ரங்கநாயகம்மா எழுதிய பாடதிட்ட வடிவ நூலின் மொழிபெயர்ப்பு 79 அத்தியாயங்கள் முடிந்துவிட்டன. இந்நூலின் மொழிபெயர்ப்பை முடித்து விட்டுத்தான் முகநூலுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற முடிவில் தான் வெளியேறியிருந்தேன். (பணிச் சுமைகள், இடப்பெயர்வு இவையும் காரணம்).
மீதம் 15 அத்தியாயங்கள் உள்ள நிலையில் விரைவில் முடித்துவிடுவேன் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. ஒதுங்கியே இருப்பதால் ’பேசுவதையே’ மறந்து விடுவேன் போலிருக்கிறது. மெய்நிகர் உலகில் ‘இருப்பது’ அவ்வப்போது மனதை தளர்த்திக்கொள்ளவும் உதவுகிறது. ஆகவே, வருவதும், போவதுமாய்…..
ரங்கநாயகம்மாவின் நூல் வடிவம் சற்று சிக்கலானது. இந்நூலில் விளக்கப்படங்களுடன் பாடங்கள் வருவதால், மேலும் சிக்கலானது. சோதனை முறையில் ஹைதராபாத்திலேயே வடிவமைப்பு தொடங்கி விட்டது. மொழி தெரியாத தோழர் ஒருவர் இப்பணியை செய்து வருகிறார். அவர் தான் ரங்காஜியின் நூல்களை வடிவமைப்பவர். ஆகவே, மொழிபெயர்ப்போடு, வடிவமைப்பு கோப்பிலேயே நானே திருத்தங்களும் செய்ய வேண்டிய சூழல். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நூலும் பல காரணங்களுக்காகத் தாமதமாகிறது. (மற்றொரு மொழிபெயர்ப்பு நூல் முடிந்து 3 வருடங்களுக்கும் மேலாகி இன்னும் வராமல் இருக்கிறது!)
இந்நூல் எப்போது வெளி வரும் என்று தெரியவில்லை. ஜூன் என்று இலக்கு வைத்திருந்தோம். முடியவில்லை. இந்த வருடக் கடைசியிலாவது கொண்டு வர வேண்டும். வடிவமைப்பும், திருத்தமும் கை கொடுத்தால்…..
இதற்கு அடுத்து ஒரு முக்கிய நூலை மொழிபெயர்த்தே ஆக வேண்டும்… அதுவும் ரங்கநாயகம்மாவின் நூலே… இதை முடித்துவிட்டால், ஏற்றுக்கொண்ட பணியை முடித்துவிட்ட நிறைவு கிடைக்கும்!
நெருக்கடிகள் அசுர வடிவம் எடுக்கையில்… நூல்கள் வலு கொடுக்க…. இறக்கை இடம் மாறுகிறது…..
No comments:
Post a Comment