Showing posts with label மயிர்களற்ற யோனி. Show all posts
Showing posts with label மயிர்களற்ற யோனி. Show all posts

Mar 7, 2011

துளையில்லா இந்த பூமிப் பந்தில்….



அன்புள்ளம் கொண்டோரே..
உங்கள் சொல்லெதையும் நான் மயிரளவேனும் மதிக்கப்போவதில்லை
அது அப்படித்தான்

துளையற்ற இந்தப்பந்தை நீங்கள் லிங்கத்திற்கு தாரை வார்க்கும்போது
நான் கண்டுணர்கிறேன்,
துளையில்லா இந்தப்பூமிப் பந்தில் சிறுதுளையுடன் பிறந்த
யோனிதேவதை நான்..

லிங்கத்தை பிரதிஷ்டை செய்து குங்குமம் தடவி
எனதருமை சிறு யோனியில் ஏற்றி வெளித்தளினார்கள்

அத்தனை ஸ்கலிதமும் ஜனன மென மந்திரஒலியை என் காதில் பாய்ச்சினார்கள்

பிறந்தது
வெண்பட்டு நிறமுள்ள
முறுகாத இளவெயிலையொத்த
காட்டுப்பூக்களின் வாசம் கொண்ட
மயிர்களற்ற யோனி

பூமாதேவியெனவும்
சிறுபெண், தங்கக்கட்டி
கொஞ்சும் கடவுளெனவும் சொன்னார்கள்

ஸ்திதிகள் பெருக
தேவியை
சிறுபெண்ணை
அத்தங்கட்டியைப் புணரச்சொன்னான்
பொருளற்ற மந்திரங்களை நாவில் உருட்டிய
ஜோதிடப்புலி

அன்பார்ந்த என்
சகோதரர்களே.....

இப்படி
ஒரு ஆண்மகன்
தன் அருமைச் சிசுவை
கற்பழித்தபோது நான் சொன்னேன்
கற்பழித்த லிங்கத்தின் முனையில்
வெந்து வழிவது உன் குருதியென

குறி மறைத்து நிற்கும் கடவுளர்களை
நான் சபித்தேன்
மண்வாரித்தூற்றினேன்…
உங்கள் குறிகளில் தீப்பிடிக்க

காளியின் யோனியில் குங்குமம் தடவும் அத்தனை விரல்களும்
பெருமுலை பற்றியிழுத்து சிறு உதடுகளால் பாலருந்திய
சிசுக்கள்
சிசுக்கள்
சிசுக்கள்

எனதருமை காளீ….
நீயேன்
மண்டையோட்டுகளுக்கு பதில்
குறிகளை அறுத்திறுக்கக் கூடாது...?

மன்னிபேன்னுன்னை

உனக்குப் பெருயோனி.