தமிழ்நாடு / திராவிட மாடல் முற்போக்கானது! சமூக நீதி நிறைந்தது! வடக்கு போல் இல்லை என்று ஒரு வாதம் நிலவுகிறது! ”திராவிடம் தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று பிரபல ஊடகவியலாளர் சொல்கிறாராம். இவர் மார்க்சியத்தைப் படித்திருக்கிறாரா ஐயமே! படித்தும் இப்படி பேசுவார் என்றால் அது பிழைப்புவாதம்! அதோடு பாட்டாளி வர்க்கத்திற்கு இழைக்கும் துரோகம்!
திராவிட அரசியல் என்பது நிலவுடைமை வர்க்கத்தின் தேவையிலிருந்து (பார்ப்பனரல்லாத கூட்டணியாக) உதித்தது, தற்போது முதலாளித்துவத்தோடு தகவமைகிறது! அதில் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் ”போட்டியின்” காரணமாக “முதலாளித்துவ ஜனநாயகத்தை” கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எந்த வகையிலும் அது மார்க்சியத்திற்கு இணையாகாது! மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதே தவறான சொல்லாடல்!
மார்க்சியம் என்பதே மண்ணுக்கேற்ற
வகையில் ஆய்வு செய்து உத்திகளை கடைபிடிப்பது தான். அதற்கு எதற்கு முன்னொட்டு!
திராவிட அரசியலில் - பெரியார்
இயக்கத்தால் உண்டான பகுத்தறிவு, பெண் விடுதலை
இயக்கம், சாதி எதிர்ப்பு இயக்கத்திற்கென ஒரு நன்மதிப்பு
உண்டு. ஆனால் அது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு போதுமானதல்ல! பார்ப்பன எதிர்ப்பு
முதலாளித்துவ எதிர்ப்பாகாது!
உற்பத்தி சாதனங்கள் அனைத்தும்
பார்ப்பனர்கள் வசம் என்றொரு கூட்டம் சொல்லி அனைத்தைம் பார்ப்பனியத்தின் மேல்
போட்டுவிட்டு இடைநிலை சாதிகளின் வளர்ச்சி, முதலாளித்துவ,
ஏகாதிபத்திய சக்திகளுடனான அரசுகளின் கூட்டணி பற்றி வாய் திறப்பதில்லை!
சமூக நீதி என்கிற சொல்லாடல் மூலம் உண்மையான சமத்துவம் எது என்பதையே மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்! உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே உண்மையான சமூக நீதி! அது - அதாவது தனியுடைமை தகர்ப்பு திராவிட சித்தாந்தத்தில் இருக்கிறதா? சாதி ஒழிப்பிற்காவது தீர்வு உண்டா? மனசாட்சியோடு பேச வேண்டும்!
பகுத்தறிவு /
முற்போக்கு சிந்தனை என்பது தொடக்கம்! நம் அவல வாழ்க்கை / சமூகப் பிரச்சினைகளுக்கான
ஆணி வேர் பற்றிய முழுமையான கண்ணோட்டம் பெற மார்க்சியம் அவசியத் தேவை!
பகுத்தறிவு /
பெரியார் / அம்பேத்கர் என்பது தொடக்கம்! கலகம் தொடங்கும்! தீர்வுக்கு மார்க்ஸ்
அவசியத் தேவை!
#மார்க்சியம்
பெரியாரிடம் இந்த நிலைப்பாடு இருந்தது!
ஆனால் திராவிட ஆட்சியாளர்களிடம் பாட்டாளி வர்க்க சார்பு உள்ளதா?
தொழிலாளர் போராட்டங்கள் ஒடுக்கபப்டுவதில்லையா?
மார்க்சியம் நட்பு முரண்பாடு,
பகை முரண்பாடு என்பதை கணக்கில் கொள்ளும்! பிஜேபி கூட்டணி சேராத
திராவிட அரசியல் எங்களுக்கு நட்பு முரண்பாடு! பார்ப்பனியமும், முதலாளித்துவமும் பகை முரண்பாடு! RSS opp திராவிடத்திற்கு பார்ப்பனியம் பகை
முரண்பாடு! முதலாளித்துவம்? இதை மனதில் வைத்து அணுகவும் :)
ஆதிக்கம் என்கையில் ஆதிக்க சிந்தனை மட்டும் நம் எதிரி ஆகாது! மூலதன ஆதிக்கமும் நம் எதிரியாக இருக்க வேண்டும்! அதை தகர்க்கும் கொள்கை அந்த “மாடலில்” இருக்க வேண்டும். அதுவல்லாத ஆட்சி என்பது முதலாளித்துவ “ஜனநாயக” ஆட்சி! சீர்திருத்தவாதம் போல் தோன்றும்! Its an existential game here.
No comments:
Post a Comment