May 12, 2019

சாதி மற்றும் வர்க்கம்: மார்க்சிய சூத்திரம்

Seven theses on the Capitalist Democratic State என்கிற கட்டுரையை ஒட்டி சாதியமைப்பை பொறுத்திப் பார்க்கும் பதிவு இது.



வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்றபோதும், ஆளும் வர்க்கத்தை சார்ந்திருக்கும் (அல்லது மூலதனத்தை) அரசானது
அதிகார பலம் வேண்டி தன்னளவில் மூலதனத்திற்கு (முதலாளித்துவத்திற்கு) ஆதரவாகவும், அவ்வப்போது எதிராகவும் அல்லது சில நிபந்தனைகளோடு கைகோர்த்தும் செயல்படத்தக்க வகையில் தன்னாட்சி நிறைந்ததாகவும் இருக்கிறது.

சாதியமப்பும் அத்தகையதே! (நிலவுடைமை உற்பத்தி் உறவுகளின் கூட்டுமொத்தத்தின் அடிப்படையில், பகுதியளவில்) 

சாதி மற்றும் வர்க்கம் மற்றும்அடிக்கட்டுமானம்-மேற்கட்டுமானம்எனும் உருவகத்திற்கும் இடையிலான உறவு: மார்க்சிய சூத்திரம்

சுதந்திர இந்தியாவில் சாதியப் பிரச்சினையில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் சிந்தனை மற்றும் பாத்திரம் குறித்தும், சிலதலித்/அம்பேத்கரிய-மார்க்சியர்கள்மீதான விமர்சனத்தையும், சில தலித் கருத்தியல் நீரோட்டங்கள் பற்றியும் விவாதிக்கும் முன்னர், அடிக்கட்டுமானம்-மேற்கட்டுமானம் ஒப்புமைக் கட்டமைப்பைக் கொண்டு சாதி மற்றும் வர்க்கத்திற்கு இடையிலான உறவு பற்றிய எங்களது நிலைப்பாட்டை நேர்மறையாக வைக்கிறோம்.

உற்பத்தி உறவுகளில் மூன்று அம்சங்கள் உள்ளன என்பது மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைப் புரிதல் (1) உடைமை வடிவம் (2) உற்பத்தியில் மக்களின் பாத்திரம் மற்றும் அவர்களுக்கு இடையிலான உறவு (உழைப்புப் பிரிவினை) (3) பொருள் விநியோக வடிவம். இந்த மூன்று கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், பண்டைய இந்தியா தொடங்கி, பிந்தைய மத்தியக் காலம் வரை (காலனிய சகாப்தத்திற்கு முன்னர் வரை) சாதியமைப்பு என்பது ஒரு உற்பத்தி உறவாக இருந்திருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒப்பீட்டளவிலான உள்ளார்ந்த இயக்கம் இருந்தபோதிலும் மேலும், சில சாதிகளின்சமஸ்கிருதமயமாக்கல்காரணமாக, சாதியமைப்பே உற்பத்தி உறவுகளாய் அமைந்தது. இஸ்லாமியர்கள் வருகைக்குப் பின்னர் நிலைமை சற்று மாறியது, அவர்களிடையே கூட சாதியமைப்பு மாதிரி வளர்ந்தது. சீக்கிய மதத்திலும் இதே நிலை. அதனால், மத்தியக் காலம் வரை, சாதியமைப்பே சமூகத்தின் பொருளாதார அடித்தளமாக இருந்தது, அரசியல்-மத-சமூக மேற்கட்டுமானமானது அதனோடு அனுசரித்துப் போனது. அதாவது, சாதிய பாகுபாடு மதிப்பீடுகள் சமூக வாழ்வில் ஒரு முக்கியப் பங்காற்றின. சாதியக் குழுக்களின் வரம்புகள் ஏறத்தாழ வர்க்க வரம்புகளோடு மேற்குவிவதாக இருக்கின்றன. பாரம்பரியச் சொத்துரிமை மற்றும் அகமணமுறையின் காரணமாக, சாதிக் குழுக்கள் ஒன்று மாறும் தன்மையுடன் இருந்தது அல்லது நிலையான வர்க்கமாக இருந்தது. இறுக்கமான, பழமைவாத உழைப்புப் பிரிவினையிலிருந்தே அத்தகைய நிலைகள் உருவாகின்றன. இந்த அடிப்படையில் அது உலகின் மற்ற சமூகங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் நிலை சற்றே மாறுபட்டது. ஆனால், இந்து மதத்தினரிடையே சாதியக் குழுக்களே வர்க்கமாக உருப்பட்டது, அதில் தலித் சாதிகள் நிலமற்ற உழைப்பாளிகளாகவும், இடைநிலை சாதிகள் விவசாயிகளாகவும், ‘வைசியசாதிகள் வணிகர்களாகவும் மற்றும் மேல் சாதிகள் நில உடமை வர்க்கமாகவும், அறிவுஜீவி வர்க்கமாகவும் அமைகின்றனர்.

முதல் முறையாக காலனிய சமூக-பொருளாதார அமைப்பில் சிறிது கொந்தளிப்பு ஏற்பட்டது, குறிப்பாக தொழிற்சாலைகள் , நிர்வாக இயந்திரம் மற்றும் எண்ணற்ற நகர்புற தொழில்களின் வளர்ச்சிக்குப் பிறகு. சாதியக் குழுக்களின் வரம்பும், வர்க்கக் குழுக்களின் வரம்பும் கிட்டத்தட்ட முழுமையாக ஒன்றோடு ஒன்று மேற்குவிவதைக் காட்டிலும், ஓரளவுக்கு இடம்பெயர்ந்தது. ‘மேல்சாதியைச் சேர்ந்த பெரும்பாலர்கள் நில உடைமையாளர்களாக இருக்கின்றனர், அறிவுஜீவி சமூகம் உட்பட குட்டி பூர்ஷுவா வர்க்கம் அவர்களிலிருந்தே உருவானது. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலிருந்தாலும், குட்டி பூர்ஷுவா வர்க்கத்தின் வெவ்வேறு படிநிலைகள் தலித்துகள் மற்றும் இடைநிலைச் சாதிகளிலிருந்தும் உருவானது. பெரும்பாலான இடைநிலை சாதிகள் ரயாத்-குத்தகைதாரர்கள் மற்றும் தலித் சாதிகள் பண்ணைக் கூலிகள் அல்லதுகீழான’, ‘அசுத்தமானவேலைகளைச் செய்யும் தொழிலாளர் வர்க்கமாக இருக்கின்றன. மறுபுறம், மேல் சாதி மற்றும் இடைநிலைச்சாதி குத்தகைதாரர்கள் மெல்ல மெல்ல விவசாயத்திலிருந்து பிடுங்கப்பட்டு, தொழிற்சாலைகளில் நுழைந்தனர், அவர்களது எண்ணிக்கையும் வளரத் தொடங்கியது. அப்போதும்கூட கிராமங்களில் சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை பலமாகவே இருந்தது. இவ்வாறாக சாதி மற்றும் வர்க்க மேற்குவிப்பு பாதிப்புக்குள்ளானது.

அதாவது, சாதியமைப்பானது பொருளாதார அடித்தளத்தின் (உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தம்) ஓர் அங்கமாக இருந்தது. ஆனால் அது மட்டுமே பொருளாதார அடித்தளமாக இருக்கவில்லை. மேற்கட்டுமானத்தைப் பொறுத்தவரை, பிரதான அடிப்படையில் அது அரை நிலப்பிரபுத்துவ நில உறவுகள் எனும் அடித்தளமாக நிலப்பிரபுத்துவமாக இருக்கிறது. அக்கட்டத்தில் வளர்ந்துவந்த பலவீனமான முதலாளித்துவ சிந்தனைகள் மற்றும் நிறுவனங்களுக்குக் கூட சாதியமைப்பை தாக்கும் பலம் இருக்கவில்லை. குட்டி பூர்ஷுவாக்கள் வர்க்கத்தின் படித்த மக்கள்கூட சமூக அடித்தளத்தின் சில துறைகளில் நவீனர்களாக இருந்தபோதும் கூட, மதச் சடங்குகளை முனைப்புடன் பின்பற்றினர், அதுமட்டுமின்றி, அகமணமுறை மற்றும் சாதிய பாகுபாட்டில் நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றனர்.  இந்து மதம் மற்றும் சாதியமைப்பைத் தொடுவதில்லை என்பது காலனிய ஆட்சியாளர்களின் முடிவாக இருந்தது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

பின்-காலனிய இந்தியாவில் அனைத்துத் திசையிலுமான முதலாளித்துவ வளர்ச்சியானது நிலைமையை சற்று மாற்றியது. தொழிற்சாலை விரிவாக்கத்தோடு, சேவைத் துறையும் வளர்ந்தது. நில உறவுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ மாற்றமானது, வகையீட்டை, பாட்டாளிமயப்படுத்துதலை, கிராமப்புற மக்களின் இடப்பெயர்வை துரிதப்படுத்தியது.  சாதி மற்றும் வர்க்கம் ஊடுருவிப் பரவுதலும், பிணைதலும் பரவலாகக் காணப்பட்டது. அரசு அதிகாரத்தில், சுதந்திர அறிவுத்துறைகளில் ஆதிக்கம் செலுத்தியது, செலுத்துவது மேல் சாதிகளே, ஆனால் தலித்துகள் மற்றும் இடைநிலை சாதிகளும் இந்த வரம்பிற்குள் வந்துள்ளனர். நிலக்கிழார்கள், குலாக்குகள் மற்றும் விவசாயிகள் பிரதானமாக மேல் சாதி மற்றும் இடைநிலைச் சாதிகளாக உள்ளனர் என்றாலும், இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த சிறு-குறு-நடுத்தர விவசாயிகள், தொழிலாளர்களும் உள்ளனர். இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த மாபெரும் மக்கள் தொகை சிறு விவசாயிகளே. தலித் மக்கள் தொகையில் 90 சதவிகிதம், பாட்டாளி மற்றும் அரைப் பாட்டாளிகள் கொண்டது. ஆனால் பாட்டாளிகள் மற்றும் அரைப்பாட்டாளிகளில் பெரும்பான்மையினர் தலித்துகள் இல்லை. ‘அசுத்தவேலை என்று சொல்லப்படும் வேலை இன்னமும் தலித்துகளுக்கே ஒதுக்கப்படுகிறது. கைவினைத் தொழில் சுருங்கிவிட்டது, ஆனால் இப்போதும்கமின்முஸ்லிம் சாதிகளும், தலித்துகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் இந்தத் துறையில் பணி புரிகின்றனர், இதில் மற்ற சாதிகளின் இருப்பு அரிது. இப்படிப்பட்ட ஒரு நிலையை எப்படி வகைப்படுத்துவது?

இப்போதும்கூடஉற்பத்திச் சக்திகளின் கூட்டு மொத்தத்தின்’ (பொருளாதார அடித்தளம்) ஒரு பகுதி சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையாகவும், சாதி அடிப்படையிலான உடைமை உரிமையாகவும் இருக்கிறது. வேறு சொற்களில் சொல்வதானால், சாதியமைப்பென்பது இன்னமும் அடித்தளத்தின் ஒரு பாகமாக இருக்கிறது, சிறியதாக. சாதியமைப்பு மேற்கட்டுமானத்தில் பலமான இருப்பைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே. இப்போதும், முதலாளித்துவ உற்பத்தி ஊட்டி வளர்க்கும் காட்டுமிராண்டித்தனமான பெண் அடிமைத்தனமும், மத நம்பிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளாலும், கலப்புத் திருமணம் என்பது அரிதாகி வருகிறது, சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் முறையே நிலவுகிறது. பொருளாதார அந்தஸ்து சமமாக இருந்தாலும் சாதி விட்டு  சாதி திருமணம் செய்வது சிரமமே. கொடுமையானகப்-பஞ்சாயத்துகள்மற்றும்சாதி-பஞ்சாயத்துகள்மற்றும்சாதி ஆணவக் கொலைபோன்றவை பூர்ஷுவா அரசமைப்பு அளித்திருக்கும் சிவில் உரிமைகளைக் கூட பயனற்றதாக்கி வருகிறது.

இதனால், சாதியமைப்பானது, அடித்தளத்தில் ஒரு சிறிய பகுதியாக இருப்பினும், மேற்கட்டுமானத்தில் சமூக அமைப்பின் வடிவில் இறுக்கமானதாக, பலமானதாக இருக்கிறது. அதன் பழைய செயலின்மையை பாதுகாப்பது மட்டுமின்றி, அதற்கு ஒரு புதிய வீரியத்தையும் முதலாளித்துவம் கொடுத்திருக்கிறது. தீண்டாமை மற்றும் அன்றாட வடிவிலான அடக்குமுறைகள் ஓரளவுக்கு கைவிடப்பட்டிருந்தாலும், சமூக பாகுபாடு, தலித்துகளை இழிவுபடுத்துவது தொடர்கிறது, அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில், மேல் சாதி நில உடைமையாளர்கள், அவர்களைக் காட்டிலும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த குலாக்குகள் தலித் உழைப்பாளிகள் மீது அட்டூழியங்களை இழைக்கிறனர். பின்னர், சாதி அடிப்படையிலான அணிதிரட்டல் மூலம் தங்களது நிலையைப் பலப்படுத்திக் கொள்கின்றனர். மற்ற சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தலித் தொழிலாளர்கள் பக்கம் நிற்பதில்லை. இவ்வாறாக பொருளாதார நலன்களுக்கான மோதலுக்கு சாதிய முலாம் பூசப்படுகிறது.  அதன் சாரம் வர்க்கப் போராட்டமாக இருப்பினும், அது திரிக்கப்பட்ட முறையில் சாதியப் போராட்டம் என்று வெளிப்படுத்தப்படுகிறது. மேல் சாதி மற்றும் இடைநிலை சாதி நிலவுடைமையாளர்கள், ஆளும் வர்க்கத்தின் இளம் பங்காளிகளாக இருப்பதால், அவர்களுக்கு எதிரான எந்தப் புகாரும் பெயரளவில் அல்லது பூர்ஷுவா அரசியல் அழுத்தத்தினால் எடுக்கப்படுகிறது. கொடூரமான கப் பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை அதற்கென சுதந்திரமான அரசியல் அதிகாரமெல்லாம் (நியு சோஷலிஸ்ட் இனிஷியேட்டிவ் கோட்பாட்டாளர்கள் போன்று, சில நவ-மார்க்சியர்கள் கருதுவதுபோல்) கிடையாது. பூர்ஷுவா தேசிய அரசின் பலமான சமூகத் தூண்கள் அவை, பூர்ஷுவா அரசியலுக்கும் அதற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது.

மேலே விவாதித்தது போல், பூர்ஷுவாப் பாராளுமன்ற அரசியலின் ஒட்டுமொத்த ஓட்டு வங்கி விளையாட்டும், சாதிய அடிப்படையிலும், வகுப்புவாதப் பிரிவினை ஆட்டமுமாகவே இருக்கிறது. இந்த ஆட்டத்தில், அதன் பங்கிற்குச் சாதிகளிடையில் பாகுபாட்டையும், பகைமையையும் வளர்த்து, சாதியின் சமூக வடிவத்தைப் பலப்படுத்துகிறது. தலித் சாதிகளே பெரும்பாலும் அதன் இலக்கு. சாதியமைப்பானது கிராமப் புறங்களில் வர்க்கப் போராட்டத்தை சிதைத்து, உருக்குலைத்து, பரந்த உழைக்கும் கூட்டத்தின் ஒற்றுமையை உடைக்கும்போது, நகர்புறங்களில் வாழும் உழைக்கும் கூட்டத்தின் ஒற்றுமையை எய்திடுவதில் ஒரு தடைக்கல்லாகி விடுகிறது. இருப்பினும், கிராமப்புறங்களைப் போல் நகர்புறங்களில் அது முக்கியத் தடைக்கல்லாக இல்லை. சமீப காலங்களில் முறைசாரா தொழிலாளர்களிடையே நிகழ்ந்த தன்னெழுச்சியான அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் எதிலும் ஒற்றுமையை ஏற்படுத்திட சாதி அடிப்படையிலான பாகுபாடு பிரச்சினையாக இருக்கவில்லை. இருந்தபோதும், நகர பாட்டாளி வர்க்கத்திடமும், சாதி அடிப்படையிலான பாகுபாடும், பிரிவினையும் இன்றைக்கும் நிலவுகிறது, பூர்ஷுவா கட்சிகளின் சங்கத் தலைவர்களால் அது பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ‘அசுத்தப் பணிகளில் ஈடுபடும் தலித் தொழிலாளர்கள் போராட்டங்கள் மற்றும் சமூக வாழ்விலும் கூட தனித்திருக்கின்றனர். ஆக, இன்றைக்கும் சாதியமைப்பானது பொருளாதார அடித்தளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது, சமூக-கலாச்சார மற்றும் கருத்தியல் மேற்கட்டுமான மட்டத்தில் அதன் இருப்பு தீவிர செயலூக்கத்துடன் இருக்கிறது என்று இதையெல்லாம் வைத்து சொல்ல முடியும். இது முன் - முதலாளித்துவ மேற்கட்டுமானமோ அல்லது அதன் எச்சமோ அல்ல. இதுவும் ஒரு முதலாளித்துவ மேற்கட்டுமானமே. இது ஒரு முதலாளித்துவ சாதியமைப்பு. அதில், நயமிக்க வகையில் சாதியமைப்பு தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. (The caste-system has been co-opted through articulation). ஹெகலியச் சொல்லியலில் சொல்வதானால், சாதியமைப்பானது மேல்நிலையாக்கம் செய்யப்பட்டுள்ளது.  அதாவது, கீழ் மட்ட நிகழ்விலிருந்து அது உயர்மட்ட (சிக்கலான) நிகழ்வாக மாறிவிட்டது.  கடந்தகால வளர்ச்சியின் கருத்துரைகள் அதில் நிலவுகின்றன. இப்போதும், சிறு பிரிவிலான சாதிக் குழுக்கள் மற்றும் வர்க்கங்களின் வரம்பு ஒன்றோடு ஒன்று மேற்குவிகின்றன.

சாதியமைப்பானது பூர்ஷுவா அமைப்பாக புதுப்பிக்கப்படவில்லை என்றால், முதலாளித்துவம் நீடித்து இருந்தால், சாதியமைப்பானது மெல்ல மறைந்துபோகும் என்று பொருளாகும். இரண்டாவது, அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்னும் உருவகத்திற்குள் சாதியமைப்பைச் சரியான இடத்தில் பொருத்திப்பார்ப்பதில்லை. ஆனால், உண்மை என்னவெனில், மூலதனத்தின் ஒரு சுதந்திர இயங்குமுறையானது, சாதியமைப்பைத் தளர்த்துகிறது, ஆனால் அதன் எதிர்ப்பு இயங்குமுறை அதனை புதுப்பிக்கிறது, சுத்திகரிக்கிறது, அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என இரண்டு நிலைகளிலும் அதனை தகவமைக்கிறது, அதன் மூலம் முதலாளித்துவ சமூக-பொருளாதார அமைப்புக்குள்ளாகவே அதனை மறுஉருவாக்கம் செய்கிறது.  இந்தப் பிரச்சினைப் பற்றிய எங்களது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். இந்த நீரோட்டமானது, அம்பேத்கர், பெரியார், தலித் எழுச்சி என்னும் நிகழ்வு, அம்பேத்கரிய, மார்க்சிய இணைப்பு போக்கு, மற்றும் நவ-மார்க்சிய அடையாள அரசியல் ஆகியவற்றை விமர்சனப் போக்குடன் அணுகி சரியான நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால், சாதி ஒழிப்பிற்கான பாதையை முன்வைக்கையில், சாதி அடிப்படையிலான அமைப்புருவாக்கத்தை எதிர்ப்பதற்கும், பூர்ஷுவா அரசின் தலித் தலைவர்களை அம்பலப்படுத்துவதற்கும், என்ஜிஓ வகையறா அடையாள அரசியலை, நவ-மார்க்சியக் கண்ணோட்டங்களை அம்பலப்படுத்துவதற்கும் அழுத்தம் கொடுக்கிறது.
**********
அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமான உறவுகள் குறித்து விவாதிக்கையில், மார்க்ஸும் எங்கெல்ஸும், ஒரு சமூகத்தில், ஒவ்வொரு சமூக மட்டமும் மற்றொன்றின் மீது செல்வாக்கு செலுத்தும், அதேபோல் ஒவ்வொரு மட்டமும் சுயாட்சியும் கொண்டிருக்கும், ஆனால் அனைத்து மட்டங்களும் அடிக்கட்டுமானத்தின் இயல்போடு பொருந்தக்கூடியதாய், துணையாய் இருக்குமே ஒழிய, அதற்கு முரணாய் செயல்படாது. அவர்கள்இறுதியாக / முடிவாகஅடிக்கட்டுமானமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.

.  சமூகத்தில் அடிக்கட்டுமானமும், மேற்கட்டுமானமும் முறையே வெவ்வேறு அளவிலான தாக்கத்தை கொண்டிருக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான தாக்கத்தை செலுத்துவதில்லை. ஒன்று கூட ஒன்று குறைய இருக்கும். ஆனால் அடிக்கட்டுமானம் கொண்டிருக்கும் தாக்கம் போன்று வேறு எதுவும் கொண்டிருப்பதில்லை, அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானமாகும் அதேபோல் மேல் கட்டுமானம் அடிக்கட்டுமானமாகும். இறுதியில் அதே பழைய அடிக்கட்டுமானமும், மேல் கட்டுமானமுமே மீதமிருக்கும். இல்லையேல், இரண்டும் சமமான தாக்கம் கொண்டிருப்பின்,  ஒன்று மற்றொன்றை பாதிப்பதில்லை. இரண்டும் முன்பு போலவே இருக்கும். ஒன்றைவிட மற்றொன்றுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்போது மட்டுமே ஒன்று மற்றொன்றின் மீது தாக்கம் செலுத்தும். இந்த சிறிய விஷயத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.   

அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமான உறவுகள் குறித்து விவாதிக்கையில், மார்க்ஸும் எங்கெல்ஸும், ஒரு சமூகத்தில், ஒவ்வொரு சமூக மட்டமும் மற்றொன்றின் மீது செல்வாக்கு செலுத்தும், அதேபோல் ஒவ்வொரு மட்டமும் சுயாட்சியும் கொண்டிருக்கும், ஆனால் அனைத்து மட்டங்களும் அடிக்கட்டுமானத்தின் இயல்போடு பொருந்தக்கூடியதாய், துணையாய் இருக்குமே ஒழிய, அதற்கு முரணாய் செயல்படாது. அவர்கள்இறுதியாக / முடிவாகஅடிக்கட்டுமானமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.

உழைப்புப் பிரிவினையின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களானது, வெவ்வேறு சொத்து வடிவங்களேயாகும். அதாவது, உழைப்புப் பிரிவினையில் நிலவும் (குறிப்பிட்டமொ.ர்) கட்டமானது, மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும் பொருள், கருவி மற்றும் உழைப்பின் பலன் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. (மார்க்ஸ், எங்கெல்ஸ். 1845. ஜெர்மன் சித்தாந்தம், மாஸ்கோ பதிப்பு, 1976. ஆங்கிலத்தில் பக்.38)1

மனிதர்களிடம் உற்பத்தி சாதன உடைமையைப் பொறுத்தோ அல்லது உழைப்பின் பலன் அபகரிக்கப்படுவதைப் பொறுத்தோ மனித உறவுகள் அமைகின்றன.  யார் உழைக்கிறார்கள்என்னும் கேள்வியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். [இருப்பினும், இந்த மேற்கோளில் அக்கேள்வி இல்லை]

மேலும், 1850இல் மதம் குறித்து எங்கெல்ஸ் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம், குறிப்பிட்ட காலகட்டத்தின் வர்க்கப் போராட்டமானது மதச்சாயலைக் கொண்டிருக்குமெனில் (மத அம்சங்களைமொ.ர்), பல்வேறு வர்க்கங்களின் நலன்கள், அவசியங்கள் மற்றும் தேவைகள் ஒரு மதத்திரையின் பின் ஒளிந்து கொண்டிருக்குமெனில், அது உண்மை நிலையை சிறிதளவே மாற்றக் கூடியது, அது அந்தக் காலச்சூழலின் நிலைமைகளைக் கொண்டே விளக்கப்பட வேண்டும் – (எங்கெல்ஸ், 1850 ஜெர்மனியில் விவசாய யுத்தம், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ,

(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் நூலிலிருந்து)