Showing posts with label தமிழ் இலக்கிய வதந்தி. Show all posts
Showing posts with label தமிழ் இலக்கிய வதந்தி. Show all posts

Apr 3, 2014

லஷ்மி சரவணகுமாருக்கு,



எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் தொந்தரவு செய்கிறார்கள். இவ்வாறு தொலைபேசிக் கொள்வதன் மூலம் தங்களது கலை தாகத்தை தீர்த்துக் கொள்வதாக அபிப்பிராயப்படும் அவர்களிடம் இது குறித்து உரையாட வேண்டும்... சசி கலா - வாங்க உரையாடுவோம்...
Top of Form
Like ·  · Share
·         Gargy ManoharanRiyas Quranaசசி கலா and 32 others like this.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/v/t1.0-1/c7.0.40.40/p40x40/1170800_518310991577094_448187130_t.jpg?oh=2538f8d56af3f393411dadacecf35492&oe=53AA6187&__gda__=1404460634_f1da6ecc78e5299c346eac7bfdacdf2b
Moni TheMass நானு மாமா???
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan தோழர் இப்போ தான் கரெக்ட் ஆகி இருக்கோம். ஏனுங் தோழர் அதுக்குள்ள உரையாட கூப்பிடுறீங்க
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar Moni TheMass - நீங்களும் தான் மோனி அவர்களோ... அது எப்படி உங்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் இன்னொருவரின் தோழிக்கு தொலைபேசும் தைர்யம் வருகிறது. கார்கி அவர்கள் எத்தனை முக்கியமான ஆளுமை என்பது தெரீயுமா? நிங்கள் எல்லாம் தொலைபேசி தொந்தரவு செய்வதன் மூலம் அவர் இந்த சமூகம் குறித்து சிந்திக்க முடியாமல் அவதிப்படுகிறார்...
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar மேலும் இந்த நாற்றமெடுத்த் சமூகத்தில் அடுத்தவரின் அந்தரங்கம் குறித்து சதாவும் அபிப்பிராயங்கள் சொல்லும் கள்ள புத்தி கசியும் அறிவுஜீவிகள் கார்கி அவர்களிடம் பேசுவதை நான் விரும்பவில்லை.... மலைகள். காம்மில் வந்த அவரது கதையை வாசித்த தமிழ் நாட்டில் முக்கியமான இலக்கியவாதிகளெல்லாம் ஆறு மணீ நேரம் ஏழு மணிநேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முட்டாளா என்ன?
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/v/t1.0-1/c7.0.40.40/p40x40/1170800_518310991577094_448187130_t.jpg?oh=2538f8d56af3f393411dadacecf35492&oe=53AA6187&__gda__=1404460634_f1da6ecc78e5299c346eac7bfdacdf2b
Moni TheMass  இந்த ஆட்டத்துக்கு நான் வரல எனக்கு நம்பரே தெரியாது!!! 
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar அன்புத் தோழர் மோனிக்கு... Moni TheMassஉங்களுக்கு தோழி கார்கி அவர்கள் குறித்து அனேக விசயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.... அவருக்கு நான் ஒரு இலக்கிய ஆசான் மட்டுமே, எதை வாசிக்க வேண்டும் எப்போது வாசிக்க வேண்டும் என்பதை மட்டுந்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்... அதை வைத்துக் கொண்டு அவர் பயணப்பட்டிருக்கும் தூரம் அசாத்தியமானது.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan தோழர் என்னுடைய சமூகப்பணிகளை இப்படி முடக்கப் பாக்கறீங்களே. வாழ்நாள் தோழர் செய்யற காரியமா இது. ஒரு நாலு பிகர கரெக்ட் பண்ண விடுறீங்களா...
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar இது குறித்து கூடுதலாக உரையாட தோழர்கள் மனோ. மோகன் & Nesamithran Mithra இருவரையும் அழைக்கிறேன்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar வாங்க உரையாடுவோம்.....நான் யாரையும் தடை செய்யவில்லை... உரையாடலாம்...
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan Lakshmi Saravanakumar ஹலோ மிஸ்டர் என்ன நடுவுல சம்பந்தம் இல்லாம ஆம்பள பசங்களை கூப்பிட்டுகிட்டு.. இன்னும் நாலு பொம்பள பிள்ளைக பேரை டேக் பண்றது..
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar ஏற்கனவே இதுகுறித்து நான் விளக்கம் கேட்டதால் ந்தமிழ்நாட்டில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆளுமைகள் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan யாருகிட்ட
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar தோழர் உரையாடலிலி குறுக்கிடாதிங்க..... ஆரோக்யமான கருத்துக்கள மட்டும் பகிருங்க வணக்கம்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t1.0-1/p40x40/1383513_10201431926774173_395891395_t.jpg
வில்லன் வில்லன் //நடுவுல சம்பந்தம் இல்லாம ஆம்பள பசங்களை கூப்பிட்டுகிட்டு.. இன்னும் நாலு பொம்பள பிள்ளைக பேரை டேக் பண்றது..//
இதை நானும் ஆமோதிக்கிறேன்...

(ல.ச.கு: டேய்ய்.. நீ யார்ரா நடுவிலே...
நான்: இல்லே காரமடைக்கு போனும். பஸ் அஞ்சு மணிக்குத்தானாம். அதான் ஒரு டைம் பாசுக்கு.....)
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t1.0-1/p40x40/1476252_570984052970703_795281564_t.jpg
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar தோழர் அபிலாஷ் நான் யாரையும் தடை செய்யவில்லை.... திறந்த மனதுடன் உரையாடுவோம்....
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c0.0.40.40/p40x40/1016318_647441545312547_2117162631_t.jpg
Kumar Inthiran's photo.


மேலே உள்ள பதிவு Bottom of Form

இரவு 10 மணிக்கு மேல் வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து பகடி செய்கிறது. இதில் உரையாடுவதற்காக சசிகலா மனோ மோகன் நேசமித்ரன் அபிலாஷ் ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஏன் என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். அவர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்தால் அதையும் தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.

மேலும் எனது முந்தையப் பதிவுகளைப் படித்தவர்களுக்கும், அதுமட்டுமல்லாது இலக்கியத்தை ’காதல்’களுக்கு துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் சில வக்கிரப்புத்திக்காரர்களைப் பற்றி பொதுவாக வசுமித்ர பேசி வந்திருப்பதைக் கேட்டவர்களும் இந்தப் பதிவில் ஒலிக்கும் அற்பத்தனத்தை நன்கு அறிவர். இறுதியாக நரனின் கவிதை புத்தக வெளியீட்டு விழாவிலும் வசுமித்ர இந்த கருத்தைப் பதிவு செய்ததையொட்டி அபிலாஷ் சந்திரன் சந்தேகக்கேஸ்களுக்கு ஒரு கதை என்று எழுதி சமூகத்திற்கு ஒரு ‘கருத்தை’ச் சொன்னார். இப்போது இரண்டு மாதங்கள் கழித்து நீங்கள் ‘உரையாட’ அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். இதில் நகைச்சுவை என்னவென்றால் உங்களுக்குப் பகடியும் ஒழுங்காகச் செய்யத் தெரியவில்லை. (என்ன இருந்தாலும் கோமதிநாயகம் போல் வருமா)

வழக்கம்போல் நீங்கள் உங்களது சீண்டலை தொடங்கிவிட்டு இப்போது மௌனம் காத்து வருகிறீர்கள். இந்த கள்ளமௌனத்திற்கு புறக்கணிப்பு என்று பெயரளிக்க முடியாது இதற்குப் பெயர் கயவாளித்தனம். ஒன்று துணிந்து இறங்க வேண்டும் இல்லையேல் இது போன்ற அவதூறுகளை எழுதக்கூடாது, இதென்ன கோழைத்தனம் எழுதுவதை எழுதிவிட்டு பின்னர் புறக்கணிப்பதாக ஒரு வேஷம் போடுவது.

மேற்சொன்ன பதிவில் இலக்கிய ஆசான் மட்டுமே, வாழ்நாள் தோழர், சமூகம் குறித்து சிந்திக்க முடியுமா, பாதிக்கும் மேற்பட்ட ஆளுமைகள் மன்னிப்பு கேட்டு விட்டனர்… இதற்குப் பெயர் பகடியா… அதுதான் உங்களுக்கு வரவில்லையே பிறகு ஏன் இந்த அவஸ்தை… தைரியமிருந்தால் வசுவையும் என்னையும் குறிப்பிட்டே எழுத வேண்டியதுதானே…

லஷ்மி சரவணகுமார் தொடர்ந்து நீங்கள் என் வாழ்க்கை பற்றி, என்னைப் பற்றி, என் மகளைப் பற்றி, என் திருமணம் பற்றி, என் துணைவர் பற்றி நீங்கள் இப்படி பகடி செய்வதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். உங்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் நான் எப்படி உங்களிடமிருந்து பதிலைப் பெற வேண்டுமோ அப்படிப் பெறுவேன். காலணிக்கு அனுமதி இல்லாத இடமாக இருந்தாலும் நான் காலணியோடே உள்ளே வருவேன்.


 Related Posts:

http://saavinudhadugal.blogspot.in/2014/02/blog-post_17.html 

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_1.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_9762.html

Apr 1, 2014

லஷ்மி சரவணகுமாரின் புனைவுக் களம்

லஷ்மி சரவணகுமார் என்பவர் தற்காலத் தமிழ் இலக்கிய எழுத்தாளர் என்று எனக்கு சொல்லப்பட்டது. இதுவரை நான் அவரது ‘படைப்புத்திறனை’ அறியும் முயற்சியை எடுக்கவில்லை. ஆனால் வலிய அவர் தனது படைப்புத் திறனை ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் எழுதுவதன் மூலம் அறியும் வாய்ப்பை ஒரு வருடத்திற்கு முன் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போதுதான் எனக்குப் புரிந்தது அடுத்தவர் தனிப்பட்ட வாழ்வே அவரது புனைவுக் களமென்பது.

அவரது ‘படைப்புத் திறனை’ திறனாய்வு செய்வதற்கு முன் அவரை நான் சந்தித்த ‘பேசிய’ இரண்டு தருணங்களைப் பதிவு செய்வது அவசியமாகிறது. இலக்கிய கூட்டங்களுக்கு நான் அறிதிலும் அறிதாகவே செல்வேன். அப்போது அவரை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் புனைவு எழுத்தாளர் என்பது எனக்குத் தெரியாது.

ஆதிரன் தேனியில் ஒரு இலக்கியக் கூட்டம்  ஏற்பாடு செய்திருந்தார். உண்மையில் அது ஒரு நல்ல முயற்சி. தோழர் சிவகாமி தலைமையில் நடந்த கூட்டம் அது. ஒரு நல்ல அனுபவமாக வாய்த்தது. அந்தக் கூட்டத்தில் நான் லஷ்மியை சந்தித்தேன். அவரும் ஒரு ஏற்பாட்டாளர் என்பதை அங்கு சென்ற பின்பே அறிந்துகொண்டேன். ’இலக்கிய வட்டத்தில்’ நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்தான். லஷ்மி சரவணகுமாரோடு ஹலோ, டீ, காபி, சாப்பாடு, உக்காருங்க, ஓ அப்படியா என்கிற அளவில் மட்டுமே பேசியிருந்தேன். இந்தக் கூட்டத்தில் நேசமித்ரனும் கலந்து கொண்டிருந்தார்.

கூட்டம் முடிந்து அது தொடர்பான ஒரு பதிவையொட்டி நேசமித்ரனின் விமர்சனத்திற்கு வசு எதிர்வினையாற்ற நேசமித்ரன் தன்னுடைய ‘அறிவை’ பறைசாற்றி உனக்கு ஏபிசிடி தெரியல…. ப்ளாட்ஃபாரம் டிக்கட்டகூட படிக்கத் தெரியாது என்று வசு பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பெரும் தொண்டாற்றினார்.
அது ஒருபுறம் இருக்கட்டும்

லஷ்மி சரவணகுமாரோடு எனது அடுத்த சந்திப்பு ஒரு கவிதை  புத்தக வெளியீட்டு விழாவில். இந்தப் பதிவை எழுதும்போதுதான் அந்த தற்செயலான விஷயம் நினைவுக்கு வருகிறது. அது தோழர் சிவகாமியின் கவிதை புத்தக வெளியீட்டு விழா. அவரது கவிதைகள் குறித்து கருத்துறை ஆற்றி நான் கிளம்ப இருந்த சூழலில் லஷ்மி சரவணகுமார் வந்தார்  ச.விஜியலக்‌ஷ்மியின் வீடு பக்கத்தில்தான் இருக்கிறது உங்களை அவர் வீட்டிற்கு அழைத்து போக விரும்புகிறார் என்றார். விஜியோடு எனக்கு அறிமுகமில்லையென்றாலும் கூடங்குள ஆதரவு கவிதை நிகழ்வில் அவர் கலந்து கொண்டபோது பேசியதுண்டு. மேலும் அன்போடு விடுக்கப்பட்ட அழைப்பு என்பதால் விஜி வீட்டிற்கு சென்றேன். லஷ்மி சரவனகுமார், நான், விஜி ஒரு ஆட்டோவில் சென்றோம்.

விஜியின் வீடு ஓர் அன்புத் தோட்டமாக எனக்குக் காட்சியளித்தது. அதை நான் அவரிடம் சொன்னேன். பேச்சு எங்களது கடந்தகாலம் குறித்து சென்றது. லஷ்மி சரவணகுமார் அவ்வப்போது பேச்சில் பங்கெடுத்தார்.  உள்ளே போனார் வந்தார். விஜியிடம் எனது கடந்தகால வாழ்க்கை வசுவுடனான எனது திருமணம் எனது மகள் என்று சுருக்கமாக எனது வாழ்க்கை வரலாற்றை சொல்லி இருந்தேன். அவரும் மிக சுருக்கமாகத் தான் எழுத வந்த வரலாற்றை சொன்னார். பின் அவரது மகள்கள் எனக்கு சாண்ட்விச் செய்து கொடுத்தனர். விஜியின் தங்கை…  அம்முகங்களை இன்றும் என்னால் மறக்க முடியாது. இப்படி ஒரு அன்புமிக்க குடும்பமா.. உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரவேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லி கிளம்பினேன். ஆனால் அதன் பிறகு நாங்கள் சந்தித்துகொள்ளவில்லை

இந்தச் சந்திப்பு நடந்து சில நாட்களில் லஷ்மி ஒரு பதிவு எழுதினார். நினைத்தாலே மனம் கூசுகிறது…. இன்று வரை அவர் எதற்கு என் மேல் இப்படி ஒரு வன்மம் பாராட்டுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.  அவர் எழுதிய பதிவு என்னிடம் இல்லை ஆனால் அவர் எழுதியது நினைவில் இருக்கிறது. அவரது கோழைத்தனத்திற்கு உதாரணம் என்னவெனில் நேரடியாக எழுதாமல் ஒரு புனைவாக எழுதுவது ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக மாற்றுவது.

புரட்சிப் பணி ஆற்ற விரும்பி ஒருவர் தனது மனைவியையும் குழந்தையையும் கூட தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டார். புகழ் பெற விரும்பி ஒரு கவிஞரை நட்பு பிடித்தார். பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்தது. தான் எழுதிய கவிதையை தனது மனைவி எழுதிய கவிதையாக அந்த காதலர் வெளியிடுவார். அந்தப் புகழும் போதவில்லை. திட்டம் போட்டார், ஊடகங்களை குறிவைத்தார். புகழ் பெற விரும்பி ஊடகங்களை வம்பிழுத்தார். பின்னர் விலங்குகளை சுரண்டுவதற்கு எதிரான ஒரு அமைப்பைத் தொடங்கினார்… பெரியாளானார்… எப்படி இருக்கிறது கதை… என்பதாக

தோழர்களே, என்னையும் வசுவையும் அறிந்தவர்கள், எனது குடும்பத்தார் இன்னும் அடுத்த வெளிவட்டம் முதற்கொண்டு எல்லோருக்கும் எங்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்… எங்களுக்கு அதில் எந்த குற்ற உணர்வும் இல்லை. இதில் லஷ்மி சரவணகுமாரின் பிரச்சினை என்னவென்பதே எனக்கு விளங்காதப் புதிர்.

அவரின் இந்த கீழ்த்தரமான செயல் குறித்து வயதில் முதிர்ந்த ஒரு எழுத்தாளரோடு பேசியபோது அவர் சொன்ன ஒரு தகவல் எங்களுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது “டேய் அவனே அவன் காதலிச்ச பொண்ணோட பிறப்புறுப்பு பத்திய் வெளிய பேசிக்கிட்டு திரியுறவன்… அவன்கிட்ட போய் நீ என்ன எதிர்பார்க்க முடியும்” என்றார். உண்மையில் அவரால் காதலிக்கப்படும் அந்த்ப் பெண்ணை நினைத்து நாங்கள் வேதனையுற்றோம்… ஆனால் தோழற்களே ஒரு சூப்பர் சப்ஜெக்ட் கிடைத்துவிட்டது என்று நாங்கள் கதை எழுதக் கிளம்பவில்லை…

அந்தப் பதிவையொட்டி நடந்தவற்றை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்… அத்தனை தொலிபேசி அழைப்பையும் தவிர்த்து காலில் விழுந்து கெஞ்சாத குறையாக எஸ்.எம்.எஸ்களை அனுப்பி வசுவிடம் மன்னிப்பு கேட்டு பின்பு வசு அவரின் நிலை நினைத்து பரிதாபப்பட்டு வீட்டிற்கு அழைத்து நட்பு பாராட்டி அறிவுரைகள் சொல்லி… இது முடிந்து ஒரு வருடம் இருக்கும். நாங்கள் அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பதிவுக்கு வசு சிலக் கேள்விகளை வைத்தால் ஒவ்வொருவரும் அவனது தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் குறித்து ஏதாவது எழுதி எனது கோபத்தை தூண்டிய வண்ணம் இருந்தனர். சமீபத்தில் அபிலாஷ்… அதுவும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இப்போது 2 மாதங்கள் கழித்து லஷ்மி மீண்டும் கிளம்பிவிட்டார் தனது புனைவுத் துப்பாக்கியுடன்.

கவின்மலர் பொதுவாக எழுதிய பதிவில் இலக்கிய உலகில் சிலரது நடவடிக்கை குறித்த வசுவின் பேச்சை பகடி செய்து கமெண்ட் செய்ததோடு மட்டுமல்லாமல் தனது ஸ்டேட்டசுமாக ஒரு பதிவை அதே சம்பவத்தை நினைவுகூறும் விதமாக எழுதியுள்ளார். மேலும் எவரையெல்லாம் என்னுடைய பதிவில் நான் குற்றம் சாட்டி இருந்தேனோ அவர்களை டேக் செய்து உரையாட வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்குப் பெயர் என்ன? வன்மம்… வக்கிரம்…. கீழ்த்தரமான செயல்…. அற்பத்தனம்… சொல்லப்போனால் பொறுக்கித்தனம்.

ஆனால் அவருடைய இந்த மனநோய் குறித்து சற்று ஆழ்ந்து சிந்திக்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது…. அவர் வாழ நினைத்த வாழ்க்கையை ஒருவேளை நாங்கள் வாழ்கிறோம் போலும்… அவர் காதலித்த (ஒருவேளை திருமணமான ஒரு பெண்ணாக இருக்கக்கூடும்) ஒரு பெண்ணோடு வாழ முடியாத ஏதோ ஒரு துக்கம் அவருள் இருக்கிறதோ… அதற்கு வடிகால் தேடுகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அதற்கு ஏன் அவர் எங்களை சீண்டுகிறார். எனக்கும் லஷ்மி சரவணகுமாருக்கும்.. அல்லது வசுவுக்கும் அவருக்கும் கூட என்ன சம்பந்தம் இருக்கிறது..

எனக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது… நான் ஒன்றும் அவரது ‘படைப்புத் திறனுக்கு’ போட்டியாக எதுவும் எழுதியிருக்கிறேனா… இன்னும் ஒரு புத்தகம்கூட வெளிவரவில்லை. பின்பு ஏன் இந்த பொறாமை?

அபிலாஷின் மனைவி காயத்ரியை இக்கணம் நினைத்து பெருமைப்படுகிறேன். அபிலாஷின் மனைவி எங்களோடு எந்த உரையாடலையும் வைக்கவில்லை ஆனால் அபிலாஷின் விளக்கப்பதிவில் இதுபோன்ற பதிவிகள் பயனற்றது எனப்தாகத் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் லஷ்மி சரவணகுமார் குறித்து நான் எழுதியவுடன் அறச்சீற்றம் கொண்டு வசுவுக்கு தனிப்பட்ட மெசேஜ் அனுப்பி கொதித்த கார்க்கியோ லஷ்மியின் 10 மணி ஸ்டேட்ட்ஸில் மிகவும் ஆர்வமாக பங்கேற்றுள்ளார். நான் எதிர்வினையாற்றினால் முன்பு போல் அவர் வருத்தப்படுவாரே என நினைத்து லஷ்மி சரவணகுமாரிடம் பேசு… இல்லையா கார்கியிடம் தகவலைத் தெரிவித்து விளக்கம் கேள் என்று சொன்னேன். வசுவும் செய்தான்.  அதற்கு கார்க்கி பொதுவெளியிலேயே பதிவு செய்யுங்கள் என்று சொன்னாரே தவிர லஷ்மியின் இந்த மனநோய் மிகுந்த ஒரு பதிவு குறித்து அவர் எந்த வருத்தமும் கொண்டதாகத் தெரியவில்லை.

பெண்கள், சிறுமிகள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினர் மீது அக்கறை பொழிவதாக இவரது கதைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது… ஆனால் நிஜ வாழ்க்கையில் இவரது வக்கிரம் ஏன் இப்படி அடுத்தவரை நேரடியாக எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனதோடு செயல்படுகிறது.

குறைந்தபட்சம் தன்னுடையப் புனைவுகளிலாவது மனிதாபிமானமும் சமூக அக்கறையும் வெளிப்படுகிறதே  என நினைத்து சமாதானம் செய்துகொள்வதா இல்லை அதுவும் ஒரு விற்பனைச் சரக்கு என்ற முடிவுக்கு வருவதா.