Sep 21, 2010

காத்திருத்தலின் நேரங்கள்


வாசமற்ற வேர்கள் இமைதிறக்கும் வேளையில்
குதிரையின் வேகத்தோடு
பாய்கிறது
அது
நிரம்பிப் பிசைகிறது
வேலிகாத்தான் முட்கள்

சில
நேரங்களில் விட்டுச்செல்கிறது
நடையதிரா பூனையின் கொடும் நகங்களை
காற்று நிரம்பிய வெம்மைத் திரவம்
வளரும் முட் செடிகள்
பூணை நகங்கள்
எரியும் மணம்
மகாப் பிரளயம்

இருண்டு ஒலித்தது
செவிகள்

காத்திருக்கிறது
அது
வீட்டின் சமையலறைக்கதவுகளில்
விட்டுச் செல்கிறது

அதீததில் கேட்கப்போகும்
உலை
கொதி
இசை கேட்க

Sep 10, 2010

தானமென் உரு.



சிறுமியின் முத்தமொன்றைப் பெற....
நிலைகொள்ளாது
அழுகிறான்

கடவுள்

நிழலின்றி அலையுமவன் குரலில்
யாசகம் அலைவுற

இரக்கம் கொண்டு
தானமென
க்
கருமுட்டையொன்றைக் காற்றில் வீசினேன்

பிரசவம்

முத்தத்தை சுவைத்த கடவுள்
பொறாமை இறுகப் பற்ற
வானைக் கிழித்தெறிந்தான்

சிறுமியின் முத்தம்.