மாசெஸ் அமைப்பு இமாமி முகப்பூச்சு விளம்பரத்தில் பெண்கள் இழிவு படுத்தப்படுவதைக் கண்டிக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒளிபரப்பப்படும் விளம்பரம் ஒன்றில் - ஒரு பயிலாவன் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுவதை எள்ளல் செய்கிறது. அங்கு அவதாரமாக தோன்றும் சூர்யா / கான் அந்த பயில்வானை நோக்கி "ஐய்யோ இன்று பெண்களுக்கான க்ரீம், பிறகு நெயில் பாலிஷ், பின்னர் லிப்ஸ்டிக்கா" என்று கர்ஜிக்கவும், பயில்வான் தன்னை ஒரு பெண்ணின் உடையோடு கற்பனை செய்து பார்ப்பார். உடனே சூர்யா கையெடுத்துக் கும்பிட்டு "Fair & Handsome cream for men" உபயோகிங்க என்று ஆணையிடுவார். அதை உபயோகித்து வெள்ளையாகிவிடும் "ஆண்மை" நிறைந்த அந்த பயில்வானைச் சுற்றி தாவணி கட்டியப் பெண்கள் "ஹாய் ஹேண்ட்ஸ்ம், ஹாய் ஹேண்டஸ்ம்" என்று ஆடி பாடியபடி அவரை உரசிக்கொண்டு அவரது 'ஆண்மையை' போற்றுவர்.
இந்த விளம்பரத்தில் நாம் கவனிக்க வேண்டியது மீசை. ஆண்மைக்கு அடையாளமாக சில மயிர்களை உயர்த்திப்பிடிக்கும் ஆணாதிக்கம், அந்த பயில்வானுக்கும், இந்தியில் ஷாருக்கானுக்கும் அதை செயற்கையாக ஒட்டி...அவர்களது ஆண்மையை எடுத்துரைக்கிறது. சூர்யாவின் மீசை 'சிங்கம்' மீசை.
ஆணுக்கு பெண்ணைக் கவர்வதை விட்டால் வேறு வேலையே இல்லையா. கருமை நிறம் அத்தனை அவமானகரமானதா? பெண்மை என்பதும் ஆணாதிக்க கருத்தாக்கமே, அதை அவர்களே உருவாக்கி, அவர்களே எள்ளலும் செய்கின்றனர். பெண்கள் எப்பொழுதும் வெள்ளை நிறத்தோலையும், அழகான, வாளிப்பான ஆண்களைத் தான் விரும்புவர் என்பது பெண்களை இழிவு படுத்தும் ஒரு பிரச்சாரம். ஆண்மை பற்றிய 'கட்டளைகள்' ஆண்களுக்கும் மன அழுத்தம் கொடுப்பவை. பெண்ணால் நிராகரிக்கப்படுவது அவமானகரமானது என்று அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது அது.
அந்த பிரச்சாரத்தில் பெண்களுக்கான முகப்பூச்சை பயன்படுத்துவது அவமானகரமானது என்பது போல் கர்ஜிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அத்தோடு முகப்பூச்சு விளம்பரங்கள் அனைத்தும் நிறவெறி, இனவெறி, பாலினப் பாகுபாடு நிறைந்தவை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் இழிவுபடுத்தப்படுவதற்கும் ஆண்மை, பெண்மைக் கருத்தாக்களே காரணம். இருமைவாதத்திற்குள்ளேயே விளம்பரங்களும், திரைப்படங்களும் தங்கள் கதைகளை உருவாக்குகின்றன. இது முற்றிலும் இயற்கைக்கு விரோதமானது. இருக்கும் தோற்றத்தை நிராகரித்து அழகூட்டிக்கொள்ளச் சொல்லும் அணைத்து பண்டங்களும் இயற்கைக்கு விரோதமானவையே.
ஆணாதிக்க முதலாளித்துவ பண்டங்கள் பெரும்பாலும் பாலினவாதத்தை, பிரிவினைவாதத்தை, இயற்கை நிராகரிப்பை முன் வைக்கும் விளம்பரங்கள் மூலமே சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்போக்கை இனியும் ஊக்குவிக்கக்கூடாது.
சமத்துவ சமுதாயத்தில், பெண் விடுதலையில் அக்கறையுடையோர் இவ்விளம்பரத்திற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்விளம்பரத்தை இமாமி நிறுவனம் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்த்தை அணுகவும் மாசெஸ் அமைப்பு தயங்காது. அந்நிறுவனம் இவ்வெதிர்ப்பை பொருட்படுத்த நிறையே பேரின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆதரவு தெரிவியுங்கள் தோழர்களே.
கையெழுத்திட - https://www.change.org/petitions/ask-emami-group-to-stop-telecasting-gender-discriminating-advertisement-fair-and-handsome-cream-for-men-bailwan-advertisement-should-be-withdrawn
மாசெஸ் அமைப்பில் இணைய தொடர்பு கொள்க - kotravaiwrites@gmail.com
முகப்புத்தக பக்கம்: http://www.facebook.com/pages/MASES-Movement-Against-Sexual-Exploitation-and-Sexism/280244415362023
m.a.s.e.s blog - http://masessaynotosexism.wordpress.com/
i support this petition i have already signed it also. i also appeal to kotravai, kavitha and other women involved in this petition to also drop adding men's names ( father's or husband's) behind their names. gender discrimination cannot be fought without gender equality and gender equality means preserving ones own identity and not subjecting it to husband's or father's even in signing ones name.
ReplyDeletethanks Gnani.. I do agree with ur views. The same question was posted to me by a women writer also...but on the change.org page I have added vasu's name next to me to convey that we jointly act (more like a joint venture!!) but most of these sites do not allow us to put a hyphen u see..(first name / last name issue & this was the only smart way I could think of !!). other wise I have to put it as Nirmala Kotravai or Kotravai Kotravai...etc & in public forum I am called by such display names only... & Vasumithra again is a genderless name... he has chosen ’வசுமித்ர’ & not வசுமித்ரா or வசுமித்ரன்...hope I have made it clear as far as my signature name in that petition forum is concerned..
ReplyDeleteI look forward to take M.A.S.E.S in a more responsible way & working with you too on this cause...thanks.
There is a lot to be done Nirmala. I am happy you have undertaken this mighty task which is very much a need of this hour, gender discrimination multiplying in various medias taking new forms and shapes. We have miles to go for "it is the road not taken".
ReplyDeletebest
Monikhaa
thanks Monikhaa
ReplyDeleteI support
ReplyDeletethanks Muruganandan
ReplyDeleteDear Kottavai,
ReplyDeleteI agree with what you said..But All the girls prefer,and love very fair, physique and attractive males. other factors of male does not being considered by girls any where..(Mostly never considered)(Such as politeness gentleness education job etc)..Whether you accept or not what I mentioned is absolutely true...If you see around the girls at your vicinity you can easily prove it....
Bharth
Thanks Barthipan, but women also learn from this society only right...they are being influenced by the propagation of such advertisements more. Moreover the concept of beauty has also been taught to them right... do you mean to say a man is ready to fall for a dark skin women...may be People from villages, lower economic strata would not mind...but what about the rich, educated guys..don't we see that in movies also, only fair skin women gets chance in such glamour world right... so it is not about man does it or women does it... it is marketed by some body else, & we have to take on them..
ReplyDeleteகொற்றவையின் இந்த விமர்சனம் எங்களைப் போன்ற மசுருக்கு மதிப்புகொடுக்கும் அறிவிலிகளின் உச்சி மண்டையில் நறுக்கென்று கொட்டியது போல் இருக்கிறது.இமாமி மட்டுமல்ல இன்றைக்கு வெளிவரக்கூடிய பெரும்பாலான விளம்பரங்களும் சக பாலினத்தை கேவலப்படுத்தவே செய்கின்றன.
ReplyDeleteஅவற்றிற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தை உங்களைப் போன்றவர்கள் திரட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். அம்மாதிரியான போராட்டத்திற்கு நிச்சயம் என்னுடைய பங்களிப்பு இருக்கும். வாழ்த்துகள்.
சகா
நன்றி சகா....
ReplyDeleteDear Kottavai..
ReplyDeleteWhat you argued is correct. But in this peak of globalization period this task will be unbelievably difficult. I do not think that men and women will easily give this mentality..sorry I don't discourage. further more As a male I have reluctance to say feminist talks. Because that may be counterfeit. But actually I am pro feminist. In this period all men and women may be affected. The total power has gone to some elitist gruops.
Regards,
Barth
I would like to fight against what is considered to be unbelievably difficult. I don't get discouraged by any such comments. If you would like to identify as 'male' well and good, but I don't find myself fitting in to 'female' so rigidly. As a follower of Marxist thoughts I have always been writing about the 'power', the economic structure that that is behind all these...and I don't want to just keep watching saying that it is not in our hands... i will see to it atleast some part of it is in my hands.. thanks....
ReplyDeletehttp://www.penniyam.com/2011/11/blog-post_16.html?showComment=1331974391723#c4035408225236602090 என்ற இணைப்பில் வந்த கட்டுரைக்கு என்னுடை பதில்....
ReplyDeleteஇஸ்லாமிய மார்க்கத்தின் மேல் உள்ள கோழைத்தனமான வெறியின் காரணமாகவே இக்கட்டுரை முதுகெலும்பற்ற கட்டுரையாளரால் வரையப்பட்டது என்பதை தெளிவாக உணரக்கூடியதாகவுள்ளது..
நாத்திகம் எனும் மடமையில் மூழ்கியுள்ள உங்களைப் போன்ற எழுத்தாளர்களாலும் இதுபோன்ற மடமையை நம்பி எழுதிப்பிழைக்கும் இணையத்தளங்களாலும் என்றைக்குமே இஸ்லாத்திற்கு எதிராக ஒரு முடியையும் பிடுங்கிவிட முடியாது... இப்படித்தான் கோழிமுட்டைக்குள் இருந்து கொண்டு இல்லாதது பொல்லாததை எழுதி தங்களுக்குத் தாங்களே திருப்திப்பட்டுக்கொள்வதோடு.... உலகிலேயே தோன்றிய இருக்கின்ற வரப்போகின்ற அனைத்த மார்க்கங்களிலும் பெண்களுக்கு 100க்கு 100வீதம் கண்ணியத்தையும் உரிமையையும் வழங்கி அவர்களை பேணுகின்ற ஒரேயொரு மார்க்கம் இ்லாமிய மார்க்கம என்பது இக்கட்டுரை வரைந்த உங்களுக்கும் சரி இதையொரு கட்டுரையென்று வக்காளத்து வாங்கி பிரசுரித்த இணையமும் சரி நன்றி நன்றாக புரிந்த ஒன்று...
உண்மையாகவே தூங்குபவனை எழுப்பிவிடலாம்.. ஆனால் தூங்குபவன் போன்று நடிப்பவனை எழுப்ப முடியாது.. நீங்கள் எல்லாம் 2 வது தரப்பு...
உண்மை எதுவென்று உங்களது மனச்சாட்சிக்கு நன்கு தெரிந்தும் தெரியாதது போல் வரட்டு கௌரவத்திற்காகவும் வீண் புகழுக்காகவும் பேராசைக்காகவும் நடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்..
உங்களைப் போன்றவர்கள் பற்றி ஏற்கனவே புனித குர்ஆன் எச்சரித்துவிட்டது... அதாவது وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ ۚ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;' ஆகவேஇ விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இ இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். 18:29 என்பதாகும்..
நீ பெண்ணுக்காக எழுதுகிறாய் என்பதற்காக எதையும் எழுதிவட்டால் அதெல்லாம் உண்மையாகிவிடாது.. இஸ்லாமியன் என்ற பெயரைக்கொண்டு சில விலங்குகள் பெண்களுக்கெதிராக செய்யும் கெடுதிகளை வைத்து இஸ்லாமிய மாரக்கத்தை கீழத்தரமாக நினைக்கும் நீ ஒரு எழுத்தாளனும் இல்லை கட்டுரையாளனுமில்லை... நீ நரகத்தில் விழும்போது நீ ஆதரித்த, உன்னைப் புகழ்ந்த, உனக்கு வாக்காளத்து வாங்கிய எந்த நாயும் உன்னைக் காப்பாற்ற வராது.. என்டைக்கு நீ திருந்தி உண்மையை உணர்ந்து இறைவனின் பக்கம் மீளுகின்றாயோ அன்டைக்கு உன்னை வரவேற்கும் சத்திய மாரக்கம் இஸ்லாம்..
நீ பெண் பெண் என்று இஸ்லாத்திற்கு கேடு விளைவிப்பதாக நினைத்துக்கொண்டு நீயே உன் தலையில் மண்ணைப் போடுகின்றாய்.. ஆனால் இன்றைய உலகில் அனைவரும் வியப்போடும் ஆச்சரியத்தோடும் காண்பது உலகில் இஸ்லாமிய மார்க்கம் தவிர்ந்த எந்த ஒரு மார்க்கத்திலும் மக்கள் சத்தியத்தை நம்பி உண்மையை ஏற்று நுழைவது மிக மிக சொற்பமே... ஆனால் இன்று உலகளாவிய ரீதியில் ஆண்களை விட பெண்கள் இஸ்லாத்தை நாளாந்தம் பல ஆயிரக்கணக்கானவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.. அவர்களே மார்க்கத்தை படித்து மற்றவர்களையும் அழைத்துக்கொண்டிருக்கி்ன்றார்கள்.. இது உனக்கும் நன்றாக தெரியும்...
பெண்களுக்கெதிரான மார்க்கம் இஸ்லாம் என்றால் அதை விட்டு விலகுபவர்கள் அதிகம் இருக்க வேண்டும். மாறாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள் உண்மையை உணர்ந்தவர்களாக... ஆனால் உன்னைப் போன்ற வடிகட்டிய முட்டாள்களுக்கு அது தெரிந்தும் நடிக்கத்தான் இயலுமெ தவிர வேறு எந்த பிரயோசனத்தையும் அடைய முடியாது.....
கௌரி மகாலிங்கமான நான் இன்று இஸ்லாத்தோடு இணைந்து சத்தியத்தில் வாழ்நது வரும் எனக்கு இன்று உன்னுடைய பித்தலாட்டமான கட்டுரையை வாசிக்க கிடைத்தது.. அதற்கு என்னுடைய பதிலை சொல்ல வேண்டுமென்ற காரணத்தால் தான் இந்த பதில்..
தொடர்புகளுக்கு
கௌரி மகாலிங்கம் (ஜெஸ்லியா மகாலிங்கம்) - மட்டக்களப்பு, இலங்கை
gowrymahaal@gmail.com
கௌரி மகாலிங்கம் அவர்களே,
Deleteஇவ்வளவு கடுமையான வார்த்தைகள் தேவையா ? நிச்சயம், அந்தக் கட்டுரை எந்த ஒரு மதத்தையும் தாக்கும் நோக்கில் எழுதப் படவில்லை.
Dear friends,
ReplyDeleteWhether any one accept or not in practically Islam is typical anti feminist and fascist religion...Kowry Mahalinkam's words she used here, have clearly inferred this attitudes. In Islam all Islamic bloody fools will argue that Islam have given all rights to women..But in practical it does not give nothing...Islam does not agree with policy alternatives and genuine rights and human being of people. In such a way at present situation Islam is not against for women it is against for human.Islam is always against Marxism, democracy and civilization in practical..I do not worry about the words given in Kuran..Because according to the Kuran No any mulisms men are working. I wish to ask viewers to refer some articles that was written in VINAVU website which clearly indicates the anti human behavior and attitude of ISLAM and ISLAMIC nations...But I do not support USA in this issue...But any Islamic nations would never have right to say against USA.... Please Korravi do not publish these very brutal and bloody comments of such fellows. We respect the right to disagree but we must destroy THALIBANISM.These comments make me very in tolerance to forum..
Bharthipan
Barthipan, thanks for reading and continuously interacting. Not only ISLAM any religion for that matter is against humanism...Marxism etc.,
ReplyDeleteGowry had poured her anger in the spur of the moment...after I interacted with her through facebook, she expressed that & asked to 'ignore' those comments...
To my knowledge, she is a victim affected by the war crimes in Srilanka, somewhere ISLAM has given her emancipation...she she 'loves' it & has faith in it... that's ok..
Religion is a institution which brain washes the minds of People...all religion does that...
let us not pour hatred words on anybody...which will only result in fights between individuals than system...