Jul 24, 2012

தமிழ் இதழ்களிடம் ஓர் வேண்டுகோள் – ஆபாசப் படங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்



மதிப்பிற்குறிய ஆசியர் அவர்களுக்கு,
உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்து, பல சவால்களுக்கிடையில் செய்திகளை, தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கு முதலில் உங்களுக்கு நாங்கள் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகை கருதப்படுகிறது. ”வாள் முனையை விட பேனா முனைக் கூர்மையானது” என்றொரு சொல்லாடலை ஆங்கில ஆசிரியர் எட்வர் புல்வர்-லைட்டன் என்பவர் உருவாக்கினார். நாங்களும் அதை நம்புகிறோம்.
அத்தனை அற்புதமானக் கூர்வாளைக் கொண்டு நீங்கள் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் பத்திரிக்கைகளில், இதழ்களில் ஆபாசப் படங்களை வெளியிடுகிறீர்கள் என்று காணும்போது வேதனை அடைகிறோம். உங்களின் இந்த பொறுப்பின்மையைக் கண்டு வெட்கப்படுகிறோம். ஒரு புறம் பெண்களுக்கெதிராக அரசு, தரகர்கள், அதிகார வர்க்கத்தினர், ஆண்கள் செய்யும் வன்கொடுமைகளைப் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள். மறுபுறம், நடிகைகள், பெண்களின் உடல் பாகங்களை (பாலியல் உணர்வைத் தூண்டும் வகையான) அதாவது கவர்ச்சி, ஆபாசம் என்று சொல்லக்கூடிய படங்களையும் செய்திகளையும் வெளியிடுகிறீர்கள். உங்களின் இந்தச் செயலை “சதை வியாபாரம்” என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் வெளியிடும் இந்த ஆபாசப் படங்களால் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்பெறுவதாகாவும், அது பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைகளுக்கு வித்திடுவதாகவும் நாங்கள் கருதுகிறோம். அக்குற்றங்களுக்கு மறைமுகக் காரணிகளாக உங்களை, உங்கள் பத்திரிகையை, இதழைப் பொறுப்பாளராக்குகிறோம். இப்படி தூண்டப்பெறும் ஆண்கள் பெரும்பாலும் குழந்தைகளை, பதின்பருவ வயதினரை அதிகமாகச் சுரண்டுகின்றனர்.
மிஸ் எனும் இதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது “பாலியல் பண்டமயமாக்கப்படும் கலாச்சாரத்தில், பெண்கள் (குறிப்பாக) தங்களைத் தாங்களே மற்றவர்களுக்கான நுகர்வுப் பொருளாக காணும் நிலைக்கு உள்ளாகிறார்கள்.  இந்த பாலியல் பண்டமய  அகவயப்படுத்துதல் பல்வேறு மன நலச் சிக்கலோடு தொடர்பு படுத்தப்படுகிறது. (மருத்துவரீதியான மன அழுத்தம், “உடலை கண்காணித்துக் கொண்டே இருக்கும் பழக்கம்”), உணவு உண்ணும் கோளாறு, உடல் பற்றிய வெட்கம், சுய-மதிப்பு மற்றும் வாழ்வு நிறைவு மீதான கேள்விகள், மனநிலை செயல்பாடுகள், இயக்கு தசை செயல்பாடுகளில் சிக்கல், பாலியல் பிறழ்ச்சி, அரசியலில் தலைமையை அனுகுதலில் பின்னடைவு மற்றும் அரசியல் பலாபலன் அடைவதில் சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகிறது.  எல்லா இனப்பிரிவு பெண்களிடமும் இந்த பண்டமய அகவயப்படுத்துதலானது ஆணை விட அதிகமாகப் பாதிக்கிறது.” *
பெண்களைப் பாலியல் பண்டமாகச் சித்தரிப்பதற்கும், பெண்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை பரப்பவதற்கும் உங்கள் வெளியீடுகள் ஒரு காரணமாக இருக்கிறது  என்று உங்கள் மீது நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவை பெண்களுக்குப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கிறது. நீங்கள் பெண்களைப் பாலியல் வேட்கைக்கான ஒரு பொருளாக சித்தரிக்கிறீர்கள், பெண்களின் மனிதத்தன்மையை அகற்றுகிறீர்கள்.
இம்மனு மூலம் மாசெஸ் அமைப்பும் இதில் கையெழுத்திடுவோரும் பெண்களின் உடலுக்குரிய மரியாதையைக் கோருகிறோம். நடிகைகள், பெண்களின் ஆபாச / கவர்ச்சி / உடல் பாகங்களை வெளியிடும் பொறுப்பற்ற உங்கள் செயலை நீங்கள் திரும்பப் பெறவேண்டும், நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழியைக் கோருகிறோம்.
குறிப்பிட்ட அளவு கையொப்பம் கிட்டியவுடன் இதழ்கள் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதில், பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று மாசஸ் அமைப்பு இந்திய அரசாங்கம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், பெண்கள் தேசியக் கூட்டனி, இந்திய பிரஸ் கவுன்சில், மகளிர் அமைப்புகள், குழுக்கள் மற்றும் இதர மனித உரிமை அமைப்புகளிடமும் அழுத்தம் கொடுக்கச் சொல்லி முறையிடும்.
ஊடகங்களில் பெண்களின் உடல்களைப் பாலியல் ரீதியாக சுரண்டுவதை பெண்களுக்கெதிரான பாலியல் பாகுபாடு என்று கருதப்பட வேண்டும். அதை தடுக்கவில்லையென்றால் இந்திய அரசாங்கம் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை அழிப்பதற்கான செயற்குழுவில் (CEDAW) கையெழுத்திட்டதின் மூலம் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதாகும்.
ஜூலை 1993 மாநாட்டில் பெண்களுக்கெதிரான எல்லாவிதமான பாகுபாடுகளையும் நீக்கிவிடுவதாக இந்திய அரசு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கால இடைவெளியில் (4 வருடம்) UN CEDAW செயற்குவுக்கு (சுதந்திரமான வல்லுனர்கள்) நாட்டில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று அறிக்கை அளிக்க வேண்டும்.
கையொப்பம் இட:


தொடர்புடைய சுட்டி: * http://msmagazine.com/blog/blog/2012/07/06/sexual-objectification-part-2-the-harm/


To read the petition in english: http://masessaynotosexism.wordpress.com/2012/07/24/appeal-to-tamil-magazines-stop-publishing-porn-sexy-pictures/

5 comments:

  1. நீங்கள் சொல்வது சர்தான் ! பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுக்கும் பெண்களுக்கு என்ன தெரியும் ? பாவம் அவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் ! எடுப்பார் கைப்பிள்ளைகள் ! பொம்மைகள் ! சொன்னபடி ஆடும் இயந்திரங்கள் ! அப்படிப்பட்ட அப்பாவிப் பெண்களைப் படம் பிடித்துப் போடுகிறான்களே அவன்களை முதலில் விளாச வேண்டும் ! என்ன ஒரு ஆணாதிக்கம் !

    பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக்குவது என்பது வடிகட்டிய அநியாயம் தான் ! வக்கிரம் பிடித்த ஆண்களின் மனதில் காமத்தை மூண்டு எழச்செய்து காசு பார்க்கவே இந்தப் பத்திரிக்கைகள் ஈனத்தனமாக பெண்களை அரை குறை ஆடைகளோடு படம் பிடித்துப் போடுகின்றன. ஒரு புத்தகத்தின் அட்டையில் அரை குறை ஆடை என்று இல்லாமல், வெறும் முகத்தை மட்டும் காட்டிக் கொண்டு ஒரு பெண் வெறுமனே புன்னகைத்தாலே ஒருவனுக்குக் காமம் வருகிறது என்றால் அந்தப் படமும், அதே பெண் அரைகுறையாக இருக்கும் படமும் கிட்டத்தட்ட ஒன்று தான். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டின் நோக்கமும் தூண்டுதலும் ஒன்று தான் எனும்போது, இரண்டையுமே தடை செய்ய வேண்டும் ! ஆம் !

    இனி எந்தப் பத்திரிக்கைகளிலும் தப்பித்தவறி எந்தப் பெண்ணும் இடம் பெறக்கூடாது ! சினிமாக்களில் பெண்களே இருக்கக் கூடாது ! இருபாலர் கல்லூரிகள் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகட்டும் ! பெண்களைப் பார்ப்பவனின் கண்கள் நோண்டப்படட்டும் ! பெண்ணோடு பேசுபவனைத் தூக்கிலிடுவோம் ! வேண்டுமானால், மொத்த உலகத்தையே இரண்டாகப் பிரித்து ஒரு கோடு போட்டு அந்தப் பக்கம் ஆண்கள், இந்தப் பக்கம் பெண்கள் என்று வகுத்துக் கொள்வோம் ! அந்தக் கோட்டைத் தாண்டி அவர்களும் வரக்கூடாது, இவர்களும் போகக்கூடாது ! பெண்கள் பெண்களுடனே இருக்கட்டும் ஆண்கள் ஆண்களுடனே இருக்கட்டும் ! ஆம் ! அது தான் சரி ! அந்த உன்னத நிலை நோக்கி நாம் போராடுவோம் ! தற்போதிருக்கும் ஆண் பெண் அமைப்பே பெண்களை அடிமைப்படுத்த ஆண்கள் பிரயோகிக்கும் சூழ்ச்சி எனும்போது அந்த அமைப்பிற்குத் தீ வைப்போம் ! இனி ஆண்களின் உலகத்தில் பெண்களும், பெண்களின் உலகத்தில் ஆண்களும் இருக்கவே கூடாது கூடாது கூடாது டாது டாது டாது !!!

    ReplyDelete
  2. உங்கள் உள ஆசைகளை எனது சொற்களாக பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  3. அரசு நடவடிக்கை என்பது உங்கள் கோரிக்கை என்றால் அரசிடமே மனுத்தரலாம் அல்லது பொது நல வழக்கு தொடரலாம்.பத்திரிகைகளுக்கு எதிராக Press Council of Indiaவிற்கு புகார் தரலாம்.அதையெல்லாம் விடுத்து இப்படி ஒரு அர்த்தமற்ற மனு,அதற்கு ஆதரவு வேறு கோருகிறீர்கள்.எது ஆபாசம் என்று விளக்கம் கேட்டால் என்ன சொல்வீர்கள்.
    THE INDECENT REPRESENTATION OF WOMEN (PROHIBITION) ACT, 1986
    http://wcd.nic.in/irwp.htm
    இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் கூட உங்கள் மனுவில் குறிப்பிடவில்லையே.இப்படி ஒரு சட்டம் இருப்பது தெரியாதா.அல்லது அந்தச் சட்டமே ஒரு மோசடி, பலனற்றது என்றாவது எழுதுங்கள்.
    இந்திய அரசு CEDAW வை ஏற்று அதன் படி உரியனவற்றை செய்யாவிடில் அரசை எதிர்த்து எழுதுங்கள், அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.விசாகா வழக்கு போல் தீர்ப்பு கிடைக்குமா என்று பார்க்கலாம்.
    எதையும் யோசிக்காமல் இப்படி ஒரு மனு,கையெழுத்து இயக்கம் நடத்தி ஒன்றும் ஆகப் போவதில்லை

    ReplyDelete
  4. //TTHE INDECENT REPRESENTATION OF WOMEN (PROHIBITION) ACT, 1986// - இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று தெரிந்தும் அத்தொழில் தயக்கமின்றி நடக்கிறதே ...அப்பொழுது யாரிடம் பேசவேண்டும் அரசிடமும், நீதித் துறையிடம் மட்டுமா.... என்ன தோழரே.....நன்றி

    ReplyDelete
  5. அரசு நிறுவனங்களை அணுகும் முயற்சிகளை நான் எடுக்கவில்லை என்பதை எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்...என் அமைப்பு தளத்தைப் பாருங்கள். கையெழுத்து வீழ்ந்திருக்கும் எண்ணிக்கையிலேயே தெரியவில்லையா எவர் எவரின் பங்கு இதில் இருக்கிறதென்று... இதுவும் ஒருவகை ஆய்வு தோழரே

    ReplyDelete