25.6.23 அன்று தினமலர் மதுரை பதிப்பில் வெளிவந்த பேட்டி. நன்றி வெங்கி அவர்கள்.
விளக்கம் 1:
நான் கொங்கனி மொழி பேசும் பெண்ணல்ல!
தமிழ் மொழி பேசும் பெண். தாய்ப்பாலோடு என் குருதியில் கலந்திருப்பது தமிழ் தானே ஒழிய
என் தாய் மொழி அல்ல! கொங்கனி மொழியை பேசாமலே விட்டு, அரைகுறயாக மட்டுமே எனக்கு தெரியும்.
தாய்மொழி மறந்த நீயெல்லாம் தமிழ் மொழி காக்க வந்துட்டியா என்று கேட்கத் தோன்றும். அங்குதான்
அலைகழிக்கப்படும் மக்களின் வாழ்வை அவதானிக்க வேண்டும்.
மொழிப்போர் மற்றும் போர்த்துகீசிய
ஆக்கிரமிப்பினால் இடப்பெயர்வு நடந்து என் மூதாதையர் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். என் தந்தை வழி மூதாதையர் கேரளாவிலும், என் தாய் வழி மூதாதையர் ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில்
உள்ள பள்ளிப்பட்டு என்ற ஊரிலும் இடம்பெயர்கின்றனர். குழந்தைப் பேறுக்காக பள்ளிப்பட்டு
சென்ற அம்மாவுக்கு அங்கு நான் பிறந்திருந்தாலும், 47 வருடங்களாக நான் ஒரு சென்னை வாசியே
(Chennai city gangsta!).
என் பூர்வீகமான கோவாவிற்கு நான்
இதுவரை சென்றதே இல்லை! தொடக்க காலத்தில், இடம் பெயர்ந்த ஊரைப் பொறுத்து அகதிகள் போலவே கொங்கனியர்கள் வாழ நேர்ந்ததாக சொல்வார்கள். போர் மற்றும் ஆதிக்கம் காரணமாக
இடம் பெயரும் இலங்கைத் தமிழர் உள்ளிட்ட இனக்குழுக்களைப் போல் தான் எங்கள் குடும்ப வரலாறும்
உள்ளது!
கணவனால் கைவிடப்பட்ட பாட்டி 3
பிள்ளைகளைக் காக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் தஞ்சம் புகுந்து, உணவு, படிப்பு, தங்குமிடம் இவற்றிற்காக அவ்வை இல்லத்தில் மகள்களை
சேர்த்துவிட்டு விறகடுப்பூதி சமையல்காரியாக இந்த சென்னையில் வாழ்க்கையை தொடங்கி அவள்
வழியாக 3 தலைமுறைகளை ஆளாக்கிச் சென்றுவிட்டாள். வறுமையில் உழன்றாலும், யாருக்கும் கூலி
அடிமையாக இருக்க மாட்டேன் என அப்பா xerox கடை போட்டு, குடும்பமாக உழைத்து அல்லல்பட்டு
உழைத்து உழைத்து முன்னேறிய குடும்பம். செல்வந்தராகும் அளவுக்கெல்லாம் உழைப்பு உயர்வைத்
தரவில்லை. வறுமையிலிருந்து எங்களை மீட்டது. மத்தியத்தர வாழ்வு கிடைத்தது. (ஆனா நான்
அப்பப் வீட்டை விட்டு ஓடிடுவேன்!). மார்க்சிய அறிவின் படி சொல்ல வேண்டுமெனில் குறுவிவசாயிகள்
போன்று குடும்பமாக உழைத்து வாழ்ந்த சுதந்திர உற்பத்தியாளர் வர்க்கம்.
இந்த வாழ்வாதாரச் சூழலில் தமிழ் மொழி பேசும் தமிழர்களாகவே நாங்கள் மாறிப் போனோம்.
தமிழ் மீதான எனது பற்றும் அப்படியே. மேலும் தொழில் நடக்கும் கடையில் அந்நியர்களாக நாங்கள்
தெரிந்துவிடக் கூடாது, அது தொழிலை பாதிக்கலாம் என்னும் அச்சம் காரணமாகவும் என் தாய்மொழியை
பேசும் சூழல் வாய்க்கவில்லை! ஆம்! அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய பிழைப்புச் சூழல்.
போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்த
ஒரு பெண்ணைப் பற்றி இங்கே சொல்லப்படுவதென்ன? (அம்பேத்கரை விமர்சிக்கும் ஒரு நூலை மொழிபெயர்த்ததற்காக).
Casteist and Privileged! I
honestly want to say fk your Socio-Political understanding that lacks class
understanding. I re-iterate Dalits & Women are same, esp in working class.
And Dalits and the working class are the same, battered by varying oppressive
and exploitative conditions.
பூர்வீகத்தைக் கூட சென்று
பார்க்க முடியாத Under-Privileged working Class வாழ்க்கை என்னுடையது. கடுமையான உழைப்புச்
சூழலில் குட்டி குட்டி பொழுது போக்கிற்கு இடம் கிடைப்பதே வரம் போன்றது! இதில் எங்கே
GOA விற்கு செல்வது, பணம், நேரம், விடுமுறை எல்லாம் கிடைக்க வேண்டுமல்லவா!
எனவே தோழர்களே வன்மத்திலிருந்து
ஒருவரின் வாழ்க்கையை அனுகாமல், முகநூலில் மகிழ்ந்திருப்பது போன்ற புகைப்படங்களையும்,
ரீல்ஸ்களையும் பார்த்து ‘அவளுக்கென்னப்பா Privileged வாழ்க்கை வாழ்றா’ என்று பொறுமாமல்,
இருக்கும் வலிகளை எல்லாம் மறைத்து ஒருவள் எப்படி புன்னகையை பூசிக்கொள்கிறாள் என்று
வேண்டுமானால் அவதானிக்க முற்படுங்கள்.
35 வயதில் பேச்சிலர் படத்தில்
நடிக்கவில்லை. படப்பிடிப்பின் போது எனக்கு 44 வயது இருக்கும். 34-35 இல் தான் நிர்மலா
என்ற அப்பாவிப் பெண் கொற்றவையாக உருவானாள் 😊
நான்கு புத்தகங்கள் மொழிபெயர்த்துள்ளேன்.
ஆனால் இரண்டு மட்டுமே குறிப்பிடப்பட காரணம் புரிகிறது! மேலும் பெண் என்பதால் பெண்களின்
சுதந்திரம், ஆடை சுதந்திரம், பெண்களுக்காக மட்டுமே எழுதுவது, இயங்குவது போன்றதொரு தோற்றம்
கொடுக்கப்படுவது எனக்கு அயர்ச்சியைத் தருகிறது. பெண் என்றால் பெண்ணியவாதி என்கிற அடையாளங்களை
நான் வெறுக்கிறேன். அதே போல் பெண் சுதந்திரத்திற்காக நான் எழுதவில்லை பெண் விடுதலைக்காக எழுதுகிறேன்.
சுதந்திரம் வேறு விடுதலை வேறு. அதோடு பெண் விடுதலைக்காக மட்டுமே நான் எழுதவில்லை ஒட்டுமொத்த
மானுட விடுதலைக்காக நான் எழுதிகிறேன். அதில் ஒரு சிறிய துளி தான் பெண் விடுதலை மையப்பட்டது.
சாதி ஒழிப்பு, உழைக்கும் வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய
மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய பரப்புரை ஆகியவையே என்னுடைய முதமை பங்களிப்பாக
வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்று விழைகிறேன்.