1.
கலைஞர் இப்படி
பேசியது உண்மையா என்று எனக்கு தெரியாது! உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது தவறு! ஆணாதிக்கப்
பேச்சுதான். அரசியலில் எதிரிகளை தாக்குகிறேன் என்று ஆணாதிக்கத் திமிரோடு பேசறதுதான
கெத்துன்னு எல்லா ”மைய” கட்சிகளும் நினைக்குறாங்க! முதலில் நான் திமுக ஆளுமில்லை என்பதை
தெளிவுபடுத்திக்கொள்ளவும்!
திமுக ஆதரவு என்பது தற்போதைய மதவாத ஃபாசிச பா.ஜ.க. / அதிமுக
கூட்டணிக்கு எதிராக தேவைப்படும் சமூக ஜனநாயக ஆதரவு என்னும் அளவில்தான்! இதுதான் கம்யூனிஸ்டுகளின்
அணுகுமுறை! கூட்டணிக்கு காரணமும் அதுவே!
2. கலைஞர் மட்டுமில்லை கார்ல் மார்க்ஸே தவறாக பேசினால் தவறு என்று விமர்சிக்கும் #துணிவும் #நேர்மையும் எங்க கிட்ட இருக்கு! உங்க தலைவர் அண்னாமலை தொடங்கி மோடிஜியின் தவறுகளை விமர்சிக்கும் துணிவும் நேர்மையும் உங்க கிட்ட இருக்கா?
மேற்சொன்ன துணுக்கை பற்றி விசாரித்த போது அது பொய் செய்தி என்றும் இந்திரா காந்திக்கு அன்று அடிபடவே இல்லை என்றும் தோழர் அருண் தெளிவுபடுத்தியுள்ளார்.
nn
பெரியார், அம்பேத்கர் போதாமைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில அணுகுமுறைகள் குறித்த விமர்சனப் பேச்செல்லாம் பார்க்குறதில்ல போல! என்னை தற்காக்கும் பேச்சல்ல இது! மார்க்சியம் என்பதே விமர்சனத்தின் மூலம் இயங்குவதுதான்! அதுபற்றி தெரியாமல் வடை சுடக் கூடாது!
3.
காயத்ரி மேடம்
சக்தி யாத்திரை போய் நீதி கேக்குற அளவுக்குல்ல இருக்கு உங்க கட்சில பெண்களோட நிலைமை!
ஐஸ்வர்யா ஒரு பெண்ணாக அவர் கருத்தை கூறினால் அதற்கு எப்பேற்பட்ட ஆபாச பேச்சுகளை பேசுகிறீர்கள்?
அவரது தொழிலை கூத்தாடி, நடிக்குற வேலைய மட்டும் பாரு, எங்களுக்கு ஆலோசனை சொல்லாத என்று
பேசுமளவுக்கு உங்கள் ஆதரவாளர்கள் திமிர் பிடித்து இருக்கிறார்கள் என்றால், உங்கள் கட்சி
நடிகர் நடிகைகளை ஏன் பிரச்சாரத்திற்கு அழைக்கிறது? ஸ்மிருதி இரானி நடிகை தானே? அவர் ஏன் பதிவியில் இருக்கிறார்
என்று கேட்கலாமா?
சட்டை போடாம வெளிய வருவேன், ஜட்டி போடாம வெளிய வருவேன் என்று
வாய் சவடால் விடும் நேரம்…. ஹிஜாப் தொடங்கி கல்வி கற்க தடை என்பது வரை இஸ்லாமியப் பெண்கள்
நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து தேடிப் படிங்கள்! கார் ஓட்டக் கூடாது என்று சவுதியில் நிலவிய தடைக்கு
எதிராக நடந்த போராட்டங்கள் குறித்து படிக்கவும்!
அதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் பாலஸ்தீனத்திற்கு
ஆதரவாக இஸ்ரேல் ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள் குறித்துப் படிக்கவும்.
சமூக ஜனநாயகம் என்பது மானுட நேசம்! ஒடுக்கப்படும் மக்கள்
பக்கம் நிற்பதே நீதி! மத வெறி, சாதி வெறி, ஆணாதிக்க வெறி, பண வெறி, அதிகார வெறி உள்ளவர்களுக்கு
அவை தம் கட்சியை, அரசியலை இருப்பை வளர்க்கத் தேவைப்படும் “கொள்கைகள்”!
உன் வீட்ல குப்பைய வச்சிருக்கியேன்னு கேட்டா! பக்கத்து வீடு
கூட தான் நாறுதுன்னு பேச எதுக்கு அறிவு?
கம்யூனிஸ்ட் அமைப்புகள்ல விமர்சனம், சுய விமர்சனம் என்னும் அணுகுமுறை, ஜனநாயகம் எல்லாம் உண்டு! கட்சித் தலைவராக இருந்தாலும் உட்கட்சி கூட்டங்களில் / அல்லது கட்சியில் இல்லை என்றால் தோழர் நீங்கள் இந்த விசயத்தில் இப்படி பேசியது தவறு என்று தோழமையோடு விவாதிக்கும் ஜனநாயக போக்கு உண்டு! சக கம்யூனிஸ்ட் அமைப்பு குறித்து இன்னொரு கம்யுனிஸ்ட் அமைப்பு எழுதும் விமர்சன நூல்களும் உண்டு! மீண்டும் கேட்கிறேன் உங்கள் தலைவரை, அமைப்பை விமர்சிக்கும் துணிவு உங்க கிட்ட இருக்கா?
விமர்சிக்கும் அளவுக்கு எந்த தவறுமே உங்கள் தரப்பில் இல்லை என்பீர்கள் எனில் இனிமேல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்குமில்லை!
உங்கள் அரசியல் பிழைப்பிற்காக நீங்கள் உளறுவதை உளறுங்கள், காலமும் மக்களும் தீர்ப்பளிப்பார்கள்! அறமற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!
No comments:
Post a Comment