Jan 30, 2016

சாதியப் போராட்டத்தின் போர்வையில் வர்க்கப் போராட்டம்



ஆறு மாதங்களுக்கு முன்பு (ஜுன் 12, 2012) ஸ்ரீகுளம் மாவட்டம் லக்‌ஷ்மிபேட்டாவில் வசிக்கும் தலித் குடும்பங்கள் மீது துருபு கப்பு குடும்பங்கள் (இதர பிறபடுத்தப்பட்ட வகுப்புகள்) நிகழ்த்திய கோரமான அட்டூழியங்களை அனைவரும் அறிந்திருப்பர். இதுபோன்ற அட்டூழியங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது. அட்டூழியங்கள் நடக்கும்போதெல்லாம், தொலைவில் இருக்கும் மக்களும் அதை புறக்கணிக்காமல், அதுபற்றி சிந்திக்கின்றனர். லக்‌ஷ்மிபேட்டாவில் நடந்த அந்த சமீபத்திய அட்டூழியத்தை நிறைய மக்கள் கோபத்தோடும், பாதிக்கப்பட்டவர்கள் மீது இறக்கத்தோடும் சிந்தித்துப் பார்க்கின்றனர். தங்களது ‘வெற்றியின்’ விளைவால் அந்த அற்ப மனிதர்களுக்கு கூட தாங்கள் நிகழ்த்திய அந்த அட்டூழியங்கள் குறித்து சில சிந்தனைகள் இருக்கும்.

மூன்று ஆறுகள் ஒன்றுகூடும் அந்த ஸ்ரீகுளம் மாவட்டத்தில், விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் செய்வதற்கு மற்றும் அருகில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு நீர் விநியோகம் செய்வதற்கான ஒரு திட்டத்தின் கீழ், மாநில அரசாங்கம் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கி நான்காயிரம் ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கியது. அப்படி வாங்கப்பட்ட நிலத்தில் கப்புக்கள் நிலங்கள் மட்டுமல்லாது தலித்துகளின் சிறு துண்டு நிலங்களும் அடக்கம். நஷ்ட ஈடு வழங்கியபோது, கப்புக்களின் பெரிய ப்ளாட்டுகளுக்கு  வழங்கப்பட்ட விலை போல் தலித்துகளின் சிறு துண்டு நிலங்களுக்கு அதே அளவு விலை கொடுக்கப்படவில்லை. நிலங்களை விற்ற விவசாயிகள் பல்வேறு தொலைதூர இடங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். தங்கள் நிலங்களை விற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மேலதிக விலை பெற்று தங்களது வணிகங்களை தொடர்ந்து வந்தார்கள். நீர் பாசன இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட லக்ஷ்மிபேட்டா ஒரு புதிய இடத்தில் புதிய லக்‌ஷ்மிபேட்டாவாக, நீர்பாசன இடத்திலிருந்து வெகு தொலைவில் உருவானது. புதிய லக்‌ஷ்மிபேட்டா பகுதியில், நீர்பாசன வசதிக்காக பயன்படுத்தப்படாத மீதி நிலம் 250 ஏக்கர் எஞ்சியிருந்ததுஇந்த நிலமும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பகுதியே. இவ்வாறாக, இந்த நிலமும் அரசாங்கத்தினுடையதே. கிடைத்திருக்கும் தகவல்படி, புதிய லக்‌ஷ்மிபேட்டாவில் கப்புக்களின் வீடுகளும், தலித்துகளின் வீடுகளும் இந்திரா காந்தி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. அதனால் மற்ற வட்டாரங்களைப் போல் அல்லாது இரண்டு தரப்பு வீடுகளும் அருகருகே கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதே தகவலின்படி, தலித்துகள் வீடு தனி வட்டாரத்தில் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே கப்புக்கள், தங்கள் வீட்டருகே தலித்துகள் வீடு இருப்பதை விரும்பவில்லை. இதன் விளைவாக கப்புக்களுக்கும், தலித்துகளுக்குமிடையே சண்டைகள் நடந்துவந்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் தலித் பெண்கள் சமைத்த உணவை உண்ணக்கூடாது எனும் ஒரு காரணத்தைச் சொல்லி அப்பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் உண்பதை நிறுத்தினர். இப்படி நடந்தவுடன், அரசாங்கம் உடனடியாக வேறு சமையற்காரர்களை அமர்த்தியது! (.பி.வகுப்பின் முதியவர்கள், குழந்தைகள் சந்தையில் கிடைக்கும் பொருள்களை உண்பதில்லையா? உணவு விடுதியில் உண்பதில்லையா? அங்கு எந்த ‘புனிதவான்கள்’ உணவு தயாரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? .ப வகுப்பினருக்கு இயல்பறிவூட்டுவதற்கு பதிலாக அரசாங்கம் இப்படியாச் செய்ய வேண்டும்?)

தெருவில் தலித் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கப்புக்களின் வீடுகள் முன்பு ஒரு சிறுவனின் காலணி விழுந்ததால் சண்டை மூண்டது? ஒரு தலித் பெண் சர்ப்ஞ்சாக இருந்த காலம் முழுமையிலும் ஒரு முறை கூட நாற்காலியில் அமர்ந்ததில்லை. அவர் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் தலித்துகளுக்கு வேலை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறதுதலித்துகள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் எப்போது புகார் கொடுத்தாலும் அவர்கள் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. மற்ற இடங்களில் நடப்பது போல் கொடுமையான விசயங்கள் புதிய லக்‌ஷ்மிபேட்டாவிலும் நடந்து வந்தது.

அதுமட்டுமல்லாது, புதிய லக்‌ஷ்மிபேட்டாவில் ஒரு புதிய பிரச்சனையும் முளைத்தது. நீர்பாசன திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படாமல் இருந்த 250 ஏக்கரை கப்புக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர் – சிலர் 8 ஏக்கர் வரை ஆக்கிரமித்து பயிரிடத் தொடங்கினர். கிடைத்திருக்கும் தகவலின்படி நான்கைந்து கப்பு குடும்பங்கள் பெரும் பகுதி நிலங்களைக் கைப்பற்றியுள்ளதுமொத்தத்தில் 190 ஏக்கர் வரையிலான இடங்கள் கைப்பற்றபட்டுள்ளன. கப்புக்கள் பயிரிட்ட அதே பகுதியில் கிடைத்த சிறு துண்டு நிலங்களில் ஆங்காங்கே தலித்துகள் பயிரிடத் தொடங்கினர். ஏறக்குறைய 60 ஏக்கர் நிலங்களை தலித்துகள் ஆக்கிரமித்திருந்தாலும், ஒரு தலித் குடும்பத்திடமும் ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லை. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் கடந்த காலத்தில் தலித்துகளுடையதா, கப்புக்களுடையதா என்பது அவசியமில்லாதது. நஷ்டஈடு கொடுத்து வாங்கப்பட்டதால் அது அரசாங்கத்திற்கு சொந்தமானது. ஆனால்கடந்தகாலத்தில் அந்த இடம் தங்களுடையது என்றும் அதில் பயிரிட தலித்துகள் நில வாடகை  தரவேண்டும் என்றும் லக்‌ஷ்மிபேட்டாவின் கப்புக்கள் கோரினர். அவர்கள் நிலம் கொடுப்பது ஏதோ பெரிய உதவி என்று கருதி தலித்துகளும் அதற்கு ஒப்புக் கொண்டனர். நில வாடகை கொடுத்தால் தங்களுக்கு நிலம் கிடைக்கும் என்று நினைத்து அப்போது முதல் தலித்துகள் ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை என்று வாடகை கொடுக்கத் தொடங்கினர். கப்புக்கள் இவ்வாறு ஒடுக்கிக் கொண்டிருக்கையில் எந்த அரசு அதிகாரியும் அதுபற்றி கவலைப்படவில்லை.

ஒரு கட்டத்தில் அந்த நிலங்கள் அரசாங்கத்தினுடையது என்பதை உணர்ந்த தலித்துகள் நில வாடகை கொடுப்பதை நிறுத்தினர். சமீபத்திய அட்டூழியத்திற்கான உடனடி காரணம் இதுவே.

தலித்துகள், தாங்கள் பயிரிடும் அந்த நிலங்களுக்கு வாடகை கொடுப்பதை தொடரும்வரை அந்நிலம் அவர்களுடைய தனிச் சொத்தாக இருக்காது. அச்சூழலில், பினாமி நிலஉரிமையாளர்கள் ஒவ்வொரு வருடமும் தலித்துகளிடமிருந்து குறிப்பிட்ட அளவு விளைச்சலை பிடுங்கிக் கொள்ளலாம். தலித்துகள் வாடகை கொடுக்க மறுத்த செயலானது, அவர்கள் அந்த நிலங்களுக்கு சொந்தம் கொண்டாட முயற்சி செய்ததை உணர்த்துகிறது. உண்மையில், தலித்துகளின் 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு அந்த பகுதி கப்புக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. தலித்துகள் எப்போதும் விவசாயக் கூலியாக, பண்ணையடிமையாக இருக்கவே பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! என்ன தைரியம் இருந்தால் அவர்கள் விவசாயிகளாக, சொத்து வைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள்! அவர்கள் எப்போதும் நிலத்தோடு உறவாடி கூலிகளாகவே இருக்க வேண்டும். அதனால், நாம் தலித்துகளுக்கு வாள் மூலம், உருட்டுக்கட்டைகள் மூலமும் பாடம் புகட்ட வேண்டும் – இதுவே லக்‌ஷ்மிபேட்டா கப்புக்களின் குறிக்கோள். இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதும், தலித்துகள் மீது தாக்குதலும், கொலையும் நிகழ்த்தப்பட வேண்டும்!

தாக்குதல், கொலை என்று நிகழ்த்த கப்புக்களுக்கு எப்படி தைரியம் வந்தது? தங்களுடைய முந்தைய சொந்த நிலங்களை விற்றது மற்றும் அதைத் தொடர்ந்த வணிகம் மூலம் அவர்களுக்குப் பணம் கிடைத்தது. மேலும், அவர்கள் தொகுதியில் ஓட்டளித்த அரசியல் தலைவர்களிடமிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்தது. தலித்துகளிடமிருந்து நிலத்தைப் பறித்து அவர்களை கூலிகளாக்க வேண்டும் என்பதே எல்லா அரசியல் தலைவர்களுக்கும் இருக்கும் கண்ணோட்டம். இவர்களுள் போத்ஸா சத்யநாராயணா, அமைச்சர் மற்றும் போத்சா வாசுதேவ நாயுடு, மண்டல் அதிபர் ஆகியோர் சாதியின் படி இ.பி. வகுப்பு ஆனால் வர்க்கப் பிரிவின்படி அவர்கள் சுரண்டல் மூலம் பெற்ற சொத்துடைமையாளர்கள். கொண்ட்று முரளி, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில காபினட் அமைச்சர் சாதியால் ஒரு தலித் ஆனால் அவருடைய வர்க்கம் எப்போதோ மாறி விட்டது. ஒரு நபர், எந்த சாதியினராயினும், சுரண்டல்வாத சொத்துக்களை பாதுகாக்கும் பாதையை எடுத்துவிட்டால், அவர்கள் எப்போதும் தங்கள் சாதியை விட வர்க்கத்தையே சார்ந்திருப்பர்.

எஜமானர், அடிமை காலம் முதல் ‘அரசாங்கம்’ [=’அரசு’] எப்போதும் சுரண்டல்வாதிகளின் நிர்வாகக் குழுவில் இருந்திருக்கிறது. அதனுடைய எல்லா சட்டங்களும் உழைக்கும் வர்க்கத்தை நில வாடகை, வட்டி, இலாபம் இவற்றிற்காக சுரண்டும் உரிமையை வாரி வழங்குகிறது. அந்த சட்டத்தின் கீழ் ஆட்சி புரியும் ஒவ்வொரு அரசியல்வாதியும் சுரண்டும் வர்க்கத்தின் பாதுகாவலர்கள். சொத்து சேர்த்தல் மற்றும் அதுபோன்ற அரசியலில் மூழ்கும் தலித்துகளும் உழைக்கும் வர்க்கத்திலிருந்து, சுரண்டும் வர்க்கமாக மாறுவர். இப்படித்தான் நாம் லக்‌ஷ்மிபேட்டா அட்டூழியத்தில் அமைச்சர் கொண்ட்று முரளியை புரிந்து கொள்ள வேண்டும். அவர் இந்த விசயத்தில் என்ன பாத்திரம் ஆற்றினார் என்பதைப் பிறகு பார்ப்போம்.

லக்‌ஷ்மிபேட்டாவின் தலித்துகள் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் அட்டூழியங்கள் பல காலங்களாக நடந்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, கப்புக்களுக்கு சொந்தமான நிலத்தில் ராமுதம்மா எனும் பெண் சாணம் சேகரிக்கையில் கப்புக்களால் தாக்கப்பட்டார். அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது காவல்துறையினர் அதை புறக்கணித்தனர். தலித்துகளுக்காக காவல்நிலையம் செல்லும் தலித் இளைஞர்களை தாக்குவோம் என்று அங்கும் இங்குமாக கப்புக்கள் பிரச்சாரம் செய்தனர். உண்மை அறியும் குழுவாக செல்லும் இளைஞர்களைத் தாக்கினர். தலித்துகள் புகார் செய்ததால், ஒரு காவல் அதிகாரி (பட்டியல் பழங்குடி வகுப்பு) வழக்கு பதிவு செய்தார், கப்புக்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அந்த மகிழ்ச்சி குறைந்த காலமே நிலைத்தது. அந்த குற்றவாளிகள் 3 நாட்களிலிலேயே பிணையில் வந்தனர். அதுமுதல், ‘தலித்துகளை ஒழித்துக் கட்ட வேண்டும்’ என்பதே  கப்புக்களின் முழக்கம், அது தலித்துகள் மத்தியிலும் பரவியது. தலித்துகளின் வேண்டுகோளின் படி எப்படியோ அங்கொரு காவல்துறை குழு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டது. ஆனால் 11-6-2012 அன்று அந்தத் தொகுதியில் தேர்தல் நடக்கப்போகிறது என்று சொல்லி தேவையின் பொருட்டு காவல் குழு அங்கிருந்து விலக்கப்பட்டது. உண்மையில் இந்த காவல்துறை குழு தேர்தல் நடக்கும் ஒரு இடத்திற்கும் செல்ல வேண்டியவர்களே இல்லை. அங்கிருந்து காவல்துறையினரை விலக்க ஒரு சாக்குபோக்கு. கப்புக்களுக்கு அரசியல் ஆதரவு இல்லாதிருந்தால் காவல்துறையினரை அங்கிருந்து விலக்கியிருக்க முடியாதுஅப்படியென்றால், எல்லா அரசியல் தலைவர்களும், தலித் அமைச்சர்கள் உள்பட திட்டமிட்ட வகையில் தலித்துகளின் கொலைகளை முன்னெடுக்கின்றனர். அந்த சதி திட்டத்தில் தலித் அமைச்சரும் பங்கு வகிக்கவில்லையென்றால், காவல் குழுவை விலக்கியவுடன் அவர் தீவிரமாக வினையாற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. காவல் குழு அங்கிருந்திருந்தால் தலித்துகளை காப்பார்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் இல்லாதிருப்பது கத்திகளைத் தீட்டிக் கொண்டு திரியும் கொலைகாரர்களுக்கு சாதகச் சூழலை கூடுதலாக வகுக்கிறது. காவல் குழு விலகியவுடன் எத்தனை வேகமாக கொலைகள் நடந்தது பாருங்கள்!

ஜூன் 11, காவல்துறையினர் கிளம்பியவுடன், லக்‌ஷ்மிபேட்டா கப்புக்களுக்கு திருவிழா கொண்டாட்டம் போலானது. அருகில் இருக்கும் கிராமங்களிலிருந்து கூட மற்ற கப்புக்கள் ஆட்டோ ரிக்‌ஷா, ட்ராக்டர் பிடித்து வந்து சேர்ந்தனர்.

கூச்சலோசை கேட்ட தலித்துகள் பயம் கொண்டு அருகில் இருந்த கிராமத்திலிருந்து துணை ஆய்வாளரை அழைத்தனர். ஆனால் அவர் ஏதோ ஒரு சாக்குச் சொல்லி புகாரை புறக்கணித்தார். அந்த இரவு முழுவதையும் உணவு, உறக்கமின்றி கழித்தனர் தலித்துகள். அடுத்த நாளே, அதாவது ஜூன் 12, அதிகாலையில் தலித்துகளின் வீட்டில் குண்டுகள் வெடித்தது. அந்த நேரத்தில், விழித்துக்கொண்ட ஒரு தலித் அந்த அதிகாலையிலும் வெளியில் சென்று துணை ஆய்வாளருக்கு ஃபோன் செய்தார். ”எங்கள் வீடுகள் மீது குண்டு போடுகிறார்கள்” என்று அவர் சொன்னபோது துணை ஆய்வாளர் அதை கண்டுகொள்ளவே இல்லை.

அந்த சமயத்தில் தங்கள் வீடுகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் தலித்துகள்: சிலர் தொலைதூர வேலைக்குச் செல்வதற்காக உணவு உண்டுகொண்டிருந்தனர்; பெண்கள் சமைத்துக் கொண்டிருந்தார்கள், குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தது; சில ஆண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். வெடிச் சத்தம் கேட்டவுடம் அவர்கள் வீடுகளில் இருந்து தெரித்து ஓடினர்.

ஏற்கனவே கிட்டத்திட்ட 200 கப்புக்கள் ஆண்களும் பெண்களுமாக தலித்துகள் வீடுகள் மீது பாய்ந்திருந்தனர். எதிர்வரும் தலித்துகள் முகங்களில் மிளகாய்ப் பொடி தூவ வேண்டியது கப்பு பெண்களின் வேலை. கண்ணில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டதால், காண முடியாமல் தவிக்கும் தலித்துகளை கப்பு ஆண்கள் கத்தியாலும், வாளாலும் குத்தவும் கோடாளியால் வெட்டவும் செய்தனர்! சில தலித்துகள் பயத்தல் தங்கள் கதவுகளை மூடியபோது, காக்கை வடிவ கம்பிகள் கொண்டு கதவுகளை உடைத்தது ஒரு பெரும் கூட்டம், வீட்டிற்குள் ஒளிந்திருந்தவர்களை வெளியில் இழுத்து ஈட்டிகளைக் கொண்டு துளைத்தது! அழும் குழந்தைகள் முன்பே ஒவ்வொரு கொலையும் நடந்தது. நடைபாதைகளிலும், தலித்துகள் வீடுகளிலும் இரத்த வெள்ள! கிழித்தெரியப்பட்ட மிளகாய் பொடி பாக்கெட்டுகள்! தெரித்து கிடக்கும் வீட்டுச் சாமான்கள்! ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ‘உங்களுக்கு நிலங்கள் ஒரு கேடா’ எனும் வகையிலான மோசமான வசைகள், தாக்குதல்கள். நான்கு தலித்துகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 42 ஈட்டி தாக்குதல் மற்றும் தலையில் ஆழமான வெட்டு! ராமுதம்மா உட்பட 6 பேர் இறந்தனர். கை, கால்கள், பின்புறம் வெட்டு என்று 28 பேருக்கு கடுமையான காயங்கள்.

மிளகாய்ப் பொடி, ஈட்டி, கோடாளி கொண்டு தங்களது வீரங்களை – வெளிப்படுத்திய கப்பு ஆணும் பெண்ணும் தங்கள் இலட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியில் உடனே வீடு திரும்பி – ஒருவேளை சோபாவில் அமர்ந்துகொண்டு ஒருவரை மிஞ்சி ஒருவர் எப்படி தலித்துகளை தாக்கினர், எவர் அதிகமாக குத்தினர் என்று விவரித்துக் கொண்டிருந்திருப்பார்களோ என்னவோ!

தலித்துகள் வீடுகள் ஒன்றும் கப்புக்களின் வீடுகளிலுருந்து வெகுதொலைவில் இல்லை. ஆண் பெண், இளைஞர்கள், முதியவர் என்று கப்புக்களின் வீடுகள் முன்பு தினமும் நடமாடுபவர்களே. எப்போதாவது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்பவர்களே. இருந்தாலும் அண்டைவீட்டாரை அத்தகைய மூர்க்கத்தோடு வாள், ஈட்டி வைத்து கொலை செய்தனர். (அதற்காக தொலைவில் வசிப்பவர்களை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருள் இல்லை).

தங்கள் வீட்டு ஆண்களை சாணியைக் கரைத்து முகத்தில் ஊற்றி கண்டிப்பதை விடுத்து கப்பு பெண்கள் மிளகாய் பொடி தூவி கொலைக்கு துணை நின்றுள்ளனர். இது எதனால் நடந்தது. ஒன்று தெளிவு. ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும், அவர்களுக்குள் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் இருவரும் இந்த விசயத்தில் ஒருவரே.

லக்‌ஷ்மிபேட்டாவின் பின்னணியில், கப்புக்களை நாம் சாதியாகவோ அல்லது வர்க்கமாகவோ கருதினாலும், இந்த கப்பு குடும்பங்களின் பெண்கள் தலித்துகள் நிலம் வைத்திருப்பதை வெறுக்கிறார்கள். சிலர் பெண்களை கருணையுள்ளவர்கள், ஆண்களை விட மேன்மையானவர்கள் என்று விவரிக்கின்றனர். அத்தகைய வர்ணனைகள் முட்டாள்தனமானது. ஆண்கள் இது போன்ற கொலைகளைச் செய்யும் மற்ற பின்னணிகளில் பெண்களின் நடத்தை என்னவாக இருந்ததென்று தெரியாது, ஆனால் லக்‌ஷ்மிபேட்ட சம்பவம் அவர்கள் முகத்தை தோலுறித்துக் காட்டிவிட்டது. பெண்களும் கொடூரமாக, சட்டப்புரம்பாக, இத்தனை அற்பமாக நடந்து கொள்ள முடியும் என்று மெய்பித்திருக்கிறது. இத்தகைய அட்டூழியம் நடந்திருப்பதால், நாம் அதை நம்பித்தான் ஆக வேண்டும்.

தற்காலத்தைய கொடுமைகளை புரிந்து கொள்ள நாம், ஒரு பழங்குடி மற்றொரு பழங்குடியை தாக்குவது, கொல்வது போன்ற பண்டைய கால கொடுமைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அக்காலத்தைய மக்கள் காட்டுமிராண்டி காலத்தவர், அதனால் அதை குறை சொல்ல முடியாது. அக்காலத்தில் இலவசமாக பரவிக் கிடந்த இயற்கை வளத்தைத் தவிர நில வாடகை, வட்டி, இலாபம் இவையெல்லாம் இருக்கவில்லை. இன்று அவை உள்ளன. அதனால் கடந்த கால கொடுமைகளை விஞ்சி, வெடிகுண்டுகளில் தொடங்குகிறது அட்டூழியங்கள்.

சுரண்டும் சொத்துடைமை வர்க்கமும், அவர்களைப் பிரதிநிதித்துவபடுத்தும் அரசியல்வாதிகளும் நிலம் மற்றும் வாடைக்காக திட்டமிட்டு உருவாக்கி, கட்டவிழ்த்துவிட்ட சதி என்பதே லக்‌ஷ்மிபேட்டா அட்டூழியம் உணர்த்தும் உண்மை.

லக்‌ஷ்மிபேட்டா அட்டூழியம் ஜூன் 12 அன்று நடந்தது. ஜூன் 14 சிலர் அடங்கிய உண்மை அறியும் குழு சம்பவ இடத்திற்கு சென்றது. மே-ஜூலை 2012 ‘குல நிர்மூலனா’, (=சாதி ஒழிப்பு) எனும் மாதமிருமுறை தெங்கு இதழில் வெளிவந்த அறிக்கையிலிருந்து சில தகவல்களை எடுத்துள்ளேன்.

லக்‌ஷ்மிபேட்டா அட்டூழியம் குறித்து போத்ஸா சத்தியநாராயணா தெரிவித்திருக்கும் கருத்துக்களைப் பாருங்கள். “….நீர்பாசன ஏரிக்குள் மூழ்கிப்போகாத நிலங்களில் தலித்துகள் நுழைந்ததால் இந்த சண்டை நடந்தது. கடந்த காலத்தில் அந்த நிலங்கள் கப்புக்களுக்குச் சொந்தமானது. இந்த சண்டையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (பி.) சேர்ந்தவர்கள்கூட காயங்களுக்குள்ளானார்கள் அவர்களும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்”. அட்டூழியம் குறித்த அவரது தீர்ப்பு இதுவே

சொல்லப்போனால் தலித்துகளையும், அவர்கள் வீடுகளையும் தாக்கியது கப்புக்கள், தலித்துகள் கப்புக்களைத் தாக்கவில்லை. இது தெளிவுதானே. அப்படியென்றால் கப்புக்கள் ஏன் தலித்துகளைத் தாக்கினர்? தலித்துகள் தங்கள் (கப்புக்கள்) நிலங்களை அபகரித்ததாலா? கடந்தகால நில உரிமை குறித்து நம் கேள்வி என்ன, முன்னர் அது கப்புக்களுடையதா அல்லது தலித்துகளுடையதா? என்பதுதானே. அந்த நிலங்களை அரசாங்கம் வாங்கிவிட்டது. இந்த நிலங்களின் முந்தைய உரிமையாளர்கள் பணம் வாங்கிக் கொண்டு இடத்தை காலி செய்துவிட்டனர்கப்புக்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு சொந்தமான 190 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு வந்தனர். மீதமிருக்கும் 60 ஏக்கர் நிலங்களில் தலித்துகள் பயிரிட்டால் அது எப்படி கப்புக்களின் நிலத்தை அபகரிப்பதாகும்தலித்துகள் அத்துமீறி ஆக்கிரமித்திருந்தாலும், அதற்கு முறையிட நீதிமன்றங்கள், சட்டம், அரசாங்கம் இல்லையா உங்களுக்கு? அதற்காக அவர்கள் மீது பாய்ந்து கொல்வீர்களா என்ன? ஆறு தலித்துகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவு, அதேபோல் நிறைய பேர் தீவிர காயமடைந்துள்ளனர்; காக்கைவடிவ கம்பி, ஈட்டி போன்றவற்றால் தலித்துகள் வீடுகள் இரத்தவெள்ளமாய் இருக்கும்போது, அமைச்சர் சொல்கிறார், “கப்புக்களும் தானே காயமுற்றனர்” என்று. இது இவ்வாறு இருக்க, கொண்ட்று முரளி, தலித் அமைச்சரின் கருத்தைப் பாருங்கள். உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் உள்ள பின்வரும் பத்தியைப் படியுங்கள்: “லக்‌ஷ்மிபேட்டா இனப்படுகொலையைத் துணிந்து செய்தவர்கள் கப்புக்கள் என்பது தெளிவு, அவர்களுக்கு போத்ஸா வாசுதேவ நாயுடு மற்றும் போத்ஸா சத்தியநாராயணாவின் ஆசீர்வாதம்  உள்ளது. போத்ஸா நாயுடுதான் உண்மையான சதிகாரர் என்று தலித்துகள் சொல்லும்போது, மேல் சாதி ஆட்சியாளர்களின் கைப்பாவையான கொண்ட்று முரளி, மாலா (பட்டியல் சாதி) அமைச்சர் வாசுதவே நாயுடுவின் பெயரைச் சொல்லக் கூடாது என்று தொலைபேசி மிரட்டல் விடுத்திருக்கிறார். இதிலிருந்து, விவாத எல்லைகளுக்கப்பால் இந்த சதி மேல் சாதி அரசின் இரகசிய ஆதரவோடே ஏவப்பட்டது என்பது விளங்குகிறது” – ’மாலா அமைச்சர்’ எப்படி நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொள்ள உண்மை அறியும் குழுவின் இந்த கருத்து நமக்கு உதவுகிறது. இது ‘மேல் சாதி’ தாக்குதல் என்று வாதிடுவோர், ஏன் மாலா அமைச்சர்கூட தனது சாதியை புறம் தள்ளி, மேல் சாதியின் கைப்பாவையானால் என்பதை அவதனிக்க வேண்டும். இங்கு, தலித் அமைச்சரின் சாதி மறைந்து வர்க்கம் உள்நுழைந்துள்ளது.

தலித்துகளைத் தாக்கியவர்கள் சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாதலால், அந்த சுரண்டும் வர்க்கத்திடமிருந்து அரசு பதவி மற்றும் பணம் பெறுவோரும் சுரண்டும் வர்க்கத்தவரே. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் வர்க்கத்தையொட்டி இருக்குமே ஒழிய சாதியோடல்ல. பாதிக்கப்பட்டவர்களின் சாதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய சொந்த மக்களிடம் தக்கியவரின் பெயரைச் சொல்லக்கூடாது என்று ஈவு இரக்கமின்றி சொல்லும்போது அந்த நபர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரா அல்லது வர்க்கத்தையா? இந்த கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்ந்தால் மட்டுமே நாம் ஒரு நபரைப் புரிந்து கொள்ள முடியும்.

லக்‌ஷ்மிபேட்டா அட்டூழியத்தைத் தொடர்ந்து உண்மை அறியும் குழு அரசாங்கத்தின் முன் 8 நிபந்தனைகளை வைத்தது: (1) தாக்குதலில் பங்களித்த அத்தனை கப்புக்களையும் கொலை முயற்சி வழக்குப் பிரிவின் கீழ் கைது செய்வது. (2) தலித்துகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத வட்டார காவல்துரை அதிகாரிகளை இடை நீக்கம் செய்வது.  (3) கொலை நடக்கும் வரை நிலப் பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்காத மண்டல் அதிகாரியை இடை நீக்கம் செய்வது. (4) கொலைகளத்திற்கு 24 மணி நேரத்திற்குள் வந்துவிட வேண்டும் எனும் சட்டத்தை மீறிய மாவட்ட ஆட்சியர் மீது துறைசார் நடவடிக்கை எடுப்பது. (5) லக்‌ஷ்மிபேட்டா இனப்படுகொலையின் பிரதான சதிகாரர் போத்ஸா சத்யநாராயணா மற்றும் கொலைகாரர்களை பாதுகாக்க முயன்ற கொண்ட்று முரளி ஆகியோரை அமைச்சர் பதிவியிலிருந்து விலக்குவது.  (6)  250 ஏக்கர் கூடுதல் ஏரி நிலங்களை லக்‌ஷ்மிபேட்ட தலித்துகளுக்கு பகிர்ந்தளிப்பது.  (7) ரமுதம்மாவை மரணிக்கும் வரை தாக்கியவர்களைக் கைது செய்வது. (8) லக்‌ஷ்மிபேட்டாவில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்குவது. இதுவே தலித்துகளின் கோரிக்கை.

மேற்சொன்ன எந்த ஒரு கோரிக்கையையும் யாரும் எதிர்க்கத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை எவ்வகையில் நியாயப்படுத்தினாலும், சட்ட வரையரைக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளதால், முதலில் அரசாங்கம் அவர்களை முதலில் சந்தித்திருக்க வேண்டும். அரசாங்கள் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவைகளை நம்ப தேவையில்லைசில லக்‌ஷ்மிபேட்டா கொலைகாரர்கள் (கப்பு பெண்கள் உட்பட) கைது செய்யப்பட்டாலும் அவர்கள் உடனடியாக பிணையில் வந்துவிடுவ. [குறிப்பு: இந்த கட்டுரை தெலுங்கு பதிப்பிற்கு அனுப்பப்பட்ட காலத்தில் அவர்களுக்கு பிணை கிடைத்துவிட்டது].  25 வருடங்களுக்கு குறையாமல் இவ்வழக்கு கிடப்பில் போடப்படும். அரசாங்கத்தின் கருணையால் வேறெதுவும் நடக்கப்போவதில்லை.

சுரண்டுபவர்களின் செயற்பாடுகளை நிர்வாகம் செய்வதே அரசாங்கம், அது அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்பதை பெரும்பாலான தலித் தலைவர்கள் அவதனிப்பதில்லை. அரசாங்கம் என்பது சுரண்டும் வர்க்கம் எனும் உண்மையை அவதனிக்க தலித் தலைவர்கள் விரும்புவதில்லை ஏனென்றால் அந்த உணர்வு மட்டும் போதாது. அது வர்க்க முரண்பாடு என்பதற்கு இட்டுச் செல்லும், அப்போது அவர்கள் வர்க்க முரண்பாடுகளை அங்கிகரித்தேயாக வேண்டும்.

தலித் இயக்கத் தலைவர்கள் தலித்துகளுக்கு ஒரே ஒரு பாடம் மட்டுமே கற்றுக் கொடுக்கின்றனர்: தலித்துகளும் முதலாளிகளாக வேண்டும் என்பதே அது. ஒரு தலித் முதலாளியானால், ஆயிரக்கணக்கான தலித்துகள் தொழிலாளிகளாகிப் போவார்கள், அந்த ஆயிரக்கணக்கான தலித்துகளைச் சுரண்டி ஒரு தனிநபர் முதலாளி மட்டுமே பணத்திலும், செல்வத்திலும் திளைப்பார் என்பதை அத்தலைவர்கள் புரிந்து கொள்ள விரும்புவதில்லை.

எந்த சாதியின் அறிவிஜீவியானாலும் சரி, உழைப்புச் சுரண்டல் மற்றும் வர்க்க முரண்பாடுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லையென்றால், அவர் அரசாங்கம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. இதனால்தான், உழைக்கும் மக்களை எப்போதெல்லாம் சுரண்டல்வாதிகள் அவமதிக்கிறார்களோ, தாக்குகிறார்களோ, அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கிறார்கள். அரசாங்கத்தை அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரும் உரைமை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. ஆனால் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை என்று எந்தவொரு தலித் இயக்க ஒருங்கினைப்பாளர்களும் புரிந்துகொள்வதில்லை; எந்த சாதியின் நபரானாலும் சரி, சாதி மாறுவதில்லை ஆனால் அவருடைய வர்க்கம் மாறிவிடும்; வர்க்கம் மாறிவிட்ட அந்த தொழிலாளர் வர்க்க நபர் எத்தகைய உயர் பதவியில் அமர்ந்தாலும் தொழிலாளர் வர்க்க மக்களின்பால் அவரது கவனத்தை திருப்பவே போவதில்லை.* இதை மார்க்சிஸ்டுகள் தவிர  வேறெவரும் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

அவர்களுடைய கோரிக்கைகளிலிருந்து தலித்துகளின் ஆதங்கத்தையும், கோபத்தையும் புரிந்துகொள்வதும் முக்கியமானது, நியமானது. எனினும் அந்த கோரிக்கையில் ஒன்றின் மீது மட்டும் சில கேள்விகளும் விவாதங்களும் எழுகின்றன. லக்‌ஷ்மிபேட்டாவின் தலித் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 250 ஏக்கர் நிலத்தையும் வழங்கவேண்டும் என்பதே அது.

முதலும் முதன்மையுமான கேள்வி: சுரண்டல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கத்திடம் கேட்டு நிலமற்ற மக்கள் நிலங்களைப் (எத்தனை கொடூரமாக அந்நிலம் இருந்தாலும்) பெறுவதென்பது சாத்தியமா? இரண்டாவது கேள்வி: அத்தகைய கோரிக்கையின் விளைவாக எழும் எதிர்வினைகள் என்னவாக இருக்கும். முதல் கேள்விக்கு பதில் மிகவும் எளிது: அது நடக்காது. இரண்டாவது கேள்விக்கு சில விளக்கங்களைக் காண்போம்.

திருகுபட்டு (ரிவோல்ட்), சி.பி.-எம்.எலுக்குச் சொந்தமான மாணவர் மற்றும் இளைஞர்கள் தெலுங்கு மாத இதழ் (ஜூலை 2012) லக்‌ஷ்மிபேட்டா அட்டூழியம் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்த தெலுங்கு கட்டுரியின் தலைப்பு [ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால்] “லக்‌ஷ்மிபேட்டா நிலப் பிரச்சனையில் கம்யூனிஸ்ட் வர்க்கப் பார்வைக்கும், தலித் ஒருங்கினைப்பாளரின் சாதியப் பார்வைக்குமிடையேயான வேறுபாடு: ஒரு ஆய்வு”இந்த கட்டுரையை எழுதியவர் பெயர் பி. பிரசாத். ஒரு தலித் ஒருங்கிணைப்பாளருக்கும், கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளருக்குமிடையேயான உரையாடல் போன்ற கட்டுரை அது. ஒருவர் முதலில் தலித் இயக்கங்களுக்கும், கம்யூனிஸ்டு இயக்கங்களுக்கும் இடையே ஒரு பிரச்சனையில் ஏன் வேறுபாடு நிலவுகிறது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்? இந்த விசயத்தை சுருக்கமாகத் தொட்டுவிட்டு அந்த குறிப்பிட்ட விவாதிற்குள் பிறகு செல்வோம்

கம்யூனிஸ்ட் புரிதலைப் பொறுத்தவரை: சமூகத்திற்கு ஒரு அடிப்படை (அடித்தளம்) உண்டு. அதில் உற்பத்தி உறவுகள் அடங்கி இருக்கிறது. கடந்த காலத்திலிருந்து பகை நிறைந்த வர்க்க உறவுகளாக அவ்வுறவுகள் இருந்தனஉழைப்புச் சுரண்டல் உறவை அடித்தளமாகக் கொண்டதாலேயே எல்லாப் பிரச்சனைகளும் உருவாகிறது. நிவாரணம் பிரச்சனைகளுக்கு சிறு தீர்வு கொண்டுவந்தாலும், அடித்தளத்தின் இயல்பை நிவாரணம் மாற்றவியலாது. அதனால், அடித்தள இயல்பின் வெளிச்சம் கொண்டு பிரச்சனைகளை ஆய்வு செய்வதே உண்மையான தீர்வைக் கொடுக்கும், அதுவே வர்க்க வெளிச்சப் பார்வை.

தலித் தலைவர்களின் புரிதலைப் பொறுத்தவரைஉற்பத்தி உறவுகள் சமூகத்தின் அடித்தளமல்ல. பிரச்சனைகள் தனித்தனி இருப்புகள் கொண்டவை. ஒவ்வொரு பிரச்சனைக்கும் அதன் சொந்த இருப்புகள் உள்ளது. அதற்கு சுதந்திரமான தனித்தனி தீர்வுகள் உள்ளது. சாதி என்பது தனி/சுதந்திரமான பிரச்சனை. உட்பிரிவு (.ம் எஸ்.சிக்களுக்குள்) என்பது சாதியமைப்புகுள் நிலவும் பிரச்சனை. வர்க்க அமைப்பு என்பது வேறு தனிப்பட்ட பிரச்சனை. பெண் மீது ஆணாதிக்கம் என்பது மற்றொரு தனிப் பிரச்சனை. வெவ்வேறு பகுதிகளின் சமமற்ற வளர்ச்சி, அது வேறொரு சுதந்திரமான பிரச்சனை. இவ்வாறாக, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அதன் தனித்தனி சொந்த இருப்பு (அடையாளம்) உள்ளது. சாதியமைப்பு என்பது இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானதால், நாம் இந்திய சமூகத்தை வர்க்கச் சமூகமாக மட்டும் பார்க்ககூடாது ஆனால் ‘சாதி-வர்க்கச் சமூகமாகப்’ பார்க்க வேண்டும். வர்க்கத்திற்கு தொடர்பின்றி நாம் சாதியமைப்பை ஒழிக்க வேண்டும். இதுவே தலித் தலைவர்களின்* கருத்துபற்றிய சுருக்கம்.

நான் கம்யூனிஸ்டு பிரிதலோடு ஒத்துப் போவதால், என்னுடைய பார்வையை சுருக்கமாக வைத்துவிட்டு, லக்‌ஷ்மிபேட்டா நிலப்பரச்சனை விவாதம் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன்.

ஒன்றொடு ஒன்று தொடர்பில்லாமல் பிரச்சனைகளை தனியாக சுதந்திரமானதாகப் பார்க்க வேண்டுமானால், இந்தியச் சமூகத்தை வெறும் ‘சாதி-வர்க்கச்’ சமூகமாக மட்டும் பார்ப்பது போதாது. அதில் மற்ற பிரச்சனைகளையும் சேர்க்க வேண்டும். சாதி, வர்க்கம் மட்டுமே சேர்ப்போமானால், மற்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் நிலை என்ன? எந்தவொரு சமூகத்திலும், சொல்லப்போனால் எல்லா சமூகத்திலும் ஆணாதிக்கம் ஒரு பிரச்சனை. தலித் சாதிகளுக்குள் நாம் உட்பிரிவு பிரச்சனையைப் பார்க்கிறோம். பிராந்திய சமமின்மை மற்றொரு பிரச்சனை. மதம் மற்றும் இனவாதம் மற்றொரு பிரச்சனை. அமெரிக்காவில் நிறவெறி (கருப்பு வெள்ளை) பிரச்சனை. ஸ்ரீலங்காவில் தேசிய இனங்களின் பிரச்சனி: தமிழ் தேசியம் x சிங்கள தேசியம். எப்போதெல்லாம் நாம் ஒரு பிரச்சனையைக் காண்கிறோமோ, அப்போதெல்லாம் அதை நம் கோட்பாட்டில் சேர்க்க வேண்டும். இந்திய சமூகத்தை நாம் ‘சாதி-வர்க்கச் சமூகம்’ என்று மட்டும் கருதினால், மற்றவற்றை விடுத்து அந்த இரண்டு பிரச்சனையை மட்டுமே காண்போம். அதனால் நாம் எல்லா பிரச்சனைகளையும் சேர்க்க வேண்டும். ‘சாதியச் சமூகம்-சாதி உட்பிரிவு-வர்க்கம்-ஆணாதிக்க-மத முரண்பாடு-பிராந்திய சமமின்மை…..நிறைந்த” இவ்வாறாக, இதை எல்லாவற்றையும் சேர்த்து அங்கிகரித்து நம் கோட்பாட்டில் சேர்க்கவேண்டும். எல்லா பிரச்சனைகளும் சமமானவை என்று கருதுவோர் எல்லாவற்றிற்கும் சம இடமளித்து, அடுத்தடுத்து பட்டியலிட வேண்டும். சாதி, வர்க்கம் என்று இரண்டு பிரச்சனைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால், அது பிரச்சனைகளை பாரபட்சமாகப் பார்ப்பதாகவே பொருள்படும்.

ஸ்ரீலங்காவில் சாதிகள் நிலவுகின்றனதென்றால் அதை நாம் ‘சாதியச் சமூகம்-வர்க்கம்-தேசியங்கள்-மதங்கள்-ஆணாதிக்கம்’ நிறைந்த சமூகம் என்று விவரிக்க வேண்டும்.

அமெரிக்காவென்றால், ‘நிறவெறி-தேசியங்கள்-மதங்கள்-வர்க்கம்-ஆணாதிக்கம்’ நிறைந்த சமூகம் என்று விவரிக்க வேண்டும்.

எந்தவகையான பிரச்சனையைக் கண்டாலும், எங்கு கண்டாலும், அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும்.

அதனால் நாம் பின்வருமாறு சொல்லலாம்: நாங்கள் மற்றவர்களின் எந்த பிரச்சனை குறித்தும் கவலைப்படவில்லை. அவர்களுக்காக வாதிடுவது எங்கள் பொறுப்பல்ல. அவர் அவரின் வேறுபட்ட பிரச்சனைகளுக்கு அவர் அவர் போராட்டம் தொடுக்க வேண்டும். எங்களுக்கு அவர்கள் பிரச்சனை தெரியாது. அவர்களுக்கு எங்கள் பிரச்சனை தெரியாது. எங்களுடையது சாதியப் பிரச்சனை, வர்க்கப் பிரச்சனையும் உண்டு. மற்றவர்களுக்கு மற்ற பிரச்சனை. அவரவருக்கு பொருத்தமான முழக்கங்களை – இப்படி நினைப்பவர்கள் சமூகத்தின் வேறுபட்ட அம்சங்களை தனித்தனியாகவே பார்க்க விரும்புவர். உதாரணத்திற்கு. தலித் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், இந்தியாவை ‘சாதிச் சமூகமாக’ கருத வேண்டும். அவர்கள் மற்ற அம்சங்களைச் சேர்க்கத் தேவையில்லை. பாலியல் அடையாள எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் இந்தியாவை ஆணாதிக்கச் சமூகம் என்று கருதவேண்டும். மற்ற அம்சங்கள் அவர்களுக்கு பொருட்டல்ல. அவரவருக்கென்று சொந்த முழக்கங்கள் வேண்டும்.

மார்க்சியப் புரிதலைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த சமூகக் கட்டுமானமும், அதன் உழைப்பு பிரிவினை, அதன் அரசியல், அதன் கல்வி, கலை மற்றும் எல்லாம் சமூகத்திற்கும் அடித்தளமாக இருக்கும் உற்பத்தி உறவுகளைப் பொறுத்தே அமையும். ஒவ்வொரு சமூக அம்சமும் அதனளவில் தாக்கம் செலுத்துமென்றால் அதன் தாக்கங்கள் சமமானவை அல்ல. அடித்தளத்தின் தாக்கம் (உற்பத்தி உறவுகள்) சமூகத்தின் மற்ற அம்சங்களை விஞ்சியிருக்கும். இந்தப் புரிதலின்படி, அடித்தளத்தை தொடர்புபடுத்தி ஒவ்வொரு பிரச்சனையும் பரிசோதிக்கப்பட வேண்டும். அதனால் எந்த நாட்டையும், எல்லா நாட்டையுமே ‘வர்க்கச் சமூகம்’ என்று சொன்னாலே போதுமானது. எல்லா பிரச்சனையும் அதில் அடக்கம் என்பதை அது உணர்த்துகிறது.

வர்க்கச் சமூகத்தில் ஐந்து முக்கியப் பிரச்சனைகள் உள்ளது என்று வைத்துக்கொள்வோம், வர்க்கச் சமூகத்தில் ஒவ்வொரு பிரச்சனையும் இரண்டு அம்சங்களிடையேயான முரண்களைக் கொண்டிருக்கிறது. வர்க்கங்களுக்கிடையே நாம் காண்பது முரண். மேல் சாதிக்கும், கீழ் சாதிக்குமிடையே நாம் காண்பது முரண். ஆண் பெண்ணுக்கிடையே முரண். இரண்டு தேசிய இனங்களுக்கிடையே முரண். எத்தனை வகையான முரணை எடுத்துக்கொண்டாலும், எல்லாம் சம அளவில் இருக்குமா அல்லது ஒரு முரண் முதன்மை முரணாக இருக்குமா? முதன்மை முரண் இருக்குமென்றால் அதன் அடிப்படையிலிருந்தே நாம் பிரச்சனைகளை பரிசோதிக்க வேண்டும். எதிர் எதிர் / பகை வர்க்கங்களை முதன்மை முரணாக கம்யூனிஸ்டுகள் கருதுகின்றனர். ஆனால் இந்த கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், முரண்களை தனியாகக் கண்டு, அவற்றை தாங்கள் தீர்க்க வேண்டும், தீர்க்க முடியும் என்று கருதுகின்றனர். அதனால் தான் அவர்கள் முழக்கங்களும் தனியாக இருக்கின்றன.

இந்த புரிதலில் உள்ள வேறுபாட்டின் பின்னணியில், லக்‌ஷ்மிபேட்டா நில விவகாரம் ஒரு விவாதத்திற்கு இட்டுச் செல்கிறது.

திருகுபட்டு நாளேட்டில், இரண்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கிடையேயான உரையாடலாக அமைந்திருக்கிறது பி. பிரசாத்தின் கட்டுரை. அதில், தலித் ஒருங்கிணைப்பாளரின் விவாதங்களுக்குப் பதிலாக தனது வாதத்தை வைக்கிறார் கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளர். இறுதியில், தலித் ஒருங்கிணைப்பாளர் “இந்த கண்ணோட்டத்திலும் தலித் அமைப்புகளுக்குள் விவாதம் நடக்க வேண்டும்” என்று சொல்லி, மறு சிந்தனைக்கு தயாராவதாக முடிகிறது கட்டுரை. கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளர் சொல்வதை தலித் ஒருங்கிணைப்பாளர் ஒப்புக்கொண்டார் என்று பொருள். ஒரு தலித் ஒருங்கிணைப்பாளர் இதே பிரச்சனை குறித்து எழுதி, இதே பாணியில் உரையாடினால், அது எவ்வாறு முடிந்திருக்கும்? “கம்யூனிஸ்டு அமைப்புகளிலும் இந்த கண்ணோட்டத்தில் விவாதங்கள் நடைபெற வேண்டும்” என்று கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளர் சொல்வதுபோல் முடிந்திருக்கும். அடுத்த நபர் தன்னுடைய கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டது போல் சித்தரிக்கிறார் எழுத்தாளர். இவ்வாறு, சமூகப் பிரச்சனையில் இதுபோன்றதொரு பாணியே மிகவும் தவறானது.

இயற்கை விஞ்ஞானம் போன்ற விசயங்களில் கல்வி முறைக்கு இந்த பாணி ஒத்துவரலாம். உதாரணமாக, தாவரவியல், உயிரியல் அல்லது வானவியல் பாடங்களில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்விதமாக ஆசிரியர் இந்த பாணியை கையாளலாம், அங்கு விவாதத்தில் ஆசிரியர் வென்று மாணவர் தோற்றதாக ஆகாது. அதே ஆசிரியர் சமூக விசயத்தில் வாதம் எதிர்வாதமென்று எழுதி விளக்கி, இறுதியில் தான் வென்றதுபோல் எழுதினால் அது தவறானது.

ஒவ்வொரு எழுத்தாளரும் சமூக பிரச்சனைகளில் கருத்து சொல்ல வேண்டும். மற்றவரின் வாதத்தில் உள்ள தவரை சுட்டிக்காட்டுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் இரண்டு கண்ணோட்டங்களுக்கு இடையேயான வாதமாக அதை வைக்க நினைத்தால், அவறை விளக்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். எதிர் தரப்பு தன் வாதத்தை ஏற்றுக்கொண்டது போல் முடிக்கக்கூடாது. அவர், அவ்வாறு செய்வாராயின், தனது சொந்த சிந்தனைக்கு அதிக மதிப்பளிக்கிறார் என்று பொருள். எதிர் தரப்பும் இதே முறையை கையாண்டால் முதல் நபர் அதை ஏற்றுக்கொள்வாரா? இந்த பிரச்சனை குறித்து யோசித்தால், நம் தரப்பை எதிர் தரப்பு ஏற்றுக்கொண்டது போல் வாதத்தை முடித்திருப்பது சரியல்ல என்பது புரியும். திரு. பிரசாத்தின் கட்டுரையில் [உரையாடல் பாணி], தானும் தலித் அமைப்புகளின் கண்ணோட்டத்திலிருந்து சிந்திப்பதாக கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருப்பினும், அம்முடிவு தவறான முடிவாக திரும்பியிருக்கிறது. திரு. பிரசாத்தின் எழுத்தில் மற்றொரு தவறையும் காண முடிகிறது. அது தெளிவேதும் கொடுக்காத தவறு. லக்‌ஷிபேட்டாவின் ஏழை தலித்துகளின் கோரிக்கைகளில் ஒன்று 250 ஏக்கர் நிலம் தலித்துகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதாகும். இந்த பிரச்சனையில், தலித்துகளுக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதியில் வாழும் மற்ற ஏழை குடும்பங்களுக்கும் நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது திரு. பிரசாத்தின் வாதம். பொதுவாகப் பேசினால், நிலப்பகிர்வைப் பொறுத்தவரை, சாதிப் பாகுபாடின்றி எல்லா ஏழை மக்களையும் ஒருங்கிணைக்க இந்த ஆலோசனை தவறானதல்ல. ஆனால் வாதத்தில் தான் தவறுள்ளது.

தலித் ஒருங்கிணைப்பாளர் முதலில் பின்வருமாறு சொல்கிறார்: “250 ஏக்கர் நிலமும் தலித்துகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் உங்கள் கட்சியான சிபிஐ-எம்.எல் (புதிய ஜனநாயகம்) லின் கோரிக்கை வேறாக இருக்கிறது. தலித்துகளோடு, நிலமற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (பி.சி) நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறீர்கள். இது கொல்லப்பட்ட தலித்துகளை அவமதிப்பதாகாதா?”

மற்றொரு இடத்தில், தலித் ஒருங்கிணைப்பாளரின் கேள்வி, “பி.சிக்களுக்கு நிலங்களைப் பகிர்ந்தளிப்பதென்றால், கொலைக்கார கும்பலுக்கு வலு சேர்ப்பதாகாதா?” மற்றொரு இடத்தில், “கொலைகாரர்களுக்கும் நிலம் கொடுக்க வேண்டும் என்று நாம் எப்படி சொல்ல முடியும்”?

தலித் ஒருங்கிணைப்பாளர் முதலில் கேள்வி கேட்டவுடன், கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளர் உடனடியாக என்ன சொல்ல வேண்டும்? “கடைசியாக! கொலைகாரர்களுக்கு நிலமளிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தாக்கியவர்கள் எவ்வளவு ஏழைகளானாலும், அவர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு அவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். அதற்குரிய தண்டனைகள் பெற வேண்டும். ஏழையாக இருக்ககூடிய அத்தகைய கொலைகாரர்களுக்கு நிலமளிக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. அத்தகைய தாக்குதலை, கொலைகளை எதிர்த்தவர்களில் ஏழைகள் இல்லையா? அத்தகைய ஏழைகளுக்கு நிலங்களை வழங்க வேண்டும் என்றுதான் நாமும் எமது கட்சியும் சொல்கிறோம்” – இப்படித்தான் ஒரு கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளர் தன் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் பிரசாத் இப்படி பதிலளிக்கவில்லை.  ”கொலைகாரர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?” என்று தலித் ஒருங்கிணைப்பாளர் கேட்டவுடன், பிரசாத் பின்வருமாறு பதில் சொல்கிறார்: “அரசியலில் என்றுமே நேர்கோடுகள் கிடையாது. சந்தர்ப்பத்தைப் பொறுத்து சில உத்திகள் தேவைப்படுகிறது. நேர்கோட்டில் நின்று கொண்டு பொருட்களை காண்பவர்களுக்கு உத்திகள் வளைந்து நெளிந்த்து தெரிகிறது. ஆனால் இலக்கை அடைவதே முக்கியம். நீங்கள் வளைவு நெளிவுப் பாதையை விரும்பவில்லை…. ”கொலைகாரர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?” எனும் உங்கள் கேள்வி நியாயமானதுதான், ஆனால் உங்கள் கேள்வியில் தீர்வில்லை. உங்கள் கேள்வியில் தார்மீக நெறியுள்ளது ஆனால் நடைமுறைகேற்ற நெறி இல்லை. சற்று நிதானமாக, ஆழமாக சிந்தியுங்கள்.
இந்த விளக்கம் எதை உணர்த்துகிறது? நிலமில்லையென்றால், கொலைகாரர்களுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிறது! கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமா இல்லை அவர்களுக்கு நிலமளிக்கப்பட வேண்டுமா? “கொலைகாரர்களுக்கு நிலமளிக்கத் தேவையில்லை” என்று கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளர் சொல்லியிருந்தால், இந்த வாதமே எழுந்திருக்காது”: பிரசாத்தின் ஒட்டு மொத்த கட்டுரையும், லக்‌ஷ்மிபேட்டாவில் நிலம் பகிர்ந்தளிப்பது தொடர்பாகவே இருக்கிறது. பிரசாத் மேலும் சொல்கிறார், “அரசியலில் நேர் கோடுகள் கிடையாது” என்றுபிரசாத்தின் கண்ணோட்டத்தின்படி எல்லா வர்க்கத்தின் அரசியல் இதே தன்மையில்தான் இருக்கும் போலிருக்கிறது. ஆனால் வர்க்கங்கள் மாறும்போது அதன் அரசியல் தன்மையும் மாறுகிறது. மாறும். ஒரு பிரச்சனையில் நேர் கோட்டில் செல்லாதிருப்பது சுரண்டும் வர்க்கத்தோடு தொடர்புடையது. சுரண்டலுக்கெதிராக போராட வேண்டிய தொழிலாளர் வர்க்கத்தின் தன்மை அதுவல்ல. வளைந்து நெளிந்த பாதையை, உத்தியைக் கையாண்டு தொழிலாளர் வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது.

தலித் மக்கள் எப்போதும் சாதிக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சனைகளை சாதியக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும், அவர்கள் (தலித்துகள்) தொழிலாளர் வர்க்கத்தினரே. அவர்களுக்கு தெளிவான வர்க்க உணர்வு இல்லையென்றாலும், அவர்களது தொழில், பழக்கம், போராட்டம் ஆகியவை தங்களது இன்னல்களை நேர்மையாக எதிர்க்கும்விதமாக அமைய வேண்டும். “அரசியலில் நேர்கோடுகள் கிடையாது” என்று சொல்லி அதே வரையறையை எல்லாவிதமான அரசியலுக்கும் பொறுத்தக் கூடாது. நேர்பாதையற்ற எந்தவொரு தவறான உத்தியையும் பின்பற்றி இலக்கை அடைந்துவிட முடியும் என்று நம்புதல் கூடாதுநாம் அடையவேண்டியல் இலக்கு என்ன? வெவ்வேறு சாதியினரின் ஏழைகளுக்கிடையே ஒற்றுமை. அதில் கொலைகாரர்களை இணைப்பது ஒற்றுமையல்ல. இந்த இடத்தில் கொலைகாரர்களோடு இணையாதிருப்பதே பொறுத்தமனது. இது பாதிக்கப்பட்டவர்களின் சுய-மரியாதையோடு தொடர்புடையது.

எழுத்தில் தவறிருந்தால், விமர்சனம் என்பது தவிர்க்கவியலாதது. திரு. பிரசாத்தின் கட்டுரையில் நடந்திருப்பதும் இதுவே. “உண்மையைக் கொன்று, அதன் கல்லறையின் மேல் ‘இசங்களை’ எழுப்ப முடியாது” எனும் தலைப்பிட்ட திரு. துட்டு பிரபாக்கரின் கட்டுரை ஒன்று திருகுபட்டு வில் (டிசம்பர் 2012) வெளிவந்ததுஅந்த ‘உண்மை’தான் என்ன? உண்மையை கொலை செய்பவர் யார்? அந்த ‘இசம்’தான் என்ன? திரு. பிரபாக்கரின் கண்ணோட்டத்தைப் பார்ப்போம். அவர் குறிக்கும் உண்மை: ‘தலித்துகள் மிது நடந்த தாக்குதலுக்கு சாதியே காரணம், வேறெதுவுமில்லை”. உண்மையை உணராமல் பிரசாத்தைப் போன்ற கம்யூனிஸ்டுகள் அதைக் கொல்கின்றனர்: தவறான பாதையை பின்பற்றி அவர்கள் ஒரு ‘இசத்தை’ (கம்யூனிசம்) எழுப்ப நினைக்கிறார்கள்.

ஆனால், கம்யூனிசம் ஒரு நல்ல ‘இசம்’ என்றால், தவறான பாதையை பின்பற்றி எவரும் அதை கட்டியெழுப்ப முடியாது. அதை பிரசாத் தவறான முறையில் எழுதி இருந்தாலும், “நாம் நட்பு முறையில் விவாதிக்க வேண்டும்” என்று சொல்லி ஒரு நேர்மறை மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தன்னுடைய நட்பு மனப்பான்மையை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: “நாம் அடிப்படையில் நன்பர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது”; “நாம் நண்பர்களாகப் பணிபுரிவோம்”; “நான் வாதிட்டதற்காக, நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை”; “நம்முடைய வாதத்திலிருந்து நாம் சில விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்”; “ஒன்றுபட்டு விவாதித்தால் தான் நம்முடைய பரஸ்பர புரிதல்கள் மெருகேறும்”; “நீங்கள் ஒரு சிறந்த கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்”….இவ்வாறாக….

தலித் ஒருங்கிணைப்பாளர் கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பாளரின் புரிதலோடு ஒத்திசைவதுபோல் பிரசாத் எழுதியிருப்பதே பிரபாக்கரின் முதன்மை விமர்சனப் புள்ளி. இது தவறுதான் என்பதை பிரசாத் ஒப்புக்கொள்ள வேண்டும்.

எல்லா கம்யூனிஸ்டுகளும் பிரசாத்தின் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில்லை அதேபோல் எல்லா தலித் தலைவர்களும் சாதியக் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே வாதம் செய்வதில்லை. அதே பிரபாக்கர் பின்வருமாறு முடிக்கிறார்: “ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக தலித்துகள், இந்த நாட்டின் கம்யூனிஸ்டுகள் சாதிப் பிரச்சனையை புறம் தள்ளி, மேல் சாதி ப்ராமண கருத்தியலில் கழுத்தாழம் வரை மூழ்கியிருக்கிறார்கள்”.

கம்யூனிஸ்டுகள் சாதிப் பிரச்சனையை புறக்கணித்தார்கள் என்று சொல்வது எல்லா கம்யூனிஸ்டுகளும் ஒன்றுபோன்றவர்களே என்று சொல்வதற்குச் சமம். கம்யூனிஸ்டுகள் பற்றி தலித்துகளுக்கு இத்தகைய கருத்தே நிலவுகிறது என்று சொல்வது தலித்துகளைப் பொதுமைபடுத்துவதற்குச் சமம். இது, தலித்துகள், கம்யூனிஸ்டுகளை இரண்டு பிரிவுகளாக நிறுத்திவைப்பதற்கே வழிவகுக்கிறது.

கம்யூனிஸ்டுகள் சாதிப் பிரச்சனையை புறக்கணிக்கிரார்கள் என்று சொல்வது பொருளற்றது. கம்யூனிஸ்டுகளுக்கும் சாதி-சார்ந்த பிரச்சனைகள் உள்ளது. அவர்களது குடும்பங்களும் இத்தகையப் பிரச்சனைகளை எதிர்கொள்கிரார்கள். அவர்களும் சாதியை ஒழிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒவ்வொரு உறவுகளிலும் உள்ள ஆதிக்கத்தை விலக்கி சமத்துவத்தை அடையும் பாதையை கம்யூனிஸ்டுகள் காட்டுகிறார்கள். அதை வெளிப்படுத்தும்போது சில தவறுகள் செய்யக்கூடும். அவர்களும் பாதையை தவறவிடுவார்கள். ஆனால் படிப்படியாக அவர்கள் அதை சரிசெய்து கொள்வார்கள்.

சமூகப் பிரச்சனைகளில் காரணங்களைத் தேடும்போது, உழைப்புசார் உறவுகளிலிருந்து ஊற்றுபெறும் முரண்பாடான நிலைமைகளை கம்யூனிஸ்டுகள் காண்கின்ரனர். உற்பத்தி சாதனங்களின் உடைமையில் உள்ள வேறுபாடுகள்; உழைப்பைச் செலுத்தாமல், மற்றவர் உழைப்பைச் சுரண்டி எப்படி சொத்துக் குவியல் நடக்கிறது: சுத்தம் x அசுத்தம் எனும் பணிகள் என்ற உழைக்கும் மக்களுக்கிடையேயான உச்ச வேறுபாடு ஆகிய பொருளாயத காரணங்களை அவர்கள் காண்கிண்றனர். இந்த நிலைமைகளை மாற்றுவதற்கான தீர்வுகளைக் கம்யூனிஸ்டுகள் கோருகின்றனர். அது ‘சாதியோ’, அல்லது ‘வர்க்கமோ’, ‘ஆணாதிக்கமோ’ மற்ற பிரச்சனையோ, அது பழைய காலகட்டத்திலோ அல்லது இயல்பாகவோ தோன்றவில்லை. தவறான சமூக நிலைமைகளிலிருந்தே தவறான உறவுகள் உருவானது, தொடர்கிறது. சில பிரச்சனைகளுக்கு தெளிவான காரணங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், அந்த பிரச்சனையின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை சிந்திக்க முடியும்.

சாதியமைப்பு இருக்கிறது. ‘உயர்ந்தது’, ‘தாழ்ந்தது’ என்று கருதப்படும் சாதிகளைக் காண்கிறோம். ‘கீழ்’ சாதியினர் எண்ணிலடங்கா அவமதிப்பையும், அட்டூழங்களையும் சந்திக்கின்றனர். அதன் ‘பெயரை’ மட்டுமே கொண்டு சாதிகள் பெறும் மதிப்பையும், அவமதிப்பையும் பெறுகிறது என்பது உண்மையே. இரட்டைக் குவளை முறையில் [கிராமப்புற பகுதிகளில், தலித்துகளுக்கு தனித்த குவளையில் தேநீர் கொடுப்பது] சாதி மட்டுமே காரணமாக இருக்கிறது. அதில் வேறெதுவும் காரணம் தெரியவில்லை. பள்ளியில் ஒரு சாதியின் பிள்ளைகள் மற்ற சாதியின் பிள்ளைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டால், அதில் சாதியைத் தவிர வேறெதுவும் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தல் வேறெந்த காரணமும் தெரியாது.

 ஆண் பெண் பிரச்சனையை ஒருவர் எடுத்துக் கொண்டால், பெண்கள் தாழ்ந்தவர்கள், ஆண்கள் உயர்ந்தவர்கள் என்பது திறந்த உண்மையாகிவிட்டது. ஆண்-பெண் பாலியல் வேறுபாடு என்பதே உண்மை காரணமாகத் தோன்ருகிறது. அது வெளிப்படையாகத் தெரியும் காராணம். ஆனால் அடிப்படையில் இருப்பது உழைப்பு சார் உறவுகள் மற்றும் உற்பத்தி உறவுகள் (உற்பத்தி சாதனம்). ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலை பெண்களுக்கு, வெளி வேலை ஆண்களுக்கு எனும் உழைப்புப் பிரிவினை தோன்றியது. சொத்துக்களை கட்டுப்படுத்தும் உரிமையை, பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்கும் நிலையை அது ஆண்களுக்கு வழங்குகிறது. இந்த அம்சம், தொன்று தொட்டு தோன்றிய ஒன்று, வெளியில் தெளிவாகத் தெரிவதில்லை. வெளியில் தெரிவது என்னவென்றால், ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள், உணவுக்குக் கூட அவர்கள் ஆண்களையேச் சார்ந்திருக்க வேண்டும்.

இவ்வாறாக எந்தவொரு பிரச்சனைக்கும் வெளியில் தெரியும் காரணம் ஒன்று, உட் காரணம் மற்றொன்று. வெளியில் தெரியும் காரணமும், அம்சங்களும் உட்காரணத்தைச் சார்ந்தது.

சாதிகளின் உயர்வு தாழ்வுக்கு அதன் பெயர்கள் காரணமில்லை. ஆனால் மக்கள் அதன் பெயரின் பின்னால் செல்கிறார்கள். துணி வெளுப்பவர்கள் ‘வண்ணான்’. முடி திருத்துபவர்கள் ‘அம்பட்டன்’. ஏன் அந்த சாதிகளுகு அப்பெயர் கிட்டியது. தொழிலினாலா. எல்லா நாடுகளிலும் இந்த தொழில்கள் இருக்கிறதே. அங்கெல்லாம் சாதிகள் தோன்றவில்லையே. சாதிகள் தோன்றாத நாடுகளிலும், அசுத்தப் பணியைச் செய்பவர்களுக்கு சமூகத்தில் உயர்விடம் கிடையாது. சாதியமைப்பென்பது ஒரு அற்ப, நம்பிக்கை துரோகம். சில சாதிகளுக்கு அது கடும் பிரச்சனை. பெரும்பாலான சாதியினர் அதை ஒழித்துகட்ட நினைக்கின்றனர்.

ஒவ்வொரு இடத்திலும் தலித்துகள் ‘மேல் சாதி ஆதிக்கம்’ எனும் பதத்தை உபயோகிக்கின்றனர். மேல் சாதி ஏன் ஆதிக்கத்தை கைபற்றியது? ஏன் கீழ் சாதிகளால் அது முடியவில்லை? சிலர் ஆதிக்கம் செலுத்த மற்றவருக்கு அது முடியாமல் போவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். ஒரு நபரின் கைகளில் வாளிருந்து, அடுத்தவரின் கைகளில் சிறு குச்சியோ, துடைப்பமோ கூட இல்லையென்றால், வாள் வைத்திருப்பவன் நிச்சயமாக திமிரும், ஆதிக்கமும் கொண்டவனாகவே இருப்பான். ‘இரண்டு பேரும் மனிதர்கள், சமமானவர்கள்’ என்று எண்ண மாட்டான்பிறகு அடுத்த நபர் என்னதான் செய்ய வேண்டும்? அவருடைய திமிரைப் பார்த்து, ‘அவர் திமிர் பிடித்தவர்! அவர் திமிர் பிடித்தவர்’ என்று சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதில், அந்த நபரின் கைகளில் இருக்கும் வாளை கவனிக்க வேண்டும். அதிலிருந்து உண்மை காரணத்தை அவதானிக்க வேண்டும், “அவன் கையில் இருக்கும் வாளால் தான் அவன் அப்படி இருக்கிறான்”. அதை பிடுங்கிவிட்டு, மீண்டும் அது அவனுக்கு கிடைக்காதபடி செய்துவிட்டால் அவன் திமிர் அடங்கும். தொடக்கத்தில் போராட்டமாக இருந்தாலும், நாளடைவில் அவன் கண்கள் திறக்கும். இவ்வாறாக மேல் சாதி ஆதிக்கத்திற்கான அடிப்படையை நோக்கி நாம் கவனத்தை செலுத்த வேண்டும். ‘எல்லாம் சாதியால் தான்! சாதியால் தான்! ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தால், வாளை உருவும் வழி நமக்கு கிடைக்காது. இந்த இடத்தில் ஒரு முக்கிய விசயம்: சில மேல் சாதிக்காரர்களிடம் ஆதிக்கம் நிலவுகிறது என்பது உண்மையே; அதேபோல் சில மேல் சாதிக்காரர்கள் அத்தகைய ஆதிக்கத்த வெறுக்கின்றனர் என்பதும் உண்மையே . ஆனால் இந்த இரண்டு வகை மனிதர்களை தலித் தலைவர்கள் வேறுபடுத்திக் காண்பதில்லை. இரண்டு தரப்பையும் ஒன்றாகவே கருதி அவர்களை ‘ஆதிக்க சாதி’ என்கின்றனர். இது சரியல்ல.

பின்வரும் மேற்கோளைப் பார்ப்போம். சாதியமைப்பு குறித்து ஏதாவது புதிதாகத் தெரிகிறதா என்று பார்ப்போம்.

அந்த காலகட்டத்தின் வர்க்கப் போராட்டங்கள் மத அடையாளத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றினால், மதத் திரைக்குப் பின் குறிப்பிட்ட நலன்கள், தேவைகள், கோரிக்கைகள் ஒளிந்து கொண்டால், உண்மை நிலையை அது சிறிதும் மாற்றாது, அக்கால நிலைமைகள் கொண்டு அதை விளக்கலாம்” – (அழுத்தம் நம்முடையது). (எங்கல்ஸ், 1850. ஜெர்மனியில் உழவர் போராட்டம். முன்னேற்றப் பதிப்பகம். மாஸ்கோ, பக்: 48, தெலுங்கு பதிப்பு. இதன் ஆங்கிலப் பதிப்பு www.marxist.org யிலிருந்து கொடுக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

மத போராட்டம்போல் காட்சியளிக்கும் போராட்டங்கள் உண்மையில் வர்க்கப் போராட்டங்களே என்று இந்த மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது. ஒரு மதத்தின் மக்கள் மற்ற மதத்தின் மக்களைக் கொல்வது ‘மதச் சண்டை’ போல் நமக்குத் தெரியும். ஆனால் அத்தகைய மதச் சண்டைகள் வேறொன்றிலிருந்து தோன்றுகிறது. மதம் அதற்கு அடிப்படை இல்லை. மதத்தின் பெயரால் கொல்பவர்கள் மத நலன்களை மட்டும் கொண்டவர்கள் அல்ல, பொருளாதார நலனையும் தான். அத்தகைய நலன்களை நிறைவேற்ற செலுத்தப்படும் போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்களேஎனினும், வெவ்வேறு மதங்களுக்கிடையில் நடப்பதால் அது மதச் சண்டை போல் தோன்றுகிறது. நம் விவாதத்திற்கு இந்த விளக்கம் ஏதாவது பயன் தருமா? மிகச் சரியாக, சாதியப் போராட்டமாக தொடுக்கப்படும் ஒவ்வொரு போராட்டமும், வர்க்கப் போராட்டமே. சாதித் திரைக்குப் பின் வர்க்கம் ஒளிந்திருக்கிறது. சாதி மட்டுமே வெளியில் தெரிகிறது. அதை நாம் சாதிச் சண்டையாகக் காண்கிறோம். சாதியிலிருந்து தலித்துகளின் நலன்கள், தேவைகள் கோரிக்கைகள் தோன்றினாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கத்தவர்.

லக்‌ஷ்மிபேட்டாவில், கப்பு சாதி மக்கள் மாலா சாதி மக்களைத் தாக்கினர், கொன்றனர். அது சாதிச் சண்டை போல் நமக்குத் தோன்றுகிறது. இரண்டு சாதிகளும் சாதியச் சிந்தனை கொண்டிருக்கவில்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால், இந்தக் கொலைகளில், மாலா சாதி எந்த பாத்திரத்தையும் ஆற்றவில்லை. அந்த சாதி மக்களுக்கு சிறிது நிலம் தேவைப்பட்டது. தங்கள் சொந்த உழைப்பில் வாழும் சுதந்திர உழைப்பாளிகள் அவர்கள். வாழ்வாதாரத்திற்காக அவர்களுக்கு நிலம் தேவைப்பட்டது. ஆனால் கப்புக்களின் செயல்பாட்டின் முக்கிய அம்சம் சொத்துடைமைக்கான ஆவல். மாலாக்கள் விவசாயிகளாகிவிடாமல், நிலமற்ற கூலிகளாகவே இருக்க வேண்டும் என்பது சுரண்டும் எஜமானர் வர்க்கத்தின் எண்ணம். நிலப் பிரச்சனை இல்லையென்றால் இந்த தாக்குதல்கள் நடந்திருக்காது; ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்ததுபோல் தலித்துகள் நிலமற்ற உழைப்பாளிகளாகவே இருந்திருந்தால்; நிலத்தைத் தொடாமல், கப்புகளின் பிடியிலேயே அதை விட்டிருந்தால்; இல்லை கப்புக்களுக்கு நில வாடகை கொடுத்திருந்தால். இந்த தக்குதல்கள் சாதியப் போராட்டம் போல் காட்சியளித்தாலும், அது உழைபாளிகளுக்கும், சுரண்டல்வாதிகளுக்குமிடையே நடந்த போராட்டம்; உழைப்பவர்கள், மற்றவரை சுரண்டுப்வர்களுக்கிடையே நடந்த போராட்டம். அது தீண்டாமையோ, அல்லது தலித் சாதிகள் மீது மற்ற கட்டுப்பாடுகளோ, அவை, தலித்துகளை ஒடுக்கி அவர்களை நிரந்தர அடிமட்ட கூலிகளாக, எழ முடியா வண்ணம் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

சில மனிதர்கள் சுத்தமாக வாழ வேண்டுமென்றால், அசுத்தப் பணிகளை செய்யும் மனிதர்கள் சிலர் தேவை. தலித்துகள் மீது ஏவப்பட்டிருக்கும் விதிமுறைகள் சுரண்டும் வர்கத்தால் அவர்களை ஒடுக்குவதற்காக ஏவப்பட்டது. ஒடுக்கப்படும் வர்க்கம் செலுத்தும் உழைப்பின் வகையைப் பொறுத்து அவ்விதிகளின் தீவிரம் மாறுபட்டது. தலித்துகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் வண்ணான் மீது காணப்படுவதில்லை, வண்ணானுக்கான விதிகள் அம்படனுக்கில்லை. உடல் உழைப்பைத் தவிர உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத வர்க்கத்தின் மக்கள் மற்ற வர்க்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்ற பணிக்கப்படுகிறது. எனினும், அதில் சில விதிகளை சட்டம் மற்றும் சீர்திருத்தம் கொண்டு மாற்றலாம். ஆனால், மேலோட்டமாக எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், சமத்துவம் கிடைக்கப்போவதில்லை, உழைப்பின் சுரண்டல் தன்மையையும், உழைப்புப் பிரிவினையையும் மாற்றாமல் சாதி ஒழியாது. மற்ற நாடுகளைப் பார்த்தால், அங்கும் உழைப்புசார் உறவுகளின் (உற்பத்தி உறவுகளின்) இயல்பை மாற்றாமல் சமத்துவம் கிடைக்காது. பிரபாக்கர் சொல்கிறார், “ஆதிக்கம் செலுத்தும் சுரண்டல்வாத சக்திகள் தங்களுடைய பாதுகாப்பு வட்டமாக சாதியை வலுவூட்டுகின்றனர்”. மேலும், “சுரண்டல்வாத ஆதிக்க சக்திகளுக்காக உருவாக்கப்பட்டதே சாதியமைப்பு”. அப்படியென்றால், என்ன நடக்க வேண்டும்? நாம் எதைச் செய்தாலும், அது சுரண்டல்வாத ஆதிக்க சக்திகளுக்கு எதிராக இருக்க வேண்டும், இல்லையா? அதாவது, அவர்களுக்கு பலமூட்டும் அந்த காரணத்திற்கு எதிராக. இதைத்தானே கம்யூனிஸ்டுகளும் சொல்கின்றனர்?

ஏணிப்படி போல் இருக்கும் ஒரு முறையை தூக்கி எறியும் எந்த செயல்திட்டததையும் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கவில்லை” என்று பிரபாக்கர் விமர்சிக்கிறார். கம்யூனிஸ்டுகளிடம் அத்தகைய செயல்திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் எதிராக போராடும் திட்டம் வர்க்க போராட்டத்தில் உள்ளது. சமமற்ற உறவுகள் சமமான உறவுகளாக மாறும் நடைமுறையே வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ’ஏணிப்படி போல் இருக்கும் ஒரு முறையை தூக்கி எறியும்’ தங்களது செயல்திட்டத்தைச் சொல்ல வேண்டும். இந்து மத நூல்களை மாற்றுவது, பௌத்தத்திற்கு மாறுவது என்பதைத் தவிர இதுவரை அவர்கள் எந்த தீர்வையும் வைக்கவில்லை. “வர்க்கப் போராட்டம்” எனும் சொல்லை பயன்படுத்தாமல் அவர்கள் தங்களது சாதி ஒழிப்பு செயல்திட்டத்தைப் பேச வேண்டும்.

பிரபாக்கர்: “கம்யூனிஸ்டுகளின் வர்க்கப் போராட்ட பார்வையும், தலித்துகளின் சாதி ஒழிப்புப் பார்வையும் இரண்டு வேறு பொருள்கள் இல்லை”.

கம்யூனிஸ்டுகள் இரண்டையும் ஒன்றாக கருதுவதில்லை, அதனால் அவர்கள் தலித்திய பார்வையை ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டும் ஒன்றுதான் என்று தலித்துகள் ஏற்றுக்கொண்டால், அவர்கள் ஏன் கம்யூனிஸ்டு பார்வையை ஏற்றுக்கொள்வதில்லை?

பிரபாக்கர்: “நிலத்தைச் சுற்றி மட்டுமே பிரச்சனை என்று பாவனை செய்து, உழல்பவர்களிடம் எவ்வளவு பேசினாலும், அது வீண்”. கம்யூனிஸ்டுகள் பாவனை செய்கின்றனர் என்று அதற்குப் பொருள்! பாவனை செய்பவர்களின் பார்வையும், தலித் ஒருங்கிணைப்பாளர்களின் பார்வையும் எப்படி ஒன்றாக இருக்கும்? இரண்டும் ஒன்று என்று நீங்கள் சொன்னீர்கள் இல்லையா?

பிரபாக்கர்: “ஸ்ரீகுளம் மாவட்டத்தில் பி.சிக்களாக கருதப்படும் துருப்பு காப்புக்கள், மேல் சாதி ஆதிக்கத்துடன்….”

ஓபிசிக்களும் மேல் சாதியினருக்கு எதிரான பகுஜன்களில் ஒருவரே. அத்தகைய கீழ் சாதி ஓபிசிக்கள் எப்படி மேல் சாதி ஆதிக்கதோடு இருக்க முடியும்? எந்த காரணத்தினால் அவர்கள் அந்நிலையை அடைந்தனர்? மாற்றத்திற்கான காரணம் என்ன? கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அவர்கள் வாடகை, வட்டி, இலாபம் ஆகியவற்றை அபகரித்து சுரண்டல்காரர்களானதால் நிகழ்ந்த  மாற்றம் அது. ”நாங்கள்  சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்… ஒதுக்கப்பட்டவர்கள்…..” என்று சொல்வது சரியல்ல.

பிரபாக்கர்: “மேல்சாதி கருத்தியலாளர்களுக்கும், தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு நிலமின்மையே காரணம் தாக்குதல்களை நிறுத்த அவர்கள் நிலப் போராட்டம் தொடுக்க வேண்டும் என்று சொல்லி சாதியப் பிரச்சனையில் பதுங்குபவர்களுக்கும் ஒரு கேள்வி”.

அந்தக் கேள்வியை பிறகு பார்ப்போம். மேல்சாதி கருத்தியலாளர்களும், சாதியப் பிரச்சனையில் பதுங்குபவர்களுமா தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வாதிடுகிரார்கள். தலித்துகள் நிலப் போராட்டம் தொடுத்து, நிலங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று அவர்களா வாதிருகிறார்கள். அப்படி அவர்கள் செய்தால், அவர்கள் நல்ல மனிதர்கள் இல்லையா?

பிரபாக்கரின் கேள்வி: “நிலமற்ற மற்ற சாதியினர் மீது ஏன் இத்தகைய மாபெரும் தாக்குதல்கள் நடைபெருவதில்லை?”

நடந்த நிகவுக்குத்தான் நாம் காரணம் தேட முடியும். நடக்காத ஒன்றுக்கல்ல. உண்மைதான், ஒருவகையில், அறியப்பட்ட காரணங்கள் கொண்டு தெரியாத காரணங்களைக் கற்பனை செய்யலாம். நிலமற்று இருந்தாலும் நிலம் வேண்டும் என்று கேக்காத அந்த மக்கள் மீது ஒருவேளை அதனால் தாக்குதல்கள் நடக்காதிருக்கலாம். ஆனால் தலித்துகள் நிலம் கேட்கிறார்கள் அல்லவா? தலித்துகள் உழைக்கும் வாழ்க்கையை விடுத்து; நிலம் மூலம் சொத்துடைமை பெற விரும்பும் தலித்துகளின் முயற்சியை அந்த சுரண்டல்காரர்கள் விரும்பவில்லை அல்லவா?

பிரபாக்கர்: “நிலமிருந்தும் ஏன் கயர்லாஞ்சியின் ஒட்டுமொத்த பய்யால் குடும்பங்களும் வன்புணர்வுக்கும், கொலைக்கும ஆளானார்கள் என்று அவர்கள் [சாதிப் பிரச்சனையில் பதுங்குபவர்கள்] சொல்ல வேண்டும்”

அந்த நிகழ்வுக்கு நீங்கள் சொல்லும் காரணம்: அமெரிக்கா ஏன் ஈராக்கை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்கிறது, ஏன் ஆஃப்கானிஸ்தானில் கொலைகளைச் செய்கிறது, ஏன் பிரிட்டன் இந்தியாவை ஆக்கிரமித்தது, அகிம்சா வழியை பின்பற்றி சட்டபூர்வமாக முறையிட்ட மார்ட்டின் லூதர் கிங்கை ஏன் அமெரிக்க கொன்றது, கொலம்பஸ் எனும் அந்த நபர் இந்தீஸ் தீவில் பழங்குடி மக்களை ஏன் பலியிட்டான்….இவ்வாறாக… இந்த அட்டூழியங்களில் எந்த சாதித் தொடர்பிருந்தது? இருந்தாலும் நடந்தது. கயர்லாஞ்சியின் பய்யால் சம்பவமும் நிலத்தோடு தொடர்புடையதே. அந்த அற்ப நபர்கள் தங்கள் நிலங்களைக் கேட்டனர், அவர்களின் கோரிக்கை நிராகரித்தனர். ஒட்டு மொத்த குடும்பங்களையும் ஒழித்துக்கட்டினால் நிலத்தை ஆக்கிரமிக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களைக் கொல்வதற்கு முன் ஏன் அந்த குடும்பப் பெண்களின் உடலை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டும்? அவர்களை வன்புணர்வு செய்தபின்பு கொல்லலாமே. சுரண்டல்காரனாக இருந்தாலும், மற்ற சுரண்டல்காரனின் கொடூரத்தை கற்பனை செய்ய முடியாது

தலித் சாதியின் ஒன்றிரண்டு குடும்பங்களிடம் மட்டும் நிலமிருந்தால், அது அவர்களுக்கு எந்த பாதுகாப்பையும் கொடுக்காது. பெரும்பான்மை மக்களின் நிலைமை மாறினால் மட்டுமே பலம் கிட்டும். “தலித்துகளும் நிலம் கொண்டிருக்க வேண்டும்” என்று கம்யூனிஸ்டுகள் சொன்னால், அது ஒரு அருவருப்பான விசயமாக தலித்துகளுக்கே தோன்ற வேண்டாமா?

பிரசாத் எழுதியதில் தவறிருந்தால் ஒருவர் விமர்சனம் செய்யலாம், செய்யவும் வேண்டும். ஆனால் பிரசாத் எழுதியதென்னா? தலித்துகள் மற்றும் ஏழை மக்கள் நிலங்களைப் பெற வேண்டும். கம்யூனிஸ்டுகள் அப்படி கேட்பது ஏதோ கொலை குற்றம் என்பதுபோல் பிரபாக்கர் விவரித்தார். கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஒவ்வொரு முறையும் ஒரே பிரச்சனை மீண்டும் மீண்டும் எழும்போது, அவர்கள் அதேத் தீர்வைத்தானே தரவேண்டும். பிரச்சனை மாறாதபோது, தீர்வு மாறுமா என்ன?

(திருகுபட்டு, ஜனவரி 2013).

நன்றி: குறளி


No comments:

Post a Comment