முத்தையா படத்தில் நடித்தால்
சாதி வெறி, சாதியக் கூட்டணி!
புதிய புரட்சியாளர்கள்
கண்டுபிடிப்பு!
படத்துல நடிச்ச அத்தனை
பேரோட சாதியையும்
தோண்டி எடுத்தீங்களாப்பு!
திமிரு புடிச்ச அப்பனை
எதிர்க்குற அப்பன் படம்
சாதியப் பெருமை பேசுச்சாப்பு!
சரி! முத்தையா சாதியைத்
தோண்டிட்டீங்க
இதுக்கு முன்னாடி சசிக்குமார
வச்சி நோண்டிட்டு இருந்தீங்க
அவரோ நந்தன்னு ஒரு படத்துல
நடிக்கிறாரு
அவரு எடுத்த அசுரவதம்
படம் பீடோஃபீல் பத்தினது
அதுல வசு பீடோஃபிலா
நடிச்சிருந்தாரு.. அதுவும் சாதி வெறியா
இல்லை அம்பேத்கரை, அயோத்திதாசரை
எல்லாம் விமர்சனம் செய்றதால
நிஜத்துலையும் அவரு
அப்படின்னு சொல்லுவீங்களா?
விருமன் படத்துல நாயகன்
கார்த்தி
அப்ப அவரும் முத்தையாவோட
சாதி வெறி கூட்டணியாப்பு!
சரி அவரைக் கூட விடுங்க
மோடிஜிய போட்டு வாங்குற
பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு
அப்ப அவரும் சாதி வெறியனாப்பு!
அம்பேத்கரைப் புகழ்ந்தா
சாதிய தோண்ட மாட்டீங்க
விமரசனம் பண்ணா ஆணாதிக்க சிந்தனை எப்படி வளர்க்கப்படுதுன்னு
பேசுற பதிவுல கூட வன்மத்துல
வந்து லந்து பண்ணுவீங்க!
ஒருத்தர்க்கு என்ன அதிகாரம்
இருக்கும்
உச்சத்தில் இருக்கும்
கதாநாயகனா இருக்குற
ஒருத்தருக்கு என்ன அதிகாரம்
இருக்கும்
சமூகத்திற்கு தவறான
கருத்தை சொல்லும் கதாப்பாத்திரங்களை,
கருத்துகளை சொல்லக்
கூடாது என்று மறுக்கும் அதிகாரம்
யாருக்கு இருக்கும்னெல்லாம்
ஒரு படிநிலை புரிதல் எல்லாம் வேணும்
அதுக்கு மார்க்சியம்
படிச்சிருக்கோணும்
வாய் இருக்குன்னு பொலிட்டிகல்
கரெக்ட்னெஸ் பேசாம
ஓரமாப் போய் மார்க்சியத்தைப்
படிங்க!
சவீதா அம்பேத்கரின்
சாதியை வைத்து அவர் தான்
அம்பேத்கரை கொன்றார்
என்று பேசியவர்களுக்கும்
உங்களைப் போன்றவர்களுக்கும்
ஒரு வேறுபாடுமில்ல..
அதையும் வசு ஒரு பதிவாப்
போட்டாரே படிக்கலையா!
எல்லாத்தையும் படிச்சுப்போட்டு,
அம்பேத்கர் மீது வைத்த
விம்ரசனத்துக்கு
கருத்துரீதியா அறிவார்ந்த
உரையாடலை முன்வைங்க
சின்னப்புள்ளத்தனமா
உருட்டாதீங்க!
என்னோட ப்ளாக்ல இந்த
அரதப் பழசான எல்லா கேள்விகளுக்கும்
பதில் சொல்லி இருக்கேன்.
அதையாச்சும் தேடிப் படிங்கப்பு!
#வசுமித்ர எழுதிய புத்தகங்கள் :) panuval.com/vasumithra மொத ரெண்டு புத்தகங்கள் தான் ஒரு குரூப்போட வன்மத்துக்குக் காரணம் அவர் முகநூல் பக்கமா போனீங்கன்னா இன்னும் நிறைய இருக்கு! அங்க வசை பாடிட்டு நேர்ல தோழர் உங்களை, வசுவல்லாம் மறுக்க முடியுமான்னு வந்து பேசுனவங்கல்லாம் உண்டு
விருமன் படத்துல மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு அப்ப அவரும் சாதி வெறியனாப்பு! விடுதலை நாயகன் சூரி நடிச்சிருக்காரு! தயாரிப்பு சூர்யா! அப்ப சூர்யாக்கும் சாதி வெறியாப்பு! உங்க வன்ம கக்கலை நிறுத்தித் தொலைங்க! பதில் சொல்லி அலுத்துப் போச்சு