நான்
வேர்களைத் தின்பவள்
என்
போல் அல்லாத எந்த மரமும்
இப்புண்ணிய
பாரத பூமியில்
வானம்
பார்க்கக்கூடாது
அழிப்பேன்
கருவனத்தை
தன்
மேலாடையில் சூட்டிய
ரோஜா
மலரை என் அப்பா
எனக்கு
வழங்கினார்
அதை
நான் என் மகனிடம்
வழங்கினேன்
சேரிப்
பகுதிகளில்
அனைத்து
ரோஜா மொட்டுக்களையும்
அழிக்கச்
சொன்னேன்
புதிய
ரோஜா மொட்டுகள்
பிறக்காமல்
இருக்க
வெண்மை
நிழல் கை கொண்டு
ஆண்
வாசல் அடைத்தான்
என்
மகன்
தலைப்பாக்களை
எனக்குப்
பிடிப்பதில்லை
தாடியை
எனக்குப் பிடிப்பதில்லை
நீல
நட்சத்திரங்களை
பொற்கோவிலுக்குள்
அனுப்பினேன்
கோதுமைப்
பூமியில்
மர
ரோஜாக்களை வேவு பார்க்க
ஏவினேன்
அம்மர
ரோஜாக்களில் ஒன்று
என்
மார்பைத் துளைத்தது
எங்கள்
வீட்டில் ஒரு பெரிய மரம்
வீழும்போதெல்லாம்
இந்தப்
பூமி அதிரும்
வன்மத்தால்
செய்த
ரிமோட்
எங்களிடம் உள்ளது
எனக்கு
கோதுமையும்
பிடிப்பதில்லை
அரிசியும்
பிடிப்பதில்லை
மைதாக்
குழாய்களையே
நான்
விரும்பி உண்கிறேன்
என்
குடும்பத்தைக் காக்கும்
பச்சைப்
புற்களுக்கு
உரமாக
பீரங்கிகளை
வாங்குவது
எனக்குப்
பிடித்தமானது
பேரம்
படிந்தது
இந்த
தீபகற்பத்தின் மண்ணுக்கு
நல்ல
விலை உண்டு
இராவணத்தேசத்திற்குள்
புகுந்த
சிங்கமொன்று
எனக்கு
ஓநாய்களைப் பரிசளித்தது
யாழின்
நரம்புகளை
அதன்
கூடுகளிலிருந்து
அறுத்தழிக்கும்
பயிற்சி வேண்டியது
பயிற்சி
பெற்ற ஓநாய்கள்
யாழின்
பெண் நரம்புகளில்
தம்
விரைப்புக் குறிகளை
அழுத்திச்
செலுத்தியது
வடிந்தது
தமிழ்குருதி
இங்கும்
ரோஜா மொட்டுகள்
தன்
கருக்குழியில் பதுக்கி
வைத்திருந்தாள்
பூமிதாய்
மோப்பம்
பிடித்துச் சென்றன
பயிற்சி
பெற்ற
மூவர்ண
பூதங்கள்
எனக்கு
லில்லி மலர்களையேப் பிடிக்கும்
அழிப்பது
என் குலத்தொழில்
நான்
மட்டுமே ஆயுதமேந்துவேன்
கொத்து
கொத்தாக அழிப்பேன்
பதிலுக்கு
என்
வீட்டில் ஒரு மரம்
வீழ்ந்தால்
தென்
திசைக் காற்றையும்
சிறையில்
அடைப்பேன்
அதுவே
என் நீதி
அதுவே
என் அரசாங்கம்
அதுவே
என் குலத்தொழில்
காற்று
மாசற்றது
என்று
நீங்கள் கதறுவீர்களேயானால்
உங்கள்
குரல்வளைகள்
நசுக்கப்படும்
உங்கள்
வீடுகளிலும்
ரோஜா
மொட்டுகள்
அறுத்தெரியப்படும்
உங்கள்
தலை மேல்
தூக்குக்
கயிறு தொங்கும்
வஞ்சகமாய்
அடைத்து வைத்த
மாசற்ற
காற்றை
நீவிர்
விடுவிக்க
முடியாமல்
செய்யும்
நாற்காலி
எம்மிடம் உண்டு
குலம்
உண்டு
கோத்திரம்
உண்டு
எம்
அந்தப்புரத்தில் ஓடும்
வன்ம
ஆற்றில் தினம் குளிப்பவள்
நான்
வற்றும்
ஆறு
உங்கள்
கண்ணிரால் நிரப்பப்படும்
இத்தாலியப்
பீரங்கித் தரகன்
தூய
ஆத்மா
இது
அந்தப் பரிசுத்த
ஆவிமேல்
ஆணை
அவனை
எப்பாடு பட்டும்
விடுவிப்பேன்
தமிழ் மைந்தர்களாகிய
உங்கள்
எழுவரை
எப்பாடு
பட்டும் தூக்கிலேற்றுவேன்
அனைத்தும்
அறிந்தவள்
நான்
என்
காதுகளில்
நீங்கள்
என்ன ஓதுகிறீர்கள்
நீங்கள்
ஏதும் செய்யவில்லை என்றா
என்
காதுகளை வந்தடையாது
என்
இதயத்தை நான்
பீரங்கிக்குள்
பதுக்கிவைத்துவிட்டேன்
மேலும்
நீங்கள் பேசுவது
தமிழ்
அது
போதும்
உங்கள்
தலைகள்
தூக்குக்
கயிற்றுக்கு
சொந்தமாக
சிங்கபுத்தனே
நீ கண்விழிக்காதே
கலக்கம்
கொள்ளாதே
அவர்களை
நான்
பார்த்துக்கொள்கிறேன்
அழிப்பது
என் குலத்தொழில்
நான்
மட்டுமே ஆயுதமேந்துவேன்
கொத்து
கொத்தாக அழிப்பேன்
அதுவே என் நீதி
அதுவே என் அரசாங்கம்
No comments:
Post a Comment