எனது
வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய
பெண்கள் தொந்தரவு செய்கிறார்கள். இவ்வாறு தொலைபேசிக் கொள்வதன் மூலம் தங்களது கலை தாகத்தை
தீர்த்துக் கொள்வதாக அபிப்பிராயப்படும் அவர்களிடம் இது குறித்து உரையாட வேண்டும்... சசி கலா -
வாங்க உரையாடுவோம்...
Moni
TheMass நானு மாமா???
Gargy
Manoharan தோழர் இப்போ தான் கரெக்ட் ஆகி இருக்கோம். ஏனுங் தோழர் அதுக்குள்ள
உரையாட கூப்பிடுறீங்க
Lakshmi
Saravanakumar Moni TheMass - நீங்களும் தான் மோனி அவர்களோ...
அது எப்படி உங்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் இன்னொருவரின் தோழிக்கு தொலைபேசும் தைர்யம்
வருகிறது. கார்கி அவர்கள் எத்தனை முக்கியமான ஆளுமை என்பது தெரீயுமா? நிங்கள் எல்லாம்
தொலைபேசி தொந்தரவு செய்வதன் மூலம் அவர் இந்த சமூகம் குறித்து சிந்திக்க முடியாமல் அவதிப்படுகிறார்...
Lakshmi
Saravanakumar மேலும் இந்த நாற்றமெடுத்த் சமூகத்தில் அடுத்தவரின் அந்தரங்கம் குறித்து
சதாவும் அபிப்பிராயங்கள் சொல்லும் கள்ள புத்தி கசியும் அறிவுஜீவிகள் கார்கி அவர்களிடம்
பேசுவதை நான் விரும்பவில்லை.... மலைகள். காம்மில் வந்த அவரது கதையை வாசித்த தமிழ் நாட்டில்
முக்கியமான இலக்கியவாதிகளெல்லாம் ஆறு மணீ நேரம் ஏழு மணிநேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் முட்டாளா என்ன?
Moni
TheMass இந்த ஆட்டத்துக்கு நான் வரல எனக்கு நம்பரே தெரியாது!!!
Lakshmi
Saravanakumar அன்புத் தோழர் மோனிக்கு... Moni
TheMassஉங்களுக்கு தோழி கார்கி அவர்கள் குறித்து அனேக விசயங்கள் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.... அவருக்கு நான் ஒரு இலக்கிய ஆசான் மட்டுமே, எதை வாசிக்க வேண்டும் எப்போது
வாசிக்க வேண்டும் என்பதை மட்டுந்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்... அதை வைத்துக்
கொண்டு அவர் பயணப்பட்டிருக்கும் தூரம் அசாத்தியமானது.
Gargy
Manoharan தோழர் என்னுடைய சமூகப்பணிகளை இப்படி முடக்கப் பாக்கறீங்களே. வாழ்நாள்
தோழர் செய்யற காரியமா இது. ஒரு நாலு பிகர கரெக்ட் பண்ண விடுறீங்களா...
Lakshmi
Saravanakumar இது குறித்து கூடுதலாக உரையாட தோழர்கள் மனோ. மோகன் &
Nesamithran Mithra இருவரையும் அழைக்கிறேன்.
Lakshmi
Saravanakumar வாங்க உரையாடுவோம்.....நான் யாரையும் தடை செய்யவில்லை... உரையாடலாம்...
Gargy
Manoharan Lakshmi Saravanakumar ஹலோ மிஸ்டர் என்ன நடுவுல
சம்பந்தம் இல்லாம ஆம்பள பசங்களை கூப்பிட்டுகிட்டு.. இன்னும் நாலு பொம்பள பிள்ளைக பேரை
டேக் பண்றது..
Lakshmi
Saravanakumar ஏற்கனவே இதுகுறித்து நான் விளக்கம் கேட்டதால் ந்தமிழ்நாட்டில் இருக்கும்
பாதிக்கும் மேற்பட்ட ஆளுமைகள் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள்.
Gargy
Manoharan யாருகிட்ட
Lakshmi
Saravanakumar தோழர் உரையாடலிலி குறுக்கிடாதிங்க..... ஆரோக்யமான கருத்துக்கள மட்டும்
பகிருங்க வணக்கம்.
வில்லன்
வில்லன் //நடுவுல சம்பந்தம் இல்லாம ஆம்பள பசங்களை கூப்பிட்டுகிட்டு.. இன்னும்
நாலு பொம்பள பிள்ளைக பேரை டேக் பண்றது..//
இதை நானும் ஆமோதிக்கிறேன்...
(ல.ச.கு: டேய்ய்.. நீ யார்ரா நடுவிலே...
நான்: இல்லே காரமடைக்கு போனும். பஸ் அஞ்சு மணிக்குத்தானாம். அதான் ஒரு டைம் பாசுக்கு.....)
இதை நானும் ஆமோதிக்கிறேன்...
(ல.ச.கு: டேய்ய்.. நீ யார்ரா நடுவிலே...
நான்: இல்லே காரமடைக்கு போனும். பஸ் அஞ்சு மணிக்குத்தானாம். அதான் ஒரு டைம் பாசுக்கு.....)
Lakshmi
Saravanakumar தோழர் அபிலாஷ் நான் யாரையும் தடை செய்யவில்லை.... திறந்த மனதுடன்
உரையாடுவோம்....
மேலே உள்ள பதிவு
இரவு
10 மணிக்கு மேல் வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து பகடி செய்கிறது. இதில் உரையாடுவதற்காக
சசிகலா மனோ மோகன் நேசமித்ரன் அபிலாஷ் ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஏன் என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். அவர்கள் தங்களது கருத்தைப் பதிவு
செய்தால் அதையும் தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.
மேலும்
எனது முந்தையப் பதிவுகளைப் படித்தவர்களுக்கும், அதுமட்டுமல்லாது இலக்கியத்தை ’காதல்’களுக்கு
துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் சில வக்கிரப்புத்திக்காரர்களைப் பற்றி பொதுவாக வசுமித்ர
பேசி வந்திருப்பதைக் கேட்டவர்களும் இந்தப் பதிவில் ஒலிக்கும் அற்பத்தனத்தை நன்கு அறிவர்.
இறுதியாக நரனின் கவிதை புத்தக வெளியீட்டு விழாவிலும் வசுமித்ர இந்த கருத்தைப் பதிவு
செய்ததையொட்டி அபிலாஷ் சந்திரன் சந்தேகக்கேஸ்களுக்கு ஒரு கதை என்று எழுதி சமூகத்திற்கு
ஒரு ‘கருத்தை’ச் சொன்னார். இப்போது இரண்டு மாதங்கள் கழித்து நீங்கள் ‘உரையாட’ அழைப்பு
விடுத்திருக்கிறீர்கள். இதில் நகைச்சுவை என்னவென்றால் உங்களுக்குப் பகடியும் ஒழுங்காகச்
செய்யத் தெரியவில்லை. (என்ன இருந்தாலும் கோமதிநாயகம் போல் வருமா)
வழக்கம்போல்
நீங்கள் உங்களது சீண்டலை தொடங்கிவிட்டு இப்போது மௌனம் காத்து வருகிறீர்கள். இந்த கள்ளமௌனத்திற்கு
புறக்கணிப்பு என்று பெயரளிக்க முடியாது இதற்குப் பெயர் கயவாளித்தனம். ஒன்று துணிந்து
இறங்க வேண்டும் இல்லையேல் இது போன்ற அவதூறுகளை எழுதக்கூடாது, இதென்ன கோழைத்தனம் எழுதுவதை
எழுதிவிட்டு பின்னர் புறக்கணிப்பதாக ஒரு வேஷம் போடுவது.
மேற்சொன்ன
பதிவில் இலக்கிய ஆசான் மட்டுமே, வாழ்நாள் தோழர், சமூகம் குறித்து சிந்திக்க முடியுமா,
பாதிக்கும் மேற்பட்ட ஆளுமைகள் மன்னிப்பு கேட்டு விட்டனர்… இதற்குப் பெயர் பகடியா… அதுதான்
உங்களுக்கு வரவில்லையே பிறகு ஏன் இந்த அவஸ்தை… தைரியமிருந்தால் வசுவையும் என்னையும்
குறிப்பிட்டே எழுத வேண்டியதுதானே…
லஷ்மி
சரவணகுமார் தொடர்ந்து நீங்கள் என் வாழ்க்கை பற்றி, என்னைப் பற்றி, என் மகளைப் பற்றி,
என் திருமணம் பற்றி, என் துணைவர் பற்றி நீங்கள் இப்படி பகடி செய்வதற்கு காரணம் என்ன
என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். உங்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் நான் எப்படி
உங்களிடமிருந்து பதிலைப் பெற வேண்டுமோ அப்படிப் பெறுவேன். காலணிக்கு அனுமதி இல்லாத
இடமாக இருந்தாலும் நான் காலணியோடே உள்ளே வருவேன்.
Related Posts:
http://saavinudhadugal.blogspot.in/2014/02/blog-post_17.html
http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post.html
http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_1.html
http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_9762.html
No comments:
Post a Comment