Sep 2, 2014

சாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா, ஆங்கிலம் வழி தமிழில் - கொற்றவை


‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல்   ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரைகள் எதையும் எழுதவில்லைதான்;  இருப்பினும், தனது எழுத்துக்களில்இந்தியாவில் உள்ள சாதியமைப்பு குறித்தும்மற்ற நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார் மார்க்ஸ்மார்க்ஸின் அவதானிப்புகளை உதவியாகக் கொண்டு சாதிக் கருத்தியல்களையும்அந்தப் பிரச்சனைக்குறியத் தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

உலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோதெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோமனிதர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.  இந்தியாவில் உள்ள அத்தகைய  எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம்ஆனால் இந்தியாவுக்கல்லஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது. மேலும், அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.

மார்க்ஸின் கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் இரண்டுவிதமான பார்வைகள் இவையேஎவ்வாறாயினும்இந்த இரண்டு பார்வைகளும் முற்றிலும் தவறானவைமார்க்ஸின் கோட்பாடு ‘உற்பத்தி உறவுகள்’* (உழைப்புசார் உறவுகள்) பற்றி பேசுவதால்அது மானுட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்ஒவ்வொரு உறவுக்கும் பொருந்தும் வகையில் அது உள்ளது. 

எந்தவொரு நாடும் அல்லது சமூகமும்எந்த ஒரு காலகட்டத்திலும், உழைப்புசார் உறவுகளின்’ அடிப்படையிலேயே வாழ்கிறதுஒரு சமூகத்தின் இயல்பும் அதன் உற்பத்தி உறவின் அடிப்படையிலேயே அமைகிறது.

அந்த உற்பத்தி உறவுகள் குறித்து மார்க்ஸ் பேசினார்.  நூற்றுக்கணக்கானஆயிரக்கணக்கான வருடங்கள்உற்பத்தி உறவு எனும் அரங்கில் நிகழ்ந்த ‘உழைப்புச் சுரண்டல்’ குறித்து அவர் பேசினார்உழைப்புச் சுரண்டலினால் விழையும் எண்ணற்ற பிரச்சனைகளைப் பற்றி மார்க்ஸ் விவாதித்தார்அந்தப் பிரச்சனைகளுக்கு  ஒரு தீர்வையும் அவர் வழங்கினார்இவ்வாறாக நமதுப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வது நம் பொறுப்பில்தான் இருக்கிறதுமுதலில்இந்தியாவில் உழைப்புச் சுரண்டல் நிலவுகிறதா என்பதை  நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்மேலும்சாதிப் பிரச்சனையானது உற்பத்தி உறவின் வட்டத்திற்குள் வருகிறதா என்பதையும் நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்சாதிக்கும்உழைப்பிற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சந்தேகத்திற்கிடமின்றி மார்க்ஸின் கோட்பாடு இந்தியாவுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.

மானுட சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் உற்பத்தி உறவுகளோடு பின்னிப் பிணைந்திருக்கிறதுசாதிப் பிரச்சனையும் மனிதர்களோடு தொடர்புடையதால்அது உற்பத்தி உறவுகள் பற்றி பேசும் கோடாட்டின் பரப்புக்குள்ளேயே வருகிறது.

இந்தியா உட்பட ‘உழைப்புச் சுரண்டல்’ மற்றும் வர்க்க வேறுபாடு உள்ள அனைத்து நாடுகளுக்கும் மார்க்ஸின் கோட்பாடு பொருந்தக் கூடியதாகும்ஏனென்றால் உழைப்புச் சுரண்டலை கண்டறிந்து விளக்கிய சிரியான ஒரே கோட்பாடு அதுவே.

மேலும்மனித உறவுகளை ஏன் பயன் மதிப்பின் கண்ணோட்டத்திலிருந்து நிறுவ வேண்டும்அந்தக் கண்ணோட்டம் இல்லையென்றால் என்னவிதமான பிரச்சனைகள் எழும் என்பதையும் இக்கோட்பாடு விளக்குகிறதுஇதனால்உழைப்புச் சுரண்டல் இல்லாத ஒரு எதிர்காலத்திலும் சமூகத்தை ஒழுங்கமைக்க இந்தக் கோட்பாடு ஒரு வழிகாட்டியாகப் பயன்படும்.

சாதியமைப்பு என்பது இந்தியாவுக்கேயுரிய குறிப்பான பிரச்சனையென்றாலும்உழைப்புக்கும் அதற்குமுள்ள தொடர்பை புரிந்து கொண்டால்மார்க்ஸின் கோட்பாடு அதற்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நாம் சாதிகளை அவதானித்தால் – மேலோட்டமாக இருந்தாலும் கூட – அவற்றுள் குறிப்பிட்ட சில  வேறுபாடுகளை உறுதியாகக் காணலாம்அதாவது சில சாதிகள் கீழானதுசில சாதிகள் உயர்வானதுஎந்த அடிப்படையில் நாம் இந்த ‘மேல்-கீழ்’ வேறுபாட்டைக் காண்கிறோம்பொதுவாக சொல்வதானால்நிலம்மூலதனம்பணம் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்டிருப்பவர்கள்ஆதிக்கம் கொண்டு சமூக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத்திலும் ஈடுபடுபவர்கள் ஆதிக்க சாதியினர் வாழ்வாதாரத் தேவைகளுக்குக் கூட சொத்தில்லாமல் இருப்பவர்கள் ‘கீழ்’ சாதியினர்அவர்கள் உழைப்பாளிகளாகவும்அடிமைகளாகவும் வாழ்பவர்கள்அவர்கள் ‘மேல்’ சாதியின் ஆதிக்கத்திற்கும் ஆட்சிக்கும் உள்ளாகிகொடிய வறுமையிலும்சமூகத் தாழ்மையிலும் உழல்பவர்கள்.

‘மேல்’ சாதியினரிடையே, எந்த உழைப்பிலும் ஈடுபடாத’ ஒரு வாழ்க்கை முறையை காண்கிறோம்.  அல்லது அப்படியே அவர்கள் உழைத்தாலும்அது மூளை உழைப்பாகவோ அல்லது தூய்மையுள்ள உழைப்பாகவுமே இருக்கும்.  மாறாக, தாழ்த்தப்பட்ட சாதி நிலை இதற்கு நேர் எதிரானது.  உழைக்காமல் வாழ்வதென்பது  ‘கீழ்’ சாதிகளுக்கு கற்பனைக்கப்பாற்பட்டதுஅவர்கள் செலுத்தும் உழைப்பானது இருப்பதிலேயே கீழ்நிலையிலான உடல் உழைப்பாகும்மொத்த சமூகத்தையும் சுத்தம் செய்வதற்குத் தேவையான எல்லாவிதமான அசுத்த உழைப்பும் இந்த சாதிகளின் பொறுப்பு.
 பொருளாதார விதிகளின்படிமூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும்உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்புமே நிலவுகிறதுஇது மதிப்பின் இயல்பான உருவாக்க விதியின் அடிப்படையிலானதுஒரு குறிப்பிட்ட தொழிலை கற்று கொள்வதற்குத் தேவைப்படும் மூலாதாரங்களைப் பொறுத்து உழைப்பின் வகைகளுக்கான மதிப்பு தீர்மானிக்கப்படுகிறதுஅதில் ஏதும் ‘தவறில்லை’.  மூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும்உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்பும் நிலவுவதால்மூளை உழைப்பில் ஈடுபடும் நபருக்கு அதிக ஊதியம் கிடைக்கிறதுஉடல் உழைப்பில் ஈடுபடுபவருக்குக் குறைவான ஊதியமும் கிடைக்கிறது.

சுரண்டலின் அடிப்படையில் இயங்கும் சமூகங்கள்வெவ்வேறு உழைப்புகளுக்கிடையில் இயல்பிலேயே இருக்கும் இடைவெளியை மேலும் பெரிதாக்குகிறதுஇவ்வாறாகஅத்தகைய சமூகங்களும் அதன் மரபுகளும் மூளை உழைப்பை அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொடுக்கின்றனமேலும்உடல் உழைப்பிற்கு அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் குறைவான மதிப்பையே கொடுக்கினறனசுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கள் உடல் உழைப்பை மிக ஆழமாகச் சுரண்டுகின்றனகுறிப்பாக அடித்தட்டு உடல் உழைப்பை மிகத் தீவிரமாகச் சுரண்டுகின்றனசுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கங்களில் ஒரு மருத்துவரையும் விவசாய உழைப்பாளிகளையும் எடுத்துக்கொண்டால்இருவரும் உழைப்பில் ஈடுபட்டாலும் வருவாய் மற்றும் அவர்களது வாழ்க்கை முறைகளுக்குமிடையே பெரும் வேறுபாட்டைக் காண முடியும்.

வெகு காலத்திற்கு முன்பிருந்தே இந்த அமைப்புமுறை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறதுஅதாவதுஒரு வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்றிநிலத்திற்கு வாடகைவட்டி மற்றும் மூலதனத்திற்கு இலாபம் ஆகியவற்றை சொத்துரிமையின் பெயரால் உழைக்காமலேயே உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து வந்தது.  இந்தச் சுரண்டல் உறவுகளில் இருந்து உருவான உழைப்புப் பிரிவினை எப்போதும் உழைக்கும் மக்களை ஒரே வகையான உழைப்பில் பிணைக்கிறது.  உடல் உழைப்பில் ஈடுபடும் ஒரு நபர் தன் வாழ்நாள் முழுதும் அதே வகையான உழைப்பில் உழன்று நலிவுறுகிறார்ஏதோவொரு வகையான மூளை உழைப்பில் ஈடுபடவோஅத்தகைய உழைப்பிற்கு தொடர்பான கல்வியைப் பெறவோஅல்லது அத்தகைய உழைப்புக்கு நிகரான கூலியைப் பெறுவதையோ அந்த நபர் எதிர்பார்க்கக் கூட முடியாதுமருத்துவர்கள்பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற மூளை உழைப்பாளிகள் எந்த வகையான உடல் உழைப்பிலும் ஈடுபடத் தேவையில்லை. அவர்களுடைய சொந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கூட அவர்கள் கொள்ளத் தேவையில்லை.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மக்கள் தொகையின் ஒரு குறிப்பிட்ட பிரிவு எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் வாழ்கிறதென்றால்அவர்களுக்கும் சேர்த்து மீதமுள்ள பிரிவினர் உழைக்கின்றனர் என்று பொருள்இந்தியா அல்லது எந்தவொரு நாட்டிலும் நடப்பது இதுவே. இந்தியாவில்,  ‘மேல்’ சாதியினர் மூளை உழைப்பிலிருந்து வெளியேறாமல்தூய்மைப்படுத்தும் (அசுத்த – மொ.ர்) உழைப்பைச் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர் என்பதே அந்தச் சுமைகளை ‘கீழ்’ சாதியினர் மீது சுமத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது.

இவையனைத்தும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையதுஒரு வர்க்கம் உழைக்காமல் மற்ற வர்க்கத்தின் உழைப்பால் வாழ்கிறதென்றால் அது உழைப்புப் பிரிவினை எனும் பிரச்சனையேகூடுதலாகஒரு நபர் ஒரே வகையான உழைப்போடு பிணைக்கப்படுகிறார் என்றால் அதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையேஉழைப்பு மற்றும் உழைப்புசார் உறவுகளின் தொடர்பில்லாமல் சாதிகள் தோன்றவில்லைதவறான சமூக உறவுகளினால் தோன்றிய பிரச்சனைகளுள் ஒரு பிரச்சனை சாதியப் பிரச்சனையாகும்உற்பத்தி உறவின் இயல்புஅதன் மதிப்பு விதிகள்உழைப்புப் பிரிவினை மற்றும் அதன் சொத்துரிமையோடு அது பின்னிப் பிணைந்திருக்கிறது.

இவ்வாறாக மார்க்சியம் பயன்படுத்தும் – பயன் மதிப்புபரிமாற்ற மதிப்புமூளை உழைப்புஉடல் உழைப்புஉழைப்பின் மதிப்புஉழைப்புச் சக்தியின் மதிப்புசொத்துரிமைஎஜமானர்தன்மைஅடிமை முறை மற்றும் இது போன்ற பல வகைப்பாடுகளினூடாகவே – போன்ற பொருளாதார கருத்துகளைக் கொண்டே  நாம் சாதியப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்

மார்க்ஸ் (எங்கல்சுடன்இணைந்து சாதி குறித்து முதல் முறையாக ஜெர்மன் சித்தாந்தம்”  (1845-6) எனும் நூலில் பேசியிருக்கிறார். மூலதனம்’ (1867) நூலில் ஆறு அல்லது ஏழு இடங்களில் சாதி குறித்து சில அவதானிப்புகளையும்விளக்கங்களையும் மார்க்ஸ் கொடுத்துள்ளார்மார்க்ஸின் கோட்பாடுகளை பெரும் விளக்கங்களோடு விவரித்த இந்த அவதானிப்புகளையும் ‘மூலதனத்தையும்’ கொண்டுசாதியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளவும்அதன் தீர்வை நாம் கணடறியவும் முடியும்.

மார்க்சின் கோட்பாட்டின்படிமானுட வரலாற்று பரிணாம வளர்ச்சிக்கு ஒரு பொருளாயத அடிப்படை இருக்க வேண்டும்அது சரியான பதிலென்றால்உற்பத்தி உறவிலிருந்து எழும் ஒன்றே அதற்கு காரணமாக இருக்க முடியும். இருப்பினும், கடந்த காலத்திலிருந்து வரலாற்று பரிணாமம் குறித்து தத்துவாதிகளைடையே ஒரு  கருத்துமுதல்வாதம் நிலவியதுகடவுளின் விருப்பத்திலிருந்து அல்லது கடவுளின் மறு அவதாரமான அரசர்கள் அல்லது மதத் தலைவர்கள்  அல்லது ஏதோவொரு அதிசக்தியினாலேயே மானுட வரலாறு பரிணமிக்கிறது என்ற கருத்தே அது.

ஒரு பிரச்சனையின் பொருளாயத அடிப்படையைக் காணத் தவறும் ஒன்று ‘கருத்து முதல்வாதமே’

வரலாற்று நடைமுறை குறித்த கருத்துக்களைப் பொதுவாக விமர்சித்த மார்க்ஸ் ஹெகலியருக்கு பிந்தைய கருத்துமுதல்வாத சிந்தனைகளை குறிப்பாக விமர்சித்தபடி ‘ஜெர்மன் சித்தாந்தத்தில்’ பின்வரும் அவதானிப்புகளை வைக்கிறார்:

இந்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினையைக் காணும்போதும், எகிப்தியர்கள் தங்களது ஆட்சியிலும்மதத்திலும் சாதிய-அமைப்பை நிறுவியதைக் காணும்போதும்வரலாற்றியலாளர்கள் சாதிய அமைப்பு எனும் அதிகாரமே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று கருதுகிறார்கள். (மாஸ்கோ பதிப்பு 176, பக். 63).

உழைப்புப் பிரிவினை சாதியத்தை உண்டாக்கியதா அல்லது சாதி உழைப்புப் பிரிவினையை உண்டாக்கியதா என்பதே கேள்விமார்க்சைப் பொறுத்தவரைஉழைப்புப் பிரிவினையே முதன்மையானதுபின்வந்த காலங்களில் அதுவே சாதித் தொழில்களாக மாறியதுசூழ்நிலை இப்படி இருக்கவரலாற்றியலாளர்கள் சாதியை முதன்மையானதாகக் கருதி அதுவே உழைப்புப் பிரிவினையை தோற்றுவித்ததாகக் கருதுகிறார்கள். அதனால்மார்க்ஸ் வரலாற்றியலாளர்களை விமர்சித்தார்.

சமுதாயத்தில், தொடக்கத்திலேயே சாதி எவ்வாறு தோன்றியிருக்க முடியும்அப்படி தோன்றியிருந்தால் அதற்கு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும்அப்படி இருந்தால்அந்தக் காரணமே அடிப்படை அம்சமாக இருக்க முடியும்.

மனிதர்கள் வாழ்வதற்குப் பல்வேறு வகையான உழைப்பு தேவைப்படுகிறதுஅவ்வாறு பல்வகைப்பட்ட உழைப்பு தோன்றிதொடரும்போதுஅதனுள் ஏதோவொரு பிரிவினை நேரும். ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை நாளடைவில் எவ்வாறு உருமாறியது’ எனும் கேள்வியை ஒரு புறம் வைத்தால்பல்வகைப்பட்ட உழைப்பின் இருப்பே அதன் ஆரம்ப அடிப்படையாக இருக்கும்.

சாதிகள் என்ன செய்கின்றன என்று நாம் அவதானித்தால்வெவ்வேறு சாதிகள் வெவ்வேறு வகை உழைப்பில் ஈடுபடுகிறது என்பதைக்  காணலாம்பண்டையக் காலம் தொடங்கிஇன்றையக் காலம் வரைசாதிக்கும் பல்வகைப்பட்ட உழைப்பிற்கும் தொடர்பு இருந்தே வந்திருக்கிறது.  தர்க்கரீதியாக சிந்தித்தால்பல்வகைப்பட்ட உழைப்பே உழைப்புப் பிரிவினையாகியது என்பதை உணரலாம்எனினும்எல்லா நாடுகளிலும்சமூகங்களிலும் பல்வகைப்பட்ட உழைப்பும்உழைப்புப் பிரிவினையும் நிலவுகிறதுஇந்தியாவில் மட்டும் உழைப்புப் பிரிவினை ஏன் சாதியாக உருமாறியது?

கணிசமான ஆய்வுகள் செய்தவர்கள் கூட இந்தக் கேள்விக்கு எந்த விடையையும் கொடுக்கவில்லை. சாதிகள் எங்கும் காணப்படவில்லைஅது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. என்பதைத் தவிர ஆய்வாளர்கள் வேறெதையும் சொல்ல இயலவில்லை.

இவ்வாறாகசாதியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நம்  முன் இருக்கும் பணிதீர்வை அறிந்து கொள்வதற்கு முன் நாம் ஒரு விஷயத்தை ஆய்ந்தரிய வேண்டும், உழைப்புப் பிரிவினை சாதிக்கு வழிவகுத்ததா இல்லை சாதி உழைப்பு பிரிவினையை உண்டாக்கியதா’இந்தப் அம்சத்தை ஆய்ந்தரியாமல்நாம் தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.

மார்க்சைப் பொறுத்தவரைஉழைப்பு பிரிவினையே முதன்மையானது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்அதுவே சாதிய அமைப்பாக திடப்பட்டுப் போனதுஇவ்வாறாகப்பிரச்சனைக்குக் காரணமான உழைப்புப் பிரிவினையை மாற்றுவதே  சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு.

முதலாவதாக நிகழ வேண்டிய மாற்றம் என்னவென்றால்உழைக்காமலேயே சுரண்டி வாழும்  வர்க்கத்தை – உழைப்பு நிகழ்முறைக்குள் – இழுப்பதுசுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்ப்பில் ஈடுபடும் வர்க்கம் (இனிவரும் பத்திகளில் ‘உழைக்கும் வர்க்கம்’)  இந்தப் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும்அடிமைகள் காலகட்டத்திலேயே இந்த வர்க்கப் போராட்டம் தொடங்கிவிட்டது.

உடல் உழைப்பில் ஈடுபடும் ஒட்டு மொத்த கீழ்நிலை சாதிகளுமே உழைக்கும் வர்க்கத்தினரேசுரண்டல் உறவிலிருந்து விடுதலை பெறுவதே தங்களது இலக்கு என்று இந்த வர்க்கம் உணர வேண்டும்மேலும்போராட்டத்தின் ஊடாக உழைப்புப் பிரிவினையை மாற்றும் பணியையும் நிறைவேற்ற வேண்டும்மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டுமெனில்ஒரு சில நபர்கள் மட்டும் மூளை உழைப்பைச் செலுத்துவதுமற்றவர்கள் எப்போதும் உடல் உழைப்பில் ஈஎடுபடுவது எனும் நிலை மாறி எல்லோரும் ஏதோவொரு வகையில் உடல் உழைப்புமூளை உழைப்பு என இரண்டிலும் ஈடுபடும் நிலை மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உழைப்பில் ஈடுபட வேண்டும்நம்முடைய அனுபவத்தின் வாயிலாக படிப்படியாக இதுபோன்ற புதிய உறவுகளை நிலைநிறுத்தவும், நீடித்திஇருக்கவும் செய்ய வேண்டும்தாங்கொணா உடல் உழைப்பைச் செலுத்திபல்லாயிரம் வருடங்களாக கொடுமையான அடிமை வாழ்க்கை வாழ்ந்து வரும் கீழ்நிலை சாதிகளை விடுவிப்பதற்கு இது மட்டுமே ஒரே வழிவர்க்க போராட்டத்தினால் மட்டுமே வழி சாத்தியமாகும்.

1846 டிசம்பரில்அன்னென்கோக் எனும்  ஒரு ருசிய அறிவுஜீவிப்ரூதோனின் ‘வறுமையின்  தத்துவம்’ எனும் புத்தகம் குறித்து மார்க்ஸின் கருத்தைக் கேட்டார்அன்னென்கோவின் கடித்தத்திற்குப் பதிலளித்த மார்க்ஸ்உழைப்புப் பிரிவினை குறித்து ப்ருதோனுக்கு சரியான புரிதல் இல்லைஅது எல்லா காலங்களிலுமே அது ஒரேமாதிரி இருப்பதாக அவர் கருதுகிறார் என்று கருத்தளித்து அன்னென்கோவுக்கு பின்வருமாறு எழுதினார் மார்க்ஸ்:

சாதிய விதிமுறை என்பதுகூட ஒருவகையான உழைப்பு பிரிவினைதான் இல்லையாஅதேபோல்கூட்டுஸ்தாபன (corporations) விதிமுறை என்பது மற்றொரு வகையான உழைப்பு பிரிவினை இல்லையாஇங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய உற்பத்தி முறையின் கீழ் உருவான உழைப்பு பிரிவினை 18 ஆம் நூற்றாண்டில் மறைந்து போனது. அதன் பிறகு,  நவீன பெரு-நிறுவன தொழில் நிறுவனங்களில் முற்றிலும் வேறொரு வகையான உழைப்புப் பிரிவினை தொடங்கவில்லையா? (தத்துவத்தின் வறுமைபக். 158ம் மாஸ்கோ 1966).

1847 இல்புருத்தோனின் புத்தகத்திற்கு விமர்சனமாக மார்க்ஸ், தத்துவத்தின் வறுமை’ என்று எழுதினார்அதில் அவர்:

தந்தைவழிச் சமூக அமைப்பின் கீழ்சாதியமைப்பின் கீழ்நிலப்பிரபுத்துவத்தின் கீழ்கூட்டுஸ்தாபன அமைப்பின் கீழ் நிலையான விதிகளின் படி ஒட்டுமொத்த சமூகத்திலும் உழைப்பு பிரிவினை இருந்ததுசட்டம் இயற்றுபவர் இந்த விதிகளை நிறுவினாராஇல்லைஅவை பொருளாயத உற்பத்திச் சூழலிலிருந்து பிறப்பவைபின்னர் அவை சட்டத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டதுஇந்த வகையில்உழைப்பு பிரிவினையில் பல்வேறு வகைகள் சமூக அமைப்பின் அடித்தளங்கள் ஆகுகின்றன. (பக். 118).

1859இல் மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பில்” முதலாளித்துவப் பொருளியலாளர்கள் உற்பத்திக்கும்பரிவர்த்தனைக்கும் இடையேயான உறவை எவ்வாறு தவறாக புரிந்து கொண்டார்கள் என்று கருத்து தெரிவிக்கையில்மார்க்ஸ் சாதி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“அல்லதுசட்டம் ஒரு சில குடும்பங்களக்கு மட்டும் நில உரிமையை நிலைத்திருக்கச் செய்யலாம்அல்லது பாரம்பரிய உரிமையாக உழைப்பை நிர்ணயிக்கலாம்இவ்வாறு சாதியமைப்பாக வலுபடுதலில் அது முடிவடைகிறது. (பக். 201, மாஸ்கோ பதிப்பு 1970).

1853 இல் ”இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” எனும் ஒரு கட்டுரையில் சாதி மற்றும் உழைப்புப் பிரிவினை குறித்து மார்க்ஸ் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்

இரயில்வே முறையின் விளைவாகத் தோன்றும் நவீன தொழிற்சாலைஇந்தியாவின் சாதிகளை தாங்கி நிற்கும்முன்னேற்றத்திற்கும் இந்திய சக்திக்கும் தீர்க்கமான இடையூராக இருக்கும் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும். (காலனியயம் குறித்துமாஸ்கோ பதிப்பு 1974, பக். 85).

“பருத்தி மற்றும் இதர மூலப் பொருட்களை தங்களது உற்பத்திக்காக மலிவான விலையில் உறிஞ்சவே ஆங்கிலேய மில்லாதிபத்தியம் (millocracy  மில் நிறுவன ஏகாதிபத்தியம்இந்தியாவுக்கு இரயில்களை மானியமாக கொடுக்க விழைகிறது என்பதை நான் அறிவேன். (பக். 84).

”…. நிர்பந்திக்கப்பட்டாலும், அனைத்து ஆங்கில பூர்ஷுவாக்களும் மக்களின் சமூக நிலையை மாற்றவோ அல்லது  அவர்களின் பொருளாயத நிலையிலிருந்தோ (அவர்களை) விடுவிக்கவோ மாட்டார்கள், இது உற்பத்திச் சக்தியின் முன்னேற்றததை மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக அதன் மீதான மக்களின் பயன்பாட்டைச் சார்ந்தும் இருக்கிறது. ஆனால்,  அவர்கள் (பூர்ஷுவாக்கள்) இரண்டுக்குமான பொருளாயத அடிப்படைகளை வரையறுக்கத் தவறமாட்டார்கள்…” (பக். 85) [ All the English bourgeoisie may be forced to do will neither emancipate nor materially mend the social condition of the mass of the people, depending not only on the development of the productive powers, but on their appropriation by the people. But what they will not fail to do is to lay down the material premises for both.]
மார்க்ஸ் சொன்னதிலிருந்து (நவீன தொழிற்சாலைகள் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும்), அது உழைப்புப் பிரிவினையின் பாரம்பரிய அம்சங்களை மாற்றி அமைக்கும் என்பதை நாம் அறியலாம்.  அதேவேளை அத்தகைய மாற்றங்கள் உழைக்கும் வர்க்கத்தை விடுவிக்கப் போதுமானதாக இருக்காது என்றும் சொல்கிறார்அதுமட்டுமல்லாதுஉழைக்கும் வர்க்கம் உற்பத்தி சாதனங்களைப் பறிப்பதற்காக முதலாளிகள் வர்க்கத்திற்கு எதிராக போராட்டங்களைத் தொடுக்க வேண்டும் என்கிறார்இதன் மூலமாக,  உழைக்கும் வர்க்கத்திடமிருந்து சொத்துரிமை எனும் பெயரில் நில வாடகைவட்டி மற்றும் லாபம் என்று வசூலிக்கும் சுரண்டல் வர்க்கத்தின் உரிமைகளைப் பரித்து அதை ஒழிக்கவும் முடியும். அப்போது முதலாளி வர்க்கமும் தங்கள் சொந்த உழைப்பால் வாழும் தேவை உருவாகும்எல்லா மக்களும் உழைக்கையில்எஜமானர்-தொழிலாளர் உறவானது ஒருவருக்கொருவர் சமமாக இருக்கும் உற்பத்தியாளர் உறவாக மாறும்.
எங்கெல்லாம் சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும்உழைப்பு பிரிவினையை மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.
சாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்பு பிரிவினைஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்பு பிரிவினை இவையாவுமே இதன் கீழ் வருகின்றன.
சமூகத்தில் நிலவும் ”தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராக சரியான கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் போராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும்எஜமானர் வர்க்கத்திடமிருந்து அடிமைபட்டு கிடப்பதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள அதுவே சரியான பாதையாகும்.
ஒரு சமூகத்தில் கீழ்நிலை சாதியினர் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக இருக்கின்றனர்சுரண்டலின் அடிப்படையில் உருவான பாரம்பரிய உழைப்புப் பிரிவினைக்குள்ளாக வாழ்கின்றனர் என்றால்அத்தகையத் தவறான உழைப்பு உறவை நீக்குவதே சாதிய விடுதலைக்கான சரியான தீர்வு.
1867 இல் வெளியான ’மூலதனம்’ பாகம் ஒன்றில் சாதி குறித்து மார்க்ஸின் அவதானிப்புகள்:
பட்டறைத் தொழிலானது பொதுவாக சமுதாயத்தில் தொழில்கள் இயற்கையாகவே வேறுபட்டு வளர்ந்திருக்கக் கண்டு, அந்த வேறுபாட்டை அப்படியே எடுத்தாள்வதோடு, பட்டறைக்குள்ளேயே திட்டமிட்டு அதனைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நுணுக்கத் தொழிலாளியை தனித்தேர்ச்சி பெறச் செய்கிறது. மறு புறம், பகுதி-வேலையை ஒருவரது வாழ்க்கைத் தொழிலாக மாற்றுவதென்பது, முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபடும் தன்மை தனி ஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும்.  தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை, முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே. (மூலதனம், பாகம் 1, பக்.461, தியாகு மொழிபெயர்ப்பிலிருந்து இந்த மேற்கோள் எடுக்கப்படுள்ளது)

இந்தப் பதிவின் இறுதியில்மற்றொரு எழுத்தாளரின் அடிக்குறிப்பை மேற்கோள் காட்டி எழுதுகிறார் மார்க்ஸ்:

எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதுமற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும்ஆனால்  வாழ்வாதாரத் தொழில் (life calling) மட்டும் இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது... மற்ற நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர்ஒரு சமயத்தில் அவர்கள் வேளான்மையை முயல்கின்றனர்மற்றொரு சமயத்தில் வாணிபம்வேறொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர்சுதந்திரமான நாடுகளில்அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்..... அதற்கு நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால்அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர்இவ்வாறாக அவர்ள் தங்களது வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை..... மேலும்தங்களது மூதாதையர்களிடமிருந்து எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால்அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க எப்போதும் ஆர்வமாய் இருப்பர். (பக். 461).

குறிப்பிட்ட தொழிலைச் செய்வோர், அவர்கள் மட்டுமே அந்தத் தொழிலில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக எகிப்தில் கைவினை தொழில் அத்தகையதொரு நிலையை எட்டியதுஅவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லைஅப்படிச் செய்தால்அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்அதனால் ஒவ்வொரு தொழிலும் சிறப்புத் தொழிலாக உருவெடுக்கும் நிலைக்குச் சென்றது.

இதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையதேஇந்தியாவில் மட்டுமே சாதி எப்படி உருவானது என்பது நமக்குத் தெரியாதோ அதேபோல் எகிப்தில் மட்டும் தொழில்கள் குறித்த இத்தகைய கட்டுப்பாடுகளும்கடும் தண்டனைகளும் ஏன் நிலவியது என்பது நமக்குத் தெரியாது.  உழைப்பு பிரிவினை அத்தகையதொடு வடிவத்தை அங்கெடுத்தது என்பதை மட்டும் நாம் புரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாகஉலகெங்கும் உழைப்பு பிரிவினையின் வடிவங்கள் குறிப்பிட்ட அளவு மாறிக் கொண்டே வருகிறதுஇந்த மாற்றங்கள் இந்தியாவிலும் நிகழ்கிறது.  பாரம்பரியத் தொழில்கள் குறித்த விதிகளும் மாறி வருகிறதுஎனினும்இத்தகைய மாற்றங்கள் சாதிய நிறுவனத்தை மாற்றும் அளவுக்கு இருக்கப் போவதில்லைகீழ்நிலை சாதிகளுக்கிடையில் சாதி சார்ந்த தொழில்கள் நீடிக்கவே செய்கிறதுஏனென்றால் சாதி சார்ந்த தொழில்களை விட்டுவிட்டு மூளை உழைப்புக்குள் நுழையும் சாத்தியங்களை அவர்களுடைய  பொருளாதார சூழல் அவர்களுக்கு  வழங்குவதில்லை.

இதுவரையிலான மார்க்ஸின் அவதானிப்புகளின் அடிப்படையில்கடந்த காலத்தில் உழைப்பு பிரிவினையே சாதியப் பிரச்சனையின் அடிப்படையாக இருந்திருக்கிறது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்இருப்பினும்,  இந்தியாவில் மட்டும் ஏன் அது நடந்தது என்பதை விளக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.
சாதியமைப்பு என்பது ஒரு வகையான உழைப்புப் பிரிவினையேசாதிய வேறுபாடுகளை தற்காக்கும் சட்டங்கள் இல்லையென்றாலும் சமூக நிலைமைகள் அனைத்தும் சாதியைக் கட்டிக் காக்கும் விதத்திலேயே இருக்கின்றன.

மீண்டும் மீண்டும் மார்க்ஸ் முன்வைத்த அவதானிப்புகளைத் தொடர்ந்துநாம் இந்தியாவின் வர்க்கங்களை ஆய்வு செய்வோமானால்எல்லா கீழ்நிலை சாதிகளும் உழைக்கும் வர்க்கத்தினராய் இருக்கின்றனர்மேலும்இந்தப் பிரிவினர் பெருமளவிலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்அவர்கள் இந்தச் சுரண்டலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்சுரண்டல்வாத சமுதாயம் உருவாக்கிய உழைப்புப் பிரிவினையை அவர்கள் மாற்ற வேண்டும்அதற்கு அவர்கள் வர்க்கப் போராட்டப் பாதையிலேயே செல்ல வேண்டும்அந்தப் பாதையை உணராதுஅதில் செல்லாது போனால்இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர வேறெந்த பாதையும் இல்லைபல்லாயிரம் ஆண்டுகளாகபல நூறு வருடங்களாக சாதியமைப்பில் உழன்று கொண்டிருப்பதுபோல்அது மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்அதிலிருந்து தப்ப வேறெந்த வழியும் கிடையாது.

எனினும்கீழ்நிலை சாதிகளின் அறிவுஜீவிகள் இன்னும் தங்களது கண்களை திறக்கவில்லை.  சுரண்டும் வர்க்கமானது ஒரு தந்திரோபாயமாக எறியும் இடஒதுக்கீடு எனும் பிச்சைக்கும் உண்மையான சுதந்திரத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை அவர்கள் இன்னும் உணரவில்லைகையளவு நிறைந்திருக்கும் மக்கள் கூட்டத்திற்கு விரலளவு உணவு கிடைப்பது போல் இட ஒதுக்கீடு எனும் பெயரில் கிடைக்கும் சலுகைகள் அவர்களை நிறைவடையச் செய்துவிடுகின்றது. அதற்காக அவர்கள் தங்களது கீழ்நிலை சாதிய நிலையை தக்கவைத்துக் கொள்வதே பாதுகாப்பு என்று நினைக்கின்றனர்சுரண்டும் வர்க்கத்தின் அரசாங்கத்திற்குள் ஊடுருவுவதே தங்களது இலக்கு என்று நினைக்கின்றனர்.

இந்தியாவில் பட்டியல் சாதிபட்டியல் பழங்குடிபின் தங்கிய சாதிகளின் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக அடங்கிய ஒரு அரசாங்கம் அமைகிறது என்றே வைத்துக் கொள்வோம்சாதியை ஒழிக்க அந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும்அதற்கான செயல் திட்டம் என்னவாக இருக்கும்சுரண்டல்வாத சொத்துறவுகளை அது எவ்வாறு அழிக்கும்அசுத்தப் பணிகளை செய்து வாழும் கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை அந்த செயல்திட்டங்கள் மாற்றியமைக்குமா?
மிஞ்சி மிஞ்சிப் போனால், ‘சாதிய வேறுபாடுகளைக் கடைபிடிக்காதீர்கள்!’ என்பன போன்ற மேம்போக்கான சட்டங்களை இயற்றும்அச்சட்டங்கள் எவரைக் கட்டுப்படுத்தும்சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு அது ஒரு பிராமண பெண்ணுக்கும்கம்மாளர் சாதி ஆணுக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடியுமா?  சட்டத்தின் உதவி கொண்டு ஏதாவது இரண்டு நபர்களை ஒன்றிணைக்க முடியுமாபொருளாதார நிலைமைகளை மாற்றாமல் சாதிய-கலப்புத் திருமணங்களுக்கு எப்படி வழிவகுக்க முடியும்?  நிர்வாகத்தின் துணை கொண்டு சமூக உறவுகளின் ஒற்றை அம்சத்தையாவது அதனால் மாற்ற முடியுமாஅப்படி என்றால் கீழ்நிலை சாதியினரை உள்ளடக்கிய அரசாங்கள் அரசாட்சியை கைப்பற்றி என்னதான் செய்யும்?

 அது எதனை அடையும் என்றால்சீர்கெட்டுப் போயிருக்கும் உழைப்பு சுரண்டுலுக்கு அது தனது பங்கை செவ்வனே ஆற்றும். ஆதிக்க சாதி பூர்ஷுவாக்களுக்கு பக்கத்தில் தாழ்த்தப்பட்ட பூர்ஷுவாக்களாக நிற்கும் ஒரு இடத்தை அடையும்.

 கீழ்நிலை சாதிகளின் அரசாங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்தலித் பூர்ஷுவாக்களை உருவாக்குவதே அவர்களுடைய ஒட்டுமொத்த குறிக்கோள்அதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமாகீழ்நிலை சாதிகளின் பூர்ஷுவாக்கள்கீழ்நிலை சாதிகளின் சாதாரண அடித்தட்டு மக்களை சுரண்டி பிழைப்பது என்பதன்றி வேறெதுவுமில்லைகீழ்நிலை சாதிகளின் அரசாங்கங்கள் இந்த நிலையை மிக அற்புதமாகச் சாதிக்கும். 
குறிப்பு:
(18-24, 2004 இல் ஃப்ராண்டியர் இதழில் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்தவர் பி.ஆர்பாபுஜிஇதன் தெலுங்கு பதிப்பு டிசம்பர் 2003 இல் தெலுங்கு புத்தகத்தின் நான்காவது பதிப்பின் பின்னினைப்பாக வெளிவந்ததுஆங்கில பதிப்பு ஆகஸ்டு 2001 இல் வெளிவந்ததால்அதில் இந்த கட்டுரை இடம்பெற முடியவில்லைஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு செய்யப்பட்ட இந்தி மொழிபெயர்ப்பும் இந்த கட்டுரையில் இடம்பெற முடியவில்லைஇந்த கட்டுரையின் இந்தி மொழிபெயர்ப்பு ஜனவரி 2000 த்தில் ‘சமயந்தார்’ எனும் இதழில் சமீபத்தில் வெளிவந்தது.)

நன்றிகுறளி (குறளி 2013 இதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு கட்டுரை பல மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் (மொழிபெயர்ப்பு மற்றும் அச்சுப்பிழைகள்)  பதிவு செய்யப்பட்டுள்ளது)

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

* உழைப்புசார் உறவுகள் (labour relations) என்பதும் உற்பத்தி உறவுகள் என்பதும் ஒன்றுதான் என்று கைதேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரிடம் உரையாடியபோது தெளிவானது. 

 பொருள் உற்பத்திக்காக நடைபெறும் உழைப்பு நடைமுறையில் பொருளாக நேரடியாக மாறிவிடுவதால்,  லேபர் ரிலேஷன்ஸ் என்பதை உற்பத்தி உறவுகள் என்று சொல்வதில் தவறில்லை என்றார். அதேபோல் ஆசிரியரும் இரண்டு சொற்றொடர்களையும் பயன்படுத்துவதால், மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து அவர் விலகவில்லை எனும் புரிதலோடு அவர் விளக்கியது எனக்கு உடன்பாடாக இருந்த காரணத்தால் நான் அதை ஏற்றுக் கொண்டேன். 

Aug 21, 2014

மதுரை சம்பவம்


மே 11,2013 – அன்று புனைவு நடத்திய இலக்கியக் கூட்டத்திற்காக நான், வசுமித்ர மற்றும் ஆதிரன் ஆகியோர் மதுரை சென்றிருந்தோம். பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் நிறைந்த அரங்காய் இருந்தது அது. ஸ்வாதி சா. முகிலும் இருந்தார். கூட்டம் நிறைவடைந்த உடன் சக்தி ஜோதியிடம் விடை பெற்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தியிடமும் விடைபெற்று, அங்கு வந்திருந்த நண்பர்களிடமும் பேசி மகிழ்ந்து புத்தகங்கள் வாங்கிவிட்டுக் கிளம்ப எத்தனித்தோம். அப்போது சுவாதியும் கிளம்பிக் கொண்டிருந்தார். சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே மதுரையில் காண வேண்டிய ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று விட்டுப் போகலாமே என்று யோசனை சொன்னேன். வசுமித்ர கள்ளழகர் கோவிலை பார்த்ததில்லை என்ற காரணத்தாலும் அது செல்லும் வழி என்பதாலும் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து சுவாதியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.

போகும் வழியில் நிறைய பேச்சு, பாட்டு என்று மகிழ்வானதொரு பயணம். கோவில் இருக்கும் அந்த மலைப் பிரதேசம் மனம் கவர்வதாகவே இருந்தது. நடை சாத்தியிருந்தது. ஆனால் மண்டபத்தில் இருந்த சிலைகளைப் பற்றி பேசிவிட்டு, அங்கிருந்த படிகளில் அமர்ந்து சுக்கு காப்பி குடித்துவிட்டு கிளம்பினோம் கோவில் வாசலுக்கு வந்தோம். கள்ளழகர் திருவிழாக் காலமாக இருந்ததால் நிறைய கடைகள், மக்கள் கூட்டம் மற்றும் காவலர்கள் இருந்தனர். வாசலுக்கு வரும்போது ஆதிரனும் வசுவும் முன்னே சென்று விட்டனர். நானும் சுவாதியும் மாங்காய், நெல்லிக்காய் விற்கும் கடையை நோக்கிச் சென்றோம். மாங்காய் பத்தைகளை வாங்கியபடி இடப்புறம் திரும்பினேன், அப்போது ஒரு பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் மிகுந்த திமிரோடும், பெருமிதத்தோடும் என்னைக் கைகாட்டி அழைத்தவாரு “ஹலோ ரொம்ப சூப்பரா இருக்க” என்றான். சுவாதி மாங்காய் கடையைல் மற்ற தின்பண்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். கோபமும் எரிச்சலும் பொங்க “என் புருஷன் முன்னாடிதான் போறான், தைரியமிருந்தா அவரைக் கூப்பிட்டு சொல்லேன்” என்றேன். “ம் கூப்பிடு கூப்பிடு” என்றவாரு பைக்கில் சென்று கொண்டே இருந்தான். 

ஒரு நிமிடம் கடுப்பில் நின்ற நான் அவனது அந்த ஆணாதிக்கத் திமிரை சகித்துக்கொள்ள முடியாமல் வெறி பிடித்தது போல் “டேய் நில்றா” என்று கத்தியபடி அந்த பைக்கைத் துறத்திக் கொண்டு ஓடத் தொடங்கினேன். நான் துறத்துவதை கண்ணாடி வழியாக பார்த்த ‘பைக் ஓட்டுனர்’ வண்டியை வேகமாக முடக்க, எனக்கு வந்த ஆத்திரத்தில் என் கைப்பியை, கையிலிருந்த பர்சை என சரமாரியாக எரிந்தேன். அவர்கள் போய்க்கொண்டே இருந்தனர். நான் துரத்த மக்கள் கூட்டம் ஒன்றும் புரியாமல் பார்க்க.. சூழல் மாறியது. வேகமாக ஓட்டிய அவன் ஒரு காவலர் மீது மோதுவது போல் சென்று சரிந்து நிறுத்த, காவலர் அவனைத் திட்டிவிட்டு “ஒழுங்கா போங்கடா” என்று சொல்ல, அவர்கள் வண்டியை எடுத்து கிளம்பும் வேளை “சார் அவங்களைப் புடிங்க அவங்களைப் புடிங்க” என்று நான் கத்தினேன்.

பதறிய காவலர் வேகமாக ஒட்ட, மற்ற காவலர்களும் உஷாராகி அந்த பைக்கை மடக்கி நிறுத்தினர். கிட்டத்தட்ட 300, 400 காவலர்கள் அங்கு கூடியிருந்தனர். 50 பேர் அவர்களைச் சுற்றி நின்றிருந்தனர். சரமாரியாக அடி கொடுத்தனர். நான் ஓடிச் சென்றேன். பின்னால் எதுவும் புரியாமல் சுவாதி வந்து நின்றார். “என்னம்மா செயினை அத்துக்கிட்டு ஓடுனானா” என்றார் ஒரு காவலர். இல்லை சார் “கிண்டல் பண்ணிட்டு ஓடுறான்” என்றேன். காவலர்கள் மீண்டும் அடித்தனர். வண்டி ஓட்டியவனையும் அடிக்க, எனக்குப் பரிதாபமாகி விட்டது “சார் அவர் எந்த தப்பும் பண்ணல, இதோ இவந்தான் சூப்பரா இருக்கன்னு சொல்லி கிண்டல் பண்ணான்” என்று மற்றொருவனைக் அடையாளம் காட்டினேன். மீண்டும் நல்ல அடி விழுந்தது. அவன் கெஞ்சத் தொடங்கினான்.

உயர் அதிகாரி ஓடி வந்தார். என்ன நடந்தது என்று விசாரித்தார். தன் மேல் மோதுவது போல் வந்தது உட்பட நான் துறத்தி வந்தது, அவன் கிண்டல் செய்தது என எல்லாவற்றையும் சொன்னோம். உயர் அதிகாரியும் அவனை அடித்தார்.

“போதும் சார் விட்றுங்க” என்றேன். “ஏண்டா கோவிலுக்கு சாமி கும்பிட வர்றீங்களா, இல்ல இப்படி அயோக்கியத்தனம் பண்ண வர்றீங்களா” என்றார். “மன்னிச்சுடுங்க சார், தெரியாம” என்றான் அவன். “ஏங்க பொண்ணுங்கள இப்படித்தான் கிண்டல் பண்ணுவீங்களா” என்றேன். அவன் மருகினான். குடித்திருந்தான் என்பது தெரிந்தது. “குடிச்சிருந்தா கிண்டல் பண்ணுவீங்களோ” என்றேன். காவலர்களும் திட்டினர், எச்சரித்தனர். “சரி விட்றுங்க சார் போய்த் தொலையட்டும்” என்று சொல்லி விட்டு நானும் சுவாதியும் நகர்ந்தோம். மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அப்போதுதான் ஏதோ நடக்கிறதே என்று வசுவும் ஆதிரனும் நெருங்கி வந்து விசாரித்தனர். நடந்ததை சொல்லவும் வசுமித்ரவுக்கு கோபம் வந்துவிட்டது. காவலர்கள் பிடித்து எச்சரித்து அனுப்பிவிட்டார்கள் போதும் விட்டு விடுவோம் என்று சொல்லி நகர்ந்தபோது ஒரு பெண்மணி எனது டெபிட் கார்டுகளை அள்ளிக் கொண்டு ஓடி வந்தார்.

“என்னம்மா இப்படி துறத்திக்கிட்டு போன” என்க, நடந்ததை சொன்னேன். அப்போது அப்பெண்மனி, கீழ 1500 ரூபா கிட்ட கிடந்தது, ஒரு பொம்பள எடுத்துக்கிட்டு வந்துச்சு கொடுக்கலையாம்மா” என்றார். இல்லை என்றேன். “அந்தக் கடைல மத்த கார்டுகள எடுத்து வச்சாங்க பார்த்து வாங்கிக்கம்மா” என்று சொல்லி விட்டு சென்றார் அப்பெண்மனி. அவரால், என் டெபிட் கார்டு கிடைத்தது, இளநீர் கடைக்காரரால் மற்றொரு டெபிட் கார்டு கிடைத்தது. ஆனால் எனது பான் கார்ட் மற்றும் 1500 ரூபாய் பணம் தொலைந்து போனது.

சுவாதி நம்பமுடியாமல் திகைப்பில் இருந்தார். அன்று பார்த்து அந்த களேபரம் நடந்த நேரம் மணர் காற்று விசி, சூழலே ஒருவித வேகத்தோடும், பதட்டத்தோடும் இருந்தது.

எல்லாம் முடிந்து மதுரையை விட்டுக் கிளம்பினோம். பேசிக்கொண்டும் பாடல்கள் கேட்டுக் கொண்டும் தேனி வந்து சேர்ந்தோம்.


இன்று நினைத்தாலும் அந்த சம்பவம் எனக்கு ஒரு கனவு போலவே இருக்கிறது. ஆனால் அது இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆண் மன யதார்த்தத்தைப் பிரதிபலித்த ஒரு நிஜ நிகழ்வு.


Aug 11, 2014

சுதந்திர இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் - உயிரோசை


சுதந்திரம் என்றால் என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவடைந்து 68ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கிறோம். சுதந்திரம் என்றால் என்னவென்று இப்போது நான் ஒரு கேள்வியை முன்வைப்பது வேடிக்கையாக இருக்கலாம்.  ஆனால் ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமூகத்தில் இக்கேள்வி எக்காலத்திற்கும் பொருந்தும். சுதந்திரம் என்பது வெறும் கோஷமாக ஆளும் வர்க்கத்தினரின் கோஷமாக சொல்லப்போனால் அதிகாரம் படைத்தவர்களின் தனிச்சொத்தாக மட்டுமே இருக்கிறது. ஏகாதிபத்திய-காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து நம் நாடு விடுதலை பெற்றுவிட்ட போதிலும் சாதி, மதம், இனம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலும், உடல் ரீதியான மாறுபாட்டின் அடிப்படையிலும் பாகுபாடுகள் நிலவுவதையும், கொடூரமான ஒடுக்குமுறைகள் நிலவுவதையும் எவரும் மறுத்துவிட முடியாது.

ஒவ்வொரு சமூகமும் பல்வேறு மாற்றங்களின் வழி பரிணமித்துள்ளது.  உற்பத்தி முறைகளின் அடிப்படையில் இம்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் விளைவாக புராதனப் பழங்குடி கூட்டுச் சமூக உற்பத்தி முறை மற்றும் சமத்துவ அல்லது சுதந்திர வாழ்க்கை முறை சிதையத் தொடங்கியது. இயற்கை வளங்கள், உற்பத்திச் சாதனங்கள் பொதுவாக இருந்த காலகட்டங்களில் உற்பத்தி சக்தியின் அடிப்படையில் பெண்களுக்கு தனி அந்தஸ்து நிலவியதை வரலாற்று ஆய்வுகளின் வழி நாம் அறியலாம். பெண்கள் தலைமை வகித்த அச்சமூகம் தாய்வழிச் சமூகம் எனப்படுகிறது. பின்னர் இயற்கை வளங்களும், உற்பத்திச் சாதனங்களும் படிப்படியாகத் தனியுடமை ஆக்கப்பட்டபோது தாய்வழிச் சமூகமானது சிதைந்து தந்தைவழிச் சமூகமானது. தற்போது நாம் மாறிவிட்ட இந்தச் சமூகக் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறோம்.

தனியுடமையானது, உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் உழைப்புச் சக்தியைக் கைப்பற்றி லாபம் குவிக்கும் நோக்கத்தோடு பல்வேறு அடிமை முறைகளை உருவாக்கியது. அது தன்னளவில் ஆண் தலைமையைக் கொண்டிருந்த காரணத்தால் பெண்கள் பாலின ரீதியாகவும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.  இது இன்றளவிலும் தொடர்கிறது. இந்தச் சமூக கட்டுமானத் தளத்திலிருந்தே சுதந்திரம் என்றால் என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

காலம் காலமாக அடிமை முறைகள் நிலவி வருகின்றன. விவசாயத் தொழில், வீட்டுப் பராமரிப்பு, சுரங்கத் தொழில், இயந்திரத் தொழில், அதிகாரச் சேவகம் என்று சமூகத்தின் அன்றாட இயங்குமுறைக்குத் தேவையானப் பணிகளில், பொருள் உற்பத்தியில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர், ஈடுபடுத்தப்படுகின்றனர். அடிமை வேலைக்கு ஈடாக ஒருவருக்கு பணம் அல்லது பொருள் கொடுக்கப்படும். இங்கு உழைப்புச் சக்தி சுரண்டப்பட்டு கூலி என்கிற பெயரில் சொற்பமாக ஈடு செய்யப்படும். இவ்வகையில் நாம் அனைவரும் பொருளாதார அடிமைகளாக இருக்கிறோம் என்பதே உண்மை. உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சமூக கட்டுமானம் மாறும்போது மட்டுமே இந்த அடிமைத்தனத்தைக் களைய முடியும். அதுவே உண்மையான விடுதலை.

இச்சூழலில்,  பெண் என்பவள் பாலின ரீதியாக கூடுதலாக அடிமைப்படுத்தப்படுகிறாள். பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபாடு நிலவுகிறது, உயிரியல் ரீதியான அந்த மாறுபாட்டை எவரும் மறுக்கவில்லை. ஆனால் இந்தப் பால் அடையாளத்தைக் கொண்டு பெண்களுக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள சமூகப் பாத்திரத்தை – அதை நிறைவேற்ற ஒரு பெண் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், கடமைகள் இன்னபிற விதிகளை தர்க்க ரீதியாக ஆய்வு செய்யும் போது, சுதந்திர நாட்டில் வாழ்ந்தாலுமே பெண்கள்  இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆண் பெண் பால் விகிதம் தொடங்கி, ஆண் பெண் கல்வியறிவு விகதம், பெண் வளர்ப்பு முறை, பெண் குழந்தைகள் ஊட்டச் சத்து விகிதம், பெண்களுக்கான சுகாதார ஏற்பாடுகள் ஆகியவற்றோடு குடும்ப அமைப்பில் பெண்களுக்கான கடமைகள், பெண்களுக்கான வேலை வாய்ப்பு, பொது வெளியில் பெண்களுக்கான இடம், அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் காணக்கூடிய பால் விகிதம் என ஒவ்வொன்றாக எடுத்துப்  பார்க்கும்போது ஆணாதிக்கச் சமூக அமைப்பானது பெண்களுக்கு இழைக்கும் அநீதி கண்கூடாகத் தெரிகிறது.

பெண்கள் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆணாதிக்க சமூகத்தின் வெறியாட்டத்திற்கு ஓர் இரத்த சாட்சி. கழிப்பறை வசதியற்றப் பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகள் ‘சுதந்திரமாக’ இயற்கை உபாதையைக் கூட கழிக்க முடியாத ஓர் அவலம் இங்கு நிலவுகிறது. வல்லுறவுக்குள்ளாவது மட்டுமின்றி கொடுமையான வகையில் கொல்லவும்படுகின்றனர். பெண்களுக்குப் பாலின ரீதியான பாதுகாப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. 1971ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டிற்குள் பாலியல் வல்லுறவு குற்றமானது 902% உயர்ந்திருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்தும் பார்க்க முடிகிறதா? இது தவிர பிச்சையெடுப்பதற்காக, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக  பெண்கள் கடத்தப்படுகின்றனர். இக்குற்றங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் மிகவும் மோசமான வகையில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். ’குடிமக்கள்’ செய்யும் பாலியல் கொடுமைகளையும் விஞ்சியது இராணுவத்தினரின் அட்டூழியங்கள். அவர்கள், சராசரிப் பெண்களையும் விடுவதில்லை, தன் சக உழியரையும் விட்டு வைப்பதில்லை. 

இது ஒருபுறமிருக்க, கலாச்சாரக் காவல் எனும் பெயரில் மத அடிப்படைவாதக் கும்பல்களின் அராஜகத்தினால் பெண்களுக்குப் பொது வெளி என்பதே அச்சத்துக்குறியதாய் மாறி வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள்கூட பறிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமானத் (ஆண்) துணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. ஒடுக்குமுறையின் வடிவங்களான சாதி, மதம் ஆகியவை இந்த விதியை கட்டிக் காக்க மிகவும் வெளிப்படையாகவே பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்யும்.

பொது வெளியில் பெண்களின் நிலை இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் இருக்க, மிகவும் ‘பாதுகாப்பானது’, இந்தியப் பண்பாட்டின் சின்னம் என்று சொல்லப்படும் ‘குடும்ப’ அமைப்பும் எவ்வகையிலும் மாறுபட்டதில்லை. வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை ஆகியவை இன்றளவிலும் ஒழிக்கப்படவில்லை. உண்மையில் ஆணாதிக்கத்தை அப்படியே கட்டிக்காப்பதற்கு ஓர் வலுவான துணையாக விளங்குவது குடும்ப அமைப்பே. குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள், குடும்ப உறவுகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றுக்கப்பால் கீழ் மத்தியத்தர வர்க்கப் பெண்கள் மற்றும் அடித்தட்டு வர்க்கப் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் இன்னும் கூடுதலானது. இரட்டை உழைப்பு, குடிகாரக் கணவனின் வன்முறை, பொருளாதாரச் சுமை என்று  அப்பெண்கள் கடும் துயர்களுக்குள்ளாகின்றனர். சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களின் நிலை அதனினும் மோசமானதாக இருக்கிறது. சாதியின் காரணமாகவே ஒடுக்கப்பட்டச் சமூகப் பெண்கள் மிகவும் இழிவாக நடத்தப்படுகின்றனர். ‘சுத்தம்’ செய்யும் தொழில்கள் பெரும்பாலும் இப்பெண்களுக்கே (ஆண்களுக்கும்) ஒதுக்கப்படுகிறது. ஆணாதிக்கச் சாதியப் பொருளாதார அமைப்பினால் விளையும் மிகப்பெரிய தீங்கு இதுவே. இதுதவிர, ஆதிக்கச் சாதியினராலும், அரசு அதிகாரத்தைச் சார்ந்தவர்களாலும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் கற்பனை செய்ய முடியாத பாலில் கொடுமைகளுக்குள்ளாகின்றனர்.  தாழ்த்தப்பட்ட சாதியைப் பொருளாதார ரீதியாக ஒடுக்கி அவர்களை நிரந்தர அடிமைக் கூலிகளாக வைத்திருக்க நினைக்கும் அத்தகையோரின் முதல் இலக்கு அச்சாதியைச் சேர்ந்தப் பெண்களாகவே இருக்கின்றனர்.  பல வேளைகளில், அரசு இயந்திரமும் இந்த பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்கிறது.

இப்படி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பின்மையும், அச்சுறுத்தலும், ஏற்றத்தாழ்வும் நிலவுகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது உண்மையில் போலித்தனமானது. ஏதோ ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறிவிட்டனர் என்பதை வைத்து பெண்கள் எங்கே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர் என்று கேள்வி எழுப்புபவர்கள் மூடர்களாக மட்டுமே இருக்க முடியும்.

பெண் விடுதலை இல்லாத ஒரு சமூகம் உண்மையில் பிற்போக்குத்தனமானது, அப்படிப்பட்டச் சமூகமானது சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் தகுதியற்றது.  அப்படியென்றால் சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது சமத்துவம்.  என்றைக்கு இந்தச் சமூகத்தில் சமத்துவம் நிலைநாட்டப்படுகிறதோ அன்றைக்குத்தான் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியும். நாடு என்கிற அளவில், நம் நாடு அடைந்துவிட்ட சுதந்திரமானது எல்லைகளின் அடிப்படையில் நிலைநிறுத்திக்கொண்ட ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கிறது. ஆனால் நாம் இங்கு பேசுவது மக்களுக்கான சுதந்திரம் அதாவது மானுட விடுதலை, அதில் எந்த ஏற்றத்தாழ்வுக்கும் ஒடுக்குமுறைக்கும் இடமில்லை.  அதுவே உண்மையான சுதந்திரம். 

(நன்றி உயிரோசை மாத இதழ்)