Mar 28, 2013

அகிலாவுக்கு ஆதரவு, சன் நிறுவனத்திற்கு கண்டனம்


*பெண்  ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி*
வணக்கம்!
பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை பொதுவாக வெளியில் சொல்ல அச்சப்படும் சூழல்
நிலவும் நிலையில் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர்கள் குறித்து
புகார்கள் அளிக்கப்படும்போது புகார் அளிப்பவரையே குற்றவாளியாக மாற்றிவிடும்
விநோதம் இங்கே நிகழ்கிறது. புகார் அளிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு
இல்லை. அண்மையில் அப்படி புகார் அளித்து தனது மேலதிகாரியின் கைதுக்கு காரணமான சன் டிவி செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக‌ அவர் தெரிவிக்கிறார். மேலும்அவர் பணியாற்றும் நிறுவனத்திலேயே அவருக்கு செய்தி
வாசிக்க வாய்ப்பு வழங்காமல் பழிவாங்கப்பட்டதுடன்,  அகிலாவை தற்போது இடைநீக்கம் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். பாலியல்ரீதியாக இணங்க மறுக்கும் பெண்களை திறமை போதவில்லை என்று காரணம் காட்டி, அதிகாரத்தைபயன்படுத்தி ஒடுக்குவது போன்ற மோசமான செயல்பாடுகளிலும் பணியிடத்தில் உள்ள மேலதிகாரிகள் ஈடுபடுவதைத் தடுத்தாகவேண்டும். சன் டிவி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பெண் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
1997ல் விசாகா எதிர் இராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின்படி, வேலை செய்யும்இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல்
தொல்லைகளைத் தடுப்பதற்குரிய வழிகாட்டு நெறிகளைநீதிமன்றம்  வகுத்தது. இது போன்ற முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு உள் விசாரணைக் குழுக்களைஅமைக்குமாறு வேலையளிப்போரைக் கேட்டுக் கொள்வதும் இவ்வழிகாடுதல்களில்  அடங்கும். ஆனால இதுபெரும்பாலான இடங்களில் இல்லை. இப்படியான ஒரு குழுவை அமைப்பது அவசியம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கான அவசரச் சட்டம் தற்போது
நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால்
இக்குழுவை கட்டாயமாக அனைத்து பணியிடங்களிலும் அமைத்தாக வேன்டும்.விசாகா குழு வழிகாட்டுதலின்படி பாலியல் குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாகக் கருதப்படவேண்டும். புகார் அளிக்கும் பெண்கள்தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றும்படியான சூழலையும் உருவாக்க வேண்டும். பாலியல் தொல்லைகொடுத்தவர்களுக்கு ஆதரவு அளித்து, பாலியல் தொல்லைக்குள்ளான பெண்ணை ஒதுக்கி வைக்கும் செயலை  பெண்ஊடகவியலாளர்களாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பெண் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் விசாகா குழுவை உடனடியாக ஒவ்வொரு
நிறுவனத்திலும் அமைக்கும்படிகோருகிறோம்.உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில்
மிகவும் முனைப்புடன் இருப்பதால், ஊடக நிறுவனங்களில் இத்தகைய குழு ஒன்றை
அமைப்பது மிகவும் முக்கியமானதென்று நாங்கள் கருதுகிறோம். பாலியல்ரீதியாக
தொல்லைகள் தருபவர்களை கையாளுவதற்கு இந்தக் குழு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் எப்பொழுதும் பெண்களின் பக்கம்
நிற்கிறோம் நாங்கள் என்பதைஇந்த அறிக்கை மூலம் தெரிவிக்கிறோம்.மேலும் இதுபோன்ற விஷயங்கள் தொடரும்பட்சத்தில், அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறல்களைச் செய்வது தொடர்ந்தால் பாதிக்கப்படும் பெண்களின் பக்கம் நின்று போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அறிவிக்கிறோம்.
இப்படிக்கு
பெண்  ஊடகவியலாளர்கள்
தொடர்புக்கு 9841155371, 9159486669
dc

Related Link: http://nwmindia.org/articles/eclipsing-women%E2%80%99s-rights-sexual-harassment-at-sun-tv-nwmi-statement


No comments:

Post a Comment