Nov 13, 2021

Rape Victim புகைப்படத்தை வைத்து தான் இங்கு நீதி கிடைக்குமா? கூருணர்வு வேண்டாமா?

 Rape Victim / பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் நபர்களின் புகைப்படத்தை வெளியிடாதீர்கள் என்று சொன்னால் ஒருவரது பதில்:

//பாதிக்கப்பட்ட பெண்களே வெளிய வந்து, இது போன்ற கயவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்று பேசும் வேளையில், உங்கள் பழமை வாதத்தை இங்கு வந்து கொட்ட வேண்டாம்... வெளியே தெரிந்தால் மானம் போயிரும் மயிரு போயிரும் மண்ணாங்கட்டி போயிரும் போன்ற மன அழுத்தமும் தான் இந்த தவறான முடிவுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்க முடியும் என நம்புகிறேன்.. போட்டோ வச்சு பூச்சி காட்டியதுளாம் போதும்.. முடிந்தால் எம் பிள்ளைகளுக்கு இதை எதிர்த்து சண்டையிடும் துணிவை வளருங்கள்..// இதில் இவர் ஊடகத் துறையில் வேறு வேலை செய்கிறார்.

தனிப்பட்ட முறையில் மெஜெஞ்சரில் சில கேள்விகள் கேட்டு முன்பு உரையாடிய ஒரே காரணத்தால் இவரைப் போன்றவர்களைப் பொருட்படுத்தி பேசுவதே வீண் என்பதை உணர்த்திவிட்டார். பொதுவெளியில் ஒருவரது தவறை சுட்டிக் காடினால் அவர்களுக்கு சமூகப் பொறுப்பை விட ஈகோ கூடிவிடும் என்பதற்கு இந்த நபரே சாட்சி.

 பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளியிடாதீர்கள் என்று சொல்வது பழமைவாத குப்பையா? மானம் மயிறு போயிரும்னா பேசுறோம்.

மயிரு நம்ம முற்போக்க வச்சுக்கிட்டு இங்க ஒரு மயிரும் புடுங்க முடியாது என்பதுதான் இவருக்கு நான் பதிலாக சொல்ல வேண்டும். கண்ணியமாக உரையாடும் போது எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கூட தெரியாத .. கூருணர்வு என்கிற சொல்லுக்கு பொருள் கூட தெரியாத ஒருவர் ஊடகத் துறையில் இருப்பது தான் துயரம்.

 அடையாளத்தை மறைப்பது என்பது மானம் மரியாதை தொடர்பானது அல்ல, ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு தொடர்பானதும் கூட. எல்லாவற்றுக்கும் மேலாக Right to Privacy தொடர்பானதும் கூட. சட்டமே இதை உறுதி செய்கிறது. அதற்கு வலிமையான காரணங்களும், தேவைகளும் உண்டு.

பெண் மறைந்து விட்டாள் என்பதற்காக வெளியிடலாம் என்று சில வாதங்கள் வருகின்றன. அதுவும் தவறுதான்.

 ஒட்டுமொத்த சமூகமும் பிற்போக்குத்தனமாக இருக்கையில் நம்முடைய முற்போக்கைக் கொண்டு எப்படி வழிநடத்த வேண்டும் என்று தெரிந்துகொள்வதுதான் கூருணர்வு.

 நீ வெளிய வா தைரியமா பேசு என்று தான் சொல்ல வேண்டும். சொல்கிறோம். அதற்காக உன் முகத்தை வெளிய காட்டு, உன் குடும்ப ஜாதகத்தையே கொடு என்று சொல்ல வேண்டுமா என்ன?

 #அந்த_பெண்ணின்_முகத்தை_வைத்தா_இங்கு_நீதி_கிடைக்கப்_போகிறது?

தைரியமா வந்து உங்க பிரச்சினைகளைப் பேசுங்க என்று சொல்வதற்கும், அதை பெண்கள், குழந்தைகள் தைரியமாக பின்பற்றவும் முதல் உத்தரவாதமே உங்கள் அடையாளங்களை வெளியிட மாட்டோம் என்பதுதான்.

 அந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே அடுத்து பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்கள் பேசத் துணிவார்கள். “ஐயோ நாம வெளிய சொன்னா நாளைக்கு நாலு முற்போக்கு ஆம்பிளை ஆர்வக் கோளாறுங்க அதுங்க போராளித்தனத்த காட்டிக்க நம்ம ஃபோட்டோவ போடுமேன்னு” பயந்தா எந்த குழந்தையும் வெளிய வந்து பேசாது இந்த கூருணர்வு கூட இல்ல.. புதுமைவாத மயிர தூக்கிட்டு வந்துடுறாங்க..

 பெண் உடம்பு மீதான கருத்தியல்கள், கற்பு போன்ற பழமைவாத குப்பைகள் பற்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் கூருணர்வுபடுத்தும் வரை “புதுமைவாத ஆம்பிளை போராளிகள்” குறைந்தபட்சம் இந்த கூருணர்வ வளர்த்துக்கோங்க.. உங்க ஈகோவ காப்பாத்திக்க உங்க முற்போக்கு குப்பைய பெரிய “புரட்சி”ன்னு நினைச்சு கொட்டாதீங்க..

 பொள்ளாச்ச்சி பாலியல் வன்கொடுமை நடந்தபோது வாங்க நிர்வாணமா இறங்கி ரோட்டுல நடப்போம்னு சொன்னவ தான் நான்.. என்னோட''அரை நிர்வாணப்” புகைப்படத்தையும் போட்டு, நீங்களே உங்கள் உடம்பை விடுவித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவள் தான் நான்.. அது ஏற்படுத்திய தாக்கத்தினால் எத்தனையோ பெண்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு செய்தியானதெல்லாம் இந்த புதுமைவாத ஆர்வக்கோளாறுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல

 ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு (இன்னும் இதர குற்றங்களுக்கு) உள்ளான எவரின் அடையாளங்களையும் வெளியிடுவதை நான் எதிர்க்கவே செய்வேன்.

இரண்டிற்குமான வேறுபாட்டையும், நியாயங்களையும் புரிந்துகொள்ள முடியவில்லை எனில், உங்கள் அறிவை கூர் தீட்டிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

 சமூகத்தை Subjective ஆக பார்ப்பதற்கும் Objective ஆக புரிந்துகொள்வதற்கும்.. மார்க்சியத்தைப் படிங்க..

 

#justiceforpontharani