Aug 19, 2012

Am I sensing some word politics

Outlook cover page says B.R Ambedkar Greater than Nehru?, the inner page says the poll was to determine the 'greatest' Indian after Gandhi ;)

The title Since Independence itself is self-explanatory…so why After Gandhi? Does it mean after Gandhi's death? or 'Greater' other than Gandhi since independence? How did they conclude Gandhi was a 'greater Indian'? than the rest of them who served or sacrificed their lives for the People of India before independence. Don't we have people like Mahatma Jyoti Rao Phule, Savitribai phule, Netaji, Bhagat Singh, (& many more)….& before independence can I date back to Buddha!!.....

it says The greatest Indian would have to be one who had affected the lives of the "maximum number of Indians for the better, since independence" - so do we accept that Gandhi was the only great man who had served 'indians' for the better prior to that? so who are those damn Indians who have benefited from the so called 'betterment'. 

since independence - the nominees list seems to be swindling. What is the 'betterment' that people like sachin, Kapil, Gavaskar, abdul kalam, Lata Mangeshkar, Vajpayee, Amithabh bachan, those set of actors & others out there got for 'Indians' (seriously who are those maximum Indians uplifted by them).... Has Lata Mangeshkar contributed more than Dr. Muthulakshmi Reddy....Periyar is not even in the nominee list, was his revolt against 'Indians'? we could list many such revolutionaries..

Jayaprakash Narayan: Failed Revolutionary or a Pathbreaker? is their question. (not a surprise)

Am I sensing some word politics & unwritten agenda out there in the title of the poll and the ‘idea’ behind the campaign? 

However I bought outlook only seeing the cover page....am eager to read the articles written on Ambedkar……hmm...yes their sale would have increased for this month….and if someone has served for the betterment of ‘minority’ number of Indians are they not considered great?

 இம்மாத அவுட்லுக் இதழின் சுதந்திர தின சிறப்பு இதழ் பல்வேறு முக்கியஸ்தர்களின் அம்பேத்கர் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. Omveth, Slavoj zizek கட்டுரைகளை முதலில் படித்தேன். பின்னர் சுதீந்த்ர குல்கர்னி என்பவர் எழுதிய கட்டுரையை படித்தேன்.

@ sudheendra kulkarni
அம்பேத்கரை தெய்வமாக்கும் செயல் ஆபத்தானது என்பதையும் எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. 

 சுய- விமர்சனமற்ற எவரும், எந்த சமூகமும் தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்கின்றனர் என்பதை அறிவோம். அதே நேரத்தில் எங்களின் நட்பு சக்தி யார், பகை சக்தி யார் என்பதையும் அறிவோம்.

அம்பேத்கர் கேலி சித்திரம் பற்றிய உங்கள் பார்வை, விமர்சனம், விளக்கத்தில் தொடங்கி இருக்கிறீர்கள். அம்பேத்கரியர்களின் சகிப்புத்தன்மையற்ற மனநிலை பற்றிய உங்கள் விமர்சனம் உங்கள் நலனுக்காகத்தான் பேசுகிறேன் எனும் தொனியில் நீங்கள் வைக்க முயன்றாலும், தொடரும் எழுத்துக்கள் உங்களை வெளிக்காட்டத் தவறவில்லை.

உங்களைப் பற்றி இதுவரை நான் கேள்வி பட்டது கூட இல்லை, ஆனால் கட்டுரையை முழுமையாக படித்த பின்னர் எனது கனிப்பு பொய்க்கவும் இல்லை. கூகிள் தேடலில் உங்களைப் பற்றிய குறிப்பு அதை உறுதி படுத்தியும் விட்டது. அருண் ஷோரி புத்தகத்தை வைத்து அம்பேத்கர் காந்தியிடம் சிபாரிசு வேண்டினார் என்று எழுதியுள்ளீர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் அம்பேத்கர் ஏன் சிறை செல்லவில்லை, காந்தி மட்டுமே அம்பேத்கர் மீது பரிவு கொண்டிருந்தார், புரிந்து கொண்டார், நேரு வை விட அம்பேத்கர் ஒன்றும் பெரிய ஆளில்லை, நிச்சயமாக காந்தியை விட இல்லை என்று நீள்கிறது உங்கள் அறிவார்த்த வாதம்…..

இன்றைய சூழலில் அம்பேத்கரியர்கள், தலித் இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அம்பேத்கரியர்கள், தலித் அறிவு ஜீவிகள், தலித்திய போராளிகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மீது வராத சந்தேகம் எனக்கு உங்கள் எழுத்தைப் படித்தவுடன் வந்தது. நீங்கள் முன்னாள் மார்க்சியவாதி, பின்னாள் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்... ….சொல்லவும் வேண்டுமா………..விமர்சனத்தை வைப்பவரின் பின்னணியைப் பொறுத்து எங்கள் எதிர்வினைகள் மாறத்தான் செய்யும்.
மார்க்சியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த மூலைக்கும் செல்லுபடியாகாத ஒன்று என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

உங்களுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல்.....நீங்களும் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3 comments:

  1. நல்ல அலசல்...

    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இதைப் பற்றி கருத்து சொல்லும் யோக்கியதை எனக்கு இல்லை எனினும், சுதீந்த்ர
    குல்கர்னி க்கு சில வார்த்தைகள் :

    மிஸ்டர் சு.கு,
    அம்பேத்கார் என்பவர் தற்போது
    நம்மிடையே இல்லை. விருப்பு, வெறுப்பு, பந்தம், பாசம், பகை, ஆணவம்
    அனைத்தும் கடந்த நிலையை அவர் எய்தி ஆண்டுகள் கடந்து விட்டன. என்னமோ அவர்
    உயிரோடு இருப்பது போலவும் , அவரைக் கொண்டாடினால் அவர் ஒரேடியாக உச்சி
    குளிர்ந்து போவது போலவும் அதோடு அவரைப் புகழ்ந்தால் தற்போது நம்மிடையே
    இல்லாத காந்தியடிகள் , நேரு ஆகியோரின் செல்வாக்கு மக்களிடையே குன்றி
    விடும் என்பது போன்றும் பதை பதைத்துக் கொண்டு நீங்கள் பத்தி பத்தியாக
    எதோ ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

    ஒரு பாமரனான எனக்கு நடந்த சங்கதி அவ்வளவாகத் தெரியாது என்பதாலும், மேலும்
    கொற்றவை அவர்களின் இந்தப் பதிவைப் படித்த அளவில் மட்டும் நிகழ்ந்தவைகளை
    ஒருவாறு ஊகம் செய்து ஒன்றே ஒன்று தங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், யாருடைய செல்வாக்கையாவது யாராவது
    குறைக்க நினைத்தால் அப்படி நினைத்தவர்கள் தோல்வியே அடைந்திருக்கிறார்கள்
    என்ற உண்மை புரியும் !

    ReplyDelete