Aug 13, 2015

சிறுவர்களுக்கான பொருளாதாரக் கல்வி - மார்க்சின் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள்








அரசியல் பொருளாதாரம் மற்றும் மார்க்சியப் பார்வியிலான திறனாய்வை விரும்பிப் படிப்பவர்கள் ரங்கநாயகம்மாவை அறியாமல் இருக்க முடியாது. நான் அவரது முக்கியமான சில கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன். அதன் மூலம் அவரோடு எனக்குக் கிடைத்த நட்பும், அவரது எழுத்தின் மூலம் நான் பெற்ற அறிவையும் விளக்கிட சொற்கள் இல்லை. மூலதனம் பற்றியும் அரசியல் நிகழ்வுகளை, அரசியல் பொருளாதாரவாதங்களை மார்க்சியப் பார்வையில், மார்க்ஸ் எங்கல்ஸ்சின் எழுத்துக்களைக் கொண்டு எப்படி திறனாய்வு செய்வது என்பதை நான் ரங்கநாயகம்மாவிடமிருந்தே கற்றேன். கற்று வருகிறேன்.

அக்கல்வி அனைவருக்கும் கிட்ட அவரின் எழுத்துக்களை மொழிபெயர்த்து வருகிறேன்.

தற்போது ரங்கநாயகம்மாவின் சிறுவர்களுக்கான பொருளாதாரக் கல்வி - மார்க்சின் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள் எனும் நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது. இதற்காக வெகு நாட்கள் காத்திருந்தேன். அப்புத்தகத்தைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷம் அடைந்தேன்.

கூடிய விரைவில் தமிழிலும் வெளிவரும். 11 அத்தியாயங்கள் வரை மொழிபெயர்த்துவிட்டேன். ரங்கநாயகம்மா எப்போதும் தன்னுடைய எழுத்துக்களை தங்கள் சொந்த பதிப்பகத்தில் மட்டுமே வெளியிட விரும்புவார். தமிழ் மொழிபெயர்ப்பும் அந்தப் பதிப்பகத்திலேயே வெளி வரும்.

ஆங்கிலத்தில் வாங்க விரும்புவோர்:
பி.ஆர்.பாபுஜி
ஸ்வீட் ஹோம் பப்ளிக்கேஷன்ஸ்,
ஹைதராபாத்.
எண்: 994823810
இமெயில்: brbapuji@gmail.com, kotravaiwrites@gmail.com

Economics for Children [Lessons based on Marx's 'Capital'] by Ranganayakamma, 472 பக்கங்கள் விலை 150/-

வங்கி விபரங்கள்

SWEET HOME PUBLICATIONS
CURRENT ACCOUNT NO. 62236646499.[11 digits]
STATE BANK OF HYDERABAD
KAVURI HILLS BRANCH
IFSC code: SBHY0021490. [11 digits]
Jubilee Hills post
HYDERABAD-500033

அச்சு அழகியல் என்பது முதலாளித்துவ சிந்தனை என்பது ரங்கநாயகம்மாவின் கராரான பார்வை. தேவையின்றி அது வாசகர்களுக்கு விலைச் சுமை என்று கருதுபவர். அதனால் புத்தக வடிவமைப்பில் மிக எளிய முறையையும் (ஆனால் அதிக நேரம் பிடிக்கக்கூடியது) சாதாரண காகிதமுமே அவர் பயன்படுத்துவார். அதுமட்டுமின்றி ஒரு சமூக பொறுப்புணர்வோடு புத்தகங்களை குறைந்த விலைக்கே எப்போதும் அவர்கள் விற்பனை செய்கிறார்கள்.

கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இனி எவரும் பொருளாதாரக் கல்வி கண்டு அஞ்சத் தேவையில்லை.


No comments:

Post a Comment