Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Jun 25, 2023

தினமலர் பேட்டி - சில விளக்கங்கள்


 25.6.23 அன்று தினமலர் மதுரை பதிப்பில் வெளிவந்த பேட்டி. நன்றி வெங்கி அவர்கள்.

 ஒரு பேட்டி என்பது குறிப்பிட்ட சட்டகத்திற்குள்ளும், வார்த்தை எண்ணிக்கைகளுக்குள்ளும் அடைபடும் போது, அரசியல் தளத்தில் இயங்குவதால்… கோர்க்கப்படும் சொற்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது.

விளக்கம் 1:

நான் கொங்கனி மொழி பேசும் பெண்ணல்ல! தமிழ் மொழி பேசும் பெண். தாய்ப்பாலோடு என் குருதியில் கலந்திருப்பது தமிழ் தானே ஒழிய என் தாய் மொழி அல்ல! கொங்கனி மொழியை பேசாமலே விட்டு,  அரைகுறயாக மட்டுமே எனக்கு தெரியும். தாய்மொழி மறந்த நீயெல்லாம் தமிழ் மொழி காக்க வந்துட்டியா என்று கேட்கத் தோன்றும். அங்குதான் அலைகழிக்கப்படும் மக்களின் வாழ்வை அவதானிக்க வேண்டும்.

மொழிப்போர் மற்றும் போர்த்துகீசிய ஆக்கிரமிப்பினால் இடப்பெயர்வு நடந்து என் மூதாதையர் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.  என் தந்தை வழி மூதாதையர் கேரளாவிலும், என் தாய் வழி மூதாதையர் ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு என்ற ஊரிலும் இடம்பெயர்கின்றனர். குழந்தைப் பேறுக்காக பள்ளிப்பட்டு சென்ற அம்மாவுக்கு அங்கு நான் பிறந்திருந்தாலும், 47 வருடங்களாக நான் ஒரு சென்னை வாசியே (Chennai city gangsta!).

என் பூர்வீகமான கோவாவிற்கு நான் இதுவரை சென்றதே இல்லை! தொடக்க காலத்தில், இடம் பெயர்ந்த ஊரைப் பொறுத்து அகதிகள் போலவே கொங்கனியர்கள் வாழ நேர்ந்ததாக சொல்வார்கள். போர் மற்றும் ஆதிக்கம் காரணமாக இடம் பெயரும் இலங்கைத் தமிழர் உள்ளிட்ட இனக்குழுக்களைப் போல் தான் எங்கள் குடும்ப வரலாறும் உள்ளது!

கணவனால் கைவிடப்பட்ட பாட்டி 3 பிள்ளைகளைக் காக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் தஞ்சம் புகுந்து, உணவு, படிப்பு, தங்குமிடம் இவற்றிற்காக அவ்வை இல்லத்தில் மகள்களை சேர்த்துவிட்டு விறகடுப்பூதி சமையல்காரியாக இந்த சென்னையில் வாழ்க்கையை தொடங்கி அவள் வழியாக 3 தலைமுறைகளை ஆளாக்கிச் சென்றுவிட்டாள். வறுமையில் உழன்றாலும், யாருக்கும் கூலி அடிமையாக இருக்க மாட்டேன் என அப்பா xerox கடை போட்டு, குடும்பமாக உழைத்து அல்லல்பட்டு உழைத்து உழைத்து முன்னேறிய குடும்பம். செல்வந்தராகும் அளவுக்கெல்லாம் உழைப்பு உயர்வைத் தரவில்லை. வறுமையிலிருந்து எங்களை மீட்டது. மத்தியத்தர வாழ்வு கிடைத்தது. (ஆனா நான் அப்பப் வீட்டை விட்டு ஓடிடுவேன்!). மார்க்சிய அறிவின் படி சொல்ல வேண்டுமெனில் குறுவிவசாயிகள் போன்று குடும்பமாக உழைத்து வாழ்ந்த சுதந்திர உற்பத்தியாளர் வர்க்கம்.

இந்த வாழ்வாதாரச் சூழலில்  தமிழ் மொழி பேசும் தமிழர்களாகவே நாங்கள் மாறிப் போனோம். தமிழ் மீதான எனது பற்றும் அப்படியே. மேலும் தொழில் நடக்கும் கடையில் அந்நியர்களாக நாங்கள் தெரிந்துவிடக் கூடாது, அது தொழிலை பாதிக்கலாம் என்னும் அச்சம் காரணமாகவும் என் தாய்மொழியை பேசும் சூழல் வாய்க்கவில்லை! ஆம்! அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய பிழைப்புச் சூழல்.

போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றி இங்கே சொல்லப்படுவதென்ன? (அம்பேத்கரை விமர்சிக்கும் ஒரு நூலை மொழிபெயர்த்ததற்காக).

Casteist and Privileged! I honestly want to say fk your Socio-Political understanding that lacks class understanding. I re-iterate Dalits & Women are same, esp in working class. And Dalits and the working class are the same, battered by varying oppressive and exploitative conditions.

பூர்வீகத்தைக் கூட சென்று பார்க்க முடியாத Under-Privileged working Class வாழ்க்கை என்னுடையது. கடுமையான உழைப்புச் சூழலில் குட்டி குட்டி பொழுது போக்கிற்கு இடம் கிடைப்பதே வரம் போன்றது! இதில் எங்கே GOA விற்கு செல்வது, பணம், நேரம், விடுமுறை எல்லாம் கிடைக்க வேண்டுமல்லவா!

எனவே தோழர்களே வன்மத்திலிருந்து ஒருவரின் வாழ்க்கையை அனுகாமல், முகநூலில் மகிழ்ந்திருப்பது போன்ற புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் பார்த்து ‘அவளுக்கென்னப்பா Privileged வாழ்க்கை வாழ்றா’ என்று பொறுமாமல், இருக்கும் வலிகளை எல்லாம் மறைத்து ஒருவள் எப்படி புன்னகையை பூசிக்கொள்கிறாள் என்று வேண்டுமானால் அவதானிக்க முற்படுங்கள்.

 விளக்கம் 2:

35 வயதில் பேச்சிலர் படத்தில் நடிக்கவில்லை. படப்பிடிப்பின் போது எனக்கு 44 வயது இருக்கும். 34-35 இல் தான் நிர்மலா என்ற அப்பாவிப் பெண் கொற்றவையாக உருவானாள் 😊

 விளக்கம் 3:

நான்கு புத்தகங்கள் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் இரண்டு மட்டுமே குறிப்பிடப்பட காரணம் புரிகிறது! மேலும் பெண் என்பதால் பெண்களின் சுதந்திரம், ஆடை சுதந்திரம், பெண்களுக்காக மட்டுமே எழுதுவது, இயங்குவது போன்றதொரு தோற்றம் கொடுக்கப்படுவது எனக்கு அயர்ச்சியைத் தருகிறது. பெண் என்றால் பெண்ணியவாதி என்கிற அடையாளங்களை நான் வெறுக்கிறேன். அதே போல் பெண் சுதந்திரத்திற்காக  நான் எழுதவில்லை பெண் விடுதலைக்காக எழுதுகிறேன். சுதந்திரம் வேறு விடுதலை வேறு. அதோடு பெண் விடுதலைக்காக மட்டுமே நான் எழுதவில்லை ஒட்டுமொத்த மானுட விடுதலைக்காக நான் எழுதிகிறேன். அதில் ஒரு சிறிய துளி தான் பெண் விடுதலை மையப்பட்டது. சாதி ஒழிப்பு, உழைக்கும் வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய பரப்புரை ஆகியவையே என்னுடைய முதமை பங்களிப்பாக வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்று விழைகிறேன்.

Dec 7, 2022

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு ...

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு:

நீ எப்படி அந்த படத்துல  நடிச்ச

இந்த படத்தோட போஸ்டர ஷேர் பண்ற

மாலுக்கு போய் காஸ்ட்லி ஷாப்பிங் பண்றியே

(இவைங்க தான் கவுண்டர்ல பில் பண்ணாய்ங்க)

எப்படி அந்த ”blah blah blah”

மார்க்ஸ் மனசு வருத்தப்படுவாராம்!

மார்க்ஸைப் படிச்சிருந்தா இப்படி பொறணி பேச மாட்டீங்க! கேக்குற எவனாச்சும் கம்யூனிஸ்டான்னா அதுவும் இல்ல! கேக்குறவைங்க என்ன வேலை செய்றானுங்கன்னு பார்த்தா அவனுங்களும் ஒண்ணு அரசு நிறுவனத்துல இருப்பாய்ங்க, முதலாளித்துவ நிறுவனம் அல்லது சுய தொழில் செய்வாங்க, அல்லது NGO, அரசியல் கட்சி ;) 

”அந்த படத்துல  ஹீரோயின அப்டி காட்டுனாங்க.. நீ எப்படி அதை ஷேர் பண்ற”... டேய் மாய்ங்காய்களா.. அந்த நாயகன்  lustfullaa ஒரு பொண்ணை பார்க்குறான்னா. அவன் கண்ணோட்டத்துல அப்படித்தான காட்டுவாங்க! அதுக்கும் மேல படத்தை  பத்தி விமர்சனம் இருந்தா பொதுவெளில எழுது! அடுத்தவங்க படிச்சு தெரிஞ்சுக்கட்டும்!

நான் நடிச்ச படத்துல என் நடிப்பை பத்தி வேணா விமர்சிக்கலாம்! grrrrrr

கூலிக்கு வேலை செய்றவங்க கிட்ட நீ ஏன் அந்த வேலைக்கு போன  இந்த வேலைக்கு போனன்னு கேக்குற உரிமை எந்த பயலுக்கும் இல்ல! (மார்க்சியம் தரும் தெளவுப்போய்!). 

ஏற்கனவே பதில் சொல்லிருக்கேன்.. அரசாங்கத்துல வேலை பார்த்துக்கிட்டே தான் தொழிற்சங்கம் அமைச்சு போராடுறோம்! முதலாளிகிட்ட கூலி வாங்கிட்டே தான் முதலாளித்துவத்துக்கு எதிரா போராடுறோம்!

நான் மட்டும் தனியா ஒரு கிரகத்த கட்டிக்கிட்டு வாழமுடியாது! கம்யூனிஸ்டுங்குறதால எவனும் எனக்கு ஓசில எதும் தரப் போறதும் கிடையாது.. சொல்லப்போனா கம்யூனிஸ்ட்னு இவ்ளோ தீவிரமா பேசுறதால வேலை கிடைக்காம போறதுதான் மிச்சம்! அப்ப கிடைக்குற வேலைய செஞ்சுதாண்டா பொழைக்கனும் என் சிப்ஸு! அதுலையும் சீக்காகிப்படுத்தா ஆஸ்பத்ரி செலவு மட்டும் அம்புட்டு ஆகுது! கடன் வேற கழுத்தை நெறிக்குது! 

 மார்க்சியம் படிச்சிருந்தா கூலி உழைப்புனா என்ன, கூலி உழைப்பாளர்களின் உரிமைனா என்ன, மார்க்சியத்தின் அடைப்படை என்ன, அமைப்புக்குள்ள இருந்துக்கிட்டே போராடுறதுன்னா என்ன … சமூக அமைப்புனா என்ன.. புரட்சினா என்ன.. அதுக்கு முன் நிபந்தனைனா என்னன்னு தெரியும்!

தனிமனித சாகசத்துக்கும் மார்க்சியத்துக்கும் சம்பந்தம் இல்ல ஓய்! இருக்குற சமூக அமைப்புல (உற்பத்தி முறை, உழைப்பு உறவு) இதுல எல்லாம் என்ன பிரச்சினை, அதிகார ஒடுக்குமுறைனா என்ன, சுரண்டல்னா என்னன்னு மக்களுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி… அநீதிய அவங்களுக்கு புரியவச்சு… மக்கள ஒண்ணு திரட்டி உற்பத்தி முறைய மாத்த களம் இறங்க வைக்குறதுதான் ஒரு கம்யூனிஸ்டோட வேலை! அதை செய்றதுக்கு தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கு…. அந்த சித்தாந்த பரப்புரை செய்றதும் மற்றும் கம்யூனிஸ்ட்களோட ஏன் சேரனும்னு சொல்ற ஒரு சின்ன வேலைய நான் எடுத்துக்கிட்டேன்… அதுவும் எனக்கு அதுல தீர்வு இருக்குன்னு தோணுறதால… நான் அதை உயர்த்திப் பிடிக்குறேன்.  தங்களுடைய வாழ்க்கைய, உயிரை பணையம் வச்சு களத்துல உழைக்குற கம்யூனிஸ்டுங்க பணியளவுக்கு இது இல்லைன்னு நானே சொல்லுவேன்! ஆனா அவங்க செய்ற களப்பணிக்கு பின்னாடி இருக்குற நண்மையை புரிய வச்சு, ஆதரவு திரட்டித் தர முடியுமான்னு பார்க்குறேன்! காவி வேட்டி கட்டிக்கிட்டு ’பஞ்சப் பராரி’ மாதிரி திரியுறவனெல்லாம் உண்மையா சமூகத்துக்கு உழைக்கிறாங்கன்னு நினைக்குறதே மதவாத பார்வை! அதனால தான் அவைங்க காவிய உடுத்திக்கிட்டு ஊரை கொள்ளையடிச்சுட்டு திரியுறானுங்க! மார்க்சியங்குறது அது இல்ல!  It is not self-deprivation! 

லாபத்தை அடிப்படையாகக் கொண்ட  உழைப்புச் சுரண்டல் கூடிய தனியுடமை உற்பத்தி முறை ஒழிக்கப்படனும், பொதுவுடைமை உற்பத்தி முறைய நிறுவனும் அதுதான் எல்லா பிரச்சினைக்கும் தீர்வுன்னு பேசுறதுக்காக … துறவு வாழ்க்கை வாழ சொல்லி மார்க்ஸ் எங்கல்ஸ் சொல்லல…. போய் மார்க்சியம் படிங்க! புள்ள குட்டிங்கள படிக்க வைங்க!

”ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு” என்று கேட்கும் எல்லார் கிட்டையும் எவ்வளவு அறச்சீற்றம்! Political correctness! ப்பா என்ன ஒரு சித்தாந்த தெளிவு! நாளைய விடுதலை இவங்களால தான் சாத்தியப்படப் போகுது! அவ்ளோ தூய ஆத்மாக்கள்! நமக்கு காவி கட்டிப் பார்க்காம ஓய மாட்டாங்க!

என் திமிர் தான் என்னை வாழ வைக்குதுன்னு சொல்லிருக்கேன்ல!

என் உழைப்புல நான் வாழ்றேங்குற திமிரும் அதில் அடக்கம்!

உழைப்புத் தத்துவத்த மதவாத ஒழுக்கக் கோட்பாடா நீங்க வேணா பாருங்க! எனக்கு அந்த அவஸ்தை இல்ல!


Nov 17, 2022

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பா?

 


பெண் ஒடுக்கப்படுகிறாள், சமமாக நடத்தப்படவில்லை, அவள் உடலுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்பது வெளிப்படையானது என்றாலும் அது முந்தைய காலம், தற்போது இல்லை என்று சிலரும், சில ஆண்கள் கெட்டவர்கள், சைக்கோக்கள் வேண்டுமானால் அப்படி நடந்துகொள்ளலாம் என்று சிலரும், பெண்கள்தான் தற்போது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சிலரும் வாதிடுகிறார்கள். இன்னொரு சாரார் இயற்கைக்கு எதிராக பேசாதீர்கள்! ஆணும் பெண்ணும் வேறு வேறு தான், எப்படி சமமாக முடியும் என்கிறார்கள்! மாறுபட்டவர்கள் என்பதற்காக ஒடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த உலகம் மாறுபட்டவர்களுக்கானதே!

இக்கேள்விகளுக்கு 10 வருடங்களாக பதில் கூறி வந்தாலும், புதிதாக முளைத்துள்ள பெண் வெறுப்பாளர்கள் (Rightwing Misogynists / ignorants) எப்படி எதையும் படித்தறிவதில்லையோ, இதையும் படிப்பதில்லை. சமூகப் பிரச்சினைகள் பலதும் குறித்து பேசி இருந்தாலும், இத்தகைய “ஆம்பிளை” கண்களுக்கு எனது புகைப்படமும், பாலியல் ஒடுக்குமுறை குறித்த பதிவுகள் மட்டுமே தெரிகிறது! பாவம்!

விசயத்துக்கு வருகிறேன்!

சமூகத்தில் நிலவும் பல ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வு உள்ள அளவுக்கு பெண் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக பெண்களில் பலருக்கும் அது பற்றிய விழிப்புணர்வு இல்லை. நிலவும் ‘பண்பாடு’ சரியானதுதான், அதுதான் இயற்கை, நல்லது, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களும் நம்புகிறார்கள். இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் வெற்றி.  

முதலில் சில தெளிவுரைகள்:

·      பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பல்ல!

·      பெண்ணியம் என்பது பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று புனையப்படும் கட்டுக்கதை அல்ல!

·      பெண்ணியம் என்பது ‘பாலியல் சுதந்திரம்’ மட்டும் தொடர்பானது அல்ல! (அதுவும் அடக்கம். அது எதன் அடிப்படையில் என்பதற்கும் போதுமான உரையாடல்கள் உள்ளன).

·      பெண்ணியம் என்பது ஆணைப் போன்று குடிப்பது, புகை பிடிப்பது, உள்ளிட்ட ‘உரிமைகளைக்’ கோறுவதும் அல்ல!  உடல்நலன் என்று வருகையில் அது அனைவர்க்கும் தீங்கானதே!

·      மகளிரியல் என்பது ஆண்களின் நலனையும் உள்ளடக்கியதே! ஆண் பெண் சமத்துவமில்லாத துன்பகரமான வாழ்விலிருந்து ஆண்களையும் விடுவிப்பது அதன் தேவையாக உள்ளது.

பெண்ணியம் அல்லது மகளிரியல் என்பது பெண் என்னும் பாலின அடிப்படையில் விதிக்கப்படும் நடத்தை விதிகளை கேள்விக்கு உட்படுத்துவது, ஏன் அந்த பாகுபாடு உருவானது என்பதை வரலாற்றுபூர்வமாக எடுத்துரைப்பது, பாலின பாகுபாட்டை ஒழிப்பதற்காக வேலை செய்வது. மகளிரியல் சிந்தனையில் பல கண்ணோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் இடையில் ஐக்கியம், முரன்பாடுகளும் உள்ளன. பொதுவாக பெண் ஒடுக்குமுறையை அங்கீகரித்துப் பேசும் கண்ணோட்டங்கள் இருப்பினும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது சோஷலிசப் பெண்ணியம். மார்க்சிய சித்தாந்தம் அதன் வழிகாட்டி.

மிக எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஒரு பெண் முதலாளியாவதை, நாடாள்வதையெல்லாம் பெண்ணின் சாதனையாக கொண்டாடுவது பெண்ணியமாக இருந்தாலும், ஒடுக்கப்படும் பெண் இனத்தின் இந்த வளர்ச்சியை பாராட்டும் அதேவேளை, அந்த பெண்களின் வர்க்கத் தன்மையை, அவர்கள் யாரின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள் என்பதை விமர்சனத்திற்கு உட்படுத்துவது சோஷலிசப் பெண்ணியம். பெண் விடுதலை பேசுவோரில் பெரும்பாலும் இது கலவையாகவும் வெளிப்படும். அனைத்திலும் முழுமுற்றானது என்று எதுவுமில்லை. நட்புமுரண்பாடு, பகை முரண்பாடு என்பது புரிய, வாசிப்பு தேவைப்படுகிறது.

ஆண் பெண் இருவருமே வர்க்கரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள். மகளிர் விடுதலை என்பது உழைக்கும் வர்க்க விடுதலையோடு தொடர்புடையது. தனியுடைமை தகர்ப்போடு தொடர்புடையது என்று ஏற்றுக்கொள்வதுதான் சோஷலிசப் பெண்ணியம்! இதை நமக்கு வழங்குவது மார்க்சியக் கண்ணோட்டம். மார்க்சிய சித்தாந்தத்தைப் படிப்பது அதன் முன்நிபந்தனை. மூன்றாம் பாலினமோ - பாலினம், வர்க்கம், இருத்தலியல் என அனைத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்தே பேசுகிறோம்! இருமைக்குள் (நான்) எதையும் அடக்குவதில்லை!

பெண்ணியவாதிகள் பெண் விடுதலைக்காக மட்டும் போராடுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை! ஆனால் அதிலும் சாதி, வர்க்க,இன, மொழி, மத ரீதியான பிளவுகள் காரணமாக பெண் உரிமை பேசுவோரில் பலவிதமான போக்குகளைக் காண முடியும்.

நம் கண்ணுக்குத் தெரியாத நுண் உயிரிகளைக் காண எப்படி ஒரு  நுண்நோக்கி தேவைப்படுகிறதோ, அதுபோலத்தான் சமூக ஒடுக்குமுறைகளைக் காண ஒரு நுண்நோக்கி (microscope) தேவைப்படுகிறது. பல சித்தாந்தங்கள் அத்தகைய நுண்நோக்கிகளாக உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு வர்க்கத் தன்மை உண்டு.

பொதுவாக வலதுசாரி, இடதுசாரி என்ற பிரிவுகள் இருந்தாலும்.  உழைக்கும் வர்க்கப் பார்வையற்ற முற்போக்கு சிந்தனை என்னும் ஒரு பிரிவும் உண்டு. அதேபோல் வலதுசாரி எதிர்ப்பு / பார்ப்பன எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள், ஆனால் ஆணாதிக்கம், வர்க்கம் பற்றிய புரிதல் இவர்களுக்கு இருக்காது. அல்லது பாதி புரிதலோடு இருப்பார்கள். இவர்களில் பலர் ஒடுக்கப்படும் தரப்பின் பக்கம் இருந்து பேசினாலும், சில ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்க மாட்டார்கள். அல்லது குறிப்பிட்ட வழிமுறைகளில் அதை கையாளக் கூடாது என்று அவரவர் கண்ணோட்டத்தில் பேசுவார்கள். அதற்கும் வர்க்கத் தன்மையே காரணம்!  அல்லது அறியாமையாகவும் இருக்கலாம்.

சாதி, மதம், பாலினம், இனம், மொழி, திறன் இத்தியாதி அடிப்படையில் ஒடுக்கப்படுவதை – ஒடுக்குமுறை என்பது போல்

அதனோடு சேர்ந்து உழைப்புச் சுரண்டல் என்று ஒன்று நிலவுகிறது – அதனை சுரண்டல் என்கிறோம். வர்க்க முரண்பாடு!

பெண் / பாலின  அடிப்படையில் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கம் எனப்படுகிறது. அது தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் தோற்றத்தோடு தொடர்புடையது. அதோடு தனியுடைமை – அதாவது தனிச்சொத்து சேர்க்கும் அமைப்பும் உருவானது இரண்டும் சேர்த்தே இந்த சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் என்பதுதான் மார்க்சிய விளக்கம். வர்க்க முரண்பாடு அடித்தளம்! படிநிலைகள் அதற்கு தேவைப்படும் ஏற்பாடு. ஒடுக்குமுறை என்பது அதன் கருவி என்று இதனை புரிந்துகொள்ளலாம்.

மனிதம் போற்றுவோம் என்போர், குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் படிக்க வேண்டும். ஆனால் நிலவும் சமூக அமைப்பின் சமூகமயமாக்கலில் ஊறி, திளைத்து போனவர்கள், அதிகாரப் பசி கொண்டவர்கள், மேலாண்மை சுகம் கண்டவர்களால் இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாது. யாருடைய ஏற்பிற்காகவும் சமூக மாற்றம் காத்திருப்பதில்லை.

ஒடுக்கப்படும் எதுவும் வெடித்துக் கிளம்புவதும், முரண்பாடுகளை களைந்தெறிய மாற்று ஏற்பாடுகளை உருவாக்குவதும் அறிவியல் ரீதியான இயக்கம். மார்க்சியம் அதையும் உணர்த்துகிறது. மார்க்சியம் படிங்க.

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பும் அல்ல, பாலியல் பித்துமல்ல! அப்படி முத்திரை குத்துவதன் மூலம் பெண் விடுதலை இயக்கத்தில் பெண்கள் ஒருங்கிணைவதை தடுக்க முனையும்  வெறுப்பு அரசியல் பிரச்சாரம். Slut Shaming is its immediate weapon! but activists have seen worst than this! Nothing shall stop the movement of the oppressed. 


image courtesy: https://www.thequint.com/neon/gender/a-guide-to-feminism-for-men-everyone-anyone-can-be-a-feminist#11#read-more

related articles: https://saavinudhadugal.blogspot.com/2011/07/1.html (written in 2011!)

https://saavinudhadugal.blogspot.com/2020/06/blog-post_19.html

இந்த பொருள் தொடர்பாக பல நூல்களும், கட்டுரைகளையும் பலரும் எழுதியுள்ளனர். படித்தறியவும். 

Sep 4, 2022

டாட்டா குழுமம் முன் வைக்கும் புதுமைப் பெண்




டாட்டா குழுமம்  தன் நகை விற்பனை ப்ராண்ட் ஒன்றின் விளம்பரத்தில் புதுமைப் பெண்களை கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது!

முதலாளித்துவம் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது என்று முழங்கும் நவதாராளவாத, பெண்ணியவாதிகளே.. நீயா நானாவில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் கலகக் குரல்களை கேளுங்கள்! உழைக்கும் வர்க்கப் பெண்கள் நடத்தப்படும் விதத்தைப் பாருங்கள்! முதாளித்துவம் இதை ஒழிக்காது! சாதி மேல் எல்லாவற்றையும் போட்டுவிடவும் முடியாது! அங்கு நிலவுவது வர்க்க வேறுபாடு!

முதலாளித்துவம் பெண்களை விடுவிக்கவில்லை! மலிவான கூலிக்கு பெண்கள் ஏற்ற கூலி உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதால் அது பயன்படுத்திக் கொள்கிறது! போட்டி நிறைந்த பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று மக்களை துண்டாடி வைத்து  வாய்ப்புகளை தன்னுடைய இலாபத்திற்கு ஏற்ற வகையில் பகிர்ந்து கொடுப்பது தான் முதலாளித்துவம்! விளைவு நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும்! இதுதான் வர்க்க அரசியல்!

வேலை வாய்ப்பின்மைக்கு திறமையில்லை என்று ஏமாற்றும்! ஆண் பெண் பகைமை வளர்வது இதனால் தான்! அதே போல் தான் சாதி உள்ளிட்ட அனைத்து பகைமைகளும்.  மேலும் முதலாளித்துவத்திற்கு பெண்கள் ஓர் அழகான தயார் நிலையில் உள்ள “பண்டம்”! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! முதலாளித்துவ வளர்ச்சியில் பெண்களுக்கு நண்மையே இல்லையா? இருக்கிறது.. முந்தைய நிலவுடைமை சமுதாய அடக்குமுறைகளைக் காட்டிலும் முதலாளித்துவ உற்பத்தி முறை பெண்களுக்கு நிறைய கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது! அது அதன் இலாப தேவையில் இருந்தும்.. தொடரும் பெண்களின் போராட்டங்களிலிருந்தும் கிடைத்த பயனே ஒழிய! முதலாளித்துவ ஜனநாயகம் அன்று! முதாளித்துவ ஜனநாயகம் என்பது உழைப்புச் சுரண்டலுக்கான ஜனநாயகம் மட்டுமே!

எல்லாவற்றிலும் வர்க்கப் பிளவு உண்டு என்பது இதுதான்! அதனால் தான் நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.. நான் பெண்ணியவாதி அல்ல மார்க்சியவாதி!

இப்போது டாட்டா குழுமத்தின் முதாளித்துவ பெண்ணியத்திற்கு வருவோம்!

அதன் நகை விளம்பரத்தில் உள்ள வாசகங்கள் புகைப்படத்தில் உள்ளது!

“பாரம்பரியத்தையும் காப்பவள், இருமைத் தன்மயில் ஈர்கப்பட்டு” என்கிற இந்த புகழாரத்தில் உள்ள அரசியல் என்ன?

பெண்கள் குடும்பத்தையும் நிர்வகித்து, வேலை / தொழில் / - அதாவது வீட்டிற்கு வெளியேவும் சாதிப்பவள், அதாவது வீட்டு வேலை வெளி வேலை இரண்டையும் சமமாக சமாளிப்பவள் என்கிற பொருளில் வருகிறது!

குடும்ப பரமாரிப்பு என்னும் முதல் பாத்திரத்தில், பாரம்பரியத்தை நிராகரிக்கும் பெண்ணாக ஒருத்தி இருந்தால் அவள் புதுமைப் பெண் கிடையாது! அதுவும் தமிழகத்தின் ‘புதுமைப் பெண்’ அப்படியென்றால் மற்ற மாநில / மொழிப் பெண்கள் யாரும் அப்படி “ஜொலிப்பதில்லையா”! என்ன மாதிரியான சொல் விளையாட்டு இது என்பது புரிகிறதா? சந்தைக்கு ஏற்ற புகழாரங்கள்!

இதுதான் முதலாளித்துவத்தின் அடையாள அரசியல் மயக்க ஊசி! பெண்களை பெண்மைத் தன்மைக்குள் வைத்துக் கொண்டே மகிமைப்படுத்துவது!ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு, அவளின் மறு உற்பத்தி சக்தி (குழந்தைப் பேறு), இரட்டை உழைப்புச் சக்தி மற்றும் பரம்பரை தூய்மை, சொத்து ஆகியவற்றை பாதுகாப்பதற்காக உருவான பெண்மைக் கடமையை உயர்த்திப் பிடிக்கிறது!

Glorifying Womanhood within the feminine characteristics that originated for the benefit of the Patriarchal Family, Women’s reproductive capacity, her labour and the protection of  lineage and the Private Property!

பாரம்பரியத்தை நிராகரிப்பவளாக ஒரு பெண் இருந்தால் அவள் புதுமைப் பெண் அல்ல ‘வேசி’! ஆம், பெண்மையை நிராகரிப்பவர்களை அப்படித்தானே இந்த சமூகம் சொல்கிறது! பெண்மையை நிராகரிப்பவளால் முதலாளித்துவத்திற்கு என்ன பயன்? பாலின அடிப்படையில் அத்தியாவசியமான பொருட்களை தவிர்த்து நுகர்வுக்கான, அலங்கரிப்புக்கான, அந்தஸ்து show-offக்கான எந்த சரக்கையும் அவளிடம் விற்க இயலாதே! எனவே பண்டத்திற்கு ஏற்ப Slogan களை எழுதி, தேவைப்படும் வகையில் பெண்களை புதுமைப் பெண்களாக்கியும், பாரம்பரியக் காவலர்களாக்கியும், சாதனைப் பெண்களாக்கியும், சிறந்த இல்லத்தரசி ஆக்கியும் கொண்டாடி, தம் சரக்குகளை அவர்கள் தலையில் கட்டும்.

நகைகளை விரும்பும் பெண்கள் புதுமைப் பெண்கள் அல்ல!

நகைகளை நிராகரிப்பவள் தான் புதுமைப் பெண்!

 “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” – என்று பெரியார் கேட்டார்!

எல்லா பெண்களும் இப்படி விழித்துக் கொண்டால் .. சரக்கு எப்படி விக்கும்! அதான் பெரியார், அம்பேத்கர், மார்க்சியம்லாம் படிக்காதீங்கன்னு அச்சுறுத்துகிறார்கள்!

”நீ பெண்” என்று போற்றுபவர்கள் முன் வைக்கும் பெண்மைத் தன்மை எதுவென கவனித்து பெண்கள் அவற்றை ஏற்கவும், நிராகரிக்கவும் தெளிவு பெற வேண்டும்!

பழமையை நிராகரித்து புதுமையை ஏற்பது என்பது ஒரு தலை கீழ் மாற்றம்!

”அந்த காலத்து பொம்பளைங்க ஆட்டுக்கல்லுல சட்டினி அரைச்சுக் கொடுப்பாங்க.. அவ்வளவு ருசியா இருக்கும்.. ஆனா இந்த காலத்து பொம்பளைங்க… என்பார்கள்!

“மவனே உனக்கு அவ்ளோ ருசியா கெட்டிச் சட்டினி வேணும்னா நீயே அரைச்சு சாப்புடு” என்று சொல்வதற்கு பதில் பல பெண்கள் “பாரம்பரியத்தை காப்பாத்துறேன்” என்று அதில் மாங்கு மாங்கென்று சட்டினி அரைப்பதை பெருமையாக பேசிக் கொள்வார்கள். அதற்கு கல்லில் அரைப்பதன் மருத்துவ குணம் என்று வேறு எடுப்பு தொடுப்பு வரும்!

மருத்துவ குணம் இருக்கலாம்! அது பொம்பள அரைச்சா மட்டும் தான் வருமா? மேலும் நவீன கருவிகள் எந்த தேவையில் இருந்து உருவானது? ஏன் உருவானது? அதுவும் முதலாளித்துவத்தின் உற்பத்தி தானே! அவர்கள் சந்தைப்படுத்துகிறார்கள், நாம் வாங்குகிறோம்!

மனிதனின் உழைப்பு நேரத்தைக் குறைக்கும், உடலுக்கு தீங்கற்ற எந்த பொருளும் வரவேற்கத்தக்கதே! இதுதான் கம்யூனிஸ்ட் அனுகுமுறை! பழமை என்று எதையும் நிராகரிப்பதோ அல்லது புதுமை என்று எதையும் வரவேற்பதோ வரட்டுவாதம்! கம்யூனிஸ்டுகள் அப்படி இல்லை! ஒரு பொருள் உற்பத்தியில் நடைபெறும் சுரண்டல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை அவர்கள் விமர்சனப் பூர்வமாக அனுகுவார்கள். ஆனால் இதை எதிர்மறையாகத்தான் இந்த சமூகம் எடுத்துக்கொள்ளும்!

முதலாளித்துவம் ஏன் இத்தகைய நவீன கருவிகளை உற்பத்தி செய்கிறது! தன்னுடைய செல்வ வளர்ச்சிக்காக! இரண்டாவது வீட்டு வேலை நேரத்தை குறைத்து பெண்கள் தம் உற்பத்திக் கூடத்தில் வந்து வேலை செய்தால், மலிவான கூலி உழைப்பாளரும் கிடைக்கிறார். இலாபமும் பெருகும்!

விற்பனை செய்பவனை விட்டுவிட்டு, இந்த சுயநல அரசியல் தெரியாமல், ஆணாதிக்க சமுதாயம்  பெண்களை பகடி செய்து கொண்டிருக்கும். ஆணாதிக்க மூளை கொண்ட பெண்களும் மற்ற பெண்களை “நீயெல்லாம் ஒரு பொம்பளையா”, “நீ சோம்பேறி.. நாங்கல்லாம் அந்த காலத்துல”, “உன் புருஷனுக்கு அம்மில அரைச்சாதான் புடிக்கும்னா அப்படியே செஞ்சுதான் போடேன்.. இப்ப நீ வேலைக்கு போகலன்னு யாரு அழுதா” என்கிற ரீதியில் ஏளனம் செய்து கொண்டிருப்பார்கள்! புருஷன்களோ “எங்கம்மா மாதிரி உன் கைப்பக்குவம் இல்ல.. ஏன்னா எங்கம்மா அம்மில தொவையல் அரைச்சாங்க” என்பார்கள்.. இந்த குத்தல் பேச்சுக்கு அஞ்சியே பெண்கள் தங்களை “நானும் நல்ல பொண்ணுதான், பொண்டாடிதான், அம்மாதான்” என நீருபிக்கும் அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். துணிவுள்ள பெண்கள் அதை நிராகரித்து தம் சுயத்தை நிறுவுகிறார்கள்! முதலாளித்துவம் அவர்களுக்கும் சரக்குகளை வைத்துள்ளது!

பழமை / பண்பாடு / பாரம்பரியம் என்பதில் உருவான “கடமைகள்” ஏன், எதற்கு உண்டானது என்பதை கற்றரிய வேண்டும்! அதற்கு பெண்கள் முற்போக்கு அரசியல் விழுப்புணர்வு அடைய வேண்டும்!

பெண்மையை நிராகரிப்பது என்பது பெண் என்னும் உயிரியல் அடிப்படையை நிராகரிப்பது அல்ல! உயிரியல் / உடலியல் / பாலினத் தேர்வு மாறுபாடுகள் இருந்தாலும் அதற்கென ஒரு அறிவியல்பூர்வமற்ற பாலின அடிப்படையிலான ‘பாத்திரம்’ கொடுப்பதை நிராகரிப்பது என்பதாகும்.

Sex, rather genital identity is biological! Gender is Social! Gender roles are MAN made! Rejecting Gender Roles is the meaning of the real புதுமைப் பெண்!

*டாட்டா குழுமம் மட்டுமல்ல அனைத்து (முதலாளித்துவ) சரக்கு உற்பத்திக்கும் இது பொருந்தும்!

*நகைகளை முதலீடு என்று நம் மீது திணிப்பதும் இந்த பொருளாதார அமைப்பின் தேவையினால் தான்! அதற்காக நகை வாங்குவது அவரவர் விருப்பம். ஆனால் பெண் என்பதால் நகை சேர்க்க வேண்டும் என்பது ஆணாதிக்க மூளைச் சலவை! அதை எதிர்க்க வேண்டும்!

எதை வேண்டுமானாலும் நுகரலாம்! அது தனி மனித சுதந்திரம்!  ஆனால் அதன் அரசியல் தெரிந்து நுகர்தல் நன்று! அவர்கள் நம்மை ஆள்வதை விடுத்து, நம் விருப்பம் தேர்வுகளை நாமே முடிவு செய்து எதையும் நுகர்வோமெனில், ஏமாற்று சாத்தியமில்லை!

-            கொற்றவை, 5.9.2022

Related Campaign:

https://masessaynotosexism.wordpress.com/2012/01/25/our-first-campaign-against-ebay-in/

https://masessaynotosexism.wordpress.com/our-campaign-diary/

#பெண்ணியம் #மார்க்சியம் #Feminism #class_politics #வர்க்கப்போராட்டம் #TataGroup #tanishqjewellery



R

Aug 5, 2022

பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல!




பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல! ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க கருத்தியல்களின் உருவகம்!

மது போதையில் மூதாட்டியிடம் முத்தம் கேட்டு இளைஞர் தாக்கினார்!
63 வயது முதியவர் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இன்னொரு பக்கம் மாணவிக்கு ஆசிரியர்(கள்) பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி (கள்) தற்கொலை!
வல்லுறவுக்கு எதிராக புகார் கொடுத்து தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி பெயிலில் வெளியே வந்து பழி வாங்க அதே பெண்ணை கூட்டுப் பாலியல் வன்முறை செய்தார்!

என்று தினம் தினம் பாலியல் குற்றங்கள் பற்றிய செய்தி வந்து கொண்டிருக்கிறது. சிறுமிகள்பெண்களுக்கு எதிராக கொடூரமான பாலியல் துன்புறுத்தல்கள் கொலைகள்தற்கொலைகள் இல்லாத நாளே இல்லை. ஆனால் அரசுகள் என்ன செய்கின்றன?

குற்றவாளி”, “கைது”, “தண்டனை” என்பதோடு தம் கடமைகளை முடித்துக்கொள்கின்றனபாதி குற்றங்களில் அது கூட நடப்பதில்லைமீதி குற்றங்கள் வெளிவருவதே இல்லை!

பெண்கள் பற்றி எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் policy makers ஆக இருக்கிறார்கள்அவர்களே பிற்போக்குவாதிகளாக இருக்கையில்சராசரி ஆண்களின் சிந்தனை எப்படி இருக்க்கும்?


பெண் குழந்தைகளும்பெண்களும் இப்படி தினம் தினம் துன்புறத்தலுக்கு உள்ளாவதும் மடிவதும் சமூகத்தின் தலையாய பிரச்சினை இல்லையாஆனால் சமூகம் எந்த மாதிரியான விசயங்களுக்கு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது?

ராமர் கோவில் கட்டப்படுமா இல்லையாமாட்டுக்கறியை தடை செய்ஜெய் ஸ்ரீராம் சொல்லுதுப்பட்டா போடுங்க தோழிடைட்ஸ் போடாதீங்க தோழிபெண்களை அடக்கி வைமூடி வை (எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன)அந்த கோவில்ல இருக்குறது எந்த சாமி சிலை இதெல்லாம் தான் இங்கு பிரச்சினை! ஆனா எந்த சாமியும் தன்னையும்தம் புள்ளையையும் காப்பாத்த வரலன்னு எந்த அப்பன் ஆத்தாளும் யோசிக்குறதில்ல!

எத்தனை முறை இதைக் குறித்து பேசினாலும்எழுதினாலும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தில் சமூகத்தின் அடித்தளம் பற்றிய புரிதல் இருப்பதில்லை! அடித்தளத்தை மாற்றுவதற்கான வேலைக்கு பதில் சட்டத்தை கடுமையாக்கச் சொல்லி கூப்பாடு போடுவதும்குற்றவாளியை கைது செய்தோம்என்கௌண்டர் செய்தோம் என மார் தட்டிக் கொள்வதும்தூக்கில் போடு .. தூக்கில் போடு என்கிற கொலை வெறியும் தான் மேலோங்கி இருக்கிறது!

மீண்டும் சொல்கிறேன்!

அரசுகளும்பெண்கள் நல வாரியமும் சிறுமிகள்பெண்கள் பாதுகாப்போடு ஆண்களின் மனநலன் பேணுவதை முதன்மைப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண் பற்றிய சமூக கருத்தியலை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்.

உடலின்ப தேவைகள் மீது அவசியமற்ற கட்டுப்பாடுகளை சமூகம் கை விட வேண்டும்.
காமத்தை கொச்சைப்படுத்தும் போக்கு நீங்கி மரியாதைக்குரிய வகையில் பரஸ்பர ஒப்புதலோடு பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வதற்கான கல்வியை கொடுக்க வேண்டும்.

உரிய வயதில் திருமணம் செய்துகொள்ள முடியாத வகையில் நிலவும் கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். தம்பதிகளுக்கும் கூட பாலியல் கல்வி தேவைப்படுகிறது.

கல்விசுகாதாரம்வேலை வாய்ப்புவாழ்க்கைத்தரம்பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் மனிதர்களுக்கு மேம்பட்ட வாழ்வை உறுதி செய்திட வேண்டும்

For hell's sake take the issue of Sexual Poverty, Sexual Repression, ignorance, dangerous influence of porn videos and the social stigma around sex & women, a serious issue!

பாலியல் குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகளின் மனநிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபட எது அவர்களுக்கு தைரியத்தை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்யாமல் எப்படி அதை களைவது?

Work towards proper research and sensitizing the society around gender and sex. பெண்ணைபெண்மையை போற்றுவதை விடுத்து ஆணாதிக்கம் குறித்த அறிவூட்டி அதை ஒழிப்பதற்கான வேலையில் ஈடுபட வேண்டும்.

How the hell is any govt going to protect women and ensure safe life for children and women?

As a woman, as a mother this fear - the fear of sexual abuse, sexual exploitation, some beast waiting there wanting to tear my flesh - is haunting me every day, every minute.

Do the law makers understand the trauma that we - the women go through every minute? - the male gaze, the judgements about our dress, character, our life style, the patriarchal conditioning and the abuses, harassment we go through when we refuse to abide by that. Are they even aware of the position and the plight of women in family and the society!

As long as women are treated as Second Sex, how is just Law enough to annihilate Sexual Violence?

Do the law makers have a radical understanding about the gender bias, the patriarchal system and the materialistic reasons behind the plight of women? No! None of the STATE leaders, nor the STATE machinery have any idea about why there are "bad" men and how to make them good and how to ensure there shall be no "bad" Men! They have no idea how to #STOPSEXUALVIOLENCE , they have no idea about how to change the patrirachal-fedual society! They have no idea how to establish gender equality! Bcos they themselves believe in "feminity", "womanhood", "motherhood" and all craps that subjugates women in the name of "penmai" or biological difference!

ஆண்மைபெண்மையை ஒழிக்க வேண்டும் என்பதன் பொருள் கூட தெரியாத policy makers தான் நம்மிடையே உண்டு!

இங்க ரெண்டு வகையான கொள்கையாளர்கள் தான் அரசு இயந்திரத்தில் உள்ளனர் - இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை என்று நேரடியாக சொல்பவர். பெண்களைபெண்மையை போற்றுவோம்பெண் இல்லையேல் மண் இல்லை என்று புகழ்ந்து கொண்டு பெண் என்னும் இலக்கணம் மீறாமல்யார் மனதையும் “புன்படுத்தாமல்” செயல்பட சொல்பவர்கள்!

ஆணாதிக்கம் பற்றிய கூருணர்வற்ற சமூகமும்அரசும் ஒரு பக்கம் என்றால்.. மாணவிகளின் துன்பகரமான மமரணத்தைக் கூட கொச்சைப்படுத்தி பினத்தின் மீது பிழைப்பு நடத்தும் ஊடகங்கள்பேச்சாளர்கள்! எல்லாரையும் வசை பாடிட்டு இருந்தா போதும் இவர்கள் எல்லாம் சமூகத்தின் "கருத்து சொல்லிகள்", people of change!

இதுதான் இங்கு நிலவும் அறிவுச் சூழல்பண்பாட்டுச் சூழல்அரசியல் சூழல். இவர்களின் கூருணர்வற்ற அரசியல் பிழைப்பிற்கு தினம் தினம் பலி ஆவது நாங்களும்எங்கள் சகோதரிகளும்பிள்ளைகளும் தான்..

பெண்களை வாழ வைக்க வக்கற்ற சமூகம் மத நூல்களில் எழுதி வைத்தன – பெண்ணாக பிறப்பது பாவம் என்று! எல்லா பழியையும் பிறப்பின் மேல் போட்டுவிட்டால் அடக்கி வைத்தல் எளிதல்லவாஆனால் எழுதப்பட்ட தீர்ப்புகளை திருத்தி எழுதத்தான் தலைமைகள் இல்லை!

பிறக்கும் போதே யாரும் கெட்டவரக்ளாக பிறப்பதில்லை! ஒரு ஆண் (மனிதர்கள் அனைவரும்) ஏன் கொடூர மனம் படைத்தவனாகின்றான் என்னும் சமூகக் காரணியை ஆய்வு செய்யாமல் அதை மாற்றுவதற்கான வேலையில் ஈடுபடாமல் “நல்ல ஆண்களை’ உருவாக்க இயலாது!

A human life born on this earth is made a Man, Woman & an Economic Slave and not a Human Being! But all that matters to the Ruling Class is its Power & Profit!

யாரும் மாற வேண்டாம்... அவரவர் பிழைப்புவாதம் தொடரட்டும்!

இதோ இந்த பதிவின் கீழே வரப் போகும் கமெண்டுகள் உணர்த்தும் நீங்க செய்யவேண்டியது என்ன என்பதை!

ஆணாதிக்கத்தை ஒழிக்க கையாலாகாத அரசுகள் ஆளும் ஒரு நாட்டில் எல்லா நேரமும் பயத்துடனே வாழும் பெண்ணாகிய நான் எனது உடலை கை விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

- #கொற்றவை, 8.6.2022

Oct 11, 2020

ஆணாதிக்க சமூகம் ஆண்களுக்கும் கேடானது! எப்படி?

 


உடலியல் அறிவியலை மறுத்து ஆணுக்கான பாலின அடையாளத்தை ஆதிக்க கருத்தியலுக்காக, உழைப்புச் சுரண்டலுக்காக உருவாக்கியது. அதனால் ஆண்மையை நிரூபி, ஆண்மையுடன் இரு, ஆண்மையுடன் பொருளீட்டு, ஆண்மையுடன் போர் செய், ஆண்மையுடன் நடந்துகொள் என்கிற கட்டளைகள் மூலம் ஆண்களைப் பாலியல்ரீதியாக துன்புறுத்துகிறது.

பொருள் ஈட்டிப் பராமரிக்கும் குடும்பச் சுமையை முழுமுற்றாக ஆணின் தலையில் ஏற்றுகிறது. பெண்களைப் பாதுகாக்க முடியாத சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து பெண்களைப் பாதுகாக்க இயலாதவன் ஆண் மகன் இல்லை என்கிறது. செல்வத்திற்காகவும், வளத்திற்காகவும் தனி நபர்கள் சிலரின் வேட்கைக்கான போரில் வீரத்தின் பெயரால், நாட்டுப் பற்றின் பெயரால் ஆண்களை இராணுவப் பணி என்று பலியிடுகிறது. (தற்போது பெண்களையும் தான்).

விருப்பம் இருக்கிறதோ இல்லையோ திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறது. குழந்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்கிறது. குழந்தைப் பேரின்மையை பெருத்த அவமானமாக பறைசாற்றுகிறது. (பெண்களை மலடி, ஆண்களை மலடன்). அதன் மூலம் தம்பதிகளை fertility centres நோக்கி ஒடச் செய்து, தனி நபர்கள் செல்வத்தில் கொழிக்க வழி செய்கிறது. இன்னொரு பக்கம் பெண் உடலை பரிசோதனைக் கூடமாகவும் ஆக்குகிறது.

ஆணாதிக்க சமூகமானது - குழந்தையை ‘சிறந்த’ முறையில் வளர்ப்பவன் என்றால் இருப்பதிலேயே ‘உயர்வான’ பள்ளியில் சேர்க்க வேண்டும், சாத்தியமற்ற வசதிகளைச் செய்து தர வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்கிற அந்தஸ்துசார் அழுத்தத்தை குடும்ப அமைப்பின் வாயிலாக ஏற்படுத்துகிறது.

சிறந்த – உயர்ந்த என்கிற வார்த்தை ஜாலங்கள் தனி நபர்கள் சிலர் (பெரு முதலாளிகள்) சொத்து சேர்பதற்கான ஏற்பாடுகளே. குடும்பம் வாயிலாக அதை நடைமுறைப்படுத்த தோன்றிய அமைப்பே தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பு.

உ.ம் – அடிப்படை உரிமையான கல்வியை தனியார்மயமாக்கி சாமானியருக்கு கல்வியை எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது. அந்தக் கல்வியும் கூட உழைக்கும் கூலிகளை உருவாக்கும் ஒரு பட்டறை மட்டுமே. அதைக் கூட இலவசமாக வழங்க மறுத்து செல்வந்திர்களின் நலனுக்காக ’தரம்’ என்கிற பெயரில் தனியார்மயமாக்கி வைத்துள்ளது.

தரத்தை’ உறுதி செய்ய முடியாத அரசுகள் நமக்கெதற்கு? யாரோ ஒருவர் செல்வம் சேர்க்க நாம் உழைத்துக் கொட்ட வேண்டுமா என்கிற கேள்விகள் ஆணாதிக்கவாதிகளுக்கு ஏற்படுவதில்லை. அவர்கள் கவலையெல்லாம் பெண்ணின் உடை, நடத்தை, #கலாச்சார சீர்கேடு அவ்வளவே!

சமூக சீர்கேடு, பொருளாதார சீர்கேடு, சாதியச் சீர்கேடு, இராணுவத்தின் அராஜகம் குறித்தெல்லாம் கவலையே இல்லை! குறிப்பாக பெண்களை வல்லுறவு செய்து அராஜகம் செய்கிறார்களே – அதற்கும் பெண்கள் உடைதான் காரணமா?

 


Sep 6, 2020

சாதியா வர்க்கமா ஓர் இயக்குனரின் கேள்வி

 


ஒருமுறை என்னிடம் ஓர் இயக்குனர் கேட்டார் “எல்லாமே வர்க்கம்னு சொல்றீங்களே ஒரு வீட்ல - அதையும் தாழ்த்தப்பட்ட சாதின்னே வச்சுப்போம் - அண்ணன் ஐ.டி. கம்பெனில வேலை செய்றார், தம்பி மூட்டைத் தூக்கும் வேலை செய்றார். இவங்க எந்த வர்க்கம்னு எப்படி சொல்ல முடியும்? என்ன வர்க்க உணர்வு இருக்கும்? அதுவுமில்லாம சாதி அடிப்படையில படிச்சவனுக்கும் இங்க ஒரே நிலைமைதான… அப்ப சாதிதான எல்லாம்”

பதில்: “இரண்டு பேருமே உழைக்கும் வர்க்கம் தான். இருவரிடமும் தம் பிழைப்பிற்குத் தேவையான உற்பத்திச் சாதனங்கள் இல்லை. தம் பிழைப்பிற்காக இருவருமே முதலாளியைத்தான் சார்ந்திருக்கிறார்கள். 

இங்கே மூட்டைத் தூக்குபவரை மட்டுமே ”கூலி” என்பார்கள், ஆனால் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அனைவருமே “கூலிகள்” தான். இருவரில் ஒருவர் மூளை உழைப்பாளி, இன்னொருவர் உடல் உழைப்பாளி! இருவருக்கும் வர்க்க உணர்வு தானாக வந்துவிடாது. அவர்களுக்குக் கிடைக்கும் அரசியல் வெளிச்சம் பொறுத்துதான் அது அமையும். ஆனால் உடல் உழைப்பாளிக்கு தன் மீதான உழைப்புச் சுரண்டல் எளிதாக விளங்கிவிடும். மூளை உழைப்பாளிக்குத் தாமதம் ஆகலாம் அல்லது மாறியும் அமையலாம். வர்க்க ரீதியாக ஒருவர் உடல் உழைப்பாளி - ஏழை, இன்னொருவர் நடுத்தர வர்க்கமாக அமையலாம். ஆனால் இருவருக்குள்ளும் உழைக்கும் வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதுதான் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்நிபந்தனை. அதற்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சி!  வர்க்க ஒற்றுமை நேராமல் தடுக்கவே இங்கே இத்தனை பிரிவினைவாதப் போக்குகள் நிலவுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளை உடைக்கும் முயற்சிகளும்!

படித்தும் சாதி மாறவில்லை! எங்களை சமமாகக் கருதவில்லை”  உண்மைதான்! ஏனென்றால் சாதி என்பது பண்பாட்டளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. வர்க்கப் படிநிலை அமைப்பிற்குத் தேவையான படிநிலைக்கு அது பார்ப்பனியம் என்னும் மதக்கொள்கை கொண்டு ஒரு சட்ட வடிவத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது. அத்தகைய சமூகத்தில் உண்டாகும் கூட்டுச் சமூக உணர்வை புதியதோர் சமூக அமைப்புக் கொண்டு  மெல்ல மெல்லதான் மாற்ற இயலும். புதிய பண்பாட்டை அப்போதுதான் நிறுவ இயலும். அந்த பண்பாட்டமைப்பில் கல்வியும் தொடர் பிரச்சாரங்களும், சமத்துவமான உழைப்புசார் உறவுகளும் நிலவும். அப்போதுதான் முழுமையான மாற்றம் ஏற்படும்.  எதுவும் தனித்ததில்லை என்பதை இதிலிருந்தே நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.

 பொருளாயத அடிப்படையில் போட்டிப் பொருளாதார அமைப்பு உழைப்பாளர்களுக்குள் போட்டியைத் தக்கவைக்க பல்வேறு அடையாளங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இரண்டு சாதிகளுக்குள் இந்த போட்டி நிலவுவது போல், வெறுப்பு நிலவுவது போல் ஆண் பெண் உழைப்பாளர்களிடமும் அதே மனநிலை நிலவுகிறது. பெண்களால் தான் தங்கள் வேலை வாய்ப்பு போகிறது என்று கருதும் ஆண்கள் பெண்கள் வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அதேபோல் சாதிரீதியாக இடஒதுக்கீடுதான் தாழ்த்தப்படடவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது என்னும் தவறான புரிதலை பொருளாதார நிலைமையில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த இரண்டும் அதாவது – சாதியப் படிநிலை மற்றும் வர்க்க முரண்பாடு இரண்டும் தான் அந்த தீண்டாமையைக் காக்கிறது. இந்து முஸ்லிம் வெறுப்பும் அதுபோலவே, வெள்ளை இன கறுப்பின வெறுப்பு அது போலவே, மொழிரீதியான பகைமையும் அது போன்றதே.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் சாதியை – எந்த ஒரு முரண்பாட்டையும் - தனியாக ஒழிக்கவே இயலாது. அதனைத் தாங்கிப் பிடிக்கும் அடிக்கட்டுமானமான தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி முறையை மாற்றி சொத்துறவுகளை ஒழித்து சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும். உழைப்புச் சுரண்டலை ஒழிக்க வேண்டும்.

அதற்கு வர்க்கப் போராட்டமே தேவை. வர்க்கமாக ஒருங்கிணைக்க சாதியை முதலில் ஒழியுங்கள் என்றால் அதை ஒழிக்கவே வர்க்கமாக ஒன்றிணையச் சொல்கிறோம். நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை கூர்தீட்டும் ஆயுதம் “மூலதனம்”! அது தீட்டும் அடையாளங்களைக் கைவிட நாம் தானே முயற்சி செய்ய வேண்டும்? அதைவிடுத்து அரசியல் ரீதியாக, உழைப்பு ரீதியாக, வர்க்க ரீதியாக மேலெழுந்திருக்கும் சிலர் அந்த அடையாளங்களை உயர்த்திப் பிடித்து, இது சாத்தியமில்லை.. அது சாத்தியமில்லை என்று பிரச்சாரம் செய்வதன் நோக்கம் என்ன? ஒரு சிலருக்கு அது அறியாமை! ஆனால் அவர்களை வழிநடத்தும் தலைமைகள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்!

சமூக மட்டத்தில், சாதி மற்றும் இதர அடையாளங்கள் வர்க்க ஒற்றுமைக்கு எதிராக இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஒடுக்கப்பட்டோருக்காக இயங்குவதாக சொல்லிக் கொள்ளும் சில - கட்சிகள்  / கலைஞர்கள் / அமைப்புகள் / எழுத்தாளர்கள் அவர்களின் ஜால்ராக் கூட்டங்கள் – என அனைவருக்கும் முக்கியப் பங்குண்டு. இதுவும் ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனிருந்து நிகழும் புற யதார்த்தம். அதையும் முறியடிக்கும் வழிமுறையை மார்க்சியம் வழங்குகிறது.

 


Jun 19, 2020

பெண்ணியம்: ஆணாதிக்கத்திற்கு அப்பால்…



ஒடுக்கப்பட்டவர்களை அரசியல்மயப்படுத்துவதென்பது, அவர்களோடு உரையாடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் தமக்கும், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் விடுதலை பெற்றுத்தர தேவைப்படும் அறிவினை வழங்குவது என்பதாகும். இவ்வகையில், ஒடுக்கப்பட்ட இனமான பெண்களுக்கு அவர்களது உரிமைகள் குறித்து அறிவூட்டுவதும், பாலின சமத்துவத்திற்காகப் போராட போதிப்பதும் பெண்ணியம் என்றழைக்கப்படுகிறது. இருப்பினும், தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று உணர்ந்து அதற்கெதிராகப் போராடும் சாதி, இனம், வர்க்கம் போன்ற மற்ற விடுதலை இயக்கங்கள் போல் அல்லாமல், பெண் விடுதலை இயக்கங்கள் நூதனமான ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது: பெண் அடிமைத்தனம் என்பது இயற்கையானது என்று விதைக்கப்பட்டுவிட்ட ஆழமான நம்பிக்கைகளை முதலில் தகர்த்தெரிய வேண்டியுள்ளது.
எதிர்பாலின மற்றும் குடும்ப உறவென்பது மனித வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. இருப்பினும், மாபெரும் சமூக அமைப்பின் அச்சிறிய செயல்பாடானது, ஏற்றத்தாழ்வு நிறைந்ததாகவே உள்ளது. ஆண் பெண் உறவுகளில், பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது, அதனால் பெண்கள்இரட்டை ஒடுக்குமுறைக்குஉள்ளாகிறார்கள். ஒன்று குடும்ப மட்டத்தில், மற்றொன்று சமூக மட்டத்தில். இந்த சவாலானது மற்ற விடுதலை இயக்கங்களைக் காட்டிலும் அதிகளவிலான உள் முரண்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆண் பெண் உறவில் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணாதிக்க மனோபாவத்தின் விளைவாக, பெண்களே கூட ஆணாதிக்கத்தை மறுப்பவர்களாக இருக்கின்றனர். பெண்களுக்குள் காணப்படும் இந்த உள் முரண்பாட்டை நாம்பழகிவிட்ட அடிமைத்தனம் என்று சொல்லலாம். சமூகமயமாக்கலில், ஆண்கள் மேலானவர்களாகவும், பெண்கள் கீழானவர்களாகவும் மாற்றப்பட்ட ஒரு நடைமுறையின் மூலம் அடிபணிதலை பெண்மைத் தன்மை என்று கருதும் விதமாக பெண்கள் பழக்கப்படுகின்றனர்.
பாலின ஒடுக்குமுறையை புரிந்துகொள்வதற்கான ஒரு முறையாக ஆணாத்திக்கம் எனும் சித்தாந்தத்தை பெண்ணிய இயக்கங்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தன. 1980களின் இறுதியில் இச்சித்தாந்தத்தில், ஊடறுக்கும் கருத்தாக்கங்கள் (intersectionality theory) எனும் சித்தாந்தம் கவனம் பெற்றது. க்ரென்ஷாவின் கோட்பாடானது பெண்கள் மீதான அமைப்புரீதியான ஒடுக்குமுறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது என்றும், ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையது என்றும், இனம், பாலினம், வர்க்கம், திறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தாக்கத்திற்கு உட்பட்டது என்றும் முன்வைத்தது. இருப்பினும், பெண் ஒடுக்குமுறை குறித்த இந்த பரந்த அளவிலான ஆய்வுகள் வர்க்க முரண்பாட்டின் பாத்திரத்தை ஒப்புக்கொள்ள பெரும்பாலும் மறுக்கின்றன. ஆனால் வர்க்கப் பார்வையானது இன்றைய அமைப்புச் சூழல் பற்றிய கட்டமைப்பை விளக்குவதுடன் எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயமானது எந்தக் கட்டுமானத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
எந்தவொரு ஒடுக்குமுறை வடிவமும் இரண்டு தளங்களில் நிகழ்கின்றன, ஒன்று கருத்தியல் தளம் மற்றொன்று பொருளாயத தளம். இதனை அடியொட்டி நாம் ஒடுக்குமுறை எனும் பிரச்சினையை ஆய்வு செய்வோமானால்ஆணாதிக்கம், இனம், மதம், சாதி, திறன், குடியுரிமை, பாலியல் தேர்வு, கலாச்சாரம் போன்றவைஒடுக்குமுறைக்கான கருத்தியல் வடிவங்கள் என்பதும், வர்க்க ஒடுக்குமுறை என்பது பொருளாயத அடிப்படையிலானது என்பதும் விளங்கும். இருப்பினும், கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறையிலும் பொருளாயத பின்விளைவுகள் இருக்கும், ஏனென்றால் மேலாதிக்கத்தின் தோற்றுவாயே பொருளாயத அடிப்படையிலானது, அவ்வமைப்பிற்குள் பொதிந்திருக்கும் அதிகார உறவுகளானது மேல்மட்டத்தில் பிரதிபலிக்கின்றது. மேலாதிக்கம், ஆளும் வர்க்கத்தின் பொதுப்படுத்தும் விதிமுறைகளும், அதன் விளைவான ஆளும் வர்க்க அதிகாரத் தொடர்ச்சியும் வாழ்வனுபவத்தின் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது.
விடுதலைக்கான பெண்ணிய போராட்டமானது ஒடுக்குமுறையை மையப்படுத்தி இருக்கவேண்டுமே ஒழிய, பாலினத்தை மட்டும் மையப்படுத்தி இருக்கக்கூடாது. ஆகவே அது பாலின ஒடுக்குமுறைக்கு அடித்தளமாய் இருக்கும் பொருளாயத நிலைமைகளை புறக்கணிக்கவியலாது. ஆனால், முதன்மை அல்லது அடிப்படை பிரச்சினை என்று அவரவரின் குறைபட்ட பார்வையினால், நாம் குறுகிய அணுகுமுறைகளையே காண முடிகிறது. இந்த முற்சார்பானது ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு தனித்த பிரச்சினையாகக் கருத வழிகோலும், அதன் விளைவாக, பல்வகை ஒடுக்குமுறையினை பிணைக்கும் மூல காரணத்தை அடையாளம் காணத்தவறிவிடும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, தமக்குள்ளாகவும், மற்ற இயக்கங்களோடும் முரண்பாடுகளும், பகைமையும் வளர்ந்து, பெரும்பாலும் அது சுய-விரக்தியில் சென்று முடிகிறது.
பெண் வெறுப்பு குறித்து இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பதால், நான் இந்தக் கேள்வியை கேட்கிறேன்: “தந்தை வழிச் சமூகம், அதாவது ஆணாதிக்க அமைப்பு ஒழிக்கப்பட்டுவிட்டால் இனரீதியான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, மதவாத ஒடுக்குமுறை மற்றும் திறன், பாலியல் தேர்வின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் களையப்பட்டுவிடுமா?”
இல்லை. இல்லவே இல்லை! மேலும், அகவாத கண்ணோட்டத்தினால் சமூகப் பாகுபாட்டின் வேரை நம்மால் அடையாளம் காணவும் முடியாது, அதனால் கருத்தியல்ரீதியான உருமாற்றங்கள் நிகழக் காரணமாய் இருக்கும் அடித்தளத்தை மாற்றியமைக்கும் முயற்சி சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. ஒவ்வொன்றாய் களைவோம் என்று நாம் முடிவெடுத்தால், தன்னளவில் அது பெரும் பின்விளைவுகளையும், முரண்களையும் கொண்டதாகிப் போகும். மேலும், அடித்தளம் மாறாத நிலையில் மேலாதிக்கமானது உருமாறிக்கொண்டே இருக்கும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு அது மேலெழும்.
ஒடுக்குமுறை, மேலாதிக்க அதிகாரமையமென்பது தொன்றுதொட்ட காலம் முதல் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே அதன் வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன. பெண்கள் விஷயத்தில், வரலாற்று ஆய்வுகளின் துணையோடு நாம் பார்க்கையில், மனிதர்கள் குழுக்களாக, கூட்டுச்சமூகமாக வாழ்ந்து வந்தனர் என்பதைக் காணலாம். தந்தையின் இரத்த வம்சா வழி என்பது முக்கியமானதாகக் கருதப்படவில்லை என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “தொன்று தொட்ட காலங்களில்இன்னும் சில புராதன தாய்வழிச் சமூகங்களில்கூடகருத்தரிப்பில் ஆணுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றே கருதப்படுகிறது… ” 
தாய்வழிச் சமூகத்தில் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உயர்நிலையில் இருந்தனர். அவர்களும் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், இனக்குழுவிற்கு தலைமை தாங்குதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். மக்கள் எவ்வித ஒடுக்குமுறைக்கும் உள்ளாகவில்லை. இதனை நாம் புராதன கம்யூனிசம் என்கிறோம். “கம்யூனிச சமூக குடும்ப அமைப்பானது இல்லங்களில் பெண்களின் உயர்நிலையை சுட்டிக்காட்டுகிறது…. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பதை அடையாளம் காண முடியாத நிலையானது பெண்கள் பெற்றிருந்த உயர் மதிப்பை உணர்த்துகிறது…”
கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானதுஅதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானதுசந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போதுசரக்கு’, ‘பணம்குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” 
மனிதர்கள் வாழ்வதற்குபொருள்உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும்ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், அதனால் போதிக்கப்படும் பெண்ணிய சித்தாந்தம் குறித்தும் நாம் விரிவாகக் காண்போம்.
அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான்உபரி மதிப்புஎன்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.
முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:
முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர்தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி (பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள்சரக்குகளாகின்றன; உற்பத்தி சாதனங்கள்2 ‘மூலதனம்’* ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின்எஜமானர்உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.
முதலில், நாம் சமூக உறவுகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு பின்னர் தனிப்பட்ட உறவுகளை, அதாவது குடும்ப அளவிலான தனி நபர் உறவுகளை ஆய்வு செய்வோம், ஏனென்றால் இரண்டு உறவுகளிலும் காணப்படும் பிரதான முரண்பாடு: உழைப்புப் பிரிவினை.
வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்புசார் உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.
ஓர் உற்பத்தி முறையும், அதன் விளைவான சமூக ஒழுங்கும் மேலாதிக்கமும் பொருளாயத அடிப்படியிலானதாகவும் இருக்கும்பொழுது, பெண்ணியப் போராட்டத்தை வெறும் ஆணாதிக்க எதிர்ப்பு என்றோ அல்லது அத்தகைய கருத்தியல் வடிவங்களுக்கு எதிரான போராட்டமாகவோ மட்டும் தொடுப்பதென்பது போதாமை நிறைந்ததாகும். விவாதத்திற்காக, ஆணாதிக்கத்தை ஒழிப்பதன் மூலம், நாம் பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம்,
·         போரையும், பஞ்சத்தையும் நாம் எப்படி போக்குவோம்?
·         ஏழ்மையை எப்படி ஒழிப்போம்?
·         பெண் உடல் பண்டமையமாக்கப்படுவதை எப்படி ஒழிப்போம்?
செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:
1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்)3 என்று வகைப்படுத்துகிறார்.
முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:
“… வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு தோன்றியது; அதே சமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது. ஆகவே, அது பொது விதியாகவே, மிகவும் வலிமையான, பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. அந்த வர்க்கம் அரசன் மூலமாக அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. இவ்வழியிலே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களைப் பெறுகிறது.”4
அரசும் அதன் நிர்வாகக் குழுவான நீதித்துறை மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து அரசு இயந்திரங்களும் ஆளும் வர்க்க நலனுக்காகவே பணி புரியும் என்பதை எங்கல்ஸ் இங்கு தெளிவாக விளக்குகிறார். தொடர் போராட்டங்கள் துண்டு துண்டான சில சீர்திருத்தங்களைப் பெற்று தரலாம். ஆனால், முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நிலவும் வரை நாம் சமத்துவத்தை அடைய முடியாது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தர்க்கமானது பிரித்தாளும் தந்திரத்தை உள்ளடக்கியது, அப்போதுதான் அடிமட்ட கூலி பெறும் கீழ் வர்க்கம் எனும் ஒரு நிரந்தர பின்தங்கிய வர்க்கத்தை அப்படியே வைத்திருக்க முடியும்.
இது பொருளாதார நிர்ணயவாதம் என்றும் ஆணாதிக்கம் மற்றும் ஒடுக்குமுறையின் மற்ற வடிவங்கள் அனைத்தும் வர்க்கப் பகைமை உருவாகும் முன்பே உருவானவை என்றும் வாதிடுவோர் ஏற்றத்தாழ்வில் தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் தொடர்பை நிராகரிக்கின்றனர் என்றே சொல்ல முடியும். பெண்கள், கறுப்பினத்தவர், மாற்றுப் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய அனைவரும் குறைவான (அடிமட்ட) கூலி பெறும் பிரிவினராவர். அதேபோல் கூலி உழைப்பில் ஈடுபடாது வீட்டு உழைப்பில் மட்டுமே முடக்கப்பட்ட இப்பிரிவின் ஒரு பகுதியினர் ஏழ்மையில் மூழ்கி துன்புறுகின்றனர் அல்லது வேலையின்மை காரணமாக பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.
மேற்சொன்ன வாதங்களிலிருந்துகூட்டுச் சமூக வாழ்விலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், அதன் பின் முதலாளித்துவம் என்று உருமாறி நிற்கும் சமூகத்தின் வளர்ச்சியானது இலாபம், தனிச் சொத்து வடிவிலான செல்வக் குவிப்பு எனும் இலட்சியத்தை கொண்ட ஒரு நவீன அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த அணுகுமுறையைக் கொண்டு நாம் ஆணாதிக்கத்தின் ஆணி வேரை தேடிச் செல்வோமானால், சரக்கு உற்பத்தியின் விதிகளும், உற்பத்தி சாதன உடைமையாளர்களிடம் குவிந்த செல்வத்தின் விளைவான அதிகாரமும் ஆண் பெண் சமத்துவத்தைக் குலைத்தது என்பது விளங்கும். குடும்பம் என்பது சமூகத்தின் பொருளாதார அலகாகிப் போனது, அதில் உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி முறைகளுக்கு ஏதுவானதொரு உழைப்புப் பிரிவினை உருவானது. பொருளுற்பத்தி மற்றும் புதிய உழைப்புச் சக்தியின் உற்பத்தி இரண்டையும் பிரதான செயல்பாடாகக் கொண்ட அதில் பாலின பேதத்தின் அடிப்படையிலான ஒரு உழைப்புப் பிரிவினை உருவானது. “அன்று குடும்பத்தில் நிலவிய உழைப்புப் பிரிவினையின்படி, உணவையும் அதற்குத் தேவையான கருவிகளையும் பெறுவதும் அதன் விளைவாக, அவற்றின் உடைமையாளராக இருப்பதும் ஆணின் பொறுப்பாக இருந்தது…”5 உற்பத்தி சாதனங்கள் பரிபோன நிலையில், பெண் ஆணைச் சார்ந்து வாழும் நிலை உருவானது.
உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில், உற்பத்தியில் ஈடுபடாத சிலர் உற்பத்தி சாதன அபகரிப்பில் ஈடுபட்டனர், அதன் விளைவாக மூன்றாவது வகையான உழைப்புப் பிரிவினை ஒன்று உருவானது. “இங்கு, இப்போது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு வர்க்கம் முதன் முறையாக உதிக்கிறது, அது உற்பத்தி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதோடு, உற்பத்தியாளரையும் அதன் விதிகளுக்கு கீழ்படியும் நிலைக்குத் தள்ளுகிறதுஇரு தரப்பையும் சுரண்டுகிறது”6. இவ்வாறாக, ஆண்கள், அல்லது உற்பத்தி சாதனங்களின் அப்போதைய உடைமையாளர்கள் உற்பத்தி சாதனங்கள் பரிக்கப்பட்டவர்களாக, நிலப்பிரபுத்துவத்தின் கீழ் அடிமை உழைப்பாளிகளாக மாற்றப்பட்டனர், பின்னர் முதலாளித்துவத்தின் கீழ் அவர்கள் கூலி உழைப்பாளிகளாக்கப்பட்டனர். “இவ்வாறாக, முதலாளித்துவ அமைப்பிற்கான பாதையை வழியமைத்துக் கொடுத்த அந்த நடைமுறையானது, உழைப்பாளியிடமிருந்து அவனது உற்பத்தி சாதனங்களை பரித்த நடைமுறையாக அல்லாமல் வேறாக இருக்க முடியாது; ஒருபுறம், வாழ்வாதாரத்திற்கான சமூக வழிமுறைகளும், உற்பத்தி வழிமுறைகளும் மூலதனமாக மாற்றப்பட்டன, மறுபுறம், அப்போதைய உற்பத்தியாளர்கள் கூலி உழைப்பாளிகளாக மாற்றப்பட்டனர்”8
உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களின் இலாப வெறியானது அபகரிப்பு, அடிமைபடுத்துதல் மற்றும் நிறுவனமயமாக்குதல் மூலம் வீட்டில் முடக்கப்பட்டவர்களான பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்வதையும், ஆண்கள் உற்பத்தி சாதன உடைமையாளர்களைச் சார்ந்து வாழும் நிலைமையையும் உருவாக்கியது, இந்த உறவுமுறையானது மேலாதிக்கம் நிறைந்ததாக நிலைபெற்றது. உற்பத்தி உறவுகளிலிருந்து வேறூன்றிய இந்த மேலாதிக்கமானது அனைத்து மனித உறவுகளிலும் (உ.ம். சாதி) பிரதிபலிக்கின்றது.
இதன் அடிப்படையில் நாம் பெண் அடிமைத்தனத்தையும், அதனைப் பிணைக்கும் சமூக கருத்தியல் வகைப்படுத்துதலையும் ஆய்வு செய்வோமெனில் பொருளாதார சூழ்நிலைமைகளும், அதன் தொடர்ச்சியான சமூக ஒழுங்குமே அடிமைபடுத்துதலுக்கான மூலகாரணமாக இருக்கின்றது என்பது மீண்டும் தெளிவாகிறது. இந்த வகைப்படுத்தலானதுஉழைப்புச் சக்திகளை பல்வேறு வகைகளில் மதிப்பீடு மற்றும் மதிப்பிறக்கம் செய்வதானதுஉழைப்புச் சகதியை மலிவாகக் கைப்பற்றவும், அதன் மூலம் செல்வக் குவிப்பை மேற்கொள்ளவும் வகை செய்கிறதுமேலும், ஆணாதிக்கம் மற்றும் முதலாளித்துவம் என்று வெளிப்படும் அதிகார உறவுகளின் கீழ்பெண்ணானவள், அவளது உற்பத்தி சக்தியோடு உழைப்புக்கான ஒரு பண்டமாக மதிப்பிறக்கம் செய்யப்படுகிறாள்; அவள் ஒரு உற்பத்தி அலகாகஉழைப்பாளரை பராமரிப்பதன் மூலம் உழைப்புச் சக்தியை புனரமைக்கும் பொறுப்புடைய, குழைந்தைப் பேறு மூலம் புதிய உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்யும் பொறுப்புடையஉறபத்தி அலகாக மாற்றப்படுகிறாள்.
இவ்வாறாக, மூல காரணத்தை, குறைந்தது ஆணாதிக்கத்தின் வினையூக்கியை நாம் இப்போது ஆய்வு செய்துவிட்டபடியால், “மலிவான கூலிக்காகவும், அவளது மறு உற்பத்தி சக்திக்காகவும் பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தும் அத்தகையதொரு மேலாதிக்கத்தை ஒழித்துக்கட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?”
பதில்: முதலாளித்தும் – உற்பத்தி சாதனங்களை அபகரித்த, செல்வப் பசியோடு நம்மையெல்லாம் அடிமைப்படுத்திய, உற்பத்தி சாதனங்களற்று சார்ந்து வாழும் நிலையை உருவாக்கிய, உழைப்பை அந்நியப்படுத்திய, பாலினம், இனம், தேசம், பாலினத் தேர்வு, மதம் என்று எவ்வித விலக்குமின்றி நம்மையெல்லாம் சுரண்டுகின்ற அந்த பொருளாதார அமைப்பு – தூக்கியெறியப்பட வேண்டும். உற்பத்தி சாதனங்கள் பொதுவுடைமையாக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி முறை உருவாக்கப்பட வேண்டும்.
பெண்ணியத்திற்கு மாற்றாக  மார்க்சியத்தை முன்வைப்பதல்ல எமது நோக்கம், இருப்பினும், ஆணாதிக்கத்தை மட்டுமே ஒழித்துக்கட்ட விரும்பும் பூர்ஷுவா பெண்ணியத்தைக் காட்டிலும், மார்க்சிய அணுகுமுறையானது பெற்றுத்தரக் கூடிய விடுதலையானது அனைத்து வர்க்கப் பெண்களையும் உள்ளடக்கியதாகும். பூர்ஷுவா பெண்ணியமானது ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டி, பெண்களின் தலைமையில் தனியுடமை செல்வக் குவிப்பை நிறுவ முனைகிறது. அதனால் அதில் சமத்துவம் கிடையாது. நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில்,
பெண்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்குவதால் மட்டும் அதிகார சமன்பாடு ஏற்பட்டுவிடாது. பாட்டாளி வர்க்கப் பெண் பாட்டாளி முகாமிலும், பூர்ஷுவா பெண் பூர்ஷுவா முகாமிலும் நிலைகொள்கிறாள். பூர்ஷுவா பெண்கள் இயக்கங்களின் இந்த சோஷலிசப் போக்கினால் நாம் ஏமாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது, பூர்ஷுவா பெண்கள் விடுதலை பெறும் வரையே அவ்வியக்கம் நிலைத்திருக்கும்”9
இருப்பினும், பூர்ஷுவா என்றால் முதலாளித்துவ வர்க்கம்10 என்றாலும், பூர்ஷுவா பெண்ணிய கருத்தியலானது, அதாவது ஆளும் வர்க்கக் கருத்தியலானது பெரும்பாலும் அனைத்து வர்க்கப் பெண்களையும் அரவணைக்கின்றது. அதனுடைய சுயநல அரசியலை அறியாத தொழிலாளர் வர்க்கப் பெண்கள் அதன் கருத்தியல்களில் மயங்கி தாராளவாத சிந்தனைகளுக்கு இரையாகின்றனர்.
இந்தப் புரிதலிலிருந்தும், மனிதாபிமான அடிப்படையிலான ஒற்றுமை எனும் நிலைப்பாட்டிலிருந்துமே, மார்க்சியர்கள் அனைத்து பெண்ணிய இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்த இயக்கத்திலும் ஆழமான ஆன்மீக மற்றும் தார்மீக அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. தனது சொந்த பொருளாயத தேவைக் கோருவதோடு மட்டுமன்றி, பூர்ஷுவாப் பெண்கள் ஆன்மீக ஊட்டமளிப்பையும் கோருகின்றனர். தமது தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்…. பூர்ஷுவாப் பெண்கள் மேற்கொள்ளும் பொருளாதார, அறிவார்ந்த மற்றும் தார்மீக முயற்சிகள் முற்றிலும் நியாயமானதே”11
மேலும், கார்ல் மார்க்ஸ் சொல்கிறார்,
சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் நிலவரங்களது அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதிரிப்பவர்கள் ஆவர். இந்த இயக்கங்கள் யாவற்றிலும் அவர்கள் சொத்துடைமைப் பிரச்சினையை, இதுவரை அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தலைமையான பிரச்சினையாய் முன்னிலைக்குக் கொண்டுவருகிறார்கள்.” 12
முடிவாக, ஆணாதிக்கமானது, பூர்ஷுவாக்கள் வாதம் செய்வதுபோல் பகுதியளவில் சுயாதீனமானது எனினும், இன்றைய வரலாற்று சூழலில், அது முதலாளித்துவத்தால் உட்செறிக்கப்பட்டுவிட்டது. ஒடுக்குமுறை என்பது ஒரு சுரண்டல்வாத இயங்குமுறையாகும், அதனடிப்படையில், பாலினரீதியான ஒடுக்குமுறை முதலாளித்துவத்திலும் காணப்படுகிறது. மலிவான உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதும் மற்றும் அதிக லாபம் ஈட்டுவதுமே அதன் குறிக்கோள். இந்தியச் சூழலில் அது சாதியத்தால்உழைப்புப் பிரிவினையின் மற்றுமொரு வடிவம்மேலும் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறாக ஆணாதிக்கமானது முதலாளித்துவதின் முக்கிய அங்கமாகிவிட்டது. எனவே, தனியுடமையின் அடிப்படையிலான உழைப்புச் சுரண்டல் ஒழிக்கப்பட்டு, சோஷலிச முறையிலான உழைப்புப் பிரிவினை நிறுவப்பட்டுவிட்டால் அரசு உதிர்வது போலவே ஆணாதிக்கமும் உலர்ந்து உதிர்ந்து போகும்13. ஏனென்றால், அத்தகையதொரு சமத்துவ நிலைமையில், ஆண் பெண் உறவானது இயல்பானதாக அமையும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திமுறைக்காக குடும்பமானது ஓர் பொருளாதார அலகாக இருக்கும் நிலை அப்போது இருக்காது.
முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாத்திரங்களாலும், ‘இயல்பானதுஅல்லதுஇயல்பல்லாததுஎனும் கருத்தாக்கங்களால் ஆணும் பெண்ணும் இனியும் பிணைக்கப்பட மாட்டார்கள். மாறாக, அவரவரின் தனிப்பட்ட உணர்வுத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு உறவுமுறையை அமைத்துக்கொள்ள அவர்கள் சுதந்திரம் பெற்றவராகத் திகழ்வர்”14
 இந்தப் பின்னணியில்தான் மார்க்சியப் பெண்ணியவாதிகள்,  ஆணாதிக்க எதிர்ப்பு என்னும் பென்ணியப் போராட்டம்  வர்க்கப் போராட்டப் பாதையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அத்தகைய புரட்சிகர போராட்டங்கள் பின் வரும் போராட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: 1) குடும்பத்திற்குள் சமமான உழைப்புப் பிரிவினை 2) சொத்துரிமை 3) முடிவெடுக்கும் உரிமை 4) உடல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகள் மற்றும் 5) அனைவருக்குமான, சமத்துவ முறையிலான சமூக உழைப்புப் பிரிவினை மற்றும் தனியுடைமை ஒழிப்பு.
பெண்ணின் சுயமும், பெண்ணிய அரசியலும் வெடித்துக் கிளம்பும்போது அது வர்க்க அரசியலால் நங்கூரமிடப்படாமல் போனால், சோஷலிச வர்க்கப் போராட்டத்தோடு உரையாடல் நிகழ்த்தாமல் போனால், பாட்டாளி வர்க்கப் பெண்களின் விடுதலை கேள்விக்குறியாகிப் போகும். அதனால், அனைவரையும் உள்ளடக்கியதாக பெண்ணியம் இருக்க வேண்டுமானால், சோஷலிசமே15 அதன் கலங்கரை விளக்கமாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து உருவாகும் புதியதொரு சோஷலிச சமூகமானது பாலின சமத்துவம் கொண்டதாக மட்டுமின்றி, உழைப்பு சுரண்டலற்ற சமூகமாகவும் இருக்கும். இவ்வாறாக இரட்டை உழைப்பினால் ஏற்படும் முரண்பாடுகளையும் சுமையையும் அது ஒழித்திடும். அத்தகையதொரு வாழ்வானது நிச்சயமாக மேலானதொரு16 வாழ்வாக அமையும்.
____________________
. சிமோன் தே பொவ்வா, செக்கண்ட் செக்ஸ், விண்டேஜ், 1997, பக். 39
, . எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், பக். 49
1.       கட்டுரைக்காக சுருக்கப்பட்டுள்ளது, இயற்கையில் கிடைக்கும் கச்சாப் பொருள்களும், உழைப்பும் அதில் அடக்கம், ஆனால் உழைப்பு என்பது சுதந்திரமானது.
2.      மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் இதை விரிவாக விளக்குகிறார்.
4.      5, 6, எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், முன்னேற்றப் பதிப்பகம் (பக். 55, 162)
1.       கார்ல் மார்க்ஸ், மூலதனம், தொகுதி 1, பக். 668
2.       
1.       கிளாரா ஜெட்கின், https://www.marxists.org/archive/zetkin/1896/10/women.htm
2.      எங்கல்ஸின் விளக்கப்படி: பூர்ஷுவாக்கள் என்போர் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆவர். அனைத்து வளர்ந்த நாடுகளிலும், தங்கள் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உற்பத்தி சாதனங்கள், கச்சாப் பொருள்கள் மற்றும் அனைத்து கருவிகளையும் (இயந்திரங்கள், ஆலைகள்) தங்களின் தனியுடமையாகக் கொண்டிருப்பவர்கள்; ‘நவீன வர்க்க முதலாளிகளாக, சமூக உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள் மற்றும் கூலி உழைப்பாளிகளை அமர்த்தி உழைப்பை விலைக்கு வாங்குபவர்கள்…. இந்தப் பொருளில், பூர்ஷுவாக்கள் என்போர் பொருளாதார ரீதியாக ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், அவர்களே அரசு இயந்திரத்தையும், பண்பாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துபவர்கள், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானவர்களாகவும், முரண்பட்டவர்களாகவும் இருப்பவர்கள்…”, டாம் பாட்டம்மோர், மார்க்சியச் சிந்தனை அகராதி, மாயா பிளாக்வெல் பதிப்பு, பக். 36
3.       
1.       கிளாரா ஜெட்கின் https://www.marxists.org/archive/zetkin/1896/10/women.htm
2.      கார்ல்ஸ் மார்க்ஸ், எங்கல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் பொருளாதார, தத்துவ குறிப்புக்களின் கையெழுத்துப்படிகள், பிரமோத்தியஸ் வெளியீடு, பக். 243
4.      எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், முன்னேற்றப் பதிப்பகம், பக். 16
1.       கார்ல்ஸ் மார்க்ஸின் விளக்கத்தின்படி, சோஷலிசம் என்பது கம்யூனிசத்திற்கான பாதையில் ஓர் இடைக்காலக் கட்டம்
2.      இடைக்காலக் கட்டமாக இருப்பதால், மார்க்ஸின் விளக்கப்படி அது, ‘கம்யூனிச சமூகத்தின் ஒரு மேலானதொரு கட்டமாக’, அரசு உதிர்ந்து, உழைப்பு பற்றிய ஒரு முற்றிலும் புதிய அனுகுமுறை நிலவும் ஒரு சமூகமாக, ‘உழைப்புக்கேற்ற கூலி என்பதிலிருந்து தேவைக்கேற்ற கூலிஎனும் பொன்மொழியை பொன்னேட்டில் பொறித்துக்கொள்ள ஏதுவானதொரு சமூகம். டாம் பாட்டம்மோர், மார்க்சிய சிந்தனை அகராதி, மாயா பிளாக்வெல் பதிப்பகம், பக். 500,501.
ஹிஸ்டீரியா என்னும் இதழில் அக்டோபர் 2016இல் வெளியிடப்பட்டது.
****** 

நான் பெண்ணியவாதி அல்ல மார்க்சியவாதி என்று அறிவித்தபோதோ, பெண்ணியம்: ஆணாதிக்கத்திற்கு அப்பால் என்று வாதிட்ட போதோ நான் பெண் வெறுப்பாளர் என்றோ ஆணாதிக்கவாதி என்றோ, வெறும் வர்க்க வரட்டுவாதி என்றோ தூற்றப்படவில்லை! என் சாதியும் கேள்விக்கு உள்ளாகவில்லை! ஆனால் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு அம்பேத்கர் போதாது என்னும் போது மட்டும் எப்படி சாதி தோண்டப்படுகிறது?

அம்பேத்கரின் போதாமையை ஏன் பேசுகிறீர்கள் என்று இன்று கேட்பவர்கள் பெண்ணியத்தின் போதாமையை ஏன் பேசுகிறீர்கள் என்று அப்போது கேட்கவில்லை! உழைக்கும் மகளிர் நூலுக்கான அவசியம் என்ன என்றும் கேட்கவில்லை!

தோழர்களே, நான் எப்படி பெண்ணிலைவாதத்தை அடையாள அரசியலாக மார்க்சிய நோக்கிலிருந்து வர்க்கப் பார்வையுடன் விமர்சிக்கிறேனோ அப்படித்தான் தலித்தியம் என்னும் அடையாள வாதத்தையும் விமர்சிக்கிறேன். வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உற்பத்தி முறை வளர்ச்சி மற்றும் உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றத்தினால் விரிவடையும் கல்வி-அரசியல்-பொருளாதார வாய்ப்புகளால் வர்க்கங்களில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குறிப்பிட்ட படிநிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் (ஆண், பெண், சாதி, மதம் உள்ளிட்ட) இருந்து நடுத்தர/பணக்கார வர்க்கம் தோன்றும்.

அப்போதெல்லாம் சாதி/வர்க்க/பாலின உறவுகளில் அல்லது அவ்வமைப்புகளில் தகர்வு, நெகிழ்வு, இணைவு எல்லாம் ஏற்படும். தமக்குக் கிடைத்த வளர்ச்சியை முழுமுற்றானதென்று நம்பி அந்த நடுத்தர வர்க்கம் அடிபப்டை மாற்றத்தைக் கோரும் சோசலிச சித்தாந்தத்தை அறியாமையில் எதிர்க்கும். அந்த எதிர்ப்பென்பது உன்மையில் அவர்கள் கோரும் சமத்துவத்திற்கு எதிரானதே ஒழிய மார்க்சியத்தை அது எந்த வகையிலும் தகர்க்க இயலாது! எங்களைப் போன்ற மார்க்சியவாதிகளையும் அந்த நடுத்தர வர்க்கத்தல் முடக்க இயலாது!

இக்கட்டுரையில் எங்கெல்லாம் பெண் என்று வருகிறதோ அங்கெல்லாம் தலித் என்று பொருத்திப் பார்த்து விளங்கிக்கொள்ள முற்படலாம்!

மேலும் சாதியப் பிரச்சினை குறித்த பல பதிவுகளை பல முறை தொகுத்து கொடுத்த பின்பும் மார்க்சியத்தில் என்ன உள்ளது என்று கேட்பவர்களுக்காக மீண்டும் தொகுத்து தருகிறேன். அல்லது ஏற்கனவே வந்திருக்கிற மார்க்சிய ஆய்வுகளையேனும் படிக்க முயற்சி செய்யுங்கள். எதையும் படிக்காமலேயே காற்று வாக்கில் கேள்விப்பட்டதை வைத்து வாதிட வந்தால் நான் எவ்வகையிலும் பதில் அளிக்க கடைமைப்பட்டவள் அல்ல!

http://saavinudhadugal.blogspot.com/2020/…/blog-post_19.html

https://www.facebook.com/Kotravai.N/posts/10157887005795575