அவர்கள்
மிருகங்களை உற்பத்தி
செய்யும்
கூடாரங்களை
செவ்வனே
நடத்துகிறார்கள்
அவர்களால்
வளர்க்கப்பட்ட
அந்த மிருகம்
அவள்
சிறுமியாய்
இருக்கும் பொழுது
சோற்று
பருக்கைக்கு கணக்கு எழுதியது
அவள்
பருவம்
எய்தியவுடன்
தந்தமை உடை
துறந்து
எஜமானருடை
அணிந்தது
விலா எலும்பும்
வயிற்றுப்
பகுதியும்
கன்னங்களும்
நாளும் சிவக்கத் தவறியதேயில்லை
இளமையை
முதலீடாக்க பாடம் நடத்திய
அதன் பேராண்மை
மிக்க உதடுகள்
எண்ணிக்கையைத்
தவிர வேறெதுவும் உச்சரித்ததில்லை
உறக்கத்தை
கனவுகளில்
மட்டும் வருமாறு
உத்தரவிட்டாள்
விழித்திருக்கும்
வேளைகளில்
உலக வரைபடத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தாள்
எல்லைக் கோடுகளை
அழிக்கும் ஒரு
கருவியை செய்யத் தொடங்கினாள்
திருமண வயது
நாற்பது
என்று தீர்மானம்
இயற்றியதந்த மிருகம்
இருபது
வருடங்களுக்கான
தண்டனையை உறுதி
செய்துக் கொண்டாள்
அது மரண
தண்டனையாகாமல் போனது
நாடோடி வாழ்க்கை
அச்சுறுத்தியபோது
அவள்
பெண்
என்பதை உறுதி
செய்து கொண்டாள்
சரணடைய வைத்தது
எதிரொலிக்கும்
குரல்கள்
மிருகம்
குறிகள் கொண்ட
மிருகங்களாய் மாறி
குழந்தமையை
சிரிப்பை
சுயமரியாதையை
அறிவுநிலையை
காதலை
வாழ்க்கையை
இறுதியில்
ஆம் இறுதியில்
பரித்துக்
கொண்டது
அந்தத் தங்கக்
கோதுமையை
பூசியங்களுக்கிடையில்
அரைத்து விழுங்கியது
அவளது தாய்மையை