Mar 28, 2025

நான் பெண்!




நான் பெண்! பெண்மையுடையவள் அல்ல
பெண்மை உடைத்தவள்!
நான் அழகாய் இருப்பதால் சமூகம் பயம் கொள்கிறது!
ஆம் இச்சமூகத்தின் பொய்மைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிரான எனது குரல் அழகாய் இருப்பதால் பயம் கொள்கிறது!

நான் நெருப்பு தான்!
உங்கள் புனிதங்களை என் கருப்பையால் காக்கும் நெருப்பல்ல!
சோம்பேறிக் கூட்டத்தின் அதிகாரத்தை எரியூட்டிச் சாம்பலாக்கும் நெருப்பு!

எனதருமை ஆண்-மாக்களே!
என் கண்கள் அழைப்பு விடுக்கின்றனவா!
வாருங்கள் நூலகம் செல்வோம்!

எனது உதடுகள் சிவந்திருப்பது பிடித்திருக்கிறதா!
நானே சிவப்பு தான்! அதுவும் பிடிக்குமா!
எனது மார்புக் கோடுகள் எடுப்பாக உள்ளதா?
அவைதான் நீங்கள் தீட்டி வைத்துள்ள தாண்டக் கூடாத படிகளை அழிக்கும் கோடுகள்!

என் இடுப்பின் வளைவுகள்
கடவுளர்களை கட்டவிழ்க்கும்!

எனது தொப்புள் தமிழ்நாட்டில் உரம் ஊட்டப்பட்டது!
அதனுள் இனவெறியோடலையும்
பூஞ்சைகளை
எட்டி உதைக்கும் வலு கொண்டன எனது கால்கள்!

ம்ம் இடையில் உள்ள யோனி
எரிமலையே அங்கே தான் ஒளிந்திருக்கிறது!

உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் ❤️

- கொற்றவை

written on March 8,2025
 


No comments:

Post a Comment