தளவாடங்கள் அறிவதில்லை
அறியப்போவதேயில்லை
கனவுகளின் வெப்பத்தை
துளைக்கும் பணியை அவை மிக நேர்த்தியாகவே செய்கின்றன
படைப்பின் பொருட்டு விலங்கிடப்பட்ட பிராணிகள்
கால்களை இழுத்தபடி
அழுகிய புண்களைச் சுவைத்தபடி
சாத்தான்களை அடையாளம் காட்டத் துவங்கிவிட்டது
உடல்களிலிருந்து
கிழிந்து தொங்குகிறது அர்த்தங்கள்
காலம் ஆணாயிருக்கிறது
எச்சரிக்கையாயிருக்கிறது
அதுவே
கற்பிதமாயும் இருக்கிறது
பிடுங்கி எறியப்பட்ட மாதுளையை
அதெனா* கையில் எடுக்கிறாள்
அர்த்தங்கள் எரியூட்டப்பட்டன
வழியும் உதிரச் சொட்டுக்களை
நட்டுவைக்கிறாள்
இவ்வுலகெங்கும் வேர்விட
ஆம்...
எரியப்படும் கற்களுக்காக
ஆவலாய் காத்திருக்க வேண்டியதிருக்கிறது
தோன்றுவது சிற்றலைகளே..
சிற்றலைகள் எங்கும் உடைவதில்லை
சுழன்று கொண்டே தெளியும்
கற்களை
மிக சமாதானமாய்
ஆறுதலாய்
அது விரும்பாதவண்ணம்
உள்ளிழுத்துக்கொண்டு....
அதுவோர்
பெயரற்ற சமாதி.
*அதெனா கிரேக்க பெண் தெய்வம்.
கொற்றவை,
ReplyDeleteம்ம்ஹூம். இந்த மரமண்டைக்கு சத்தியமாய் இந்தக் கவிதை புரியவில்லை. என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ? இது எதைப் பற்றி ?
பெண்ணியப் பார்வையில் பெண்ணின் ஆளுமையை பேசுகிறது. நன்றி. மாதுளை என்பது குறியீடு.. நன்றி.
ReplyDelete