மனு தர்மம் எங்கே நடைமுறையில் இருக்கிறது? 1000, 2000 வருடங்களுக்கு
முன்பாக எவனோ ஒருவன் எழுதிய சட்டத்தைப் பற்றி இப்போது பேச என்ன இருக்கிறது? அது சட்டமாக
உள்ளதா? அதை நாம் பின்பற்றுகிறோமா? நாம் இப்போது பின்பற்றுவது இந்திய அரசமைப்புச் சட்டம்
என்று சுமந்த் ராமன், ரங்கராஜ் பாண்டே போன்ற ‘பார்ப்பன ஊதுகுழல்கள் கேட்கின்றனர். ‘சாமர்த்தியமாக கேள்வி எழுப்புவதாக நினைக்கின்றனர்…
மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் இந்தியர்களின் மண்டையில்
ஊறிப் போய் இருப்பதால் தான் பெண்களும், தலித்துகளும் ‘கீழ்நிலையில்’ தள்ளப்பட்டு, அவமதிப்புகளுக்கும்,
வன்கொடுமைக்கும் உள்ளாகின்றனர்.
பார்ப்பனர்கள் வீட்டில் இன்றைக்கும் பெண் உடலை தீட்டு என்று
சொல்லி 3 நாள் தள்ளி வைக்கும் பழக்கம் இருக்கிறது. அது அப்படியே மற்ற சாதி இந்துக்களையும்
தொற்றிக் கொண்டது. வேலைக்குப் போகும் பெண் வேசி, பெண் என்பவள் சிரித்தே மயக்குவாள்
என்பது தொடங்கி பெண் பற்றிய ஒவ்வொரு எண்ணத்திலும் மனு போதனை இன்னமும் ஆழ வேறூன்றி இருக்கிறது.
மனு தர்மம் இன்றைக்கு எங்கே இருக்கிறது என்கிறார்களே? சாதி
இன்றைக்கு இல்லையா? சாதி மாறி திருமணம் செய்வது குறித்து மனுவில் என்ன உள்ளது? சூத்திர
சாதி ஆண் பெண் குறித்து என்ன சொல்கிறது? பெண்ணுக்கான ஒழுக்க விதிகளாக என்ன சொல்கிறது?
குழந்தை பிறக்காத பெண்ணுக்கு எப்படிப்பட்ட ‘அற்புதமான’ தீர்வைச் சொல்கிறது?
“Devra…sapinda………” –
9/58. On failure to produce offspring with her husband, she may obtain
offspring by cohabitation with her brother-in-law [devar] or with some other
relative [sapinda] on her in-law’s side.
இதெல்லாம் ஆபாசம் இல்லையா?
கலாச்சார சீர்கேடு இல்லையா?
அரசமைப்புச் சட்டத்தைத் தானே
பின்பற்றுகிறோம் என்கிறார்களே? அரசமைப்புச் சட்டம் என்பது புதிதாக மாறிய சமூக நலனுக்காக
உருவானதொரு ‘முற்போக்கு’ வடிவமைப்பு அவ்வளவுதான். அது காலத்தின் தேவை! பழைய நிலவுடைமைச்
சட்டங்களை அப்படியே பயன்படுத்த இயலாது என்கிற முதலாளித்துவ சமூக அதிகாரித்தின் தேவைக்காக
அது ‘ஜனநயாகமாக’ வடிவமைக்கப்பட்டது. ஆனால்
இந்திய இந்து மத நூல்களின் போதனை தான் இந்திய இந்து பண்பாடு. ஒவ்வொரு நாட்டிற்கும்,
அந்த நாட்டின் ஆளும் மதநூல்களே ‘வேதம்’. இதை யாரும் மறுக்க இயலாது. எல்லா மத நூல்களும்
பெண்களை கேவலமாகத் தான் சித்தரிக்கின்றன.
இந்தியாவில் இந்து மதம் ஆளும்
மதமாக இருக்கிறது. அதன் பிற்போக்குத்தனத்தால் நாம் இந்து மத நூல்களை எதிர்க்க வேண்டியுள்ளது.
அரசியல் பிழைப்புவாதிகளுக்கு அது பதட்டத்தை அளிக்கிறது. உடனே முட்டாள்தனமாக மடக்கும்
கேள்விகளைக் கேட்கின்றனர்.
நிலவும் அரசமைப்புச் சட்டத்தை
அப்படியே பின்பற்றுகிறீர்களா என்ன? கல்விக் கொள்கை தொடங்கி தொழிலாளர் சட்டம் வரை அனைத்துமே
ஆளும் வர்க்கத் தேவைக்காக மாற்றியமைக்கப்படுகிறதே. அப்படியென்றால் எந்த அரசமைப்புச்
சட்டம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?
2000 வருடங்களுக்கு முன்புள்ளதை
இப்போது யார் பின்பற்றுகிறார்கள் என்கிறீர்களே! அப்படியென்றால் முன்னர் இருந்தானா இல்லையா
என்றே தெரியாத இராமன் என்பவனின் ‘நாமத்தை’ ஏன் உச்சரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?
இராமனின் இராஜ்ஜியத்தை அமைப்போம்
என்று ஏன் கொக்கறிக்கிறீர்கள்?
இராமன் பிறந்த இடம் என்று
இந்து வெறி பிடித்த அரசியலில் ஏன் ஈடுபடுகிறீர்கள்? ஏன் பாபர் மசூதியை இடித்தீர்கள்?
ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி
ஏன் கொலை வெறியாட்டம் ஆடுகிறீர்கள்?
கட்டிய மனைவியை சந்தேகித்து
தீயில் இறங்கச் செய்த இராம இராஜ்ஜியம் எந்த பெண்ணுக்குத் தேவை?
எப்போதோ புனையப்பட்ட இராமாயணம்,
மகாபாரதத்தை ஏன் இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?
ஒரு கொள்ளை நோயால் ஊரே துன்புற்றுக்
கிடக்க, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நடை பயணமாக சொந்த ஊருக்கு செல்ல அல்லாடி மடிய,
நீங்கள் மகாபாரதம் கண்டு களிக்கும் செய்திகளைப் போட்டுக் கொண்டிருந்தீர்களே… வெட்கமாக
இல்லை?
மனுவாதம் எங்கே இருக்கிறது
என்று பாண்டே கேட்கையில், கேள்வி கேட்பவரால் ஏன் பதில் சொல்ல இயலவில்லை?
உங்களை போன்ற, கல்யான் போன்ற
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் ஜால்ராக்களிடம் இன்னும் மனுவாதம் உயிர்ப்புடன் உள்ளதே என்று எதிர்
கேள்வி கேட்க இயலாதா? சாதி வெறி பிடித்து, பிராமண வெறி பிடித்து, இந்து வெறி பிடித்து
இருக்கும் ஒவ்வொருவரிடமும் மனு தர்மம் தான் உள்ளது என்று சொல்ல இயலாதா?
மத நூலில் உள்ளதன் அடிப்படையில் தோழர் திருமாவளவன் பேசியதைத்
திரித்து இந்து பெண்களை ஆபாசமாகப் பேசினார் என்று பொய் பரப்புரை செய்வதிலேயே தெரிகிறது
இந்து சனாதன தர்மம் எப்படி பொய் புரட்டானது என்பது.
இந்து மத நூல்கள் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கிறது என்றால்
அதனை மறுக்க, ஒழிக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து வழக்கு போடுவது ஏன்? முற்போக்காளர்களிடம்
அவ்வளவு அச்சமா?
திருமாவளவனை தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் கல்யாண் மீதுதான்
வழக்கு தொடுக்க வேண்டும்.
குஷ்பு போன்ற பா.ஜ.க பெண்கள் சமூக சேவை செய்ய அக்கட்சியில்
இணைந்ததாகச் சொல்கிறீர்களே… அது எந்த சமூகத்திற்கான சேவை மேடம்? பெண்கள் மீது நிகழ்த்தப்படும்
வன்கொடுமைகளின் போது ‘இந்து வெறியர்கள்’ எப்படி நடந்துகொள்கிறார்கள்.. ஒரு குழந்தை
வல்லுறவு செய்யப்பட்டதைக் கூட சாதி அரசியல் என்று சொல்லி ‘போராட்டம்’ நடத்துகிறார்களே..
அத்தகையதொரு கட்சியில் சேர்ந்ததும் இல்லாமல் வக்காலத்து வேறு வாங்குகிறீர்களே..
நான் காங்கிரசு மேடையில் மனசாட்சி இல்லாமல் பேசினேன் என்கிறீர்களே…
இப்போது மட்டும் மனசாட்சி வந்துவிட்டதா?
உண்மையில் மனசாட்சி உள்ள எவரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து
முன்னணி போன்ற அமைப்புகளில் சேர்வார்களா?
நீங்கள் ஒரு பெண், அதோடு உங்கள் மதத்தினருக்கு, தலித்துகளுக்கு
இந்தியாவில் நிலை என்ன? எனவே மனசாட்சி குறித்துப் பேச உங்களுக்குத் தகுதி இல்லை…
தோழர் திருமாவளவன் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு பொய் வழக்கு
என்பதற்கு கீழே ஆதாரங்கள் உள்ளன. நீங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தானே படிப்பீர்கள்…
எனவே ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன்…
எனவே தோழர் திருமா மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்கைத்
திரும்பப் பெறச் சொல்லி முதலில் மனசாட்சியுடன் குரல் கொடுங்கள்..
No comments:
Post a Comment