Apr 1, 2014

நவீன தமிழ் இலக்கியச் சாக்கடை எங்களை விடுவதில்லை


இன்று மதியம் வசுவிற்கு ஒரு அழைப்பு வந்தது பெண்களுக்கான இரவு நேர உரிமைகள் குறித்து ஒரு உரையாடல் நடக்கிறது அதில் ல‌ஷ்மி சரவணகுமார் ஒரு பதிலுறைத்திருக்கிறார் அது உங்களை கிண்டல் செய்து எழுதப்பட்டிருப்பதாகவே தெரிகிறது என்றார். அந்த உரையாடலை தொடங்கியவர் கவின் மலர், அவர் எங்கள் நண்பர் பட்டியலில் இல்லை. ஆகவே எங்களுக்கு தகவலை தெரிவித்த தோழரே அந்த பதிவை காபி செய்து மெசேஜ் அனுப்பினார். படித்த போது கவின் மலர் பொதுவாக தொடங்கி இருக்கும் ஒரு உரையாடலில் லஷ்மி சரவணகுமார் தனது கடந்தகாலத்தை மறக்க முடியாமல் பதிவு செய்திருக்கும் பதிலைப் படிக்க முடிந்தது.

இதற்கு முன்னர் நேசமித்ரன், அபிலாஷ் மற்றும் லஷ்மி சரவணகுமார் ஆகியோருக்கு அவர்களின் கீழ்த்தரமான பதிவுகள் மற்றும் பேச்சுக்களை முன் வைத்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதைப் படித்த எவருக்கும் லஷ்மி அளித்திருக்கும் பதில் எதனை ‘சட்டைர்’ செய்கிறது எவரைக் குறித்து பேசுகிறது என்பது வெட்ட வெளிச்சம். அந்த அதிச்சியில்தான் தோழர் எங்களுக்கு தகவலை தெரிவித்தார். படித்த எங்களுக்கும் விஷயம் புரிந்தது. இருந்தாலும் பழகிய குற்றத்திற்காக வசு நேரடியாக லஷ்மியிடமே பேசிவிடலாம் எனக் அலைபேசியில் அழைப்பு விடுத்தார். பல அழைப்புகள் விடுத்தும் அவர் தொடர்புக்கு வராததால் இப்பொது பொதுவெளியிலேயே அது குறித்த பதிவை எழுத முடிவு செய்து எழுதுகிறேன்.

முன்னர் இந்த இலக்கிய பெண் உரிமைப் போராளிகளின் கேவலப் பேச்சுகளை எழுதி நான் பதிவிட்டிருந்த போது அபிலாஷ் அதற்கு வருத்தம் தெரிவித்தபடியால் அவரை நோக்கி நான் வைத்த கேள்விகளை நீக்கி இருந்தேன். அதே போல் லஷ்மி சரவணகுமார் முன்னர் எழுதிய பதிவு அதனைத் தொடர்ந்து வசு அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றது பல அழைப்புகளை அவர் எடுக்காமல் எஸ்.எம்.எஸில் மன்னிப்பு கேட்டது (பல மெசேஜுகளில்) குற்ற உணர்வு என்று கூறியது… அதன் பின்னர் வசு அவரை வீட்டிற்கு அழைத்து வருத்தத்தை தெரிவித்து மதிய உணவு உண்டு பேசியது… அப்போது லஷ்மி தான் ஏதோ ஒரு மனநிலையில் அப்படி எழுதிவிட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்… ஆனால் எழுதியது என்னைப் பற்றி, மன்னிப்பு கேட்டதோ வசுவிடம்… சரி போகட்டும் என்று அத்தோடு அதை மறந்துவிட்டோம்… அபிலாஷின் கதையைத் தொடர்ந்து ஏன் இப்படி தொடர்ந்து இவர்கள் சம்பந்தமே இல்லாம் எங்களை வம்பிக்கிழுக்கிறார்கள், அதிலும் குறிப்பாக என்னை… ஏனென்றால் எனக்கு இலக்கிய உலகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது… நான் எவரோடும் எந்த பேச்சும் வைத்துக் கொள்வதுமில்லை…. நட்பு பாராட்டுவதுமில்லை எனும் கோபத்தில் நான் எல்லா நிகழ்வுகளையும் தொகுத்து எழுதினேன் அதில் லஷ்மியின் பெயர் வந்ததால் அவரை 
கல்யாணம் பண்ணிக்கப்போற பெண் கார்க்கி மனோஹரன் வருத்தம் கொண்டிருந்தார் போலும்… ஆனால் அவரும் பதிவு எழுதிய என்னிடம் உரையாடாமல் வசுவிற்கு அன்புள்ள வசு என தொடங்கி அண்ணா என்று உரிமை பாராட்டி முடித்திருந்தார்… தனிப்பட்ட மெசேஜை அனுப்பினார்.

அவரது உரையாடலை இங்கு பதிவு செய்யும் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. பொறணிகளை பொதுவெளியில் பதிவு செய்பவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லாத போது சம்பந்தபட்டவர்களின் கீழ்த்தரமான செயல்களை பதிவு செய்ய அவர்களுடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்வதி தவறில்லை. அதுவும் அவர்களிடம் அனுமதி கேட்ட பின்னர். அந்த பதிவு இதோ:

அன்புள்ள வசு, எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. உங்களை பார்த்ததில்ல, பேசினதில்ல. ஆனா ரெண்டு மூணு பேர் பேசும் போது உங்களை பேரை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புறம் முகநூலில் நண்பர்கள் பட்டியலில் இணைத்திருக்கிறேன். என்னையும் யாருன்னு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் லஷ்மி சரவணக்குமாரை கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு. பேரு கார்கி. இப்போ நடந்துக்கிட்டு இருக்கிற இந்த சண்டைகள், அதோட தொடர்புடைய போஸ்ட் எல்லாம் பார்த்தேன். இவை எதற்குமே எனக்கு சம்பந்தமில்லை தான். ஆனால் என்னுடைய வாழ்க்கை துணையை பற்றி தவறாக ஏதேனும் குறிப்பிட்டு இருந்தால் உடனே (உண்மை எதையும் ஆராயாமல்) கோவம் வருவது சகஜம் தான். அந்த கோவத்தில் பின்வரும் நிலைத்தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். "கூப்பிட்டு சோறு போடுவாங்களாம், பின்னாடி சொல்லிக்காட்டுவாங்களாம். நல்ல tactics " இதை போட்டவுடனே எனக்கு ரொம்பவும் மனது உறுத்தலாக இருந்தது. நான் எப்பவும் மத்தவங்களை ஹர்ட் பண்ணனும்னு நினைச்சதே இல்லை.. இது ரொம்ப சில்லறைத்தனமா இருந்துச்சு அதான் டெலீட் பண்ணிட்டேன். ரொம்பவும் காமன் கேர்ளா இருக்கிறதால இந்த கோவம் வந்திருக்கலாம். கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் ஒரு மீது வரும் வன்மம் மிகவும் அற்பமானதாக தோன்றியது. இதை நேருக்கு நேர் பெயரை டேக் பண்ணி போட்டிருந்தா கூட எனக்கு அது தான் தோணியிருக்கும். எது உண்மை எது பொய் என்று தெரியாமல் பேசுறதே தப்பு தானே. நேரடியாகவே சொல்லனும்னா... அப்படி கூப்பிட்டு சாப்பாடு போட்டதை பற்றி நீங்கள் இருவருமே குறிப்பிட்டு இருப்பது ரொம்பவும் வருத்தமா இருக்குது. ஆனா உண்மையா ஒருத்தரை கூப்பிட்டு நம்ம கையால சாப்பாடு போடும் போது அப்படி எதுவும் நினைத்திருக்க மாட்டோம் தானே.. ஆனா அதை வேறொரு இடத்துல சொல்லிக்காட்டும்பொழுது அவ்வளவு வன்மமா இருக்குது. அதனால தான் அந்த வருத்தமும். இது போல ஒரு ஸ்டேடசை போட்டதுக்கு எனக்கு ரொம்பவும் மனசு வருத்தமாயிருக்கு. உங்ககிட்டயும் கொற்றவை கிட்டயும் மனசுல இருந்து மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் என்னைக்கும் யாரையுமே காயப்படுத்தனும்ன்னு நினைச்சது கூட கிடையாது. புன்னகையுடன் இருப்போம் எப்பொழுதும். நன்றி, கார்கி

வணக்கம் கார்கி...
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg

வணக்கம் வசு...
நலமா
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
ரொம்ப நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க
நலம்
கூப்பிட்டு சோறு போட்டது குறித்து எந்த உணர்வும் எனக்கில்லை. நாம் ஒருவரை விருந்துக்கு அழைப்பது எந்த மரியாதையின் கீழோ அதே நிமித்தம்தான் நான் லஷ்மியை அழைத்தேன். இன்னும் சொல்லப் போனால் அவர் செய்த பிழையை உணர்ந்து என்னிடம் பேச இயலாது மன்னிப்புக் கோரினார். அவரது குற்றவுணர்ச்சி அவரை அரிக்கும் ஒன்றென எனக்குத் தெரியும். அதனால்தான் சாப்பிட வாங்க என அழைத்தேன் இருவரும் சாப்பிட்டோம். அந்த மனநிலைதான் இப்பொழுதும். நான் சோறுபோட்டதைக் குறிப்பிட்டது குத்திக் காட்ட அல்ல.
ஆனால் லஷ்மி என்னைப் பற்றியும் கொற்றவை பற்றியும் என்ன எழுதியிருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா...
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
ஆனா இந்த இடத்துல அதை சொல்றப்போ, குத்தி காட்டுறது போல தான் ண்ணா இருக்கு.. அதான் கேட்டேன். தெரியாது, எனக்கு ஒன்னும் தெரியாது. அதனால தான் மன்னிப்பு கேட்டேன் உங்ககிட்ட .. அது எனக்கு தேவையுமில்ல. ஏன்னா அது உங்க தனிப்பட்ட பிரச்சனை . அதை பற்றி தெரியாம நான் பேசவே முடியாதே ண்ணா
அப்படியென்றால் இதற்கு நீங்கள் எப்படி கோபிக்க முடியும். ஒரு வேளை குத்திக் காட்டும் அளவுக்கு வசு எழுதியிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்தால் என்னவென்று கேட்டிருக்கலாமே கார்கி
கேட்காமல் கோபம் வந்துதானே பதிவு இட்டிருக்கிறீர்கள். .
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
அப்படி இல்லண்ணா, குத்திக்காட்டுவது பிரச்சனையில்லை ண்ணா... சாப்பாடு போடுவதை பத்தி சொல்லனும்மான்னு தான் கேட்டேன்

தங்கை கார்க்கிக்கு..ஒரு வேளை சோறு போட்டதைப் பேசியது உங்கள் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஒன்று கார்க்கி நானும் அப்படி ஏராளமான வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் இது லஷ்மிக்கு பெரிய விசயமாகத் தெரியாதென்றே நினைக்கிறேன். கதை கவிதை பேசி கிராமத்திலிருந்தோ இல்லை நகரத்திலிருந்தோ கிளம்புகையில் பசி மட்டுந்தான் உடன் வரும் ஒன்றாக இருக்கிறது.
ஆனால் கார்க்கி..
ஆனால் லஷ்மி என்னைப் பற்றியும் கொற்றவை பற்றியும் என்ன எழுதியிருந்தது உங்களுத் தெரியாது. தெரியுமா...சோறு போட்டதைச் சொன்னதும் அதுவும் உங்கள் துணைவரைச் சொன்னதும் உங்களுக்கு வந்த கோபத்தை நான் மதிக்கிறேன் அதைக் காதலென உணர்கிறேன். நானும் காதல் திருமணம் செய்தவன்தான். ஆனால் லஷ்மி என்னையும் கொற்றவையையும் பற்றி ஏன் எங்கள் மகளையும் பற்றி எழுதியிருந்ததை உங்களுக்கு யாராவது எழுதியிருந்தால் காமன் கேர்ளான நீங்கள் நேரடியாக காவல் துறைக்குச் சென்றிருப்பீர்கள். இதை நான் உறுதியாகவே கூறுகிறேன்.
கொற்றவையை லைம் லைட் வெளிச்சத்திற்காக என்னுடன் ஓடி வந்தவள் பிள்ளையை விட்டு ஓடி வந்தவள் என்று எழுதியிருந்தார் கார்கி. ஆனால் நான் இப்பொழுது நீங்கள் சட்டெனக் கோபித்து ஸ்டேட்டஸ் போட்டது போல் எதையும் செய்யவில்லை. லஷ்மியின் பெயரைக் குறிப்பிடாமல்தான் ஒரு சிறுகுறிப்பை வரைந்தேன்.
இப்பொழுதும் லஷ்மியிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். தான் எழுதியது குறித்து அவர் கொற்றவையிடம் எந்த மன்னிப்பும் கோரவில்லை. அதற்காக நான் வன்மமும் வைக்கவில்லை. அவ்வளவே
எல்லாவற்றிற்கும் மேலாக நடக்கும் நடப்புகளின் அவதூறுகளைத் தாங்காமல் கொற்றவை இப்பொழுது எழுதியிருக்கிறார். என்னை வாழ்நாள் தோழனாக வரித்துக் கொண்ட அவருக்கு நான் பரிசளித்தது இந்தக் கொடூரத்தைத்தானா கார்க்கி....
வேண்டுமென்றால் நீங்கள் கொற்றவையிடம் உரையாடலாம்.
உண்மையில் எங்கள் இருவருக்கும் இப்பொழுது லஷ்மியின் மீது எந்தக் கோபமும் இல்லை. வெறுப்பும் இல்லை. நாங்கள் வெளியிட்டது ஆதங்கம் மட்டுமே...
தொடர்ந்து இது மாதிரி போக்குகளைக் காண்களையில் வந்த எரிச்சலில்தான் கொற்றவை எழுதியிருக்கிறார்.
ஒரு சிறிய குறிப்பாக நான் உங்களுக்குச் சொல்லுவது ஒன்றுதான்
நாம் காதலிக்கும் நபரின் சந்தோஷங்களை மட்டுமல்ல துக்கங்களையும் சேர்த்துத்தான் சுமக்க வேண்டும்.
இது உங்களுக்குள் நடந்தது என்று தட்டிக் கழிக்க முடியாது.
தங்கையே உங்களது திருமணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
இந்த இடத்துல லஷ்மின்னு இல்ல, வேற யார் இருந்தாலும் எனக்கு கோவம் வந்திருக்கும் ண்ணா... ஆனா லஷ்மிங்கறதால தான் அந்த ஸ்டேடஸ் போட்டேன். அதற்கு தான் ண்ணா முதல்லயே சொல்லியிருந்தேன். எனக்கு எந்தவொரு பிரச்சனையும் தெரியாதுன்னு. ஒருவேளை நான் அப்போ அவனோட இருந்திருந்தா, கண்டிப்பாக எதிர்ப்பு சொல்லியிருப்பேன். ஏன்னா எதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு பெண்களை உடனே இழுப்பதில் எந்தவொரு உடன்பாடும் இல்லை எனக்கு. இப்பொழுதும் கூட அவன் கிட்ட அதையே தான் சொல்றேன். மற்றவர்களுடைய வாழ்க்கைய பற்றி விமர்சிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லைன்னு. இனி எப்பொழுதும் அந்த மாதிரி அவன் நடந்துக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு
மிக்க மகிழ்ச்சி கார்க்கி லஷ்மியைக் கேட்டதாகச் சொல்லுங்கள், அவருக்கு என் அன்பு.
நன்றி
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
கண்டிப்பா ண்ணா... உங்கள் இருவருக்கும் எங்கள் இருவரின் அன்பும் எப்பொழுதும் . வாழ்த்தியதற்கு நன்றி
வணக்கம்.

மேற்சொன்ன உரையாடல் வசுவுக்கும் கார்க்கிக்கும் நடந்தது. இதில் அவர் கேட்டிருக்கும் கேள்வி என்னை சற்று வருத்தம் கொள்ளச் செய்தது. அதாவது மன்னிப்பு கேட்டு மன்னிப்பும் வழங்கி வீட்டிற்கு அழைத்து உணவும் உண்டு பேசி எல்லாம் முடிந்த பின்னர் மீண்டும் நீங்கள் அந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதி இருப்பது சரியா என்ற கேள்வி. என்னிடம் அவர் நேரடியாக பேசவில்லை எனக்கு தனிப்பட்ட மெசேஜ் அனுப்பவில்லை என்றாலும் நான் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து லஷ்மியின் பெயரை நான் முன்னர் எழுதிய பதிவிலிருந்து நீக்கினேன்.

அப்போதே எங்கள் நலம்விரும்பிகள் சிலர் கேட்டனர் ஏன் பெயரை நீக்குகிறீற்கள். உண்மை முகம் எல்லோருக்கும் தெரியட்டுமே என்றார்கள். ஆனால் நான் லஷ்மியின் எழுத்தால் அடைந்த மனவருத்தத்தை அனுபவித்தவள் என்ற முறையில் எனக்கு அங்கு கார்க்கியின் உணர்வு புரிந்தது. அதனால் அவர் பெயரை நீக்கி இருந்தேன். நேசமித்ரனுக்கான கேள்வியை மட்டும் இன்னமும் வைத்திருக்கிறேன். ஏனென்றால அவர் தரப்பிலிருந்து இதுவரை ஒரு விளக்கமும் வரவில்லை.

ஆனால் மன்னிப்பு என்பதன் அர்த்தமோ அதன் முக்கியத்துவத்தையோ அதன் பெருமையையோ உணராத ஒரு தூய இலக்கியவாதி லஷ்மி சரவணகுமார் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அவருக்கும் கவினுக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு:

ஏன் பெண்கள் இரவு 10 மணிக்கு மேல் ஓர் ஆணிடமிருந்து கைபேசியில் அழைப்பு வந்தால் பதறவேண்டும்? ஏன் பெண்கள் இரவு 10 மணிக்கு மேல் ஓர் ஆணுக்கு அழைக்க தயங்க வேண்டும்? பத்து மணிக்கு ஏன் கடையில் கல்லா கட்டுவதைப்போல எல்லாவற்றையும் முடித்துக்கொள்ள வேண்டும்? நாள் என்பதில் இரவும் உண்டுதானே? பேசுபவரும் தூங்கவில்லை என்பதும் எதிராளி தூங்கவில்லை என்பதும் போதுமல்லவா பேசுவதற்கு? இரவு வரும் குறுஞ்செய்திகளுக்கு மட்டும் ஏன் புதிதாய் வதந்தி ரெக்கைகள் முளைக்கின்றன? இரவுகளில் ஆண்களும் ஆண்களும் பெண்களும் பெண்களும் பேசிக்கொள்வதில்லையா? என்னதானிந்த இரவில் அப்படி பொதிந்துகிடக்கிறது? பகலில் தவறுகள் நடப்பதில்லையா? இரவுக்கென்ன அப்படி விசேஷத்தன்மை? இரவு பத்துமணிக்கு மேல் வரும் அலைபேசி அழைப்புகள் எல்லாவற்றையும் ஒரு பெண் ‘என்மேல் விருப்பம் இருப்பதால்தான் இவன் அழைக்கிறான்’ என புரிந்துகொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! இரவு 10 மணிக்கு மேல் அழைத்தால் ‘நான் அவள்மீது விருப்பம்கொண்டுதான் அழைக்கிறேன் என்பதை அவள் புரிந்துகொள்வாள்’ என நினைப்பது அதைவிட எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! இவற்றின் நீட்சியாகவே பெண்கள் விளக்குவைத்தால் வெளியில் செல்லக்கூடாது என்று சொல்லப்படும் பத்தாம்பசலித்தனத்தையும் பார்க்க முடிகிறது. இரவு என்பது பகலின் நீட்சி. இரவு என்பது ஒளி குறைந்த பகல். இரவென்பது ஒரு நாளின் முழுமை. இரவென்பது அழகு. இரவென்பது உரையாடலுக்கான வெளி. இரவென்பது செயற்கை வெளிச்சத்தால் நிரப்பப்பட்ட பகல். இரவுக்கும் பகலுக்கும் வேலை என்னவென்றால் சூரியனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் சொல்வது. நட்சத்திரங்களுக்கும் நிலவுக்கும் மேடை அமைத்துக்கொடுப்பது. அவற்றைப் பார்த்துக்க்கொண்டே அவைகுறித்தும் வேறு எவைகுறித்துமோ உரையாட களம் அமைத்துக்கொடுப்பது. இரவு என்பதில் வெறும் காதலும் காமமும் அல்ல. அதில் அன்பும் உண்டு நட்பும் உண்டு. இரவென்பது வெறும் சமூகவிரோத செயல்கள் அல்ல. இரவில் தோழமையும் உண்டு. புரட்சியும் உண்டு. அமாவாசைக் கூட்டங்களை இரவில் நடத்தி கட்சிக்கிளை வளர்த்த கீழத்தஞ்சை தமிழக்த்தில்தான் இருக்கிறது. இரவைக் கண்டு ஓடி ஒளிபவர்களைகயும் இரவை குற்றம்சாட்டுபவர்கள், இரவை குற்றவாளி ஆக்குபவர்கள், இரவை தவறுகளுக்கு களமாகக் கொள்பவர்கள் ஆகியோரைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. உங்களால் இரவுகள் எங்களுக்கு இல்லாமல் போனது. இரவை மீட்டெடுத்து பகல் ஆக்குவதும். பகலை இரவாக்குவதும். இரண்டுக்கும் வேறுபாடின்றிச் செய்வதுமான கனவு நிறைவேறுமா? இரவென்பது ஒளி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பகல் என்பதை இவ்வுலகம் உணருமா? Unlike ·
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t1.0-1/p40x40/1977462_819601064721040_327098554_t.jpg
You, நறுமுகை தேவி, கவிதா சொர்ணவல்லி, PG Saravanan and 129 others like this. Kumar Rengarajan //இரவு பத்துமணிக்கு மேல் வரும் அலைபேசி அழைப்புகள் எல்லாவற்றையும் ஒரு பெண் ‘என்மேல் விருப்பம் இருப்பதால்தான் இவன் அழைக்கிறான்’//--இப்படியொரு எண்ணம் அவளுக்குள் வர காரணமானவர்கள் யார் ? 13 hours ago · Edited · Like Kavin Malar கவின் மலர் அடுத்த வரியைப் படிக்க மாட்டீங்களா? 13 hours ago · Like · 1 Sabeeram Sabeera இதில் நான் உங்க கட்சி,அதானே இவனுவ தூங்கவும் புணரவும் இரவென்று எண்ணிக்கொள்கிறார்கள், இரவை இறவாமல் இருக்க இவர்களுக்கு தெரிவதில்லை,பகலில் படுவது தெரியும் இரவில் அதுவும்தெரியாது என்பதாலோ என்னமோ? இரவைப்போற்றுவோம் ,இரவுதான் உண்மை ஒளித்திணிப்பே பகல், 13 hours ago · Like · 1 Kumar Rengarajan

//அடுத்த வரியைப் படிக்க மாட்டீங்களா?//--மன்னிக்கணும் அதுக்குள்ளே என் வீட்டுக்காரம்மா கூப்ப்டுட்டாங்க , (சாட் ள ) அவங்களுக்கு இப்போ இரவு ஒரு மணி 13 hours ago · Like

Lakshmi Saravanakumar அது ஏன் தோழர் கவின் இலக்கிய ஆர்வம் தாகம் இருக்கிற அன்பர்கள் பக்கத்து வீட்டுப் பையன்களுக்கு திருக்குறள் வாசித்துக் காட்டட்டுமே... அல்லது பாரதியார் கவிதைகள் வாசித்துக் காட்டட்டுமே... அடுத்தவர் மனைவியிடம் உரையாடினால் தான் இலக்கியம் வளருமா?.... 13 hours ago · Like · 2

Lakshmi Saravanakumar இந்தச் சமூகம் எத்தனை சீர்கேடானது தெரியுமா தோழர்?... எல்லாவற்றுக்கும் காரணம் இந்த கேடு கெட்ட இலக்கியவாதிகள்தான்... வாங்க உரையாடுவோம்.... 13 hours ago · Like · 1

 Kavin Malar கவின் மலர் லஷ்மி..சரவணா..அடுத்தவர் மனைவியா..மனைவியில்லையா? மணமானவளா? ஆகாதவளா அதுபோலவே அடுத்தவர் கணவனா, இல்லையா? திருமணம் ஆகிடுச்சா இல்லையா? இதுபற்றியெல்லாம் கவலைப்படாத ஓர் உரையாடல் சாத்தியமாயிருக்கும் சமூகம் கனவாயிருக்கும் போலிருக்கு. அதைத்தான் சொல்ல வர்றேன். நீ ஏனப்பா பெண்களுக்கென்று அதிலும் குறிப்பாக மணமானபெண்கலுக்கு என்றுஅதைச் சுருக்கிப் பார்க்கிறாய் 13 hours ago · Edited · Like · 4

 Lakshmi Saravanakumar இல்லை தோழர்... பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையா?... நான் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் அழைப்பேன், எந்தப் பெண்ணும் எனக்கும் அழைக்கலாம்... ஆனால் என் மனைவியை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதுதானே தோழர் தமிழ்நாட்டு புரட்சிவாதிகளின் பொன்மொழி... 13 hours ago · Like · 4

Kavin Malar கவின் மலர் நீ சொல்றது என்னவோ சரிதான். இங்கு அப்படித்தான் பல ஆண்கள் இருக்கிறார்கள். 13 hours ago · Like

Lakshmi Saravanakumar மேலும் இதுகுறித்து கோபமாக என்னுடன் உரையாடிய நண்பர் ஒருவர் அதன் பிறகு என்னிடம் மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டதுடன் என்னோடு ஒரு பிற்பகல் மதுவருந்திவிட்டு நான் சமைத்த உணவை சாப்பிட்டார்... பிறகு எனது வீட்டுக் கழிவறையில் சிறுநீர் கழித்துவிட்டு தனது புத்தகம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துவிட்டுச் சென்றார்... 13 hours ago · Like · 1

Lakshmi Saravanakumar எனக்கு எந்த மனத்தடைகளும் இல்லை தோழர்.... நான் யாரையும் தடை செய்திருக்கவில்லை... கள்ள மெளனம் காக்கவில்லை.... திறந்து மனதுடனே உரையாடுவோம்... 13 hours ago · Like · 1


Thambiah Pillai Sothilingam தமிழ்நாட்டு புரட்சிவாதிகளின் பொன்மொழி......................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ?????????????????????? 11 hours ago · Like · 1 Spartacusthasan Dasan 60 வயதுக்கு மேற்பட்டவர் உங்களை "சகல " சுகங்களும் கிடைக்க வாழ்த்தியபோது அவரை வாங்கு வாங்கு என வாங்கிய நீங்களா இப்படிப் பேசுவது.? 10 hours ago · Like

Senthil Kumar //இரவு என்பதில் வெறும் காதலும் காமமும் அல்ல. அதில் அன்பும் உண்டு நட்பும் உண்டு. // Arumai Arumai...! 8 hours ago · Like Ram Chinnappayal செய்வீர்களா..?! 7 hours ago · Like · 1 Christopher Doss அற்புதம் கவின் இரவு என்பதில் வெறும் காதலும் காமமும் அல்ல. அதில் அன்பும் உண்டு நட்பும் உண்டு. இரவென்பது வெறும் சமூகவிரோத செயல்கள் அல்ல. இரவில் தோழமையும் உண்டு. புரட்சியும் உண்டு...... 7 hours ago · Like · 1 Manushya Puthiran அற்புதமான வரிகள்.....இங்கே பலருக்கும் இரவுகள் இருளால் அல்ல, காமத்தால் நிரம்பியிருக்கிறது. இருளும் காமமும் இங்கே ஒரே மாதிரி இருக்கிறது... 6 hours ago · Like · 7 Appas Murali ஓடும் நீரில் கல்லெரிந்தால் அது பெரிய சலனத்தை ஏற்படுத்தாது. ஆனால் காற்றில்லா ஒரு நாளில் அமைதியாக கிடக்கும் குளத்து நீரில் எறியப்படும் கல் ஏற்படுத்து சலனம் அடங்க வெகுநேரமாகும். பகலின் அலைச்சலும், உளைச்சலும் முடிந்து, ஓய்வும்,மெல்லியதென்றலின் வருடலும் தேவைப்படும் இரவில், எதிர் பாலின சந்திப்புகளும்.உரையாடல்களும் நம்மை எங்குவேண்டுமானாலும் அழைத்துச்செல்லும் அபாயம் இருக்கிறது 6 hours ago · Like Isai Karukkal poem aaki irukalam miss panideenka... 5 hours ago · Like · 2 Firthouse Rajakumaaren இரவென்பது ஒளி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பகல் என்பதை இவ்வுலகம் உணருமா......?..அற்புதம்... 4 hours ago · Like Kavin Malar கவின் மலர் Isai Karukkal ippa kooda try pannalam. 2 hours ago · Unlike · 1 Lekha Ramasubramanian இரவு என்பது பகலின் நீட்சி. இரவு என்பது ஒளி குறைந்த பகல். இரவென்பது ஒரு நாளின் முழுமை. இரவென்பது அழகு. இரவென்பது உரையாடலுக்கான வெளி. இரவென்பது செயற்கை வெளிச்சத்தால் நிரப்பப்பட்ட பகல்// 2 hours ago · Like நா. கதிர்வேலன் nalla pathivu kavin about a minute ago ·

லஷ்மி சரவணகுமார் எழுதியது:

Lakshmi Saravanakumar அது ஏன் தோழர் கவின் இலக்கிய ஆர்வம் தாகம் இருக்கிற அன்பர்கள் பக்கத்து வீட்டுப் பையன்களுக்கு திருக்குறள் வாசித்துக் காட்டட்டுமே... அல்லது பாரதியார் கவிதைகள் வாசித்துக் காட்டட்டுமே... அடுத்தவர் மனைவியிடம் உரையாடினால் தான் இலக்கியம் வளருமா?.... 13 hours ago • Like • 2

Lakshmi Saravanakumar இந்தச் சமூகம் எத்தனை சீர்கேடானது தெரியுமா தோழர்?... எல்லாவற்றுக்கும் காரணம் இந்த கேடு கெட்ட இலக்கியவாதிகள்தான்... வாங்க உரையாடுவோம்.... 13 hours ago • Like • 1

 Kavin Malar கவின் மலர் லஷ்மி..சரவணா..அடுத்தவர் மனைவியா..மனைவியில்லையா? மணமானவளா? ஆகாதவளா அதுபோலவே அடுத்தவர் கணவனா, இல்லையா? திருமணம் ஆகிடுச்சா இல்லையா? இதுபற்றியெல்லாம் கவலைப்படாத ஓர் உரையாடல் சாத்தியமாயிருக்கும் சமூகம் கனவாயிருக்கும் போலிருக்கு. அதைத்தான் சொல்ல வர்றேன். நீ ஏனப்பா பெண்களுக்கென்று அதிலும் குறிப்பாக மணமானபெண்கலுக்கு என்றுஅதைச் சுருக்கிப் பார்க்கிறாய் 13 hours ago • Edited • Like • 4

 Lakshmi Saravanakumar இல்லை தோழர்... பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையா?... நான் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் அழைப்பேன், எந்தப் பெண்ணும் எனக்கும் அழைக்கலாம்... ஆனால் என் மனைவியை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதுதானே தோழர் தமிழ்நாட்டு புரட்சிவாதிகளின் பொன்மொழி... 13 hours ago • Like • 4

Kavin Malar கவின் மலர் நீ சொல்றது என்னவோ சரிதான். இங்கு அப்படித்தான் பல ஆண்கள் இருக்கிறார்கள். 13 hours ago • Like

Lakshmi Saravanakumar மேலும் இதுகுறித்து கோபமாக என்னுடன் உரையாடிய நண்பர் ஒருவர் அதன் பிறகு என்னிடம் மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டதுடன் என்னோடு ஒரு பிற்பகல் மதுவருந்திவிட்டு நான் சமைத்த உணவை சாப்பிட்டார்... பிறகு எனது வீட்டுக் கழிவறையில் சிறுநீர் கழித்துவிட்டு தனது புத்தகம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துவிட்டுச் சென்றார்... 13 hours ago • Like • 1

Lakshmi Saravanakumar எனக்கு எந்த மனத்தடைகளும் இல்லை தோழர்.... நான் யாரையும் தடை செய்திருக்கவில்லை... கள்ள மெளனம் காக்கவில்லை.... திறந்து மனதுடனே உரையாடுவோம்... 13 hours ago • Like • 1

மேற்சொன்ன லஷ்மியின் கமெண்டுகளைப் படிப்பவர்களில் எங்களது நண்பர்கள் மற்றும் எனது குதிரைகள் காட்டிக் கொடுத்த நாக்குப் (http://saavinudhadugal.blogspot.in/2014/02/blog-post_17.html)  பதிவை படித்த எவருக்கும் லஷ்மி யாரை சட்டைர் செய்கிறார் அல்லது ஏளனம் செய்கிறார் என்பது நன்றாகவே தெரியும்… லஷ்மியின் இந்த பாணி ஒன்று புதிதல்ல ஏற்கனவே என்னைப் பற்றி எனது தனிப்பட்ட வாழ்வு (எனது மகளையும் பற்றி குறிப்பிட்டு) அவர் இப்படித்தான் உல்டா செய்து எழுதியிருந்தார்.  இந்த அற்பத்தனம் மூலம் அவர் அடைவது என்னவென்பதே இப்போது எனக்கிருக்கும் கேள்வி

ஒன்று நேரடியாக வசுவிடம் ஏன் வசு நீங்கள் இலக்கியவாதிகளை பொத்தாம் பொதுவாக இப்படி பேசுகிறீர்கள் என்று நேருக்கு நேர் விவாதம் செய்யும் திராணி இருக்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் அவருக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்கும் தைரியமாவது இருக்க வேண்டும்.. சரி அதுவுமில்லையா தைரியமாக என்ன என்று கேட்டுவிட தொலைபேசியில் அழைப்பு விடுத்தால் அதையாவது எடுத்துப் பேச வேண்டும்… இப்படி ஒளிந்து ஒளிந்து கோழைத்தனமாக ஓடுவதற்கு எதற்காக இப்படி ஒரு எள்ளல் பதிவை எழுத வேண்டும்… படிப்பவர்கள் எப்படியும் எங்களிடம் சொல்வார்கள் நாங்கள் எதிர்வினையாற்றுவோம் எனும் பொது அறிவுகூட அவருக்கு மழுங்கி விட்டதா… வியப்பாக இருக்கிறது.

மிகவும் அருவருப்பாக இருக்கிறது லஷ்மி உங்களை நினைத்தால்.. உண்மையிலேயே உங்களுக்கு நெஞ்சுரம் என்று ஒன்று இருப்பின் என்னிடம் நீங்கள் உரையாடுங்கள்.

உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் தொலைபேசியை எடுக்காததால் வேறு வழியின்றி கார்க்கி தங்கைக்கு வசு அண்ணன் தனிப்பட்ட மெசேஜ் அனுப்பினார். ஏனென்றால் அவர் வருத்தம் கொண்டபோது உரிமையுடன் அண்ணனுக்கு மெசேஜ் அனுப்பினார் இல்லையா மேலும் உங்களைப் பற்றி பேசினால அவர் வருத்தம் கொள்கிறார் என்பதால் தங்கையிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என்று நான் வசுவிற்கு சொன்னேன் அவரும் அதைச் செய்தார். பொதுவெளியிலேயே அதற்கு பதில் அளித்துவிடுங்கள் என்று அவர் சொன்ன பின்பே நான் இப்போது இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

வணக்கம் கார்க்கி.. லஷ்மி சரவணக்குமார் எழுதியதாக எனக்கு ஒரு நண்பர் தகவல் அனுப்பியுள்ளார். ‘’ மேலும் இதுகுறித்து கோபமாக என்னுடன் உரையாடிய நண்பர் ஒருவர் அதன் பிறகு என்னிடம் மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டதுடன் என்னோடு ஒரு பிற்பகல் மதுவருந்திவிட்டு நான் சமைத்த உணவை சாப்பிட்டார்... பிறகு எனது வீட்டுக் கழிவறையில் சிறுநீர் கழித்துவிட்டு தனது புத்தகம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துவிட்டுச் சென்றார்..’’ இவ்வுரையாடல் குறித்து பேசவேண்டும் என்று லஷ்மிசரவணக்குமாரை அழைத்தேன். அவர் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. நான் இது குறித்து இனி பொதுவெளியில் உரையாடலாமா... அவர் எதைக் குறித்து இதை எழுதியிருக்கிறார் என்று நான் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

பொதுவெளியில அழைத்த உரையாடலுக்கு நீங்க பொதுவெளியிலேயே பதில் சொல்லிடுங்க அண்ணா . அவர் இப்போ வெளியே வேலையா இருக்காரு அதனால அழைப்பை ஏற்காமல் இருக்கலாம்.
நன்றி


உங்களையெல்லாம் மன்னித்து நான் அந்தப்பதிவிலிருந்து உங்கள் பெயரை நீக்கியது தவறு என்பதை இப்போது நான் உணர்ந்துவிட்டேன்… ஆகவே அந்தப் பதிவையும் மீள்பதிவு செய்கிறேன்… உங்கள் எழுத்தை நம்பிப் படிக்கும் வாசர்களை ஒரு கணம் நினைத்துக் கொள்கிறேன்,…. வேதனையோடு…. 

No comments:

Post a Comment