அம்பேத்கருடன் தோழர் ஏவின் மனோ காணும் அகநேர்காணல்
Oct 23, 2021
மார்க்சியமும் - அம்பேத்கரும்! ஜெய் பீம் என முழங்கும் கம்யூனிஸ்டுகளின் கவனத்திற்கு
Aug 12, 2021
பெண் விடுதலை சிந்தனைகள்
பெண் தொழிலாளியின்
நிலைமை என்பது நாடெங்கிலும் மிகவும் மோசமாகவே உள்ளது. ஆணைப் போலவே அவளும்
துன்பப்படுகிறாள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தை சார்ந்தவளாக ஆணைப் போலவே அவளும் ஓய்வின்றி
உழைக்கிறாள், ஏழ்மையில் வாடுகிறாள். உழைக்கும் மகளிரும்
பாட்டாளி வர்க்க அங்கமே, ஆகவே அவளுடைய நலனும் அந்த வர்க்க
நலன்களோடு தொடர்புடையது.
பாட்டாளி வர்க்கம் மேலான நிலையைப் பெறும்போது
உழைக்கும் மகளிரின் நிலைமைகளும் மாறும். பாட்டாளி வர்க்கம் அறியாமையிலேயே உழலும், உரிமைகளின்றி வாழும் எனில், உழைக்கும் மகளிர்க்கும் இன்றைய அதே துன்பகரமான வாழ்வே நீடிக்கும். ஆகவே
பாட்டாளி வர்க்கம் மேலான வாழ்வை வென்று பெறுகிறதா இல்லையா என்பதைப் பற்றி
உழைக்கும் மகளிர் கவலைகொள்ளாதிருக்கவோ பாரா முகமாக இருக்கவோ முடியாது. பாட்டாளி
வர்க்க நலன் என்பது அவளுடைய சொந்த நலனும், அவசியமான நலனும்
ஆகும். ஒரு ஆண் தொழிலாளியைப் போலவே பெண் தொழிலாளிக்கும் இது மிகவும் முக்கியமானது.
“பாட்டாளி வர்க்க நலன்” என்றால் என்ன?
தொழிலாளர்களின் உழைப்புதான் அனைத்து செல்வங்களையும்
தோற்றுவிக்கிறது, இருப்பினும்
அந்த உழைப்பிற்கு ஈடாக அவர்கள் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் கூட தேவையான உணவு
கிடைப்பதில்லை. இதைக் காணும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் குறித்து
அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். உழைப்பாளர்கள் தங்களுக்காக உழைக்கவில்லை, மாறாக பூர்ஷுவாக்கள் என்றழைக்கப்படும் ஆலை முதலாளிகளுக்காக, நிலவுடைமையாளர்களுக்காக, சுரங்கம், கடைகள் ஆகியவற்றை வைத்திருக்கும் எஜமானர்களுக்காக உழைக்கிறார்கள்.
அனைத்து சட்டங்களும் சொத்துடைமை வர்க்கத்திற்குச்
சேவை செய்யவே வகுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் பூர்ஷுவாக்களின் நலனுக்காகவே
இயங்குகிறது. நாட்டின் சட்டதிட்டங்களை வகுப்பதிலோ, நிர்வாகத்திலோ தொழிலாளர்களுக்கு எந்தப் பங்குமில்லை.
உழைப்பது ஒன்றே அவர்களின் வேலை. வரிகள் கட்ட அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும்.
தங்கள் சுயமரியாதை மடிவதைக் கண்டும் கடும் குளிர், பசி,
பட்டினி போன்ற கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க
வேண்டும்.
இந்த நிலைமையைத் தொழிலாளர்கள் மாற்ற நினைக்கின்றனர்.
இனியும் அவர்களுக்கு வர்க்கங்கள் வேண்டாம்,
ஏழை பணக்காரன் வேற்றுமை இருக்கக் கூடாது. ஆலைகள், நிலங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள்
சுரங்கங்கள் போன்றைவை தனியாரின் உடைமைகளாக இன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் பொது
உடைமையாக, அவர்களால் நிர்வகிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.
எஜமானர்கள் எப்போதும் தங்களை வளப்படுத்திக்கொள்வதில் மட்டுமே கவனம்
செலுத்துகின்றனர். தங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உடல் நிலை, வாழ்க்கை வசதி, நலம் – வளம், குறித்தெல்லாம்
அவர்கள் கவலைப்படுவதில்லை. உழைக்கும் மனிதனின் வாழ்க்கையை அவர்கள் எண்ணுவதில்லை,
மாறாக இலாபம் ஒன்றே அவர்களின் குறிக்கோள்.
உற்பத்திக் கட்டுப்பாடுகள் தனியார்
முதலாளிகளிடமிருந்து சமூகத்தின் கைகளுக்கு மாறும்போது எல்லாம் மாறிவிடும்.
சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் நல் வாழ்க்கை வாழ, ஒவ்வொருவரின் தேவையும் நிறைவு பெற, மகிழவும்,
கொண்டாடவும் தேவையான ஓய்வு நேரம் கிடைக்க, மனிதர்கள்
அனுபவிக்க வேண்டிய அனைத்து விதமான இன்பங்களும் கிடைத்திட அச்சமூகம் வழிவகுக்கும்.
தங்களுக்குத் தேவையான சரக்கு இருக்காதோ என்று தொழிலாளர்கள் அப்போது அச்சம் கொள்ள
வேண்டியிருக்காது.
இயந்திரங்களின் வரவால் மனித உழைப்புத் திறன்
அதிகரித்துள்ளது. அதன் விளைவாக புதிய விவசாய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மண் வளம் அதிகரித்துள்ளது. ஆகவே
அதுகுறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லோருக்கும் போதுமான அளவு
சரக்குகள் இருக்கும். இன்றைய நிலையில் மக்கள் ஏழ்மையில் வாட, போதிய உணவு தானியங்கள் இல்லை, உடை இல்லை என்பதல்ல
காரணம். அத்தனை தானியங்களும் வாங்குபவரை எதிர்நோக்கி ரயில் நிலையங்களில், கிடங்குகளில் அழுகிக் கிடக்கின்றன. மறுபுறம் தொழிலாளர்கள் பட்டினியில்
வாடி இறக்கின்றனர். ஒரு தொழிற்சாலை முதலாளியின் சேமிப்புக் கிடங்கு விற்பனையாகாத
சரக்குகளின் குவியலால் வெடித்துவிடும் போல் உள்ளது. ஆனால் அவனது தொழிற்சாலை
வாசலில், சாக்குத் துணி அணிந்தபடி தொழிலாளர்கள் வேலை கேட்டு
காத்துக்கிடக்கின்றனர்.
உற்பத்தியானது சமூகத்தால் நிர்வகிக்கப்படும் போது, அனைவரும் உழைத்தே வாழ வேண்டும். ஆனால்
இன்றுள்ளது போல் உழைப்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது. உழைக்கும் இடத்தில்
நிலவும் வெறுக்கத்தக்க சூழல் இலகுவாக்கப்படும். காற்றோட்டமில்லாமல், நாறும், நோய்த் தொற்றுங்கள் ஏற்படும் தொழிற்சாலைகள்
போலின்றி, நன்கு ஒளியூட்டப்பட்ட, தாராளமான
இடம் நிரம்பிய, உலர்ந்த, காற்றோட்டமுள்ள
கட்டிடங்களாக அது மாற்றப்படும். இன்றைக்குப் போல் நீடித்த பணி நேரமிருக்காது.
ஏனென்றால், இன்றைக்குப் போல் கர்ப்பிணிகள், குழந்தைகள், உழைப்பாளிகள் மட்டும் கடுமையாக உழைக்க
மற்றொரு பிரிவினர் வேலை வாய்ப்பின்றி சும்மா இருக்க நிர்ப்பந்திக்கப்படும் நிலை
இருக்காது. அனைவரும் உழைத்து வாழ வேண்டும். அதேவேளை அது தற்போது உழைக்கும்
வர்க்கம் அனுபவித்துவரும் நிர்ப்பந்திக்கப்பட்ட உழைப்பாகவோ, அயர்ச்சியூட்டுவதாகவோ,
இழிவான நிலையிலோ இருக்காது.
முதியவர்கள்,
உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள்
ஆகியோரைப் பராமரிக்கும் பொறுப்பை சமூகமே ஏற்றுக்கொள்ளும். ஏதோ ஒரு புழக்கடையில்
மரணித்துக் கிடப்போமோ, யாரையோ சார்ந்து பிச்சையெடுத்து
வாழ்ந்து அனாதையாக மரணித்துவிடுவோமோ என்ற கவலைகள் இருக்காது. தாங்கள் படுத்த
படுக்கையாகி விட்டால் குடும்பம் அனாதையாகி விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ள
வேண்டியிருக்காது. ஏனென்றால் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக, அறிவாளிகளாக, நல்ல குடிமகன்களாக உருவாகத் தேவையான
பயனுள்ள அறிவைக் கொடுத்து சமூகத்தால் நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்படுவார்கள்.
அத்தகைய நிலைமையை வேண்டுவோரும், அதற்காகப் போராடுபவர்களுமே சோஷலிஸ்டுகள்
ஆவர்.
ந.கா. க்ரூப்ஸ்கயா,
உழைக்கும் மகளிர்
Jul 25, 2021
மார்க்சியம் என்ன சர்வரோக நிவாரணியா?
தோழர் மார்க்சியம் என்ன சர்வரோக நிவாரணியா? அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒற்றைத் தீர்வு இருக்க முடியுமா?
யார் அப்படி சொன்னா? நாங்க சொன்னோமா?
மார்க்சியம் என்ன சொல்லுது “சகல ரோகத்துக்கும்” ஒரு அடித்தளம் இருக்கு. அதுக்கு ஒரே
ஒரு காரணம் தான் இருக்கு! அதுதான் தனியுடமை. உழைக்காமல் செல்வம் சேர்க்குற பேராசை புடிச்ச
கும்பல் மக்களை படிநிலைப்படுத்தி, ஒடுக்கி, அடக்கி பலவிதமா பிரிச்சு வச்சு கடுமையான
உழைப்புல ஈடுபடுத்தி உழைப்பைச் சுரண்டி வாழுறதுதான் எல்லா விதமான ஏற்றத்தாழ்வுக்கும்,
ஒதுக்கலுக்கும், ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், பாசிசத்திற்கும், போருக்கும்
இன்னும் இதர அநியாயங்களுக்கும் காரணமா இருக்குன்னு சொல்லுது! இதை புரிஞ்சுக்குறதுக்கோ,
ஏத்துக்குறதுக்கோ ஒன்னும் இழப்பில்லையே. ஏத்துக்க முடியாம போறதுக்கு சில காரணங்கள்
இருக்கு! அதுல முக்கியமானது வர்க்க நலன்! அதுக்கு ஏத்த பிழைப்புவாத அரசியல்! அம்புட்டுதேன்.
இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது.
இங்க சாதி இருக்கு! கம்யூனிஸ்டுகள் இந்த மண்ணுக்கு ஏத்த மாதிரி மார்க்சியத்தை மாத்தனும்!
இருங்க அவசரப்படாதீங்க! இந்தியாவுல
சாதி இருக்கு! ஆமாம்! அது ரொம்ப கொடுமைகளை செய்யுது! ஆமாம்! சாதியை ஒழிக்கனும் – ஆமாம்!
இந்தியாவுக்கு ஏத்த மாதிரி மார்க்சியத்தை மாத்தனும் – ஆங் அதுதான் இல்ல! இங்க தான்
பிரச்சினை ஆரம்பிக்குது!
மார்க்சியம் என்பது தட்டையான,
திடமான தத்துவமே இல்ல. அது இயக்கவியல் பொருள்முதல்வாதம்,
வரலாற்று பொருள்முதல்வாதம் என்னும் சிறந்த கண்ணோட்டங்களை, ஆய்வுமுறையை கொண்டது. எளிமையா
சொல்லனும்னா எந்த ஒரு பொருளுக்குள்ளையும் முட்டலும், மோதலும், முரண்பாடும், ஆற்றலும்
இருக்கும் அதன் இயக்கப் போக்குல தன்மைகள் முட்டி மோதி ஒண்ணு இன்னொண்ணை மறுத்து அது
வேற ஒண்ணா மாறும். இயற்கைப் பொருள் மாதிரி மனுச சமூக வாழ்வும், வாழ்க்கைக்கான ஏற்பாடுகளும்
இப்படியே மாறி மாறி கடைசில சமூக இயக்கம் ஒரு சமநிலையை எட்டும் போது முரண்பாடுகளற்ற
ஒரு நிலையை எட்டினால் அப்ப அதுக்கேத்த நிலைமைகள் நீடிச்சு நிக்கும் என்பதுதான் மார்க்சியத்தின்
சாராம்சம். (விரிவாக படித்து புரிந்துகொள்ள வேண்டும்).
மார்க்ஸ் (மார்க்சியம்) சமூக
இயக்கத்தை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம்னு ரொம்ப அழகா பிரிச்சு கொடுத்திருக்காப்ல.
நாம பார்க்குற மதம், அரசு, அரசியல், பண்பாடு, சட்டம், நீதி இதெல்லாம் மேற்கட்டுமானம்.
மனுசப்பய வாழ்க்கைக்கு கூட்டா சேர்ந்து பொருள் தயாரிச்சு வாழும் போது உருவாகுற ஏற்பாடுலருந்து
(உற்பத்தி முறை) உருவாகுற மனுசப்பய உறவுகள் (உற்பத்தி உறவுகள்) தான் மேல எது எப்படி
இருக்கும்னு தீர்மானிக்குதுன்னு சூப்பரா படம் போட்டு காட்டிருக்காரு. அவர் நேரடியா
இந்த முடிவுக்கு வரலங்கோ! அவருக்கு முன்னாடி இருந்த அத்தனை தத்துவங்களையும், பொருளாதார
அமைப்புகளையும், வரலாரையும் ஏங்கல்ஸோட சேந்து ஆய்வு பண்ணி தான் உண்மையை கண்டுபுடிச்சாரு.
ஒரு கூட்டம் உழைக்காம சொத்து சேர்க்குது எப்படி தெரியுமா? அதுக்கு அந்த கூட்டம் என்னல்லாம்
செய்து தெரியுமான்னு கிளிப்பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லிவச்சிருக்காங்க மார்க்ஸும்
எங்கல்ஸும்.
இது ஒரு சிறந்த விஞ்ஞானபூர்வ
உலக கண்ணோட்டம். ஆய்வுக் கருவி. இதை வச்சுக்கிட்டு இந்திய சமூகத்தை ஆய்வு பண்ணனும்.
ஆமாம் ஆய்வு பன்ணனும். ஆய்வு பண்றது வேற. மார்க்சிய அடிப்படையவே காலி பண்ணி அடிக்கட்டுமானம்
மேற்கட்டுமானதம்னெல்லாம் ஒண்ணுமே இல்ல. அது அப்போ சொன்னது! அது ஐரோப்பிய உற்பத்தி முறைய
மாதிரியா வச்சு பேசுனாங்க.. இங்க பொருந்தாது! இந்திய கம்யூனிஸ்டுங்க சாதி மேற்கட்டுமானம்னு
தப்பு தப்பா பேசிட்டாங்க . அது அடிக்கட்டுமானம் தான்.. இல்ல இல்ல அது ஒரு தனி மையம்..
இப்படில்லாம் திரிக்குற வேலையத்தான் “உண்மையான” மார்க்சிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்.
அப்படிப்பட்ட உண்மையான மார்க்சியர்கள்
யாரும் சாதி மேற்கட்டுமானம்னும் சொல்லல. வர்க்கப்
போராட்டம் மட்டும் தான் தொடுக்கனும். அப்ப சாதி தானா ஒழிஞ்சுடும்னும் சொல்லல. சும்மா
எதையாச்சும் உளறிக் கொட்டக் கூடாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு இயக்கம் கட்டி போராடனும்.
ஆனா அது வர்க்கப் போராட்டப் பாதைல இனைஞ்சு இருக்கனும்னு மட்டும் தான் சொல்றாங்க.
மார்க்சியத்தை முன் வைத்து (தற்காத்து)
வாதிடுபவர்கள் என்ன சொல்றோம்: எந்த ஒரு சமூகத்துல இருக்குற ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்குறதுக்கு
தேவைப்படுற சமூக பகுப்பாய்வ மார்க்சியத்தைப் பயன்படுத்தி சிறப்பா திறனாய்வு செய்ய முடியும்.
அப்படின்னா என்ன? இந்தியாவுல என்ன மாதிரி உற்பத்தி முறை இருக்கு. அது நாடு முழுக்க
ஒரே மாதிரி இருக்கா? எங்கெங்க என்ன மாதிரி உற்பத்தி நிலவுது. ஒவ்வொரு பகுதிலையும் என்ன
மாதிரி உற்பத்தி உறவுகள் இருக்குன்னு (உ.ம் முதலாளி தொழிலாளி, ஆண்-பெண் உறவு, சாதிய
உறவுகள், பாலின, திறன் சார்ந்த உறவுகள், மத ரீதியான உறவுகள், ஆண்டான் அடிமை உறவுகள்,
நிறவாத, இனவாத உறவுகள்) ஆய்வு பண்ணுங்க. ஒவ்வொரு பகுதியா.. ஒவ்வொரு குழுவா கூட ஆய்வு
பண்ணுங்க. யார் கிட்ட உற்பத்தி சாதனங்கள் உடைமையா இருக்கு. அது எந்த சாதிகிட்ட பெரும்பான்மையா
இருக்கு (எந்த மதம், பாலினம், இனம், மொழி, இத்யாதி) இப்படியெல்லாம்
ஆய்வு பண்ணா நமக்கு ஒரு “டேட்டா” கிடைக்கும். அந்த தரவுகள வச்சு பொது எதிரி யாரு..
தனித் தனியான எதிரி யாரு, எந்தெந்த வடிவத்துல, மாறு வேஷத்துல அந்த பயலுவ இருக்காகன்னு
மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க!
ஒவ்வொரு ஏற்றத்தாழ்வையும் ஒழிக்க
வேலைத்திட்டத்தை முன் வச்சு, மக்கள அரசியபடுத்தி,
அணிதிரட்டுங்க, உழைக்கும் மக்கள் / ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டி புரட்சி பண்ணி
அதிகாரத்தை கைபத்தி சமத்துவமான ஒரு உற்பத்தி முறையை நிறுவி… அதுகூடவே தொடர்ந்து வர
எல்லாவிதமான ஏற்றத்தாழ்வு, பண்பாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து புரட்சிகர அரசியல் மூலமா
சரி பண்ணி இறுதியான சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டுங்கன்னு தான் சொல்லுது. இதுல என்ன
தப்பிருக்கு? இது எப்படி வன்முறையாகும்? இந்த நடைமுறைல ஆளும் வர்க்கம் வன்முறையை ஏவும்..
அப்ப தவிர்க்கவியலாத வகையில சூழலுக்கேத்த முடிவை எதிர் முகாம் (உரிமைக்காக, சமத்துவத்திற்காக
போராடும் மக்கள்) எடுக்க வேண்டியிருக்கும்.. அவ்ளோதான்! இதை ஒழுங்கா படிக்காம கண்டபடி
பேசிக்கிட்டு மார்க்சியத்தை தப்பு தப்பா திரிச்சு, கம்யூனிச வெறுப்பை ஏற்படுத்த பலவிதமான
குரூப்புகள் இருந்துச்சு, இப்பவும் இருக்கு. உலகெங்கிலும் அதுக்கெதிரான மார்க்சியப்
போராட்டமும் தொடர்ந்துட்டு தான் இருக்கு.இந்தியால, குறிப்பா தமிழ்நாட்ல மட்டும் தான்
இந்த மாதிரி ஆய்வைக் கண்டா பயப்படுறாங்க.. ஏன்னா பொழைப்பு போய்டுமே!
மேல சொன்ன மாதிரி இந்திய சமூகத்தை
மார்க்சிய நோக்குல ஆய்வு பண்ணி பல பேர் பலவிதமான ஆய்வுகள முன் வச்சிருக்காங்க.. சிலது
சரி, சிலது தவறு, சிலது பகுதியளவில் சரின்னு ஒரு நீண்ட வரலாறு இருக்கு. சிலரு மார்க்சியப்
போர்வைல மார்க்சியத்தையே திரிச்சு வேலை பார்த்திருக்காங்க.. கட்சிங்க காணாம போறதுக்கு
அதுவும் ஒரு காரணம். வேற சிலர் பெரியார், அம்பேத்கர், பின்நவீனத்தும், பெருங்கதையாடல்,
சிறுகதையாடல், ஊடறுக்கும் கோட்பாடு (இண்டர்செக்ஷனாலிட்டி தியரி), கீழைத்தேயம், மேலைத்தேயம்,
பின் அமைப்பியல், ஃபூக்கோ தெரிதா, அல்தூசர், ப்ளக்கனாவ், இன்னும் நிறைய பேரை முன் வச்சு
மார்க்சியத்துல ஒண்ணுமே இல்லன்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க.. நாம மாத்திக்கனும், விரைப்பு
தன்மையோட இருக்க கூடாது அப்படி இப்படின்னு நிறைய சால்ஜாப்பு பேச்சுகளை முன் வச்சு கடந்த
30 வருஷங்கள்ள மார்க்சியத்தை ஒழிச்சு கட்ற வேலைய (மறைமுகமாக கம்யூனிஸ்ட் இயக்கங்களையே)
சீரும் சிறப்புமா செஞ்சு முடிச்சுட்டாங்க.
எந்த மார்க்சியரும் விரைப்புத்
தன்மையோட இல்ல. நெகிழ்வுத் தன்மை என்பது மார்க்சிய அடிப்படையைவே விட்டுக் கொடுக்குறதுமில்ல.
Application is different from Revisionism, Distortion and adding ‘isms’ that is
dead against Proleterian class & its guiding light Marxism. மார்க்சியத்தை இந்திய
சூழலுக்கு, தமிழ் சூழலுக்கு பிரயோகித்தல் என்பது வேறு, மார்க்சியத்தையே திரித்து, உருவைக்
கெடுத்து, உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான, அதன் ஒளிவிளக்கான மார்க்சியத்தையே சிதைக்கும்
வகையில் பல்வேறு இசங்களை சேர்க்கச் சொல்லி மார்க்சியத்திற்கு சாவு மணி அடிப்பது வேறு.
எங்களைப் போன்ற மார்க்சியர்கள்
மார்க்சியத்தின் அடிப்படையை தகர்க்காமல் இந்திய சமூகத்தை, விடுதலை கருத்தியல் கோட்பாடுகளை,
அதை முன் வைத்த தலைவர்களை பகுப்பாய்வு செய்து நேர்மையான வரையறையை முன் வைத்து பொது
எதிரி யார் என்பதை வரையறுங்கள். அந்த பொது எதிரிக்கும் துணை நிற்கும் சக்திகள் யார்,
சீர்திருத்தவாதிகள் யார், ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சங்கள் என்ன, நிராகரிக்க வேண்டிய
அம்சங்கள் என்னவென்று கோட்பாட்டுருவாக்கம் செய்து, வேலைத்திட்டங்களை வகுத்து செயல்படுங்கள்
என்று தான் சொல்கிறோமே தவிர எந்த ஒரு தலைவரையும் இழிவுபடுத்துவதோ, அவதூறு செய்வதோ எங்கள்
வேலையல்ல.
சாதி ஒழிப்பு என்று வரும் போது
அதன் மாபெரும் சக்திகளாகத் திகழும் பெரியாருக்குரிய இடம் என்ன, அம்பேத்கர் அவர்களின்
இடம் என்னவென்பதை கம்யூனிஸ்டுகள் வரையறுப்பது அவசியம். ஏனென்றால் அவர்களிடம் போதாமை
உள்ளது. அவர்களை முன் வைத்து மார்க்சியத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் இல்லாமல்
ஆக்கத் துடிக்கும் சக்திகள் இங்கே நிறைய உள்ளன. உண்மையில் அது உழைக்கும் வர்க்க விடுதலைக்கும்,
சாதி ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும், பாசிச ஒழிப்பிற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்
என்பதால் தான் நாம் இடையீடு செய்ய வேண்டியுள்ளது.
இது காலம் காலமாக நடந்து வரும்
போராட்டம். 2015இல் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்கு புத்தர் போதாது! அம்பேத்கரும்
போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூலின் விளைவாக அந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது.
இயக்கவியல் வரலாற்றுப் போக்கில் அது தவிர்க்கவியலாதது.
இதை பலமுறை பல வழிகளில் விளக்கியாகிவிட்டது.
ஆனால் பிழைப்புவாதிகள் சிலரின் அவதூறுகளால் பலர் அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டு கொந்தளிக்கும்
சூழல் நிலவுகிறது. இதுவும் அப்படித்தான் இருக்கும். அதற்குரிய எதிர்வினைகளும் முரன்பாடுகளின்
இருப்பிலிருந்து மேலெழும்..
இங்க என்னதான்யா நடக்குதுன்னு
குழப்பமா இருக்கா… அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்க.. நம்மாளு, நம்ம தலைவர், நம்ம அமைப்பு,
நம்ம தோழர்ங்குற சார்பையெல்லாம் விட்டுட்டு மார்க்சியம் படிக்கவும். பிரச்சினை புரியும்
- நன்றி, கொற்றவை, 26.7.2021
Jun 18, 2021
மார்க்சியவாதிகளை எதிர்த்து வெளியான கட்டுரைகளுக்கு லெனின் பதில்
“மக்களின் நண்பர்கள்”
எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் சமூக-ஜனநாயகவதிகளை எதிர்த்துப் போரிடுவது எப்படி? – வி.இ.
லெனின்
(”ரூஸ்கயே பகாத்ஸ்த்வோவில்”1
மார்க்சியவாதிகளை எதிர்த்து வெளியான கட்டுரைகளுக்குப் பதில்) என்னும் புத்தகத்திலிருந்து
இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கது
என்னவென்றால், நமது அகவயத் தத்துவஞானியானவர் வெறும் சொற்றொடர்களிலிருந்து ஸ்தூலமான
விவரங்களுக்கு வருவதற்கு முயற்சி செய்த உடனேயே ஒரு குளறுபடியில் சிக்கிக் கொண்டார்
என்பதேயாகும்.2 மேலும் அவ்வளவு
சுத்தமில்லாத இந்த நிலையில் இந்த இடத்தில் தான் மிகவும் சுகமாக இருப்பதாக அவர் நினைப்பது
வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் தமது இறக்கைகளைக் கோதி அழகுபடுத்திக் கொண்டு, தன்னைச்
சுற்றிலும் சேற்றை வாரியடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். உதாரணமாக, வரலாறு என்பது வர்க்கப் போராட்ட நிகழ்ச்சிகளின்
தொடர்வரிசையே என்ற கருத்துரையை மறுப்பதற்கு அவர் விரும்புகிறார். எனவே மிகவும் ஆழமான
ஒரு தோரணையோடு இது “தீவிரமானது” என்று அறிவிக்கிறார். “மார்க்சினால் ஆரம்பிக்கப்பட்ட, வர்க்கப் போராட்ட
நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கம்3 பிரெஞ்சு, ஜெர்மன்
தொழிலாளர்கள் ஒருவரையொருவர் கழுத்தை வெட்டுவதையும்
கொள்ளையடிப்பதையு தடுக்கவில்லை” என்று கூறிய பிறகு பொருள்முதல்வாதம் “தேசிய அகந்தை,
தேசியப் பகைமை என்ற பேயோடு” கணக்குத் தீர்க்க முடியவில்லை என்பதை இது நிரூபிக்கிறது
என்று வற்புறுத்துகிறார். ஆனால் வர்த்தக, தொழில்
பூர்ஷுவாக்களின் மிகவும் உண்மையான நலன்களே இந்தப் பகைமைக்கு முக்கியமான அடிப்படை; தேசிய
உணர்ச்சி ஒரு சுதந்திரமான காரணி என்பது போலப் பேசுவது பிரச்சினையின் சாராம்சத்தை மறைப்பதற்கு
மட்டுமே உதவும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த விமர்சகர் முற்றிலும் தவறி விட்டார்
என்பதையே இந்த வற்புறுத்தல் வெளிப்படுத்துகிறது. ஆனால் தேசிய இனத்தைப் பற்றி நமது தத்துவஞானியார்
எவ்வளவு ஆழமான புலைமை கொண்டிருக்கிறார் என்பதை நாம் முன்னரே பார்த்து விட்டோம்.
அகிலத்தைப் பற்றிக்
குறிப்பிடும் போது ஒரு புரேனினுடைய கிண்டல் இல்லாமல் திரு. மிகய்லோவ்ஸ்கியால் குறிப்பிட
முடியாது “சர்வதேசத் தொழிலாளர் சங்கத்துக்கு மார்க்ஸ் தலைவராக இருந்தாலும் அது சின்னா
பின்னமடைந்து விட்டதும் உண்மையே; ஆனால் இப்பொழுது
அதற்குப் புத்துயிர் கொடுக்கப் போகிறார்கள்” என்று எழுதுகிறார். ரூஸ்கேயே பகாத்ஸ்த்வோவின் இரண்டாவது இதழில் வழக்கமாக
உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி எழுதி வரும் கட்டுரையாளர் சர்வதேச ஒருமைப்பாட்டின்
nec plus ultraவை* ஒரு “நியாயமான” பரிவர்த்தனை என்ற அமைப்பாகக் கண்டு பிலிஸ்தினிய அற்பத்
தனத்தோடு விளக்கம் கொடுத்திருக்கிறார்; பரிவர்த்தனை என்பது – நியாயமானதோ அல்லது அநியாயமானதோ
– பூர்ஷுவாக்களின் ஆட்சியை முன்னூகிப்பதோடு அதை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
பரிவர்த்தனையை அடிப்படையாகக்
கொண்ட பொருளாதார அமைப்பு ஒழிக்கப்பட்டாலொழிய சர்வதேச மோதல்களைத் தடுக்க முடியாது என்பதைப்
புரிந்து கொள்ள முடியாவிட்டால், அகிலத்தைப் பற்றி ஏளனம் செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே.
தேசிய பகைமையை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு
ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுபடுத்தி, ஸ்தாபன ரீதியாக
திரட்டி பிறகு அத்தகைய தேசிய அளவிலுள்ள தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களைச் சர்வதேச மூலதனத்தை
எதிர்த்துப் போராடக் கூடிய சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் தனியொரு படையாக ஒன்றுபடுத்துவதைத்
தவிர வேறு வழியில்லை என்ற சாதாரண உண்மையை திரு. மிகய்ஸோவ்ஸ்கியின் மூளை வாங்கிக் கொள்ள
முடியவில்லை என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடிகிறது.
தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர்
தம்முடைய கழுத்துகளை வெட்டிக் கொள்வதை அகிலம் தடுக்கவில்லை என்ற கூற்றைப் பொருத்தவரை,
திரு. மிகய்லோவ்ஸ்கியிடம் கம்யூன் நிகழ்ச்சிகளை4 – யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்
ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின்
உண்மையான நிலையை அவை எடுத்துக் காட்டுகின்றன – நினைவுபடுத்துவதே போதுமானதாகும்.
திரு. மிகய்லோவ்ஸ்கி
நடத்துகின்ற விவாதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் அருவருப்பைத் தருவது அவர் பயன்படுத்துகின்ற
முறைகளேயாம். அகிலம் பின்பற்றுகின்ற செயல்தந்திரத்தில்
அவருக்கு அதிருப்தி ஏற்பட்டால், எந்த லட்சியங்களின் பெயரால் ஐரோப்பியத் தொழிலாளர்கள்
ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படுகின்றார்களோ, அவற்றில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றால்,
அவர் குறைந்தபட்சம் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் அவற்றை விமர்சிக்க வேண்டும்; சரியான
கருத்துகள் எவை, இன்னும் திறமையான போர்த்தந்திரம் எது என்பதைப் பற்றிய தம்முடைய கருத்தை
விளக்க வேண்டும். அவர் தெளிவான, திட்டவட்டமான
ஆட்சேபங்களைச் சொல்வது இல்லை; அதற்குப் பதிலாக,
சொற்கூளங்களுக்கு நடுவே இங்குமங்கும் அறிவில்லாத ஏளனச் சொற்கள் சிதறிக் கிடப்பதை மட்டுமே
பார்க்கிறோம். இதைக் குப்பை கூளம் என்று கூறுவதைத் தவிர – அதிலும் ருஷ்யாவில் அகிலத்தின்
கருத்துகளையும் போர்த்தந்திரங்களையும் ஆதரிப்பது சட்ட பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை
என்ற நிலையில் – வேறு என்ன சொல்ல முடியும்?
-
வி.இ.
லெனின். பக். 13-15, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் (நூல் திரட்டு தொகுதி 1, பக்.
154-156)
1894 வசந்த காலம் –
கோடை கால்த்தில் எழுதப்பட்டது
Jun 9, 2021
அம்பேதர் என்ன ஒரு கூட்டத்தின் தனிச் சொத்தா
அம்பேத்கர் எழுதியதை மேற்கோள்களாக, போஸ்டர்களாக பயன்படுத்திக்கொள்ளக் கூட அவரை தொழுபவருக்கு மட்டுமே உரிமை உண்டு அப்படியிருக்கையில் அவரது சிந்தனைகளை திறனாய்வு செய்வதா! அது மகா பாவம்! அல்ல அல்ல சாதி வெறி! இதுதான் அம்பேத்கரியவாதிகளின் எழுதா விதி.
அம்பேத்கர் எழுதியதில் புரட்சிகரமாக, சாதகமாக உள்ள எழுத்துகள்
மட்டுமே இதுவரை எடுத்தாளப்பட்ட நிலையில் அவரது எழுத்துகள் வாயிலாக அவரது மதப்
பார்வை மற்றும் பொருளாதாரப் பார்வை எத்தகையது என்பதை ரங்கநாயகம்மா திறனாய்வு
செய்தார். வழக்கம் போல் அதை சாதிய அவதூறுகளாலும், வசைகளாலும்,
மிரட்டல்களாலும் (வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்
கொடுக்க வேண்டும் என்று அப்போதே ஒருவர் எழுதினார் ). அதனைத் தொடர்ந்து “சாதியப்
பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலை நான் தொகுத்தேன்,
மொழிபெயர்த்தேன். என்னுடைய பதிலுரைகளையும் இணைத்தேன்). ஆனால்
அந்நூலை பற்றி அம்பேத்கரியர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை!
ஏனெனில் அதன் தலைப்பில் “அம்பேத்கர்” இல்லை.
அடுத்ததாக, ரங்கநாயகம்மா மறுப்பு நூல் வந்ததாக சொல்லப்பட்டது.
வழக்கம் போல் சுயசாதி பற்றிலிருந்தும், அரசியலில்
பிழைத்திருக்க வேண்டியும் ரங்கநாயகம்மாவின் சொற்களை திரித்து! அல்லது அவர்
இதைத்தான் சொல்ல வருகிறார்! இப்படித்தான் பொருள் கொடுக்கிறார் என்று தங்கள்
வசதிக்கேற்ப, தங்கள் “வட்டத்தினரை” ஆசுவாசப்படுத்த முயலும்
ஒரு நூல் அது!
இதற்கிடையே அம்பேத்கரை கடவுளாக மாற்றி சாதி
ஒழிப்பிற்கு அம்பேத்கரிடமே தீர்வுள்ளது என்று அடையாள அரசியல் செய்யும் போக்கிற்கு
(இதன் பிரதான நோக்கம் மார்க்சியத்தை ஒழிப்பது, கம்யூனிஸ்டு அரசியலை ஒழிப்பது) - எதிராக
அம்பேத்கரது புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலை வசுமித்ர எழுதினான். அதை
அறிவித்தவுடன் ஒரு கூட்டம் தன் சதி வேலைகளைத் தொடங்கியது. மார்க்சியம் என்றால்
என்னவென்றே அறியாத “புலி எதிர்ப்பு போராளி” ஒருவர் களம் இறங்கினார்.
ரங்கநாயகம்மாவின் அறிவை மட்டமாக பேசியதற்கு எதிர்வினையாக வசுமித்ர ஒரு கேள்வியை
வைத்தான்! அதை திரித்து இன்று இந்த நொடிவரை வசுமித்ர அம்பேத்கரை அவதூறாக பேசிவிட்டான்
என்று ஒரு கூட்டம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது வசுமித்ர அதற்கு விளக்கமளிக்கிறான்.
அம்பேத்கரின் எழுத்துகளை இப்படி புரிந்து
கொள்ளக் கூடாது, அப்படிப்
புரிந்துகொள்ளக் கூடாது! இடையிலிருந்து பேசாதீர்கள், முழுவதுமாக
படியுங்கள், அந்நூலை அம்பேத்கர் எழுதவே இல்லை, அதை தொகுத்தார்! அது அவருடைய மேற்கோள்! அரசியல் சாசனத்தை அம்பேத்கர்
எழுதினார்! அவர் எழுதவில்லை! இப்படி வகை வகையாக அம்பேத்கரின் “தவறான” சில வரலாற்று
மற்றும் அரசியல் ரீதியான எழுத்துகளுக்கு விளக்கம் கொடுத்தனர்!
இப்போது நாம் விளக்கம் கொடுத்தால் ஒரே ஒரு பதில்
தான் வரும் – சாதி வெறி!
யாருக்கு சாதி வெறி என்பதை இனியும் நாங்கள்
விளக்க வேண்டியதில்லை!
ஆனால், மேற்சொன்ன சமாளிப்புவாதங்களை நாம் எல்லா மத
நூல்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கத் தொடங்கினால்
அது எத்தகைய அறிவார்ந்த சூழ்நிலையை இங்கு ஏற்படுத்தும்?
கம்யூனிசத்தைப் பன்றித் தத்துவம் என்றார், மார்க்ஸியம் பற்றி எதிர்மறையாக
பேசினார்! தாழ்த்தப்பட்டவர்கள் கம்யூனிசத்தை நாடினால் நாடே அதோகதிதான் என்பார்!
ஏன்? ஏனென்றால் அன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பை
கண்டுகொள்ளவில்லை! அவர்கள் மேல் இருந்த கோவத்தில் அப்படி பேசினார் என்று மீண்டும்
சமாளிப்புவாதம்! அப்படியெனில் மார்க்ஸையும், மார்க்சியத்தையும்
ஏன் அவர் மறுக்க வேண்டும்? அது வன்முறைய்ப் பாதை என்று ஏன்
முடிவுக்கு வரவேண்டும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் உள்ளிட்டோர் தெளிவாக விளக்கியுள்ளனர்.
அனைவரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்பதில்லை! ஆனால் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கையில், குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின்
அரசியலை மடைமாற்றம் செய்கையில், உழைக்கும் வர்க்கத்தின்
ஒற்றுமையை குலைக்க அதை முன்னெடுக்கையில் அதற்கு காரணமாக அமையும் அரசியல்
சித்தாந்தத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உள்ளது.
ஆதாரம் எங்கே ஆதாரம் என்கிறார்களே அம்பேத்கர்
மார்க்ஸை விமர்சிக்க எதை ஆதாரமாக கொடுத்துள்ளார்?
எல்லாவற்றுக்கும் மேலாக பொருள்முதல்வாத விஞ்ஞான
சித்தாந்தத்தை கருத்துமுதல்வாத (கால் பொருள்முதல்வாத??) சித்தாந்தத்தோடு ஒப்பிட்டு
மார்க்சியம் உதவாது பௌத்தமே தீர்வு என்று போதித்து சென்றார். இதை நாம் திறனாய்வு
செய்யக் கூடாதா?
அம்பேத்கரது எழுத்துகள் என்ன ஒரு கூட்டத்தின் /
சாதியின் தனிச்சொத்தா?
அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞர் என்னும்
அடிப்படையிலும் மார்க்சியர்கள் அவரை விமர்சிக்கலாம்! விமர்சிப்போம்!
சாதியத் தலைவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸா
புத்தரா என்றோ, மார்க்சியமா
பௌத்தமா என்றோ ஆய்வுகள் செய்யவில்லை. சாதி ஒழிப்பிற்கு தீர்வு தம்மிடம் உள்ளது
என்றும் சொல்லவில்லை! எனவே நாங்கள் அத்தகைய சாதியத் தலைவர்கள் குறித்து பேசவோ,
ஆய்வு செய்யவோ ஒன்றுமே இல்லை! இதுகூட தெரியாத அறிவிலிகள் ஏதோ
அறிவுபூர்வமாக கேள்வி எழுப்புவதாக நினைத்துக் கொண்டு “அவரை விமர்சிச்சியா, இவரை விமர்சிச்சியா?” என்று
உளறிக்கொண்டிருக்கின்றனர்!
அவர்களது உளறல்களும் வசைகளும் அம்பேத்கருக்கே
இழுக்கு சேர்க்கிறது! எங்களது ஆய்வுகள் அல்ல!
வசுமித்ரவின் விளக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்
// ஆண்குறி என்பது ஆபாசமான
வார்த்தையல்ல. அது ஆணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ஒரு சொல். அவ்வளவே.
ஆண்குறிக்கான வசைச் சொற்கள் என்னவென்று தெரியாதவர்கள் அல்ல நாம். விசயத்திற்கு
வருகிறேன்.//
// அம்பேத்கரின் பௌத்தப் புரிதலை
முன்வைத்தே அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன். அந்தக் கேள்விக்கான அடிப்படை
அவசியமும் இருக்கிறது.
அம்பேத்கரது பௌத்தமானது புத்தரின் ஆண்குறி
உள்ளிட்ட அங்க இலட்சணங்களை எப்படிப் பதிவு செய்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாகப்
பார்க்கலாம். அதற்கு முன்னதாக சிவனின் ஆண்குறி குறித்து அம்பேத்கரின்
வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்.
//
https://www.facebook.com/makalneya/posts/5980320278652594
Jun 4, 2021
நான் ஒரு பகவானைப் படைக்கிறேன்.
நான் ஒரு பகவானைப் (இறைத் தூதரை / புனிதாத்மாவை
/ புரட்சியாளரை) படைக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் (மத நூல்கள்)
அடிப்படையில் நானே எழுதுகிறேன் (தொகுக்கிறேன்).
என்ன நோக்கமாக இருக்க முடியும்? - அவர் இப்படியெல்லாம்
வாழ்ந்தார்… இந்தந்த கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனவே நான் அவரை என் விடிவெள்ளியாக
கருதுகிறேன். அவரின் போதனைகளை விடுதலைத் தத்துவமாக, புரட்சிகர
சிந்தனையாக முன் வைக்கிறேன். ’என்’ மக்களின் விடுதலைக்கான
பாதையாக அதை வழிமொழிகிறேன் என்பது தானே நோக்கமாக இருக்க முடியும்?
நிற்க!
இப்படி நான் தொகுக்கையில் அந்த பகவான் ஏன்
துறவறம் எய்தினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது வாய்ப்பில்லை (முற்போக்கானதாக
இல்லை) என்று எனக்கு தோன்ற நான் அக்காரணங்களை மாற்றி எழுதி புரட்சிகரமாக
மாற்றுகிறேன்!
பின்னர் ஓரிடத்தில் அந்த புனிதாத்மாவின்
ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்த பண்பு நலன்களை எழுதுகிறேன். அப்போது, ” தன் மகன் துறவறம் சென்றால்
இராஜ்ஜியத்தை யார் ஆள்வது என்னும் கவலையில் அவரை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான
பெண்களை அந்தப்புரத்தில் “இறக்கி” அந்த ‘ஆண்’ மகனை மயக்கி ‘சிற்றின்பத்தில்’
ஆழ்துமாறு பணித்தார்” என்று எழுதி… அந்த பெண்களும் மிகுந்த ஈடுபாட்டோட்டு அதனை
செய்தனர்…
ஆண்டுக்கணக்கில் இந்த ‘வசிய’ வேட்டை நடந்தது
என்று எழுதுகிறேன் (சாரி தொகுக்கிறேன்). எழுதி விட்டு இறுதியில் குலகுருவோ அல்லது
யாரோ வந்து கேட்கிறார்கள் “பெண்களை நாடுதல் இயற்கையானது தானே என்கிறார். .அதற்கு
அந்த புனிதாத்மா " தாங்கள் பெண்களை நேயத்துடன் அணுக வேண்டும் என்பீர்களாயின் , பண்பான நேயம் பற்றி
நானறிவேன்" என்று பதிலடி கொடுத்தார் என்று எழுதி “ஆஹா எப்படிப்பட்ட பண்பாளன்’
இவனல்லவோ ஒழுக்கவாதி! பாருங்கள் இவன் பெண்களை எப்படி மதிக்கிறான் என்றெல்லாம்
புகழ்ந்துரைத்து அவரை வரலாற்று நாயகனாக முன்னிறுத்துகிறேன் என்று வைத்துக்
கொள்ளுங்கள்.
இப்போது மற்ற மத நூல்களில் உள்ள ஆணாதிக்க
நரித்தனங்களை கட்டுடைக்கும் ஒருவர் எனது புனிதாத்மா குறித்து ஆய்வு செய்கிறார்.
அப்போது மேற்சொன்ன வர்ண்ணனைகளைப் படித்து விட்டு அவருக்கு ஒரு கேள்வி எழுகிறது
“ஏதேதோ துயரங்களை, அநீதிகளைக்
கண்டு பொறுக்க முடியாமல் துறவறம் மேற்கொண்ட அந்த புனிதாத்மா அடிமைப் பெண்களை
இப்படி பாலியல் பண்டமாக ஏவியது குறித்து ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை?”
சரி அதை “தொகுத்த” எம் தலைவி! ஏன் அதை அந்த கதாப்பாத்திரம் வழியாக
போதிக்கவில்லை?
ஆண்டுக்கணக்கில் வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருந்துவிட்டு அமைச்சர் வந்து கேட்கையில் “எனக்கு பண்புடன் நேசிக்கத்
தெரியும்” என்கிறாரே? அதற்கும்
மேல அந்த பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? இளமை
போய்விட்டால் பெண்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதாக வருந்தினார் என்றும்
எழுதினால் எப்படி இருக்கும்?
உண்மையில் அந்த புனிதாத்மா சமத்துவவாதியாக
இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணியவாதி / மார்க்சியவாதி
எதிர்பார்ப்பார்? குறைந்தபட்சம்
அந்நூலை கட்டுடைப்பார்.
ஆணைப் புனிதவானாக காட்டுவதற்காக பெண்களை பாலியல்
பண்டமாக்கி நடமாட விட்டு, அவர்களின்
முயற்சி தோல்வி அடைந்தது.. ஏனென்றால் என்னுடய ‘நாயகன்’ ஒழுக்கவான். மனதைக்
கட்டுப்படுத்த தெரிந்தவன் என்று நிறுவும் ஆணாதிக்க மனம் என்று திறனாய்வு செய்யக்
கூடாதா?
கண்டிப்பாக முற்போக்கு மனங்கள் இதை வரவேற்கும்.
ஆஹா என்னவொரு ஆய்வு என்று மெய்சிலிர்க்கும்… அத்தகைய விமர்சனத்தை வைப்பது யார்
என்பதைப் பொறுத்து! விமர்சிக்கப்படுபவர் யார் என்பதைப் பொறுத்தும்! ![]()
சுயசாதி பற்றுடன் தம் தலைவரை அனுகுபவர்களுக்கு
தம் தலைவர் இப்படி தூய்மைவாதப் பார்வையோடு தம் புனிதாத்மாவைப் படைத்திருக்கிறாரே…
அதற்குள் இப்படி ஒரு “மதவாத”,
“பார்ப்பனியத்திற்கு நிகரான புனிதவாத”, “ஆணாதிக்க”
மனம் செயல்பட்டிருக்கிறதா என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாகத் தான் இருக்கும்… என்ன
செய்வது!
கூடுதலாக பெண்கள் அப்படி உலவ விடப்படுவது
குறித்த வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்சியம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.
தாய்வழிச் சமூகம் உடையத் தொடங்கும் காலம், இனக் குழுக்கள் மெல்ல அழியும் காலம். ஆணாதிக்கம்
மேலோங்கும் காலம், அரசு உருவாகும் காலம், பார்ப்பனிய ஒழுக்கவாத, மதவாத குலகுருக்கள் உள்
நுழைதல், மன்னருக்கு அவர்கள் “முக்கியமானவர்களாக” மாறுதல்,
அதிகாரம் செலுத்துதல் என்று எவ்வளவோ விசயங்களை நாம் ஒரு தொன்ம
நூலில் / புனிதாத்மாக்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து திறனாய்வு செய்ய முடியும்.
அதற்கு மார்க்சியம் வழிகாட்டும்!
இல்லையெனில் மார்க்சியக் கண்ணோட்டத்தில்
செய்யப்படும் ஆய்வுகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். சுயசாதி பற்றும், ரசிக மனோபாவமும், பரிதாப உணர்வும் அதை தடுக்குமே ஆனால் அது அறிவு மறுப்புவாதம். மதம்
அப்படித்தான் நகர்த்தும். முற்போக்கு சாயம் பூசப்பட்ட மதமானாலும் அது
கருத்துமுதல்வாதமே. அதனை முன்மொழியும் ‘தலைவர் / தலைவி’களின் எழுத்துகளில்
(தொகுப்புகளில்) உள்ள கோளாறும் அதுவே.
மதத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளார்ந்த கேடு
என்ன என்பதை அறியவும் மார்க்சியம் வழிகாட்டும். எல்லா மதங்களும் ஏதோ ஒரு நாட்டில்
வன்முறையையும், அழித்தொழிப்பும்
மேற்கொள்கிறது என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.
இந்த அடிப்படையில் தான் உழைக்கும் வர்க்கத்தின்
ஒரு பகுதியான ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு விடுதலை தத்துவம் என்று
போதிக்கப்படும் தொகுப்பு எழுத்துகளும் விமர்சிக்கப்படுகின்றன. எழுதியவரும்
விமர்சிக்கப்படுகிறார்!
அவரை விமர்சிச்சீங்களா இவரை விமர்சிச்சீங்களாங்குற
கேள்விக்கு 5 வருஷமா
பதில் சொல்லியாச்சு... போய் அதையாச்சும் படிங்க!





