதிருப்பப் பட்டிருக்க மாட்டார்கள்

விக்டோரிய சகாப்தத்தில் வியன்னாவில் தன்னிடம் நோயாளிகளாக வந்த நடுத்தர வர்க்கப் பெண்களை வைத்து அவதனித்து “ஆண்குறி ஏக்கம்” எனும் கருத்தாக்கத்தை ஃப்ராய்ட் செதுக்கினார். 1940களில்  அமெரிக்கப் பெண்களைப் பொறுத்துவரை அது முற்றிலும் தவறான ஒரு விளக்கம் என்று அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அழிந்துவரும் பெண்மை எனும் கோட்பாட்டை போதித்துக் கொண்டு சுதந்திரம் நோக்கிய அமெரிக்கப் பெண்கள் இயக்கத்தை எதிர்த்திசைக்குத் திருப்பிக் கொண்டிருந்த பலருக்கு அது ஃப்ராய்டிடமிருந்துதான் துவங்கியது என்பது தெரியாது.  உளவியல் ஆய்வாளர்கள், பிரபலமானவர்கள், சமூகவியலாளர்கள், கல்விமான்கள், விளம்பர தரகர்கள், இதழியல் எழுத்தாளர்கள், குழந்தை நிபுணர்கள், திருமண ஆலோசகர்கள், மந்திரிமார்கள், மதுவிருந்து அதிகாரிகள் என்று நிறையபேர் இக்கருத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.  ஆனால், ’ஆண்குறி ஏக்கம்’ என்பதன் மூலம் ஃப்ராய்ட் என்ன சொல்ல வருகிறார் என்று  இவர்களில் எவரும் அறிந்திருக்கவில்லை.  இன்றைய பெண்களிடம் ஃப்ராய்டின் ‘பெண்மை’ கோட்பாட்டை பொருத்திப் பார்ப்பதற்கு முன், அந்த விக்டோரிய பெண்களை வைத்து ஃப்ராய்ட் என்ன விவரித்தார் என்பதை ஒருவர் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். மேலும், இன்றைய சமூக விஞ்ஞானிகளின் சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்கும்  அறிவுக்கு ஒவ்வாத, பெரும்பாலும் வழக்கொழிந்த அந்த கண்டுபிடிப்பு ஏன் அவ்வாறு அவரால் விவரிக்கப்பட்டது, அது ஏன் அவரது காலத்தில் பிரபலமாகவில்லை என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டபடி ஃப்ராய்ட் மனித பண்புகளின் முக்கியக் கூறுகளை, பிரச்சனைகளை கூர்ந்து ஆராய்ந்து கண்டுணர்ந்தார்.  ஆனால் அதை விளக்குவதில், அர்த்தமுடையதாக்குவதில் அவர் தன் சொந்த பண்பாட்டுக்குள் சிறைபட்டுப்போனார். நமது பண்பாட்டிற்கான ஒரு புதிய கட்டமைப்பை அவர் உருவாக்குகையில், அவரது சொந்த கட்டமைப்பிலிருந்து அவரால் வெளியேர முடியவில்லை.  நுண்ணறிவை பயன்படுத்தாமல் வளரும் இன்றைய சில ஆண்களளுக்கு இருக்கும் பண்பாட்டு செயல்முறை பற்றிய அறிவைக்கூட அவரது நுண்ணறிவு அவரக்கு வழங்கவில்லை.

சமீப காலங்களில் சமூக விஞ்ஞானிகளின் சார்பியலை விட அறிவியல் அறிவை நோக்கி நமது அனுகுமுறையை மாற்றி அமைத்த இயற்பியலாளர்களின் சார்பியல் கடினமானதாக இருந்தாலும் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஏதோ ஒரு சொலவம் (slogan) அல்ல,  அடிப்படை உண்மையாகும்.  எந்த ஒரு சமூக விஞ்ஞானியும் தன்னுடைய சொந்த பண்பாட்டுச் சிறையிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள முடியாது.  பெரும் கண்டுபிடிப்பாளர்களின் விசயத்திலும் இது உண்மை.  அவர்கள் காலம் வரை அறிவியலின் முன்னேற்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு வந்த மொழியிலும், செவ்வரிகளாலும் (Rubrics) மட்டுமே அவர்களது புரட்சிகர அவதனிப்புகளை அவ்விஞ்ஞானிகளால் மொழிபெயர்க்க முடிகிறது. அத்தகைய கட்டளைகளை உருவாக்கும் ந்த கண்டுபிடிப்புகளும் படைப்பாளியின் அனுகூல நிலையோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. 

உயிரியல், தன்னியல்பு, சவாலுக்கிடமற்றது என்று எவற்றையெல்லாம் ஃப்ராய்ட் நம்பினாரோ அவையெல்லாம் ஒரு குறிபிட்ட பண்பாட்டின் விளைவு என்று நவீன ஆய்வுகள் உணர்த்துகின்றன. உலகளாவிய மனித இயல்பு என்று எவற்றையெல்லாம் ஃப்ராய்ட் விவரித்தாரோ அவையெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியின் குறிபிட்ட நடுத்தர வர்க்க ஐரோப்பிய ஆண், பெண்களின் இயல்பாக இருக்கிறது. 

உதாரணமாக, நரம்புத் தளர்ச்சிக்கான மூல காரணம் பாலியல் அடக்குமுறை என்னும் அவரின் கோட்பாடு தொடக்க காலங்களில் அவர் அவதானித்த மனயிசிவு (hysteria) நோயாளிகளிடம் இருந்தே துளிர்த்தது. ஆகவே, வைதீக ஃப்ராய்டியர்களும் பாலியல்  அடக்குமுறையே நரம்புத் தளர்ச்சிக்கு காரணம் என்று நம்புவதாக காட்டிக்கொள்கின்றனர்.  தங்களது நோயாளிகளின் நணவிலி மனதில் தேங்கியிருக்கும் பாலியல் நிணைவுகளையே அவர்கள் கூர்ந்து நோக்குகின்றனர், பிறகு அவற்றை பாலியல் குறியீடுகளாக மாற்றி, தங்களின் வாதங்களுக்கு வலு சேர்க்கின்றனர். 

ஆனால் உண்மை அதுவல்ல, ஃப்ராய்ட் ஆராய்ந்த நரம்புத் தளர்ச்சி பாதிப்பளர்களைப்போல் இப்போது காண்பது அறிது.  அவரது காலத்தில் ஐயத்திற்கிடமின்றி, பண்பாட்டு பாசாங்கே பாலியல் அடக்குமுறையை திணித்தது.  (சில சமூக கோட்பாட்டாளர்கள், சரிந்து விழுந்து கொண்டிருந்த அந்த ஆஸ்த்ரிய ராசாங்கத்தில் கவலைப் பட வேறு ஏதும் இல்லாத நிலையில், 
ஃப்ராய்டின் நோயாளிகளுக்கு பாலியல் மீது ஆழ்ந்த யோசனையைக் கொடுத்ததாக கருதுகின்றனர்). நிச்சயமாக, பாலியலை மறுத்த அவரது பண்பாடே அவரது இவ்விருப்பத்திற்கு காரணம். அதன் பிறகு அவர் வளர்ச்சியின் எல்லா பருவங்களையும் பாலியல் சார்ந்ததாகவே பொருத்தினார், அவர் அவதானிக்கும் எல்லா நிகழ்வுகளையும் பாலியல் செவ்வரியாக வார்த்தார். 

எல்லா உளவியல் நிகழ்வுகளையும் பாலியல் சொற்களுக்குள் பொருத்தி எடுத்துரைக்கும் முயற்சியும், எல்லா பருவ வயதினரின் பிரச்சனைகளையும் குழந்தைப் பருவ பாலுமைப் பிரச்சனையாக பொருத்துவதும் கூட அவரது சொந்த மருத்துவ பின்னணியிலிருந்தே வந்தது.  மனித நடத்தைகள் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு அவ்வப்போது தொந்தரவாக இருக்கும் ஒரு உளவியல் நடைமுறையைக் கையாள்வதில் இருக்கும் அதே கூச்சம் ஃப்ராய்டுக்கும் இருந்தது.  ஆய்ந்தரியப்படாத நணவிலி மனம் எனும் நாட்டிற்குள் பயணிப்பதற்கு உடற்கூரியலோடு தொடர்புபடுத்தி உளவியல் சொர்களோடு விவரிக்கப்படும் ஒன்று வசதியானதாக, உறுதியானதாக, உண்மையானதாக, அறிவியல்பூர்வமானதாக அவருக்கு இருந்தது. அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் எர்னெஸ்ட் ஜோன்ஸ் சொல்வது போல் ‘பெருமூளை உடற்கூறியல் பாதுகாப்பை வலிந்து பற்றிக்கொள்ளும் முயற்சி’.  இன்னும் சொல்லப்போனால், உளவியல் நிகழ்வுகளை நோக்க, தெளிவாக விவரிக்க, தனது கருத்துகளுக்கான பெயரை உடலியல், தத்துவம், இலக்கியம் இப்படி ஏதோ ஒன்றிலிருந்து கடன் வாங்கி சூட்டும் திறன் அவருக்கிருந்தது. ’ஆன்குறி ஏக்கம், அகங்காரம், ஈடிபஸ் சிக்கல் எனும் பெயர்கள் உடலியல் தொடர்பிருப்பதாக தோன்றும்.  ஜோன்ஸ் சொல்வது போல், ‘உலோக தொழிலாளர்களுக்கு உலோகம் எவ்வளவு ஸ்தூலமான ஒன்றோ அது போல் உளவியல் சான்றுகள் அவருக்கு உண்மையானவை’.  குறைபாடுடைய சிந்தனையாளர்களுக்கு இக்கருத்துக்கள் அளிக்கப்பட்டபோது அவை குழப்பத்திற்கான முக்கிய கூறாகிப்போனது. 

விக்டோரிய நூற்றாண்டானது அறிவியல்பூர்வ சிந்திப்பை வடிவமைத்த பண்புகளின் தீர்மானத்திலிருந்தே ஃப்ராய்டிய கோட்பாட்டின் மேல்கட்டுமானம் அமைந்தது.  இன்றைக்கு பௌதிக நடைமுறைகள், உளவியல் செயல்பாடுகளில் காரண, காரியம் பற்றிய சிக்கலான பார்வை ஆகையவை தீர்மானித்தலை மாற்றியமைத்திருக்கிறது.   புதிய கோணத்தில் நடத்தை பற்றி ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள் உளவியல் நிகழ்வுகளை விளக்க உடலியல் மொழியை கடன் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, அதற்கு போலி பூச்சளிக்க தேவையில்லை.  உதாரணத்திற்கு சொல்வதானால், பாலியல் நிகழ்வுகள் என்பது ஏறக்குறைய சேக்ஸ்பியர் எழுதிய ஹாம்லெட் போன்றது தான், வெறும் பாலியல் சொற்றொடர்களை  பயன்படுத்துவாதல் மட்டும் மிகச்சரியாக ’விளக்க’விட முடியாது.” ஃப்ராய்டின் வரலாற்றாசிரியர்கள் கூட ஃப்ராய்டை விளக்குவது சாத்தியமில்லை.  ஞானத்திற்கான புனிதத் தேடல், மூன்று வயதுக்கு முந்தைய பருவத்தில் தன் தாய்க்கும், தந்தைக்குமிடையே படுக்கையறைக்குள் என்ன நடந்தது என்று அறியும் பேரார்வம், திருப்திப்படுத்தபப்டாத பாலியல் உந்துதல் ஆகியவற்றை  ஃப்ராய்டின் உறுதியான பண்பு, உடலியல் நிழற்படத்தை வைத்து அவரது புத்திக் கூர்மையை ஊடுருவிப் பார்த்தாலும் அவர்களால் சொல்லிவிட முடியாது .

இன்றைய உயிரியல் துறையினர், பெருகி வரும் உளவியலாளர்கள் எண்ணிக்கையை  மனித வளர்ச்சியின் உந்துவிசைத் தேவையாக, பாலியல் தேவை போன்று அடிப்படைத் தேவையாக பார்க்கிறார்கள்.  ஒரு குழந்தை வாய்வழியாக, பின்னர் அன்னையின் முலைகள் வழியாக, பிறகு குத செயல்பாடுகளில்  பாலியல் முன்னேற்றம் மற்றும் முதல் பாலியல் சுகத்தை அனுபவிக்கிறது என்று ஃப்ராய்ட் விளக்கிய ’வாய் வழி’, ‘குத வழி’ நிலைகள் இப்போது மனித வளர்ச்சியின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. இவை கலாச்சார சூழல், பெற்றோரின் மனப்பாங்கு மற்றும் பாலியலால் தாக்கம் பெறுகின்றன.  பல் முளைக்கும்போது கடிப்பது, உறுஞ்சுவது ஒரு வளர்ச்சி. அதேபோல் தசையும், மூளையும் கூட வளர்கிறது.; அப்போது குழந்தையனது கட்டுப்பாடு, தேர்ச்சி, புரிதல் எனும் உணர்வுகளைப் பெறுகிறது. கற்பது, வளர்வது அவசியமாகிறது; காலாச்சாரத்தின் பின்னணியில் ஐந்தில், இருபத்தி ஐந்தில், ஐம்பதில்  திருப்திபடுத்த முடிவதப்போல்  மறுக்க, ஒடுக்க, பலகீனப்படுத்த, தூண்ட அல்லது அதைரியப்படுத்த முடிவதைப்போல் பாலியலும் கையாளபப்டுகிறது. ஆரம்ப கால குழந்தை-தாய் பிரச்சனை உணவு பழக்கம், கழிப்பறை பழக்கங்களில் மட்டுமே வெளிப்படுகிறது என்று இன்றைய குழந்தை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.  மேலும், தற்போது அமெரிக்காவில் குழந்தைகள்உண்பதில்லை’ எனும் பிரச்சனை குறைந்துள்ளது.  குழதைகளின் இயல்பூக்க முன்னேற்றங்கள் மாறிவிட்டதா? பொருள்விளக்கத்தின் படி ‘வாய்ப்ப்ழக்க நிலை’ என்பது இயல்பூக்கமானால் அது சாத்தியமேயில்லை. இல்லை, குழந்தை பராமரிப்பு மீது வழங்கப்படும் உரிமை எனும் அமெரிக்க வலியுறுத்தலினாலும், செல்வம் மிக்க நம் சமூகத்தில் தாய்மார்களிடையே உணவு என்பது கவலையளிக்கத்தக்க ஒன்றாக இல்லை என்பதால் உண்ணுதல் என்பது குழந்தைப்பருவ காலத்தின் முக்கியப் பிரச்சனை இல்லை என்று பண்பாடு அதை நீக்கிவிட்டதா? நம் பண்பாட்டில் ஃப்ராய்டின் தாக்கத்தால், படித்த பெற்றோர்கள் குழந்தைகள் மீது கழிப்பறை பழக்க ஒழுங்குபடுத்துதல் எனும் பெயரில் மனநெருக்கடி கொடுப்பதில்லை என்பதில் கவனமாக இருக்கிறார்கள் . அத்தகைய மன நெருக்கடிகள் குழந்தைப் பேச, கற்கத் துவங்கும் பொழுது தோன்றும் வாய்ப்பிருக்கிறது.

1940களில், அமெரிக்க சமூக விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்கள் ஃப்ராய்டிய கருத்தியல்களை, வளர்ந்துவரும் பண்பாட்டு விழிப்புணர்வென்னும் ஒளி கொண்டு மீளாய்வு செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால், ஆர்வமூட்டும்வகையில், அமெரிக்க பெண்கள் மீது ஃப்ராய்டின் பெண்மைக் கோட்பாடுக்ளை நேரடியாக பொருத்திப்பார்ப்பதை தடுக்கவில்லை.

உண்மை என்னவென்றால், இன்றைய மாடிசன் அவென்யு இதழின் ஆசிரியரைக் காட்டிலும் ஃப்ராய்டிற்கு பெண்கள் புதிரானவர்கள், தாழ்ந்தவர்கள், மனித உயிரைக் காட்டிலும் கீழானவர்கள். அவர் பெண்களை சிறுவர்களுக்கான பொம்மைகளாகவே பார்த்தார். அவளது இருப்புக்கு காரணமே ஆணின் அன்பு, அவனை காதலிப்புதும் பணிவிடை செய்வதுமே அவளது கடமை. இதுபோன்ற தன்னுணர்வற்ற ஆண்ம நித்தியவாதமே (Solipsism - அகவாதம் என்றும் சொல்லலாம்) பல நூற்றாண்டுகளாக சூரியன் என்பது பூமியை சுற்றிவரும் ஒரு வெளிச்சம் நிறைந்த பொருள் என்று பார்க்க வைத்தது. இந்த பண்பாட்டின் சொந்த தாக்கத்திலிருந்தே ஃப்ராய்டும் வளர்ந்தார். விக்டோரிய ஐரோப்பிய பண்பாடு மட்டுமல்ல, யூதப் பண்பாட்டிலும் அதுதான் நிலை. யூத ஆண்களின் தினசரி பிரார்தனை ‘கடவுளே உனக்கு நன்றியுரைக்கிறேன், நீங்கள் என்னை பெண்ணாக படைக்கவில்லை, அதனால்’.  பெண்களின் பிரார்த்தனை ‘கடவுளே உனக்கு நன்றியுரைக்கிறேன், நீங்கள் என்னை உங்களின் விருப்பத்திற்கேற்ப படைத்துள்ளீர்கள்’ என்பதாக இருக்கிறது. 

ஃப்ராய்டின் தாயார் ஓர் அழகான பெண், தன்னைவிட இரண்டு மடங்கு வயது மூத்தவரின் சாந்தமான மனைவி; அவரது தந்தை, அடக்குமுறை நிலவிய காலங்களில் வெளியில் எந்த அதிகாரமும் இன்றி இருந்ததால், வீட்டில் எதேச்சிகார அதிகாரத்தோடு நடந்து கொள்ளும் யூத குடும்பத்து ஆண் போலவே ஆட்சிபுரிந்தார். அவரது தாய் இளம் சிக்மண்டை ஆராதிப்பவர், முதல் மகன் அவன், பெரும் காரியங்கள் செய்யக்கூடிய ‘ஞானத்தோடு’ பிறந்தவன் என்று கருதினார்; அவனுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே தான் பிறந்திருப்பதாகக் கருதினார்.  தன் தந்தையிடம் தன் தாய் செலுத்திய அதே அன்பு சிக்மண்டை பொறாமைக்கொள்ள செய்தது. இதுவே ஈடிப்பஸ் சிக்கல் கோட்பாட்டின் அடிப்படை.  தாய், சகோதரி இவர்களோடு அவரது மனைவிக்கும் சிக்மண்டின் விருப்பங்கள் எனும் சூரியனை சுற்றியே அந்த இல்லத்தின் கடமைகள் சுற்றியது.  தனது சகோதரிகளின் பியானோ பயிற்சி சிக்மண்டிற்கு தொந்தரவாயிருந்ததில், பியானோ வெளியேறியது , “அத்தோடு சேர்ந்து இசையமைப்பாளராகக் கூடிய வாய்ப்பும்” என்று பின்னாளில் ஆனா ஃப்ராய்ட் நிணைவு கூறுகிறார்.

ஃப்ராய்ட், பெண்களிடம் அவரின் இந்த மனப்பான்மையை பிர்ச்சனையாகவோ, அல்லது பிரச்சனைக்கான காரணமாகவோ கொள்ளவில்லை. மாறாக, பெண்கள் ஆண்களால் ஆளப்படுவது இயல்பு, ஆணைக் கண்டு பொறாமைக் கொள்வது நோய் எனக் கண்டார்.  நிச்சயதார்த்தம் முடிந்த 4 வருட காலத்தில் (1882-6), தன் எதிர்கால மனைவி மார்த்தாவுக்கு ஃப்ராய்ட் எழுதிய கடிதங்களில் ‘பொம்மை வீடு’ எனும் கதையில் வரும் டாரியால்ட், தன் மனைவி நோரா மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வதற்காக சதா திட்டிக் கொண்டேயிருப்பது போல், அதே தொணியுடன் இருக்கிறது.  வியன்னாவில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் மனித மூளை குறித்த ஆராய்ச்சியில் ஃப்ராய்ட் ஈடுபடத் துவங்கியிருந்தக் காலம் அது;  மார்த்தா காத்திருக்க வேண்டியிருந்தது, “செல்லப் பிள்ளை’ (மார்த்தா) தாயின் பராமரிப்பில், தன்னை அவர் கூட்டிச் செல்லும் வரையில்,  நான்கு வருடங்கள் இருந்தது. அந்தக் கடிதங்களிலிருந்து, மார்த்தாவை அவர் ஒரு குழந்தை-இல்லாளாக மட்டுமே பார்த்தார் என்று தெரிகிறது, வியப்பு என்னவென்றால், அவள் அப்போது குழந்தையாகவும் இல்லை, இல்லாளும் இல்லை. 


மேஜை, நாற்காலி, படுக்கை, கண்ணாடி இவைகள் அந்த மகிழ்ச்சியான தம்பதிகளின் கடந்த காலங்களை நிணைவுபடுத்த வேண்டும், ஒரு சாய்வு நாற்காலி, இனிமையான கலைக் கணவு காண்பதற்கு, தரையை சுத்தமாக வைத்துக் கொள்ள சமுக்காளங்கள், நவீன உடைகள், செயற்கை மலர்கள் பொதிந்த தொப்பிகள், சுவற்றில் படங்கள், மதுவிருந்துக்கான கண்ணாடி குவளைகள், விருந்துக்கான தட்டுகள், உணவுகள், தையல் நாற்காலி, கதகதப்பான விளக்கு என எல்லாம் அதன் அதன் இடத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு பொருளுக்காகவும், தன் இதயத்தை பிய்த்து பகுத்திருக்கும் இல்லாள் எரிச்சலடையக் கூடும். இந்த நோக்கமே இல்லத்தை முக்கியமான பணியாக ஒன்றிணைத்து வைத்திருந்தது. மேலும் அழகுணர்வு, சென்றுவந்த இடங்கள் பற்றிய நிணைப் பொருள்கள், சென்ற கணங்களின் நிணைவு கூறல்கள்..இது போன்ற சிறுமைகளிலா நாம் நம் மனதை அலைய விடுவது? ஆம்..தயக்கமின்றி......

எனக்குத் தெரியும், நீ எவ்வளவு இனிமையானவள் என்று, இல்லத்தை சொர்க்கமாக மாற்றக் கூடியவள்.  வலி நிறைந்ததாக இருந்தாலும் என் விருப்பங்களை நீ எப்படி மகிழ்வுடன் பகிர்ந்து கொள்வாய் என்று. நீ விரும்பும் வரை அந்த இல்லத்தில் நீ ஆட்சிபுரிய நான் அனுமதிப்பேன் . அதற்குப் பரிசாக நீ உன் அன்பை பரிசளிப்பாய், அதுவும் பெண்கள் வெறுக்கப்படும் அந்த எல்லா பலவீனங்களிலிருந்தும் விடுபட்டு உயர்ந்தெழுந்தவளாய்.  என் நடவடிக்கைகள் அனுமதிக்கும் வரை, நாம் இருவரும் ஒன்றாக படிப்போம், கற்றுக் கொள்வோம். அவள் எதிர்காலத் துணைவன் பற்றியும், அவனது தொழில் பற்றியும் அறியாத காரணங்களால் பெண்களுக்கு ஆர்வம் கொடுக்காத விசயங்களில் கூட உன்னை நான் தூண்டுவேன்.

1885, ஜூலை 5, எல்லிஸை தொடர்ந்து சந்திப்பதால் அவர் மார்த்தாவைக் கடுமையாக திட்டுகிறார், (ஆண்கள் மீதான மதிப்பில் வழக்கத்தைவிட குறைவான மதிப்பு கொண்டிருக்கும் ஒரு பெண் அவர்)


நீ இப்பொழுது முதிர்ந்தவளாக இருக்கிறாய், உன் உணர்வு பற்றிய நண்மை என்ன, இந்த உறவு ஏதும் கெடுதல் செய்யாது.....நீ மிகவும் மென்மையானவள்,  இந்த பழக்கத்தை நான் மாற்றியாக வேண்டும், ஏனென்றால் ஒருவர் செய்யும் தவறு இன்னொருவரின் கணக்கில் வந்து சேரும்.  நீன் என் விலைமதிப்பற்ற அழகு மனைவி, நீ தவறு செய்தாலும், அப்படித்தான்...இதெல்லாம் உனக்குத் தெரியும் தானே, என் செல்லப் பிள்ளையே..

பெண்கள் பற்றிய ஃப்ராய்டின் விஞ்ஞானப்பூர்வ கோட்பாடுகளில் காணக் கிடைக்கும் விக்டோரிய வீரமும், அருள்பாலிக்கும் பண்பும்,  ஜான் ஸ்டுவார்ட் மில்லின் “பெண் விடுதலையும், பெண்களின் ஒட்டுமொத்த கேள்விகளும்’ எனும் கட்டுரையை ஏளனம் செய்து நவம்பர் 5,1883 அவர் எழுதிய கடிதத்தில் வெளிப்படுகிறது.

அவருடைய அந்த முழு விளக்கத்திலும் பெண்கள் வேறுபட்டவர்கள் என்பது வெளிப்படவேயில்லை அவர்கள் கீழானவர்கள் என்ற பொருளில் அல்ல, ஆனால் ஆணுக்கு எதிர்பால் என்ற அளவில்.  அவருக்கு பெண்களை ஒடுக்குவது என்பது கருப்பர்கள் ஒடுக்கப்பட்டதற்கு நிகரான ஒன்று.  எந்தப் பெண்ணும், ஓட்டுரிமை அல்லது சட்டத் தகுதி பெறாதவளாயிருந்தாலும், எவரின் கைகளை ஓர் ஆண்மகன் முத்தமிடுகிறானோ, எவன் ஒருவன் அவளது அன்பிற்காக எல்லாவற்றையும் துணிகிறானோ அவன் அவரை திருத்தியிருக்க முடியும். ஆணுக்கு நிகரான இருத்தலியல் போராட்டத்திற்கு பெண்களை அனுப்பவது இறந்து பிறக்கும் குழந்தை போன்றது.  உதாரணமாக, எனது செல்லப் பெண்ணை போட்டியாளராக கருதினால், பதினேழு மாதங்களுக்கு முன்னர் நான் சொன்னது போல்தான் முடியும், அவளை நான் விரும்புகிறேன், சச்சரவை விலக்கிக் கொள்ளுமாறு மன்றாடி கேட்கிறேன். சமாதானத்திற்கும், போட்டியற்ற வீட்டுச் செயலுக்குத் திரும்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.  வளர்ப்பு முறையினால் பெண்களின் மென்மையான குணங்கள் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது, பாதுகாப்புத் தேவையிருப்பினும், வெற்றியாளராக அவளும் ஆணைப் போல் பொருளீட்டலாம்.  அத்தருணங்களில் கடந்து போன மிகவும் மிகழ்ச்சியளித்த ஒன்றை - ஆம் அதுவே இலட்சியப் பெண்மை ,தொலைத்துவிட்டோம் என்று நாம் துக்கம் அனுசரித்துப் பயனில்லை.  இந்த சமூகத்தில் ஆண் தனக்கென ஒரு இடம் பிடிக்கும் முன்னர், இயற்கை பெண்ணின் விதியை அவளது அழகு, கவர்ச்சி, பென்மையினை வைத்து தீர்மானித்து விடுகிறது. எல்லாவிதமான சீர்திருத்த சட்டங்களும், கல்வியும் அதன்முன் உடைந்துவிடும் என்று நம்புகிறேன். சட்டமும், வழக்கமும் பெண்களிடமிருந்து பரித்துக்கொண்டவற்றிலிருந்து நிறைய ஈடுசெய்ய வேண்டியுள்ளது, எதுவாகிலும், பெண்ணின் நிலை நிச்சயம் அப்படியே இருக்கும்: இளமையில் விரும்பப்படும் காதலியாகவும், முதுமையில் ஒரு அன்பான மனைவியாகவும்

ஃப்ராய்டின் எல்லாக் கோட்பாடுகளும், அவரது சொந்த ஊடுருவலோடு, முடிவற்ற உளப்பகுப்பாய்வில் முடிகிறது, மேலும் பாலுணர்வு என்பதே அவரது கோட்பாட்டின் மையமாக இருந்ததால், சில முரணுரைகள் அவரது சொந்த பாலுணர்வோடு பொருந்துகிறது.  நிறைய அறிஞர்கள் கண்டதுபோல், ஃப்ராய்டின் எழுத்துக்கள் முதிர்ந்த வெளிப்பாட்டிற்கு பதிலாக குழைந்தைப்பருவ பாலுணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  அவர் அக்காலங்களில் கண்டிப்பனவராக, ஒழுக்கவாதியாக, கற்புக்கரசராகவே இருந்தார் என்று அவரது முதன்மை வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜோன்ஸ் சுட்டிக்கட்டுகிறார். அவரது சொந்த வாழ்விலும்கூட ஒப்பீட்டளவில் உடலுறவில் நாட்டமின்றியிருந்தால். போற்றித்தழுவிய அன்னை, பதினாறு வயதில் ஜிசெல் எனும் பெண் மீதான மிகையுணர்வுக் காதல் மற்றும் 26வயதில் மார்த்தாவுடனான நிச்சியதார்த்தம் இவையே அவரது வாழ்வில் பெண்களின் நுழைவு. வியென்னாவில் அவர்கள் வாழ்ந்த காலங்களில் இருவரும் சந்தோஷமாக இருக்கவில்லை, ஏனென்றால் மார்த்தா அவரைக் கண்டு அஞ்சினார், விசனம் கொண்டார்.  ஆனால் நான்கு வருடப் பிரிவில், 900 காதல் கடிதங்கள் பேரன்புடன் அணிவகுத்து நின்றன. திருமணத்திற்குப் பின்பு அந்தப் பேரன்பு மறைந்துப் போனது.  ஒழுக்கவாத அடிப்படையில் அயல்புணர்ச்சியில் அவருக்கு நாட்டமிருக்கவில்லை என்று வாழ்க்கை வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.  ஒரு முதிர்ந்த பருவ வயதினராக, நிச்சியதார்த்தக் காலத்தில், தனது தீவிரமான பேரன்பு, காதல், வெறுப்பு என எல்லா உணர்வுகளையும் காட்டியப் பெண் மார்த்தா மட்டுமே . அதன் பின் அவரது கவனம் ஆண்கள் மீது திரும்பியது. மதிப்பிற்குரிய வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜோன்ஸ் சொல்வது “சராசரிகளிலிருந்து நகர்ந்த ஃப்ராய்டின் இந்த விலக்கு, மனதளவில் அவர் கொண்டிருந்த இருபால்தன்மை, அவரது கோட்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு பாதிப்பு செலுத்தியிருக்கும்”.

குறிப்பாக அறியப்பட்ட வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள், ஜோன்ஸ் உட்பட ஃப்ராய்டின் கோட்பாடுகளை அவர் சொந்த வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது சொல்வது, ஒரு வயதான கண்டிப்பான வேலைக்காரி*  பார்ப்வை எல்லாவற்றிலும் உடலுறவைக் காண்பது போல் உள்ளது என்கின்றனர்.  அவரது முக்கியப் புகார் ஒன்று ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அதாவது, அவரது சாந்தமான இல்லாள் போதுமான அளவுக்கு ‘சாந்தமாக’ இல்லை அதேவேளை எதிர்மறையாக “வீரியமிக்க தோழமையாக” இருக்கவில்லை, அதனால் அவரோடு நிம்மதிகொள்ள முடியவில்லை.  

ஃப்ராய்ட் மிகுந்த வலியுடன் கண்டுணர்ந்ததென்னவென்றால், அவளது இதயம் மென்மையானதல்ல, எளிதில் மாற்றக்கூடிய வகையில் வளைந்து கொடுக்காமல் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது ஆளுமை முழுமையான வளர்ச்சி பெற்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது: அது, உளப்பகுப்பாளர்களின் உச்ச பாராட்டான ‘சராசரித்தன்மை’ என்று பெறுவதற்கான எல்லாத் தகுதிகளோடும் இருந்தது.

ஃப்ராய்டின் நோக்கம் பற்றியப் பார்வை இதிலிருந்து கிடைக்கிறது. மார்த்தாவை தன் மனதில் இருக்கும் பிம்பத்திற்கேற்றவாறு மாற்றுவது நிறைவேறவில்லை, அவருக்கெழுதிய கடிதத்தில், ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார் “இளமையாக மாறு என் அன்பே, ஒரு வாரம் மட்டுமே பருவமேறிய தோற்றத்தில், விரைவிலேயே அந்த புளிப்பின் சாயல் தொலைந்துபோகவேண்டும்’. பின்னர் அவர் தன்னையே கடிந்து கொள்கிறார்.

அன்புக்குரியார் பொம்மைபோல் மாறிவிடவேண்டும், அதேவேளை ஒரு சிறந்த தோழியாக, தன் கண்டிப்பான எசமான் ஞானத்தேடல் முடிந்து வரப்போகும் அந்த இறுதி காலத்திற்காக மீதம் வைத்திருக்கும் கூறுணர்வு வார்த்தைகளோடு காத்திருக்க வேண்டும். நானும் அவளது வெளிப்படைத்தன்மையை நொறுக்குவதற்கு எவ்வளவோ முயற்சித்துவிட்டேன், அதன்மூலம் அவள் எனதானவள் எனும் எண்ணம் மேலோங்கும் என்பதற்காக!

ஜோன்ஸ் சுட்டிக்காடுகிறார், தன் அடையாளத்தோடு, கருத்துக்களோடு, உணர்வுகளோடு மற்றும் நோக்கத்தோடு முழுமையாக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக ப்ராய்ட் வைத்த முக்கியச் சோதனைகளில் மார்த்தா தோல்வியுற்ற போது, வேதனை அடைந்தார்.  அவரது முத்திரையாக மாறும்வரை மார்த்தா அவருடையவள் இல்லை.  தன் துணையை மாற்றுவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்பது சோர்வை அளிக்கிறது என்று ஃப்ராய்ட் சொல்கிறார்.  மேலும் தனது காதல் சாதகமான சூழலில்தான் சுதந்திரம் பெறும்.... ஒருவேளை மார்த்தா தன் அன்பு எசமானன் மீது பயம் கொண்டிருக்கிறார் போலும், அதனால் அவர் மௌனத்தில் தஞ்சம் புக நிணைத்திருக்கிறார்.

இறுதியில் அவர் எழுதினார், “நான் என் கட்டளைகளைத் திரும்பப் பெறுகிறேன்.  நான் எதிர்பார்த்த வகையில் தயார் நிலையில் இருக்கும் தோழியாக நீ இருக்கத் தேவையில்லை.  தனியாக போராடுவதற்கு எனக்கு பலம் இருக்கிறது....நீ எனக்காக செல்லமானவளாக, அன்பானவளாக இரு போதும்...’ இவ்வாறாக ’பெண்கள் மீதான உணர்வுகளை [அன்பு மற்றும் வெறுப்பு] வெளிப்படுத்திய அந்த கணங்களோடு’ அதுபோன்ற உணர்வுகள் முடிந்துபோனது. 

அத்திருமணம் வழக்கமான முறையில்தான் நடைபெற்றது, ஆனால் அதற்குரிய பேரன்பு இல்லாமல். ஜோன்ஸ் விவரிக்கிறார்:

மேலும் நிறைய வெற்ற்கரமான திருமணங்கள் இருக்கக்கூடும்.  மார்த்தா நிச்சயமாக ஒரு சிறந்த மனைவி மற்றும் தாய்.  அவர் நேசிக்கத்தகுந்த ஒரு மேலாளர் பணியாட்களை நடத்தும் விதத்தில் அவர்களை காலம் முழுமைக்கும் தக்கவைத்துக் கொண்ட ஓர் அரியவகைப் பெண் ஆனால் அவள் ‘அந்த’ வகை இல்லாள் அல்ல. தன் கணவனின் சுகமும், வசதியுமே அவளுக்குப் பெரிது... ஃப்ராய்டின் கணவுகளில் உழலும் அந்த விமானங்களை அவர் தொடர்ந்து செல்லவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

பெரும்பாலான யூத அன்னைகளைப் போல் அவரும் தன்னை ஃப்ராய்டின் பௌதிகத் தேவைகளுக்காக அர்பணித்துக் கொண்டார், ’அப்பா’வுக்காக அட்டவனைகளிட்டு ஒவ்வொரு உணவையும் சரியான நேரத்தில் மேஜையில் எடுத்துவைப்பது. வாழ்வை சரி பகுதியாக பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று அவர் கணவிலும் நிணைக்கவில்லை.  ஃப்ராய்டும் தன் இறப்பிற்கு பின்னர், அவளை தன் பிள்ளைகளுக்கு பொறுத்தமான பாதுகாவலாராக கருதவில்லை, குறிப்பாக அவர்கள் கல்வி விசயத்தில்.  ஒருமுறை திரையரங்கிற்கு அவரை அழைத்துச் செல்ல மறந்த கணவொன்றை அவரே நிணைவு கொள்கிறார். அவரது சபை, ’முக்கியமற்ற விசயங்களில் மறதியை அனுமதிக்கிறது.’

பெண்ணின் அந்த எல்லையில்லா அடிபணியும் குணத்தை, ஃப்ராய்டிய பண்பாடு சலுகையாக எடுத்துக் கொண்டது.  சுதந்திர செயல்பாடுகளுக்கும், தனிநபர் அடையாளங்களுக்கும் இடமில்லாத் தன்மையானது மனைவியின் மனதில் ஒரு அமைதியினமையை, எதிர்ப்புணர்வை உருவாக்கியது, அது கணவனுக்கு எரிச்சலூட்டியது, இதுவே ஃப்ராய்ட் திருமணத்தின் தன்மை. ஜோன்ஸ் தொகுப்பது போல், பெண்கள் பற்றிய ஃப்ராய்டின் மனவோட்டம் பழமை தன்மைக் கொண்டது, அது அவர் வளர்ந்த அக்காலத்தைய சமூகச் சூழலிலிருந்து உருவானது, மற்றபடி தனிப்பட்ட காரணிகள் ஏதுமில்லை.

இந்த விசயங்களில் அவரது அறிவுபூர்வ கருத்துகள் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும், அவரது எழுத்துக்களில், கடிதங்களில் அந்த உணர்வின் மனவோட்டம் தெளிவாகத் தெரிகிறது. அவர் ஆண்களையே படைப்பின் கடவுளாகப் பார்த்தார் என்று சொல்வது சற்று அதிகமாக இருக்கும், ஏனென்றால் அவரது குரலில்  கர்வம் இருக்கவில்லை. ஆனால், ஆண்களின் வசதிக்கான ஒரு இனிய தேவதையாய் பெண்கள் இருக்க வேண்டும் எனும் பெண்கள் பற்றிய அவரது பார்வையை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். அவரது கடிதங்களிலிருந்தும், காதல் தேர்விலிருந்தும் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, அவரின் மனதில் ஒரே ஒரு விதமான உடலுறுவுக்கான பண்ட மாதிரிதான் இருந்தது.. அது மிகவும் மென்மையான பெண்மை.

ஆணை விட, பெண்ணின் உளவியல் புதிரான ஒன்றாக ஃப்ராய்டுக்கு தோன்றியிருக்கிறதோ என்று ஒரு சிறு சந்தேகம் எழுகிறது.  ஒருமுறை மேரி போனப்பார்ட்டிடம் அவர் சொன்னது: “எனது முப்பது வருட பெண்மையின் ஆண்மா குறித்தான ஆராய்ச்சியில் என்னால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை, அது, பெண்ணுக்கு என்ன வேண்டும் என்பதே” என்கிறார்.

ஜோன்ஸ் குறிப்பிடுகிறார்:

ஃப்ராய்ட் வேறொரு விதமான பெண்கள் மீது நாட்டம் கொண்டிருந்தார், அதாவது அறிவுஜீவியாக, ஆண் தன்மைக் கொண்ட பெண்கள்!  அப்படிப்பட்ட பெண்கள் அவரது வாழ்வில் சில பங்குகளை வகுத்தனர், அவரது ஆண் தோழர்களின் அலங்காரப் பொருளாக, இவரும் அத்தகைய நேர்த்தியான தகுதிகளைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு ஃப்ராய்ட் மீது பாலுணர்வு ஈர்ப்பு வரவில்லை.

அவரது மைத்துனி, மின்னா பெர்னேஸ், மார்த்தாவைவிட  புத்திசாலி மற்றும் சுதந்திரமானவர். பிந்தைய கால பெண் திறனாய்வாளர்கள் அல்லது உளபகுப்பாய்வியல் இயக்கங்களின் ஆதரவாளர்கள்:  மேரி போனப்பார்ட், ஜோவன் ரிவியேர், லூ ஆண்ந்த்ரியேஸ்-சலோமே ஆகியோரும் அப்பட்டியலில் அடக்கம். பூஜிப்பவர்களாயினும், பகைமையுள்ள வாழ்க்கை வரலாற்றாசிரியர்களாயினும், ஏவரேனும் ஒருவருக்கு கூட ஃப்ராய்ட் அயல் புணர்ச்சியில் ஈடுபட்டாரா என்பதில் சந்தேகமில்லை.  அதிலிருந்தே தெளிவாகிறது அவரது பார்வையில் மனித விருப்பங்களில் பாலுணர்வு என்பது விவாகரத்து செய்யப்பட்டிருந்தது, பிந்தைய சாதனை வருடங்களிலும், ஆண் நன்பர்களின் நட்பிலும், சில “ஆண் தன்மை’ கொண்ட பெண்களிடத்தும் இவ்வுணர்வே வெளிப்பட்டது. அவர் ஒருமுறை சொன்னார்: ‘என்னைப் போல், மற்றவர்களை நானே உணர முடியாத காலங்களில், நான் விநோதமாக உணர்கிறேன்’

ஃப்ராய்டியக் கோட்பாட்டின் படி பெண்ணின் ஆளுமைக்கு உந்து சக்தியாக இருப்பது ‘ஆண்குறி ஏக்கம்’, இதுவே தனது கண்களுக்கு முன் அவளை குறையுள்ளவளாக நிறுத்துகிறது, அதனால் அவள் சராசரி பெண்மையுடன் வாழ, கணவனின் ‘ஆண்குறி’க்காக ஏங்குகிறாள். அந்த ஆசையும், அவள் கணவனின் ‘ஆண்குறியை’ முழுமையாக உள்வாங்கி ஓர் ஆண் மகனைப் பெற்றெடுக்கும் வரை முழுமையடைவதில்லை.  சுருங்கச் சொன்னால், அவள் ஒரு ‘தவறுதலான ஆண்’ (homme manque), அதாவது ஏதோ குறைபாடுடைய ஆண்.  க்ளாரா தாம்ப்ஸன் எனும் பிரபல உளப்பகுப்பாய்வாளர் சொல்வது போல்: ”பெண்கள் மீதான விக்டோரிய மனப்பான்மையிலிருந்து ஃப்ராய்ட் விடுபடவில்லை.  பெண்ணாக இருப்பதால் உள்ள மனோபாவக் குறைபாட்ட்டையும், அதை வழிமொழியும் விக்டோரிய வாழ்வு முறையையும் தவிர்க்கவியலாத விதியாக ஏற்றுக்கொண்டார்.   ‘காயடித்தல்’ மற்றும் ‘ஆண்குறி ஏக்கம்’ ஆகியவையே அவரின் சிந்தனையின் அடித்தளமாக இருந்தது, அது பெண்ணானவள், உயிரியல் அடிப்படையிலேயே ஆணை விட பலகீனமானவள் என்ற முற்சார்பு கண்ணோட்டம் கொண்டது. 

”ஆண்குறி ஏக்கம்’ என்பதில் ஃப்ராய்டின் கருத்தியல் என்ன? ஃப்ராய்ட் தன் கலாச்சார பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை என்று அறிந்தோர் கூட, அவர் சொன்னதில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது என்று கேள்வி எழுப்பவில்லை. ‘காயடிப்பு-சிக்கல்’ என்பது ஒரு சிறுவனுக்கு பெண்ணின் பிறப்புறுப்பைக் காணும்போது நேருகிறது, அதன் மூலம் அவன் ‘பெறுமையாக’ கருதும் ஓர் பாலியல் உறுப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் பெண் உடம்பில் இல்லை என அறிகிறான் அதன் மூலம் அவன் ‘காயடிப்பு-ஏக்கம்’ என்பதற்கு ஆளாகிறான், அதுவே அவனுக்கு முன்னேற்றத்திற்கான உந்து சக்தியாக அமைகிறது. அதே போல் பெண்களுக்கு ‘கருவக-நீக்க-ஏக்கம்’, எதிர்பால் ‘பாலுறுப்பை’க் காணும்போது ஏற்படுகிறது. அந்த வேறுபாட்டைக் கண்டவுடன், அவள் தன் குறைபாட்டை உணர்கிறாள். இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ’ஆணுறுப்பின்’ முக்கியத்துவம் உணர்ந்தவுடன், அவள் அதுபோல் வேண்டுமென்று ஏங்குவதாக அறிவிக்கிறாள், ”ஆண்குறி ஏக்கம்” அவளைப் பற்றுகிறது. இது அவளை தன் முன்னேற்றத்தில், பண்பு நலத்தில் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது, சாதகமான சூழல்களில் கூட கடுமையாக மூளைச் சக்தியைப் பயன்படுத்தியே அதை வெல்கிறாள்.  அவள் ‘ஆண்குறியின்மை’யை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாதவளாகிறாள். முரணாக, அப்படி ஒன்று கிடைக்கவேண்டும் என்ற விருப்பத்தை வெகுகாலத்திற்கு கெட்டியாக பற்றிக் கொள்கிறாள், பல்லாண்டுகள் கழித்து அது கிடைக்கும் என்று நம்புகிறாள். 

 அறிவின் உண்மை அவளுக்கு அது அப்படியில்லை என்று உணர்த்தியிருந்தாலும், அவளால் அந்த முழுமை பெறாத வேட்கையை துறக்க முடிவதில்லை. அது அவளது நணவிலி மனதில் ஆழமாக பதிந்து கிடக்கிறது, அதற்காக அவள் குறிப்பிட்ட அளவு சக்தியை பாதுகாக்கிறாள்.  ”ஆண்குறி’யை பெறுவதற்கான ஏக்கம், ஒரு வளர்ந்த பெண் தன்னை ஆய்வுக்குட்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தூண்டுகிறது, அறிவுபூர்வ வளர்ச்சியைப் பெறுவதற்க்கான சக்தியை அதன் மூலம் அவள் எதிர்பார்ப்பதுகூட அடக்கப்பட்ட விருப்பத்திலிருந்து மேலெழும் உணர்வு என்று தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.


‘கருவக நீக்கம்’ என்பதை உணரும் தருணமே பெண் வாழ்வில் ஒரு திருப்புமுனை’. மேலும் தொடர்கிறார் ஃப்ராய்ட், “கூடுதலாக சக்தி பெற்றிருக்கும் ஆணோடு மேற்கொள்ளும் இந்த விரோதமான ஒப்பீட்டால், அவளது சுயமோகத்தில் காயம் ஏற்படுத்துகிறது.   ஆணின் பார்வையில் எந்த காரணத்திற்காக பெண் குறைவானவளாக தெரிகிறோளோ, அதே காரணத்திற்காக அவரது தாய், மற்ற எல்லாப் பெண்களும் அவர்கள் பார்வையிலேயே மதிப்பு குறைந்தவர்கள். இதில் ஏதோவொன்று, முழுமையான பாலியல் எதிர்ப்பு மற்றும் நரம்புத் தளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது, இல்லையென்றால் “ஆண்மை ஏக்கத்திற்கு’, அதன் மூலம் அவள்  “லிங்க செயல்பாடு”களை (phallic activity – லிங்க மைய வாதம் என்றும் சொல்லலாம்)  விட்டுக் கொடுப்பதில்லை, அல்லது சராசரி பெண்மை உணர்ச்சிகள் அடக்கப்பட்டு அவள் “ஆண்குறி ஏக்கத்தோடு’ தந்தையின் மீது நாட்டம் கொள்கிறாள்.  இங்கு ஆண்குறிக்கு ஏங்கும் பெண்மைச் சூழலென்பது குழந்தைப்பேறால் சரி செய்யப்படுகிறது. ஆண்குறியின் இடத்தை குழந்தை எடுத்துக் கொள்கிறது. ’அவள் பொம்மைகளோடு விளையாடியது பெண்மையின் வெளிப்பாடு அல்ல ஏனென்றால் அது செயல்திறன், மந்தப்போக்கு அல்ல. ‘தீவிரமான அந்த பெண்மை ஏக்கமான’ ஆண்குறி ஏக்கம் எப்போது தணிகிறது?  ‘ஏங்கித் தவித்த அந்த நீட்ட*’ ஆண்குறியை கொண்ட ஆண் குழந்தையாக இருந்தால் மட்டுமே தணிகிறது. (longed-for penis)   ’அதுவரை தனக்குள்ளேயே முடக்கி வைத்திருந்த எல்லாக் குறிக்கோள்களையும், ஒரு தாய் தன் மகனுக்கு மாற்றிக்கொடுத்துவிடலாம், அதன்மூலம், அவளுக்கிருந்த ஆண்மை ஏக்கத்தை நிணைவூட்டிய எல்லா துயரங்களிலிருந்தும் விடுபட்டு, நிம்மதி கொள்ளலாம்’.

ஆனால் ஒரு பெண்ணின் உள்ளார்ந்த குறைபாடு, அதன் தொடர்ச்சியான ஆண்குறி ஏக்கம், அவளது ‘மேனிலை மனம் – அவள் மனசாட்சி, லட்சியம் – ஓர் ஆணைப் போல முழுமையானதாக இல்லாவிட்டாலும்:’ இவைகளை வெல்வது கடினம்:

‘பெண்களுக்கு நீதி உணர்வு சற்று குறைவுதான், தங்கள் அகவாழ்வில் உலவும் மிகுபெரும்பான்மை உணர்வால் (preponderance) என்பதில் சந்தேகமில்லை’. இதே காரணத்தால்தான் பெண்களுக்கு சமூக உணர்வு, ஆண்களைவிட குறைவாக உள்ளது. மேலும், தங்கள் உணர்ச்சிகளை மிதப்படுத்திக் கொள்ளும் திறனும் அவர்களுக்கு குறைவு’. இறுதியாக, ‘இந்த பகுப்பாய்வின் மூலம் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும் மதிப்பீடு என்னவெனில், பெண்மையின் உள்ளார்ந்த குறைபாட்டினால் உளப்பகுப்பாய்வியல் கூட பெண்களை பெருதாக மாற்றிவிட முடியாது’ என்று சொல்வதிலிருந்து ஃப்ராய்ட் விலகி நிற்கவில்லை.

முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞர், ஒருவகையில் சொல்வதென்றால், முழுமையாக வளராத ஒரு நபர், ஆய்வுகளின் மூலம் முன்னேற்றத்திற்கான சாத்தியப்பாடுகள் இருந்தால் பயன்படுத்திகொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.  அதேவேளை அதேவயது பெண்  அவருடைய உளவியல் விரைப்புத் தன்மையால், மாற்றம் விரும்பததால் நம்மை அடிக்கடி தளரச் செய்கிறாள்… அவளின் முன்னேற்றத்திற்கான பாதையே இல்லை, எல்லா நடைமுறைகளையும் அடைபட்டு, எதிர்காலத்திற்கான அத்தனை தாக்கங்களும் நுழைய முடியாதது போல் ஆகிவிடுகிறது.  சொல்லப் போனால், நரம்பியல் முரண்களை சரி செய்து அவளது துன்பங்களை களைவதில் நாம் வெற்றி கண்டிருந்தால் கூட அவளில், பெண்மைக்கு இட்டுச் செல்லக்கூடிய முன்னேற்றத்திற்கான பாதை தீர்ந்துவிட்டது.

உண்மையில் அவரின் அறிக்கை சொல்வது என்ன?  ஃப்ராய்டின் மற்ற கருத்தியல்களைப் போல் மறுஆய்வுக்குட்படுத்தினால், “ஆண்குறி ஏக்கம்”  பற்றி நம் அறிவின் வெளிச்சத்தில் புலப்படுவது என்னவென்றால், ஃப்ராய்ட் எதை உயிரியல் எதிர்வினை என்று நிணைத்தாரோ, அது பெரும்பாலும் பண்பாட்டு எதிர்வினை.  ஆண்களைக் கண்டு பெண்கள் பொறாமை படுவதற்கான எண்ணற்ற காரணங்களைக் விக்டோரிய கலாச்சாரம் கொடுத்ததாக காணப்படுகிறது. ஆனால் அதே சூழலை தான் பெண்ணியவாதிகள் எதிர்த்தனர். ஒரு பெண்ணுக்கு சுதந்திரம், ஆண் அனுபவிக்கும் சுகங்கள் அணைத்தும் மறுக்கப்பட்டதால், அதை அனுபவிக்க ரகசியமாக விரும்புகிறாள், அக்கணவில் அவள் ஆணைப்போல இருக்க விரும்புகிறாள், ஒரு ஆணை ஐயப்பாடுக்கிடமின்றி வேறுபடுத்திக் காட்டும் ஒன்றோடு தன்னை காண்கிறாள் – அது ஆண்குறி. நிச்சயமாக, குழந்தையிடம், பொம்மைகளிடம் விளையாடுவதற்காக, அவள் தன் பொறாமையை, கோபத்தை மறைக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவள் இலக்கு சுந்தரமான ஆணைச் சார்ந்து உள்ளது ஆனால் அடிமனதில் அது வதைக்கலாம், அன்புக்காக வாட்டலாம். அவளுக்கில்லாததை எண்ணி, ஆணின் மீது பொறாமைப் பட்டு அவள் தன்னையே ரகசியமாக இகழ்ந்து கொண்டால், அவள் காதல் உணர்வுகளில் உழலத் துவங்குவாள், ஒரு அடிமை போன்று வழிபடும் உணர்வு ஏற்படலாம், ஆனால் அவள் சுதந்திரமான, மகிழ்வான காதலுக்கு தகுதிபெற முடியுமா?  இயற்கையாகவே, பெண் ஆணைவிட பலகீனமானவள் என்று நீங்கள் புரிந்துகொள்ளும் வரை ஆண் மீதான பெண்ணின் பொறாமையை, அவளது சுய அவமதிப்பை, தன் பாலியல் குறைப்பாட்டை மறுத்தலித்தலை விளக்கிவிட முடியாது. மேலும், நிச்சய்மாக, அவளது ’சமத்துவ’ விருப்பமானது நரம்பு தளர்ச்சி என்றாகிவிடுகிறது.

ஆண்களின் மீதுகூட ஃப்ராய்ட் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது இப்போது அறியப்படுகிறது, ஆம் அவர்களில் ஈகோ அல்லது சுயத்தின் வளர்ச்சி – அதாவது ‘இயற்கையோடு சுய-நிறைவு கொள்வதற்கான முனைப்புகள், அதை வென்றெடுப்பது, அதன் மீது கட்டுப்பாடு கொள்வது எனும் உணர்வுத் தூண்டல்’ ஆகியவற்றை அவர் கணக்கில் கொள்ளவில்லை.  ஃப்ராய்டின் ‘சார்பு’ முறையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்ட திறனாய்வாளர்கள், மற்ற நடத்தையியல் விஞ்ஞானிகள், மனிதரின் ‘வளர்ச்சிக்கான’ வேட்கை குறித்து ஆய்வு செய்கையில் அவ்வுணர்ச்சி மனித இனத்தின் அடிப்படைத் தேவை என்று நம்பத் துங்குகின்றனர், அதனோடு எந்த கோணத்தில், வடிவத்தில் குறிக்கீடு நடந்தாலும் அது உளநுல் பிரச்சனையாக வடிவெடுக்கிறது. பாலுமை என்பது மனித உள்ளாற்றலில் ஒரே ஒரு கோணம் அவ்வளவே. ஆணுடன் நேரக்கூடிய பாலியல் உறவு அடிப்படையில் மட்டுமே வைத்து பெண்களை ஃப்ராய்ட் பார்த்தார்.  ஆனால் அவர் பார்த்தப் பெண்களில் பெரும்பாலாருக்கு முழு மனித அடையாளம் பெற முடியாத தீவிர வளர்ச்சி முடக்கமும் அதனால் பாலியல் பிரச்சனைகளும் இருந்திருக்கக்கூடும் . அதாவது முதிர்ச்சியற்ற, முழுமைபெறாத சுயம். அப்போதிருந்த சமூக அமைப்பில் வெளிப்படையான கல்வி மறுப்பு மற்றும் சுதந்திர மறுப்பு பெண்கள் தங்கள் சுய ஆற்றலை முழுமையாக உணர முடியாமல் முடக்கியது, வளர்ச்சியை தூண்டக்கூடிய அத்தகைய சிந்தனைகளை, ஆர்வங்களை அடைய முடியாமல் செய்தது.  ஃப்ராய்ட் அத்தகைய குறைபாடுகளை சுட்டிக் காட்டினார், ஆனால் எல்லாவற்றையும் ’ஆண்குறி ஏக்கம்’ எனும் ஆயத்தின் கீழ் மட்டுமே விளக்கினார்.  ஆணுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று கருதி இரகசியமாக பசித்திருந்த பெண்கள் ஆணின் இலக்காக இருக்க விரும்ப மாட்டார்கள் என்பதை கண்டார். இதில் மட்டும் உண்மையை விளக்குகிறார் என்று சொல்லலாம்.  ஆனால் பெண்ணின் ’சமத்துவத்திற்கான’ ஆழ்ந்த விருப்பத்தை  ‘ஆண்குறி ஏக்கம்’ என்று கூறி தள்ளுபடி செய்து, பெண் எப்போதும் ஆணுக்கு நிகராக முடியாது, ஆண்குறியை உடுத்திக்கொள்ள வேண்டியதுதான் என்று சொல்வது அவரது பார்வை மட்டுமே என்று ஆகாதா.

ஃப்ராய்ட் சமூகத்தை மாற்றியமைக்க சிரத்தை கொள்ளவில்லை, ஆனால் ஆணும், பெண்ணும் அதற்கு தங்களை அனுசரணையாக மாற்றிக்கொள்ள உதவி செய்ய முனைகிறார்.  அதற்காக அவர் குணப்படுத்திய ஒரு நடுத்தர வயது மணமாகாத பெண்மணி பற்றிய நோயாளர் வரலாரொன்றை சொல்கிறார். அப்பெண்மனி பதினைந்து வருடங்களாக வாழ்வின் எவ்வடிவத்திலும், செயல்பாடுகளிலும் ஆர்வமற்ற ‘தனிச்சிறப்புக்குறி-சிக்கலில்’ (symptom-complex) இருத்தார்.  அதிலிருந்து விடுபட்ட பின்னர், அவர் ’கால தாமதமாகிவிடாமல்’  தனது திறைமைகளை முன்னேற்றிக் கொள்ளும் அத்தனை செயல்பாட்டு சுழற்ச்சியிலும் மூழ்கினார், அது எவ்வகையிலும் சிறுமையாக இல்லாமல் வாழ்வின் வெற்றியை, மகிழ்ச்சியை, பாராட்டை வருவித்தது.  ஆனால் அவளுக்கென்று ஓர் இடமில்லை என்று உணர்ந்தபோது அவளது எல்லா முயற்சிகளும் முடிவுக்கு வந்தன. பழைய நரம்பு தளர்ச்சி நோய் அறிகுறிக்கு திரும்ப இயலாத காரனத்தால் விபத்துகளில் சிக்கினாள்; அவள் தன் கணுக்காலை, கையை, பாதத்தை சுலுக்கிக் கொண்டாள், அதுவும் திறனாயப்பட்ட போது ’விபத்துகளுக்குப் பதிலாக, நீர்கோப்பு, தொண்டை கரகரப்பு, குளிர்சுரம், வாதநோய் சார்ந்த வீக்கம் என்று அவள் சிறு நோய்களினால் பீடிக்கப்பட்டாள், அதனால் செயலின்மை எனும் தன்மைக்குள் ஓய்வு பெறுகிறாள், எல்லா விவகாரமும் முடிவுக்கு வருகிறது, இறுதியாக.

இன்று, பெண்ணின் சரிநிகர் அறிவு அறிவியலால் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களது உள்ளாற்றல் வெறும் ‘தசை சக்தியாக’ இல்லாமல் ஒவ்வொறு வடிவத்திலும் நிகழ்த்திக்காட்டப்பட்ட பின்னர் இயற்கையிலேயே பெண் பலகீனமானவள் எனும் விளக்கத்தின் அடிப்படையில் உள்ள கோட்பாடு நகைப்புக்குரியது. ஏனென்றால் அது வஞ்சனை.  காலம் காலமாக மூடி மறைக்கப்பட்ட இப்பாலியல் உன்மை விரிவாக துகிலிரிக்கப்பட்ட பின்னரும், பெண்கள் பற்றிய ஃப்ராய்டின் கோட்பாட்டின் அடிப்படையாக இருக்கிறது. 

ஏனென்றால் ஃப்ராய்டை பின்பற்றுபவர்களால் அவர் வரையறுத்த அந்த பிம்பத்துக்குள் மட்டுமே பெண்ணைக் காணமுடிந்தது அதாவது தாழ்மை, குழந்தமை, ஆணின் செயப்பாட்டு வினைப்பொருளாக தன்னை சரிசெய்துகொள்ளாதவரை மகிழ்ச்சிக்கான சாத்தியமற்ற ஆதரவற்ற மனநிலை கொண்டிருந்ததால் அவர்கள் அடக்கிவைக்கப்பட்ட பொறாமை, சமமாக இருக்க விரும்பும் நரம்பு நோய் வேட்கையிலிருந்து மீள அவர்கள் அவளுக்கு உதவி செய்ய விரும்புகிறார்கள். 

இயற்கையான தாழ்மையை உறுதி செய்வதன் மூலம் பெண்ணுக்கு பாலியல் நிறைவை தேடிக்கொள்வதற்கு உதவ எண்ணினார்கள் .

ஆனால், அந்த தாழ்வு மனப்பான்மையை வரையறுத்த சமூகம் பலமாக மாறியிருந்தது , ஃப்ராய்டை பின்பற்றியவர்கள் இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க உடலியலாக நிலைமாற்று செய்வதற்கு முன்னர் அத்தகைய நிலையினை, அதற்கான காரணத்தை, அதற்கான குணம் (cure) ஆகியவற்றை ஃப்ராய்ட்  ஆண்குறி ஏக்கம் என்று சொல்லி விட்டார்.  புதிய கலாச்சார நடைமுறை பற்றிய அறிவின் வெளிச்சத்தையும், மானுட வளர்ச்சியையும் கொண்டு பார்ப்போமானால், விக்டோரிய பெண்கள் பெறாத கல்விக்கான உரிமை மற்றும் சுதந்திரம் பெற்ற பெண்கள் ஃப்ராய்ட் குணப்படுத்த முயன்ற பெண்களிலிருந்து மாறுபட்டிருந்தனர் என்று அனுமானிக்கக் கூடும். ஆண்களைக் கண்டு பொறாமைப் படுவதற்கான குறைவான காரணங்கள் கூட இல்லை என்பதையும் அனுமானிக்கக் கூடும்.  ஆனால் ஃப்ராய்டின் அமெரிக்கப் பெண்கள் பற்றிய விளங்கிக் கொள்ளுதல் அத்தகைய ஆர்வத்தோடு, நேர்பொருளிலேயே இருக்கிறது. அதனால் ஆய்வு செய்யப்பட்ட பெண்களில் ஆண்குறி ஏக்கம் அத்தகையதொரு தனிப்பொருளாக இருந்ததுபோல் அது தன்னளவில் ஒரு மாயவாதத் தன்மையைப் பெற்றது.  ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களுக்கு அந்நூற்றாண்டு வரை மறுக்கப்பட்டு வந்த வாழ்வியல் அநீதிகள் யாவும் வெறும் ஆண்குறி ஏக்கம் என்றளவில் பகுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.  அக்காலத்தைய பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இக்காலத்தைய பெண்மனிகள் அனுபவிக்கும் வாழ்வியல் வாய்ப்புகள் ’ஆண்குறி ஏக்கம்’ என்பதன் பெயரால் தடைசெய்யப்பட்டிருந்தது.

நவீனப் பெண்களின் கீழ்வரும் பத்தியிலிருந்து ஃப்ராய்டியக் கோட்பாட்டு  தட்டையாக பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்: மரினா ஃபர்ஹாம் மற்றும் சமூகவியலாளர் ஃபெர்டினண்ட் லுண்ட்பெர்க் எழுதிய “தொலைந்துபோன பால்’ (lost sex) எனும் புத்தககத்தின் கருத்துகள், அதன் பெறும்பான்மையான அறிவிப்புகள் பழகிப்போன ஒன்றாக, நம் காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உன்மையாக  மாறும்வரை இதழ்களில், திருமண நிகழ்வுகளில் குமட்டும் அளவுக்கு (ad nauseam) பொழிந்துரைக்கப்பட்டது.  பெண்ணியத்தை ஆண்குறி ஏக்கத்தோடு பொறுத்திப்பார்த்து அவர்களை வகைப்படுத்திக் கூறினர்:

பெண்ணியம், அதன் அரசியல் செயல்முறைத் திட்டங்களில், பெரும்பாலான (முழுமையாக அல்ல) சமூக செயல்முறைத் திட்டங்களில் வெளிப்புற பயன்பாட்டு நிலையையும் தாண்டி அதன் மையத்தில் அது ஒரு ஆழ்ந்த நோய்வாய்ப்பட்டிருந்தது…. இன்றைய பெண்ணியப் பயிற்சி மற்றும் முன்னேற்றத்தின் ஓங்குதிசை பாலியல் இன்பத்தை அடைவதற்கான பண்புகளை மட்டும் பின்வாங்கச்செய்கிறது அத்தோடு சார்பை பயமின்றி, கோபமின்றி ஏற்றுக்கொள்ளும் விருப்பம், பாலியல் வாழ்வு உட்புகுத்துகைக்கான (impregnation) ஏற்புக்காக ஆழ்ந்த உள்ளியிலபோடு ஏற்புத்திறன் மற்றும் பிறவினையை ஊட்டுவதாக இருக்கிறது. 

ஆண் இன்பமடயும் பாதையைப் பின்பற்றி அதுபோன்றதொரு ‘நல’ உணர்வை அடைவது பெண் உயிரினத்தின் ஆற்றலில் இல்லை… பெண்ணைப் பேணி வளர்க்கும்  பாதையிலிருந்து விலகி அத்தகையதொரு ஆணின் தன்னலப் பாதையில் பெண்ணை இணைப்பதற்கு முயன்றது பெண்ணியவாதிகளின் பிழை.

இச்சூழலில் உருபெரும் உளவியல் விதி என்னவென்றால்: எந்த அளவுக்கு பெண் படித்தவள் ஆகிறாளோ அந்தளவுக்கு அவள் பாலியல் கோளாறால் பாதிக்கபப்டுகிறாள், சொல்லப்போனால் தீவிரமாக.  பாலுமைக் கோளாறு அதிகமாகும் பட்சத்தில் குழந்தை பிறப்புக்கான சாத்தியம் குறைவு… லேடி மெக்பெத் இறைஞ்சிக் கேட்டதின் பேரில் விதி அவர்களுக்கு ஒரு வரத்தை வழங்கியுள்ளது; பெண்கள் பாலுணர்வு அழிக்கப்பெறுகிறார்கள், குழந்தை பிறப்பு விஷயத்தில் மட்டுமல்லாமல், இன்பம் உணர்வதிலும்.

இவ்வாறாக ஃப்ராய்டிய  புகழுரையாளர்கள், அவரது அறியப்படாத மரபாக பெண்ணுக்கெதிரான முற்சாய்வை போலி அறிவியல் சிமிட்டியைப் பூசி உட்பொதித்தனர். ஒரு பொருண்மையிலிருந்து எண்ணற்ற விலக்குகளை எழுப்ப நிணைத்த தன் சொந்த சாய்வு பற்றி ஃப்ராய்ட் உணர்ந்தே இருந்தார். அச்சாய்வானது, செழுமையான, படைப்பாற்றல் தன்மை கொண்டது, அந்த ஒரு பொருண்மையின் முக்கியத்துவம் தவறாக பகுத்தாராயப்பட்டால் அது இருமுனை வாள் போன்றதாகக்கூடும்.  1909ல் ஃப்ராய்ட் யுங் கிற்கு எழுதியது:

எனது மறைவுக்குப் பின்னர் எனது பிழைகள் புனித நினைவுச் சின்னங்களாகப் போற்றப்படும் என்ற உங்களது ஊகம் என்னை மிகுதியாக மகிழ்விக்கிறது, ஆனால் நான் அதை நம்பவில்லை. அதற்கு மாறாக என்னை பின்பற்றுபவர்கள் நான் விட்டுச்செல்வதில் எவை பாதுகாப்பானதாக, பலமானதாக இல்லை அவறை உடைத்தெரியும் கரியத்தில் துரிதமாக ஈடுபடுவார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் பெண்கள் பற்றிய பொருளில், ஃப்ராய்டின் பின்பற்றாளர்கள் அவரது பிழைகளை கூட்டத்தான் செய்தனர். அவர்களுடைய உண்மைப் பெண் பற்றிய அவதனிப்புகளை ஃப்ராய்டியக் கோட்பாட்டு கட்டமைப்புக்குள் பொருத்தும் திருகல் முயற்சியில் அவரே விட்டுச்சென்ற திறந்த கேள்விகளைக்கூட மூடிய கேள்விகள் ஆக்கிவிட்டனர்.

உதாரணமாக, ஹெலென் டாய்ஷ், பெண்ணின் உளவியல் – உளப்பகுப்பாய்வியல் விளக்கம் எனும் உறுதியான இரண்டு தொகுப்புகளைக் கொண்ட புத்தகம் 1944ல் வெளிவந்தது. அவரால் பெண்ணின் எல்லாப் பிரச்சனைக்கும் ஆண்குறி ஏக்கமே காரணம் என்பதற்கான எந்தச் சுவடையும் காண முடியவில்லை அதனால் ஃப்ராய்டே புத்தியற்ற செயலாக உணர்ந்த ஒன்றை செய்தார் - பாலியல் வட்டத்தில் மட்டுமல்லாமல், வாழ்வின் எல்லா வடிவத்திலும் பெண்மையை ‘செயப்பாட்டு வினையாகவும்’ (Passive) ஆண்மையை ‘எழுவாய்’யாகவும் (avtive) கணக்குப்போட்டார்.

பெண்ணின் நிலை, புறவயச்சூழலினால் தாக்கம் பெற்ற ஒன்று என்று முழுமையாக உணறும் வேளை, நான் சொல்வதற்கு ஒன்றிருக்கிறது. ‘பெண்மை-மென்மை’ மற்றும் ‘ஆண்மை-வீரியம்’ எனும் இந்த அடிப்படை அடையாளங்கள் வேறு வேறு வடிவங்களில், பலதரப்பட்ட அளவுகளில், விகிதங்களில் எல்லாக் கலாச்சாரங்களிலும், இனங்களிலும் சொல்லபப்டும் ஒன்று,

மிகப் பெரும்பாலும், பெண்கள் இயற்கை அளித்திருக்கும் இந்த பண்பை, அதிலிருந்து சில சாதகங்கள் கிடைத்தாலும் எதிர்க்கின்றனர். அதன் தொடர்ச்சியாக தன்னுடைய சொந்த தேகக் கட்டோடு முழுமையாக நிறைவு கொள்ளவில்லை என்பதை பல்வேறு நடத்தை முறைகளைக் கொண்டு உணர்த்துகின்றனர். இந்த அதிருப்தி உணர்வின் வெளிப்பாடு, அதற்கான தீர்வை நோக்கிய முயற்சியின் விளைவு ‘ஆன்மை ஏக்கம்’.

டாய்ஷ் துல்லியபப்டுத்துவது போல் ’ஆண்மை ஏக்கம்’ என்பது ‘பெண் கருவக நீக்க ஏக்கத்திலிருந்து’ நேரடியாக முளைக்கிறது. இவ்வாறாக உடல்கூறு அமைப்பியலுக்குப் பெண் இன்னமும் ஊழ்வினை! பெண் இன்னமும் ஓர் ‘தவறுதலான ஆண்’! நிச்சயமாக, போகிறபோக்கில் மருத்துவர் டாய்ஷ் சொல்கிறார் ‘பெண்ணைப் பொறுத்தவரை, அவளது வீரியத்திற்க்கும், செயல்பாட்டிற்கும் எதிராக புறச்சுழல் சில தடைகற்களைத் தொடுக்கிறது’. அதனால் ஆண்குறி ஏக்கம், குறைபட்ட பெண் உடல்கூறு அமைப்பியல் மற்றும் சமூகம் இப்படி ’எல்லாமாகச் சேர்ந்து பெண்மையை உருவாக்க ஒன்றிணைந்து போராடுகிறது’.

எவ்வாறாகினும்  தன்னுடைய சொந்த இலட்சியங்களை, ‘சுயத்தன்மையை’ கைவிட்டு கணவன் அல்லது மகனின் இலட்சியங்களின் வாயிலாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளத் தயாராகும் போதே,’சராசரிப் பெண்மை’ என்பது  அடையப்படுகிறது.  இந்த நடைமுறை பாலியலற்ற வழிமுறைகள் மூலம் வளிமப்படுகிறது (sublimated – மேம்படுகிறது). உதாரணமாக, தன்னுடைய உயரதிகாரியான ஓர் ஆணின் கண்டுபிடிப்பு முயற்சிகாக அடிப்படை ஆய்வை மேற்கொள்ளும் பெண் போன்று  தந்தையின் உயர்வுக்காக தன் வாழ்வை அர்பணிக்கும் மகள் கூட இத்தகைய ‘வளிமமாதல்’ மூலம் நிறைவான பெண்மையை அடைகிறாள்.  சமத்துவத்தின் அடிப்படையில், அவளது சொந்த அல்லது சுயத்தன்மையின் ஒரே ஒரு செயல்பாடு ;ஆண்மை சிச்சலுக்கான’  தகுதிபெற்ற மானக்கேடாகிறது’. ஃப்ராய்டின் இந்த புத்திசாலி பெண்மைய பின்பற்றாளர் வகைபடுத்திச் சொல்கிறார், பல்வேறு துறைகளில் தங்கள் சொந்த செயல்பாடுகளின் மூலம் 1994 வாக்கில் அமெரிக்காவில் உயர்புகழ் அடைந்திருந்த பெண்கள் பெண்மையை இழந்தே அத்தகைய புகழை பெற்றனர். அவர் பெயர்களை சொல்லமாட்டார், ஆனால் அவர்கள் அணைவரும் ‘ஆண்மைச் சிக்கலினால்’ துன்புறும் நபர்கள்.

நாற்பதுகளில் திடீரென அதிநவீன சிந்தனைகளில் வழிந்து நிரம்பிய அத்தகைய ஒரு தேவவாக்கை, ஒரு கெடுங்குறி காட்டும் பிரகடனத்தை, உளப்பகுபாய்வாளரலாத ஒரு பெண் அல்லது பெண்களால் எவ்வாறு தள்ளுபடி செய்யமுடியும்?

படித்த அமெரிக்கப் பெண்களை மூளைச் சலவை செய்வதற்கு ஃப்ராய்டிய கோட்பாடுகள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்று சொல்வது நகைப்பூட்டக் கூடியதாக இருக்கும், அது ஒரு உளப்பகுப்பாய்வியல் சதி. நல்-பொருள் புகுழுரையாளர்களாலும், கவனக்குறைவான சிதைப்பாளர்களாலும் அது நடந்தது; அதில் மதம் மாறிய கட்டுப்பாடான நபர்கள், ஆர்வக்கோளாறுக் குழுக்கள், துன்பப்பட்டவர்கள், குணப்படுத்தியவர்கள், லாபத்திற்காக துன்பத்தை ஏற்றுக்கொண்டவர்கள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அக்கட்டத்தில் அமெரிக்க மக்களுக்கே உரித்தான தேவைகள் மற்றும் ஒடுக்கும் சக்திகள் ஆகியவையும் அடக்கம். உண்மையில், ஃப்ராய்டிய பெண்மை நிறைவு கோட்பாட்டை நேர்பொருளாக ஏற்றுக்கொண்டதானது, பெரும்பாலான அமெரிக்க உளப்பகுப்பாய்வாளர்களைப் பொறுத்தவரை தங்கள் நோயாளிப் பெண்களில் கண்டறிந்ததை ஃப்ராய்டிய கோட்பாட்டோடு ஒத்துபோகச் செய்வதற்காக செய்த தனிப்பட்ட போராட்டங்கள் ஆகியவை துன்பியல் கேலிக்கூத்து முரணாகிப்போனது.

வியன்னாவில் இருக்கும் ஃப்ராய்டிய சொந்த உளப்பகுப்பாய்வியல் கல்விக்கூடத்தில் கடைசியாக பயிற்றுவிக்கப்பட்ட நியுயார்க் திறனாய்வாளர் ஒருவர் என்னிடம் சொன்னார்:

அமெரிக்கப் பெண்களை இருபது வருடங்களாக திறனாய்வு செய்ததில் நான் கண்டது, எனக்கு விருப்பமில்லாத வகையில் ஃப்ராய்டியப் பெண்மைக் கோட்பாட்டை, என் நோயாளிகளின் வாழ்க்கையோடு மேன்மேலடுக்கிப் (superimpose) பார்க்கவேண்டிய நிலையில் இருந்தேன். ஆண்குறி ஏக்கம் என்பது இருக்கவேயில்லை எனும் முடிவுக்குத்தான் நான் வரவேண்டியிருந்தது. பாலியல் ரீதியாக, பிறப்புறுப்பின் வாயிலாக முழுமையாக உணர்ச்சி வெளிப்பாடோடே இருந்தனர். ஆனாலும் முதிர்ந்த, ஒருங்கிணைந்த, நிறைவு பெற்ற தன்மை இருக்கவில்லை.  என்னுடைய நோயாளிகளில் ஒருவர் இரண்டு வருட சிகைச்சியில் இருந்தார். அவரது பிரச்சனை என்னவெனக் கண்டுபிடிக்க இரண்டு வருடங்கள் பிடித்தது. அது என்னவென்றால் அவருக்கு வெறும் இல்லத்தரசியாக, தாயாக இருப்பதில் நிறைவில்லை.  பள்ளியில் வகுப்பெடுப்பதாக ஒரு கணவு கண்டதாக சொன்னார்.  இந்த சக்திவாய்ந்த ஆழ்ந்த விருப்பத்திற்கு அடிப்படைக் காரணம் ‘ஆண்குறி ஏக்கம்’ என்று என்னால் தள்ளுபடி செய்ய முடியவில்லை. முதிர்ந்த சுய-நிறைவுத் தேவைக்கான அவருடைய சொந்த உணர்வு வெளிப்பாடு அது. நான் அவரிடம் சொன்னேன் “இந்த கணவை என்னால் திறனாய்வு செய்ய முடியாது. அது குறித்து நீங்கள் தான் ஏதாவது செய்யவேண்டும்’.

பிரபல ஈஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் முதுகலை மருத்துவமனையில் இதே மனிதர் இளம் திறனாய்வாளர்களுக்கு வகுப்பெடுக்கிறார். அவர் சொல்வது: ‘நோயாளிகள் புத்தகத்தோடு பொருந்தவில்லையென்றால், புத்தகத்தை தூக்கி எறிந்துவிட்டு நோயாளிகள் கூறுவதை காதுகொடுத்துக் கேளுங்கள்’.

ஆனால் பெரும்பாலான திறனாய்வளர்கள் தங்கள் நோயாளிகளின் மேல் அந்தப் புத்தகத்தையே எறிந்தனர். எனவே ஃப்ராய்டியக் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையானது. தாங்கள் திறணாய்வாளர் மஞ்சத்தில் அமரவில்லையென்றாலும்  படித்தவற்றை, கேட்டவற்றை வைத்துப் பெண்கள் மத்தியிலும் கூட அது வென்றது. இந்நாளில், அமெரிக்கப் பெண்கள் மத்தியில் பரவியிருக்கும் தகிக்க முடியாத விரக்தியானது பெண்மை பாலியல் சார்ந்ததல்ல என்று இன்னமும் பிரபல பண்பாடுகளுக்குள் ஊடுருவவில்லை. நாற்பதுகளின் இறுதியில் ஃப்ராய்ட் மிக விரைவாக, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டார், படித்த அமெரிக்கப் பெண் இனத்தை நோக்கி வீட்டுக்குத் திரும்பச் சொல்லி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எவரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.  இறுதியாக சந்தேகத்திற்கிடமின்றி ஏதோ ஒன்று தவறாக செல்கிறது என்று விளங்கியபோது கேள்விகள் எழுந்தது. முழுமையாக ஃப்ராய்டிய கட்டமைப்புக்குள்ளேயே அக்கேள்விகள் கேட்கப்பட்டபோது ஒரே ஒரு பதில்தான் சாத்தியமானது: ’கல்வி, சுதந்திரம், உரிமை பெண்களுக்களிப்பது தவறானது’.

புறநிலை உண்மைகள் பற்றியக் கேள்வியிலிருந்து நிவாரனத்தை அளித்ததால் அமெரிக்காவில் ஃப்ராய்டிய போதனையை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் தன்மை உருவாக்கப்பட்டது, குறைந்தபட்சம் அது பகுதி பகுதியாக நிகழ்ந்தது. போருக்குப் பின்னர் வந்த ’வீழ்ச்சி’ காலத்திற்குப் பின்னர் ஃப்ராய்டிய உளவியலானது மானுட நடவடிக்கை பற்றிய விஞ்ஞானத்திற்கும் மேலான ஒன்றாகவும், துன்புறுவோருக்கான சிகிச்சையாகவும் மாறியது.  சகலத்தையும் அரவணைக்கும் ஓர் அமெரிக்க கருத்தியலாக, ஒரு புதிய மதமாக மாறியது.  அணுகுண்டிலிருந்து ஒரு வசதியான தப்பித்தலை அது வழங்கியது, மெக்கார்த்தியவாதம் (* கம்யூனிசம் பற்றிய பயமும் ஒரு காரணம்), ஒரு இறைச்சி துண்டு கெட்டுப்போவதால் ருசி கெட்டுப் போகும் பிரச்சனை, சீருந்து, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கொல்லைப்புற நீச்சல் குளம் என்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ஃப்ராய்டியக் கோட்பாடு. பாலியலை நன்னெறி படுத்திய இந்த புதிய உளத்தரவு மதம் எல்லா தனிப்பட்ட களங்களிலிருந்து பாவத்தை விடுவித்தது, மேலும், மனம் மற்றும் ஆன்மா பற்றிய பேரார்வத்தின் மீது அவநம்பிக்கையை பதித்தது இவையெல்லாம் ஆணைவிட பெண்ணின் மீது  பேரழிவு தரும் வகையில் அமைந்தது தற்செயலானது, யாரும் அதை அவ்வகையில் திட்டமிடவில்லை. 

பெண்மை என்பது ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவாகிப் போனதற்கு உளப்பகுப்பாய்வு சிகிச்சை என்பது தொழிற்முறைப் பயிற்சியானது  எவ்விதத்திலும் முதன்மைக் காரணமில்லை. எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களின் ஆசிரியர்கள், விளம்பர நிறுவனங்களின் ஊக்கப்பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்னாலிருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஃப்ராய்டிய சிந்தனை புகழுரையாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் உருவாக்கம் அவ்வளவே. ஃப்ராய்டிய மற்றும் போலி-ஃப்ராய்டிய கோட்பாடுகள் எல்லா இடத்திலும் நேர்த்தியான எரிமலைச் சாம்பலைப் போல் நிலையூன்றியது. சமூகவியல், மாந்தரியல், கல்வி, வரலாறு மற்றும் இலக்கியப் படிப்பு கூட ஃப்ராய்டிய சிந்தனையால் உருமாரியது, ஊடுருவியது.  பெண்மை எனும் ஈர்ப்புக் கூடிய புதிரான சூழமைவின் சுறுசுறுப்புமிக்க மதபோதகர்கள் நடைமுறையாளர்கள், ’திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு கல்வி’ எனும் புதிய துறையின் துவக்கத்திற்காக முற்-செறித்த அவசர ஃப்ராய்டிய விழுங்கல்களை பறிமுதல் செய்தவர்கள். திருமணத்திற்கான நடைமுறை படிப்புகள் அமெரிக்கப் பெண்கள் எவ்வாறு ‘பெண் எனும் பாத்திரத்தை’ சிறப்பாக செய்வது என்று பயிற்றுவித்தது பழைய பாத்திரம் புதிய விஞ்ஞானமானது.  கல்லூரிகளுக்கு வெளியே இதுபோன்று செயல்பட்ட மற்ற இயக்கங்கள் பெற்றோர் கல்வி, குழந்தை ஆய்வுக் குழுக்கள், குழந்தைப் பேறுக்கு முந்தையத் தாய்மை படிப்புக்கான குழுக்கள் மற்றும் மனநல கல்வி ஆகியவை புதிய அதீத தன்முனைப்பாற்றலை (சூப்பர் ஈகோ) நிலமெங்கும் பரப்பியது.  படித்த இளம் மனைவியர் மத்தியில் ப்ரிட்ஜையும், ‘கானஸ்டா’ வையும் (சீட்டு விளையாட்டு)
பதிலீடு செய்தது. ஃப்ராய்டிய சூப்பர் ஈகோ பெருகிவரும் இளம் மற்றும் கவர்ச்சிமிக்க அமெரிக்க பெண்கள் மத்தியில் வேலை செய்தது. ஆம் - ஃப்ராய்ட் சொன்னபடி மேனிலை மனம் வேலை  செய்தது கடந்த காலத்தை நிலைத்திருக்கச் செய்தது.

மானுடம் முழுமையாக நிகழ்காலத்தில் வாழ்வதில்லை, அதீத தன்முனைப்பாற்றல் கடந்தகாலத்தை, இனத்தின், மக்களின் பாரம்பரியங்ளை நிலைத்திருக்கச் செய்கிறது, மெதுவாக அவை நிகழ்காலத்தில் தாக்கம் பெறுகின்றன, மேலும் புதிய முன்னேற்றத்தில், அவை ஆதீத தன்முனைப்பாற்றலின் மூலம் வேலை செய்கையில், அது மனித வாழ்வில் ஒரு முக்கியப் பங்களிக்கிறது, பொருளாதார நிலைகளின் தாக்கம் ஏதுமின்றி சுதந்திரமாக.

ஒர் அறிவியல் மதமாக ஃப்ராய்டால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பெண்மையெனும் ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு, பெண்களுக்கு எதிர்காலத்தைப் பெற்றுத் தரக்கூடிய, வாழ்வை கட்டுப்படுத்தக்கூடிய, அதீத பாதுகாப்பளிக்கக்கூடிய ஒன்றாக தோன்றியது. பேஸ்பால் விளயாடி வளர்ந்த பெண்கள், குழுந்தை பராமரிப்பு செய்தவர்கள், ஏறக்குறைய சுதந்திரமாக வடிவியலை தேர்ச்சி பெற்றவர்கள், பிளவு-இணைவு காலகட்டத்தின் பிரச்சனைகளை சந்திக்ககூடிய திறன் வாய்ந்தவர்கள் இப்படி எல்லோரும் விக்டோரிய முற்சாய்வினால் ‘பொம்மை இல்லத்துக்கள்’ ஒடுக்கப்பட்ட நோராவைப் போன்று வாழவதற்காக தங்களது பழங்காலத்திற்கு திரும்பவேண்டும் என்று மிகவும் மேம்பட்ட சிந்தனையாளர்களால் அறிவுறுத்தப்பட்டது.  தங்களின் சொந்த மதிப்பும், அறிவியல் அதிகாரத்திற்கான பேரார்வமும் மாந்தரியல், சமூகவியல் உளவியல் இப்போது அவ்வதிகாரத்தைப் பகிர்கின்றன பெண்மை எனும் ஈர்ப்பு கூடிய புதிரான சூழமைவை கேள்விக்கப்பாற்பட்டு விலக்கி வைத்துள்ளது. 
பின்னிணைப்பு:

* Mystique – எனும் சொல்லை ’புதிர்’ (mystery) என்று மொழி பெயர்க்கும் போது அது சற்று குறுகிய தன்மையோடு இருக்கிறது.  அகராதியில் அவ்வார்த்தை  புரியாத பொருள், விடுகதை, சொற்பொறி எனும் பொருளோடு, நாம் அறியாத ஒன்றை அறிய முயலுதல் என்று பொருள்படுகிறது.  மேலும் ஆர்வத்தை தூண்டுவதற்காக சம்பந்தபட்ட பொருள் அல்லது நபர் அல்லது செயல்பாடு தெளிவான தன்மைகளை வேண்டுமென்றே வெளிப்படுத்தாத செயலாக அது பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அப்பொருளில் / நபரில் இயல்பிலேயே அத்தன்மை இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு சிந்தனை போக்காகவும் இருக்கிறது.

மாறாக ‘மிஸ்டிக்’ என்பது பல்வேறு சித்தாந்தங்களால், சிந்தனைகளால், விருப்புறுதிகளால், நம்பிக்கைகளால் ஒன்றை அல்லது ஒருவரை சுற்றி மற்றவரால் கட்டமைக்கப்படும் ஒன்று, அதன் மூலம் ஒன்றின் அல்லது ஒருவரின் பண்புக்கு ஒருவித மேம்படுத்தப்பட்ட, ஆழ்ந்த பொருளை கொடுப்பது என்றாகும். மேலும் இவ்விளக்கம் கட்டமைப்பு அரசியலுக்கு அழுத்தம் கொடுக்கிறது.  அவ்வகையில் ‘புதிர்’ என்பதை ஆணாதிக்க மொழி பரிந்துரைக்கும் ஒரு பண்பை,  பெண்மையின் பண்பாக ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்று கருத வேண்டியிருக்கிறது. மிஸ்டிக் என்பதற்கு ‘ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு’ என்று சொல்லும்போது அது ஒரு விரிந்த பொருளை கொள்வதாக கருதுகிறேன். அதாவது சூழல் அமைவு எனும் பொழுது environmental setup - சூழலில் ஏற்படுத்தப்படும் ஒரு அமைவு (ஏற்பாடு) என்று விரிவடைகிறது. சரியாக சொல்வதானால் ஆணாதிக்க தாக்கத்தால்  , புறச் சூழலில் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பு – திட்டமிட்டு சூழலெங்கும் பரப்பப்பட்ட ஈர்ப்பின் விளைவால் நேர்ந்த புதிர் தன்மை. பெட்டி ஃப்ரீடன் அவர்கள் ஃபெமினைன் மிஸ்டரி என்று குறிப்பிடாமல் ஃபெமினைன் மிஸ்டிக் என்று குறிப்பிடுவதில் உள்ள வேறுபாட்டை இங்கு கவனத்தில் கொண்டு விளக்குவது அவசியமாகிறது. அகராதிகளில் மிஸ்டரி என்பதற்கும் மிஸ்டிக் என்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ள பொருள் விளக்கங்கள் வேறு வேறாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அச்சொல்லின் விளக்கங்களில்  போதாமை இருப்பதால் தான், அவர் ஃப்ரென்ஞ்  சொல்லான மிஸ்டிக் என்பதை பயன்படுத்தியுள்ளார் என்றும் கொள்ளலாம்.


1. அப்பதத்தில் உடன்பாடில்லையெனினும் அதை இங்கு ஆசிரியர் சுட்டும் பொது புத்தி வழக்குச் சொல் என்ற அடிப்படையில் பயன்படுத்தியுள்ளேன்

ஆசிரியர் குறிப்பு:

பெட்டி ஃப்ரீடன் (பிப்ரவரி 4, 1921 – ஃபிப்ரவரி 4, 2006) – அமெரிக்க எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் பெண்ணியவாதி.
அமெரிக்க பெண்கள் இயக்கத்தின் முன்னணி ஆளுமை. 1963ல் அவர் எழுதிய ’தி ஃபெமினைன் மிஸ்டிக்’ (பெண்மையெனும் ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு) எனும் புத்தகம் 20ம் நூற்றாண்டின் “இரண்டாம் அலை” பெண்ணிய போராட்டங்களுக்கு தூண்டுகோலாய் அமைந்ததென பாராட்டப்படுகிறது.  அப்புத்தகத்தைப் படித்து நூற்றுக்கணக்கான ‘இல்லத்தரசிகள்’ அவருக்கு கடிதம் எழுதினர். அதைத் தொடர்ந்து பெண்களுக்கான உதவி மையமாய் ‘பெண்களுக்கான  தேசிய அமைப்பை’ 1966ல் ஃப்ரீடன் தோற்றுவித்தார். அதன் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆணுக்கு பெண் சமமே என்று வலியுறுத்தி, பெண்களை அமெரிக்க மைய நீரோட்ட சமூகத்திற்கு கொண்டுவருவதற்கான வல்லமை மிக்க பெண்ணிய அமைப்பாக அது திகழ்ந்தது. 

பெட்டி ஃப்ரீடன் அமெரிக்காவின் செல்வாக்கு மிகுந்த ஆசிரியர் மற்றும் அறிவுஜீவியாக கருதப்படுகிறார். அரசியல் களத்தில் தன் வாழ்நாளில் மிகுந்த செயலூக்கத்துடன் திகழ்ந்தார்.  இல்லத்தரசிகளையும், ஆண்களையும் தாக்கி செயல்படும் பிரிவினைவாத தீவிர பெண்ணியவாதத்தை விமர்சனத்துடன் அணுகினார். ”செக்கண்ட் ஸ்டேஜ்” (second stage – இரண்டாம் நிலை) எனும் தனது புத்தகத்தில், சில பெண்ணியவாதிகளின் தீவிரத்தன்மையை குறிக்கையில் அவர்களை ”பாலினப் பெண்ணியவாதிகள்” (gender feminists) என்று வரையறுத்தார். பெண்களின் வாழ்வுக்காக, உரிமைகளுக்காக அமெரிக்கப் பெண்களின் மனவோட்டத்தை மீள்-ஒழுங்கு செய்வதே  அவரது விருப்பம்.
”பெண்மையெனும் ஈர்ப்புகூடிய புதிரான சூழமைவு (பெண்மையெனும் விளக்கத்திற்கப்பார்பட்ட அனுபவம், பெண்மைப் புதிர் என்றும் சொல்லப்படுகிறது)  – என்பதை 1950 – 1960 தொடக்க காலத்தில் பெண்கள் மத்தியில் நிலவிய பரவலான மகிழ்ச்சியின்மையை “பெயரற்ற ஓர் பிரச்சனை” என்று முன்னுரையில் விவரிக்கிறார். சிறந்த பொருள் வசதி, குழந்தை செல்வம் என்று இருந்தும் மனநிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்த அமெரிக்கப் பெண்களின் வாழ்வை அப்புத்தகம் பேசுகிறது. மனைவி, தாய் என்ற கற்பனாவத பெண் பாத்திரத்திற்கு எதிராக செயல்பட்ட துவக்கக்கால அமெரிக்கப் பெண்ணியவாதிகள் குறித்தும் அதில் விவாதிக்கிறார்.  உளவியல் கல்வியில் பட்டம் பெற்ற ஃப்ரீடன், சிக்மெண்ட் ஃப்ராய்டை விமர்சிக்கிறார். உயிரியல் துறையில் உடலைப் படிப்பது போல் சமூக நிறுவனங்களை ஆய்வுசெய்து சமூக விஞ்ஞானத்தை நம்பகத்தன்மையுடையதாய் மாற்ற முயற்சிக்கும் ‘அகவாதத்தை’ விமர்சிக்கிறார். 
இப்புத்தகம் ”வரலாற்றின் மீதான பார்வையை முடக்கிவிட்டதாக எதிர்காலவாதி (futurist) அல்வின் டாஃப்லர் குறிப்பிடுகிறார். 2000 ஆம் வருடத்திற்குள் இப்புத்தகம் 3 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கிறது, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
இந்தக் கட்டுரையில் அவர் சிக்மண்ட் ஃப்ராய்டின் பாலியல் அகவாதம் குறித்து விவாதிக்கிறார். உளவியல் ஆய்வுகளில் கூட அக்காலக்கட்டத்தின்  சூழமைவுகள், தனி மனித கருதுகோள்கள் எத்தகைய தாக்கம் செய்கின்றன என்பதற்கு இக்கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இது போன்ற சூழமைவுகளை பொறுத்திப் பார்த்து போலிக் கோட்பாடுகளை கட்டுடைப்பு செய்வது நடதுவந்தபோதிலும் பக்தியிலிருந்து அறிவைப் பிரித்தெடுக்கவியலாத இறுக்கமான இந்தியச் சூழலில், தமிழ் சூழலில் அது பெரும் சவாலுக்குறியதாய் இருக்கிறது.

(2012 ஆகஸ்ட் மாதம் அடவி இதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு கட்டுரை) 

No comments:

Post a Comment