பெண்கள் இழிவானவர்கள், மயக்குபவர்கள், காம வெறி பிடித்தவர்கள்... பொன்னும்
பொருளும் வாங்கிப் போட்டு வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி அவளை அடக்கி வை! பெண் மகவு
வேண்டாம் ஆண் மகவே பிறக்க வேண்டும் என்னும் வகையிலான மநு சாஸ்திரம், அதர்வண வேதம் உள்ளிட்ட
பார்ப்பன இந்துமத ஆணாதிக்க வேத ‘தர்மங்களை’ப் படித்து வளர்ப்வர்கள் ஒருபோதும் பெண்களை
சமமாக கருத மாட்டார்கள். எஸ்.வி. சேகர். கரு. நாகராஜன் உள்ளிட்ட சங்கிகளின் தரம் தாழ்ந்த
பேச்சுக்கு அவர்கள் தங்கள் மூதாதையர்களிடமிருந்து குடித்த ‘ஞானப் பால்’ காரணம்.. எத்தனை
முறை கண்டித்தாலும் பார்ப்பனிய மண்டையில் எதுவும் ஏறாது. ஏனென்றால் இதை அவர்கள் திட்டமிட்டே
செய்கிறார்கள்!
அவர்களின் மண்டைக்குள் இருப்பது வெறும் களிமண் என்றும் அந்த களிமண்
எத்தகையது, அது பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை
திறந்துக் காட்டி மானமும், அறிவும், சுயமரியாதையையும் போதித்து மக்களை உணர்வு பெறச்
செய்வோம். அப்போது அந்த களிமண் மண்டைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்கள்.
ஜோதி மணி இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல, மனச்சோர்படைபவருமல்ல.
அவர் ஒரு துணிச்சல் மிக்கப் பெண்மணி. அதனால் தான் தன் சுயமரியாதையை நிலைநாட்டி வெளிநடப்பு
செய்துள்ளார் (செய்திகளின் வழி அறிகிறேன்). ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அரசியலில்
களம் ஆடுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அறிவென்னும் ஆயுதம் ஏந்தப் பழகிய
பெண்களை எப்படிப்பட்ட ஏச்சும் பேச்சும், ஒடுக்குமுறையும் வீழ்த்திட இயலாது… அதுவே அவர்களைப்
பலப்படுத்தும்.
உலகில் உள்ள அனைத்து மதங்களும் பெண்களை தாழ்ந்தவர்களாக, இழிவானவர்களாகவே
சித்திரிக்கிறது. ஆனால் பார்ப்பனிய இந்துமத வேதங்களும், தொன்மங்களும் இவற்றையெல்லாம்
மிஞ்சும் விதத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரையும் கீழானவர்களாக சித்தரிப்பதோடு,மரபார்ந்த
உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் சில பிரிவினரை தங்களுக்கு சேவை செய்யும் உடனடி
அடுக்கில் வைத்து (பொருளாதார காரணங்களுக்காகவும், ஆளும் அதிகாரத்திற்கு ஆதரவு இருக்க
வேண்டும் என்பதற்காகவும்) பெண்களை, (பார்ப்பன சாதிப் பெண்களையும் சேர்த்தே)
உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களை, சமூகத்திற்கு அவசியமான தூய்மைப் பணி செய்பவர்களை மிகவும் கீழான நிலையில் வைத்து அவர்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று தாழ்த்தி மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நியாயப்படுத்தி அதையே இந்திய தர்மமாக வைத்திருக்கிறது.
மானமும் அறிவும் உள்ள எந்தப் பெண்ணுக்கும் இந்த தீண்டாமையை, மேலாதிக்கத்தை
போதித்தக் கூட்டமே முதல் எதிரி!
பார்ப்பனிய இந்துமத ஆணாதிக்க தர்மங்கள் மற்றும் இலக்கியங்கள் வழியாகவே
இந்திய பொதுபுத்தியும் உருவாகிறது. இதுதான் இந்தியக் கல்வி முறையும் கூட. பார்ப்பனியமானது
தன்னையும் இழிவானவனாகவும், வேசியின் பிள்ளைகள் என்றும் கூறுவதை அறியாத பெண்களும், பார்ப்பனரல்லாதார்
பிரிவும் அதுதான் நியதி, பார்ப்பான் சென்னால் அதுவே உசந்தது, உண்மையானது என்று ஏற்றுக்கொண்டு
பழகிவிட்டதோடு, அவர்களோடு ஆளும் வர்க்கமாக கைக் கோர்த்துக்கொண்டு இந்து தர்ம ஆட்சியை
நிலைநாட்டி சேவை செய்தும் வருகிறது.
அந்தந்த காலத்தின் உற்பத்தி முறைக்கு இந்த மேலாதிக்கக் கருத்துகள் சாதகமாக
இருப்பதால், அந்தந்த காலத்து ஆதிக்க உடைமையாளர்கள் உற்பத்தி உறவுகளை அதற்கேற்ற வகையில்
தகவமைத்து ஆணாதிக்கத்தையும், சாதியையும், வர்க்கத்தையும் ஒன்றின் மேல் ஒன்று மேல்குவியும்படி
பார்த்துக்கொண்டு நிலம், வளம், உழைப்புச் சக்தி உள்ளிட்டவற்றை சுரண்டி பிழைத்து வருகின்றனர்.
அதில் எந்த தடையுமின்றி இயங்கிட ஒருபுறம் மதரீதியான பிரச்சாரங்கள் செய்து மக்கள் தாமாக
அடிமையாகிப் போகும்படி செய்தும், மறுபுறம் அரசு இயந்திரங்கள், சடங்குரீதியான கருத்தியல்கள்,
படிநிலைகள் மூலம் ஒடுக்கவும் செய்கின்றனர். சாதியாகவும், வர்க்கமாகவும், ஆனாதிக்கமாகவும்
இந்த ஒடுக்குமுறையும், சுரண்டலும் நிகழ்கிறது.
பெண் சிசுக் கொலை தொடங்கி, தண்ணீர் பிடிக்கச் சென்ற பெண் வல்லுறவு,
பொதுவெளியில் மலம் கழிக்கச் சென்ற தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டது,
பேருந்தில் ஒரு பெண் கூட்டுவல்லுறவால் சிதைக்கப்படுவது, வீட்டில் ஒரு பெண் கணவனின்
வன்முறைக்கு உள்ளாவது உள்ளிட்ட பெண்களின் மோசமான நிலைக்கு மதங்கள் ஒரு முக்கிய காரணமாக
இருக்கிறது என்பதை சமூகம் உணரச் செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள் மத நம்பிக்கையிலிருந்தும்,
கடவுள் நம்பிக்கையிலிருந்தும் விடுபடுவதற்கான சூழல் உருவாக வேண்டும். (சாதிய ரீதியாக
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும்).
ஒரு சிலரிடம் கைக்கட்டி வாய் பொத்தி உழைத்தால் தான் பிழைக்க முடியும்
என்கிற நிலையில் நாம் ஏன் வைக்கப்பட்டிருக்கிறோம். நம் மீது அதிகாரம் செலுத்தும் இவர்கள்
எல்லாம் யார்? அவர்களுக்கு அந்த அதிகாரம் எப்படி உண்டானது? அவர்களிடம் இருக்கும் அதிகார
பலத்தின் அடித்தளம் எது என்பதை பொதுச் சமூகம் அறியத் தருவோம்…
அனைத்துவிதமான மேலாதிக்க சுரண்டல் நிறுவனங்களையும் தகர்த்திட சமர் புரிவோம்!
I strongly condemn not only Karu. Nagarajan, but also the Male
Chauvinistic, Casteist Brahminical Literature & Ideology of the Indian
Society and the political parties, religious organizations like BJP, RSS, other
casteist parties and the exploitative mode of production, labour / social /
class relations that are functioning in this ideology and continuously engaging
in violence against women, Dalits, progressive leaders, activists & working
class. Every time a person is humiliated / oppressed / exploited this resistance
shall continue!
No comments:
Post a Comment